Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"எனது இசையில் உருவாகிய பாடல்கள்:- தமிழ்சூரியன்"

Featured Replies

அன்பு உறவு தமிழ்சூரியனுக்கும் ஊக்கம் கொடுக்கும் உறவுகளுக்கும் வாழ்த்துக்கள். அத்துடன் இன்னொரு சிறு தகவலையும் தாழ்மையுடன் சொல்லவிரும்புகின்றேன் சுருக்கமாக தங்களை இன்னும் ஊக்கப்படுத்துவதற்காக வேண்டி,

1990 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் ஈழத்தின் ஓர் அடர்ந்த காட்டுப்பகுதியின் மத்தியில் இருவருடன் ஆரம்பிக்கப்பட்டதுதான் தமிழீழத்தில் புகழ்பரப்பிய தமிழீழ இசைக்குழு. கேள்விஞானத்தில் அடிப்படையில் வளர்ந்த அது ஒரிரு வருடங்களில் எட்டமுடையாத வளர்ச்சியை அடைந்தது அதன் மூலம் என்றுமே அழிக்கமுடியா விடுதலை கானங்களை அது எமக்கு தந்திருக்கின்றது.

காட்டில் பிறந்து அது மழலை மொழி பேசி இனிமை தந்திருந்தாலும், நாட்டுக்குள் வந்து கோண்டாவில் நிலா கலையகத்துக்குள் காலடியெடுத்து வைத்த பின்னரே அது தமிழீழ இசையின் புதிய பரிமானத்தை உணர்த்தி காட்டி நின்றது. பின்னர், உசன், ஒட்டங்குளம், புதுக்குடியிருப்பு என பல இடம்பெயர்வுகளுக்குள்ளும் அதனோடு உட்பட்ட பல நெருக்கடிகளுக்குள்ளும் அது நின்றிருந்தாலும் இன்னும் வளர்ந்து தனது ஆற்றலை வெளிப்படுத்தி நின்றது என்பது வரலாறு. இதன் முக்கிய கூறு என்னவென்றால் அதிலிருந்த பாடகர்கள் முதல் தாளவாத்திய கலைஞர்கள் வரை அனைவருமே இசையை முறைப்படியாக கற்றவர்களில்லை ஆனாலும் காலத்தால் அழிக்கமுடியாத காவியகானங்கள் அதனால் படைக்கப்பட்டது. முயற்சி திருவினையாக்கும்.

இதே போன்று தாங்களும் விடாமுயற்சியுடனும் சலிக்காத உழைப்புடனும் பாடுபடின் வெற்றி நிச்சயம். வாழ்க.. வெல்க.

  • Replies 64
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியன் உங்களுக்கு நல்ல இசைத் திறமை உள்ளது பாராட்டுக்கள் இன்னும் நன்றாக முயற்சி செய்தால் இன்னும் உயரலாம்.

கேட்கிறேன் என கோவிக்க வேண்டாம் நீங்கள் ஒரு இசையமைப்பாளார் என்ட படியால் உங்களை கேட்கிறேன்...ஏன் ஈழத்து பாடல்களோ அல்லது தமிழீழ பாடல்களோ கிட்ட தட்ட ஒரே மொட்டில் அமைந்த பாடல்களாக இருக்கின்றது?...ஏன் வித்தியாசமான இசையில் பாடல்கள் அமைக்க முயற்சி செய்வதில்லை?

  • தொடங்கியவர்

[size=5]அன்புள்ள யாழ்கள உறவுகளுக்கு வணக்கம்.....

உண்மையில் எனக்கு ஒரு புது உற்சாகம் பிறந்திருக்குது...............என்னையும் என் இசைப்பணியையும்,புத்துயிரூட்டிய ,என்னை உற்சாகப்படுத்திய என் அன்பு உறவுகளாகிய உங்களுக்கு சிரம்தாழ்த்தி பணிவுடன் என் நன்றியை கூறிக்கொள்ளும் இந்த வேளையில்...........சில விடயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய பொறுப்பும் என்னிடம் உள்ளது......

உண்மையில் இன்று [12 -08 -2012 ]இந்த பாடலை கேட்டபோது என் கண்களிலேயே நீர் கசிந்தது ............முன்பு இந்தப்பாடலை பல பல முறை நான் கேட்டுள்ள போதும் ஆனால் மனதை கொள்ளை கொள்ளும் ,தாயக நினைவுகளின் நிழல்பட்டுச்செல்லும் பொருத்தமான காட்சிகளுடன் இன்று பார்க்கும்போது தான் இதன் தரம் இரட்டிப்பாக என் கண்களுக்கும்,காதுகளுக்கும் தெரிந்தது.அதற்காக இந்த யாழ் களத்தின் அற்புத உறவு.அன்புத்தம்பி சுபேசுக்கு மீண்டும் மீண்டும் பாராட்டுக்களையும்,நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன் .....அத்தோடு பரந்துபட்ட ,தாயக சிந்தனையோடும்,பார்வையுடனும் எனக்கு ஆக்கமும்,ஊக்கமும் தந்துகொண்டிருக்கின்ற இன்னொரு யாழ்கள அற்புத உறவு அன்புச்சகோதரி காதலுக்கும் [துளசி] இந்த வேளையில் நன்றியையும்,பாராட்டையும் கூற கடமைப்பட்டவனாயிருக்கிறேன்....

நான் ஏன் மீண்டும்,மீண்டும் நன்றி கூறி அடிக்கடி இந்த இரு சோதரரையும் எழுதுவதயிட்டு உங்களுக்கு ஒரு விடயத்தையும் தெளிவு படுத்த விரும்புகிறேன்.

உண்மையில் நாம் ஒன்று பட்டால் இன்னும் இன்னும் பெரிய பெரிய சாதனைகளை நிலை நாட்டலாம் என்பதற்கு ஓர் சிறு உதாரணமே இன்று இந்தப்பாடலின் சிறப்பான இணைப்பு...........ஆகவே களைதிறமயுள்ள அனைவரும் ஒன்றினைவோம்.........எம் இசையை நாமே ஆளும் நோக்கோடு பல சாதனைகளைப்படைத்து .அவற்றை ஒளிப்பதிவாக்கி [dvd ] அதன் மூலம் அல்லலுறும் எம் தாயக உறவுகளுக்கு நிதி சம்பந்தமாக சிறிய உதவிகள் எதையாவது செய்ய முடியுமா என சிந்திப்போம்..

கலையால் இணைவோம்......கைகளால் சாதிப்போம்........தமிழுக்கும் ,உறவுகளுக்கும் சேவையாற்றும் நல்ல கலஞ்சர்களாக,மனிதர்களாக வாழுவோம்............நன்றி

பணிவுடன் தமிழ்சூரியன்.......[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]மிக்க வாழ்த்துக்கள் [/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக இருக்கிறது..உங்கள் முயற்சிகள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...

  • தொடங்கியவர்

தமிழ்சூரியன் உங்களுக்கு நல்ல இசைத் திறமை உள்ளது பாராட்டுக்கள் இன்னும் நன்றாக முயற்சி செய்தால் இன்னும் உயரலாம்.

கேட்கிறேன் என கோவிக்க வேண்டாம் நீங்கள் ஒரு இசையமைப்பாளார் என்ட படியால் உங்களை கேட்கிறேன்...ஏன் ஈழத்து பாடல்களோ அல்லது தமிழீழ பாடல்களோ கிட்ட தட்ட ஒரே மொட்டில் அமைந்த பாடல்களாக இருக்கின்றது?...ஏன் வித்தியாசமான இசையில் பாடல்கள் அமைக்க முயற்சி செய்வதில்லை?

நன்றி ரதி அக்கா நீங்கள் எனக்கு தந்த ஊக்கத்திற்கு ................[size=4]அத்துடன் இந்த திரியில் என்னையும் என் அன்புத்தம்பி சுபேசயும் ஊக்குவித்த ,ஊக்குவிக்கப்போகும் அனைவருக்கும் நன்றி சொல்லும் இந்த வேளையில்...........உங்கள் பாராட்டுக்களை இந்த பாடல்களை வெளி வருவதற்கு காரணமாய் இருந்த அத்தனை படைப்பாளர்களும் .......உங்களுக்கு நன்றியை தெரிவித்து கொள்கின்றனர். உண்மையில் பல கைகள் சேர்ந்தே இதை சாதித்துள்ளோம் .........இன்னும் சில கைகள் இணைந்தால் இந்த விடயம் முழுமை அடைந்துவிடும்..........ரதி அக்காவின் கேள்வி நியாயமானதோ அல்லது நியாயமில்லையோ என்பதை நான் பகிர்தறிந்து சொல்வது என்பதுக்கப்பால் ............இந்தக்கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் நான் இன்னும் நிறைவான ஓர் இசையமைப்பாளர் இல்லை என்பதால் என்னால் எதையும் கூற முடியவில்லை என்பதை வருத்தத்துடன் கூறுகிறேன் ............மீண்டும் சில வருடங்களின் பின் இதற்கு பதில் கூற விரும்புகிறேன்............நன்றி [/size]

Edited by தமிழ்சூரியன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது தமிழ் சூரியன். மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

இதுவரை என்னை வாழ்த்தி ஊக்கம் தந்த என் இனிய யாழ் உறவுகளுக்கும் ,யாழ் உறவு இல்லாமல் உணர்வுடன் என்னை உங்கள் மனத்தால் ஊக்கம் தந்த என் இனிய தமிழ் உறவுகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்ளும் இந்த வேளையில்........என் இசையில் உருவான பாடல்களை இங்கே பிரசுரிப்பதை நிறுத்தியுள்ளேன் .....யாருடைய திணிப்பும் இல்லை ஆனால் பலருடைய வேண்டுதலுக்கமைய இந்தப்பாடல்களை தாயக மண்ணில் வாழ்க்கைப்பிரச்சனையை எதிர்நோக்கும் எம் இனிய உறவுகளுக்கு உதவும் வகையில் சில நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளேன் .......இதற்கு என்றும் உங்கள் ஆதரவு எமக்கு இருக்கும் என எதிர்பார்க்கிறேன்...........நன்றி .......ஆனால் இனிய பொழுது என்னும் திரியின் ஊடு உங்களோடு இசை ஊடாக என்றும் இணைந்திருப்பேன் என்று மகிழ்ச்சியாக கூறிக்கொள்கிறேன் ......பணிவுடன் தமிழ்சூரியன் :) :)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சூரியன், உங்கள் முயற்சிகள் தொடர வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் இசையின் மூலம், தாயகமக்கள் பலன் பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தமிழ்ச்சூரியனுக்கு பாரட்டுக்கள்.

[size=5]வாழ்த்துக்கள் தமிழ்சூரியன். [/size]

super super super

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சூரியன் இந்தப்பதிவை நீங்கள் திறந்த காலத்திலேயே பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் இருந்தது ஆனால் பாடலைக் கேட்கும் வசதி இல்லாமல் இருந்தது சில நாட்கள் யாழுக்கு வந்தாலும் பாடலை பொறுமையாக கேட்கக்கூடிய நிலையில் இருக்கவில்லை. இன்றுதான் உங்களுடைய பாடல்களை கேட்டேன் பழைய நினைவுகளை மீட்டிபார்க்க வைக்கிறது. 2005 ல் தாயகத்தில் எங்களூரில் நடந்த ஆலயத் திருவிழா ஒன்றில் நடாத்தப்பட்ட இசைக்கச்சேரிக்கு பாடகர் சாந்தன் வந்து பல பாடல்களைப்பாடினார் அப்போது என்னுடைய சகோதரர்களின் அவாவினால் நான் பாடல் எழுதவேண்டிய நிரபந்தம் ஒன்று ஏற்பட்டது அதனை பாடகர் சாந்தன் அவ்விடத்திலேயே இசையமைத்து பாடினார். அன்றிலிருந்து இன்று வரைக்கும் அந்தப்பாடல் ஆலய விசேட நாட்களில் அங்கு ஒலித்தபடியே இருக்கிறது. பாடகர் சாந்தன் நான் எழுதிய பாடலை பாடியதறிந்து தாயகக் கவிஞர் புதுவை இரத்தினத்துரை அவர்கள் என்னை விடுதலைப்பாடல் எழுதும்படி கூறினார். முதன்முதல் இசையமைப்பதற்காக விடுதலை வேண்டி எழுதிய பாடலை அங்கு அனுப்பிவிட்டு தொடர்பு கொண்டபோது தாயகக் கவிஞர் இறுகிப்போயிருந்தார் பேச முடியாமல் மௌனித்துக் கொண்டார். அந்த விடிகாலை தமிழ்செல்வன் அண்ணாவை விழுங்கியிருந்தது. இந்தச் சம்பவத்தை எந்தக்காலத்திலும் என்னால் மறக்கமுடியாது.

தமிழ் சூரியன் உங்களுடைய பாடலைக் கேட்கும்போது மீண்டும் நாங்கள் அந்ந தருணத்தில் நிற்பதுபோன்ற பிரமை ஏற்படுகிறது. காலம் மாறி கலைஞர்களின் வழிகள் மாறி விடுதலை இசைத்த குயில்கள் விலகி ஓடி மறைந்திட்ட இன்றைய பொழுதில் இந்த உயிர்ப்புடன் அந்த ஈர்ப்புடன் கேட்ட இசையின் பிரசவம் மெய்சிலிர்க்க வைக்கிறது. உங்களைப்போன்றோர்தான் இக்காலத்தில் கொஞ்சமேனும் இறுக மூடிய இதயங்களை திறக்க வைக்கமுடியும். தொடர்ந்து இசையமையுங்கள் பாடுங்கள். உங்களால் முடியும் என்பதை இணைத்த திரியில் பதிவிட்ட பாடல்களே அடையாளங்காட்டியுள்ளன. வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அண்ணா...

Edited by பையன்26

வணக்கம் சாகாறா அக்கா ............

மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் .எனக்கு ஊக்கம் தந்ததிற்கும்........

உங்கள் கவிதை வரிகளை பலமுறை நான் கேட்டு உங்களின் மகத்தான திறமையை

என் மனதில் போட்டு வைத்திருந்தேன் .........நேரம் வரும்போது பேசலாம் என்று காத்திருந்தேன் .அதற்குரிய நேரம் கனிந்துவிட்டபடியால் பேசுகிறேன் .............எம் தாயக கவி மதிப்புக்குரிய புதுவையின் பாராட்டை பெற்ற நீங்கள் உங்கள் ஆக்கத்தை பாடலாக உருவாக்க முடியாத அந்த சூழல் வருந்ததக்கது....அன்று அந்த சம்பவம் தமிழர்களுக்கு காலத்தின் கொடுமையான காலம் .........உங்கள் அற்புதமான வரிகளுக்கு இந்த அடியேன் இசை வடிவம் கொடுக்க விரும்புகிறேன் ........உங்களுக்கு இதில் ஏதாவது ஆட்சேபனையும் இல்லாவிட்டால் உங்கள் வரிகளை எனக்கு அனுப்பலாம் .........முழு மூச்சாக முயற்சிக்கிறேன் ..... [size="2"]எமது திறமைகளை [/size] நாம் ஒன்றிணைந்து வளர்த்து அதன்மூலம் எம் தமிழுக்கு நாம் பெருமை சேர்ப்போம். நன்றி

வாழ்த்துக்கள் அண்ணா...

வணக்கம் பையா 26 ............

மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் .எனக்கு ஊக்கம் தந்ததிற்கும்........

  • 2 years later...
  • தொடங்கியவர்

பிரிகேடியர் தமிழ்செல்வன் அண்ணாவின் நினைவாக 7 வருடங்களுக்கு முன் எம்மால் உருவாக்கப்பட்ட இந்த நினைவுப்பாடலை இங்கே அவருக்கு அஞ்சலியாக சமர்ப்பிக்கிறோம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.