Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சேமித்தால் ஆனந்தம்

Featured Replies

[size=2]

[size=4]செல்வத்தைப் பெருக்கும் வழிகள் என்ன என்பதைப் பார்ப்பதற்கு முன், கையில் வரும் பணத்தை எப்படித் தக்க வைத்துக் கொள்வது என்று பார்ப்போம்.[/size]

[/size]

[size=2]

[size=4]உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இரு சக்கர வண்டி ஒட்டுகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அதை நல்ல விதமாக வைத்திருந்தால் மட்டுமே, அதைவிடச் சிறந்த ஒரு வாகனத்தை அவருக்கு நீங்கள் வாங்கிக்கொடுப்பீர்கள். அதேபோல் உங்கள் கையிருப்பை நீங்கள் திட்டமிட்டு கையாண்டால்தான் அதைவிடக் கூடுதல் செல்வம் கிடைக்கும்.[/size]

[/size]

[size=2]

[size=4]பொருளாதார ரீதியில் கீழே உள்ளவர்களைக் கவனித்துப் பாருங்கள். தெருவில் நின்று இஸ்திரி செய்பவர், பூ விற்பவர், வீடுகளில் வேலை செய்பவர் என ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஈட்டிக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனாலும் அவர்கள் வாழ்நிலை முன்னேற்றம் காண்பதில்லை. இதே போல்தான் மத்தியதரக் குடும்பங்களின் நிலையும். குறைவு என்றாலும் மாதாந்திர சம்பாத்தியம் இருக்கும். இருந்தும், முன்னேற்றம் இருக்காது.[/size]

[/size]

[size=2]

[size=4]மூட்டை தூக்கிப் பிழைப்பவர்கள், கூலித் தொழிலாளிகள், வீட்டு வேலை செய்பவர்கள், தெருவில் காய்கறி விற்பவர்கள், சிறு சிறு வேலை செய்பவர்கள் என்று பலரிடமும் நான் பேசியிருக்கிறேன். உங்களுடைய ஒரு நாள் சம்பளம் என்ன? அவர்களும் தோராயமாகச் சொல்வார்கள். சுமார், நூறு ரூபாய்! மேலும், இந்த 100 ரூபாய் என்பது அவர்களுடைய லாபமாக இருக்கும்.[/size]

[/size]

[size=2]

[size=4]இவர்களில் பெரும்பாலானோர் குடிப்பழக்கத்துக்கும் பிற தீய பழக்க வழக்கங்களுக்கும் அடிமையாக இருப்பதை எனது ஆராய்ச்சிப் படிப்பின் போது தெரிந்து கொண்டேன். தவிரவும், தங்கள் வாழ்க்கைத் தரத்தைப் பற்றியும், தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய கல்வியின் அவசியம் பற்றியும், நல்ல வாழ்க்கை முறையை பற்றியும் அறியாதவர்களாகவும் இவர்கள் இருக்கிறார்கள்.[/size]

[/size]

[size=2]

[size=4]நல்ல ஒரு வழிகாட்டுதலை மிகுந்த சிரமப்பட்டாவது அரசாங்கமும் தன்னார்வுத் தொண்டு நிறுவனங்களும் இவர்களுக்கு அளிக்கும் பட்சத்தில், உண்மையான பொருளாதாரச் சீர்திருத்தத்தை இவர்களிடையே ஏற்படுத்தி விட முடியும். எதுவுமே செய்யாமல் நடைபாதையில் உறங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களைப் பற்றி நாம் கவலைப்படவோ திட்டமிடவோ முடியாது.[/size]

[/size]

[size=2]

[size=4]‘என்னுடைய வருமானம் 7,000 ரூபாய், இதில் நான் என் குடும்பத்தை, அதன் தேவைகளை எப்படிச் சமாளிப்பேன்?’ என்று கேட்பவர்களுக்காக திட்டமிடுவது சாத்தியம்.[/size]

[/size]

[size=2]

[size=4]முதல் காரியமாக நீங்கள் செய்யவேண்டியது என்ன தெரியுமா? இனி உங்கள் மாதச் சம்பம் 6700 மட்டுமே. ஒரு சுயகட்டுப்பாட்டுடன் இதை நீங்கள் கிரகித்துக்கொள்ளவேண்டும். உங்கள் சம்பளம் 6700 மட்டுமே என்றால் என்ன செய்வீர்கள்?[/size]

[/size]

[size=2]

[size=4]செலவினங்களைக் குறைக்க வேண்டியிருக்கும். அத்தியாவசியம் எது? அனாவசியம் எது? தேவையானது எது? தேவையற்றது எது? என்று பிரித்துப் பார்க்கவேண்டியிருக்கும். எவ்வளவுதான் நம் மனதை ஈர்க்கும் ஒரு விஷயமாக இருந்தாலும், தேவையற்றதை வாங்குவதைத் தள்ளிப்போடவேண்டியிருக்கும்.[/size]

[/size]

[size=2]

[size=4]விளக்கமாகப் பார்ப்போம். ஒரு குடும்பத்தின் தேவைகள் என்னென்ன? வீட்டு வாடகை, பால், அரிசி, மளிகைப் பொருட்கள், குழந்தைகளின் கல்விச்செலவு, மருத்துவச் செலவு, போக்குவரத்துச் செலவு. இவை குறைந்தபட்சத் தேவைகள், அத்தியாவசியமானவையும்கூட.[/size]

[/size]

[size=2]

[size=4]ஆனால் ஒரு திரைப்படத்துக்குச் செல்வதும், உல்லாசப் பயணங்களுக்குச் செல்வதும், பக்தி என்னும் போர்வையில் மிக அதிகமாகப் பூஜைக்குச் செலவிடுவதும் அவசியம் அற்றது.

பூஜை என்ற பெயரில் அதிக அளவில் செலவுகளை இழுத்துக் கொள்பவர்களை எனக்குத் தெரியும். வருடத்துக்குக் குறைந்தது மூன்று முறையாவது தீர்த்த யாத்திரை செல்வார்கள். மன நிம்மதிக்காக என்பார்கள். திரைப்படம் பார்ப்பவர்களும் இதே பதிலைத்தான் சொல்வார்கள்.[/size]

[/size]

[size=2]

[size=4]ஒரு மனிதனுடைய தூய மனபக்திதான் இறைவனுக்கும் அவனுக்கும் உள்ள தொலைவைக் குறைக்கிறது. எச்சில் பழத்தை ராமனுக்கு ஊட்டிய சபரியாகட்டும், ஒரு பிடி அவலை கிருஷ்ணனுக்கு வழங்கிய குசேலராகட்டும், சிவனின் கண்களிலிருந்து வழிந்த உதிரத்தை நிறுத்த தன்னையே குருடாக்கிக் கொண்ட சிவபக்தர் கண்ணப்பர் ஆகட்டும்… இவர்களில் யாருமே பணக்காரர்கள் இல்லை. செல்வத்தால் இறைவனைப் பூஜித்தவர்கள் இல்லை. நாம் மட்டும் ஏன் பணத்தைச் செலவழித்து தீர்த்த யாத்திரைகள் மேற்கொள்ளவேண்டும்? அதுவும், மன நிம்மதிக்காக?[/size]

[/size]

[size=2]

[size=4]திரைப்படம் பொழுதுபோக்குக்காக என்று சொல்வோம். ஆனால் நுழைவுச் சீட்டு கிடைக்கவில்லை என்றால், அதிக பணம் கொடுத்தாவது அந்தப் படத்தைப் பார்க்கத் துடிக்கிறோம். மாதக் கடைசி பற்றிய சிந்தனை அப்போது எழுவதில்லை. எந்த மகிழ்ச்சிக்காக அந்தப் பணத்தை இழந்தீர்களோ, அந்த மகிழ்ச்சி உங்களை விட்டு நெடுந்தூரம் போய் விடுகிறது.[/size]

[/size]

[size=2]

[size=4]குடும்பத்தின் செலவுகளைத் தவறாகத் திட்டமிடுவதால் மட்டுமே பெரும்பாலான பிரச்னைகள் தொடங்குகின்றன என்பது வெளிப்படை.[/size]

[/size]

[size=2]

[size=4]பல வீடுகளில் செய்யப்படும் பொதுவான தவறுகள் கீழே பட்டியலிடிப்பட்டுள்ளன. இவற்றில் சில உங்களுக்கும் பொருந்தலாம்.[/size]

[/size]

  • [size=4]அவ்வப்போது சிடி, கேசட் என்று வாங்கி குவிப்பது.[/size]
  • [size=4]அடிக்கடி புடைவைக்காரன் வருகிறான் என்பதால் நிறைய துணிமணிகளைக் கடனில் வாங்குவது.[/size]
  • [size=4]உணவுப் பொருள்களை வாங்குவதில் கூட திட்டமிடுதலின்றி ஊதாரித்தனமாகச் செலவு செய்வது.[/size]
  • [size=4]மிக அதிகமாக கேளிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது.[/size]
  • [size=4]வீட்டுக்குத் தேவை இருக்கிறதோ இல்லையோ விளம்பரங்களில் வரும் பொருட்களால் ஈர்க்கப்பட்டு, கடனை வாங்கியாவது அப்பொருளை வாங்கத் துடிப்பது.[/size]
  • [size=4]வீட்டிலுள்ள மின்சார உபகரணங்களைச் சிக்கனமாகச் செலவு செய்யாமல் இருப்பது.[/size]
  • [size=4]வீட்டு வைபவங்களுக்கு அதிகமாகச் செலவிடுதல்.[/size]
  • [size=4]ஆடை, ஆலங்காரம் என்று நிறைய செலவிடுவது.[/size]

[size=2]

[size=4]மனைவி, குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு வெளியில் செல்வது ஒரு சிந்தனைப் பரிமாற்றத்துக்கு, ஒரு நட்புறவான சூழ்நிலைக்கு உதவும். பத்து ரூபாய் செலவு செய்தும் இதனை அடையமுடியும். இரண்டு ரூபாய் கடலை வாங்கித் தின்றால் கூட, இந்த நெருக்கத்தை குடும்பத்தில் ஏற்படுத்திவிட முடியும்.[/size]

[/size]

[size=2]

[size=4]அடிநாதம் இதுதான். எது பொழுதுபோக்கு? எது எனக்காக மகிழ்ச்சியை அளிக்கும் செயல்? எது உல்லாசம்? இந்தக் கேள்விகளுக்கான விடைகளை நீங்கள் கண்டறியவேண்டும். நான் இப்போது செய்யும் செய்கை, பின்னால் எனக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமா? கொடுக்காதெனில் அதைச் செய்யாதிருப்பது உத்தமம். மேற்கொண்டு பொருளீட்டத் தெரியாதவர்கள் தன் கை இருப்பையும் இழப்பது எந்த வகையில் சிறந்தது?[/size]

[/size][size=2]

[size=4]கையில் பணம் இல்லையென்றால், விரக்தியும் எரிச்சலும் கோபமும்தான் ஏற்படும். உங்களை அழுத்தும் பொருளாதாரப் பிரச்னைகளைப் பறறிதான் நீங்கள் சிந்தித்துக்கொண்டிருப்பீர்கள். கையில் பணம் இருந்தால், பிரச்னைகள் பின்னுக்குப் போய்விடும்.[/size][/size][size=2]

[size=4]முதல் வாரம் கரெண்ட் பில் கட்டவேண்டும் என்று நினைப்பார்கள். குழந்தையின் பிறந்த நாள், நண்பர்கள் திருமணம் என்று ஏதாவது ஒன்று உள்ளே புகுந்து அந்தப் பணத்தை அபகரித்துச் சென்றுவிடும். சரி, கடைசி தேதிக்குள் கட்டிவிடலாம் என்று சமாதானம் சொல்லிக்கொண்டு அப்போதைய தேவைகளைப் பூர்த்திசெய்துவிடுவார்கள்.[/size][/size][size=2]

[size=4]மின் கட்டணம் செலுத்தாததால் மின்சாரம் தடைபடும் அளவுக்குப் போன பிறகு, பணம் தேடி அங்கும் இங்கும் செல்வார்கள். தொலைபேசிக் கட்டணம், பேப்பர் கட்டணம், மளிகைக் கடை பாக்கி, குழந்தைகளின் பள்ளிக் கட்டணம், பால் செலவு என்று அனைத்துக்கும் இந்த நிலைமைதான்.[/size][/size][size=2]

[size=4]இந்தச் சூழலில் நீங்கள் முதலில் செய்யவேண்டியது ஒன்றுதான். முக்கியமான செலவினங்களுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை, எக்காரணம் கொண்டும் வேறொரு விஷயத்துக்குப் பயன்படுத்தக்கூடாது. சுயக் கட்டுப்பாட்டுடன் உங்களுக்கு நீங்களே இந்த விதியை விதித்துக்கொள்ளவேண்டும். செய்தால், அநாவசியமாக மற்றவர்களிடம் கடன் கேட்கவேண்டிய அவசியம் இருக்காது.[/size][/size]

[size=2]

[size=4]- [/size]கீதா பிரேம்குமார்[/size]

http://www.tamilpaper.net/?p=6277&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+tamilpaper%2FQQvv+%28TamilPaper%29

  • தொடங்கியவர்

[size=2]

[size=4]இந்த இடத்தில் கடன் கொடுக்கல் வாங்கல் பற்றி சிறிது பார்த்துவிடுவோம். முன்பெல்லாம், ஒரு கஷ்டத்தின்போது மற்றவர்கள் முன் பணத்துக்காகத் தலைகுனிந்து நிற்பது அவமானமான ஒரு செயலாகக் கருதப்பட்டது. ஆனால் இன்றைய சூழ்நிலையில், கடனுக்கு மிக அழகிய முலாம் பூசப்பட்டுவிட்டது. கடன் வாங்குவது என்பதே மிகப்பெரிய கௌரவம் என்னும் அளவுக்கு ஆகிவிட்டது. ஓ! எனக்குக் கடன் கொடுக்க எத்தனை பேர் இருக்கிறார்கள் தெரியுமா என்றுகூட சிலர் பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள்.[/size]

[/size]

[size=2]

[size=4]கடன் கேட்பது தவறில்லை என்ற எண்ணம் பரவலாகப் பரவியிருக்கிறது. சொன்ன நேரத்தில் கடனைத் திருப்பிக் கொடுத்தல் தனி நபரின் நாணயத்தின் பிரதிபலிப்பாகக் கருதி இருந்த காலம் போய், ‘என்ன? கொடுப்பேன் என்று சொன்னேன்! அதற்கென்ன இப்போ? முடியவில்லை!’ என்று எந்தவித உறுத்துதலின்றி சொல்லப் பழகிக்கொண்டிருக்கிறோம்.[/size]

[/size]

[size=2]

[size=4]செல்வம் சேர்க்கவேண்டும் என்று உண்மையில் நீங்கள் மனதார விரும்பினால், ஒரு சபதம் செய்துகொள்ளுங்கள்.நான் கடன் கேட்கமாட்டேன்! மற்றவர்களுக்குக் கடன் கொடுப்பராக இருக்கும்பட்சத்தில் இப்படிச் சொல்லுங்கள். இனி நான் கடன் கொடுப்பதில்லை![/size]

[/size]

[size=2]

[size=4]உடனே உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம். தேவை இருப்பவர்களுக்கு உதவி செய்வது மனித நேயம் இல்லையா? உங்கள் மனித நேயம், உங்களுக்கு எதிராகத் திரும்பக்கூடும் என்றால் அப்படிப்பட்ட மனித நேயம் எந்த வகையிலும் உதவாது என்பதுதான் உண்மை.[/size]

[/size]

[size=2]

[size=4]மனித நேயம் கொண்ட பலரும், பெரும் சங்கடங்களில் சிக்கி, ஈவு இரக்கமற்ற மனிதர்களாகப் பிற்காலத்தில் மாறி இருக்கிறார்கள். ‘நான் நல்ல மனிதனாகத்தான் இருந்தேன். ஆனால் உலகம் என்னை மாற்றிவிட்டது’ என்று இவர்கள் வருந்தியது உண்டு.[/size]

[/size]

[size=2]

[size=4]இன்றைய பொருளாதார உலகின் எழுதப்படாத சாசன விதி என்ன தெரியுமா? Unwritten Economic Constitutional Law என்றுகூட இதனை நீங்கள் வைத்துக்கொள்ளலாம்.[/size]

[/size]

[size=2]

[size=5]உங்கள் பணத்தைக் கையாள்வதில் உணர்வுபூர்வமாகச் சிந்திக்காதீர்கள். புத்திசாலித்தனமாகச் சிந்தித்து, புத்திசாலித்தனமாகச் செயல்படுத்துங்கள்.[/size]

[/size]

[size=2]

[size=4]நெருங்கிய சொந்தமாக இருந்தாலும் சரி, நன்கு பரிச்சயமானவராக இருந்தாலும் சரி. தெரியாத நபர் ஒருவரிடம் எப்படி கொடுக்கல், வாங்கலில் ஈடுபடுவீர்களோ அப்படியே இங்கும் செய்யுங்கள். அவ்வாறு செய்யாமல், கடன் பெற்றவரின் நாணயத்தைப் பற்றியும் நம்பகத்தன்மை பற்றியும் பின்னால் புலம்புவதில் பயனில்லை.[/size]

[/size]

[size=2]

[size=4]கடன் கொடுப்பவதன்மூலம் நீங்கள் யாருக்கும் உதவமுடியாது. ஒருவரைத் தவறான பாதையில் வேண்டுமானால் கொண்டு செல்லலாம்.[/size]

[/size]

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு பதிவு, நன்றி பகிர்வுக்கு அகூதா

  • கருத்துக்கள உறவுகள்

"கடன் பட்டார் நெஞ்சம்போல்.... கலங்கினான் இலங்கை வேந்தன்."

என்று சொல்லும் போது... கடன் வாங்குவதாலும், கொடுப்பதாலும் உள்ள துன்பத்தை அறிந்து கொள்ளலாம்.

அதனால்... உங்கள் பொக்கற்றுக்குள், ஒரு வெறும் பேர்ஸையும் வைத்துக் கொள்ளுங்கள்.

யாரும் கடன் கேட்கும் போது.... அதை மட்டும் திறந்து காட்டுங்கள்.

empty_wallet_2.jpeg

  • தொடங்கியவர்

[size=4]உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் எதைப்படிப்பிக்காமல் விட்டலும் நேரத்தைம மதிக்கவும் பணத்தை சேமிக்கவும் கற்றுக்கொடுங்கள். அவர்கள் நிச்சயம் தலை நிமிர்ந்து வாழுவார்கள். [/size]

உறவுக்கு பகை கடன்..................................நல்ல ஓர் இணைப்பிற்கு நன்றி அகூதா......கடன் என்பதும் மனித தேவைகளில் ஒன்றுதான்

அத்தியாவசியமான ஒரு தேவையின் நிமித்தம் கடன் பெறுவது தவிர்க்கமுடியாததொன்றாகவே பெரும்பாலானவர்களுடைய வாழ்க்கையில் அமைந்து விடுகிறது .....ஆனால் ஆடம்பர தேவைகளுக்காகவோ,மற்றவனுக்கு புஷ் காட்டகடன்படுவோர் கலங்க்கியே ஆகவேண்டும்........

இதுதான் யதார்த்தம் என நினைக்கிறன்.......

தேவையானதொரு திரி. தொடருங்கள்.

மிகவும் நல்ல கருத்துகள் உள்ளன. பகிர்வுக்கு நன்றி.

என்னை பொறுத்தவரை ஒருவருக்கு மிகவும் உதவி தேவைப்படும் வேளையில் கடன் கொடுப்பது தவறல்ல.

ஆனால் சிலர் தமக்கு வருத்தம், தமக்கு ஒப்பிரேசன் என்று பொய் சொல்லியும் கடன் கேட்பார்கள். உண்மை என்று நம்பி அவர்களுக்கு கடன் கொடுத்து ஏமாறுப்பட்டவர்களையும் அவதானித்துள்ளேன்.

எனவே கடன் வழங்குவதாக இருந்தால்,

  • மற்றவர்களுக்கு உண்மையிலேயே கடன் தேவைப்படுகிறதா என்று அவதானித்து கடன் வழங்க வேண்டும்.
  • அது கூட திரும்ப தரமாட்டார்கள் என்று மனதில் நினைத்துக்கொண்டு கொடுத்தால் அவர்கள் ஏமாற்றினாலும் அது எம்மை பாதிக்காது.

Edited by துளசி

மிகவும் நல்ல கட்டுரை. பகிர்வுக்கு நன்றி....

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு இணைப்பு.வங்கி அட்டை தான் பலரை கடனாளி ஆக்கி உள்ளது.எனவே வங்கி அட்டையை தேவைக்கு பயன்படுத்துவது அல்லது சரியாக பயன்படுத்துவது என்பதில் அறிவு, மனக்கட்டுப்பாடு தேவை. சிலர் வங்கிக்கு வட்டி கட்டியே வாழ்வை நரகமாக்கியுள்ளார்கள்.

நல்ல பதிவு. நன்றி.

[size=4]உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் எதைப்படிப்பிக்காமல் விட்டலும் நேரத்தைம மதிக்கவும் பணத்தை சேமிக்கவும் கற்றுக்கொடுங்கள். அவர்கள் நிச்சயம் தலை நிமிர்ந்து வாழுவார்கள். [/size]

நேரத்தை மதியாமை எங்கள் சமுகத்தின் மிகபெரும் பிரச்சினை.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரி, அகூதா!

தொடருங்கள்!!!

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

[size=5]பணம் மட்டும் தொழில் தொடங்குவதற்குக் காரணமல்ல[/size]

[size=4]அன்று தொடங்கிய பயணம். அடுத்த இரு மாதங்களுக்கு வயிற்றில் குழந்தையுடன் வெயில், மழை பாராமல் வங்கிகள், கிளைகள் என்று அலையத் தொடங்கினேன். பொருள்களைக் கொடுத்தவர்களும், உற்பத்திக் கருவிகளை வழங்கியவர்களும் பணத்துக்காக நெருக்கத் தொடங்கி விட்டனர்.[/size]

[size=2]

[size=4]என் அலுவலகத்துக்கு அருகில் உள்ள ஒரு தேசிய வங்கியில் ஆயிரம் ரூபாய் செலுத்தி 'கரெண்ட் அக்கவுண்ட்' ஒன்றைத் தொடங்கியிருந்தேன். நாள் தவறாமல் அங்கு சென்று, வங்கி மேலாளரைச் சந்திப்பேன். கடன் வாங்குவதற்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் கையோடு கொண்டு செல்வேன். ஆனால் அவரோ பிடிகொடுக்கமாட்டார். இந்த நிலையில் நீங்கள் ஏன் இப்படி அலைகிறீர்கள் என்றுகூட கடுமையாக ஒருமுறை சொல்லிவிட்டார். ஆனாலும் நான் பொறுமையுடன் என் நிலையை அவருக்கு விளக்கினேன். ஒவ்வொரு நாளும் இது நடந்தது. தினமும் ஐந்து நிமிடங்களாவது இதற்கென்று [/size][size=4]ஒதுக்கிவைத்துக்கொண்டேன். மறுப்பது அவர் உரிமை என்றால், விடாமல் என் கனவைத் துரத்துவது என் கடமையல்லவா?[/size][/size]

[size=2]

[size=4]இப்படியாகச் சில நாள்கள் கடந்தன. ஒருநாள், சனிக்கிழமை மதியம் சுமார் மூன்று மணியளவில், யாரோ என் அலுவலகப் படியேறி வரும் ஓசை கேட்டு வெளியில் வந்தேன். எதிர்பாராதவிதமாக அந்த வங்கி மேலாளர் வந்திருந்தார். சிறிது பதட்டத்துடன் அவரை வரவேற்று அமரச் செய்தேன். ஆனால், அவரோ கிடுகிடுவென்று எனது அலுவலகத்தின் உள்ளே சென்று பணியிடங்களையும், இயந்திரக் கருவிகள் இயங்குவதையும் பார்த்துக் கொண்டே வந்தார். என்ன பார்க்கிறார்? என்ன செய்கிறார்? அவரது செய்கையை என்னால் புரிந்துகொள்ளடியவில்லை.[/size][/size]

[size=2]

[size=4]சிறிது நேரத்தில் என்னிடம் திரும்பினார்.[/size][/size]

[size=2]

[size=4]‘நான் உடனே போகவேண்டும், போவதற்குமுன் உங்களிடம் ஒன்றுகூற விரும்புகிறேன். உங்களின் விடாமுயற்சியும் நேர்மையான அணுகுமுறையும் என்னை வெகுவாகக் கவர்ந்து விட்டது. இதைப்போல லோன் கேட்டு வருபவர்கள் தக்க ஆவணங்களுடனும், நாணயத்துடனும், பணியாற்றும் திறமையுடனும் நடந்துகொள்ளும் பட்சத்தில் எங்களைப் போன்ற அலுவலர்களுக்கு வேலை சுலபமாகிவிடும்.’[/size][/size]

[size=2]

[size=4]பாராட்டுகளெல்லாம் சரிதான். கடன் உதவி? மேற்கொண்டு ஒன்றும் பேசாமல் அவர் பின்னே படிக்கட்டில் இறங்கி வாசல் வரை வந்தேன். வாசலிலிருந்து விடைபெறும் நேரம் அவர் அமைதியாகச் சொன்னார். ’மேடம், உங்களுக்கு ரூபாய் 50,000 லோன் அளிக்க ஆவன செய்கிறேன். முதல் கட்டக் கடனை அதை வைத்துச் சமாளியுங்கள்.’[/size][/size]

[size=2]

[size=4]கண்ணெதிரே கடவுள் வந்து நின்று வரம் கொடுத்ததுபோல் உணர்ந்தேன். அடுத்த சில நாள்கள் வேலையைத் தவிர வேறு சிந்தனைகள் இல்லை. ஓன்றிரண்டு மாதங்களில், நான் கேட்காமலேயே என்னுடைய ஓசிசி லிமிட் 75,000 ரூபாயாக உயர்ந்தது.[/size][/size]

[size=2]

[size=4]மூச்சுத் திணறலிலிருந்து விடுபட்டுவிட்டேன் என்று நினைத்தபோது, பிரச்னைகள் மீண்டும் சூழ்ந்தன. உற்பத்தி செய்த இயந்திரங்கள் 'பர்சேஸ் ஆர்டர்' இல்லாமல் தங்கிவிட்டன. விற்ற இயந்திரங்களுக்குப் பணம் வரவில்லை. தனிப்பட்ட முறையிலும் வீட்டு வாடகை, அலுவலக வாடகை என்று பல்வேறு சவால்கள். 'மார்க்கெட்டிங் சப்போர்ட்' கொடுப்பதாகச் சொல்லி வந்தவர்களும் கையை விரித்துவிட்டனர். பிரசவத்துக்கான காலமும் நெருங்கி கொண்டிருந்தது.[/size][/size]

[size=2]

[size=4]சிறிய இடமாக இருந்தாலும், வீடும் அலுவலகமும் ஒரே இடத்தில் இருக்கவேண்டும் என்று முடிவுசெய்தேன். அது அப்போதைய பணப் பிரச்சனையை முழுவதுமாகத் தீர்க்காவிட்டாலும் உடனடியாக ஓரளவுக்குத் தீர்த்துவைக்கும். என் கணவரும் இதற்கு ஒத்துக்கொண்டார். நான் நினைத்தது போல் இடம் தேடுவது அவ்வளவு சுலபமாக இல்லை. நீண்ட தேடலுக்குப் பிறகே இடம் கிடைத்தது. மேலே வீடு, கீழே அலுவலகம். சுறுசுறுப்புடன் இயங்கத் தொடங்கினேன்.[/size][/size]

[size=2]

[size=4]ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. பிரசவத்துக்குத் தாய் வீடு போகமுடியாத சூழல். குழந்தை பிறக்கும் தினத்தன்றும், என் பொருள்களை நானே எடுத்து வைத்துக் கொண்டு ஆட்டோவில் மருத்துவமனைக்குப் புறப்பட்டுப் போக நேர்ந்தது.[/size][/size]

[size=2]

[size=4]தனிப்பட்ட வாழ்க்கை. அலுவலக வாழ்க்கை. இரண்டிலும் பிரச்னைகளும் சவால்களும் மாறிமாறி வரத் தொடங்கின. ஆனால் அனைத்தையும் மீறி, உழைப்பின் பலன்கள் சிறிது சிறிதாக கிடைக்கத் தொடங்கின. குறிப்பிடவேண்டிய ஒரு விஷயம் என்னவென்றால், தோல்வியைக் குறித்து நான் ஒருபொழுதும் சிந்திக்கவில்லை என்பதுதான்.[/size][/size]

[size=2]

[size=4]வெற்றி பெற்றவர்களின் கதை கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பது தற்செயலல்ல. தாங்கமுடியாதபடி பல துயரங்களை அவர்கள் கடந்து வந்திருப்பார்கள். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களைச் சவால்கள் பிடித்து தள்ளியிருக்கும். ஒருவர்கூட சுகமாக இலக்கை அடைந்திருக்கமாட்டார்கள்.[/size][/size]

[size=2]

[size=4]நான் சில விஷயங்களில் தெளிவாக இருந்தேன். யாரிடமும் எந்தச் சந்தர்ப்பத்திலும் பணபாக்கி வைத்துக்கொள்ளக்கூடாது. நம்மைச் சுற்றி இருப்பவர்கள் மத்தியில் நம்பகத்தன்மையை உருவாக்கவேண்டும். நம்மிடமிருந்து ஒருவர் ஒரு பொருளை வாங்குகிறாரென்றால் அவர் அதற்குண்டான பலனை முழுமையாக அனுபவிக்க வேண்டும்.[/size]

[/size][size=2]

[size=4]என் அலுவலகத்துக்கு வருபவர் யாராக இருந்தாலும் அவர், தான் ஒரு நேர்மையான நிர்வாகத் திறமையாளரிடம்தான் உரையாடிக்கொண்டிருக்கிறேன் என்று உணரவேண்டும். இந்த 22 வருடத்தில் என்னுடைய ஒரு காசோலைகூட பணம் இல்லை என்று வங்கியில் இருந்து திரும்பியதில்லை. இதை என்னுடைய மிகப் பெரும் பலமாகக் கருதுகிறேன்.[/size][/size]

[size=2]

[size=4]சுயதொழில் செய்வோர், வீடு, நிலம் வாங்குவதைப் பற்றி இந்த இடத்தில் சிறிது பார்ப்போம். சுயதொழில் செய்வோர் தங்கள் லாபத்தை நல்ல விதமாக முதலீடு செய்ய நினைக்கும்போது, தொழில் செய்வதற்காக உரிய இடத்தை விலைக்கு வாங்குவது மிகமிக அவசியம். சிறு தொழில் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்தவுடன் முதல் தேவையே ஒரு இடம் என்று இருக்கும்போது, வரும் லாபத்தில் அதற்குரிய இடத்தை வாங்குவது மிக அவசியம். ஆனால் தொழில் செய்வதற்கு வேண்டிய இடத்தை வாங்குவதாக இருந்தாலும், வாடகைக்கு எடுப்பதாக இருந்தாலும் அதற்குரிய செலவை தொலைநோக்கோடு திட்டமிடாது போனால், ஒவ்வொரு மாதமும் அந்தத் தொழிலை நடத்துவதில் பெரும் சிரமங்கள் ஏற்படும்.[/size][/size]

[size=2]

[size=4]சிலர் ‘நான் வீட்டிலிருந்தபடியே தொழில் செய்கிறேன்’ என்று கூறிக்கொண்டு, தேவையான தொழில் ரீதியான முன்னேற்பாடுகளைச் செய்யாமல் இருப்பார்கள். இதனால் பல சட்ட ரீதியான பிரச்னைகளையும் எதிர்கொள்ள வேண்டிவரும். தொழிலில் ஒரு மாதிரி தலையெடுத்து வரும் கால கட்டத்தில், இதைப் போன்ற சட்டச் சிக்கல்கள் வரும்போது மேற்கொண்டு தொடரமுடியாமல் போய்விடும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே, முதலில் வேலைக்கான இடத்தைத் தேர்வு செய்துகொள்ளுங்கள்.[/size][/size]

[size=2]

[size=4]இன்னொரு முக்கிய விஷயத்தையும் நாம் நினைவில் வைத்திருக்கவேண்டும். பணம் இருப்பவர்கள் மட்டுமே தொழில் செய்ய முடியும் என்பது உண்மையானால் என்னைப் போன்ற பலர் தொழில்முனைவோராக மாறியிருக்கமடியாது. பெரும் செல்வந்தர்கள் மட்டுமே தொழில் செய்து முன்னேறியிருக்க வேண்டும்.[/size][/size]

[size=2]

[size=4]ஆக, பணம் மட்டும் தொழில் தொடங்குவதற்குக் காரணமல்ல. எத்தனையோ பிற முக்கிய அம்சங்களோடு சேர்த்து பணமும் தேவை. அவ்வளவுதான். இதை பலர் உணர்வதில்லை. ‘பணம் போடுவதற்கோ கடன் கொடுப்பதற்கோ யாராவது இருந்தால், நான் இந்நேரம் தொழில் செய்து உலகையே என் காலடியில் கொண்டு வந்திருப்பேன்’ என்று மார் தட்டிக் கொள்கிறார்கள்.[/size][/size]

[size=2]

http://www.tamilpaper.net/?p=6438&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+tamilpaper%2FQQvv+%28TamilPaper%29[/size]

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி அகோதாண்ணா... :)

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரி அகோதா

இன்று தான் பார்த்தேன்.

ஆனால் இதை கனடாவில் இருந்து எழுதுவது உதைக்கிறது.

கனடாவில் நான் கண்டது எல்லோருமே வங்கிகளுக்கு பல லட்சம் கடனாளிகளாக இருந்து கொண்டு ராஐவாழ்க்கை வாழ்கின்றனர். :( :(

  • தொடங்கியவர்

நல்லதொரு திரி அகோதா

இன்று தான் பார்த்தேன்.

ஆனால் இதை கனடாவில் இருந்து எழுதுவது உதைக்கிறது.

கனடாவில் நான் கண்டது எல்லோருமே வங்கிகளுக்கு பல லட்சம் கடனாளிகளாக இருந்து கொண்டு ராஐவாழ்க்கை வாழ்கின்றனர். :( :(

[size=4]- இந்தக்கட்டுரை எழுதுபவர் தமிழக உறவு[/size]

[size=4]- ஆம், கனடாவில் கடனில் வாழ்ந்து, உழைத்து கட்டி, வங்கிகளை கொழுக்க வைக்கின்றோம்[/size]

  • கருத்துக்கள உறவுகள்

கனேடிய டொலர் வாங்கிட்டு வேற நாட்டு பணத்தை கடனுக்காக திருப்பி கொடுப்பவர்களும் இருக்கிறார்கள்..அதுவும் அந்த நாட்டு நாணய விகிதம் குறைந்த பின்னர் தான் கிடைத்தது...இப்படியானவர்களை எந்தவரையறைக்குள் வைக்கலாம்..கடந்த மாதம் பாவம் பார்க்கப் போய் நல்லா ஒரு பெண் மணியிடம் கற்ற பாடம் இது..இப்படியும் மனிதர்கள்..

நல்லதொரு திரி அகோதா

இன்று தான் பார்த்தேன்.

ஆனால் இதை கனடாவில் இருந்து எழுதுவது உதைக்கிறது.

கனடாவில் நான் கண்டது எல்லோருமே வங்கிகளுக்கு பல லட்சம் கடனாளிகளாக இருந்து கொண்டு ராஐவாழ்க்கை வாழ்கின்றனர். :( :(

இதுவரை நான் இதற்குள் அகப்படவில்லை. வரவிற்கேற்ற செலவோடே இதுவரை வாழ்ந்திருக்கிறேன். அதுவும் எனது உழைப்பில் வந்த பணத்தில் மட்டுமே பல வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்பது கூடுதல் பெருமை. :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு திரி அகோதா

இன்று தான் பார்த்தேன்.

ஆனால் இதை கனடாவில் இருந்து எழுதுவது உதைக்கிறது.

கனடாவில் நான் கண்டது எல்லோருமே வங்கிகளுக்கு பல லட்சம் கடனாளிகளாக இருந்து கொண்டு ராஐவாழ்க்கை வாழ்கின்றனர். :( :(

இங்கே காசைக் கையில் வைத்திருப்பதால் பிரியோசனம் குறைவு. பாதுகாப்பாக முதலிடுவதே பணத்தைப் பெருக்கும் வழி..

வீட்டில் முதலிடுவது நல்ல வழியாக இருந்தது.. இனிமேல் கொஞ்சம் கஷ்டமாகலாம்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.