Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில், வெளிநாட்டில் இருந்து வருபவர்களிடம் கொள்ளை.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அர்ஜுன் அண்ணா நான் ஒரு அறிவிலி.சாதாரண மனிதன்.அரசியலுக்கும் ராணுவத்துக்கும் வேறுபாடு தெரியாதவன்.என் புலம் பெயர்வே பிழைப்புக்காகதான்.ஆனால்உயர் பாதுகாப்பு வலயம்அரசியல் சார்ந்தது ராணுவ பாதுகாப்பு சார்ந்ததுஅல்ல என்பது தெரியாமல்முட்டாளாக இருந்து விட்டேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றும் நான் எதை சார்ந்திருந்தேன் என்பதை என் எழுத்தின் மூலம்அறிந்திருப்பீர்கள்.நான் சார்ந்துஇருந்த இடம் இப்போது இல்லை .நீங்கள் எதை சார்ந்தீர்கள் என்பது எனக்கு தெரியாது.உங்களுக்கு எது முடியும் என்பதை பகிரங்கமாக அறிவியுங்கள்.சேர்ந்து நடக்க நான் தயார் .

ஏற்கனவே இன்னொரு திரியில் சில வாரங்களுக்கு முன் நான் எழுதியவை

எனக்கு 4 விதமான source களில் இருந்து தகவலகள் கிடைக்கின்றன

1. ஒன்று புலம்பெயர் மக்களின் யதார்த்தத்தை மீறிய உணர்ச்சிகளின் அடிப்படையிலான வெளிப்பாடுகள்

2. அங்கு போய் இங்கு வரும் மக்களின் ஒரு சில நாட்கள் (ஆகக்கூடியது 3 மாதங்கள்) பற்றிய குறிப்புகள்

3. அங்கே இருந்து இன்றும் தெளிவாக இருந்து தமது blogs இலும் பத்திரிகைகளிலும் உள்ளதை உள்ளபடி எழுதுபவர்கள்

4. இங்கு 18 வருடம் வாழ்ந்து (கனடா) பின் வெறுத்து அங்கு போன என் மாமா ஒவ்வொரு வருடமும் தன் பென்சன் காசை எடுக்க வரும் போது சொல்பவை

இந்த 4 தகவல்களும் சொல்லுபவை

1. இன்று அங்கு மக்கள் ஓரளவுக்கேனும் நிம்மதியாக வாழ்க்கையை வாழ்கின்றனர்

2. ஆனால் இந்த நிம்மதி எந்தக் கணத்திலும் பறி போகும் என்பதையும், இது நிரந்தரமில்லை என்பதையும் புரிந்து வைத்துள்ளனர்

3. மிக முன்னேறி வியாபாரத்தில் வெளுத்து வாங்கும் ஒரு தமிழ் நிறுவனம் இலங்கை அரசின் இன ஒதுக்கலால் அடுத்த நாளே தரை மட்ட லெவலுக்கு வரலாம் என

4. எல்லாவற்றையும் அவதானித்துக் கொண்டு ஒரு சிறு பகுதியினர், தாம் வரலாற்றில் என்றும் இல்லாதவாறு அடிமைப்படுத்தப்பட்டு இருக்கின்றோம் என உணர்ந்து, எதிர்காலத்துக்கு என்ன செய்ய வேண்டும், எப்படி அரசியல் ரீதியில் போராட வேண்டும் என கணித்துக் கொண்டு அமைதியாக இருக்கின்றனர் என

இந்த 4 ஆவது பிரிவுதான் மிச்ச 3 பிரிவுகளின் எதிர்காலத்தை மட்டுமல்ல இலங்கைத் தீவின் தலை விதியையும் கூட தீர்மானிக்க போகின்றது.

போராட்டம் என்பது தமிழீழத்துக்கான போராட்டமாக மட்டுமே இருக்க போகின்றது என நினைப்பது தவறு என நினைக்கின்றேன். கடந்த வாரங்களில் மக்கள் தன்னெழுச்சியாக போராடிய 'முருகண்டி நில மீட்பு போராட்டம்' மிகச் சிறந்த சான்று மக்களின் மனநிலைக்கு. மக்களின் தன்னெழுச்சிப் போராட்டத்துக்குத் தான் அரசியல் கட்சிகள் பின்ன்னர் தலமை தாங்க முற்பட்டன. இந்தப் போராட்டம் பொதுவாக பொருளாதாரத்தில் மிகப் பின்தங்கிய முருகண்டி மக்களால் நடத்தப்பட்டது என்பது மிகக் கவனிக்கத்தக்கது

எமது பல கருத்துக்கள் யாழ்ப்பாண மையத்தைத் தான் சுற்றி வருகின்றன. யாழுக்கு போனவர்களின் கருத்துகள், யாழ் மக்களின் போராட்டங்கள் என்பனவற்றை பற்றிய மையக் கருத்துகள் தான். இன்று கிழக்கில் உள்ள தமிழர்களின் கருத்துகள் மிகக் குறைவாகவே வெளி வருகின்றன. யாழ்ப்பாணம் தவிர்ந்த மற்ற இடங்களில் தான் போராட வேண்டிய முனைகள் முனைப்புக் கொள்கின்றன. ஏனெனில் இவர்கள் தான் தமிழீழத்திற்கான தேவையை தமிழ் தேசியத்துக்கு ஊட்டியவர்கள். யாழ்ப்பாணம் 100 வீதம் சிங்கபூராக மாறினாலும் கூட தமிழீழத்துக்கான தேவை இவர்களால் தான் நாளை எமக்கு உணர்த்தப்பட போகின்றது.

எனவே வெறுமனே யாழ்ப்பாணம் போகும் மக்களின் உணர்வுகளை மட்டுமே வைத்து எம்மால் ஈழத் தேசியம் பற்றி கணிப்புகளை மேற்கொள்ள முடியாது என நினைக்கின்றேன்

உலகத்திலேயே தன் சுயத்தை இழப்பதையிட்டு அக மகிழ்வு கொள்ளும் இனமாக தமிழர் தாம் இருக்கின்றோம். ஜீவா சொன்னது போல தலைவர் போராடப் போனதுதான் பெரிய தவறு

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை

நன்றி நிழலி

மகிந்தவுககு இன்று கூட காலதாமதமாகவில்லை.

ஒரு தீர்வை தமிழருக்கு கொடுத்து அவர்களை அரவணைத்துச்செல்ல.

எனவே அடுத்து எந்த முடிவுக்கு வரவேண்டும் என்பதை ஆக்கிரமிப்பாளனே அந்த மக்களுக்கு உணர்த்துகின்றான்.

முன்பு தேசியம் என்று கூவியவர்கள் சிறிலங்கா போய் வந்து சொல்லும் புகழாரங்களைக் கேட்டால் சொல்லி மாளாது. அதிலும் பலர் மாவீரர் தினத்திற்கு நிகழ்ச்சி கொடுத்தவர்கள். சந்திக்குச் சந்தி இளித்துக் கொண்டு நிற்கும் இராணுவத்தின் கண்ணியத்தை சொல்லும் அழகே தனி. சீரழிந்து போயுள்ள போராளிகள் பற்றிச் சிந்திக்கக் கூட மறுக்கிறார்கள்.

போராட்டத்தைப் பாவித்து கள்ளப் பிளேனில் வந்த கூட்டத்திடம் அதிகம் எதிர்பார்ப்பது தவறுதான்.

இந்தக் கூட்டத்தின் விடுதலைக்காய் இனி ஒருவன் இராணுவத்தை அல்ல, ஒரு தோசையைக் கூடச் சுட மாட்டான்.

பாலர் வகுப்பில் நான் படித்தபோது நடைபெற்ற சம்பவங்களை நான் முன்பு இங்கு கூறியுள்ளேன்.

அந்தச்சம்பவங்கள் இங்குள்ள கருத்துக்களை பார்க்கும்போது மீண்டும் நினைவில் வருகின்றன.

நாங்கள் அப்போது திருகோணமலை கோட்டையினுள் இருந்தோம் (கோணேசுவரர் கோயில் மலையில் அரசாங்க அலுவலர் விடுதியில்). ஒரு நாள் கோட்டையிலிருந்து கோணாசுவராக்கல்லூரிக்கு வழமைபோல் நடந்துசென்றபோது முற்றவெளிப்பகுதியில் எனது அண்ணர் தனது கையில் வைத்திருந்த ஒரு ரூபா நாணயக்குற்றியை புல்லினுள் தவறி விழுத்திவிட்டு அதை எடுக்கச்சென்றபோது சடார் என ஓடிவந்த எனது அண்ணரைவிட சிறியதோற்றம் உடைய ஓர் சிங்களச்சிறுவன் அண்ணர் முகத்தில் பளார் என ஒரு அறைவிட்டபின் அந்த ஒரு ரூபாய் நாயணக்குற்றியை பறித்து எடுத்துச்சென்றான். அண்ணர் அறையைவாங்கிக்கொண்டு அழுதபடி பாடசாலை சென்றார். அருகில் எம்முடன் வேறு சில தமிழ்ப்பிள்ளைகள் வந்தாலும் ஒருவராலும் ஒன்றும் செய்யமுடியவில்லை. குறிப்பிட்ட சிங்களச்சிறுவன் பறித்துப்பெற்ற ஒரு ரூபாய் நாயணய்க்குற்றியைக்கொண்டு திமிருடன் சென்றான்.

பாலர் வகுப்பில் படித்தபோது நடைபெற்ற இன்னோர் சம்பவம்...

குறிப்பிட்ட கோட்டைப்பகுதியில் உள்ள அரசாங்கவிடுதியில் தாராளமாக சிங்களவர்களும் இருந்தார்கள். நாங்கள் அங்கு இருந்த காலப்பகுதியிலேயே அங்கு புத்தர் கோயில் பெரிதாகக்கட்டப்பட்டு மிகவும் உயரமான புத்தர் சிலையும் நிறுவப்பட்டது. அப்போது கோணேசுவரர் கோயிலுக்கு போட்டியாகவே குறிப்பிட்ட புத்தர்கோயிலும், உயரமான புத்தர் சிலையும் நிறுவப்படுவதாய் நம்மவர் கதைத்துக்கொண்டார்கள்.

ஒருநாள் மலைப்பகுதிலிருந்த வீட்டைநோக்கி ஏற்றமான வீதியில் நானும் அண்ணரும் நடந்துசென்றபோது வீதி ஓரமாக உள்ள பகுதியில் நின்ற மூன்றுவயதுப்பாலகனான சிங்களச்சிறுவன் எங்களைக்கண்டதும் திடீரென மிகப்பெரியதொரு கல்லைக்கையிலெடுத்து எம்மைநோக்கி கையைக்காட்டி தூசணத்தால் பேசி எம்மைக்கொல்வேன் என்று மிரட்டினான். எமக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அவனுக்கும் எமக்கும் முன்பின் முரண்பாடுகள் கிடையாது. அவனுடன் கதைத்ததும் கிடையாது. விளையாடியதும் கிடையாது. இவ்வளவிற்கும் அவன் ஓர் குறுணி எனக்கும் அண்ணருக்கும் அவனைவிட மூன்று நான்கு வயதுகள் அதிகம். அப்படியிருந்தும் அவன் அப்படி எம்மை எதுவித காரணமும் இன்றி மிரட்டினான்.

பாலர் வகுப்பில் நான் பெற்ற இந்த இரண்டு சம்பவங்களும் சொல்லும் செய்தி என்னவென்று நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்.

Edited by கரும்பு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் அப்போது திருகோணமலை கோட்டையினுள் இருந்தோம் (கோணேசுவரர் கோயில் மலையில் அரசாங்க அலுவலர் விடுதியில்). ஒரு நாள் கோட்டையிலிருந்து கோணாசுவராக்கல்லூரிக்கு வழமைபோல் நடந்துசென்றபோது முற்றவெளிப்பகுதியில் எனது அண்ணர் தனது கையில் வைத்திருந்த ஒரு ரூபா நாணயக்குற்றியை புல்லினுள் தவறி விழுத்திவிட்டு அதை எடுக்கச்சென்றபோது சடார் என ஓடிவந்த எனது அண்ணரைவிட சிறியதோற்றம் உடைய ஓர் சிங்களச்சிறுவன் அண்ணர் முகத்தில் பளார் என ஒரு அறைவிட்டபின் அந்த ஒரு ரூபாய் நாயணக்குற்றியை பறித்து எடுத்துச்சென்றான். அண்ணர் அறையைவாங்கிக்கொண்டு அழுதபடி பாடசாலை சென்றார். அருகில் எம்முடன் வேறு சில தமிழ்ப்பிள்ளைகள் வந்தாலும் ஒருவராலும் ஒன்றும் செய்யமுடியவில்லை. குறிப்பிட்ட சிங்களச்சிறுவன் பறித்துப்பெற்ற ஒரு ரூபாய் நாணயய்க்குற்றியைக்கொண்டு திமிருடன் சென்றான்.

-------

பாலர் வகுப்பில் நான் பெற்ற இந்த இரண்டு சம்பவங்களும் சொல்லும் செய்தி என்னவென்று நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள்.

சிங்களச் சிறுவர்களுக்கே... பெற்றோரால், ஊட்டிவிடப்படும் இன உணர்வு.

இழிச்சவாய்... தமிழன் தான், இணக்க அரசியல் பேசிக் கொண்டு, சிங்களவனுக்கும்,மூனாக்களுக்கும் காட்டிக் கொடுப்பு வேலை பார்ப்பான்.

  • கருத்துக்கள உறவுகள்

அங்காங்கே சிறு சிறு சம்பவங்கள் நடந்தபோதும்

பல இனக்கலவரங்கள் இதற்கு முன்பே நடந்தேறியிருந்தபோதும்

தமிழாக பிறந்தேன் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக என்னைக்கொலை செய்ய சிங்களவன் துரத்தித்துரத்திக்கலைத்துத்தான் எனக்கு நான் யார் என்பதைப்புரியவைத்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முச்சந்திகளிலும் நாற்சந்திகளிலும் உயரத்தூக்கிய கற்களுக்கு முன்னாலும் ஒளிர மறுக்கவில்லை கமெராக்கள்…

அவர்கள் கடைவாயில் கசியும் இளக்காரத்தையும் கண்களில் வழியும் வெற்றிச் செருக்கையும் ஓரமாய் தெரியும் காமத்தையும் ஒட்டுமொத்த குரூரத்தையும் ஏன்தான் உங்களால் உணரமுடியவில்லை….

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுற்றி நின்று பேய்களின் கூகுரல் குனிந்த தலைகள் நிமிர முடியாத்தோல்வின் சின்னமாய் நாங்கள்.எம் வீரர்களே நீங்கள் சென்ற திசைகளின் பக்கமாய் எம் விழிகள்.காலடித்தடங்கள் கூடகருகிப்போய் கிடக்கிறதே.வெறுமையான எம் இன விடுதலைக் கனவுபோல.நாம்

யாரிடம் உரைப்போம் எம்

கண்ணீர்துழிகளின் மரணச்செய்தியை?

  • கருத்துக்கள உறவுகள்

அங்காங்கே சிறு சிறு சம்பவங்கள் நடந்தபோதும்

பல இனக்கலவரங்கள் இதற்கு முன்பே நடந்தேறியிருந்தபோதும்

தமிழாக பிறந்தேன் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக என்னைக்கொலை செய்ய சிங்களவன் துரத்தித்துரத்திக்கலைத்துத்தான் எனக்கு நான் யார் என்பதைப்புரியவைத்தான்.

இவர்கள் இருக்கமட்டும் போராளிகள் உருவாகுவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

முச்சந்திகளிலும் நாற்சந்திகளிலும் உயரத்தூக்கிய கற்களுக்கு முன்னாலும் ஒளிர மறுக்கவில்லை கமெராக்கள்…

அவர்கள் கடைவாயில் கசியும் இளக்காரத்தையும் கண்களில் வழியும் வெற்றிச் செருக்கையும் ஓரமாய் தெரியும் காமத்தையும் ஒட்டுமொத்த குரூரத்தையும் ஏன்தான் உங்களால் உணரமுடியவில்லை….

எங்க‌ன்ட சனத்திலயே பிழை கண்டுபிடிச்சு பழ‌கிபோட்டுது அதுதான் இந்த நிலை...1974/75 இல் இவர்கள் தொடங்கின "என்கன்ட சனம் இப்படித்தான் என்ற கொள்கையை" இப்பவும் இவர்களால் மாற்றமுடியவில்லை புலிகள் அழிந்தாலும் இவர்கள் தொடர்ந்து வாழ்வார்கள் இவர்களின் கருத்துக்கள் மெல்ல இனி புகும்

Edited by putthan

வெறும் செண்டிமேன்டாலும் அனுதாபத்தாலும் எதையும் சாதிக்க முடியாது .

எழுபது கடைசிகளிலேயே கொழும்பு போனால் போன அலுவல் முடிய அடுத்தநாள் திரும்பிவிடுவேன் .எமது ஊர் சந்தி தான் எமது கோட்டை.

சிங்களவன் அடிக்கின்றான் என்று ஓடி வந்து ஒப்பாரி வைப்பதில் ஆகப்போவது ஒன்றுமில்லை .அதுதான் எங்களுக்கு தெரிந்தது என்றால் இப்படியே இருந்து கத்த வேண்டியதுதான்.

தனது மகனை ஜெயிலில் அடித்து கொன்றதற்கு அந்த தாய் வானொலியில் கொடுத்த பேட்டி கேட்டிருக்க வேண்டும் .

சும்மா சகட்டுமேனிக்கு இணையத்தில் வந்து கொட்டி சம்பந்தரையும் திட்டி அவனன் தன் குடும்பம் ,பிள்ளை குட்டி ,வீடு ,விடுமுறை என்று திரிந்து கொண்டு தமிழீழமே தீர்வு என்பது பஷனாகிவிட்டது .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழமே தீர்வு என்பது பஷனாகிவிட்டது .

தமிழீழம் தீர்வு என்று கருத்து இங்கு வைக்கப்படவில்லை.. உரிமை பிரச்சனைதான் உரிமைக்காக எவனும் குரல் கொடுப்பான் ....சிறையில் வைத்து அவர்கள் அடித்தது நியாயம் என்று சொல்கின்றீர்களா?

சிலருக்கு தமிழீழம் பஷனாகி போய்விட்டது..சிலருக்கு அதுக்கு எதிராக கருத்துவைப்பது பஷனாகி போய்விட்டது :D

Edited by putthan

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் செண்டிமேன்டாலும் அனுதாபத்தாலும் எதையும் சாதிக்க முடியாது .

எழுபது கடைசிகளிலேயே கொழும்பு போனால் போன அலுவல் முடிய அடுத்தநாள் திரும்பிவிடுவேன் .எமது ஊர் சந்தி தான் எமது கோட்டை.

சிங்களவன் அடிக்கின்றான் என்று ஓடி வந்து ஒப்பாரி வைப்பதில் ஆகப்போவது ஒன்றுமில்லை .அதுதான் எங்களுக்கு தெரிந்தது என்றால் இப்படியே இருந்து கத்த வேண்டியதுதான்.

தனது மகனை ஜெயிலில் அடித்து கொன்றதற்கு அந்த தாய் வானொலியில் கொடுத்த பேட்டி கேட்டிருக்க வேண்டும் .

சும்மா சகட்டுமேனிக்கு இணையத்தில் வந்து கொட்டி சம்பந்தரையும் திட்டி அவனன் தன் குடும்பம் ,பிள்ளை குட்டி ,வீடு ,விடுமுறை என்று திரிந்து கொண்டு தமிழீழமே தீர்வு என்பது பஷனாகிவிட்டது .

அம்மாவின் இழப்பின் பின்னாவது எதிர்பார்த்த நாங்கள் முட்டாள்கள் . மன்னித்துக்கொள்ளுங்கள் தமிழ் சிறி .

அர்ஜுன் நீங்கள் திருந்த்தப்போவதில்லை .

Edited by நந்தன்26

அரசியல் தீர்வு எமக்கு எள்ளளவும் கிடைக்கவில்லை .அது நூறு வீ தம் உண்மை .

ஆனால் நாட்டிற்கு போய் வருபவர்கள் சொல்வது அங்கு எது வித கெடுபிடியுமில்லை என்பதுவும் நூறு வீதம் உண்மை .

[size=4]புலம்பெயர் தமிழர்கள் மீண்டும் தாயகம் திரும்பும்பொழுது அவர்கள் கொல்லப்படுவது, கடத்தப்படுவது, வெருட்டப்படுவதுகள் பற்றிய திரிகளை தவிர்கின்றீர்கள். எனவே உங்கள் கருத்தில் அநியாயம் உள்ளது. [/size]

எனது தம்பி முப்பது வருடங்களுக்கு பின் நாட்டிற்கு போய் இரண்டு மாதங்கள் நின்று விட்டு திரும்பிவந்தார் .வெளிநாடுகளில் இருந்துவிட்டு நாட்டில் போய் தங்கிவிட்ட எமது ஆறு நண்பர்கள் அங்கு இப்போது உள்ளார்கள்.ஒரு மோட்டார் சயிக்கிளின் உதவியுடன் முழு இடங்களும் சுற்றியடித்ததாக சொன்னார்.

எங்கும் இராணுவ பிரசன்னம் என்பது உண்மை ஆனால் மக்கள் தங்கள் அன்றாட அலுவல்கள் அத்தனையும் செய்ய தொடங்கிவிட்டார்கள் .

அங்கிருக்கும் மக்களுக்கு முடிந்த அளவிற்கு அனைத்து விதத்திலும் உதவுவதுதான் நல்லது ,அதைவிட்டு நாட்டில் பிரச்சனை இருக்கு என்று காட்ட விலகி இருப்பது எந்தவிதத்திலும் எமக்கு உதவபோவதில்லை

[size=4]எவ்வாறு உதவ முடியும்? இராணுவ ஆட்சியில் மக்களால் எதுவுமே சுதந்திரமாக செய்யமுடியும் என்பது அவமான கருத்து. [/size]

எமக்கு அரசியல் தீர்வு கிடைக்கவில்லை என்பதற்காக அங்கு இருக்கும் உண்மை நிலையை பொய்யாக்க முடியாது .

நாட்டு நடப்பு வேறு அரசியல் வேறு ,ஏதோ நீங்களெல்லாம் நாட்டை நினைத்து சாப்பிடாமல் பட்டினி கிடப்பதுமாதிரி கிடக்கு உங்கள் எழுத்துக்கள் .

[size=4]நாட்டு நடப்பு வேறு, அரசியல் வேறு? இது எங்குமே யாருமே கூறி இருக்காத புதிய அறிவியல் சித்தாந்தமா?? [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.