Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவிலிருந்து 70 வயதான இலங்கை தமிழ் பெண் நாடுகடத்தப்பட்டார்

Featured Replies

[size=4]எழுபது வயதான பெண்ணொருவர் கனடாவிலிருந்து இலங்கைக்கு நேற்று நாடுகடத்தப்பட்டுள்ளார். அனது குடும்ப அங்கத்தவர்கள் எவரும் இலங்கையில் இல்லாத நிலையிலும் அவர் நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைத் தமிழ் பெண்ணான குணபூசனி கந்தசாமி, நாடுகடத்தப்படும் மற்றொருவருடன் வியாழனன்று இரவு 10 மணிக்கு விமானமொன்றில் ஏற்றப்பட்டுள்ளார். இவர்களுடன் கனேடிய எல்லை சேவைகள் முகவரக அதிகாரியொருவர், தாதியொருவரும் அனுப்பப்பட்டுள்ளனர்.

தமக்கு மோசமான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அப்பெண்ணின் கனேடிய மகளும் பேத்தியும் தெரிவித்துள்ளனர்.

அப்பெண்ணுக்கு அனுசரணை வழங்குவதற்கு பதிலாக அகதி அந்தஸ்து கோரி தாக்கல் செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்னர்.

'அவர் அங்கு திரும்பிச் செல்லலாம். ஆனால், அங்கு அங்கு அவருக்கு வேறு உறவினர்களோ, நெருக்கமான நண்பர்களோ இல்லை' என அப்பெண் நாடு கடத்தப்படுவதற்கு முன் சிபிசி தொலைக்காட்சிக்கு அப்பெண்ணின் மகளான சந்திராதேவி உத்திரகுமாரன் கூறினார்.

'இப்படி உங்கள் குடும்பத்திற்கு நடப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்கள். அவருக்கு அனுசரணை வழங்க எமக்கு ஒரு வாய்ப்பு வழங்குங்கள். அங்குள்ள சூழ்நிலை தெரியாமல் என அவரின் பேத்தியான தாட்ஸா உத்திரகுமாரன் கூறினார்.

அப்பெண்ணின் பிள்ளைகளில் இருவர் கனடாவிலும் மேலும் இருவர் நோர்வேயிலும் வசிக்கின்றனர். அப்பெண்ணுக்கு நோர்வேயில் நிரந்தர வதிவிடம் இருப்பதாக கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபை தெரிவித்துள்ளது. எனினும் கடவுச்சீட்டில் ஒட்டப்பட்டிருந்த வதிவிட ஸ்ரிக்கர் திகதி காலாவதியாகியிருந்தது எனவும் அச்சபை ஒப்புக்கொண்டுள்ளது.

கனடாவிலுள்ள தமது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் இணைய விரும்புவோரின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதை கடந்த வருடம் கனடா நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளைஇ குடும்ப அங்கத்தவர்களை சந்திக்கவருபவர்களுக்கு பத்து வருடங்களுக்கான புதிய சுப்பர் விஸா திட்டமொன்றை பிரஜாவுரிமை மற்றும் குடிவரவு அமைச்சர் ஜேஸன் கென்னி அறிவித்தார். இதன்படி ஒருவர் ஒருதடவையில் இருவருட காலம் வரை கனடாவில் தங்கியிருக்கலாம். இத்திட்டத்தின்கீழ் தமது பெற்றோர் அல்லது பாட்டன், பாட்டியை அழைக்க விரும்புவர்கள் குறைந்தபட்சம் 17,000 டொலர் வருமானத்தை கொண்டிருப்பதுடன் தனியார் காப்புறுதியையும் பெற வேண்டும்.[/size]

[size=4]http://www.tamilmirr...46411--70-.html[/size]

Edited by akootha

[size=4]எழுபது வயதான பெண்ணொருவர் கனடாவிலிருந்து இலங்கைக்கு நேற்று நாடுகடத்தப்பட்டுள்ளார். அனது குடும்ப அங்கத்தவர்கள் எவரும் இலங்கையில் இல்லாத நிலையிலும் அவர் நாடுகடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைத் தமிழ் பெண்ணான குணபூசனி கந்தசாமி, நாடுகடத்தப்படும் மற்றொருவருடன் வியாழனன்று இரவு 10 மணிக்கு விமானமொன்றில் ஏற்றப்பட்டுள்ளார். இவர்களுடன் கனேடிய எல்லை சேவைகள் முகவரக அதிகாரியொருவர், தாதியொருவரும் அனுப்பப்பட்டுள்ளனர்.

தமக்கு மோசமான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அப்பெண்ணின் கனேடிய மகளும் பேத்தியும் தெரிவித்துள்ளனர்.

அப்பெண்ணுக்கு அனுசரணை வழங்குவதற்கு பதிலாக [size=5]அகதி அந்தஸ்து[/size] கோரி தாக்கல் செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்னர்.

'அவர் அங்கு திரும்பிச் செல்லலாம். ஆனால், அங்கு அங்கு அவருக்கு வேறு உறவினர்களோ, நெருக்கமான நண்பர்களோ இல்லை' என அப்பெண் நாடு கடத்தப்படுவதற்கு முன் சிபிசி தொலைக்காட்சிக்கு அப்பெண்ணின் மகளான சந்திராதேவி உத்திரகுமாரன் கூறினார்.

'இப்படி உங்கள் குடும்பத்திற்கு நடப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்கள். அவருக்கு அனுசரணை வழங்க எமக்கு ஒரு வாய்ப்பு வழங்குங்கள். அங்குள்ள சூழ்நிலை தெரியாமல் என அவரின் பேத்தியான தாட்ஸா உத்திரகுமாரன் கூறினார்.

அப்பெண்ணின் பிள்ளைகளில் இருவர் கனடாவிலும் மேலும் இருவர் நோர்வேயிலும் வசிக்கின்றனர். அப்பெண்ணுக்கு [size=5]நோர்வேயில் நிரந்தர வதிவிடம் [/size][size=5][size=4]இருப்பதாக[/size][/size] கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் சபை தெரிவித்துள்ளது. எனினும் கடவுச்சீட்டில் ஒட்டப்பட்டிருந்த வதிவிட ஸ்ரிக்கர் திகதி காலாவதியாகியிருந்தது எனவும் அச்சபை ஒப்புக்கொண்டுள்ளது.

கனடாவிலுள்ள தமது பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் இணைய விரும்புவோரின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதை கடந்த வருடம் கனடா நிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளைஇ குடும்ப அங்கத்தவர்களை சந்திக்கவருபவர்களுக்கு [size=5]பத்து வருடங்களுக்கான புதிய சுப்பர் விஸா[/size] திட்டமொன்றை பிரஜாவுரிமை மற்றும் குடிவரவு அமைச்சர் ஜேஸன் கென்னி அறிவித்தார். இதன்படி ஒருவர் ஒருதடவையில் [size=5]இருவருட காலம் வரை கனடாவில் தங்கியிருக்கலாம்[/size]. இத்திட்டத்தின்கீழ் தமது பெற்றோர் அல்லது பாட்டன், பாட்டியை அழைக்க விரும்புவர்கள் குறைந்தபட்சம் [size=5]17,000 டொலர் வருமானத்தை[/size] கொண்டிருப்பதுடன் [size=5]தனியார் காப்புறுதி[/size]யையும் பெற வேண்டும்.[/size]

[size=4]http://www.tamilmirr...46411--70-.html[/size]

[size=4][size=5]அகதி அந்தஸ்து (கனடாவில்) - ஆனால் [/size][/size][size=4][size=5]நோர்வேயில் நிரந்தர வதிவிடம் இருந்திருக்கின்றது[/size][/size]

[size=4][size=5]பத்து வருடங்களுக்கான புதிய சுப்பர் விஸா - [/size][/size][size=5]ஒருவர் ஒருதடவையில் இருவருட காலம் வரை கனடாவில் தங்கியிருக்கலாம்[/size]

[size=5]பிரச்சனை இங்கை தான் [/size]

[size=4][size=5]17,000 டொலர் வருமானம், [/size][/size][size=4][size=5]தனியார் காப்புறுதி[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

கவலையான செய்தி..ஆனால் இந்த விடையத்தில் அந்த அம்மாவின் பிள்ளைகள் தங்கள் தாயாருக்கு அகதி அந்தஸ்து நிராகரிகப்பட்டு விட்டதது, என்ற தகவலை அறிந்து கொண்டதும் கால தாமமின்றி அடுத்த நடவடிக்கையில் இறங்கி இருந்தால் ஓரளவுக்கு தன்னும் இந்த நிலையில் இருந்து விடுபட்டு இருக்கலாம்...நாங்கள் நியாயமாக நடக்கும் பட்சத்தில் கண்டிப்பாக எங்களுக்கு வெற்றி நிட்சயம்..பெற்றோரை வைச்சு இருக்கிறம் அது மட்டும் போதும் என்றும் நினைத்து விட கூடாது.வீடியோவில் பார்க்கும் போது ஊர் போயும் தனிமையில் இயங்க கூடிய நிலையில் இந்த தாயார் இல்லை.ஆகவே இவரை இங்கு பொறுப்பாக பார்த்தவர்க்ள அல்லவா கவனமாக இருந்து இருக்க வேண்டியவர்கள்..

  • கருத்துக்கள உறவுகள்

இருவர் கனடாவிலும் இருவர் நோர்வேயிலும் இருந்தும்

அந்த வயோதிபத் தாய் சிறிலங்காவிற்குத் திருப்பி அனுப்பப்படுவது பரிதாபம்.

அவருடைய பிள்ளைகளின் அசட்டையீனம் தாயார் மீது வைத்திருந்த கவனிப்பைக்

காட்டுகின்றது.

முழுத் தவறும் பிள்ளைகளையே சேரும். சுப்பர் வீசா திட்டம் கொண்டுவந்த பின்பும் அதனை பெற்றுக் கொடுக்க முயலாமல் அகதிக் காசு பெற்று தாயைக் காப்பாற்றலாம் என நினைத்த இந்த மகளில் தான் முழுக்குற்றமும்.

அதேவேளைஇ குடும்ப அங்கத்தவர்களை சந்திக்கவருபவர்களுக்கு பத்து வருடங்களுக்கான புதிய சுப்பர் விஸா திட்டமொன்றை பிரஜாவுரிமை மற்றும் குடிவரவு அமைச்சர் ஜேஸன் கென்னி அறிவித்தார். இதன்படி ஒருவர் ஒருதடவையில் இருவருட காலம் வரை கனடாவில் தங்கியிருக்கலாம். இத்திட்டத்தின்கீழ் தமது பெற்றோர் அல்லது பாட்டன், பாட்டியை அழைக்க விரும்புவர்கள் குறைந்தபட்சம் 17,000 டொலர் வருமானத்தை கொண்டிருப்பதுடன் தனியார் காப்புறுதியையும் பெற வேண்டும்.

http://www.tamilmirr...46411--70-.html

இது ஒரு நல்ல திட்டம். பெற்றோரை கூட்டி வந்தபின் அநேகமாக அவர்களை தமது பிள்ளைகளை வளர்ப்பதற்கு உறுதுணை வழங்க விட்டு விட்டு கணவனும் மனைவியும் வேலைக்கு போவதுதான் வழக்கம். அப்படி செய்வதால் வருமானம் கூடும் போது (day care இற்கு வழங்கும் பணமும் மிச்சம்) அதில் இருந்து மாதம் ஒன்றுக்கு நூறு டொலர் செலுத்தி காப்புறுதி பெற்று பெற்றோரைக் கவனிப்பதால் இழப்பு ஒன்றும் இல்லை. இந்த திட்டத்தின் படி 10 வருடத்துக்கான multiple entry visa வழங்கப்படும். அதனை இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிள்ளையளின்ரை சுத்துமாத்து வயதுபோன பெற்றோரை பாதிக்குது.

இந்த அம்மாவை எனக்கு நன்றாக தெரியும். நான்கு வருடங்களின் முன் இவரது நோர்வேயிலுள்ள மகன் ஸ்பொன்சர் பண்ணிக்கூப்பிட்டு அங்கு போய் ~ இரண்டு வருடங்கள் இருந்த பின் கனடாவிற்கு ரூறிஸ்ட் விசாவில் சென்று அங்கு நின்று விட்டார். அவர் மிகவும் நோயாளி, பேரப்பிள்ளைகளை பார்க்க கூட அவருக்கு முடியாது. அத்துடன் அவரது மகளின் பிள்ளைககள் மிகவும் வளர்ந்த பிள்ளைகள் வளர்ந்தவர்கள். மகன் இப்போது தான் திருமணமானவர்.

எனக்கு சரியாகத் தெரியாது என்ன முறையில் வழக்கு போட்டவர்களென்று ஆனாலும் வழக்கிற்காக நிறைய பணம் செலவளித்தவர்க்ள். நான்கோ, ஐந்து முறை வழக்கு கோட்டிற்கு போனது.

இவர் மிகவும் நோயாளி என்ற படியால், மருத்துவ செலவை குறைப்பதற்காக அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்தார்களோ தெரியாது.

இவர் மிகவும் நோயாளி என்ற படியால், மருத்துவ செலவை குறைப்பதற்காக அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்தார்களோ தெரியாது.

கடும் நோயுள்ள வயதானவர்களுக்கு super visa insurance எடுப்பது மிகக் கடினம். இந்த காப்புறுதி எடுக்கும் போது ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு சேர்த்து எடுக்க முடியாது. கனடா வந்த பின் ஏற்படும் நோய்களுக்குத் தான் எடுக்க முடியும்.

டூரிஸ்ட் வீசாவில் வந்து அகதி அந்தஸ்துக் கோரி ஏற்க வைப்பது மிகக் கடினம். வந்தவுடன் பாஸ்போர்ட் கிழித்து நாடற்றவர்கள் என்று காட்டி அகதி அந்தஸ்து எடுப்பதை விட மிகக் கடினமான விடயம்.

வளர்ந்த பிள்ளைகளும், வளர்ந்த பேரப் பிள்ளைகளும் ஒருவகையில் இந்த அம்மாவை கை விட்டு விட்டதாகவே தெரிகின்றது. 10000 டொலர் முற்பணமாக கட்டியாவது ஒரு காப்புறுதி எடுத்து சுப்பர் வீசாவுக்க் முயன்று இருக்கலாம். அல்லது நோர்வேயிலேயே விட்டு இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே, கனடாவை விட குளிர் கூட என்ற படியால்.... கனடாவுக்கு கூப்பிட்டிருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடும் நோயுள்ள வயதானவர்களுக்கு super visa insurance எடுப்பது மிகக் கடினம். இந்த காப்புறுதி எடுக்கும் போது ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கு சேர்த்து எடுக்க முடியாது. கனடா வந்த பின் ஏற்படும் நோய்களுக்குத் தான் எடுக்க முடியும்.

10000 டொலர் முற்பணமாக கட்டியாவது ஒரு காப்புறுதி எடுத்து சுப்பர் வீசாவுக்க் முயன்று இருக்கலாம். அல்லது நோர்வேயிலேயே விட்டு இருக்கலாம்.

சுப்பர் விசா

நிழலி இதுபற்றி விபரமாக சொல்ல முடியுமா? தனிமடலில் சொன்னாலும் பரவாயில்லை;

;

இதற்குm மற்றைய விசிடிங் விசா போல, ஊரில் சொத்து, பண இருப்பு, உறவினர்கள் எல்லாம் பார்த்தா தருவார்கள்? பொதுவாக சுகதேகியான 65 வயது பெற்றோருக்கு- பிரஷர் இருக்கு ஒருவருக்கு :)- எவ்வளது காலம் எடுக்கும், இன்சூரன்ஸ் எவ்வளவு வரும்?

நீங்கள் கனேடிய Immigration ஒபிசில் கேட்டால் விபரம் கொடுப்பார்கள். இன்சூரன்ஸ் விபரங்களும் சொல்லுவார்கள் . நீங்கள் தான் இன்சூரன்ஸ் கம்பனிகளோடு கதைக்க வேண்டும். இப்படிக் கேள்விப்பட்டனான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.