Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மலையாள அதிகார வர்க்கம் ஈழத்துக்கு எதிராக இருப்பது ஏன்?

Featured Replies

[size=5]மலையாள அதிகார வர்க்கம் ஈழத்துக்கு எதிராக இருப்பது ஏன்?

பொதுவாகவே மலையாள அதிகார வர்க்கம் தமிழர்களை மதிப்பதில்லை. தமிழர்களை விட தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற மமதை அவர்களுக்கு உண்டு.தமிழர்களை 'பாண்டி' என்று இழிசனர்களாக சுட்டும் இடுகுறிப் பெயரால் அழைக்கும் வழக்கம் கேரளாவில் பொதுவாக உள்ளது.மலையாள மொழி என்பதே தமிழுடன் சமஸ்கிரதம் சேர்ந்து உருவான மொழி.அவர்கள் அதை சமஸ்கிரதத்தோடு தமிழி என்ன ஆதித் திராவிட மொழி சேர்ந்து உருவானது என்று தான் சொல்வார்கள்.பண்டைய சேர நாடு தான் இன்றைய கேளரா என்பதைக் கூட சேர நாடு தமிழர்களுடைய நாடு என்று சொல்லமாட்டார்கள்.தமிழி என்ற தழிழுக்கு முந்திய மொழி பேசியவர்களின் நாடு என்று தான் சொல்வார்கள்.இத்தனைக்கும் பாண்டியர்களும் சோழர்களும் மோதிக்கொண்ட அளவுக்கு சேரர்களும் பாண்டியர்களும், சேரர்களும் சோழர்களும் மோதிக் கொண்டது குறைவு.தமிழர்கள் மலையாளிகளுக்கு போட்டியாக இருந்ததும் கிடையாது. கேரளாவுக்குத் தேவையான இறைச்சி முதல் கொண்டு மரக்கறி அரசி வரையிலான உணவுப் பொருட்கள் தமிழகத்தில் இருந்து தான் செல்கின்றன.ஈழ விடுதலைப் போராட்டத்தை ஒடுக்கியதில் சிங்கள அதிகார வர்க்கத்தின் பங்கை விட மலையாள அதிகார வர்க்கத்தின் பங்கு மிக முக்கியமானது.வட இந்திய அதிகார வர்க்கத்துக்கு எப்படி சோழர்களையும் அவர்களது புலிச்சின்னத்தையும் பிடிப்பதில்லையே அது போல இந்த மலையாள அதிகார வர்க்கத்துக்கு ஈழம் என்ற சொல் எட்டிக்காயை விட கசப்பானதாக இருக்கிறது.அதற்குக் காரணம் மலையாள அதிகார வர்க்கத்துக்கு ஈழவர்களை பிடிக்காது.அதனால் ஈழத்தையும் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பதேயாகும்!ஈழவர்கள் என்பது கேரளாவில் வாழும் ஒரு பிரிவு மக்களாகும்.இவர்கள் மொத்த கேரள மக்கள் தொகையில் 23 வீதமாகும்(73 இலட்சம் பேர் )[/size]

[size=5]ஒரு 60 முதல் 70 ஆண்டுகளுக்கு முன்னர் கேளர ஆதிக்க சாதியினரான நம்பூதிரிகள் வீதியில் வரும் போது இவர்கள் வீடுகளை விட்டு வெளியே வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.நாயர்கள் விதியில் வந்தால் இவர்கள் அவர்களுக்கு 15 அடி தள்ளியே ஓரமாக நடந்து செல்லவேண்டும் என்று பணிக்கப்பட்டிருந்தார்கள்.ஒரு நம்பூதிரி அல்லது நாயரை ஈழவன் தொட்டுவிட்டால் அவனுக்கு மரணதண்டனை வழங்கப்படும் என்ற அளவு கொடிய ஒடுக்குமுறை இருந்தது.[/size]

[size=5]இந்த ஈழவர்கள் சேரர் பரம்பரையை சேர்ந்த வில்லவர்கள் என்ற இனத்தின் வழித் தோன்றல்கள் என்றும் ஈழத்தை சேர்ந்த ஈழவா அல்லது திய்யா என்ற மன்னர் பரம்பரையை சேர்ந்தவர்களும் அவர்களது குடி மக்களும் என்றும் இவர்களின் பூர்வீகம்பற்றி இரண்டு கருத்துக்கள் இருக்கின்றன.[/size]

[size=5]கேரள அதிகார வர்க்த்தைச் சோந்த நம்பூதிரிகளினதும் நாயர்களினதும் ஈவிரக்கமற்ற ஒடுக்குமுறையில் இருந்து இந்த ஈழவர் சமூகம் விடுதலை பெறுவதற்கு காரணமாக இருந்தவர் நாராயண குரு.[/size]

[size=5]அவர் அறிவு ஒன்றுதான் மனித குலத்துக்கு உரியது என்றும் அதைக் கொண்டு முன்னேற்றம் காண்பதுதான் வாழ்க்கை என்றும் சொன்னார். இந்த அறிவுக்கு குறுக்கு வழிகள் எதுவும் இல்லை என்றும் எதையும் நிராகரிக்காமல் அனைத்தையும் நேர்வழியில் பயன்படுத்தி அறிவைக்கொண்டு முன்னேற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.[/size]

[size=5]ஆலங்களுக்குள் ஈழவர்கள் செல்லக் கூடாது என்று என்று அதிகார வர்க்கம் சொன்னபோது அவர் ஈழவர்களுக்கான ஆலயங்களை நிறுவினார்.1888 ம் ஆண்டு திருவனந்தபுரத்துக்கு அருகிலுள்ள அருவிப்புரம் என்ற இடத்தில் அவர் முதலாவது சிவன் கோவிலை நிறுவியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.[/size]

[size=5]அதைத் தொடர்ந்து அவர் சிவன், விஷ்ணு, சுப்பிரமணியர் முதலான தெய்வங்களுக்கான கோவில்களை உருவாக்கியதுடன் வள்ளலாரின் வழியில் இறைவன் ஒயிமயமானவன் என்பதை விளக்குவதற்காக விளக்கை கருவறை தெய்வமாகப் பிரதிஷ்டை செய்து கோவில்களை அமைத்தார்;, பின்பு சத்யம்-தர்மம்-தயவு எனும் சொற்களை கருவறை தெய்வமாகப் பிரதிஷ்டை செய்தும் கோவில்களை அமைத்தார். அதன் பின்னர் மனிதனது மனச்சாட்சிதான் மிகப்பெரிய தெய்வும் என்பதை வலியுறுத்தும் வகையில் களவங்கோடு எனும் பகுதியில் நிலைக் கண்ணாடியை தெய்வமாகப் பிரதிஷ்டை செய்து புதிய கோவில் ஒன்றை அமைத்தார்.அத்துடன் இந்தக் கோவில்களை ஒட்டி பாடசாலைகளும் களரி முதலான பாரம்பரிய விளையாட்டுகளை பழகும் இடங்களையும் அவர் அமைத்தார்.ஈழவர்களால் மரபுரீதியாக செய்யப்பட்டு வந்த ஆயுர் வேத மருத்துவத்தை வளப்படுத்துவதற்காக ஆயுர் வேத மருத்துவமனைகளையும் அதை முறையாகக் கற்பதற்கான கல்விக் கூடங்களையும் அவர் அமைத்தார்.இந்த நடவடிக்கைகள் காலாகாலமாக சாதி ரீதியாக ஒடுக்கப்பட்டிருந்த ஈழவர் சமூகத்தை அந்த ஒடுக்கு முறையில் இருந்து விடுவித்தது.அந்த சமூகத்தை கல்வி அறிவும் முற்போக்கு சிந்தனையுமுள்ள ஒரு சமூகமாக மாற்றியது.[/size]

[size=5][size=6][நாராயண குரு ஈழவர் சமூகத்தில் இந்த மாபெரும் பாச்சலை உருவாக்க உந்து சக்தியாக இருந்தவர் ஒரு தமிழர்.[[/size]

திருவனந்தபுரத்தில் அப்போதைய பிரித்தானிய அரசாங்கப் பணியாளராகப் பணிபுரிந்த தைக்காடு அய்யா என்ற தமிழரே அவராகும். சிலம்பு, யோகக் கலைகள் போன்றவைகளைக் கற்றுக் கொடுக்கும் ஆசானாகவும் திகழ்ந்த அவரிடம் நாராயண குரு தியானம், யோகா போன்ற கலைகளுடன் தமிழில் ஆழமான அறிவையும் பெற்றார். திருமூலரின் திருமந்திரம் திருக்குறள் போன்ற தமிழ் நூல்களையும் கற்று அறிந்தார்.தைக்காடு அய்யாவை தான் சந்தித்ததும் திருமூலரின் திருமந்திரமும் தான் தனது வாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியதாக நாராயண குரு கூறியிருக்கிறார்.

இது காலாகாலமாக கேரளத்தில் வானளாவிய அதிகாரங்களை கொண்டிருந்த நம்பூதிரிகள் மற்றும் நாயர்களை உள்ளடக்கிய மலையாள அதிகார வர்க்கத்துக்கு கோபத்தை எற்படுத்தியதுடன் தமிழர்கள் மீதான வன்மத்தை வளர்க்கவும் காரணமாக அமைந்தது.1980 களின் ஆரம்பத்தில் நான் கேரள இடதுசாரி தோழர்களோடு அரிவிப்புரம்,நெய்யாற்றின் கரை, கொட்டாரக்கரை,காயங்குளம், கோட்டயம் சங்கணாஞ்சேரி முதலான முன்னாள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளிலுள்ள ஈழவர் கிராமங்களில் களப்பணியாற்ற சென்ற போது எனக்கு பல ஆச்சரியங்கள் காத்திருந்தன.இந்த கிராமங்களின் அமைப்பு முறை குறிப்பாக ஒழுங்கைகள் வேலிகள் குடிசைகள் மற்றும் கல் வீடுகளின் அமைப்பு முறை தோட்டம் கிணற்றடி அமைப்பு முறை மா பலா தென்னை கமுகு முதலான மரங்கள் வளர்ப்பு கோவில்கள் அவற்றின் பூசை முறை என்பன அச்சொட்டாக எமது தென்மாரட்சி பகுதி(மீசாலை எழுதுமட்டுவாள் பளை பகுதி) கிராமங்களைப் போலவே இருந்தன.உணவு முறையும் கூட புட்டு அப்பம் கழி சொதி குளம்பு என்பன கூட எமது உணவு முறையைப்போலவே இருந்தது. தோங்காய் பாலை பிரதானமாக பயன்படுத்தி குழம்பு சொதி வைப்பது மாங்காய் போட்டு தீயல் வைப்பது இவையெல்லாம் அச்சொட்டாக எங்கள் சமையல் முறையைப் போலவே இருந்தது.(தமிழகத்தில் இந்த சமையல்முறை கிடையாது)பேச்சு வழக்கிலே கூட மோனே! மோளே! வெய்யலத்தை போகாதை! மழையத்தை போகாதை! பறையாம இரு!!எவட போற! உறைப்பு கூட! இப்ப பல சொற்கள் நாங்கள் யாழ்ப்பாணத்தில் பேசுகின்ற சொற்களை அதே உச்சரிப்புடன் இந்த ஈழவ மக்கள் பேசுவதை கேட்கக் கூடியதாக இருந்தது.எமது வடமராட்சி கிழக்குப் பகுதியில் உள்ள நாகர்கோவில் குடத்தனை மாமுனை குடாரப்பு முதலான ஊர்களில் 'பார் அவரை' என்பதை 'பேப்பார்' என்றுற சொல்வார்கள்.இதை நான் யாழ்ப்பாணத்தில் வேறெந்த பகுதியிலும் கேட்டதில்லை.ஆனால் தமிழக கேரள எல்லையிலுள்ள களியக்காவளை பகுதியில் இதைக் கேட்டபோது எனக்கு அளவுகடந்த ஆச்சரியமாக இருந்தது.[/size]

[size=5]அதைப் போலவே பண்பாட்டு அடிப்படையிலும் அவர்கள் எம்மைப் போல தாய் வழி சமூகக் கூறுகளை முதன்மையாக கொண்டவர்களாக இருந்தார்கள்.தாய் வழி சொந்தங்களுக்கு முன்னுரிமை.பெண் திருமணமாகி கணவனோடு தாய் வீட்டில் இருப்பது(தமிழகத்தில் இது வீட்டோடு மாப்பிளை என்று இழிவாகக் கருதப்படுகிறது)தொழில் ரீதியாக தென்னந்தோட்டங்களில் அலவாங்கில் தேற்காயை குத்தி உரிப்பது தென்னோலை ஊற வைத்து கிடுகு பின்னவது.பாய் பெட்டி மூடல்கள் இழைப்பது எல்லாமே எங்கள் ஊரைப் போன்றது தான்.

இந்த ஒற்றுமைகள் நாயர்கள் நம்பூதிரிகள் வாழும் கிராமங்களில் கிடையாது என்பது தான் இதில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும்

ஆனால் இதேவேளை மலபார் என்று சொல்லுகின்ற வட கோரளத்திலுள்ள ஈழவர் கிராமங்கள் மாத்தறை தங்காலை கதிர்காமம் முதலான பகுதிகளிலுள்ள சிங்களக் கிராமங்களை போல இருந்தன.அந்தப் பகுதிப் பெண்கள் சிங்கள கிராமியப் பெண்களைப் போலவே உடையணிந்தார்கள். தென்னம் பொச்சை நிர்நிலைகளில் ஊறவைப்பது.பின்னர் அதிலிருந்து தும்பு எடுப்பது.அதன் பின் கயிறு திரிப்பது என்று இந்தத் தொழில் சிங்களக் கிராமங்களில் நடைபெற்ற அதே பாணியிலேயே நடைபெற்றதுஇது இந்த மக்களின் வரலாற்றை ஆய்வு செய்ய வேண்டும் என்ற ஒரு ஆர்வத்தை எனக்கு எற்படுத்தியது.

எனது இந்த முயற்சிக்கு உதவுவதற்கு கேரளாவின் புரட்சிகர பொதுவுடமை இயக்கத்தை சோந்த 4 தோழர்கள் முன்வந்தனர்.

அதில் முக்கியமானவர் அப்போது திருவனந்தபுரம் சட்டக்கல்லூரியில் கல்வி கற்று வந்த தோழர் எமிலியாசாகும்.

நாங்கள் திருவனந்தபுரம் பல்கலைக்கழகம், திருவனந்தபுரத்திலிருந்த நாராணாய குரு மன்றம் திருவிதாங்கூர் சமஸ்தான நூலகம் என்பவற்றிலிருந்து ஈழவர்கள் பற்றிய வரலாற்று தகவல்களை திரட்டியதுடன் நெய்யாற்றின் கரையில் இருந்து ஆரம்பித்து மேற்குத் தொடர்ச்சி மலையேரக் கிராமங்கள் மற்றும் வடக்கே காசர் கோடு வயநாடு ஈறாக நூற்றுக்கு மேற்பட்ட கிராமங்களில் 18 மாதங்கள் பல்வேறு ஈழவர் சமூக பெரியார்களை சந்தித்து தகவல்களை திரட்டி கள ஆய்வு செய்ததில் ஈழவர்களுக்கும் ஈழத்திற்கும் தொடர்பிருந்ததை உறுதி செய்ய முடிந்தது.முக்கியமாக சேரர்களுடைய ஆட்சிக்காலத்தில் படைவீரர்களாகவும் படைதளபதிகளாவும் மெய்காப்பாளர்களாவும் வணிகர்காகவும் இருந்த இவர்கள் ஈழத்திலும் பரவி வாழ்ந்திருக்கிறார்கள்.கண்ணகிக்கு சேரன் செங்குட்டுவன் கோவில் கட்டியதாக சொல்லப்படும் காலத்தில் ஈழத்திலும் இவர்களே கண்ணகிக்கு கோவில் கட்டியிருக்கிறார்கள்.(கண்ணகிக்கு இலங்கையில் கோவில் கட்டப்பட்ட செய்தி சிங்கள் வரலாற்று நூல்களிலும் உள்ளது) தமிழகத்துடன் மண உறவுகளை வைத்துக்கொண்ட ஈழத்து மன்னர்கள்(ஈழம் என்பது அப்போது முழு இலங்கைத் தீவையும் குறித்தது) இவர்களையே படைத்தளபதிகளாகவும் மெய்காப்பாளர்களாகவும் நிமித்திருக்கிறார்கள்.

ஆச்சரியப் படத்தக்க விதத்தில் இவர்களில் ஒரு பகுதியினர் சிறு தெய்வ வழிபாட்டை மேற்கொள்பவர்களாகவும் மற்றொரு பகுதியினர் தமிழகத்தில் நிலவிய மாகாயான பௌத்தத்தை கடைப்பிடிப்பவர்களாகவும் இருந்தார்கள்.ஈழத்திலும் இவர்களே தேரவாத பௌத்தத்துக்கு எதிரான மகாயான பௌத்தத்தை கடைப்பிடிப்பவர்களாக இருந்தார்கள்.கி.பி 6ம் நூற்றாண்டில் ஆதிசங்கரருடைய எழுச்சி தமிழ் நாடான சேரநாட்டை ஆரிய சமஸ்கிரத கலப்புக்குள்ளாக்கி லிங்ங வழிபாடு பத்தினி தெய்வ வழிபாடு (கண்ணகிவழிபாடு) முதலான தமிழ் வழிபாட்டு மரபுகளை அழித்து அறுவகை சமையம் என்ற வைதீக கட்டுக்குள் கொண்டுவந்தது.சேரநாடு பரசுராமர் தன்னுடைய ஆயுதமான கோடரியை கடலுக்குள் எறிந்ததால் உருவான நாடு விஷ்ணுவால் ஆட்கொள்ளப்பட்ட வாமண மன்னரால் ஆளப்பட்ட புனித பூமி என்பது போன்ற ஆரியம் சம்பந்தப்பட்ட புராணக் கதைகள் முதன்மைப்படுத்தப்பட்டன.

சேரர்களுடைய ஆட்சிக்காலத்தில் அதிகார முடையவர்களாக இருந்த வில்லவர்கள் எனப்படும் இந்த ஈழவர்கள் சமஸ்கிரத மேலாதிக்க அலையில் அதிகாரம் இழந்து அடிமைகளாக்கப்பட்டார்கள்.அதேநேரம் தமிழகத்தில் சைவ நாயன்மார்களால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சமண பௌத்த மதங்களுக்கு எதிரான இயக்கம் சோழ பாண்டிய மன்னர்களின் ஆதரவைப் பெற சமண பௌத்த மதத்தினரை கழுவேற்றிக் கொலை செய்யும் அளவுக்கு வெறி கொண்டதாக மாறுகிறது.இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் மாகாயான பௌத்தம் (சமணமும் கூட) துடைத்தழிக்கபடுகிறது.அந்த மதத்தை சேர்ந்த விகாரைகள் இடித்தழிக்கப்பட்டு அங்கிருந்த பிக்குகள் கழுவேற்றிக் கொல்லப்பட அந்த மதத்தை கடைப்பிடித்த ஏனையோர் அவர்களது வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்படுகின்றனர்.இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டவர்களில் ஒரு சிறு தொகையினர் ஈழத்துக்கு தப்பியோட ஏனையோர் அந்த காலத்தில் வலுவிழந்த அரசை கொண்டிருந்த வேளிர் நாட்டுப் பகுதிக்கு (பின்னாளிள் திருவிதாங்கூர்) சென்று தஞ்சமடைகின்றனர்.ஈழத்திலும் இந்த மதப் போர் சைவ பௌத்தப் போராகவும் மாகாயான தேரவாதப் போராகவும் வெடிக்கிறது.யாழ்ப்பாணக் குடாநாட்டில் கந்தரோடை என்ற கதிரமலையில் இருந்த தமிழ் பௌத்த(மகாயான) தலைநகரம் கைவிடப்படுகிறது.அந்த நகரத்தின் கடைசி மன்னனான உக்கிரசிங்கன் சோழ இளவரசியான மாருதப்புர வல்லி (மாவிட்டபுரம் கந்த சுவாமி கோவிலை கட்டியவள்)யை மணம் புரிந்து சைவ சமயத்தக்கு மாறியதுடன் தனது மனைவியின் பேரால் வல்லிபுரம் என்ற நகரத்தையும் உருவாக்கி தனது அரசை அங்கு மாற்றுகிறான்.தெற்கே மாகாயான பௌத்தத்தை கடைப்பிடித்த (அனுராதபுரத்திலிருந்த அபயகிர விகாரை உட்பட) அனைத்து விகாரைகளும் தேர வாத பௌத்த பிரிவினரால் அழித்தொழிக்கப்படுகிறது.தேரவாத பௌத்தமானது தமிழ் எதிர்ப்பு தமிழ்நாட்டு எதிர்ப்பு ஆரிய தூய்மைவாதம் என்ற முழக்கங்களை முதன்மைப்படுத்தி தன்னை இலங்கையின் ஆதிக்க மதமாக நிறுவிக்கொள்கிறது. தென் இலங்கை முழுவதும் பரவி வாழ்ந்த மகாயான பௌத்தத்தை கடைப்பிடித்த வில்லவர்கள் அவர்களது வாழ்விடங்களில் இருந்து விரட்டியடிக்கப்படுகின்றனர்.மகாயான பௌத்தமும் துடைத்தளிக்கப்படுகிறது.இவ்வாறு அன்று ஈழம் என்று அழைக்கப்பட்ட இலங்கைத் தீவு முழுவதிலும் இருந்து விரட்டியடிக்கப்பட்ட வில்லவர்கள் அன்றைய சேரநாட்டில் தஞ்சமடைகிறார்கள்.அவர்கள் ஈழத்தில் இருந்து வந்தவர்கள் என்கின்ற படியினால் அப்போது சேரநாட்டில் தலையெடுத்த ஆதிக்க சாதியனரான (ஆரிய வம்சாவழி) நம்பூதிரிகளும் நாயர்களும் அவர்களை ஈழவா அல்லது ஈழவர் என அழைத்தனர். இதுவே பின்னர் அவர்களது சாதிப் பெயராக ஆகிவிட்டது.இதிலே முக்கியமான விடயம் ஈந்த ஈழவர்கள் அல்லது வில்லவர்களில் ஈழத்தில் ஒரு அரச பரம்பரையை சோந்தவர்களும் இருந்திருக்கிறார்கள்.அது எந்த அரச பரம்பரை என்பதற்கு உரிய சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லலை.திய்யா என்று அழைக்ப்படும் இந்த மன்னர் பரம்பரை மகாவம்சத்தில் குறிப்பிடப்படும் அனுராதபுரத்தை ஆண்ட சேனன் குந்திகன் பரம்பரையின் வழித்தோன்றல்களா?அல்லது யாழ்ப்பாணக் குடாநாட்டை ஆண்ட உக்கிரசிங்கனின் அரச வம்சத்தை சோந்தவர்களா? அல்லது வேறெந்த அரசும் அவர்களுக்கு இருந்ததா? என்பது அராயப்பட வேண்டும்

நாங்கள் இந்த வரலாற்று கள ஆய்வை மேற்கொண்ட காலத்தில் நவீன தொழில் நுட்ப வசதிகளோ இணைய வசதிகளே ,உரிய போக்குவரத்து வசதிகளோ எமக்கு இருக்கவில்லை.கேரளாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்த பல கிராமங்களுக்கு நாங்கள் கால்நடையாகவே சென்றிருக்கிறோம்.

இன்று நவீன தொழில் நுட்ப வசதிகளும் இணயத்தின் வருகை உலகை கணனியின் விசைப்பலகைக்குள் அடக்கும் அளவுக்கு சுருக்கிவிட்ட நிலையில் தமிழர்களின் வரலாறு பற்றிய ஆர்வமுள்ளவர்கள் இந்த ஈழவர்களின் வரலாறு பற்றிய ஆய்வை துறைசார் ரீதியில் மேற்கொள்ள வேண்டும்.1983ல் நாங்கள் இந்த கள ஆய்வை முடித்த போது தோழர் எமிலியாஸ் சொன்னார் 'தோழர் ஈழவிடுதலைக்காக போராடும் உங்களுக்கு சிங்கள அதிகார வா;க்கம் மட்டும் எதிரியல்ல,இன்னொரு 10 வருடம் பொறுத்திருந்து பாருங்கள் இந்த மலையாள அதிகார வா;க்மும் உங்களை எதிர்க்கும்,அவர்களுக்கு ஈழவர்களை பிடிக்காது.அதனால் ஈழத்தையும் பிடிக்காமல் போகும் கவனமாய் இருங்கள்'என்று.அவர் சொன்னது இன்று நூற்றுக்கு நூறு வீதம் உண்மையாகி இருக்கிறது

http://sivasinnapodi...கம்-ஈ/#comments[/size]

Edited by navam

[size=4]'மலையாள அதிகார வர்க்கம்' என்பதை விட 'இந்திய அதிகார வர்க்கத்தில் உள்ள மலையாளிகள்' என்பதே கூடிய பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றி.

இது போன்ற ஆய்வுகள் அவசியமானது மட்டுமல்ல தமிழரின் இருப்புக்கான துணைச் செயற்பாடுகளுமாகும்.

Edited by nochchi

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரம் கோவிலுக்கு அருகில் ஒரு சாப்பாட்டு கடையில் சாப்பிடும் போது, அங்கு வேலை செய்பவர்கள் கேட்டார்கள், " நீங்கள் கேரளாவில் இருந்து வருகீர்களா என்று". இல்லை நாங்கள் இலங்கையில் இருந்து வருகிறோம் என்றோம். ஏன் அப்படி கேட்டீர்கள் என்றால் " உங்கள் கதை ( வேகம், உச்சரிப்பு) அவர்களை போலவே இருந்தது என்றார்கள் .

இந்த கட்டுரையில் உள்ள மாதிரி எங்கள் உணவு, மற்றும் சில பெயர்கள் கூட ( வேலுப்பிள்ளை, கிருஷ்ணபிள்ளை என்னும் பல ) கேரளாவைச் சார்ந்தே இருக்கிறது. நாங்கள் எங்கள் ஊரில் திட்டும் போது பண்டி என்ற வார்த்தையை பாவிப்பதுண்டு. பல புதிய விடயங்களை இந்த கட்டுரை மூலம் அறிந்துள்ளேன், இணைப்புக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரம் கோவிலுக்கு அருகில் ஒரு சாப்பாட்டு கடையில் சாப்பிடும் போது, அங்கு வேலை செய்பவர்கள் கேட்டார்கள், " நீங்கள் கேரளாவில் இருந்து வருகீர்களா என்று". இல்லை நாங்கள் இலங்கையில் இருந்து வருகிறோம் என்றோம். ஏன் அப்படி கேட்டீர்கள் என்றால் " உங்கள் கதை ( வேகம், உச்சரிப்பு) அவர்களை போலவே இருந்தது என்றார்கள் .

இந்த கட்டுரையில் உள்ள மாதிரி எங்கள் உணவு, மற்றும் சில பெயர்கள் கூட ( வேலுப்பிள்ளை, கிருஷ்ணபிள்ளை என்னும் பல ) கேரளாவைச் சார்ந்தே இருக்கிறது. நாங்கள் எங்கள் ஊரில் திட்டும் போது பண்டி என்ற வார்த்தையை பாவிப்பதுண்டு. பல புதிய விடயங்களை இந்த கட்டுரை மூலம் அறிந்துள்ளேன், இணைப்புக்கு நன்றி

[size=4]என்னுடைய அம்மம்மா நான் தாயகத்தில் சிறுவனாக இருந்தபோது பழைய கதைகள் சொல்லும்போது ஒரு கேரளா அரசி ஒருவர் நூற்றுக்கணக்கான யானைகளுடனும் குதிரைகளுடனும் [/size]படையணியுடனும் வந்து வன்னியை சிலகாலம் ஆட்சி செய்ததாக சொன்னார் அவர்களுடன் வந்தவர்கள் இப்போதும் ஈழத்தில் இருப்பதாக சொன்னார் அதனூடாக இந்த கலப்பு ஏற்பட்டிருக்கலாம்.

Edited by தமிழரசு

யாழ்மண்ணுக்கும் கேரள மண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதே உண்மை. யாழ் மண்ணுக்கு அல்லது வட மாகாணத்துக்கு என தனித்துவமான உள்ள தேசவழமைசட்டமும் கூட இதனை நிலைநாட்டுகின்றது. மரபு ரீதியாக வழமையும் வழக்காறுகளுமாக எழுதாத சட்டமாக அவ் மண்ணில் அம்மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்தவைகளே தேசவழமை சட்டத்தின் அடிப்படை. அது அம் மண்ணில் அவர்களின் உரிமைகளையும் உரித்துக்களையும் பற்றி கூறுகின்றது.

எழுதாத சட்டமான அதை அந்நாளில் ஆண்ட அன்னியர்கள் அவற்றினை கோவைப்படுத்தி எழுத்தில் கொண்டு வந்தனர். பின்னாளில் அது இலங்கை சட்டத்தின் பகுதியிலும் இணைக்கப்பட்டது. இன்றுவரையும் அது வலுவான ஒரு சட்டமாகவே இருக்கின்றது. இச்சட்டம் அம்மண்ணின் பாதுகாப்பு கவசமாகவும் கூட இருக்கின்றது. இதனால் சிங்களப்பேரினவாதிகள் இதனை வலுவில்லாமல் ஆக்குவதற்கான காரியங்களில் முனைப்புக்காட்டுவதாக தெரியவருகின்றது.

இவ்விடத்தில் இதன் முதன்மையான விடயம் என்னவென்றால், குறித்த தேசவழமை சட்டமானது மலபார் நாட்டிலிருந்து வந்த மக்களின் வழமையும் வழக்காறுகள் எனவும் அதனை அவர்கள் தாங்கள் இடம்பெயர்ந்தபோது தம்மோடு கொண்டுவந்து கடைப்பிடித்தார்கள் எனவும் குறிப்பிடுகின்றது. குறித்த தேசவழமை சட்டமானது தமிழீழ சட்டக்கோவையிலும் தமிழீழதேசவழமை சட்டம் என தனித்துவமாக கோவைப்படுத்தப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே கவனிக்கவேண்டியது, கேரளத் தொடர்புகள் இருந்தாலும் நாம் தமிழில்தான் பேசுகிறோம்.. ஆகையால் மலையாள மொழி உருவாகமுன்னம் இந்த இனப்பரம்பல் நடைபெற்றிருக்க வேணும்.. :unsure:

விரைவாக உருவாகி வரும் சென்னைத்தமிழும் பல ஆண்டுகளுக்குப் பின் தனி மொழியாகி மாநிலமாகிவிடும்.. :icon_idea:

பேச்சுத் தமிழ் பிரதேசத்துக்குப் பிரதேசம் வேறு படுவதும் இந்த குடிப் பரம்பலை அடியொற்றியதாக இருக்கலாம்.குடிப் பரம்பல் ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் மட்டும் நிக்ழ்வதில்லை அது தொடர்ச்சியான ஒன்று. அச்சு ஊடகத்தின் வரவு எழுத்துத் தமிழ் என்பனவே தமிழுக்கு ஒரு நிலையான வடிவத்தைக் கொடுத்திருக்கும்.அதற்க்கு முன்னர் அவர் அவர் தமது மூலப் பிரதேச மொழிச் சொற்களைக் காவியே வந்திருப்பர்.இது பற்றிய ஆய்வுகள் நவீன மொழியியல் முறைமைகளுடனும் மரபணுவியல் ஆய்வுகளின் அடிப்படையிலும் மேற்கொள்ளப் பட வேண்டும்.

மோர் குழம்பு வைக்கும் கதை சங்கால பாடல் ஒன்றில் காணப்படுவதும், பிட்டு விற்ற கதை தேவாரகாலத்து கதைகளில் வருவதும் தமிழ்நட்டாருக்கு இவை தெரிந்திருக்கவில்லை என்று எடுக்க முடியாது. அதேநேரம் நமது பிரதான காலை ஆகரங்களுடன் தோசையும் இருக்கிறது. இட்லி,சாம்பார் இரண்டுமே தமிழ் பெயர்களாக இல்லாததும், தமிழ்நாட்டில்மட்டும் காணப்படுவதும் இவை சோழ காலத்தில் கம்போடிய, வியட்நாமிய உணவுகளை சார்ந்ததோ தெரியாது. சேரர் போர்வீரகளாக வந்த கதை தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் கடும் போட்டி நிலவிய காலமாகிய சோழர் காலம் அல்லது அதன் முடிவாக இருக்கலாம. கண்ணகி கதை இதற்கு 1000 வருடங்கள் முந்தயது. கண்ணகி வழிபாடு ஈழத்து சைவர்களுக்கும் ஈழத்து பௌத்தர்களுக்கும் பொதுவானது மட்டும் அல்ல இந்தியாவில் வேறு எங்கும் இல்லாதது. மலையாளத்திலும் கூட இது இல்லை.

எனது ஆரம்பகாலம் தொடங்கிய அனுமானம்(நிறுவப்படாதவை) ஈழத்தமிழருக்கும் மலையாளிகளுக்கும் காணப்படும் ஒற்றுமை தொன்று தொட்டது. ஈழத்தமிழருக்கும் தமிழ்நாட்டு தமிழருக்கும் காணப் படும் ஒற்றுமை தொண்டுதொட்டது. தமிழர் நாட்டார், கேரளரர் இருவரும் ஈழத்தவரை விட வேகமான மாறு பாடுகளை கண்டு வந்தார்கள். ஈழத்தவர் தமது மாறுபாடுகளில் மந்தமாக இருந்ததால் இன்னமும் பல சங்ககாலத்து (கண்ணகி வழிபாடு போன்ற) நாகரீகங்களை கொண்டிருக்கிறார்கள். இதனால் நமக்கும் கேரளருக்கும் சிங்களவருக்கும் சில உணவு(ஆப்ப) உடை ஒற்றுமை இருக்கு. நமது பெண்கள் சோழர்காலத்திற்கு பிறகு தமிழ் நாட்டு பெண்களின் உடைகளை பின்பற்றி வருகிறார்கள். திருமணமாகும் முன் யாழ்ப்பணத்தவரின் அரைத்தாவணி ஈழம் கேரளம், தமிழ் நாடு சிங்களவர் எல்லோருடைய உடைகளுக்குமிடையில் ஒருகாலத்தில் தொடர்பிருந்ததை சொல்வதாக இருக்கலாம்.

ஈழத்தவரின் கேரளர்களுடனான ஒற்றுமை ஆராயப்படவேண்டியது. இது நமது சரித்திரம் சம்பந்தமானது. ஆனால் அதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை. இந்த போரைவைத்து பிழையான கரைகளின் ஈழ-கேரள சரித்திரத்தை இன்றைய தேவைகளுக்காக வளைக்கக் கூடாது. கிந்தியர்களால் தூண்டப்பட்ட மலையாளி-தமிழ்-தெலுங்கு- கன்னட போட்டிகள் தென் இந்தியாவுக்குவுக்கு தனித்துவமானது. இதை இலங்கைக்கு இறக்குவதால் பிரயோசனம் இல்லை. சில மலையாளிகள் தமிழ் நாட்டு தமிழர் மீது இருக்கும் காழ்ப்புணர்வை ஈழம் மீதும் காட்டுக்கிறார்கள். அண்மைய காலங்களில் அவர்கள் டெல்கியில் நன்றாக கால் ஊன்றியிருக்கிறாகள். நன்கு லஞ்சம் வாங்க கற்று இருக்கிறார்கள். இதனால் இந்திய பாதுகாப்பு கொள்கைளை அழித்து ஈழத்தமிழருக்கு எதிராக வெற்றியான போர் தொடுத்திருக்கிறார்கள். இதை நாம் ஈழத்தவர்-நம்மூதிரி சண்டையாக உருவகப்படுத்தக் கூடாது.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்

[size=4]இந்தக் கட்டுரைக்கு எனது வலைத்தளத்தில் வந்த பினூட்டங்களும் அவற்றிற்கு நான் அளித்த பதில்களும்[/size]

[size=4]வித்யாசாகர்[/size]

[size=4]ஆவணி 25. 2012 யவ 6:51 பிப[/size]

[size=4]நன்றிக்குரிய பதிவு ஐயா. எனக்கும் இதுபற்றி இதையொத்த எண்ணம் இருந்தது. ஏதோ ஒரு வரலாற்றுக் காரணம் இருக்குமென்று உறுதியாக நம்பியிருந்தேன். இப்போது காலம் மிக தாழ்ந்துவிட்டோம்இ இணைய வரலாற்றிலிருந்து நிறைய விசயங்களை அவர்கள் அவர்களுக்கொப்ப அதிகமாக மாற்றிக் கொண்டனர். நம் உறவுகள் யாரேனும் இதைப்பற்றி மேற்கூறியவாறு ஆதாரப் பூர்வமான ஆய்வொன்றை நடத்தி அரசு சார்பாக அதை அங்கீகாரப் படுத்தி அதை பொதுமக்களுக்கும் கொண்டு செல்வோமானால் எதிரிகள் நமக்கு யார் யாரென்பதில் இன்னும் தெளிவு கிடைக்கும். நமக்கு யாரும் எதிரிகள் வேண்டாம். யாரையும் நாம் இனம் பிரிக்க வேண்டாம். யாரையும் எதிர்க்கவும் அவசியமில்லை; அதேநேரம் நம்மை எதிர்ப்பவர் யார்இ நம்மைப் பிரிப்பவர் எவரெவர்இ யாரெல்லாம் நமக்கு எதிராக நம்மை அழிக்க செயல்படுகிறார்கள் என்று எல்லோரும் ஆதார விளக்கங்களோடு அறிந்துக் கொண்டால் அது குறைந்தபட்சம் நம்மை நாம் முழுமையாகக் காத்துக் கொள்ளவேனும் உதவும்.[/size]

[size=4]உங்களுக்கும் எமிலியாஸ் மற்றும் அவ்வாய்வுக் குழுவினர் அனைவரும் பெருத்த நன்றியும் வணக்கமும் ஐயா.[/size]

[size=4]வணக்கத்துடன் ..[/size]

[size=4]வித்யாசாகர்[/size]

[size=4]0000[/size]

[size=4]நான் அளித்த பதில்[/size]

[size=4]ஆவணி 25. 2012 யவ 7:17 பிப[/size]

[size=4]வணக்கம் வித்தியாசாகர் அவர்களே[/size]

[size=4]முதலில் நீங்கள் எனது பதிவை படித்து கருத்துரையிட்டதிற்கு நன்றி.[/size]

[size=4]நாங்கள் இந்த கள ஆய்வை மேற்கொண்டது 1982-83ல்.[/size]

[size=4]கேரளத்தில் இயங்கிய தோழர் வேணுகோபாலன் நாயர் தலைமையிலான சிஆர்சி எனப்படும் நச்சல்பாரி அமைப்புத் தோழர்களே இந்தக் கள ஆய்வுக்கு எனக்கு உதவினார்கள்.அந்த அமைப்பு இப்போது கலைக்ப்பட்டு விட்டது.தோழர் எமிலியாசின் பெயரை நான் சிறப்பாக குறிப்பிட்டதற்கு காரணம் இதற்கான பொருளுதவி உட்பட அனைத்து உதவிகளை ஆர்வத்துடன் செய்தவர் அவர்.1987ம் ஆண்டு நான் ஈழத்துக்கு திரும்பின்பு அவர்களுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுப் போய் விட்டது.இப்போது தோழர் எமிலியாஸ் இருந்தால் கேரளாவில் ஒரு பெரிய சட்டவாளராக இருப்பார் என்று எண்ணுகிறேன்.[/size]

[size=4]எங்களுடன் கள ஆய்வில் ஈடுபட்ட பாறசாலையைச் சேர்ந்த தோழர் முருகன் 1990 நோய்வாய் பட்டு இறந்துவிட்டதாக அறிந்தேன்.[/size]

[size=4]இதிலே வருத்தத்துக்குரிய விடயம் என்னவென்றால் அன்று கேரளாவின் முற்போக்கு சக்திகளாக இருந்த இந்த ஈழவர் சமூகம் இன்று கட்சி அரசியலுக்குள் சிக்குண்டு பிழைப்புவாதக் கூட்டமாக மாறியிருப்பதேயாகும். முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழர் விரோதப் போக்கை இந்த ஈழவர் சமூக பிழைப்புவாதிகள் கையில் எடுத்தது வரலாற்று துயரமாகும்[/size]

[size=4]0000[/size]

[size=2][size=4]J P Josephine Baba நமக்குள் ஜாதியமாக சண்டையிட்டதையும் நமக்குள் போரிட்டு மாண்டதையும் நினைவுகொள்ள வேண்டும்! மலையாளத்தார் தோளுக்கு மேல் வளர அனுமதிப்பதில்லை தமிழனோ வளரவே அனுமதிப்பதில்லை. (கேரளா தமிழச்சி)[/size][/size]

[size=2][size=4]நேற்று 14:45 மணிக்கு[/size][/size]

[size=2][size=4]000[/size][/size]

[size=2][size=4]நான் அளித்த பதில்[/size][/size]

[size=2][size=4]அன்புச் சகோதரி கேரள நம்பூதிரிகளுக்கும் நாயர்களுக்கும் இருக்கக் கூடிய தமிழர்களுக்கு எதிரான அதிகாரத் திமிர் பௌத்த சிங்கள இனவெறியர்களுக்கு இருக்கக் கூடிய திமிருக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல.

தமிழகம் தனது உண்மையான வரலாற்றை உணராத வரை தமிழர்களுடைய அரசியல் பொருளாதார மற்றும் ஊடக பலம் சாதிய மற்றும் கட்சி வெறுபாடுகளை கடந்து ஒருங்கிணைக்கபடாத வரை எதுவும் மாறப்போவதில்லை. ஈழத் தமிழர்களான எங்களுக்கும் எந்த விடிவும் கிடைக்கப் போவதில்லை.[/size][/size]

[size=4]0000[/size]

[size=4]தமிழீழன்[/size]

[size=4]ஆவணி 26இ 2012 யவ 12:30 பிப[/size]

[size=4]வணக்கம் அண்ணாஇ தங்களில் தனிப்பட்டரீதியில் மிகுந்த மதிப்பம் மரியாதையும் எனக்கு உண்டு. பயணித்த பாதை வேறாயினும் உண்மையான உணர்வோடு விடுதலை பயணத்தில் பயணித்த தமிழ்த்தாயின் பிள்ளைகளில் தாங்களும் ஒருவர் என்பதை காலம் சொல்லியது. இதற்குள் எத்தனை வேதனைகளையும் துன்பங்களையும் பாரபட்சங்களையும் தாங்கள் அனுபவித்துக்கொண்டீர்கள் கொண்டிருக்கின்றீர்கள் என்பதையும் ஓரளவிற்கு எம் போன்றோர் அறிவர். எனினும்இ எவற்றுக்கும் மனம் தளராமல் தங்களால் இயன்றவரை உங்கள் களப்பணியை செவ்வனே செய்தே வருகின்றீகள் என்பதற்கு இவ் ஆய்வுக்கட்டுரை ஓர் சான்று.[/size]

[size=4]யாழ்மண்ணில் ஊறிக்கிடக்கின்ற சாதியக்கருத்துக்களும் சாதியமாயைகளும் பிரதேச வேறுபாடுகளும் கூட விடுதைப்போராட்டத்தின் முக்கிய தடைக்கற்களாவவே உள்ளன. இவைகளை இல்லாமல் செய்வதன் ஊடாகவும் போராட்டத்தின் நிலையை இன்னும் வலுப்படுத்த முடியும். அதற்குஇ இவ் ஈழவர் வரலாற்றினை இன்னும் முழுமையாக ஆராய்வதன் மூலமாக உண்மையை நிலைநாட்டா முடியும் என்பதும் என் போன்றவர்களின் நம்பிக்கை.[/size]

[size=4]யாழ்மண்ணுக்கும் கேரள மண்ணுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதே உண்மை. யாழ் மண்ணுக்கு அல்லது வட மாகாணத்துக்கு என தனித்துவமான உள்ள தேசவழமைசட்டமும் கூட இதனை நிலைநாட்டுகின்றது. மரபு ரீதியாக வழமையும் வழக்காறுகளுமாக எழுதாத சட்டமாக அவ் மண்ணில் அம்மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வந்தவைகளே தேசவழமை சட்டத்தின் அடிப்படை. அது அம் மண்ணில் அவர்களின் உரிமைகளையும் உரித்துக்களையும் பற்றி கூறுகின்றது.[/size]

[size=4]எழுதாத சட்டமான அதை அந்நாளில் ஆண்ட அன்னியர்கள் அவற்றினை கோவைப்படுத்தி எழுத்தில் கொண்டு வந்தனர். பின்னாளில் அது இலங்கை சட்டத்தின் பகுதியிலும் இணைக்கப்பட்டது. இன்றுவரையும் அது வலுவான ஒரு சட்டமாகவே இருக்கின்றது. இச்சட்டம் அம்மண்ணின் பாதுகாப்பு கவசமாகவும் கூட இருக்கின்றது. இதனால் சிங்களப்பேரினவாதிகள் இதனை வலுவில்லாமல் ஆக்குவதற்கான காரியங்களில் முனைப்புக்காட்டுவதாக தெரியவருகின்றது.[/size]

[size=4]இவ்விடத்தில் இதன் முதன்மையான விடயம் என்னவென்றால்இ குறித்த தேசவழமை சட்டமானது மலபார் நாட்டிலிருந்து வந்த மக்களின் வழமையும் வழக்காறுகள் எனவும் அதனை அவர்கள் தாங்கள் இடம்பெயர்ந்தபோது தம்மோடு கொண்டுவந்து கடைப்பிடித்தார்கள் எனவும் குறிப்பிடுகின்றது. குறித்த தேசவழமை சட்டமானது தமிழீழ சட்டக்கோவையிலும் தமிழீழதேசவழமை சட்டம் என தனித்துவமாக கோவைப்படுத்தப்பட்டுள்ளது.[/size]

[size=4]0000[/size]

[size=4]அன்பு சிவா [/size]

[size=4]ஈழவர் ஈழம் குறித்த உங்கள் கட்டுரையை தமிழ்மன்றம் என்ற இணையக் குழுவிலும் இட்டேன். அதற்கு ஏதேனும் பதில் வந்தால் அனுப்புகிறேன். நீங்கள் ஆராய்ந்திருக்கும் தொடர்பு மேலும் ஆழமான ஆய்வினைக் கோருகிறதென எண்ணுகிறேன். [/size]

[size=4]கேரளப் பகுதிக்கும்ஈழத்துக்குமான உறவை இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள பௌத்த சமண மதங்களின் வரலாற்றையும் நாம் அறிந்தாகவேண்டும். புத்தம் குறித்த மிகவும் எதிர்மறையான மனநிலைத் தமிழர்களிடம் உருவாக்கப்பட்டிருக்கும் இன்றைய சூழலில் அதற்கான வாய்ப்பு ஈழத்தில் இருப்பதாக நான் எண்ணவில்லை. [/size]

[size=4]உடனடி அரசியல் பணிகள் கடந்து இத்தகைய ஆர்வங்களில் நீங்கள் மனம் செலுத்துவது பாராட்டத்தக்கது. [/size]

[size=4]அன்புடன் [/size]

[size=4]ரவிக்குமார் [/size]

[size=4]0000[/size]




    • Siva Sinnapodi
      வணக்கம் தோழர்
      நான் கேரள தோழர்களுடன் ஈழவர்கள் பற்றிய களஆய்வில் ஈடுபட்ட போது ஒருதடவை நீங்களும் என்னுடன் வந்திர்கள் என்று நினைக்கிறேன். என்னுடைய நினைவு சரியா

    [*]

    174241_100003995132782_1369591187_q.jpg

    4 மணி நேரம் முன்புBalan Tholar



    • ஆம். நன்றாக நினைவிருக்கிறது. மீண்டும் அந்த இடங்களுக்கு சென்று பார்வையிட வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அவர்களுடன் தற்போதும் தங்களுக்கு தொடர்பு இருக்கிறதா? மேலும் தோழர் சண் அவர்கள் பற்றிய தங்கள் கருத்துக்களை எப்போது எனது பக்கத்தில் பகிரப் போகிறீர்கள்?

    [*]

    41364_100000166475954_2881_q.jpg

    3 மணி நேரம் முன்புSiva Sinnapodi

    [*]

    174241_100003995132782_1369591187_q.jpg

    3 மணி நேரம் முன்புBalan Tholar



    • நன்றி. தங்கள் ஆய்வுக் கட்டுரை படித்தேன். நல்ல ஆய்வு. ஆனால் இதன் சரி பிழை குறித்து உடனடியாக என்னால் கருத்து கூற முடியாது உள்ளது. எனினும் இது பற்றிய மற்றவர்களின் கருத்துக்கள் நிச்சயம் எடை போட உதவும் என நம்புகிறேன். தங்கள் பணிக்கு எனது பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்.

Edited by navam

  • கருத்துக்கள உறவுகள்

http://a4.sphotos.ak...050448949_n.jpg

வளங்கோவன் கோ.

இவளை சிநேகிதி என்றும் இவள் வருத்தப்படக் கூடாது என்பதற்காக முல்லைப்பெரியாறு விவகாரம் பற்றி கருத்துக் கூறமாட்டேன் என்றும் சொன்ன தன் மானத்தமிழன் இளைய தளபதி விஜய் வாழ்க...

Like · · Unfollow post · Share · Yesterday at 19:57 ·

Cartoonist Bala and 40 others like this.

62 shares

Sum Suresh evalukku tamilnat la edam erukka kudathu.. tamil makkalai nambi kuthu adum evalukku engey edam illai...

18 hours ago · Like

Natarajan An எல்லா நாயையும் செருப்ப கலட்டி அடிக்கணும்

18 hours ago · Like

Kalai Prakash porampokku

16 hours ago · Like · 1

Manikandan Prabhu napargale ava asin illa idam..........pechagara cat.....

13 hours ago · Like · 1

Blackstartamilan Eevera AA.... Chi...... in ..... Cinima Devi....

11 hours ago · Like

Mani Megalai அட தறுதலை .....

6 hours ago · Like · 1

Kathir Deva maanamulla yendha tamilanum ival padathai parka maataan. maanam ulla tamil directorsum ivalai vaithu ini padam edukka maatargal endru nambugiren.

6 hours ago · Like

Ponraj Mathialagan படை பலம்,தொழில் நுட்ப உதவி என்று போருக்கு உதவியது ஏகே அந்தோனி....போருக்கு சூத்திரதாரி எம்.கே.நாராயணன்....போரை நிதமும் லைவ் கமெண்ட்ரி போல எத்தனை ஆயிரம் தமிழன் செத்தான் என்று கணக்கு போட்டு கொன்றது சிவா சங்கர மேனன்....நல்ல கொன்னீங்க என்று பாராட்டு பத்திரம் வாசித்தது நிருபமா ராவ்....எந்த ஒரு நாடும் ஈழத்தமிழனுக்கு உதவ கூடாது என கங்கணம் கட்டி வேலை செத்து ஐ.நா விஜய் நம்பியாரும், அவன் தம்பி சதீஷ் நம்பியாரும்.... பயங்கரவாதத்தை இலாது ஒழித்த இலங்கையை நாம் கொண்டாட வேண்டும் என்று இந்தியா சார்பாக ஜெனிவாவில் அறிவித்தான் 'அச்சுதன் குளுகலே'.....அதனுடைய நீட்சியாக இன்று அசின்....!!!! எல்லா மலையாள தேவடியா மவன்களுக்கும் நான் கேக்குறது ஒன்னே ஒன்னு தான்.... "நீங்க சாப்புடுற சோத்துல நாங்க என்ன விசத்தையா வச்சோம்? எங்க மேல ஏண்டா உங்களுக்கு இவ்ளோ வெறுப்பு?"</p>

நன்றி-முகப்புத்தகம்.

Edited by புலவர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.