Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ விடுதலை அமைப்புகளின் சகோதரச் சண்டையை தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான்! - விகடனிடம் பழ.நெடுமாறன்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழ விடுதலை அமைப்புகளின் சகோதரச் சண்டையை தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான்! - விகடனிடம் பழ.நெடுமாறன்..

[saturday, 2012-09-01 11:02:13]

nedumaran-150seithy.jpg

ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமாக அதை உண்மையாக்கிவிட முடியும் என்று நினைப்பவர்களில் கருணாநிதி முதன்மை​யானவர். ஈழத்தில் இனஅழிவுப் போர் நடந்த காலத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி... மத்தியில் தனக்கு இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அதைத் தடுக்கவில்லை என்பது தமிழக மக்கள் அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டு.

அதற்கு பதில் சொல்வதற்கு முதுகெலும்பு இல்லாத அவர், 'விடுதலைப்புலிகள் நடத்திய சகோதரச் சண்டை காரணமாகத்தான் இந்த இனஅழிப்பு நடந்தது� என்று திரும்பத் திரும்பச் சொல்லித் திசை திருப்பப் பார்க்கிறார்.

இஞ்சி இருக்கா என்றால் இல்லை என்று சொல்லாமல், புளி இருக்கு என்று சொல்லும் வியாபாரத் தந்திரமே அவரிடம் இருக்கிறது. தமிழினப் பற்று கொஞ்சமும் இல்லை!

அவர் சொல்லும் சகோதரச் சண்டையை யார் தொடங்கி வைத்தது?

1984-ஆம் ஆண்டில் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஈழ விடுதலைப் போராளிகள் அனை​வரும் ஒன்றுபட வேண்டும் என்ற கருத்தை அடிக்கடி வலியுறுத்தி வந்தார். அதற்காக, போராளி அமைப்புகளின் தலைவர்களுக்கு ஒரு பகிரங்கமான அழைப்பையும் விடுத்தார். குறிப்பிட்ட நாளில் தன்னை வந்து சந்திக்குமாறு அனைத்துப் போராளி இயக்கத் தலைவர்களுக்கும் தனித்தனியே கடிதங்களை அனுப்பினார்.

எம்.ஜி.ஆரின் இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி செயல்பட்டார். எம்.ஜி.ஆர். குறிப்பிட்ட நாளுக்கு முதல்நாளில் தன்னைச் சந்திக்கும்படி போராளிகளின் தலைவர்களுக்கு கருணாநிதி அழைப்பு விடுத்தார்.

உண்மையிலேயே போராளிகளை ஒன்றுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு இருந்திருக்குமானால். எம்.ஜி.ஆர். அழைப்பு விடுவதற்கு முன்னர் அழைப்பு விடுத்திருக்கலாம். ஆனால், எம்.ஜி.ஆரின் அழைப்பு பற்றிய செய்தி வெளியானவுடன் போட்டிக்காக இவரும் ஒரு அழைப்பு விடுத்தாரே தவிர, உண்மையில் போராளிகளை ஒன்றுபடுத்தும் நோக்கம் இவருக்கு இல்லை.

போராளிகள் அமைப்புகளை ஒன்றுபட விடாமல் பிளவுபடுத்தும் வேலையைத் தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான்.

கருணாநிதியின் அழைப்பை டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., ஈரோஸ் போன்ற இயக்கங்கள் ஏற்றன.

ஆனால், முதலில் அழைத்த எம்.ஜி.ஆரின் அழைப்பை ஏற்பது என முடிவு செய்து விடுதலைப்புலிகள் அவரைச் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின் விளைவாக, புலிகள் இயக்கத்​தின் மீது எம்.ஜி.ஆருக்கு இருந்த மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது. புலிகளுக்கு இரண்டு கோடி ரூபாய் வழங்க அவர் முன்வந்தார்.

ஆனால், கருணாநிதி தன்னைச் சந்தித்த மூன்று போராளிகளோடு புகைப்படம் எடுத்துப் பத்திரிகைகளில் வெளியிட வைத்து விளம்பரம் தேடிக்கொண்டார். தனது பிறந்த நாளில் உண்டியல் மூலம் திரட்டப்பட்டப் பணத்தில் சில ஆயிரம் ரூபாய்களை இந்த இயக்கங்களுக்கு அளித்ததைத் தவிர, பெரிய அளவில் உதவுவதற்கு முன்வரவில்லை.

அவர்கள் எம்.ஜி.ஆரையும் சந்திக்க இயலாதபடி செய்ததுதான் கருணாநிதி​யின் சாதனையாகும்.

1985-ம் ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன், டெலோ இயக்கத் தலைவர் சிறீ சபாரத்தினம், ஈ.பி.ஆர்.எல்.எப். தலைவர் பத்மநாபா, ஈரோஸ் தலைவர் பாலகுமார் ஆகியோர் ஒன்றுகூடிப் பேசி சிங்கள இராணுவத்துக்கு எதிரான ஆயுதப் போராட்ட நடவடிக்கைகளை இணைந்து மேற்கொள்வது என முடிவுசெய்து அறிக்கையும் வெளியிட்டனர்.

1985-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற திம்பு மாநாடு வரை இந்த ஒற்றுமை நீடித்தது.

திம்பு மாநாட்டில் அனைவரும் ஒன்றுபட்டு முன்வைத்த கோரிக்கைகளை இந்திய அரசு விரும்பவில்லை. எனவே, போராளி இயக்கங்களை மிரட்டி பிளவுபடுத்தத் திட்டமிட்டது.

இதற்கான சதித் திட்டத்தை 'ரா� உளவுத் துறை வகுத்தது. 'ரா� விரித்த வலையில் முதலில் டெலோ இயக்கமும் அதற்குப் பிறகு ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கமும் விழுந்தன.

புலிகளுடன் மோதும்படி இந்த இயக்கங்களுக்கு 'ரா� உளவுத் துறை ஆயுதங்களை அளித்துத் தூண்டிவிட்டது.

புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கப்டன் லிங்கம் என்பவரை டெலோ இயக்கத்தினர் படுகொலை செய்தனர். இதன் விளைவாக யாழ்ப்பாணத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்து இறுதியில் சிறீசபாரத்தினம் கொல்லப்பட்டார்.

அவருக்காக சென்னையில் இரங்கல் கூட்டத்தை கருணாநிதி நடத்தினார். அதில் பேசும்படி என்னை அழைத்தபோது, 'புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கப்டன் லிங்கத்துக்கும் சேர்த்து இரங்கல் கூட்டம் நடத்துங்கள்� என்று நான் கூறியபோது அதை​ அவர் ஏற்கவில்லை. எனவே, நான் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள மறுத்தேன்.

கருணாநிதி போன்ற ஒரு தலைவர் போராளி இயக்கங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்ட​போது இரு தரப்பையும் அழைத்துப் பேசி சுமுகமாக்கி இருக்க வேண்டும். ஆனால் அவர், புலிகளுக்கு எதிராகவும் டெலோ இயக்கத்துக்கு ஆதரவாகவும் நடந்து கொண்டார்.

இரங்கல் கூட்டத்திலும் அதற்குப் பிறகும் விடுதலைப் புலிகளைக் குற்றம்சாட்டிப் பேசுவதற்கு அவர் கொஞ்சமும் தயங்கவில்லை.

ராஜீவ் - ஜெயவர்த்தனா உடன்பாடு கையெழுத்தாகி போராளிகள் ஆயுதங்களை ஒப்படைத்தனர். புலிகளும் ஓரளவு ஆயுதங்களை ஒப்படைத்தனர். ஆனால், பிற இயக்கங்களுக்கு நவீன ஆயுதங்களை 'ரா� உளவுத்துறை கொடுத்து நிராயுதபாணிகளாக நடமாடிய புலிகளை ஒழித்துக்கட்ட ஏவிவிட்டது.

22 புலிகள் படுகொலை செய்யப்பட்டனர். புலிகள் எடுத்த பதில் நடவடிக்கையின் விளைவாக டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கங்கள் முற்றிலுமாக முறியடிக்கப்பட்டு அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 'ரா' உளவுத் துறையின் சீர்குலைப்பு வேலைகள் வெற்றி பெறவில்லை.

டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட் ஆகிய இயக்கங்களில் இருந்து விலகியவர்களை ஒன்றுசேர்த்து ஈ.என்.டி.எல்.எப். என்ற ஓர் அமைப்பை 'ரா� உளவுத் துறை உருவாக்கியது. இதற்குத் தலைவராக பரந்தன் ராஜன் என்பவர் பொறுப்பேற்றார்.

இந்த அமைப்புக்கும் ஆயுதங்கள் வழங்கி தமிழீழப் பகுதியில் புலிகளுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய மக்களை மிரட்டவும் படுகொலை செய்யவும் 'ரா� உளவுத் துறை பயன்படுத்தியது. இதை நான் சொல்லவில்லை... அப்போது 'ரா� உளவுத் துறையின் தலைவராக இருந்த ஏ.கே. வர்மா பிற்காலத்தில் எழுதி உள்ளார்.

கடந்த 20 ஆண்டு காலத்துக்கும் மேலாக தமிழர்களுக்கு உள்ள தலைமை பிரபாகரன் ஆவார். தமிழ் மக்கள் அவர் மீது அளவு கடந்த நம்பிக்கை வைத்துள்ளனர்.

இந்த உண்மையைப் புரிந்துகொள்ளாதது இந்தியா செய்த மாபெரும் தவறாகும். புலிகளுக்கு எதிராக போட்டிக் குழுக்களை ஊக்குவித்தது.

இறுதியில் இந்திய இராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தி விட்டது'' என்று அவர் சொல்லியதையும் கருணாநிதி கவனிக்க வேண்டும். இவை அவருக்குத் தெரியாதவை அல்ல.

'ரா� உளவுத் துறையின் இந்தப் பிளவு வேலைகளை முதலமைச்சராக இருந்த கருணாநிதியே சட்டமன்றத்தில் பகிரங்கமாகக் கண்டித்தார். சட்டமன்றப் பதிவேட்டிலும் இது பதிவாகி உள்ளது.

ஆனால் இப்போது, தான் கூறியதற்கு மாறாக சகோதர யுத்தத்தினால்தான் ஈழத்தில் அழிவு ஏற்பட்டிருப்பதாகவும் அதற்கு புலிகளே பொறுப்பு என்ற வகையிலும் திரும்பத் திரும்பச் சொல்வது பச்சைப்பொய்!

1991-ம் ஆண்டில் இலங்கையின் குடியரசுத் தலைவராக பிரேமதாசா பதவியேற்றபோது இலங்கையில் இருந்து இந்தியப் படைகள் வெளியேற வேண்டுமென வற்புறுத்தத் தொடங்கினார். இதன் அடிப்படையில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தார்.

பிரேமதாசாவுடன் புலிகள் பேச்சுவார்த்தை தொடங்கினால், உலக அளவில் தன் மரியாதை அடியோடு போய்விடும் என ராஜீவ்காந்தி பதைபதைத்தார். இதை எப்படியும் தடுக்க வேண்டும் என துடிதுடித்தார்.

பிரேமதாசாவுடன் புலிகள் பேச்சுவார்த்தை நடத்தாமல் இருந்தால், அவர்களுக்குத் தேவையான சலக உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக அவர் கூறினார். புலிகளிடம் கூறி அவர்களை ஒப்புக்கொள்ளவைக்கும் பொறுப்பை அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியிடம் ஒப்படைத்தார்.

கருணாநிதியின் அழைப்பை ஏற்று புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் சென்னைக்கு வந்து அவரைச் சந்தித்துப் பேசினார். அப்போதுகூட பிரதமர் வி.பி.சிங் தனக்கு முழு அதிகாரம் அளித்திருப்பதைப் பயன்படுத்திப் பிரச்னையை சுமுகமாகத் தீர்த்திருக்கலாம்.

ஆனால், புலிகளுக்கு எதிரான உள்ளம் படைத்த அவருக்கு அவ்வாறு செய்ய விருப்பம் இல்லை. மாறாக, வரதராசப் பெருமாள் தலைமையில் உள்ள வடகிழக்கு மாகாண அரசில் சரிபாதி இடங்களை புலிகளுக்குப் பெற்றுத் தருவதாகவும் இதை ஏற்றுக்கொண்டால் இந்திய அரசின் உதவியும் கிடைக்கும் என கூறினார்.

மக்களிடம் செல்லாக்காசாய்ப் போன வரதராசப்பெருமாள் அரசில் அங்கம் வகிக்க பாலசிங்கம் மறுத்தார். 'மீண்டும் ஒரு தேர்தல் நடத்தப்படுமானால் புலிகள் பங்கேற்கத் தயார்' என்றார். தான் விரித்த வலையில் புலிகள் சிக்காததன் விளைவாக கருணாநிதி இந்தப் பிரச்னையில் தன்னால் முடிந்ததைச் செய்தாகி விட்டது எனக் கூறி ஒதுங்கிக்கொண்டார்.

தொடர்ந்து, புலிகளுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சி அவரிடம் இருந்து மறையவில்லை. தமிழீழத்தில் படுகாயமடைந்த போராளிகளை தமிழகம் கொண்டுவந்து தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பது குறித்து முதல்வர் கருணாநிதிக்குத் தெரிவித்து அவரின் சம்மதத்தைப் பெற்ற பிறகே போராளிகள் தமிழ்நாடு வந்தனர்.

ஆனால், சிகிச்சை பெற்றுவந்த அந்தப் போராளிகளை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்தார் கருணாநிதி.

இதுகுறித்து, பிரபாகரன் 19.3.1998-ம் ஆண்டு எனக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு வேதனையுடன் குறிப்பிட்டுள்​ளார்:

எமது போராளிகளில் பலர் அதுவும் காயமடைந்து, ஊனமடைந்​தவர்கள் இன்னும் தமிழக சிறைகளுக்குள் அநியாயமாக அடைப்பட்டுக்கிடப்பது எமக்கு ஆழ்ந்த வேதனையைக் கொடுக்கிறது. 90-ல் கலைஞரின் காருண்யத்தை நம்பி அவரது வேண்டுகோளின் பேரில் அனுப்பப்பட்ட போராளிகள் தொடர்ந்தும் சிறைகளில் பூட்டி வைக்கப்பட்டிருப்பது மனிதாபிமானமற்ற அநீதியான செயல்.

இதற்கு முன்பாக 23.7.1997 அன்று எனக்கு அவர் எழுதிய மற்றொரு கடிதத்தில், 'மருந்துப் பொருட்கள் எடுப்பதற்காக அங்கு வந்த எமது போராளிகள் பிடிபட்டு இதுவரை 50 லட்சம் வரையான பணம் தமிழ்நாட்டுப் பொலிஸாரிடம் பிடிபட்டு உள்ளது. எமக்கிருக்கும் எவ்வளவோ பணக் கஷ்டத்தின் மத்தியிலும் மருந்துப் பொருட்கள் வாங்க அனுப்பிய பணம், தமிழ் தமிழ் என முழங்கும் கலைஞரின் ஆட்சியிலே பறிக்கப்படுவதுதான் வேதனையைத் தருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

வீரம், ஆற்றல் உட்பட அனைத்திலும் யாருக்கும் சளைக்காதவர்களாக ஈழப் போராளிகள் இருந்தும் இறுதிப்போரில் தோல்வியுற்றனர். போரில் ஈடுபட்ட தலைவர்கள் பலரும் மடிந்தனர்.

இதற்குக் காரணம் ஈழப் போராளிகளிடையே ஒற்றுமை இல்லாததுதான் என 24.8.2012 அன்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் கூறியுள்ள கருணாநிதிதான் கடந்த காலத்தில் இப்படிச் செய்தவர்.

1987-க்குப் பிறகு, புலிகளைத் தவிர மற்ற இயக்கங்கள் ஒவ்வொன்றாக சிதறி விட்டன. சிங்கள அரசின் கைக்கூலிகளாக மாறிவிட்டன. சிங்கள அரசை எதிர்த்து இவர்கள் ஒருபோதும் போராடவில்லை. சிங்கள இராணுவத்துடன் இறுதிவரை போராடியவர்கள் விடுதலைப் புலிகள் மட்டுமே.

அதை மறைத்து கருணாநிதி பேசி இருக்கிறார்.

1990-ல் இருந்து 2008-ம் ஆண்டு வரை நடைபெற்ற அத்தனை போர்களிலும் புலிகள் வெற்றிவாகை சூடி இருக்கிறார்கள். 18 ஆண்டு காலமாக சிங்கள இராணுவத்துடன் நடைபெற்ற போர்கள் குறிப்பிடத்தக்கவை.

யாராலும் வெல்லப்பட முடியாதது எனக் கருதப்பட்ட ஆனையிறவு இராணுவ முகாமை மூன்றே நாட்களில் அழித்து வெற்றிக்கொடி நாட்டியவர்கள் புலிகள்.

ஆனால், 2009 ஆண்டில் அவர்களின் தோல்விக்கு சகோதரச் சண்டை காரணம் அல்ல. மாறாக, இந்தியா, சீனா, பாகிஸ்தான் உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றுகூடி சிங்கள இராணுவத்துக்குத் தேவையான இராணுவ உதவி உட்பட சகல உதவிகளையும் செய்தன.

இந்தியாவின் ஓய்வுபெற்ற தளபதியான லெப். ஜெனரல் சதீஷ் சந்திரா, சிங்கள இராணுவத்தின் ஆலோசகர் பொறுப்பை ஏற்றார். இந்தியக் கடற்படை இலங்கையைச் சுற்றிலும் நிறுத்தப்பட்டு புலிகளுக்கு ஆயுதம் ஏந்தி வந்த 13 கப்பல்களை மூழ்கடித்தது. இந்தக் காரணங்களினால்தான் புலிகள் வெற்றி பெற முடியவில்லை.

இந்த உண்மைகளை மறைத்து கருணாநிதி பேசுகிறார். சிங்கள அரசுக்கு எல்லா வகை ஆதரவும் அளித்த இந்திய அரசையும் அதற்குத் துணையாக நின்ற தனது செயலையும் மூடி மறைப்பதற்காக சகோதர யுத்தத்தால்தான் ஈழத்தில் அழிவு ஏற்பட்டதாக முழுப் பொய்யைக் கூசாமல் சொல்கிறார்.

என்னதான் இவர் உண்மைகளை மூடிமறைக்க முயற்சி செய்தாலும் அது, ஒருபோதும் வெற்றிபெறாது.

புலிகளைக் குற்றம் சாட்டுவதற்கு அவருடைய குற்ற உணர்வே காரணம்!

நன்றி - ஜூனியர் விகடன்

http://seithy.com/breifNews.php?newsID=66084&category=TamilNews&language=tamil

  • Replies 74
  • Views 4.5k
  • Created
  • Last Reply

மறைக்க/மறுக்க முடியாத உண்மைகள்! ... அக்காலகட்டத்தில் இந்தியாவில் இருந்தோருக்கு தெரியும்!

  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி தனது தவறுகளை துரோகங்களை மறைக்க சகோதர யுத்தம் என்பதை எப்பவும் பேசி.. சமாளிக்க நினைப்பவர். அவ்வாறு பேசுபவரின் வாயை அடைக்க மக்களிடம் உண்மையை சரியாகக் கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு உண்மையான தமிழீழப் பற்றாளர்களைச் சாரும். அதையே ஐயா நெடுமாறன் செய்துள்ளார். நன்றி ஐயா.. உங்களைப் போன்ற சிலரின் உருவில் தான் இன்றும் தர்மம்.. உண்மை.. கொஞ்சம் என்றாலும்.. நிலைத்திருக்கின்றன..! :icon_idea:

Edited by nedukkalapoovan

உண்மையான வார்த்தைகள் , நன்றிகள் நெடுமாறன் ஐயா.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுமாறன் ஐய்யா சொல்வதில் மாற்றுக்கருத்தில்லை. சகோதர யுத்தம் என்பது எதிரி எம்மைப் பிரித்து ஊடுருவி விட்டான் என்பதையே காட்டுகிறது. இந்திய ரோவுக்கு விலை போனவர்களும், சிங்களப் பேரினவாதத்திற்கு விலைபோனவர்களுமாக நாம் பிரிந்தோம். இவற்றைக் காரணம் காட்டியே சகோதர யுத்தம் முன்னெடுக்கப்பட்டது. முடிவில் ஒரேயொரு இயக்கம் மட்டுமே எஞ்சியது. 2009 இல் அதையும் எதிரிகள் சேர்ந்து அழித்து விட்டார்கள். சகோதர யுத்தமாகட்டும், பேரினவாதத்துக்கும், இந்தியப் பிராந்திய வல்லாதிக்கத்துக்கெதிரான யுத்தமாகட்டும், அழிவு எங்களுக்கே.

தலமைகள் தவறியிருந்தாலும் மற்றைய இயக்கங்களில் சேர்ந்து போராடியவர்கள் கூட சுதந்திரத் தமிழீழத்திற்காகத்தான் போராடினார்கள். அவர்களின் தியாகங்களும் போற்றுதற்குரியவை.

முதலில் புல்லுருவிகளை இனம் கண்டு களையெடுப்போம். எமக்குள் ஒன்றாகுவோம். அப்போது எதிரி தனியாகத் தெரிவான்.

கருணாநிதி கேவலம் கேட்ட அரசியல்வாதி.

நெடுமாறன் புழுகு மூட்டை. மற்றது இவரை தமிழ் நாட்டில் எவனும் பெரிதாக கணக்கில் எடுப்பதில்லை .

பேட்டியில் இருப்பது முக்கால்வாசி பொய்யும் பித்தலாட்டமும் .

இவரின் புத்தகத்தில் இந்தியன் ஆமி திலீபனின் அப்பாவை கொன்றது என்று எழுதும் போதே தெரியும் இவர் நம்பகத்தன்மை .

தமிழ் நாட்டில் எந்த ஒரு அரசியல்வாதியும் உண்மையானவன் அல்ல .அவர்கள் தமது தேவைக்கு எமது போராட்டத்தை பாவிக்கின்றார்கள் ,நாமும் எமது தேவைக்கு சில அரசியல்வாதிகளை பாவிக்கின்றோம் .

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவதாக நெடுமாறன் அவர்கள் அரசியல் வாதி அல்ல.அவருடைய கட்சி அரசியல் கட்சி அல்ல.எந்த தேர்த்தலிலும் எப்போதாவது போட்டி இட்டாரா??

மேற்கூறிய கட்டுரையில் பல பொய்கள் இருப்பின் உண்மையை சொல்லவும்.அலசிப்பார்க்கலாம்.

நான் அர்ஜுனின் கருத்துக்களை ஓட்டு மொத்தமாக பார்த்த போது எல்லாம் தனக்கு தெரியும் என்று புழுகு மூட்டைகளை அவிழ்த்து விடுபவராக தான் தெரிகிறார்.ஏனெனில் எப்போ ஆதாரம் யார் கேட்டாலும் ஓடி ஒழிந்து விடுவார்.

பழ நெடுமாறன் தேர்தலில் நின்றவர்தான். தற்பொழுது யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என்பதனால் நிற்பதில்லை.

[size=4]அமெரிக்கா போன்ற நாடுகளில் போட்டியிட தகுதியானவர் ஐயா நெடுமாறன். [/size]

[size=1]

[size=4]பாவம் தமிழனாக பிறந்துவிட்டார். [/size][/size]

பேட்டியில் இருப்பதில் முக்கால்வாசியும் பொய் என்று அர்சுன் சொல்லியிருப்பது முழுப்பொய். அப்படியிருக்க அவர் நெடுமாறனை தாக்குவது வெறும் கிப்போகிறேசி.

அரிசுன் பின்வளத்தை தூக்கி அடிக்கிறார் ஏன் எனில் PLOT போராட்டத்தில் இருந்ததாகத்தன்னும் நெடுமாறன் கூறவில்லை. அரிசுன் ஒன்றை கவனிக்க தவறுகிறார். நெடுமாறன் மிகக்குறுகிய விளகங்களுடன் கருணாநிதியின் குற்றசாட்டுதலுக்கு பதில் அளிக்கிறார். அதற்கு மேல் எதையும் பற்றி அவர் இந்த இடத்தில் கூறவில்லை.

அரிசுன் வழமை போல வேறேதோ கதையைத்தான் ஆரம்பிக்கிறார். திடுதிடுப்பென அவரின் தேர்தல் கதையை இதில் இழுப்பது அவரின் மீது இருக்கும் எரிச்சலைக்காட்ட மட்டுமே. தமிழ் நாட்டு அரசியலில் நாம் தலையிட முடியாது. அவர்கள் வாக்களிக்கும் விதம் பற்றி அர்சுன் நக்கலடிக்க முடியாது. அவர்கள் கருணாநிதியை தெரிகிறார்கள். நெடுமாறனை தள்ளிவிடுகிறார்கள். ஆனால் நம்மோடு இருப்பவர் நெடுமாறன். துரோகம் செய்பவர் கருணாநிதி. இது நமது பொறுப்பல்ல. வேணுமாயின் நாம் கருணாநிதி தமிழீழத்தில் எத்தனை வாக்குகள் பெறுவார் என்றோ அல்லது, SJV தமிழ் நாட்டில் எத்தனை வாக்குகள் பெறுவார் என்றோ அலசிப்பார்க்கலாம். இது சும்மா அறிவுத்துறை ஆராச்சிக்குமட்டுமே. இதில் விடுதலைக்கு எதுவும் வராது.

எனவே நெடுமாறனின் தேர்தலை விட்டுவிட்டு அறிக்கையில் நெடுமாறன் கூறிய சரித்திர சம்பவங்களுக்கு வருவோம். இதில் எழுதுபவர்களில் போராட்டத்தை பற்றி குறந்த பட்சம் தெரிந்தவன் என்ற முறையில் அர்சுனிடம் நான் கேட்பது ஒன்று. நெடுமாறனின் அறிக்கையை இன்னொரு கருத்தில் பிரதி பண்ணி அதில் அவர் கூறியிருக்கும் பொய்களை சிவப்பால் -hi-light பண்ண முடியுமா?

நீங்கள் அதை செய்தபின் போராடத்தை அறிந்தவர்கள் பதில் அளிப்பார்கள். நானும் எனக்கு தெரிந்தவர்களிடம் அதை பற்றி விசாரிக்க முடியும்.

அர்சுன் செய்யவிருக்கும் உதவிக்கு முன்நன்றி

இப்படி ஒரு நல்ல இணைப்பை போட்டத்திற்கு கறுப்பி அக்காவுக்கும் நன்றி.

Edited by மல்லையூரான்

தலைவர் உயிரோடு இருக்கின்றார், வருவார், ஐந்தாம் கட்ட ஈழப் போரை நடத்துவார் என்று நெடுமாறன் மீண்டும் மீண்டும் சொல்லி வருவதனால் அவர் ஒரு "புளுகர்" என்று சிலரை சொல்லத் தூண்டுகிறது என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

வந்தேண்டா பால்காரன் நான் பாட்டுப்ப்பாடி ஆடப்போறேன்

  • கருத்துக்கள உறவுகள்

பழ நெடுமாறன் தேர்தலில் நின்றவர்தான். தற்பொழுது யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என்பதனால் நிற்பதில்லை.

ஒருவரும் வாக்களிக்கமாட்டார்கள் என்பது உங்கட சொந்தக் கருத்துத் திணிப்பு. இதற்கு ஏதாவது ஆதாரம் இருக்குது..?????! :icon_idea::rolleyes:

இவரின் புத்தகத்தில் இந்தியன் ஆமி திலீபனின் அப்பாவை கொன்றது என்று எழுதும் போதே தெரியும் .

திலீபனின் தந்தைக்கு குடும்பத்தாருக்கு.. இந்தியப் படைகளால் அச்சுறுத்தலும் சித்திரவதைகளும் இருந்தன. அவரின் மரணத்திற்கு இந்தியப் படைகளும் ஒரு காரணமாக இருந்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை..!

நெடுமாறன் ஐயா குறிப்பிட்டத்தில் பெரிய தவறு இருப்பதாகத் தெரியவில்லை..! :icon_idea:

உங்களிடம் ஒரு கேள்வி.. நீங்கள்.. இந்தியப் படைகள் காலத்தில் ஊரில் இருந்தனீங்களா..??????! :icon_idea:

ஒருவரும் வாக்களிக்க மாட்டார்கள் என்பது சற்று மிகைப்படுத்தப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். நெடுமாறன், அவருடைய குடும்பத்தினர், அவருடைய நண்பர்கள், சில தோழர்கள் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் உண்டு.

ஒரு தகவல். 1980இல் பழ நெடுமாறன் அவர்கள் மதுரை தொகுதியில் நின்று பெரும் வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் மிக அதிகளவிலான வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தவர் என்ற பெருமையை அவர் நீண்டகாலம் கொண்டிருந்தார்.

அது ஒரு காலம்.

நெடுமாறன் ,நக்கீரன் ,சீமான் ,ஜூனியர் விகடன் ,இப்போ யாரோ மாயா கருப்பன் என்றும் ஒருவர் ,

இவர்களுக்கு எல்லாம் பதிலளித்து என்னை நானே தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை .

நெடுமாறன் கடைசியாக நின்ற தேர்தலில் கட்டுகாசு கூட எடுக்கவில்லை .

ஆரம்பகால விடுதலை இயக்க உறுப்பினர்கள் தமிழ் நாட்டில் வந்து கஷ்டப்பட்ட போது அவர்களுக்கு உதவியவர்களில் நெடுமாறனும் ஒருவர் .அதற்கு நன்றிக்கடனாக பிரபாகரன் நெடுமாறனை மதித்து வந்தார் .

ஆனால் அந்த நட்பை வைத்து தனது அரசியல் வியாபாரத்தை தொடங்கிவிட்டார் அய்யா .பல புலம் பெயர்ந்தவர்களும் இதைத்தான் செய்தார்கள் .

புலம் பெயர் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு கூட்டிக்கொண்டுவந்த தமிழ் நாட்டு பிரமுகர்கள் அரைவாசிக்கு மேல் இப்ப அவனவன் பாடு .அவர்களுக்கு சுற்றுலா ,இவர்களுக்கு மணிக்கணக்கில் தேவாரம் பாட ஒருவர் .

மல்லை ,நெடுமாறன் பேட்டி அனைத்துமே குளறுபடி என்று உங்களுக்கே தெரியும் .

நெடுக்ஸ் ,போன சனி எனது அம்மாவின் அந்தியேட்டிக்கும் திலீபனின் அண்ணர் வந்திருந்தார் ,அடிக்கடி கதைக்கும் அளவு நட்பு இன்னமும் இருக்கு .அவர்தான் அந்த நேரம் தந்தையுடன் இருந்தவர் .திலீபனின் மூத்த அண்ணருக்கு இந்தியன் ஆமி அலுப்பு கொடுத்தது உண்மை ,அவரை தப்பி ஓட சொன்னதும் இந்தியன் ஆமியில் இருந்த ஒரு தமிழர்தான்.

Edited by arjun

1.

இஞ்சி இருக்கா என்றால் இல்லை என்று சொல்லாமல், புளி இருக்கு என்று சொல்லும் வியாபாரத் தந்திரமே அவரிடம் இருக்கிறது. தமிழினப் பற்று கொஞ்சமும் இல்லை!

நான் கேட்டிருப்பது அர்சுன் எப்படி நெடுமாறனை பொய்யர் என்று கண்டு பிடித்தார் என்பதல்ல. கேட்ட கேள்வி இருக்க வேறேதிற்கோ பதிலலிப்பது கருணாநிதியினதும் அவரின் வக்காலாத்துகளினதும் வழக்கம்.இந்த பழக்கத்தை நெடும்மறன் கண்டிக்கிறார்.

2.

ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமாக அதை உண்மையாக்கிவிட முடியும் என்று நினைப்பவர்களில் கருணாநிதி முதன்மை​யானவர்.

பொய்யை திரும்ப திரும்ப சொல்லி அதை உண்மையாக்குவது இலங்கை அரசினதும் வக்காலாத்துக்களினதும் வழக்கம். இலங்கை அரசு எந்த நிரூபணமும் வெளிவிடத்தயாரில்லாமல் தலைவர் இறந்துவிட்டதாக திரும்பத்திரும்ப கூறி அதை உண்மையாக்க முயல்கிறது. இதையும் நெடுமாறன் கண்டிக்கிறார். இலங்கை அரசுக்காக இங்கே தலைவர் இறந்ததை Certify பண்ணும் அறிஞர்கள், தலைவர் இருக்கிறார இல்லையா என்ற வாதாட்டைதை இங்கே தேவையில்லாமல் ஆரம்பிக்காமல் தலைவர் இறந்து விட்டதை பிரபாகரன் மீது பிடிவிறந்து அனுப்பிவிட்டு இருக்கும் இந்திய கோடுகளுக்கு Certify பண்ணினால் இந்திய பொதுமக்களின் வரிப்பணம் மிஞ்சும். இது நெடுமாறனின் அறிக்கையில் எந்த பிழையையும் காணாமல் அதை 3/4 பங்கு பொய் என்று பொய்யை சொல்லி பின்னர் அதை மறைக்க வேறு ஏதாவது முடிவுக்கு வரமுடியாத திசைக்கு வாதாட்டதை திருப்ப முயல்வது இன்னொரு பொய்யை சொல்வது போன்றதொரு தந்திரம்.

3.தலைவர் உயிருடன் இருக்கிறார் என்று நெடுமாறன் சொன்னதாக சொல்வது திரியின் திசையில் இல்லாதது. திரியில் இருப்பதை விவாதிக்க வக்கில்லாதத போது வாயில் வந்ததை எழுதி எழுதிவிட்டு திரும்பி வராமல் ஒடுவதை திரும்ப திரும்ப செய்வதால் சிலருக்கு நெடுமாறனுக்கு தமிழ் நாட்டில் இருக்கும் மதிப்பு தன்னும் இங்கே யாழில் இருக்கா தெரியாது. பின்னர் நெடுமாறனை நையாண்டி பண்ணுவது தன்னை தான் அறியாத அப்பாவித்த்னம்.

4.ஒரு சொல்லை வைத்து அரசியல் வாதியை இனம்காணும் குணம் இருப்பவர்கள் ஏன்தனோ அர்சுன் நெடுமாறன் பேட்டியில் சொன்னதில் 3/4 ம்பொய் என்று சொல்லும் பொய்யில் வைத்து அரிசுன் முழுப்பொய்யர் என்று இனம்காணமறுத்து அவருக்கு வக்காலாத்து வாங்குவான்?

5. அர்சுன்னிற்கு வாயில் உண்மை வருமானல் துணிந்து வந்து தான் பொய்களை hi-light பண்ணட்டும். மற்றவர்கள் அரிசுனனிற்கு வக்கலாத்து வாங்குவதாக நினைது தான் அந்தரிக்க தொடங்கும் போது அரிசுன் வந்து பக்கபலமாக எதாவது எழுதுவார்தனே என்று நினத்து திருக்கு சம்பந்த இல்லாதை எழுதுவது சுத்த பேடித்தனம்.

Edited by மல்லையூரான்

தலைவர் பற்றிய நெடுமாறனின் கதையை குறிப்பிட்டதற்கு காரணம் இருக்கிறது. ஒரு காலத்தில் அரசியல் தாண்டிய மரியாதை நெடுமாறன் மீது பலருக்கு இருந்தது.

ஆனால் தலைவர் வருகின்ற கதை, ஐந்தாம் கட்டப் போர் போன்றவைகள் அவரை ஒரு "அறளை பெயர்ந்த முதியவர்" என்கின்ற அளவிற்கு ஆக்கி விட்டது. இன்றைக்கு கருணாநிதியை திட்டுவது, தலைவர் வருவார் என்று சொல்வது என்பன தவிர அவரிடம் எதுவும் இல்லை.

என்னுடைய கவலை எல்லாம் "கடைசிக் கட்டத்தில் இந்திய நிலவரம் பற்றி புலிகளுக்கு தவறான தகவல்களைக் கொடுத்தது, தலைவர் வருவார் என்று சொல்லி போர்க்குணம் மிக்க எஞ்சிய புலிகளை கட்டிப் போட்டது" போன்ற காரணங்களைச் சொல்லி காலம் நெடுமாறனை துரோகி ஆக்கிவிடுமோ என்பதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்ஸ் ,போன சனி எனது அம்மாவின் அந்தியேட்டிக்கும் திலீபனின் அண்ணர் வந்திருந்தார் ,அடிக்கடி கதைக்கும் அளவு நட்பு இன்னமும் இருக்கு .அவர்தான் அந்த நேரம் தந்தையுடன் இருந்தவர் .திலீபனின் மூத்த அண்ணருக்கு இந்தியன் ஆமி அலுப்பு கொடுத்தது உண்மை ,அவரை தப்பி ஓட சொன்னதும் இந்தியன் ஆமியில் இருந்த ஒரு தமிழர் தான்.

நான் சொன்னது கேட்டது இதையல்ல. நான் சொன்னது திலீபன் அண்ணாவின் தந்தைக்கு இந்தியப் படைகளால் நேரடி அச்சுறுத்தலும் உபத்திரபங்களும் அளிக்கப்பட்டதையே..! அதை திலீபன் அண்ணாவின் அண்ணர் உங்களோடு மறுதலித்தாரா..???! அப்படின்னு.. அவர் அன்றைய காலங்களில் அங்கு இருக்கவில்லை என்பது பொருள்..! :icon_idea:

உங்களுக்குத் தெரிந்த அவரையும் இன்னும் பலரையும் எங்களுக்கும் தெரியும். நேரடியாக இல்லை.. ஆனால் அவரோட தொடர்புடைய பிறர் மூலம். அவர்கள் இன்னும் ஊரில் இருப்பதால் அவர்களின் பெயரை குறிப்பிட முடியாது. அவர்களுக்கு அது பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

மல்லை ,நெடுமாறன் பேட்டி அனைத்துமே குளறுபடி என்று உங்களுக்கே தெரியும் .

அது அரசியல் என்பது உங்களுக்கு தெரியும். ஏமாற்று கருணாநிதியை சமாளிக்க அவை தேவை என்பதும் உங்களுக்கு தெரியும்.

தலைவர் பற்றிய நெடுமாறனின் கதையை குறிப்பிட்டதற்கு காரணம் இருக்கிறது. ஒரு காலத்தில் அரசியல் தாண்டிய மரியாதை நெடுமாறன் மீது பலருக்கு இருந்தது.

ஆனால் தலைவர் வருகின்ற கதை, ஐந்தாம் கட்டப் போர் போன்றவைகள் அவரை ஒரு "அறளை பெயர்ந்த முதியவர்" என்கின்ற அளவிற்கு ஆக்கி விட்டது. இன்றைக்கு கருணாநிதியை திட்டுவது, தலைவர் வருவார் என்று சொல்வது என்பன தவிர அவரிடம் எதுவும் இல்லை.

என்னுடைய கவலை எல்லாம் "கடைசிக் கட்டத்தில் இந்திய நிலவரம் பற்றி புலிகளுக்கு தவறான தகவல்களைக் கொடுத்தது, தலைவர் வருவார் என்று சொல்லி போர்க்குணம் மிக்க எஞ்சிய புலிகளை கட்டிப் போட்டது" போன்ற காரணங்களைச் சொல்லி காலம் நெடுமாறனை துரோகி ஆக்கிவிடுமோ என்பதுதான்.

தலைவரின் கதை இங்கே வந்தது எந்த வித தொடர்பும் இல்லாமல். யாருடய கவலையையும் பற்றியதல்ல என்னுடைய கேள்வி. உண்மை சரித்திரம் என்ன என்பதே அது. இந்த பேட்டியில் நெடுமாறன் சொன்ன பொய்கள் யாவை?

அரசு சர்வதேச அறிஞர்களை பிரபாகரனின் எச்சங்களை சோதிக்கவிட்டால் மட்டுமே நெடுமாறன் அறளைபேர்ந்தவர். இதற்கு மேல் நான் அந்த தலைப்புக்கு போக விரும்பவில்லை.

கருணாநிதியை எதிர்ப்பவனை சரித்திராசிரியர்கள் துரோகி என்று எழுதி வைத்தால் அவர்கள் கருணாநிதிக்கும் ஒரு சொல்லை தயார் செய்து வைத்திருக்கட்டும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பற்றிய நெடுமாறனின் கதையை குறிப்பிட்டதற்கு காரணம் இருக்கிறது. ஒரு காலத்தில் அரசியல் தாண்டிய மரியாதை நெடுமாறன் மீது பலருக்கு இருந்தது.

ஆனால் தலைவர் வருகின்ற கதை, ஐந்தாம் கட்டப் போர் போன்றவைகள் அவரை ஒரு "அறளை பெயர்ந்த முதியவர்" என்கின்ற அளவிற்கு ஆக்கி விட்டது. இன்றைக்கு கருணாநிதியை திட்டுவது, தலைவர் வருவார் என்று சொல்வது என்பன தவிர அவரிடம் எதுவும் இல்லை.

என்னுடைய கவலை எல்லாம் "கடைசிக் கட்டத்தில் இந்திய நிலவரம் பற்றி புலிகளுக்கு தவறான தகவல்களைக் கொடுத்தது, தலைவர் வருவார் என்று சொல்லி போர்க்குணம் மிக்க எஞ்சிய புலிகளை கட்டிப் போட்டது" போன்ற காரணங்களைச் சொல்லி காலம் நெடுமாறனை துரோகி ஆக்கிவிடுமோ என்பதுதான்.

நெடுமாறன் ஐயா மீதும்.. ஒரு துரோகக் கருத்தியலை நேரடியாகப் பதிவு செய்ய விரும்புகிறீர்கள் என்பதையே இக்கருத்தின் மூலம் நீங்கள் சொல்ல விளைகிறீர்கள்.

அண்மையில் கலைஞரை தூக்கிப் பிடிச்சுக்கொண்டு ஒரு வட்டம் வந்தீர்கள். இப்போ நெடுமாறன் ஐயா மீதான உங்கள் தனிப்பட்ட பார்வையை பொதுக்கருத்தாக திணிக்க விளைகிறீர்கள்.

நெடுமாறன் ஐயா.. அரசியல்வாதி என்பதற்கு அப்பால் ஈழப்போராட்டத்தோடு ஒன்றிணைந்த ஒரு பொதுமகன். அவருக்கு தேசிய தலைவர் பற்றிய தனது நம்பிக்கையை வெளியிட சுதந்திரம் உள்ளது. அது உண்மையோ பொய்யோ என்பதை காலம் தீர்மானிக்கும்..! தலைவர் வருவார் ஒருத்தரும் எதுவும் செய்யாமல் இருங்கோ என்று ஐயா நெடுமாறனோ.. எவருமோ சொல்லவில்லை..!

தலைவர் வரும் போது வரட்டும்.. அதுவரை போராட்டத்தை கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு மக்களைச் சாரும்.. அதையே தான் இன்று நெடுமாறன் ஐயா உட்பட எல்லாத் தலைவர்களும் சொல்கிறார்கள்..! யாரும் அதை தடுக்கவில்லை..!

தமிழக மக்களின் எழுச்சி நிகழ்வுகளில் ஐயா நெடுமாறன் பங்கெடுப்பதோடு.. மக்களையும் எழுச்சி கொண்டு போராடவே சொல்கின்றார். மாறாக பிரபாகரன் இன்ன நாள் வருவார் அதுவரை எல்லோரையும் அமைதி காக்கச் சொல்லவில்லை..!

தேசிய தலைவரை மதித்த.. நேசித்த மக்கள் எல்லோருக்குள்ளும் பொதுவாக உள்ள ஒரு எண்ணத்தையே ஐயா நெடுமாறனும் சரி வைகோ வும் சரி சொல்கிறார்கள். அதற்காக அவர்கள் கூற்றில் குறை கண்டு அவர்களை துரோகிகள் வரிசையில் நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை.

தேசிய தலைவர் தன்னையும் தான் சார்ந்த மக்களையும் நம்பியே அதிகம் போராடினார். அவரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் அந்த மக்களும் அவரின் மனோ பலமுமே காரணம்..! அதற்கு வேறு எவரிலும் பழிபோட முடியாது..! ஆனால் எமது விடுதலைப் போராட்டத்தை கருவறுக்க எதிரியோடு நின்று உழைத்த கருணாநிதி.. மற்றும் ஈழம் வாழ் ஒட்டுக்குழுக்களும் அவற்றின் தலைமைகளும் மன்னிக்க முடியாத துரோகத்தை இழைத்துள்ளனர்..! அதை எவரும் மறைக்கவோ மறுதலிக்கவோ முடியாது..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வந்தேண்டா பால்காரன் நான் பாட்டுப்ப்பாடி ஆடப்போறேன்

பாட்டு பாடி ஆடிட்டே இருந்திங்கன்னா அப்புறம் பால் கறக்கிறது யாரு தலீவா ? :D

ஒருவரும் வாக்களிக்க மாட்டார்கள் என்பது சற்று மிகைப்படுத்தப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்கிறேன். நெடுமாறன், அவருடைய குடும்பத்தினர், அவருடைய நண்பர்கள், சில தோழர்கள் வாக்களிப்பதற்கு சந்தர்ப்பம் உண்டு.

ஒரு தகவல். 1980இல் பழ நெடுமாறன் அவர்கள் மதுரை தொகுதியில் நின்று பெரும் வெற்றி பெற்றார். இந்தத் தொகுதியில் மிக அதிகளவிலான வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தவர் என்ற பெருமையை அவர் நீண்டகாலம் கொண்டிருந்தார்.

அது ஒரு காலம்.

காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத தலிவர்களில் ஒருவராக இருந்தவர் இந்திராகாந்தியின் செம தோஸ்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவளிக்காம இருந்து சராசரி அரசியல் நடாத்தி இருந்தா அவர் எங்கோ இருந்துருப்பார்

நெடுமாறன் ,நக்கீரன் ,சீமான் ,ஜூனியர் விகடன் ,இப்போ யாரோ மாயா கருப்பன் என்றும் ஒருவர் ,

இவர்களுக்கு எல்லாம் பதிலளித்து என்னை நானே தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை .

நெடுமாறன் கடைசியாக நின்ற தேர்தலில் கட்டுகாசு கூட எடுக்கவில்லை .

ஆரம்பகால விடுதலை இயக்க உறுப்பினர்கள் தமிழ் நாட்டில் வந்து கஷ்டப்பட்ட போது அவர்களுக்கு உதவியவர்களில் நெடுமாறனும் ஒருவர் .அதற்கு நன்றிக்கடனாக பிரபாகரன் நெடுமாறனை மதித்து வந்தார் .

ஆனால் அந்த நட்பை வைத்து தனது அரசியல் வியாபாரத்தை தொடங்கிவிட்டார் அய்யா .பல புலம் பெயர்ந்தவர்களும் இதைத்தான் செய்தார்கள் .

புலம் பெயர் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு கூட்டிக்கொண்டுவந்த தமிழ் நாட்டு பிரமுகர்கள் அரைவாசிக்கு மேல் இப்ப அவனவன் பாடு .அவர்களுக்கு சுற்றுலா ,இவர்களுக்கு மணிக்கணக்கில் தேவாரம் பாட ஒருவர் .

மல்லை ,நெடுமாறன் பேட்டி அனைத்துமே குளறுபடி என்று உங்களுக்கே தெரியும் .

நெடுக்ஸ் ,போன சனி எனது அம்மாவின் அந்தியேட்டிக்கும் திலீபனின் அண்ணர் வந்திருந்தார் ,அடிக்கடி கதைக்கும் அளவு நட்பு இன்னமும் இருக்கு .அவர்தான் அந்த நேரம் தந்தையுடன் இருந்தவர் .திலீபனின் மூத்த அண்ணருக்கு இந்தியன் ஆமி அலுப்பு கொடுத்தது உண்மை ,அவரை தப்பி ஓட சொன்னதும் இந்தியன் ஆமியில் இருந்த ஒரு தமிழர்தான்.

காமராஜரும் கூடத்தான் தேர்தலில் நின்று தோற்றவர் அந்த காமராஜரையே வீட்டுக்கு அனுப்பினவை தமிழ் நாட்டு மக்கள் நெடுமாறன் எல்லாம் எம்மாத்திரம்? என் அம்மா கூட தேர்தலில் தோத்தவா தான்

முதலாவது டெசோ மகாநாடு 4-5-1986 மதுரையில் நடந்தது .அதில் நெடுமாறன் ,வாஜ்பேஜ்,என்.டி ராமராவ் ,வீரமணி ,சுப்பிரமணியசாமி ஆகியோர் கலந்துகொண்டனர் .அந்த மகாநாடு தொடங்கிய நேரம் டெலோ புலிகள் முறுகல் ஆரம்பித்தது அப்போ மாகநாட்டிற்கு வந்திருந்த அமிர்தலிங்கம் ,திலகர் ,வாசுதேவா ,வரதராஜபெருமாள் ,இரத்தினசபாபதி ,மதி (டெலோ சார்பில்) எல்லோரிடமும் இயக்க ஒற்றுமை பற்றி டெசோ வலியுறுத்த இனி ஒன்றுபட்டு செயல்படுவதாக அனைவரும் உறுதியளித்தார்கள் .

அதில் சுப்பிரமணிசாமியின் பேச்சு "நான் சொல்வது உங்களுக்கு கேட்கும் என்றால் இலங்கையில் இருக்கும் எனது தமிழ் சகோதர ,சகோதரிகளே கொஞ்சம் பொறுங்கள் இந்தியா எப்போதும் உங்கள் பக்கம் தான் .விரைவில் நாம் உங்களுக்கு உதவ வருவோம் .ஜெயவர்தனாவே கேளும் .உமது முதுமையில் மூளை மழுங்காமல் காது செவிடாகாமல் இருந்தால் கேளும் தமிழர்கள் தனியாக இல்லை அவர்கள் பக்கம் எண்பது கோடி இந்தியர்கள் இருக்கின்றார்கள் ,தமிழர்களுக்கு நீர் செய்யும் கொடுமைகளை திரும்பி நீர் அனுபவிக்கவேண்டிவரும்"

இந்த நிலைப்பாடுகள் எல்லாம் இரண்டு வருடங்களில் தலை கீழாக போக ஒரே காரணம் புலிகளே .வெளியில் நின்று பார்த்தவனுக்கு எதுவும் தெரியாமல் போகலாம் .உள்ளே இருந்து பார்த்தவர்களுக்கு தெரியும் தமது அடாவடித்தனத்தால் அனைத்து உதவிளையும் பறிகொடுத்தார்கள் என்பது .

நெடுக்ஸ் ஒன்றாக இருந்த சொந்தமகனை விட உங்களுக்கு கூட விடயங்கள் வழக்கம் போல தெரிகின்றது .

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப அதே சுவாமி தான் மகிந்தவோட இருந்து விருந்து சாபிடுறார்

முதலாவது டெசோ மகாநாடு 4-5-1986 மதுரையில் நடந்தது .அதில் நெடுமாறன் ,வாஜ்பேஜ்,என்.டி ராமராவ் ,வீரமணி ,சுப்பிரமணியசாமி ஆகியோர் கலந்துகொண்டனர் .அந்த மகாநாடு தொடங்கிய நேரம் டெலோ புலிகள் முறுகல் ஆரம்பித்தது அப்போ மாகநாட்டிற்கு வந்திருந்த அமிர்தலிங்கம் ,திலகர் ,வாசுதேவா ,வரதராஜபெருமாள் ,இரத்தினசபாபதி ,மதி (டெலோ சார்பில்) எல்லோரிடமும் இயக்க ஒற்றுமை பற்றி டெசோ வலியுறுத்த இனி ஒன்றுபட்டு செயல்படுவதாக அனைவரும் உறுதியளித்தார்கள் .

அதில் சுப்பிரமணிசாமியின் பேச்சு "நான் சொல்வது உங்களுக்கு கேட்கும் என்றால் இலங்கையில் இருக்கும் எனது தமிழ் சகோதர ,சகோதரிகளே கொஞ்சம் பொறுங்கள் இந்தியா எப்போதும் உங்கள் பக்கம் தான் .விரைவில் நாம் உங்களுக்கு உதவ வருவோம் .ஜெயவர்தனாவே கேளும் .உமது முதுமையில் மூளை மழுங்காமல் காது செவிடாகாமல் இருந்தால் கேளும் தமிழர்கள் தனியாக இல்லை அவர்கள் பக்கம் எண்பது கோடி இந்தியர்கள் இருக்கின்றார்கள் ,தமிழர்களுக்கு நீர் செய்யும் கொடுமைகளை திரும்பி நீர் அனுபவிக்கவேண்டிவரும்"

இந்த நிலைப்பாடுகள் எல்லாம் இரண்டு வருடங்களில் தலை கீழாக போக ஒரே காரணம் புலிகளே .வெளியில் நின்று பார்த்தவனுக்கு எதுவும் தெரியாமல் போகலாம் .உள்ளே இருந்து பார்த்தவர்களுக்கு தெரியும் தமது அடாவடித்தனத்தால் அனைத்து உதவிளையும் பறிகொடுத்தார்கள் என்பது .

நெடுக்ஸ் ஒன்றாக இருந்த சொந்தமகனை விட உங்களுக்கு கூட விடயங்கள் வழக்கம் போல தெரிகின்றது .

தெரிந்தவர்கள் பேட்டியில் 3/4 பொய் என்று மாயை ஒன்றை நிலைநாட்ட முயல்கிறார்கள்.

இதெல்லாம் கணக்கில் தேவை இல்லாத கதை. யாருக்கு தேவை இந்த சுப்பிரமணியையும், கருணாநிதியையும் நியாப்படுத்தி நெடுமாறனை துரோகியாக முயல்வது. நாங்கள் தான் 3/4 பொய் என்றதை நிறுவியதை பார்த்தோமே. அதன் பின்னரும் இன்னும் எதாவது பொய்களை கூறி எங்களை நம்மபத்தான் வைக்க வேண்டுமா?

எழுதுவதில் 99/100 ம் பொய்யாக இருக்கிறது. சொன்ன பொய்யை மறைக்க சுத்தி சுத்தி ஒன்பது பொய் சொல்லி என்ன. உதவி தரவந்தது , புலிகளை பிடித்து மேசினறி போராளிகளாக்கி, அதனால் இலங்கையை பிடித்து இந்தியாவுக்கு கொடுக்க மட்டுமே. இந்த கதையை பல இந்தியன் எழுத்தாளர்களும் கூட எழுதிவிட்டார்கள். இதே கதையேதான் PLOTஐ பாவித்து மாலைதீவை பிடிக்க முயன்ற கதை. PLOT இந்திய உதவிக்காக மலைதீவை பிடிக்க போயிற்று. புலிகள் தமிழ் ஈழத்தை தவிர ஒரு அங்குல மண்ணையும் இந்தியாவுக்காக இலங்கையிலிருந்து பிடிக்க விரும்பவில்லை. புலிக்கள் நோக்கம் உள்ள இயக்கமாக் இருக்க விரும்பினார்கள். இதற்காக சுப்பிரமணியத்தின் உதவியை தள்ளி ஒதுக்கிவிட்டதில் ஒரு தப்பும் இல்லையே. அன்றும் சரி இன்றும் சரி கருணாநிதியின் சுத்துமாத்து டெசோ வேண்டியதில்லை.

காங்கிரஸ் பயந்து ஐ.நா. பிரேரணைக்கு வாக்களித்ததே கருணாநிதி தோற்றத்தால் மட்டும்தான். கருணாநிநி இரண்டுதடவை ஊழலுக்காக பதவி நீக்கம் செய்யபட்டவர். ஜெயலிதா கேட்டும் மூன்றாம் முறை BJP பதவி நீக்கம் செய்ய இலை. கருணாநிதியின் காங்கிரஸ் அந்த நேரம் பதவியில் இருந்திருந்தால், இந்தியாவில் பதவி நீக்கம் பெறுவதில் சாதனை படைத்த முதல் அமைச்சராகியிருப்பார். அவரின் வண்டவாளங்களை மறைக்க புலிகள் ஏன் சுப்பிரமணியசாமியின் உதவிகளை மறுத்தார்கள் என்பதை மறைக்க வேண்டுமா? மேலும் நெடுமாறனுக்கு அப்படி ஒரு சாதனைச் சரித்திரம் இல்லை.

இனி நான் பேட்டியில் 3/4 அல்ல 1/4 தன்னும் பிழை என்று நிரூபித்தபின் தான் இந்த திரியில் எழுதுவேன். 100/100 சுத்தப்பொய்களுக்கும் பொம்மலாட்டங்களுக்கும் பதில் அளிக்க தேவை இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.