Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்சு நாட்டில் 30 லட்சம் பேருக்கு வேலை இல்லை

Featured Replies

[size=2][size=4]ஐரோப்பாவில் உள்ள பணக்கார நாடுகளில் பிரான்சும் ஒன்று.[/size][/size]

[size=2][size=4]ஆனால் இப்போது அங்கு பொருளாதார நிலைமை மிக மோசமாக உள்ளது.[/size][/size]

[size=2][size=4]கடும் கடன் நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. இதனால் வேலை இல்லா திண்டாட்டமும் அதிகரித்தபடி உள்ளது. அதுவும் சோசலிச ஆட்சி வந்த பிறகு அங்கு நிலைமை மிக மோசமாகி இருக்கிறது.[/size][/size]

[size=2][size=4]தற்போது அங்கு 30 லட்சம் பேருக்கு வேலை இல்லை. இதுதொடர்பாக அந்த நாட்டு தொழில்துறை மந்திரி மைக்கேல் சபீன் கூறியதாவது:-[/size][/size]

[size=2][size=4]பிரான்சில் 30 லட்சம் பேர் வேலை தேடி காத்திருக்கிறார்கள்.[/size][/size]

[size=2][size=4]இந்த எண்ணிக்கை இன்னும் உயரலாம். புதிய வேலைவாய்ப்பை உருவாக்க நாட்டில் பொருளாதார வளர்ச்சி தேவை.[/size][/size]

[size=2][size=4]ஆனால் ஐரோப்பிய முடிவுகளே நமது பொருளாதார முடிவுகளாக இருப்பதால் நாம் போராடி வேலையில்லாக் கொடுமையை மாற்ற வேண்டியுள்ளது. அடுத்த ஆண்டின் நிலை எவ்வாறு இருக்கும்? என்று யாருக்கும் தெரியாது.[/size][/size]

[size=2][size=4]இவ்வாறு அவர் கூறினார்.[/size][/size]

[size=2]http://www.alaikal.com/news/?p=112777[/size]

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத்தகவல் பதிவுக்கு மட்டுமே

தலையங்கத்தை இப்படி வைத்துக்கொள்ளலாம்

30 லட்சம்பேர் அரச உதவியில் உள்ளனர் என்று.

அரைவாசிப்பேர் களவாக வேலை செய்து இரட்டிப்பு சம்பளம் பெறுகின்றனர். இன்னொரு கால்வாசிப்பேர் அரச காசையும் வேலைக்குப்போனால் கிடைக்கும் காசையும் கணக்குப்போட்டுப்பார்த்து சம்பளத்தைவிட இது பறவாயில்லை என சுற்றிலாவில் இருக்கிறார். இன்னொரு பகுதியினர் இந்தப்படிப்பு படித்தோம் அதுக்குத்தான் வேலை வேண்டுமென தடிப்போடு அரச செலவில் கட்டிலில் சோம்பேறிகளாக கிடக்கின்றனர். ஒரு சிறு பகுதியினருக்குத்தான் வேலை உண்மையிலேயே இல்லை.

  • தொடங்கியவர்

[size=4]வேலை செய்பவர்களை உறிஞ்சி வாழுபவர்கள் கூட்டம் அதிகம் என்கிறீர்கள். [/size]

[size=4]இந்த உழைக்கும் வர்க்கம் குறைந்தும் வரி வீதங்கள் அதிகரிக்கும்பொழுது இல்லை வரி கட்டுபவர்கள் அதை ஒளிக்கும்பொழுது நிலைமைகள் கடினமாகிவிடும். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

இதன்தாக்கம் வெளிநாட்டவர்களையே பாதிக்கும் பிரன்சுக்காரர்களால் வெளிநாட்டவரை குறிவைத்து தாக்குதல்கள் மேற்கொள்ளப்படும் உறவுகள் அவதானத்துடன் இருக்கவேண்டும்.

  • தொடங்கியவர்

[size=4]பிரான்சின் முதலாவது பணக்காரர் தனது நாட்டை விட்டு பெல்ஜியம் குடிபுக முயலுகின்றார்.[/size]

[size=4]காரணம் : அதிக வரி[/size]

[size=6]Bernard Arnault, France's Richest Man, Seeks Belgian Passport As Country Weighs Tax Increases[/size]

[size=6][size=5]http://www.huffingtonpost.com/2012/09/08/james-hoffa-teamsters-romney_n_1866359.html?ir=Business&ref=topbar[/size][/size]

http://www.theweek.co.uk/eurozone/48919/why-does-french-tycoon-bernard-arnault-want-be-belgian

இந்தத்தகவல் பதிவுக்கு மட்டுமே

தலையங்கத்தை இப்படி வைத்துக்கொள்ளலாம்

30 லட்சம்பேர் அரச உதவியில் உள்ளனர் என்று.

அரைவாசிப்பேர் களவாக வேலை செய்து இரட்டிப்பு சம்பளம் பெறுகின்றனர். இன்னொரு கால்வாசிப்பேர் அரச காசையும் வேலைக்குப்போனால் கிடைக்கும் காசையும் கணக்குப்போட்டுப்பார்த்து சம்பளத்தைவிட இது பறவாயில்லை என சுற்றிலாவில் இருக்கிறார். இன்னொரு பகுதியினர் இந்தப்படிப்பு படித்தோம் அதுக்குத்தான் வேலை வேண்டுமென தடிப்போடு அரச செலவில் கட்டிலில் சோம்பேறிகளாக கிடக்கின்றனர். ஒரு சிறு பகுதியினருக்குத்தான் வேலை உண்மையிலேயே இல்லை.

இதை ஒத்த நிலைதான் இங்கிலாந்திலும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இங்கு ஜேர்மனியிலும் அதே நிலை தான். :(

  • தொடங்கியவர்

[size=4]மேற்குலக நாடுகளில் சரிந்து வரும் பொருளாதாரம் காரணமாக நடுத்தரவர்க்கம் மெலிந்து செல்கின்றது. மறுபக்கம் வரியை அதிகரிக்க வேண்டிய தேவை. இதனால் வசதியான பண முதலைகள் தமது வருவாயை ஒளிக்க இல்லை வேறு நாடுகளுக்கு ஓட பார்க்கின்றனர்.[/size]

[size=4]நடுத்தர வர்க்கம் மெலிந்து நலிந்து செல்கையில் எம்மவர்களுக்கும் வாழ்வு கடுமையானதாக இருக்கும்.[/size]

ஒரு நாட்டில் கணிசமான மக்கள் தனியார் நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். இத் தனியார் நிறுவன முதலிட்டாளர்கள் மீது அரசு வரிச்சுமையை அதிகரிக்கும்போது அம்முதலீட்டாளர்கள் வரிகுறைந்த நாடுகளை நாடுவர். இது அவர்களில் நேரடியாகவோ மறைமுகமாகவோ தங்கி வாழும் நடுத்தர மக்களின் வேலை வாய்ப்பை பாதிக்கிறது. வேலையில்லாதோர் எண்ணிக்கை உயர்வடைய அதிக வரிச்சுமையும் ஒரு காரணி.

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சிலை தேவையான வேலை உள்ளது ஆனால் சனத்துக்கு வேலை செய்ய பஞ்சி உதவி பணத்திலை காலத்தை தள்ள விரும்பம். நானே இரண்டு வேலை காரரரை ஆறு மாதமா தேடுறன் கிடைக்கவில்லை. அதே நேரம் ஒழுங்கா கணக்கு காட்டுகிறவர்களிற்கு வரிச்சுமை அதிகரிக்கிறது. உதவிப்பணம் அதிகரிப்பு அதனால் கள்ளவேலையை பலரும் நாடுகின்றனர். பொரும்பாலானவர்கள் வரி ஏய்ப்பு செய்யும் நிலைமை அதிகரித்து கடைசியிலை இத்தாலிலையை போலை வரப்போகுது.

விளம்பரம் செய்து பார்க்கலாமே

  • தொடங்கியவர்

[size=4]அமெரிக்காவும் யூரோ சோனும் பணத்தை அச்சடித்தபடி உள்ளனர். இதனால் அவர்களின் நாணய பெறுமதி கீழே செல்லுகின்றது. [/size]

[size=1]

[size=4]கனடா ஒப்பீட்டளவில் பலமான நிலையிலுள்ளது. பணத்தை அச்சடிப்பதில்லை. இதனால் இதன் பெறுமதி வளர்ந்தவண்ணம் உள்ளது. [/size][/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரான்சிலை தேவையான வேலை உள்ளது ஆனால் சனத்துக்கு வேலை செய்ய பஞ்சி உதவி பணத்திலை காலத்தை தள்ள விரும்பம். நானே இரண்டு வேலை காரரரை ஆறு மாதமா தேடுறன் கிடைக்கவில்லை. அதே நேரம் ஒழுங்கா கணக்கு காட்டுகிறவர்களிற்கு வரிச்சுமை அதிகரிக்கிறது. உதவிப்பணம் அதிகரிப்பு அதனால் கள்ளவேலையை பலரும் நாடுகின்றனர். பொரும்பாலானவர்கள் வரி ஏய்ப்பு செய்யும் நிலைமை அதிகரித்து கடைசியிலை இத்தாலிலையை போலை வரப்போகுது.

உங்களிட்டை வேலைக்கு வந்து நாள்முழுக்க நாயடிபேயடி அடிச்சு வேலைசெய்யுற காசுக்கு.......வேலைசெய்யாமல் வீட்டிலை இருக்க அவன் தாறகாசு அவ்வளவும் தங்கப்பவுண்....என்ன ஒண்டு பென்சன் காசு வராது......சரி வராட்டில் என்ன? இப்ப பென்சன்காசு கட்டி வேலை செய்யிறவைக்கு பிற்க்காலத்திலை ஒழுங்காய் பென்சன் வருமெண்டு நான் நினைக்கேல்லை????ஏனெண்டால் இப்பவே இஞ்சை பென்சன்காசிலை கைவைக்க வெளிக்கிட்டுட்டாங்கள்....வருங்காலத்திலை பெஞ்சன்காரருக்கு பெட்டிச்சாப்பாடும் வவுச்சரும்தான் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சிலை தேவையான வேலை உள்ளது ஆனால் சனத்துக்கு வேலை செய்ய பஞ்சி உதவி பணத்திலை காலத்தை தள்ள விரும்பம். நானே இரண்டு வேலை காரரரை ஆறு மாதமா தேடுறன் கிடைக்கவில்லை. அதே நேரம் ஒழுங்கா கணக்கு காட்டுகிறவர்களிற்கு வரிச்சுமை அதிகரிக்கிறது. உதவிப்பணம் அதிகரிப்பு அதனால் கள்ளவேலையை பலரும் நாடுகின்றனர். பொரும்பாலானவர்கள் வரி ஏய்ப்பு செய்யும் நிலைமை அதிகரித்து கடைசியிலை இத்தாலிலையை போலை வரப்போகுது.

நானிருக்கும் இடத்திலும் அதே பிரச்சனை தான். விசேடமாக, நம்பிக்கையான தேர்ந்த வேலையாட்களை (skilled labour) எடுப்பது மிகவும் கடினம். ரெண்டு நாள் வேலைக்கு வந்திட்டு மூண்டாவது நாள் வரமாட்டார்கள். ஊரிலிருந்து யாரையாவது எடுப்பிச்சால் என்ன மாதிரி வேலை செய்வார்கள் என நான் யோசிப்பதுண்டு. ஆனால் அப்படி வருபவர்களும், இங்கு வந்தவுடன் சோம்பேறிகளாகி விடுகிறார்கள்.

உண்மை தான் இங்கு பலருக்கு(எல்லா வெளிநாட்டவர்களையும் தான் சொல்கிறேன்)

இங்கத்தைய மொழி பேச,எழுத,வாசிக்க தெரியாது. கொஞம் கூட அடிப்படையே தெரியாது ஆனால் அரசிடம் இருந்து எப்படி,எந்தெந்த வழியிலை காசெடுக்க வேண்டும் என்று தெரியும்,அதற்குரிய சட்டவரம்பையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். புதிதாக வருபவர்களிடமும் அதையே சொல்லி கெடுத்து வைத்திருக்கிறார்கள். அதிலும் துருக்கியை அடிச்சுக்கவே முடியாது. :rolleyes::lol:

[size=4]அமெரிக்காவும் யூரோ சோனும் பணத்தை அச்சடித்தபடி உள்ளனர். இதனால் அவர்களின் நாணய பெறுமதி கீழே செல்லுகின்றது. [/size]

[size=1][size=4]கனடா ஒப்பீட்டளவில் பலமான நிலையிலுள்ளது. பணத்தை அச்சடிப்பதில்லை. இதனால் இதன் பெறுமதி வளர்ந்தவண்ணம் உள்ளது. [/size][/size]

நாணய பெறுமதி குறைவதால் ஏற்றுமதி வருமானம் அதிகரிக்கும். இதனால் நாடுகள் தமது பண பெறுமதியை வேண்டுமென்றே குறைத்து வைப்பதுண்டு (e.g: சீனா).

பணத்தை அச்சடிப்பதென்பது உடல் இயலாதவனுக்கு குளுக்கோசு குடுப்பதைப்போல.

மத்திய வங்கி ஏனைய வங்கிகளுக்கு மேலதிக பணத்தை வழங்கி நாட்டில் கடனுதவிகளை ஊக்குவிகிறது. இதனால் உற்பத்திகள் கூடி ஏற்றுமதி அதிகரிக்கும். வேலை வாய்ப்புகள் கூடுவதால் நாட்டில் பணப்புழக்கம் கூட மக்கள் செலவு செயும் வீதம் கூடுகிறது. இதனால் பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.

இதனை நோக்காக கொண்டே அரசுகள் (மத்திய வங்கி) பணத்தை அச்சடிக்கிறது (quantitative easing).

[size=4]உங்கள் கருத்துக்கள் சரி கஜன்.[/size]

[size=4]ஆனால், அமெரிக்காவில் 2008 ஆம் ஆண்டில் இருந்து வரும் சரிவு இன்றுவரை இந்த அணுகுமுறையால் தீரவில்லை. ஆனால், அது இன்னும் மோசமடையவில்லை. [/size]

[size=4]இந்த அணுகுமுறை விரைவில் பணவீக்கத்தை கொண்டுவரும். வட்டி வீதத்தை அதிகரிக்க வேண்டி வரும். அதுவும் பெரிய பிரச்னையை தரலாம். [/size]

[size=4]உங்கள் கருத்துக்கள் சரி கஜன்.[/size]

[size=4]ஆனால், அமெரிக்காவில் 2008 ஆம் ஆண்டில் இருந்து வரும் சரிவு இன்றுவரை இந்த அணுகுமுறையால் தீரவில்லை. ஆனால், அது இன்னும் .மோசமடையவில்லை [/size]

[size=4]இந்த அணுகுமுறை விரைவில் பணவீக்கத்தை கொண்டுவரும். வட்டி வீதத்தை அதிகரிக்க வேண்டி வரும். அதுவும் பெரிய பிரச்னையை தரலாம். [/size]

இதற்கான பதில் தெரிந்தால் அமெரிக்கா உட்பட எல்லா நாடுகளும் சரியான முடிவுகளை எடுத்திருப்பார்கள் அகூதா அண்ணா.

நீங்களே கூறியது போல் பணத்தை அச்சடித்ததால் அமெரிக்கா இன்று வரை தாக்குப்பிடிக்கிறது என்றும் கூறலாம். ஐரோப்பியன் union இல் உள்ள சில நாடுகளால் (Greece, Italy, Portukal) தாக்குப்பிடிக்க முடியவில்லை.

பணவீக்கம் கூடுவதற்கு கேள்வி கூடுவது மட்டுமே காரணமில்லை. புறக் காரணிகளும் பண வீக்கத்தில் தாக்கம் செலுத்துகின்றன. முக்கியமாக எரிபொருள் விலையேத்தத்தை கூறலாம். இதனை உள்நாட்டு பொருளாதார கொள்கைகளால் கட்டுப்படுத்த முடியாது.

இதனை கட்டுப்படுத்தவே அமெரிக்கா போன்ற வல்லரசுகள் மத்தியகிழக்கு நாடுகளில் தமது பொம்மை அரசுகளை நிறுவ முயல்கின்றன.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.