Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைக்க ஐதேக ஆதரவு – முஸ்லிம் காங்கிரசுடன் பேச முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sam1.jpg

[size=4]கிழக்கு மாகாணசபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சி அமைப்பதற்கு ஐதேக ஆதரவு வழங்க முன்வந்துள்ளது.

இந்த முடிவை ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று காலை தொலைபேசி மூலம் தன்னிடம் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தத் தேர்தலில் 11 ஆசனங்களை வென்றுள்ள போதிலும், ஐதேகவின் 4 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றாலும் ஆட்சியமைக்க முடியாது.

எனவே சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவைப் பெறுவது குறித்து அந்தக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் பேசுவதற்கு முயற்சி எடுத்து வருகிறோம்.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில், தமிழ் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர் என்பது திருப்தி தருகிறது.

எனினும் .திருகோணமலை மாவட்டத்தில் இன்னொரு ஆசனத்தைப் பெற்றுக் கொள்வதற்காக வாய்ப்புகள் இருந்தன” என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.[/size]

[size=4]http://www.puthinapp...?20120909106954[/size]

முஸ்லீம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு ஆதரவு வழங்குவதற்கே வாய்ப்புக்கள் அதிகம். இவர்கள் பேசி வைத்துக் கொண்டுதான் தனித்தனியாக நிற்கிறார்கள் என்ற பேச்சு இருக்கிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஒரு முஸ்லீமை முதலமைச்சர் பதவிக்கு அமர்த்தக் கூடிய நிலையில் தன்னுடைய செய்கையை நியாயப்படுத்தவும் முஸ்லீம் காங்கிரஸால் முடியும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு முதல் இரண்டு ஆண்டுகள் கூட்டமைப்பை சேர்ந்த முதலமைச்சர், அடுத்த இரண்டு ஆண்டுகள் முஸ்லீம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவி என்று ஏதாவது கூட்டாட்சிக்கான முயற்சிகளை செய்து பார்க்கலாம். சில வேளைகளில் ஏதாவது அதிசயம் நிகழலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சியமா ஐக்கிய சுதந்திர முன்னணி ஆட்சி அமைக்க தான் வாய்ப்பு அதிகம் முஸ்லிம் காங்கிரஸ் அவர்களுக்கு தான் ஆதரவளிக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சியமா ஐக்கிய சுதந்திர முன்னணி ஆட்சி அமைக்க தான் வாய்ப்பு அதிகம் முஸ்லிம் காங்கிரஸ் அவர்களுக்கு தான் ஆதரவளிக்கும்

உங்களுக்கு முஸ்லிம்களைப்புரிய முடிகிறது.

5 ரூபாவுக்கே அசையும் இனம்.

முதலமைச்சர் அல்லது அமைச்சர் பதிவிக்கும் அசையாது என்பது.............???

இது சரித்திரத்தில் கிழக்கு மாகாணத்திற்கு கிடைத்த இழப்பு. இனி கிழக்கு மாகாணத்தை விட்டு முழுவதாக தமிழர் துரத்தப்பட்டுவிடுவார்கள். அரசை அங்கு காலூண்ற வைத்த பிள்ளையான், கருணா விரைவில் தமது செய்கையை உணரும் நாள் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு மாகாண மக்கள் மிக தெளிவான தீர்ப்பை வழங்கி இருக்காங்க அதாவது பிரதேச வாதத்துக்கு கிழக்கு மண்ணில் இடம் இல்லை என்று.... கருணாவும் பிள்ளையானும் முகத்த எங்க கொண்டு போய் வைக்க போறாங்க? இனி ஒரு விடுதலை போராட்டம் தொடங்குமா இருந்தா அது கிழக்கில் இருந்து தான்... இனி எவனாச்சும் பிரதேச வாதம் கதைச்சிட்டு வாங்க யாழுக்கு பிச்சுபுடுவண் பிச்சு

தற்போதைய எமது சூழ்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்புடன் இணைந்தால் பல மாற்றங்கள் இடம்பெறலாம் அதை விடுத்து மு கா ஐக்கிய சுதந்திர முன்னணிக்கு ஆதரவலித்து ஆட்சி அமைக்குமேயாயின் இலங்கை தீவில் தமிழர்கள் காலம் காலமாக தனிமை படுத்தபடுகின்றார்கள் என்ற செய்தி மேற்கு உலகத்திற்கு மீண்டும் சொல்லப்படுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு முஸ்லிம்களைப்புரிய முடிகிறது.

5 ரூபாவுக்கே அசையும் இனம்.

முதலமைச்சர் அல்லது அமைச்சர் பதிவிக்கும் அசையாது என்பது.............???

தற்போதைய எமது சூழ்நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்புடன் இணைந்தால் பல மாற்றங்கள் இடம்பெறலாம் அதை விடுத்து மு கா ஐக்கிய சுதந்திர முன்னணிக்கு ஆதரவலித்து ஆட்சி அமைக்குமேயாயின் இலங்கை தீவில் தமிழர்கள் காலம் காலமாக தனிமை படுத்தபடுகின்றார்கள் என்ற செய்தி மேற்கு உலகத்திற்கு மீண்டும் சொல்லப்படுகின்றது.

இலங்கை தமிழர்களுக்கு முஸ்லிம் மக்கள் மீதுள்ள வெறுப்பு, சந்தேகம் போன்றவற்றுக்கு யாழ் களத்திலேயே போதிய அளவு ஆதாரங்கள் இருக்கின்றன. தமிழர்களுடன் ஒற்றுமையாக வாழ்வதிலும் பார்க்க சிங்களவர்களுடன் முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ முடிகிறது.

இனி தமிழர்கள் முஸ்லிகளின் ஆதரவை பெற்றுத்தான் தமது உரிமைகளில் சிறிய அளவையாயினும் பாதுகாக்க வேண்டும் என்ற நிலையிருந்தால், அதற்கு கொடுக்க வேண்டிய விலை அதிகம். இந்த தேர்தலை பொறுத்தளவில் ஒரு முஸ்லிம் முதலமைச்சரை முஸ்லிம் காங்கிரஸ் முழுமையான காலப்பகுதிக்கும் பதவியில் இருக்க ஏற்றுக்கொண்டு கூட்டாட்சி அமைப்பதே அதற்கு சரியான வழியாக அமையும். ஏனைய அமைச்சு பதவிகளை தமிழ்கூட்டமைப்பும் ஐ.தே.க.வும் பகிர்ந்து கொள்ளலாம். இந்த முயற்சி வெற்றி பெற்றால் இது தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கான ஒரு புதிய முயற்சிக்கான ஆரம்பமாக அது அமையலாம். இதற்கு மேலும் பலம் சேர்க்க இவ்வாறான கூட்டாட்சியின் முதல் நடவடிக்கையாக முஸ்லிம் மக்களின் கலாச்சாரம், சமய வழக்கங்கள், பண்பாடு போன்றவற்றை அவமதிப்பவர்களுக்கு கடுமையான தண்டனையை விதிக்கும் ஒரு சட்டமூலத்தை கொண்டுவருவதற்கு த.தே.கூ. முழுமையான ஆதரவளிக்கும் என்ற வாக்குறுதியையும் வழங்கலாம்.

Edited by Jude

[size=4] கூட்டமைப்புடன் முஸ்லீம்கள் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் - இரண்டிலும் நன்மை தீமைகள் உள்ளன. ஆனால், அவற்றை கூடுதலாக உணரவேண்டிய நிலையில் முஸ்லீம் தலைமைகளே உள்ளன. பல இடங்களில் அண்மையில் ஹக்கீம் அரசை கண்டித்து பிரச்சாரம் செய்தார். இப்பொழுது நடைமுறையில் அதைக்காட்ட வேண்டிய நிலை. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

என்னைக்கேட்டால் நான் சொல்லுவேன் இரு பகுதியினரும் முஸ்லிம் காங்கரஸ் க்கு முதல்வர்பதவியை குடுக்கும் பட்சத்தில் அவர்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைவதை தான் தெரிவு செய்வார்கள் காரணம்

ஓன்று மத்திய அரசில் இருந்து தங்கள் பிரதேச அபிவிருத்திக்கு அதிக நிதி பெற்றுக்கொள்ள

ரெண்டு மத்திய அரசில் அவர்கள் வகித்துவரும் அமைச்சு பதவிகளை இழக்க முன்வர மாட்டார்கள் கரணம் மாநிலத்தை விட மத்தியில் நிறைய அதிகார சுகபோகங்கள் இருக்கு

இது எல்லாத்தையும் தாண்டி இந்தியா தலையிட்டு பணத்தால் விளையாடுமாக இருந்தால் சில சலுகைகளை இந்தியாவில் முதலிட முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த வியாபாரிகள் முதலிட இந்தியா வழங்குமாக இருந்தால் அவர்கள் ஆதரவை பெற்றுக்க்ளலாம்

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]கூட்டமைப்புடன் முஸ்லீம்கள் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் - இரண்டிலும் நன்மை தீமைகள் உள்ளன. ஆனால், அவற்றை கூடுதலாக உணரவேண்டிய நிலையில் முஸ்லீம் தலைமைகளே உள்ளன. பல இடங்களில் அண்மையில் ஹக்கீம் அரசை கண்டித்து பிரச்சாரம் செய்தார். இப்பொழுது நடைமுறையில் அதைக்காட்ட வேண்டிய நிலை. [/size]

தேர்தல் பிரச்சாரத்தில் கூறுவது பற்றியெல்லாம் அரசியல்வாதிகள் தேர்தலின் பின்னர் கவனத்தில் கொள்கிறார்கள் என்றா கருதுகிறீர்கள்? பதவியில் அமர்வதற்கு இந்த தேர்தல் காலத்து கதைகள் எல்லாம் தடைகளாக அமைவதில்லை.

இன்று ஆட்சியை தீர்மானிக்கும் நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் இருக்கிறது. இலங்கையில் மிகவும் பலம்பொருந்திய ஆட்சியாக இருக்கும் ராஜபக்ச ஆட்சியுடன் கூட்டுசேர முஸ்லிம் காங்கிரஸ் பின் நிற்காது. பிள்ளையானை அடக்கி வைத்து முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவி வழங்குவது ராஜபக்சவுக்கு இலகுவானது.

இலங்கை தமிழர்களின் பின்னடைவுக்கு முக்கியமான காரணங்களில் இரண்டு:

  1. தமது பலம் பற்றிய அளவுக்கு அதிகமான நம்பிக்கையும்
  2. தமது பலவீனங்கள் பற்றி போதியளவில் அறியாததும்

என்று கொள்ளலாம். இது இந்த மாகாண சபை ஆட்சியமைப்பிலும் இடம்பெறாவிட்டால் நல்லது. சம்பந்தன் தனது பலம், பலவீனங்கள் பற்றி முன்னைய தலைமைகளிலும் பார்க்க ஓரளவுக்கு யதார்த்தமாக சிந்திப்பதாகவே இது வரை காணப்படுகிறது. இன்னும் சில மணித்துளிகளில் தெரிந்துவிடும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எது எவ்வாறானாலும் இப்போதைக்கு பிள்ளையானை வீட்டிற்கு அனுப்பினால் போதும் அதனூடாக மகிந்தரின் அல்லக்கைகளுக்கு நிரந்தர ஓய்வுகொடுக்கவேண்டும்.

இலங்கை தமிழர்களின் பின்னடைவுக்கு முக்கியமான காரணங்களில் இரண்டு:

  1. தமது பலம் பற்றிய அளவுக்கு அதிகமான நம்பிக்கையும்
  2. தமது பலவீனங்கள் பற்றி போதியளவில் அறியாததும்

என்று கொள்ளலாம். இது இந்த மாகாண சபை ஆட்சியமைப்பிலும் இடம்பெறாவிட்டால் நல்லது. சம்பந்தன் தனது பலம், பலவீனங்கள் பற்றி முன்னைய தலைமைகளிலும் பார்க்க ஓரளவுக்கு யதார்த்தமாக சிந்திப்பதாகவே இது வரை காணப்படுகிறது. இன்னும் சில மணித்துளிகளில் தெரிந்துவிடும்.

[size=4]கடைசி மூன்று வருட கால அரசியல், முஸ்லீம் மக்களுக்கு சிங்களம் என்ன செய்யும் என்பதை கூறி நிற்கிறது. எனவே மேலே நீங்கள் கூறிய காரணங்கள் அவர்களுக்கும், தமிழர் தரப்பிற்கும், ஏன் சிங்களத்திற்கும் கூட பொருந்தும். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தரின் சுயசோதனைக்களமாகவும் தமிழரின் அரசியல் பொருளாதாரப் பண்பாட்டு இருத்தலின் சோதனைக் களமாகவும் நகர்ந்த அதிகாரமெதுவுமற்ற அடையாள மாகாணசபைத் தேர்தல் முடிவுக்கு வந்துள்ளது. தமிழர் தரப்பும் கணிசமான வாக்கை(குகளை) ப்பெற்றிருக்கிறது.

அதிகவாக்குகளைப் பெற்ற அனைத்துக் கட்சிகளும் தனித்து ஆட்சியமைக்க முடியாத ஒரு சூழலில் நின்கின்றன. சிறுபான்மையினரான தமிழரும் இஸலாமியரும் ஒரு அணியில் இணைந்து புரிந்துணர்வோடு ஆட்சியமைப்பதே தமிழ்மொழி பேசுவோரின் வாழ்வுக்கு நன்மை பயக்கும். ஏலவே த.தே.கூட்டமைப்பு இதற்கான விருப்பைத் தேர்தல்ப் பரப்புரையின்போது தெரிவித்திருந்தது. யதார்த்தங்களைத் தமிழரும் இஸ்லாமியரும் புரிந்துகொண்டு ஒன்றிணைவதே இன்றைய தேவையாகும்.

பலப்பரீட்சை பார்பதைவிடுத்து அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்திப்பதே பொருத்தமாகும்.

இல்லையேல் அழிவுகள் இருபகுதிக்குமேயினி....தீவிரத் தமிழின அழிப்பு முடிந்த கையோடு இஸ்லாமியரை நோக்கி அதற்கான சில நகர்வுகள் சிறிலங்கா பௌத்த சிங்கள அரசு நகர்த்தி வருகிறது.

தமிழரது அழிவிலிருந்து இனி இஸ்லாமியருக்கு வாழ்வுவராதென்பதே யதார்த்தம். எனவே பழையவற்றை ஒதுக்கிவிட்டுக் கைகோர்த்து நடப்பதே பௌத்த சிங்கள இனவாதத்தை எதிர்கொள்ளச் சிறந்த வழியாக இருக்கும்.

மிகச்சரியான பார்வை

கூட்டமைப்பு கதவைத்திறந்தே வைத்துள்ளது

வருவார்களா?

உணர்வார்களா?

10 வருடங்களுக்கும் அழிவைச்ந்திக்கப்போகும் இரு இனங்களையும் காப்பார்களா???

இல்லை

கூட்டமைப்பின் கேள்வியைக்காட்டி மகிந்தவிடம் கூடுதல்விலை பேசுவார்களா?????????

இலங்கை தமிழர்களுக்கு முஸ்லிம் மக்கள் மீதுள்ள வெறுப்பு, சந்தேகம் போன்றவற்றுக்கு யாழ் களத்திலேயே போதிய அளவு ஆதாரங்கள் இருக்கின்றன. தமிழர்களுடன் ஒற்றுமையாக வாழ்வதிலும் பார்க்க சிங்களவர்களுடன் முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழ முடிகிறது.

இனி தமிழர்கள் முஸ்லிகளின் ஆதரவை பெற்றுத்தான் தமது உரிமைகளில் சிறிய அளவையாயினும் பாதுகாக்க வேண்டும் என்ற நிலையிருந்தால், அதற்கு கொடுக்க வேண்டிய விலை அதிகம். இந்த தேர்தலை பொறுத்தளவில் ஒரு முஸ்லிம் முதலமைச்சரை முஸ்லிம் காங்கிரஸ் முழுமையான காலப்பகுதிக்கும் பதவியில் இருக்க ஏற்றுக்கொண்டு கூட்டாட்சி அமைப்பதே அதற்கு சரியான வழியாக அமையும். ஏனைய அமைச்சு பதவிகளை தமிழ்கூட்டமைப்பும் ஐ.தே.க.வும் பகிர்ந்து கொள்ளலாம். இந்த முயற்சி வெற்றி பெற்றால் இது தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கான ஒரு புதிய முயற்சிக்கான ஆரம்பமாக அது அமையலாம். இதற்கு மேலும் பலம் சேர்க்க இவ்வாறான கூட்டாட்சியின் முதல் நடவடிக்கையாக முஸ்லிம் மக்களின் கலாச்சாரம், சமய வழக்கங்கள், பண்பாடு போன்றவற்றை அவமதிப்பவர்களுக்கு கடுமையான தண்டனையை விதிக்கும் ஒரு சட்டமூலத்தை கொண்டுவருவதற்கு த.தே.கூ. முழுமையான ஆதரவளிக்கும் என்ற வாக்குறுதியையும் வழங்கலாம்.

நோகக் கதைக்க வேண்டுமாயின் யாழ்மீது பழி போடலாம். ஆனால் யாழ் என்ன வகையான மாதிரி (sample) என்று பதில் சொல்ல முடியாது (வடக்கு- கிழக்கை பிரதிபலிக்கிறதா? இல்லை கிழக்கை பிரதி பலிக்கிறதா? மட்டக்களப்பை மட்டுமாவது பிரதி பலிக்கிறதா? வடமாகணத்தை அல்லது யாழ்ப்பாணத்தை பிரதி பலிக்கிறது என்று பதில் வந்தால் அது இந்த தேர்தலையும், மேற்காட்டிய கருத்தையும் இணைக்க முடியாது) எனவே யாழின் அபிப்பிராயம் எப்படி தேர்தலின் பின்னலான இணக்க அரசியலில் தாக்கத்தை காட்டுகிறதென்று கூற முடியும்?

நமக்கு ஒரு நோக்கம் இருந்தால் இப்படி ஒரு இணக்க அரசியல் எப்படியான தமிழருக்காகான தீர்வை தரும் என்பதை பற்றி அலச முயல வேண்டும். கூட்டமைப்பு எந்த ஒரு இடத்திலும் மாகாண சபையில் போட்டி போடுவது மகாண சபையை தீர்வாக ஏற்று விட்டதாகவோ அல்லது அது தீர்வின் ஆரம்பப் படியாகவோ வருணிக்க இல்லை. மூஸ்லீம் மத தீவிரவாதங்களை ஜனநாயக அரசொன்று சட்டமாக்க கூட்டமைப்பு தனது பெரும்பான்மையை மு.கா வின் சிறு பான்மைக்கு தாரை வார்ப்பது ஒரு அரசியல் ஆலோசனையாயின் அது நகைப்புக்கிடமானது. இப்படி ஒரு கூட்டாட்சியை தீர்வுக்கு அனுசரனை வழங்க வரும் நாடுகள் எந்த கண்ணுடன் நோக்கும்? கூட்டமைப்பு இதன் பின்னர் வரவிருக்கும் தேர்தல்களில் நிற்கவும் வேண்டும். மேலும் இத்தகை இணக்க அரசியலும் பார்க்க ஏன் கூட்டமைப்பு அரசுடன் இணக்க அரசியலுக்கு போக மறுக்கிறதென்பதை கேட்டால் பதில் சொல்ல இயலாது.

கிழக்கில் முஸ்லீம்கள் பெரும்பான்மையானவர்கள். சிங்களவர் சிறுபான்மையானவர்கள். தமிழர் இரண்டாம் தரம். தேர்தலின் வாக்களிப்பு அடாவடிகளை கவனத்தில் எடுக்காவிட்டாலும் கூட்டமைப்பு தனது இடத்தை தக்க வைத்திருக்கிறது. சிங்கள அரசு மு.கா வை விட இரண்டு மடங்கு வெற்றி ஈட்டியிருக்கிறது. மு.கா இரண்டாம் இடத்தை கூட பிடிக்கவில்லை. பெரும்பான்மையினரான முஸ்லீம் மக்களே வெறுத்து ஒதுக்கும் இந்த கட்சியை ஆட்சிபீடமேற்றி அது தனது மக்களுகே தான் எதிராக சட்டமியற்ற வேண்டும் என்று எழுதுவது வெள்ளையரின் தென் ஆபிரிக்காவில் கூடக்காணப்படாதது.

யார் ஆட்சியை அமைத்தாலும் அரசு பள்ளிவாசல்களையும் கோவில்களையும் இடிப்பதை தடுக்க முடியாது. இராணுவத்தை அகலவைக்க யராலும் முடியாது. கூட்டாட்சியை காக்கீம் கூட்டமைப்புடன் வைத்துக்கொள்ள விரும்பினால் தேர்தலில் கூட்டமைப்புடன் இணங்கியிருந்து அரசை ஒத்துக்கியிருந்திருக்கலாம். பேச்சுவார்த்தைகளை தேர்தலின் பின்னர்தான் பேசியிருந்திருப்பார்.

இன்று ஆட்சியை தீர்மானிக்கும் நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் இருக்கிறது.
இது சரியல்ல. அரசு மட்டும்தான் ஆட்சியை தீர்மானிக்கலாம். மு.கா யாரை ஆதரிக்கலாம் என்ற முடிவை அரசுதான் எடுக்கலாம். மு.கா.விடம் அந்தப் பலம் இல்லை. யார் ஆட்சியை ப்டித்தாலும் அரசை அசைக்க முடியாது. தேர்தல் ஒரு ரிபறாண்டம். உணமையில் மு.கா தனக்கு கூட்டமைப்பிடம் தனி மாகாணம் கேட்டது(ராஜபக்ஷாவின் பேச்சுப்படியும் கூட-அம்பாறையில் மு.கா தனி மாகணம் கேட்கும் கட்சி என்று தேர்தல் பிரசாரங்களில் குறிப்பிட்டிருந்தார்)). கூட்டமைப்பு அரசியம் தனி மானிலம்(வடக்கு கிழக்கு) கேட்டது. என்வே தனி மானிலங்கள் கேட்கும் கட்சிகள் இந்த தேர்தலில் அரசை வென்றுவிட்டன.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.google.com/hostednews/ap/article/ALeqM5g1JNZL3x82X21HmCf-kw1xPQVWPw?docId=9d3bbf96fd8f496ca11d62e21b9d6ebd

By KRISHAN FRANCIS, Associated Press – 11 hours ago

BATTICALOA, Sri Lanka (AP) — Sri Lanka's ruling party has defeated the country's main ethnic Tamil party in a provincial election seen as a test of whether Tamils still want self-rule or are satisfied with government-led development programs in a region devastated by decades of civil war.

President Mahinda Rajapaksa's United People's Freedom Alliance won 14 seats in the Eastern Provincial Council, while the Tamil National Alliance secured 11, the Department of Elections said Sunday.

Though it did not win enough seats in Saturday's election to form a single-party government, the UPFA may get the support of the Sri Lanka Muslim Congress, a centrist alliance partner that won seven seats, to muster a majority in the 37-member council.

The defeat will be seen as a setback for the TNA, which was hoping that a victory would be seen as a mandate for more power-sharing in Tamil-majority areas. The TNA has sought a form of federalism, but talks with the central government have been stalled since January. The ethnic Sinhalese-controlled government, meanwhile, was looking to use an election victory to show that Tamils are content with postwar development.

Voter turnout in Batticaloa, one of Eastern Province's three districts, appeared very low, especially in Tamil villages. Official statistics were not immediately available Sunday.

Varnakulasingham Kamaladhas, an analyst and social worker in Batticaloa, said a low Tamil turnout pointed to public apathy toward politics after years of violence, as well as a shift away from a nationalistic mindset.

"The voting patterns show that the Tamils have looked for a genuine people-based leadership. In its absence they have voted for the TNA," Kamaladhas said.

Suresh Premachandran, a TNA lawmaker, said his party performed below expectations because not enough Tamils voted. But he said the number of seats won by the TNA indicates that a majority of Tamils still support the party.

Tamil politicians have long claimed that Eastern Province is part of a Tamil homeland, along with Northern Province. However, unlike northern Sri Lanka, where Tamils are an overwhelming majority, the east has near-equal numbers of the country's main ethnic groups — Sinhalese, Tamils and Muslims. Tamils complain that successive governments since independence from Britain in 1948 have sponsored Sinhalese settlements with the aim of changing Eastern Province's demography and weakening the Tamils' claim to it.

Tamil Tiger rebels fought a quarter-century civil war to create an independent Tamil state in a merged north and east. The war ended in May 2009 when government forces defeated the rebels.

Since then, the government has rebuilt a number of roads and bridges in Eastern Province, connecting it better with the rest of the country. It also has started a domestic airport project and promotes tourism in the province's long stretches of beaches.

The ruling party also swept two more provinces in predominantly Sinhalese areas, winning a total of 49 out of 77 seats.

Media Minister Keheliya Rambukwella said the results were a public endorsement of the government, and the eastern outcome showed there was no justification for more power sharing.

"Media Minister Keheliya Rambukwella said the results were a public endorsement of the government, and the eastern outcome showed there was no justification for more power sharing~

இதை பார்த்தால் ரம்புக்க எழுதி எல்லா உடகங்களுக்கும் வினியோக்கிக்கிறார் போல் உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.