Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.திருநெல்வேலிப் பகுதியில் குழுக்களுக்கிடையில மோதல்; - ஒருவர் பலி - இருவர் ஆபத்தான நிலையில்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.திருநெல்வேலிப் பகுதியில் இன்று மாலை இரு குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் சினிமாப் பாணியில் இடம்பெற்ற மேற்படி வாள்வெட்டுச் சம்பவத்தில் யாழ்.திருநெல்வேலிப் பகுதியினைச் சேர்ந்தவரான 25வயதுடைய இருபிள்ளைகளின் தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் அதே இடத்தினைச் சேர்ந்த மற்றொரு குடும்பஸ்தர் தலையில் படுகாயமடைந்துள்ளதோடு யாழ்.நல்லூர்ப் பகுதியினைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் கழுத்தில் காயமடைந்துள்ளார்.

சம்பவ இடத்தில் உயிரிழந்த நபரைத்துரத்தி வந்த குழு ஒன்று அவரைக் கடுமையாக தாக்கியதுடன் தலையில் வாளால் வெட்டியும் உள்ளனர். இதன் பின்னர் கீழே விழுந்த கிடந்த அவர் தலை மேல் பாரமான கல் ஒன்றினையும் தூக்கி வீசி படுகொலை செய்துள்ளனர்.

இறந்தவரது அலறல் சத்தம்; கேட்டு அங்கு வந்த மற்றுமொரு குடும்பஸ்தரும் வாள்வெட்டுக்கு இலக்காகினார் என்று சம்பவம்தினை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேற்குறித்த வாள்வெட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட நபரைத் தேடிச்சென்ற மற்றைய குழுவினர் அவரை யாழ்.நல்லூர் கோவிலுக்கு பின் வீதியில் வைத்து வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சம்பவத்தில் உயிரிழந்தவருடைய சடலம் இச் செய்தி எழுதும் வரை அங்கிருந்து எடுத்துச் செல்லப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/82708/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்க வழமுடன்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்தே செய்த ஆக்கள் நாங்கள் உள்ளுரில இது கூட செய்யாட்டி .

பாராட்டுக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

இவையெல்லாம் உணர்த்துவது ஒன்றைத்தான். ...........................................!

போராட போனவர்களும் தமக்கிடையே சுடுபட்டு அழிந்தார்கள்.

போரில் பாதிக்கப்பட்டவர்களும் வெட்டுப்படுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

போராட போனவர்களும் தமக்கிடையே சுடுபட்டு அழிந்தார்கள்.

போரில் பாதிக்கப்பட்டவர்களும் வெட்டுப்படுகிறார்கள்.

வணக்கம் அண்ணாச்சி புதுசா ஏதாவது சொல்லுங்களேன் :)

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் அங்கே வாழ்கின்ற தமது சகோதர, சகோதரிகளுக்கு அனுப்புகின்ற பணத்தினை நிறுத்தினால் ஓரளவு குழு மோதல்கள் குறையக்கூடிய வாய்ப்பு இருக்கின்றது.

நீங்கள் புலத்தில் பனி, குளிருக்குள் உறை நிலையில் இருந்து தொழில் செய்து அனுப்புகின்ற பணத்துக்கு அங்கே உள்ளவர்களுக்கு எவ்வாறு புரியப் போகின்றது?

இன்று 15 வயதுக்கு மேற்பட்ட ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் சரி புதிய ரக மோட்டார் சைக்கிளிலேயே வலம் வருகின்றனர். இது தவறு என்று நான் கூற வரவில்லை. ஆனால், அவர்கள் அதனை உழைத்து வாங்கி பெற்றோலை அடித்து ஓடினால்தான் பணத்தின் அருமை தெரியும்.

இவ்வாறு பணம் அனுப்புவதனால் தான் போதைவஸ்து பாவனை உள்ளிட்ட குழு மோதல்கள் அங்கே இடம்பெறுகின்றன. அனைத்தையும் சிறிலங்கா அரசு மீது குற்றம் சாட்டுவதனை விட்டு அதனை ஊக்குவிக்கக்கூடிய புறக்காரணிகளை ஆராயுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தகாலத்தில இருந்து இந்த குழு மோதல் வாள் வெட்டு எல்லாம் யாழ்மண் கண்டுதான் இருக்குதுங்கோ...அதாவது புலம்பெயரமுதலே கத்திகுத்து ,வாள்வெட்டு எல்லாம் அங்க நடந்ததுதான்

இந்த வியாதி இப்போது புலம்பெயர்தேசங்களில் குறைந்துவிட்டது இப்போது தாயகத்தில் தொற்றி உள்ளது ..... இதுகள் ஒருபோதும் திருந்தாதுகள் :(

Edited by நவரத்தினம்

  • கருத்துக்கள உறவுகள்

அந்தகாலத்தில இருந்து இந்த குழு மோதல் வாள் வெட்டு எல்லாம் யாழ்மண் கண்டுதான் இருக்குதுங்கோ...அதாவது புலம்பெயரமுதலே கத்திகுத்து ,வாள்வெட்டு எல்லாம் அங்க நடந்ததுதான்

அதேபோன்றுதான் முன்னர் போதைவஸ்துப் பாவனைகளும் இருந்தன. ஆனால், அது தற்போது அதிகரித்துக் காணப்படுவதற்கு சிறிலங்காப் படைத்தரப்பினை குற்றம் சாட்டி வருகின்றோம்.

உண்மையில் இன்று அதிகரித்த வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவதற்கு புலத்தில் இருந்து அனுப்பப்படும் பணம்தான் காரணம். நான் மட்டும் குற்றம் சாட்டுகின்ற விடயம் அல்ல இது. அங்கே வாழ்ந்து வருகின்ற சமூக ஆர்வலர்களும் கல்விமான்களும் இணைந்தே குற்றம் சாட்டுகின்ற விடயம் ஆகும்.

இன்னொரு விடயத்தினையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விளைகின்றேன். வடக்கில் பாலியல் வன்புணர்வும் துன்புறுத்தலும் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. இதனை அதிகம் செய்பவர்கள் அந்தப் பெண்களுக்கு நெருங்கிய உறவினர்கள் அல்லது தூரத்து உறவினர்கள் என்றே சிறிலங்கா காவல்துறையின் வாராந்த அறிக்கைகள் கூறுகின்றன.

இதனையே சிறிலங்காப் படைத்தரப்பு செய்தால் தூக்கிப் பிடிக்கும் தமிழ் ஊடகங்களும் தமிழ் கல்விமான்களும் சமூக ஆர்வலர்களும் எமது சமூகத்தில் அதிகரித்து காணப்படும் வன்முறைச் செயற்பாடுகள் தொடர்பில் மெளனம் காத்து வருகின்றனர் அல்லது அடக்கி வாசிக்கின்றனர்.

இவர்கள், ஏன் இவ்வாறு மௌனம் காக்கின்றார்கள் எனில், தாம் ஏதாவது கருத்துக் கூறினால் தொடர்புடைய இளைஞர் குழுவால் தாக்கப்படுவோம் என்கின்ற அச்சமே காரணம். (அவ்வாறு பல சம்பவங்கள் இடம்பெற்றும் உள்ளன. தமது உயர் அந்தஸ்து பாதிக்கப்பட்டு விடும் என்று மௌனம் காத்து வருகின்றனர்)

கடந்த 3 மாதத்துக்குள் 500 வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றதாக சிறிலங்கா காவல்துறை நேற்று அறிவித்திருக்கின்றது.

இங்கே நான் மீண்டும் அழுத்திக் கூற வருவது இதுதான், புலத்தில் உள்ள தமிழர்கள் வடக்கு - கிழக்கில் உள்ள தமிழ் உறவுகளுக்கு உதவுவதாக நினைத்து அவர்களை சோம்பேறிகளாக்கி வன்முறைச் சம்பவங்களை செய்வதற்கு தூண்டி வருகின்றனர்.

முன்னர் O/L PASS செய்தால்தான் சைக்கிளே வாங்கித் தருவார்கள். ஆனால், இன்று 15 வயதுக்கும் அதிகமான இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பறந்து செல்கின்றனர் எனில் எவ்வாறு சாத்தியம்?

எத்தனை முதியவர்களையும் பெண்களையும் அச்சுறுத்தும் வகையிலும் அவர்கள் மோட்டார் சைக்கிளை செலுத்துகின்றனர் என்பதனை யாழில் உள்ள உங்கள் உறவுகளை கேளுங்கள். அவர்களின் தற்போதைய கவலை எல்லாம் இந்த மோட்டார் சைக்கிள் இளைஞர்கள் கார்பட் றோட் போட்டு முடிய எத்தனை பேரை சாகடிக்கப் போகிறார்கள் என்பதுதான்.

இளைஞர்களை மட்டும் சீரழிக்கவில்லை புலம்பெயர் பணம். பெண்களையும் சேர்த்துத்தான் சீரழிக்கின்றது என்பதனையும் இந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புகின்றேன். 75 வீதமான பெண்கள் மோட்டார் சைக்கிளிலேயே தற்போது பயணம் செய்கின்றனர். இதில் 60 வீதமான பெண்கள் சாரதி அனுமதிப் பத்திரம் இன்றி வாகனம் செலுத்துகின்றனர். சிறிலங்கா காவல்துறை மறித்து குற்றம் பதிவு செய்ய முயற்சிக்கையில் 500 தொடக்கம் 2000 ரூபா வரை லஞ்சம் கொடுக்க முனைகின்றனர். (அதற்காக இளைஞர்கள் சாரதி அனுமதிப் பத்திரத்துடன் வாகனம் செலுத்துகின்றார்கள் என்று இல்லை. அவர்களில் அதிகமானவர்களும் அனுமதிப் பத்திரம் இன்றியே வாகனம் செலுத்துகின்றனர்.

பணத்தின் அருமை இவர்களுக்கு தெரியாது. சாதாரணமாக 25 ஆயிரம் ரூபாய் உழைக்கின்ற நபரால் எவ்வாறு பெற்றோல் அடித்து வாகனம் ஓட்ட முடியும் அல்லது வாகனம் வாங்க முடியும்? கூறுங்கள் பார்க்கலாம்.

வடக்கு - கிழக்கில் உள்ளவர்களும் நன்றாக இருக்கத்தான் வேண்டும்; அதில் தவறு இல்லை. ஆனால், அவர்களுக்கு பணத்தின் அருமை தெரியத்தக்க வகையில் உதவுங்கள் அல்லது உழைத்தே நீங்கள் விரும்பும் பொருட்களை வாங்குங்கள் என்று அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்.

முன்னர் ஆரோக்கியமாக இருந்து வந்த கல்விச் சமூகம் இன்று கல்வி கற்றலில் ஆர்வம் இன்றி காணப்படுகின்றது.

முன்னர் ஆரோக்கியமாக வாழ்ந்து வந்த தமிழ்ச் சமூகம் இன்று 20 வயது தாண்டியவுடனேயே நீரிழிவு மற்றும் கொலஸ்ட்ரோல் நோய்த் தாக்கத்துக்கு உள்ளாகின்றனர்.

முன்னர் கமம் செய்து உழைத்தவர்கள் எல்லாம் புலம்பெயர் தமிழர்களின் பண வருகையினால் பரம்பரை பரம்பரையாக செய்து வந்த தொழிலை எல்லாம் விட்டுவிட்டு தொலைக்காட்சி நாடகங்கள் பார்த்து தேவையற்ற விதத்தில் அயலவர்களுடன் எல்லாம் மோதலில் ஈடுபடுகின்றனர்.

இன்றே புலத்தில் உள்ள தமிழர்களாகிய நீங்கள் விழித்துக் கொள்ளாது விட்டால் எதிர்காலத்தில் மோசமான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பிலான செய்திகளை அறிய வேண்டி வரும். "வரும் முன்னர் காப்போம்" இல்லை எனில் நாம்தான் வருந்த வேண்டும்.

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்

சுபெர்ப் சுபெர்ப்

வணக்கம் அண்ணாச்சி புதுசா ஏதாவது சொல்லுங்களேன் :)

வணக்கம் தம்பியா மே 19 பிறகும் புதிதாக சிந்திக்க முடியவில்லை இதுக்க என்னத்தை புதிதாக சொல்வது?

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்தவன் காசு கொடுத்துதான் தாயகத்தவர் குட்டிச்சுவராக வேண்டும் என்றில்லை....

பெற்றொர்களின் கவனிப்பு ஒழுங்காக இருந்தால் எல்லாம் நல்லாய் நடக்கும்...இன்று புலத்தில் தாயகத்தை விட எவ்வளவோ சந்தர்ப்பங்கள் உண்டு குட்டிச்சுவராக போவதற்க்கு இருந்தும் அநேகர் தப்பிக்கொள்கிறார்கள் அதற்க்கு காரணம் பெற்றோரின் கவனிப்புத்தான்...

தாயத்தில் உள்ள பெற்றோர் அதிக கவனம் எடுக்க வேண்டும் தங்களது பிள்ளைகள் மீது...

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்தவன் காசு கொடுத்துதான் தாயகத்தவர் குட்டிச்சுவராக வேண்டும் என்றில்லை....

பெற்றொர்களின் கவனிப்பு ஒழுங்காக இருந்தால் எல்லாம் நல்லாய் நடக்கும்...இன்று புலத்தில் தாயகத்தை விட எவ்வளவோ சந்தர்ப்பங்கள் உண்டு குட்டிச்சுவராக போவதற்க்கு இருந்தும் அநேகர் தப்பிக்கொள்கிறார்கள் அதற்க்கு காரணம் பெற்றோரின் கவனிப்புத்தான்...

தாயத்தில் உள்ள பெற்றோர் அதிக கவனம் எடுக்க வேண்டும் தங்களது பிள்ளைகள் மீது...

புலம்பெயர் நாடுகளில் உள்ள பிள்ளைகளுக்கு பணம் கொடுக்காது விட்டாலும் அவர்கள் Pocket money க்காக உழைத்து தமது பணத்திலேயே ஏதாவது ஒரு பொருளை வாங்கியோ கொடுத்தோ சீரழிகின்றனர். அத்தோடு, புலத்தில் தற்போது 75 வீதமானவர்கள் படிப்பதில் அக்கறையாக உள்ளனர் என்பதோடு பெருமளவிலானோர் ஏதோ ஒரு துறையில் படித்து முடித்துக் கொண்டு வெளியேறுகின்றனர்.

ஆனால், யாழ்ப்பாணத்தில் என்ன நடக்கின்றது? படிக்க வேண்டும் என்கின்ற சிந்தனையே இல்லையே. கொக்குவில் இந்துக் கல்லூரியில் கல்வி கற்க வருகின்ற மாணவன் கூட மோட்டார் சைக்கிளில் செல்கின்ற நிலமையே காணப்படுகின்றது. இவ்வாறு எத்தனை பாடசாலைகளில் நடைபெறுகின்றது என்பது எனக்குத் தெரியாது.

"ஏன் தம்பி மோட்டார் சைக்கிளில் வாறாய்; மற்றப் பிள்ளைகளுக்கு இதில் தாழ்வு-மனப்பான்மை வந்துவிடுமே" என்று ஆசிரியர் கேட்டதற்கு, "என்னுடைய அண்ணை ஜேர்மனியில் இருந்து பணம் அனுப்பினார் வாங்கினேன்" என்று அவன் கூற "அப்படியெனில் பெற்றோலுக்கு என்ன செய்கிறாய்" என்று அதே ஆசிரியர் கேட்க, "அதற்கும் அவரே அனுப்புகின்றார்" என்றான் அவன். ஆனால், அவன் படிப்பதில் கள்ளம். பாடசாலை முடிந்தவுடன் ஊர் சுற்றிய பின்னரே காலம் தாழ்த்தி வீடு செல்கின்றான். சிலவேளைகளில் கடைகளிலேயே சாப்பாடு. இதுதான் இன்றைய நிலை.

முன்னர் சாப்பாட்டுக் கடைகளில் சாப்பிடுவது என்றால் கௌரவக் குறைச்சல் பார்த்த யாழ். சமூகம், இன்றைய இளைஞர்கள் கடைகளில் வாங்கிச் சாப்பிடுவதால் சாப்பாட்டுக் கடைகளின் வியாபாரம் குறைச்சல் இல்லாமல் போகின்றது என்பதனையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

நண்பர் புத்தன் குறிப்பிட்ட விடயத்துக்கு நேரிடையாக பதில் தருவது எனில், யாழில் தாய், தந்தையர் கட்டுப்பாட்டுடன் வளர்த்தாலும் தற்போதைய இளம் சமூகம் தாய், தந்தையருக்குத் தெரியாமல் மின்னஞ்சல் ஊடாகவும் தமது மொபைல் ஊடாகவும் புலத்தில் உள்ள தமது உறவுகளுக்கு தொந்தரவு செய்து பணத்தினைப் பெற்று வருகின்றனர்.

வேடிக்கை என்னவெனில், பெற்றோருக்கே தமது பிள்ளைகளுக்கு எவ்வாறு பணம் கிடைக்கின்றது என்பதனை அறிந்து கொள்ள முடியாது உள்ளது என்பதே.

இன்னொரு விடயத்தினையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். தமது பண செலவழிப்புக்கு- புலத்தில் உள்ளவர்களும் யாழில் உள்ளவர்களும் நியாயப்படுத்த முனைகின்ற விடயம், சாதி குறைந்தவனின் பிள்ளைகள் தமது உறவுகளிடம் பணம் பெற்று செலவழிக்கும் போது நாம் மட்டும் எப்படி குறைந்தவர்கள் என்கின்ற வாதத்தினையும் வைக்கின்றனர்.

ஆகவே, புலத்தில் உள்ளவர்கள் குதர்க்க நியாயம் பேசாது வடக்கு கிழக்கில் உள்ள இளைய சமூகத்தினை நல்வழிப்படுத்த முனைய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகவே, புலத்தில் உள்ளவர்கள் குதர்க்க நியாயம் பேசாது வடக்கு கிழக்கில் உள்ள இளைய சமூகத்தினை நல்வழிப்படுத்த முனைய வேண்டும்.

எப்படி நல்வழிப்படுத்தலாம்?பணம் அனுப்பாமல் விடுவதன்மூலமா?எவ்வளவோ பிரச்சனைக்கும் மத்தியிலும் படிச்சு டாக்டர், இன்ஞினியராக வந்த யாழ்ப்பாணத்தவனும் இருக்கிறான் ..வீகிதாசாரத்தின்படி பார்த்தால் அதிகம் என்றே சொல்லலாம்....கடந்த வருட உயர்தர முடிவுகள் எப்படி?

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி நல்வழிப்படுத்தலாம்?பணம் அனுப்பாமல் விடுவதன்மூலமா?எவ்வளவோ பிரச்சனைக்கும் மத்தியிலும் படிச்சு டாக்டர், இன்ஞினியராக வந்த யாழ்ப்பாணத்தவனும் இருக்கிறான் ..வீகிதாசாரத்தின்படி பார்த்தால் அதிகம் என்றே சொல்லலாம்....கடந்த வருட உயர்தர முடிவுகள் எப்படி?

தேவை என்ன என்பதனை அறிந்து பணத்தினை கொடுங்கள். அது தவறு இல்லை. அவர்களின் ஊதாரித்தனத்துக்கு நீங்கள் ஏன் துணை போக வேண்டும்?.

உதாரணத்துக்கு மோட்டார் சைக்கிள் வாங்கித் தா என்றால் நீங்கள் உழைத்து வாங்குங்கள் என்று புத்திமதி கூற வேண்டும். அதனை விடுத்து பணத்தினை அனுப்பி- அவர்களும் உழைப்பின் அருமை தெரியாது செலவழிக்க நீங்கள் ஏன் துணை போக வேண்டும்?

பெற்றோலுக்கான பணத்தினை அவர்கள் எவ்வாறு பெற்றுக் கொள்வார்கள்?

உயர்தரப் பரீட்சை முடிவுகள் தொடர்பில் குறிப்பிட்டிருந்தீர்கள். முன்னர் எல்லாம் மருத்துவராகவோ, பொறியியலாளரோ, கணக்காளராகவோ வரவேண்டும் என்றுதான் பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு ஓர்மத்தினை ஊட்டி வளர்ப்பார்கள். பிள்ளைகளும் அவ்வாறே பெருமளவில் தெரிவாகி விடுவார்கள். அது ஒரு காலம்.

ஆனால், இன்று ஒரு சில மாணவர்களைத் தவிர மிகுதி அனைவரும் பாடங்களில் தகுந்த சித்தி அடையாது விட்டு விடுகின்றனர். (இந்தத் தரவுகள் யாவும் யாழ். கல்விச் சமூகத்தின் தரவுகளை வைத்தே நான் பதிவு செய்கின்றேன்.)

நான் அறிந்த வரை யாழ்ப்பாணத்தில் இன்றைய ஆகக்கூடிய படிப்புத் தரம் பட்டதாரி ஆசிரியர்கள்தான். அவர்களுக்குத்தான் சீதனத் தொகையும் அதிகமாக பேசப்படுகின்றது.

Edited by nirmalan

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் படிச்சால்தான் பணம் சம்பாதிக்கலாம் என்ற ஒரு நிலை இருந்தது...ஆனால் இப்ப பணம் வெளிநாட்டுக்கு போனால் சம்பாதிக்கலாம் என்ற நிலை.....

  • கருத்துக்கள உறவுகள்

1983 க்கும் 2009 க்கும் இடைப்பட்ட காலத்தில் இப்படியான குத்து வெட்டுக்கள் இல்லாமல் இருந்தன.

அல்லது மிகவும் குறைத்தளவில் இருந்தன. தற்போது இப்படியான குத்து வெட்டுக்களை அரசபடைகளும்

ஒட்டுக்குழுக்களும் ஊக்குவிக்கின்றன

  • கருத்துக்கள உறவுகள்

இயக்கங்கள் தோன்ற முன்பும் இப்படியான குழுமோதல்கள் தெருசண்டியர்கள் இருந்தார்கள் இயக்கம் வந்துதான் இதெல்லாத்தையும் அடக்கினது அதிலும் முக்கியபங்கு வகித்தது புலிகள்தான் இங்கு லண்டனிலும் புலிகளை தடை செய்ய முன்பு குழுக்களுக்கு இடையிலான மோதல்கள் இருந்ததாக நான் அறிந்திருக்கவில்லை

தற்போது இந்தாமாதிரியான குழுக்களிற்கு உரம் இடுவதுபோல் சிங்கள அரசும் அதன் கூலிகளும் ஊக்குவித்து வருகின்றார்கள் இதை உணராத இளைஞர்கள் தங்களுக்குள் மோதி மடிகின்றனர் மொத்தத்தில் பாதிக்கப்படுவது அவர்களின் பெற்றோர்கள்தான் இதை இல்லாது ஒழிக்க மீண்டும் புலிகளின் வருகை மிகவும் முக்கியமானதாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.