Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக தமிழர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்! -உன்னி கிருஷ்ணன்-

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

unnikrishnan.jpg

உலக தமிழர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன்! பாடகர் உன்னி கிருஷ்ணன் பேட்டி!

சமீபத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் பின்னணி பாடகர் உன்னி கிருஷ்ணன் கலந்து கொண்டார். இந்த விழாவில் டக்ளஸ் தேவானந்தா, உன்னி கிருஷ்ணனை வாழ்த்தி சால்வை அணிவித்தார்.

இந்த சம்பவம் தமிழ் உணர்வாளர்கள் மத்தியிலும், உலகத் தமிழர்கள் மத்தியிலும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, இது ஒரு எதிர்பாராத சம்பவம் என்றும், இந்த சம்பவத்திற்காக உலகத் தமிழ் மக்களிடம் தான் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக உன்னி கிருஷ்ணன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று (11.09.2012) சென்னையில் நக்கீரன் இணையதளத்திடம் பேசும்போது,

யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசாமி கோவில் திருவிழாவையொட்டி இசைக்கச்சேரி செய்யுமாறு என்னை அணுகினார்கள். ஈழத்தமிழர்களின் மனங்களில் விடுதலைப் பாடல்களின் மூலம் நீங்காத இடம் பிடித்த நான், யாழ்ப்பாணம் சென்று அவர்களை சந்திக்கவும், இசை கச்சேரி நடத்தவும் ஒப்புக்கொண்டேன்.

இசைக்கச்சேரி நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில் திடீரென தமிழ் மக்கள் பலரின் படுகொலைக்கு காரணமான ஒட்டுக்குழுவின் பொறுப்பாளரான டக்ளஸ் தேவானந்தா திடீரென தன் ஒட்டுக்குழுவைச் சேர்ந்த சிலருடன் மேடையில் ஏறி, எனக்கு சங்கடத்தை ஏற்படுத்திவிட்டார். பின்புதான் அவரைப் பற்றி நான் அறிந்து கொண்டேன். ஒட்டுமொத்த தமிழர்களாலும் வெறுக்கப்படுபவரும், இந்தியாவில் கொலை குற்றம் சாட்டப்பட்டவருமான ஒட்டுக்குழுவின் பொறுப்பாளர்தான் டக்ளஸ் தேவானந்தா என்பதை நான் பின்னர் தெரிந்துகொண்டேன். இந்த நிகழ்வு தற்செயலாக நடைபெற்ற வேண்டதகாத சம்பவமாகும். இந்த சம்பவத்தை பற்றி மிகுந்த மனம் வருத்தமடைகிறேன். என்றும் உங்கள் நம்பிக்கைக்கு உரியவனாவேன். என் இசை பயணத்தில் அச்சம்பவம் கரும்புள்ளியாக விழுந்துவிட்டதை உணருகிறேன். இனி வரும் காலங்களில் இப்படியொரு சம்பவம் நடைபெறாது என உறுதிகூறுகிறேன். இந்நிகழ்வு தமிழர்களை காயப்படுத்தியிருக்கும். அதற்காக மீண்டும் எனது மனவருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

நன்றி நக்கீரன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மன்னிப்புக் கேட்டால் உடனே எங்கட மக்கள் மறந்து மன்னித்து விடுவார்கள்...இப்படித் தான் காலம் காலமாய் எல்லோரும் தமிழரை ஏமாத்துகிறார்கள்

[size=4] பின்புதான் அவரைப் பற்றி நான் அறிந்து கொண்டேன். ஒட்டுமொத்த தமிழர்களாலும் வெறுக்கப்படுபவரும், இந்தியாவில் கொலை குற்றம் சாட்டப்பட்டவருமான ஒட்டுக்குழுவின் பொறுப்பாளர்தான் டக்ளஸ் தேவானந்தா என்பதை நான் பின்னர் தெரிந்துகொண்டேன்.
[/size]

[size=4]இல்லை மன்னிக்க முடியாது. [/size]

அவர் இதற்கு மன்னிப்பே கேட்கத் தேவையில்லை. இசை நிகழ்ச்சியில் திடிரென்று ஒரு அமைச்சர் வந்து பொன்னாடை போர்த்தியதற்கு அவர் என்ன செய்ய முடியும்?

ஒன்று அவர் ஈழத்திற்கு போகாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் நாங்கள் எல்லோரும் ஈழப் பயணம் மேற்கொண்டு விட்டு, அவரை போக வேண்டாம் என்று சொல்ல முடியாது. தமிழ்நாட்டிற்கும் ஈழத்திற்குமான கலை, பண்பாட்டுப் பரிமாற்றப் பயணங்கள் நல்லவையே.

  • கருத்துக்கள உறவுகள்

அவரை மன்னிக்காது விலத்துவதன் மூலம் எதையாவது சாதிக்க முடியுமென்றால் நானும் மன்னிக்க மாட்டேன்.

ஆனால் இன்றையநிலையில் அவரது இந்த வருத்தத்தை ஏற்று அவரது மனதில் இடம் பிடிப்பதனூடாக வேறு சிலரின் மனதிலும் இடம் பிடிக்கமுடியும்.

விடுதலைப்புலிகள் விட்டுக்கொடுத்து போயிருக்கலாம் என்பதைவிட மிக மிக சிறிய வாசகம இது.

  • கருத்துக்கள உறவுகள்

அவரை மன்னிக்காது விலத்துவதன் மூலம் எதையாவது சாதிக்க முடியுமென்றால் நானும் மன்னிக்க மாட்டேன்.

ஆனால் இன்றையநிலையில் அவரது இந்த வருத்தத்தை ஏற்று அவரது மனதில் இடம் பிடிப்பதனூடாக வேறு சிலரின் மனதிலும் இடம் பிடிக்கமுடியும்.

விடுதலைப்புலிகள் விட்டுக்கொடுத்து போயிருக்கலாம் என்பதைவிட மிக மிக சிறிய வாசகம இது.

இப்படித்தான் அண்ணா எல்லோரும் செய்து போட்டு மன்னியுங்கோ என கேட்பார்கள் எல்லோரையும் மன்னித்து கொண்டே இருங்கோ...எல்லோருக்கும் தெரியும் தமிழர்கள் இளிச்சவாயர்கள் என்று

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் அண்ணா எல்லோரும் செய்து போட்டு மன்னியுங்கோ என கேட்பார்கள் எல்லோரையும் மன்னித்து கொண்டே இருங்கோ...எல்லோருக்கும் தெரியும் தமிழர்கள் இளிச்சவாயர்கள் என்று

வலிக்குது தான்.

ஆனால் தமிழரின் இன்றைய விதி இது தான்.

என்னைப்பார்த்தால் இன்றைய தமிழனை நீங்கள் புரிந்து கொள்ளலாம். :(

(உன்னி கிருஷ்ணன்

எமக்கு மிக மிக ஆபத்தான நேரங்களில் எம்முடன் நின்றவர். எம்மை புரிந்தவர். எமது பல கலைஞர்களுக்கு ஆசானாக தன்நலம் பாராது உதவியர் உதவி வருபவர்)

அவர் இதற்கு மன்னிப்பே கேட்கத் தேவையில்லை. இசை நிகழ்ச்சியில் திடிரென்று ஒரு அமைச்சர் வந்து பொன்னாடை போர்த்தியதற்கு அவர் என்ன செய்ய முடியும்?

ஒன்று அவர் ஈழத்திற்கு போகாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் நாங்கள் எல்லோரும் ஈழப் பயணம் மேற்கொண்டு விட்டு, அவரை போக வேண்டாம் என்று சொல்ல முடியாது. தமிழ்நாட்டிற்கும் ஈழத்திற்குமான கலை, பண்பாட்டுப் பரிமாற்றப் பயணங்கள் நல்லவையே.

[size=4]பொன்னாடையை மேடையில் வைத்தே கழட்டி அரங்கத்தை விட்டு வெளியே போயிருக்கவேண்டும் [/size]

  • கருத்துக்கள உறவுகள்

உண்னியும் அரசியல் செய்ய வெளிக்கிட்டார்

[size=4]சில மாதங்களுக்கு முன்னர் இலங்கை வர இருந்த ஒரு ஆங்கில இசைக்குழு கூட 'இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த இனவழிப்புக்களை' தெரிந்து கொண்டு தனது பயணத்தை நிற்பாட்டி இருந்தது. [/size]

[size=1]

[size=4]உன்னி பல தமிழக நிகழ்வுகளில் கலந்து கொண்டு அதிலும் பல ஈழத்தமிழர்கள் பங்குபற்றிய நிகழ்வுகளில் நடுவராகவும் இருந்துள்ளார். யாழில் வேறு இந்திய துணைத்தூவராலயம் உள்ளது. எனவே, எல்லாம் தெரிந்து சென்றுவிட்டு (அங்கு டக்கியிடம் வேறு பல இலட்சம் பணம் பெற்றிருப்பார்) பிழைப்பில் மண் விழுந்துவிடும் என்று மன்னிப்பு கேட்கிறார். [/size][/size]

[size=1]

[size=4]மன்னிக்க முடியாது, மன்னிக்க கூடாது. [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது விடையம், தன்னால் பாடப்பட்ட தேசத்தின் விடுதலைக்கான பாடல்கள் எந்தமக்களைச் சென்றடைந்தது என அறியும் ஆவல் எந்தவொரு களைஞனுக்கும் இருக்கும், மாறாக நான் உட்பட இலங்கைக்குச் சென்று ஊர் சுத்திப்பார்த்துவிட்டு, இன்னொருவரை போகாதை எனக் கூறுவது அழகல்ல. மேலும் யாழ்ப்பாணம் உட்பட வடக்குக் கிழக்கு அனைத்தும் எமது தாயகபூமி அங்கு வாழ்கின்ற, தற்போதைய சூழலுக்கு வாழப்பழகிய எங்களுக்கே எம்மைச் சுத்தி என்ன நடக்கின்றது எனத்தெரியாதுள்ளது. அப்படியிருக்கையில் ஒருவார இசைநிகழ்ச்சிக்காக எமதூர் வந்த ஒரு சொந்தம், போனது குற்றம், போய்ச் சங்கடப்பட்டு வருத்தம் தெரிவிப்பது குற்றம் எனக்கூறினால் எமக்கும் தின்னவேலிச் சிவன்கோவிலடியில வாழ்வெட்டு நடாத்திய குரங்குப்படைக்கும் என்ன வித்தியாசம். சாதாரண காலங்களிலே செத்தவீடு கலியானவீடுகளுக்கை சம்பந்தமே இல்லாதவர்கள் வந்து அழிச்சாட்டியம் பண்ணுவதுபோல் டங்கண்ணரும் செய்துபோட்டர் அதுக்காக மைக்கை எரிந்துபோட்டு மேடைய விட்டு இறங்க டங்கின்ர அடிப்பொடிகள் போட்டுத் தள்ளிப்போட்டு புலிகள் புதைத்துவைத்த மிதிவெடியில கலைவைத்திட்டார் எனச் சொன்னால் நாங்கள் நம்புவமெல்லொ.

அகூதா, உண்மையிலேயே அப்படி செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா?

அவரை ஒரு கலைஞர் என்ற வகையில் மட்டுமே நாம் பார்க்க முடியும். அவர் ஒரு போராளி அல்ல. இன்றைக்கு போராளி எனப்படுபவர்களே அரசுடன் கூடிக் குலவுகின்ற காலம். உன்னி கிருஸ்ணன் சம்பவம் சாதரணமாக போயிருக்க வேண்டிய ஒன்று. நாம்தான் இதை பெரிது படுத்தி விட்டோம்.

எமக்கு எதிரிகளை அதிகரிப்பதற்கு மட்டுமே தெரிந்திருக்கிறது.

அவர் ஒரு கலைஞர். எமது மக்களுக்கு முன் பாடச் சென்றார். கலைஞர்களுக்கு கற்றுக் கொடுத்தார். ஒரு மேடையில் அவர் பாடுகின்ற பொழுது அந்தப் பகுதியை சேர்ந்த அமைச்சர் ஒருவர் திடிரென்று வந்து பொன்னாடை போர்த்தினார். அவ்வளவுதான். விடயம் முடிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

நக்கீரன்.கொம்

:D :D எனக்கு எல்லா மொழிகளிலும் பிடிக்காத சொல் மன்னிப்பு................

post-7765-0-59508600-1347357242.jpg

[size=4]இந்தியாவில் தேடப்படும் டக்கியை சந்தித்த சுஸ்மா மீது மனித உரிமை ஆர்வலர்கள் வழக்கு போட்டதை போன்று இவர் மீதும் வழக்கு போடப்படல் வேண்டும். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

மேலும் கலைஞர்கள் தாங்கள் சார்ந்த கலைமேல் உயிரையே வைத்திருப்பர். அவரது செய்தியில் ஒரு விடையத்தை கவனியுங்கள் "தனது இசைத்துறை வாழ்க்கையில் பெரியதொரு கரும்புள்ளி விழுந்து விட்டது" எனக் கூறியுள்ளார் ஒரு உண்மைகலைஞன் இயல்பாகவே மனம் வருந்தாது இவ்வசனத்தை நடிப்பிற்காகவோ சாக்குப்போக்குச் சொல்லவதற்காகவோ உயிர்போனாலும் சொல்லமாட்டான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு மன்னிப்புக் கேட்டால் உடனே எங்கட மக்கள் மறந்து மன்னித்து விடுவார்கள்...இப்படித் தான் காலம் காலமாய் எல்லோரும் தமிழரை ஏமாத்துகிறார்கள்

ரதி அக்கா அவர் தெரிஞ்சு தான் போயிருந்தாலும் மன்னிப்புக்கேட்க வேண்டிய அவசியம் இல்லை,

சபேசன் அண்ணா சொன்னது போல இவ்வளவு அவலத்தின் பின்னரும் சொந்த ஊருக்கு போய் ஸோ காட்டி வரும் எங்கள் சனத்தையே திருத்த முடியவில்லை அப்படி இருக்க அடுத்தவரை பழிக்கும் அருகதை எமக்கு இல்லை. அப்படி இருந்தும் மன்னிப்புக்கேட்ட உன்னிக்கிருஷ்ணன் எவ்வளவோ மேல். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இது நடிப்புபோல் தெரியவில்லை.. தமிழகத்திலேயே இப்போதுதான் கொஞ்சம் விழிப்புணர்வு வந்துகொண்டிருக்கிறது.. இவர் மலையாளி..

[size=4]சாதாரண தமிழர் தாயகம் போய்வருவதையும் ஒரு பிரபல பாடகர், முன்னரும் பல பாடகர்கள் / நடிகர்கள் அழைக்கப்பட்டு போகாமல் விட்ட வரலாறு உள்ள காலத்தில், ஒரு கலைழனாக சிங்கள இனவழிப்பை மறைக்க இவரின் பயணம் உதவியது. [/size]

[size=1]

[size=4]ஒரு இராஜீவ் கொலை செய்யப்பட்ட பொழுது அந்த துயரமான சம்பவத்தை மறக்கவும் மன்னிக்கவும் கேட்டது தமிழர் தரப்பு. ஆனால், குரூரமாக கொன்றது தமிழனத்தை சிங்களம், அதற்கு உடந்தையானது இந்தியம். [/size][/size]

[size=1]

[size=4]எதை மறப்பது? அதை மன்னிப்பது?? [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தில் உன்னி கிருஷ்ணன் யாழ்ப்பாணத்தில் இந்திய உயர்ஸ்தானிகமும்.. டக்கிளசும் கூட்டுச் சேர்ந்து செயற்படுவதை பூடகமாக வெளிக்காட்டியுள்ளார். இது விடயத்தில் உன்னி கிருஷ்ணன் ஓரளவுக்கு உண்மைகளை வெளிப்படையாகப் பேசி இருப்பது வரவேற்கத்தக்கது... ஆனால்.. போர்க்குற்ற இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ள.. திரை உலகத் தடையை மீறி.. இவர் மேற்கொண்ட பயணம் சரியா என்பது கேள்விக்குரியதாகவே உள்ளது.

இவர் மட்டுமல்ல.. நடிகை அசின் யாழ்ப்பாணம் போய் வந்துள்ளார்.. திண்டுக்கல் லியோனி போய் வந்துள்ளார்.. இப்படிப் பலர் போய் வந்துள்ளனர். இவர்களில் எவரும் மன்னிப்புக் கோரவில்லை. ஆனால் உன்னிகிருஷ்ணன் கோரி இருப்பதோடு யாழ்ப்பாண இசை நிகழ்ச்சிகளின் பின்னால் உள்ளவர்கள் பற்றிய உண்மைகளையும் அதன் அரசியல் சாயங்களையும் வெளிப்படுத்தி உள்ளமை வரவேற்கத்தக்கது.

இந்தியாவில் தேடப்படும் ஒரு கொலைக்குற்றவாளிக்கு இந்திய தூதரகமே உபயம் அளித்து அதன் நிகழ்ச்சிகளுக்கு அழைப்பதும்.. தமிழின அழிப்பில்.. இவர்களை பயன்படுத்தியதில் இந்தியாவின் பங்களிப்பு வெளிப்படையாகியுள்ளது. தமிழக சொந்தங்கள்.. இந்திய ஆளும் வர்க்கங்களின் இந்தத் துரோகத்தனங்களுக்கு சரியான பாடத்தை படிப்பிக்க வேண்டும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சரி சரி உன்னி இம்புட்டு கெஞ்சும் போது மன்னிச்சு விடுவம்....பாவம் பயபுள்ள புளிச்சு I mean புலைச்சு போகட்டும் விட்டா அழுதிடுவாங்க போல முகத்த பாருங்க

நெடுக்காலபோவான் சொல்வது போன்று வழக்குப் போடுவது என்றால் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் மீதே போட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் போர்த்திய பொன்னாடை - மன்னிப்பு கேட்டார் பாடகர் உன்னி கிருஷ்ணன்.

11-unni-krishnana-12-300.jpg

பாடகர் உன்னிகிருஷ்ணன் இன்று பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து கூறியதாவது:

"நான் சுமார் 20, 25 ஆண்டுகளாக இசைத்துறையில் இருக்கிறேன். நன் பல்வேறு ஊர்களுக்கும் பல்வேறு நாடுகளுக்கும் சென்று இசை கச்சேரிகள் செய்து வருகிறேன். மேடையிலும் பாடி வருகிறேன்.

இப்படி சென்ற நாடுகளில் நான் முதலில் ஆஸ்திரேலியா செல்கிற வாய்ப்பையும் லண்டன் செல்கிற வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் யாழ்பாணத் தமிழர்கள். அதனால் அவர்கள் மீது எனக்கு தனி அன்பு உண்டு.

அப்படி ஒரு ஒரு அன்பான் அழப்பில்தான் அண்மையில் யாழ்பாணம் சென்று இருந்தேன்.அங்குள்ளவர்களின் விருப்பத்திற்கிணங்க "ஸ்வானுபவ " அமைப்பு இந்தக் கச்சேரியை ஏற்பாடு செய்திருந்தது. இதன் அமைப்பாளர் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா.

யாழ்பாணம் நல்லூர் கந்தசாமி கோயில் திருவிழாவினை முன்னிட்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அது மட்டுமல்ல அங்குள்ள ராமநாதன் இசைப் பள்ளியிலும் ஒரு சந்திப்பு அங்கு பயிலும் மாணவர்களுக்கு ஒரு விரிவுரை ஆற்றவும் திட்டம், என்று கூறியதும் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் யாழ்பாணம் சென்றேன்.

அழைப்பின்றி வந்த டக்ளஸ்

கச்சேரி அழகாகப் போனது ஆனால் அங்கு எதிர்பாரத விதமாக ஒரு சம்பவம் நடந்தது. அங்கு வந்த அமைச்சர் டக்லஸ் தேவானந்தா எனக்குப் பொன்னாடை போர்த்தினார்.

இது தமிழ் மக்களின் மனதின் வெகுவாக வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பலரும் என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார்கள். இந்த சம்பவம் நான் முற்றிலும் எதிபாராத ஒன்றாகும். அவர் கலந்து கொள்வார் என்பது எனக்குத் தெரியாது.

அழைப்பிதழில் அவர் கலந்து கொள்வார் என்றெல்லாம் போடவில்லை. திடீரென்று வந்தவர் அவர். ஆனால் இங்கு வந்த பிறகுதான் தெரிந்தது அவர் தமிழ் மக்களால் வெறுக்கப்படும் ஒருவர் என்பது.

இசைப் பயணத்தில் கரும்புள்ளி

இந்த சம்பவம் எதிர்பாராததுதான் என்றாலும் இதற்காக நன் மிகவும் வருத்தம் அடைகிறேன். என் இசைப் பயணத்தில் இதை ஒரு கரும்புள்ளியாக் கருதுகிறேன்.

எதுவும் பிரச்சனை இருக்காது என்று இந்திய காலாசார கமிஷன் உறுதியளித்தது அந்த நம்பிக்கையில்தான் அங்கு சென்றேன். இருந்தாலும் இப்படி நடந்து விட்டது.

இனி இது போல ஒன்று நிச்சயமாக நடக்காது என்று உறுதியளிக்கிறேன். எப்போதும் போல் உலகெங்கும் உள்ள தமிழ்மக்கள் உங்களில் ஒருவனாக என்னை ஏற்று ஆதரவு தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

உலகெங்கும் நான் ஈழத் தமிழர்களின் மேடைகளில் பாடும் போது -

' அம்மா உன் பிள்ளை உயிரோடு இல்லை...', ' எங்கள் தேசத்தில் இடி விழுந்தது...',

'பூக்கள் வாசம் வீசும் காற்றில்...' - போன்ற பாடல்களைப் பாடும் போது என்னை அறியாமல் கண்கள் கலங்கும்.

ஈழத் தமிழர்களின் விடுதலை சார்ந்த அவர்களின் கோபத்தையும் வலியையும் வெளிப்படுத்துகிற பல பாடல்களை பாடும்போது, கேட்கிற மக்களும் உள்ளம் மல்க ஈழத்தின் கோர வடுக்களை தங்கி நிற்பதை நான் நேரில் பல முறை பார்த்திருக்கிறேன். நெகிழ்ந்திருக்கிறேன்.

அந்த வகையில்தான் ஈழத் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களில் ஒன்றான யாழ்பாணம் சென்றேன். யாழ்பாணம் மக்களின் துயரங்களில் கலந்து கொள்ளலாம் என்று எண்ணியே யாழ்பாணம் சென்றேன்.

எதிர்பாராது நடந்த இந்த தவறுக்காக மீண்டும் தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.

http://tamil.oneindi...ogy-161259.html

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உன்னிக்கிருஷ்ணன் யாழ்சென்று பாடுவதற்கு முன் பெரிதாகவிளம்பரப்படுத்தாததால் தமிழுணா்வாளா்களின் எதிர்ப்பிற்கு அவா் முகம்கொடுக்கவில்லையென நினைக்க்றேன். சென்றார் ,பாடினார், நாயால் பொன்னாடை போர்த்தப்பட்டார். முடிந்தது முடிந்ததுதான். ஆனாலும் அவா் இப்பவருந்துகிறார் மன்னிப்புக்கோருகிறார். இன்னொரு முறை அவா் போகமாட்டாரென நம்புவோம். ஆனால் போகாதே போகாதே என தமிழுணா்வாளா்கள் தடுத்தபோதும் கொழும்புசென்றதுமட்டுமின்றி மகிந்தன்ர பொண்டாட்டியோட விளம்பரப்படமெல்லாமெடுத்தாள் திமிர்பிடித்தஅசின். அதன்பிறகும் ரோசம்கெட்டவிஜய் அவளை கொஞ்சிக்குலவுறான். நாமென்ன புடுங்கியாபோட்டம்?

விஜய் இந்தப் பிரச்சனையை கெட்டிக்காரத்தனமாக சமாளித்து விட்டார். தன் மீது வந்த எதிர்ப்பை திசை திருப்புவதற்காக சீமானுடன் படம் செய்யப் போகிறேன் என்று ஒரு செய்தியை கசிய விட்டார். அவருடன் சில சந்திப்புக்களையும் மேற்கொண்டார்.

எதிர்ப்பு வெளியில் அடங்கிவிட்டதோடு, அதை மக்கள் மறந்தும் விட்டார்கள் என்பதை உணர்ந்தவுடன் சீமானைக் களற்றி விட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.