Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கில் மு.கா.வுடன் இணைந்து ஆட்சி: அரசாங்கம் அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் மு.கா.வுடன் இணைந்து ஆட்சி: அரசாங்கம் அறிவிப்பு

By Leo Niroshan

2012-09-11 17:26:40

கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் உடன் இணைந்து ஆளும் கட்சி ஆட்சி அமைக்கும். முதலமைச்சர் யார் என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவ்வாற இறுதியில் அறிவிப்பார் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

மகாவலி கேந்திர நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன கூறுகையில்,

தனித்துப் போட்டியிட்டாலும் முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்தே கிழக்கு மாகாணத்தில் ஆட்சி அமைக்கவுள்ளது. இது குறித்த பேச்சுவார்த்தையை அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்ளுடன் மேற்கொள்ளப்பட்டு இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்று மாகாண சபைகளுக்குமான வெற்றிபெற்ற வேட்பாளர்களின் விபரங்கள் நாளை வர்த்தமானியில் வெளியாகவுள்ளது. இதன்பின்னர் முழுமையான அறிவிப்பை அரசாங்கம் வெளியிடும் என அவர் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/local.php?vid=607

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் ஐயா.. சுமந்திரன் போன்றவர்கள்.. துண்டை போட்டுக் கொண்டு.. எங்கே ஒழிஞ்சிட்டார்கள்....!

ரவ் கக்கீமின் தொந்தரவை சரியாக எதிர்கொண்டது ஒரே ஒருவர் தான். அது தேசிய தலைவர். இவர்களை வைக்க வேண்டிய இடத்தில் வைத்தால் அன்றி... தமிழ் மக்களுக்கு விடிவில்லை. இவர்களை தூக்கி தலைல வைச்சுக் கொண்டு ஆடினால் த.தே.கூ மேலும் மேலும் தமிழ் மக்களிடம் இருந்து தூர விலகிச் செல்வதே நிகழும்..!

முஸ்லீம்களுடான சகோதரத்துவம் வேறு.. முஸ்லீம் காங்கிரஸை குறிப்பாக ரவ் கக்கீம் தலைமையிலான முஸ்லீம் காங்கிரஸைக் கையாள்வது வேறு. இந்த இரண்டையும் ஒன்றாகப் பார்ப்பது கூடாது. :icon_idea:

[size=4]தமிழர்களை இன்று மீண்டும் முஸ்லீம் காங்கிரஸ் ஏமாற்றி விட்டது. இதில் ஆச்சரியம் பெரிதாக இல்லை.[/size]

[size=4]ஆனால் தமிழர்கள் ஓரளவு பலமாக இருக்கும் வரை இந்த காட்டிக்கொடுப்புக்கள் தொடரும், இது வரலாறு காட்டி நிற்கும் பாடம்.[/size]

[size=4]இதை எவ்வாறு கூட்டமைப்பு சமாளிக்கப்போகின்றது? இல்லை தமிழர் தரப்பு புதிய பாதையில் புதிய தலைமையில் பயணிக்கவேண்டுமா?[/size]

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் ஒன்றை உடனடியாகச் செய்தாக வேண்டும்.

தாயகத் தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் ஒரு பொதுக்கட்டமைப்பை த.தே.கூ அரசியல் செயற்பாட்டுக்கு அப்பால் நிறுவுவதோடு.. சாத்தியமான எல்லா தமிழ் கட்சிகளையும்.. பொது அமைப்புக்களையும்.. மக்கள் ஆர்வலர்களையும்.. கல்விமான்களையும்.. அதற்குள் உள்வாங்கி.. ஒரு பொதுவேலைத் திட்டத்தோடு இயங்கி.. தமிழ் மக்களின் உளம் அறிந்து செயற்பட முன்வர வேண்டும்..!

சம்பந்தன்.. தான் நினைச்சபடி.. தமிழீழத்தைக் கைவிட்டிட்டன்.. சிங்கக் கொடிதான் பிடிக்கும்.. என்றதும்.. கடந்த தேர்தல்களில் மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டவர்களை த.தே.கூ சார்பில் வேட்பாளர்களாக நிறுத்துவதும்.. மக்கள் துன்பங்களுக்குக் காரணமான துரோகிகளை வெளிப்படையாக அரவணைத்துக் கொண்டு திரிவதும்.. தனது கட்சிக்கு கூட்டமைப்புக்குள் முன்னுரிமை கொடுப்பதும்.. மக்கள் மனம்..நலன் அறியாமல் செயற்படுவதும்.. த.தே.கூ மீது மக்கள் நம்பிக்கை இழக்க காரணமாகும். கடந்த முறை மக்கள் த.தே.கூ க்கு வாக்களிக்க.. சம்பந்தன்.. தாங்கள் தமிழீழத்தைக் கைவிட்டு விட்டதற்கும் சேர்த்து மக்கள் வாக்களித்ததாக ஒரு வியாக்கியானம் கொடுத்தவர். இவை அநாவசியமானவை. இவர் சிங்களவர்களை.. முஸ்லீம்களை திருப்திப்படுத்த வார்த்தைகளை அவிட்டுவிடப் போய் இறுதியில் தமிழ் மக்களிடம் இருந்து விலகிச் சென்று கொண்டிருக்கிறார் என்பதே உண்மை.

இதனை முன்னரே பல தடவைகள்.. இங்கு யாழிலும் எழுதி இருக்கிறம். இவர்கள்.. ஒவ்வொரு தடவையும் அதே தவறைச் செய்து கொண்டு.. ஐயோ ஏமாந்திட்டம்.. ஏமாத்திட்டினம்.. என்று கதையளந்து பிரயோசனம் இல்லை.

தமிழ் மக்களின் அரசியல் வாழ்வும் சரி.. சாதாரண வாழ்வும் சரி அவர்களின் கையில் வளத்தில் தான் உள்ளது. அவர்களுக்கு வேறு யாரும் உதவமாட்டார்கள். நாம் பலமோடு இருந்தால்.. சேர்வார்கள்.. இல்லை என்றால்.. தூக்கி எறிவார்கள். இதுவே நிஜம். இதுவே தேசிய தலைவர் எமக்கு கற்றுத் தந்த பாடமும் கூட..! அவர் கற்றுத்தந்த பின்னும் இவை கற்றுக் கொள்ளாமல்.. இணக்க அரசியல் செய்ய வெளிக்கிட்டிச்சினம்.. கடைசியில நடுவீதியில.. இப்படி தான் ஏமாந்து போய் நிப்பினம். இப்படியே ஏமாந்து கொண்டிருக்க இவைக்கு தொடர்ந்து மக்கள் வாக்குப் போட மாட்டினம்..!

மக்களும் இராமன் ஆண்டால் என்ன இராவணன் ஆண்டால் என்ன புலிகளே இல்லை எனி எங்களுக்கு யார்.. என்ற நிலைக்குப் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை..! :icon_idea:

உன்னி கிருஷ்ணன் மன்னிப்பு கேட்டுவிட்டார் புலம் பெயர்ந்தவர்களுக்களுக்கு அதுதான் பெரிய அரசியல் வெற்றி .

கிழக்கில யார் முதலமைச்சாராக வந்தால் என்ன ?

  • கருத்துக்கள உறவுகள்

உன்னிக் கிருஷ்ணன் மன்னிப் கேட்டதல்ல விடயம். ஒரு சாதாரண இசை நிகழ்ச்சியை ஒழுங்கமைப்பதில் இருந்து.. தமிழ் மக்களின் வீடுகள் வரை சிங்களத்துக்கு நிகராக.. ஒட்டுக்குழுக்களும் இந்தியமும்.. எந்தளவுக்கு அராஜக அட்டூழியங்களையும் செல்வாக்குகளையும் பாவிக்கின்றன என்பதை உன்னிக் கிருஷ்ணன் போட்டுடைத்துள்ளார்.

எதிலும் மக்கள் சுதந்திரமாகச் செயற்பட முடியவில்லை. இப்படி ஒரு நிலை விடுதலைப் புலிகள் இருந்த போது கூட இருந்ததில்லை.அப்போது மக்கள் சுதந்திரமாகச் செயற்பட முடிந்தது. துரோகிகள் ஓடிப் பதுங்க வேண்டி இருந்தது..!

இதே காரணங்களுக்காகத்தான் மக்கள் ஒட்டுக்குழுக்களை அன்றும் சரி இன்றும் சரி வெறுக்கின்றனர். அவர்களும் திருந்திறதா இல்லை..! அந்த வகையில் உன்னிக் கிருஷ்ணனின் மன்னிப்பு என்பது எமது மக்கள் சுதந்திரமாக இல்லை என்பதை தெளிவாக வெளி உலகிற்கு குறிப்பாக தமிழகத்திற்கு இன்று உணர்த்தியுள்ளது. அந்த வகையில் அது ஒரு வெற்றியும் கூட..! :icon_idea:

Edited by nedukkalapoovan

எதிர்பார்த்த ஒன்றுதான். ஆயினும் உத்தியோகபூர்வ அறிக்கை வந்த பின்புதான் எதையும் சொல்ல முடியும்.

முஸ்லீம் காங்கிரஸ் அரசுடன் இணைவது முஸ்லீம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும். இதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பயன்படுத்த வேண்டும். முஸ்லீம்களை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்வாங்க வேண்டும்.

இரண்டு இனங்களின் ஒற்றுமை குறித்து சிந்திக்கின்ற முஸ்லீம்கள் நிறையவே இருக்கின்றார்கள். தொடர்ச்சியான பரப்புரைகளின் ஊடாக ஒரு பத்து வீதமான முஸ்லீம்களை வென்றெடுத்தாலே போதும்.

வரும் தேர்தல்களில் முஸ்லீம் காங்கிரஸின் வெற்றியில் குறிப்பிடத்தக்க சேதத்தை உருவாக்கலாம்.

Edited by சபேசன்

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கொரு பயமிருந்தது

முதலமைச்சர் பதவியை எடுத்துக்கொண்டு கிழக்கு மாகாணத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு அரசுடனும் மந்திரி பதவிகளையும் பாராளுமன்ற பதவிகளையும்பெற்றுக்கொண்டு அவர்கள் சொல்வதுபோல் எம்மை ஆண்டுவிடுவார்களோ என்று.

இறைவா

தமிழரைக்காப்பாற்றினாய். நன்றி.

[size=4]தமிழர்களை இன்று மீண்டும் முஸ்லீம் காங்கிரஸ் ஏமாற்றி விட்டது. இதில் ஆச்சரியம் பெரிதாக இல்லை.[/size]

ஏமாற்றும் புத்தி அவர்கள் இரத்தத்தில் ஊறியுள்ளது என்பது தெரியாமல் முஸ்லிம் காங்கிரசுடன் இணக்கம் என்று ஓடித்திரிந்தவர்களின் இராஜதந்திரம் புஸ்வானம் ஆகிவிட்டது! ஏமாந்தும் போய்விட்டார்கள்!!!

ஆரம்பத்திலேயே கிடைத்த ஏமாற்றம் நல்லது! இடைநடுவில் ஏமாந்திருந்தால் பாதிப்பு அதிகமாயிருக்கும்!

ஹக்கீமின் மிக சிறந்த முடிவுகளில் இதுவும் ஒன்று. இப்படி ஒரு முடிவை ஹக்கீம் எடுக்காவிட்டால் நான் அவர் ஒரு முஸ்லிம் தானா என்று கூட சந்தேகபட்டு இருப்பேன்.

அவர் ஒரு சிறந்த முஸ்லிம் அரசியல் வாதி என்று மீண்டும் நிருபித்து இருக்கிறார். இதனால் முஸ்லிம் சமுதாயம் அடையபோகும் நன்மைகள் சொல்லி அடங்காதவை. தனக்கு தனக்கு என்று வாழாமல் முஸ்லீம்களுக்காக அவர் வாழும் விடயங்கள் எதிகாலத்தில் பாடப்புத்தகங்களில் பதியப்பட வேண்டும்.

காசு பணமே பார்க்க முடியாத நீதி துறையை துறந்து முஸ்லிம் மக்களுக்கு காசு சம்பாத்தித்து கொடுக்க கப்பல் துறையை கேட்கும் சாமர்த்தியம்.

தம்புள்ள, காலி, தெகிவளை என்று முஸ்லிம்களின் கடைகள்,பள்ளிவாசல்கள் அடித்து நொறுக்கபட்டாலும் , இரண்டு பிரதி அமைச்சர்கள், நாலு உயர்ஸ்தானிகர் மூலம் அந்த கடைகளை, பள்ளிவாசல்களை திரும்ப கட்ட முடியும் என்று நிருபித்து காட்டி இருக்கும் புத்திசாலித்தனம்.

காவி உடை பயங்கரவாதிகள் என்று பிக்குமாரை கூறிவிட்டு, அவர்களுடனே கூடு வைக்கும் சமயோசிதம்.

எங்கையோ போய்விட்டாய் தலைவா. நீ தலைவன்டா ... ( இதை நண்பேண்டா ஸ்டைல் இல் வாசிக்கவும் )

செல்லி வேல இல்லே நானா

தெளிவாக ஒருவரும் தமிழரல்லாதார் கூட்டமைப்பில் தெரியப்படவில்லை. தமிழர் ஒரிவரும் கூட்டமைபில்லாத கட்சிகளில் தெரியப்படவில்லை. இது தெளிவாக இன அரசியலை காட்டுகிறது. கிழக்கில் இருக்கும் எவரும்(தமிழ், சிங்கள, முஸ்லீம்கள்) பிள்ளையானுக்கு வாக்கு போடவில்லை. பிள்ளையானுக்கு வாக்கு போட்டத்து இலங்கையின் மின்சாரசபை அதிகாரிகள் மட்டுமே.

கக்கீம் தெளிவாக கூறியிருந்தார் தான் அரசுடனும் கூட்டமைப்புடனும் கிழக்குக்கு ஆட்சியை அமைப்பது சம்பந்தமாக பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாக. மேலும் தேர்தல் நேரம் இவர் தெளிவாக அரசு இலங்கையில் முஸ்லீம்களுக்கு நீதியான அரசாங்கம் ஒன்றை கொடுக்கவில்லை என்றும் குறை கூறியிருந்தார். எனவே பேச்சு வார்த்தைகளின் பின்னர் இவர் அரசுடன் சேர்ந்திருப்பது, காக்கீமின் அபிப்பிராயத்தில், தமிழ் மக்களிடமிருந்து தமக்கு கிடைக்கத்தக்க சந்தோச வாழ்க்கையிலும் பார்க்க தாம் திருப்திகரமான ஆட்சி ஒன்றை சிங்கள் தலைவர்களிடம் இருந்து பெறாலாம் என்று முடிவுக்கு வந்திருக்கிறார் என்பதே. அதாவது இன்றைய நிலையில் இலங்கை அரசால் பாதிக்கப்பட்டு அதன் மீது திருப்தி இல்லாதவர்கள் தம்மை தமிழர்களாக அடையாளப்படுத்திக்கொள்ளபவர்கள் மட்டுமே. தமிழரை ஒதுக்குவதுதான் சிங்கள அரசின் ராஜதந்திரம். திரும்பத்திரும்ப தமிழ் மக்களுடன் சிங்கள மக்கள் இணங்க மறுத்து இன்று தமிழ் மக்கள் தனி நாடு கேட்கிறார்கள். இதே போக்கையே முஸ்லீம் தலைமைகள் சிங்கள அரசியல் வாதிகளிடம் இருந்து கற்று இருக்கிறார்கள் என்பதை கக்கீம் தனது முடிவால் எடுத்துக்காட்டியிருக்கிறார். அதாவது தமிழ் மக்களை ஒதுக்குவதால் தான் முஸ்லீம் மக்கள் தனிப்பட்ட ஆதாயம் அடைய முடியும் என்று அரசில் சேர்ந்திவிட்டார். இனி கக்கீமுடன் தனி அலகு பேச்சு வார்தைகளை ஆரம்பிப்பதில் உபயோகம் இல்லை.

அரசு தான் ஆட்சியை அமைக்க மு.கா.விடம் மட்டும்தான் உதவி கேட்டது. கூட்டமைப்பை சேர்க்க விரும்பவில்லை. மு.கா. தான் தெருவில் வைத்து தேர்தலின் போது முஸ்லீம் பெண்களை அடித்த அரசுடன் சேர விரும்புகிறது. ஆனால் கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சி அமைக்க விரும்பவில்லை. இலங்கையின் மற்றைய இனங்கள் தமிழராக தம்மை அடையாளம் காட்டுவோரை ஆட்சியில் சேர்க்க விரும்பவில்லை.

கூட்டமைப்பு இதை வைத்துத்தான் மிகுதி பேச்சுவார்த்தையை செய்ய வேண்டும்.சம்பந்தர் இனி தனி நாடு கேட்க எந்த சாட்டையும் தேடவேண்டிய தேவையில்லை.எமக்கு கிழக்கில் கிடைக்க கூடிய பங்கை நீதியான தீர்ப்பொன்றின் மூலம் பிரித்து வடக்குடன் இணைத்து தனி நாடு பெற்றுத்தருவது சர்வதேசத்தின் கடமை.

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் 15 பிரதிநிதிகளைக் கொண்டிருப்பதாக சிலர் அதனை முன்னிலைப்படுத்தி வருகிறார்கள். அதில இன்னொரு விடயம் இருக்குது. அதை எவருமே சொல்லமாட்டினம். அது என்னென்றால்.. சிங்களத் தேசியக் கட்சிகளில் முஸ்லீம்கள் உள்ள அளவிற்கு தமிழர்கள் இல்லை என்பதே..!

தமிழர்களில்...பெரும்பாலும்.. காட்டிக்கொடுப்பாளர்களும்.. துரோகிகளும்.. அரசியல் பிழைப்பற்றவர்களும்.. சிங்கள தேசத் தொடர்புள்ள.. வியாபாரிகளும்..சிங்களச் செல்வாக்குள்ளவர்கள் சிலர் மட்டுமே சிங்களத் தேசியக் கட்சிகளில் உள்ளனர். ஆனால் முஸ்லீம்களைப் பொறுத்த வரை அவர்கள் அந்தக் காலந்தொட்டு இன்று வரை சிங்களத் தேசியக் கட்சிகளிலும் உள்ளனர்.

தமிழர்கள் வாங்காத அமைச்சுக்களை எல்லாம் முஸ்லீம்கள் வாங்கியுள்ளனர். எதனால்.. சிங்களக் கட்சிகளில் இருந்து.. தமிழர்களின் போராட்ட சூழலை பாவித்தும். சிறுபான்மையினருக்கு பிரச்சனை இல்லை என்று காட்ட வேண்டிய நெருக்கடி எழும்போதெல்லாம் சிங்களம் முஸ்லீம்களை தூக்கிப் பிடித்து அமைச்சுப் பதவி கொடுத்து அரவணைக்கும்... அப்படியான சந்தர்ப்பங்களை முஸ்லீம்கள் பாவிக்கத் தவறுவதில்லை. அதேபோல்.. பேரினவாதமும்.. சிங்கள மக்களிடம் அதனை நினைவூட்ட தமிழர்களை அடிக்கும் கொல்லும். ஆனால்.. அப்பப்ப முஸ்லீம்களையும் சும்மா தட்டும்..!

முஸ்லீம்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு இனம்.. தேசியம்... சுயநிர்ணயம்.. தேசம்.. இவற்றில் அக்கறை இல்லை. தமிழர்கள் இவற்றை முன்னிறுத்தும் வரை அவர்களுக்கே தாங்க என்ன சமூகம் என்று தெரியாமல் தான் கிடந்தார்கள். அவர்களின் ஒரே சிந்தனை அல்லாவும்.. இஸ்லாமும் மட்டுமே..!

அந்த வகையில் அவர்கள் இலகுவாக சிங்களவர்களோடு ஒட்டி ஒட்டுண்ணி அரசியல் செய்வது முடிந்திருக்கிறது. இப்போதும் அது தொடர்கிறது. ஆனால் சுதந்திர காலத்திற்கு முன்பிருந்து இன்று வரை தமிழர்களே அதிகம் சிங்களவர்களோடு அரசியல் பேரம் பேசுகின்றனர். 50% 50% தொடக்கம் தமிழீழம் வரை கேட்பதோடு.. சிங்களத் தேசியக் கட்சிகள் மீது நம்பிக்கை அற்றும் இருந்து வந்துள்ளனர்.

அந்த வகையில்.. தமிழ் - சிங்கள உறவு எப்போதுமே சந்தேகத்துக்குரிய பிரச்சனைக்குரிய ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. ஆனால் முஸ்லீம்களுடன் அப்படி அல்ல. முஸ்லீம்கள் தமிழர்களை நெருங்கியதை விட சிங்களவர்களோடு நெருங்கி அரசியல் செய்வதே அதிகம். காரணம்.. அவர்களிடமே ஆட்சி அதிகாரம் உள்ளது என்பதால்..!

அதுமட்டுமன்றி முஸ்லீம்கள் சிங்களவர்களின் துரோகங்களைப் பற்றி எல்லாம் கவலைப்படுவர்களும் அல்ல. ஏதோ வாழ ஒரு இடம் தந்தால் போதும் பேர்வழிகளாகவே அவர்கள் சிங்களவர்களோடு வாழ்கின்றனர். ஆனால் தமிழர்களிடம் மட்டுமே தனி அலகு கேட்கிறார்கள். ஏன்னா தமிழன் தானே இழிச்சவாயன். அதிகார பலம் அற்றவன்..! இவற்றை எல்லாம் எங்கட நவீன மு.வா.. பின்னான அரசியல் ஆலோசகர்கள் வெளியில் சொல்வதில்லை..!

முஸ்லீம்களின் அரசியல் பிரதிநித்துவம் என்பது.. சிங்களம் தமிழர்களின் அரசியல் எழுச்சியை அடக்க கையாளும் கருவி..! முஸ்லீம்களிடம் அமைச்சகம் என்பது உலகிற்கு சிறுபான்மை இனம் சந்தோசமாக உள்ளது என்று காட்ட வழங்கப்படும் கூலி..! அதையே தான் மலைய மக்களோடும் சிங்களம் செய்து வருகிறது. தங்களுக்கு நம்பிக்கைக்குரிய விசுவாசமுடைய சிறுபான்மை இனத் தலைமைகளை சிங்களம் அரவணைத்து பதவி கொடுத்து அவர்களை ஆசுவாசப்படுத்தி ஒட்டுமொத்த சிறுபான்மை இனத்தையும் தனது அதிகாரத்துக்குள் அடிமையாக வைத்திருப்பதே சிங்களத்தின் 64 ஆண்டு கால அரசியல்.

இதனை விளங்கிக் கொள்ளாமல்.. 15 பேர்.. பிரதிநிதி என்று கணக்குக் காட்டுவது சரியான கணக்கல்ல. தமிழர்களும் முஸ்லீம்கள் போல.. சிங்களத் தேசிய கட்சிகளோடு இணைந்து நின்றிருந்தால்.. தமிழர்களின் எண்ணிக்கையும் கூடி இருக்கும்..! ஆனால் தமிழர்களின் அரசியல் அபிலாசை காற்றில் பறந்திருக்கும்..! முஸ்லீம்களைப் பொறுத்த வரை சந்தர்ப்பவாத அரசியல் அபிலாசையை தவிர அவர்களிடம் வேறு அரசியல் இல்லை..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ..... கூட்டமைப்பு குந்தி இருந்து வேடிக்கை பார்க்கவேண்டியதுதான்,

நாங்கள் சொன்ன சிலருக்கு கோபம் வரும் முஸ்லிம்கள் ஒருபோதும் தமிழர்களை சகோதரர்களாக நினைத்ததில்லை எம்மில் சிலர்தான் அவர்களை சகோதரர்கள் என்று சொல்லிக்கொண்டு திரியினம் .

15 முஸ்லீம்கள் விருப்புவாக்கின் அடிப்படையில் தேர்வாகியுள்ளார்கள். இவர்கள் சிங்களவர்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. கிழக்கின் முஸ்லீம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

இது பழைய புள்ளி விபரங்களுக்கு அப்பால் முஸ்லீம் மக்கள் கிழக்கில் பெரும்பான்மையாக ஆகி விட்டதைக் காட்டுகிறது. தமிழர்கள் வாக்குச்சாவடிக்கு செல்லாது விட, முஸ்லீம்கள் பெரும்பாலும் வாக்களித்தார்கள் என்று யாராவது சொன்னால், அது தவறாகவே இருக்கும். அம்பாறையிலும் மட்டக்களப்பிலும் வாக்களிப்பு வீதத்தில் பெரிய வேறுபாடு இல்லை.

15 முஸ்லீம் பிரதிநிதிகள் என்பது, அங்கே முஸ்லீம்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்து விட்டது என்பதையும், ஜனநாயக அடிப்படையில் அந்தச் சமூகத்திற்கு முதலமைச்சர் பதவியைக் கொடுப்பதில் தவறு இல்லை என்பதையும் சுட்டிக்காட்டவே இங்கே சொல்லப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கில் ஐ.ம.சு.வுடன் முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும்: மைத்திரிபால

Sirisena60_60.jpgகிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிச்சயமாக கூட்டணி அமைக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரான அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் வேறு வழி இல்லாததால் அக்கட்சியும் இக்கூட்டணியில் இணையலாம் என அமைச்சர் சிறிசேன வேடிக்கையாக கூறினார். :):icon_idea:

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/48441-2012-09-11-12-19-36.html

  • கருத்துக்கள உறவுகள்

15 முஸ்லீம்கள் விருப்புவாக்கின் அடிப்படையில் தேர்வாகியுள்ளார்கள். இவர்கள் சிங்களவர்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. கிழக்கின் முஸ்லீம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

இது பழைய புள்ளி விபரங்களுக்கு அப்பால் முஸ்லீம் மக்கள் கிழக்கில் பெரும்பான்மையாக ஆகி விட்டதைக் காட்டுகிறது. தமிழர்கள் வாக்குச்சாவடிக்கு செல்லாது விட, முஸ்லீம்கள் பெரும்பாலும் வாக்களித்தார்கள் என்று யாராவது சொன்னால், அது தவறாகவே இருக்கும். அம்பாறையிலும் மட்டக்களப்பிலும் வாக்களிப்பு வீதத்தில் பெரிய வேறுபாடு இல்லை.

15 முஸ்லீம் பிரதிநிதிகள் என்பது, அங்கே முஸ்லீம்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்து விட்டது என்பதையும், ஜனநாயக அடிப்படையில் அந்தச் சமூகத்திற்கு முதலமைச்சர் பதவியைக் கொடுப்பதில் தவறு இல்லை என்பதையும் சுட்டிக்காட்டவே இங்கே சொல்லப்பட்டது.

இவருக்குச் சொன்னது புரியல்லப் போல. முஸ்லீம் காங்கிரஸை விட 8 முஸ்லீம்கள்..சிங்கள தேசியக் கட்சிகளில் இருந்து தெரிவாகியுள்ளனர். அந்த வகையில்.. அவர்களுக்கு சிங்கள மக்களின் விருப்பு வாக்குக் கிடைத்திருக்க சந்தர்ப்பம் உள்ளது..!

அதேபோல்.. தமிழர்களும் த.தே.கூ க்கு வெளியே முஸ்லீம்களைப் போல.. சிங்களத் தேசியக் கட்சிகளில் நின்றிருந்தால்.. அவர்களிலும் அதிகம் பேர் அங்கு போயிருக்க முடியும். குறைந்தது.. 8 முஸ்லீம்கள் போன இடத்தில்.. 4 பேராவது போய் இருக்கலாம்.

ஆனால் சிங்கள பேரினத் தேசியக் கட்சிகளால் அழிக்கப்பட்டு வரும் ஒரு இனமாக.. உண்மையான தமிழன்.. அப்படிச் செய்யமாட்டான். ஆனால் முஸ்லீம்கள் செய்வார்கள்..!

மொத்தப் பிரதிநிதித்துவம் பார்ப்பதல்ல ஜனநாயகம்..! போனஸ் ஆசனமும் ஜனநாயக நடைமுறையோ..???! மக்களின் அதிக விருப்பு வாக்கைப் பெற்றவர் தான் முதலமைச்சராக வேண்டும்..! அப்படித்தானே ஜனாதிபதியை தெரிவு செய்யுறீங்க. அதென்ன கிழக்கு முஸ்லீம்களுக்கு மட்டும் திடீர் என்று ஜனநாயகம் வேறு விதமா வாலைக் கிளப்புது..! :D:lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஹகீம் கிழக்கு மாகாணத்தை சேர்த்தவர் அல்ல அதனால் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பதவியை கிழக்கு மாகாண முஸ்லிம் ஒருவருக்கு விட்டு கொடுத்து தான் தலைமை பொறுப்பில் இருந்து விலகவேனும்.... :D

  • கருத்துக்கள உறவுகள்

யார் யாருடன் சேரவேண்டுமோ அவர்களுடன் சேர்ந்துள்ளார்கள். இல்லாதவிடத்தேதான் அது அதிசயம். இப்போது தமிழர் தரப்பிற்கு (சம்பந்தன் வகையறாக்கள் தமிழர் தரப்பல்ல) முடிவெடுக்கவேண்டிய கட்டாய நிலை எப்போது எந்தவேளையில் இவர்களை நாம் வெட்டிவிடவேண்டுமென்பதே அது. தலைவர் இதற்காகத்தான் இவர்களைத் தூரத்தே வைத்திருந்தார். மாறாக வடக்கிலிருந்து இவர்களை வெளியேற்றப்பட்டதற்கான காரணத்தை அவர்களே கிழக்கிலிருந்து நீண்டநாட்களுக்குப்பின் கூறியுள்ளார்கள். அதாவது நாங்கள் ந்ம்பத்தகாதவர்கள், எமை வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டது சரியே என இன்றைய முடிவின்மூலம் கூறியுள்ளனர் இவர்கட்கு பகிரங்கமாக ஒன்றைக்கூறிக்கொள்ளவேண்டும், அது எதுவெனில் பேச்சுவார்த்தை தனி அலகு மசிர் மண்ணாங்கட்டி என எம்முடன் சேர்ந்து மாரடிக்க நீங்கள் வரவேண்டாம். அடுத்தது தமிழர் தரப்பு அரசியல்வாதிகட்கு ஒரு விடையம், மூச்சிரைக்க இழுக்கமுடியாத முஸ்லீம் பெட்டியை விடுதலைக்கான தண்டவாளத்தில் இழுக்கவேண்டிய அவசியம் எமக்கல்ல. கிழக்கில் இனிவரும் காலங்களில் புள்ளடிக்கடவுள் திருவிழாவுக்கு தங்கள் தரப்பில் முஸ்லீம்களை வேட்பாளர்களாக நிறுத்தவேண்டாம். பிள்ளையானுக்கு ஓட்டளித்தது அனைவரும் பிள்ளையான்மேல் அனுதாபமோ ஆதரவோ கொண்டல்ல நீங்கள் முஸ்லீம்களை வேட்பாளர்களாக முன்னிறுத்தியதாலேயெ, அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.