Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிக்கிய மீனும் சில்லெடுத்த பெயரும்

Featured Replies

[size=5]10 ஊசிக்கவலை மீன் ( deepbody sardine ) [/size]

121.gif

http://parisaramahit...imagefm/121.gif

இந்த மீனுக்கான தூயதமிழ் ஊசிகவலை மீன் Bigbody Sardine ) ஆகும் . இது பலருக்கும் டிமிக்கி கொடுத்ததால் பச்சைப்புள்ளி வழங்கமுடியாமைக்கு வருந்துகின்றேன் .இந்த மீன் பற்றிய மேலதிக விபரங்களுக்கு பின்வரும் இணைப்பில் செல்லுங்கள் .

http://parisaramahit...in/fish/m53.htm

http://en.wikipedia....wiki/Sardinella

கோமகன், ஒரு சந்தேகம்...

நீங்கள் குறிப்பிட்டதுபோல் இது தான் ஊசிகவலை மீன் என்பதற்கு என்ன ஆதாரம்? நீங்கள் இணைத்த இணைப்பில் நீங்கள் குறிப்பிட்ட ஊசிகவலை என்ற பெயர் ஒன்றும் இல்லையே...

நான் நினைக்கிறன் நீங்கள் கர்நாடகப் பெயரில் குறிப்பிடுகிறீர்கள் என்று..

விக்கிபீடியாவின் இணைப்பிலும்

Saaur_u0.gif

இப்படி ஒரு படம் தான் இருக்கிறது..

இந்த இணைபிலாவது நீங்கள் இணைத்த மீனின் படம் உள்ளது எனலாம்...

http://en.wikipedia....rdinella_aurita

இருப்பினும் இந்த மீனுக்கு தூய தமிழில் ஊசிகவலை என்பது தான் பெயர் என்று என்ன ஆதாரத்தில் குறிப்பிடுகிறீர்கள் என்று கொஞ்சம் விளங்க வையுங்களேன்...

நீங்கள் தரப்போகும் விளக்கத்திற்கு முன்கூட்டியே நன்றி!

Edited by குட்டி

  • Replies 700
  • Views 77k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

[size=5]12 எலிச்சூரை மீன் ( frigate tuna) [/size]

fgtunasnow093b.jpg

http://www.mexfish.c...unasnow093b.jpg

இந்த மீனுக்குரிய தூயதமிழ்ப்பெயர் " எலிச்சூரை மீன் " ஆகும். இந்தச் சூரை மீனில் சூரை ( Choorai Little Tunny) ,நீலத் துடுப்புச் சூரை ( Blue fin tuna ), சூரை கீரை மீன் (Keerai, Kerai Yellow Tuna, Yellowfin Tuna ) , எலிச்சூரை மீன் ( frigate tuna ) என்று பலவகைப்படும் . நான் போட்ட மீன் " எலிச்சூரை மீன் " என்றபோதிலும் தமிழரசு " சூரை மீன் " என்று கூறியதால் அவரே போட்டி விதிகளின்படி சிறப்பு பரிசான பச்சைப்புள்ளிக்குத் தெரிவாகின்றார் . சில பேர் "சூடை மீன் " என்றும் சொல்லியிருக்கின்றீர்கள் . சூடைமீனைப்பற்றி பிறிதொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம் . ஆர்வத்துடன் கலந்து கொண்ட அனைவருக்கும் எனது நன்றிகள் .இந்த மீன்பற்றிய மேலதிக தகவல்களுக்கு இந்த இணைப்பில் நுளையுங்கள் .

http://en.wikipedia....thazard_thazard

http://www.mexfish.c...tuna/fgtuna.htm

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

சூரைமீன் அல்லது கிழவறையன் என்பார்கள்.

போட்டி விதியின்படி பச்சைப்புள்ளியினை உங்களுக்கு வழங்கிக் கௌரவிக்கின்றேன் :) :) .

நன்றிகள் :)

  • தொடங்கியவர்

சூரைமீன் அல்லது கிழவறையன் என்பார்கள்.

நன்றிகள் :)

பார்க்கலாம் தமிழரசு நேரம் இருக்கின்றது தானே ? வருகைக்கு நன்றிகள் :D :D .

  • கருத்துக்கள உறவுகள்

என்ன ஒருவரையும் காணோம் எல்லோரும் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கப்போட்டினமோ ? :D

  • தொடங்கியவர்

என்ன ஒருவரையும் காணோம் எல்லோரும் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கப்போட்டினமோ ? :D

கடலில் கொந்தளிப்பு உள்ளதால் றோலரில் கடலுக்கு மீன்பிடிக்க போனவர்கள் உடனடியாக கரை திரும்புங்கள் :lol: :lol: :D :D .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது காரை, காரல் மீன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது காரை, காரல் மீன்

புளுகுறதுக்கும் ஒரு அளவு வேணும் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புளுகுறதுக்கும் ஒரு அளவு வேணும் :icon_mrgreen:

:D :D :D

சரி சரி, ஒரு கைக்கணக்கில, சொன்னது...இஞ்சால தனி மடலில போட்ட, இன்னுமொரு ரவுண்டு வரலாம்...மற்றாக்கள் வரமுந்தி :blink:

  • தொடங்கியவர்

:D

சரி சரி, ஒரு கைக்கணக்கில, சொன்னது...இஞ்சால தனி மடலில போட்ட, இன்னுமொரு ரவுண்டு வரலாம்...மற்றாக்கள் வரமுந்தி :blink:

உது என்னட்டை வாயாது எரிமலை :lol: என்ரை அனுபவங்களாலை நான் ஆரோடையுமே தனிமடல் தொடுசலுகள் வைக்கிறேலை :icon_mrgreen::D அதாலை சரியா மீன்பிடிக்கிறவைக்குத்தான் பரிசு :):icon_idea: .

  • கருத்துக்கள உறவுகள்

கண் அளவையும் மீன் அளவையும் பார்க்கேக்க உது ஒரு சின்ன மீன் :unsure: .. அப்ப் காரல்தான் :D .. சொதி வச்சு தின்னலாம்.. :rolleyes:

இது சூரை மீன். குழம்புக் கறிக்கு நன்றாக இருக்கும். மாலைதீவு மாசிக் கருவாடு செய்வார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சூடை மீன்.. :D

இதையா "சூடைக்கருவாட்டு விலை" என்றும் பதத்தில் பாவிப்பார்கள். பின்னர் ஏன் மாசிக்கருவாடு என்ற சிங்கள சொல்லை உள்புக விட்டார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

[size=4] [/size][size=4]சூடை மீன் ( இது சாப்பிடால் சிலருக்கு அலர்ஜி ) :D[/size]

  • தொடங்கியவர்

சூரைமீன் அல்லது கிழவறையன் என்பார்கள்.

நன்றிகள் :)

போட்டிவிதியின்படி உங்களுக்குப் பச்சைப்புள்ளி வழங்கிக் கௌரவிக்கின்றேன் :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கோமகன் இண்டைக்குக் கடலுக்கு இன்னும் போகேல்லையே.ஒரு மீனையும் காணேல்ல.

  • தொடங்கியவர்

[size=5]12 கயல் Kayal Mullet – Grey (Grey Mullet)[/size]

greymullet.jpg

http://www.fish.govt.../greymullet.jpg

இந்த மீனுக்கான தூயதமிழ் " கயல் மீன் " ஆகும் . இந்தமீன் பெண்களின் கண்களுடன் தொடர்புடையது . இதற்கு இலக்கியத்தில் ஒருதனியிடமே உண்டு . உதாரணத்திற்கு..........

[size=5]செம்கண் கரும் கோட்டு எருமை, சிறு கனையால்[/size]

[size=5]அம் கண் கழனிப் பழனம் பாய்ந்து-அங்கண்[/size]

[size=5]குவளைஅம் பூவொடு, செம் கயல் மீன் சூடித்[/size]

[size=5]தவளையும் மேல் கொண்டு வரும். [/size]

குழந்தைக்கு பூச் சூடி பார்க்கலாம்...

பெண்கள் பூ சூடி பார்த்து இருக்கிறோம்.

எருமை மாடு பூச் சூடி வந்தால் எப்படி இருக்கும் ?

ஒரு பெரிய கரிய எருமை. நீர் நிறைந்த குட்டையை பார்த்தது. அதுக்கு ஒரே குஷி. "ங்கா...." என்று கத்திக்கொண்டு தண்ணிக்குள் பாய்ந்தது.

சுகமாக தண்ணீரில் கிடந்து ஓய்வு எடுத்தது. மாலை நேரம் வந்தது. வீட்டுக்கு கிளம்பியது. அது வெளியே வரும்போது அதன் மேல் கொஞ்சம் சேறு ஒட்டிக் கொண்டது.

இருக்காதா பின்ன...நாள் எல்லாம் குட்டைல கிடந்தா ?

அந்த சேற்றின் மேல் ஒரு சில மீன்கள் ஒட்டிக் கொண்டு வந்தன.

அந்த எருமையின் மேல் ஒரு தவளை ஏறி உட்கார்ந்து கொண்டு வந்தது.

கூடவே சில குவளை மலர்களும் ஒட்டிக்கொண்டு வந்தன.

அடடா...என்ன ஒரு கண் கொள்ளா காட்சி....!

செம்கண் = சிவந்த கண்களையும்

கரும் = கரிய நிறமும்

கோட்டு = கொம்புகளையும் கொண்ட

எருமை, = எருமை மாடு

சிறு கனையால் = கனைத்துக் கொண்டு

அம் கண் = அங்கே உள்ள

கழனிப் பழனம் = மருத நிலத்தில் உள்ள கழனியில்

பாய்ந்து- = பாய்ந்து

அங்கண்= அதில் இருந்த

குவளைஅம் பூவொடு = குவளை மலரோடு

செம் கயல் மீன் சூடித் = செம்மையான மீன்களையும்

தவளையும் = ஒரு சில தவளைகளையும்

மேல் கொண்டு வரும். = அந்த எருமை மேலே வரும்போது, கூடவே கொண்டு வரும் .

http://interestingta...og-post_23.html

பலர் படகோட்டியபொழுதும் , நந்தன் 26 இந்த மீனை முதலில் பிடித்ததால் அவருக்கு போட்டிவிதிப்படி சிறப்புப்பரிசான பச்சைப்புள்ளியை வளங்கிக் கௌரவிக்கின்றேன் . நந்தன் 26 ற்கு வாழ்த்துக்கள் :) :) .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

கயல்

  • கருத்துக்கள உறவுகள்

சூரை மீன் தவறு.. :D சூடை மீனே சரியான சொல்லாகும்.. ஆகவே பச்சைப் புள்ளியை எனக்கே கிடைக்குமாறு அருள்புரிய வேண்டும்.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மணலை மீன்

மணலை மீன்

என்ன போயும் போயும் மெசொ அக்கா மணலை மீன் என்கிறா. இதுவா கூட தெரியாது?

:lol: :lol: :lol:

இனிமேலாவது மணல் வேறு மீன் வேறு என்று புரிஞ்சுகிடட்டும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

போட்டிவிதியின்படி உங்களுக்குப் பச்சைப்புள்ளி வழங்கிக் கௌரவிக்கின்றேன் :) :) :) .

நன்றிகள் கோமகன் :)

மணலை மீன் சிலர் இதனை மடவை என்றும் அழைப்பதுண்டு :D

சூரை மீன் தவறு.. :D சூடை மீனே சரியான சொல்லாகும்.. ஆகவே பச்சைப் புள்ளியை எனக்கே கிடைக்குமாறு அருள்புரிய வேண்டும்.. :icon_idea:

சூரை மீன் -tuna fish :lol: :lol:

சூடை மீன் - sardin fish :D :D

  • தொடங்கியவர்

வலைகளை வீசியெறிந்து மீன்பட்டதா என்று காத்திருக்கும் நந்தன் 26 , இசைக்கலைஞன் , மொசப்பத்தேமியா சுமேரியர் , மல்லையூரான் , தமிழரசு , எல்லாளமகாராஜா ஆகியோருக்கு மிக்க நன்றிகள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.