Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சொந்த ஊர் செல்ல முடியாமல் மு.காவினர் கொழும்பில் முடக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த ஊர் செல்ல முடியாமல் மு.காவினர் கொழும்பில் முடக்கம்

slmc.jpg

வாக்களித்த மக்களின் விருப்புக்கு மாறாக மு.கா., அரசுடன் இணைந்து கொண் டதையடுத்து அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் தமது சொந்த ஊர் செல்லமுடியாமல் கொழும்பில் திண்டாடுகின்றனர்.

கிழக்கு முஸ்லிம் மக்களில் பெரும்பான்மையானோரின் வாக்குகளை நடந்து முடிந்த தேர்தலில் மு.கா. பெற்றுக்கொண்டது. பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதைத் தடுக்க வேண்டுமாயின், மு.காவுக்கு வாக்களியுங்கள் என்று கூறி மக்களின் உணர்வலைகளைத் தூண்டி வாக்குகளைச் சூறையாடிய மு.கா. அனைத்தையும் மறந்து அரசிடம் சரணாகதியடைந்தது.

இப்போது மக்கள் விழிப்படைந்துவிட்டதை மு.கா. எம்.பிக்களும், மாகாணசபை உறுப்பினர்களும் நன்கு புரிந்துகொண்டுள்ளனர். இதனால் பீதியடைந்த இவர்கள், சொந்த ஊர் திரும்பமுடியாமல் தவியாய்த் தவிக்கின்றனர்.

கொழும்பிலிருந்தவாறே தமது மனைவி, மக்கள், குடும்பத்தினருடன் தொலைபேசி வாயிலாக உரையாடியே ஊர் நிலைமைகளை அறிகின்றனராம். மாகாணசபைக்குத் தெரிவாகியுள்ள மு.கா. உறுப்பினர்கள் கொழும்பில் தங்குவதற்கு இடமின்றியும், போதியளவு பணமின்றியும் திண்டாடுகின்றனர் என அறியமுடிகின்றது.

நிலைமை இப்படியாகும் என்று தெரிந்திருந்தால் கூட்டமைப்புடன் சேர்ந்திருக்கலாம் என்றாராம் ஒரு புதிய மாகாணசபை உறுப்பினர். மக்களைத் தம்பக்கம் எப்படி மாற்றலாம்? அரசுடன் இணைந்ததற்கு என்ன நியாயங்களைக் கூறலாம்? என்றெல்லாம் இப்போது இவர்கள் ஆராய்கின்றனர் எனத் தெரியவருகின்றது. ஊடக அறிக்கைப் படலங்களும் தயாராகுவதாகத் தகவல்கள் கிடைக்கின்றன.

"மக்கள் என்ன மடையர்களா? இன்னும் இன்னும் இவர்களின் கோமாளித்தனத்துக்கு ஆட'' என்று கேட்கிறார் ஒரு பொதுமகன்.

http://onlineuthayan.com/News_More.php?id=580931448522860890

[size=4]ஒரு மாற்று சக்தியாக முஸ்லீம் மக்கள் [/size]ஏற்க கூட்டமைப்பு நடக்கவேண்டும்.

ஒரு மாற்று சக்தியாக முஸ்லீம் மக்கள் ஏற்க கூட்டமைப்பு நடக்கவேண்டும்.

..இப்படி எல்லாம் நடக்க, சம்பந்தன் போன்ற வயோதிபர்கள் தலைமப் பதவியில் இருந்து தாமே விலகி, புதிய தகுதியானவர்களை கொண்டு வர வேண்டும்.

கிழக்கில் சிறுபான்மை இனங்களின் வெற்றி சிங்கள பேரினவாதிகளுக்கு மிகவும் கசப்பான விடயமாக இருக்கின்றது. சிங்கள குடியேற்றம் முன்னெப்போதையும் விட இனித்தான் மிக மோசமாக கிழக்குப் பகுதியில் இடம்பெறப் போகின்றது.

அடுத்தடுத்த காலங்களில் இடம்பெறப் போகும் மாகாண சபைத் தேர்தலில் சிங்கள முதலமைச்சர் வருவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம். இதைத் தடுக்கும் அளவுக்கு காத்திரமாக இயங்கக் கூடியவர்களைக் கொண்ட தலைமை த.தே,கூ வுக்கு அவசியம்.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தடுத்த காலங்களில் இடம்பெறப் போகும் மாகாண சபைத் தேர்தலில் சிங்கள முதலமைச்சர் வருவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம். இதைத் தடுக்கும் அளவுக்கு காத்திரமாக இயங்கக் கூடியவர்களைக் கொண்ட தலைமை த.தே,கூ வுக்கு அவசியம்.

த.தே.கூ ஒருபோதும் வலிமையான தலைமையாக இருந்ததில்லை. இனியும் இருக்குமா என்பதும் சந்தேகமே. முதலில் கூட்டுக் கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஒரு கட்சி என்று வரவேண்டும்.. ஆனால் அது இப்போதைக்கு சாத்தியமில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிகள் சரியான ஒரு தலைமையை உருவாக்க வேண்டும் என்ற நிலையில் உள்ள போது முஸ்லிம் காங்கிரசில் கூட்டமைப்புடன் சேர வேண்டும் என்று குரல் கொடுத்தவர்களுடன் கூட்டமைப்பு பேச்சுவார்த்தை நடாத்த வேண்டும்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைமைகள் ஊருக்கு போக பயப்பிடுகின்றார்கள் என்றால் முஸ்லிம் மக்கள் நியாயமானர்கள் என்றுதானே பொருள்?

மிக விரைவில் கூட்டமைப்பு இல்லாமல் போய் தமிழரசு என்றாவிடும்.அது நடந்திடுமோ என்றுதான் சுரேஷ் ,செல்வம் எல்லாம் பயப்பிடுகின்றார்கள்.ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் தொடங்கிய கட்சிகள் இல்லாமலே போக போகின்றது

இதற்கு இந்திய ,சர்வதேச அழுத்தங்களும் ஒரு காரணம் .அமெரிக்கா வந்த சம்பந்தன் சுமேந்திரன் சுரேஷ் இல் சுரேசுக்கு கனடா வர விசா கொடுக்கவில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு இந்திய ,சர்வதேச அழுத்தங்களும் ஒரு காரணம் .அமெரிக்கா வந்த சம்பந்தன் சுமேந்திரன் சுரேஷ் இல் சுரேசுக்கு கனடா வர விசா கொடுக்கவில்லை .

இந்தவிடயத்தில் சர்வதேசம்,இந்தியா மற்றும் சிறிலங்கா மிகவும் கவனமாக இருக்கின்றது.அதுதான் பிள்ளையானை ஒதுக்கியது. வெகுவிரைவில் கருணா,மற்றும் டக்கிளஸ்...

சரணடைந்த புலிகளின் அரசியல் தலமைகளை அழித்தமையும் இதின் ஒரு பகுதி...</p>

Edited by putthan

இந்தவிடயத்தில் சர்வதேசம்,இந்தியா மற்றும் சிறிலங்கா மிகவும் கவனமாக இருக்கின்றது.அதுதான் பிள்ளையானை ஒதுக்கியது. வெகுவிரைவில் கருணா,மற்றும் டக்கிளஸ்...

சரணடைந்த புலிகளின் அரசியல் தலமைகளை அழித்தமையும் இதின் ஒரு பகுதி...</p>

தலைவரையும் அழித்ததாகக் கதைத்தார்கள். இது உண்மையா? பொய்யா?

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரையும் அழித்ததாகக் கதைத்தார்கள். இது உண்மையா? பொய்யா?

யான் அறியேன் பராபரனே .....கெரில்லா தலைவர்களை விட அந்த அமைப்புக்களில் இருந்து வந்த அரசியல் தலமைகள் தான் முதலாளித்துவ அரசியல் தலைவர்களுக்கு நீண்ட கால அச்சுறுத்தலாக விளங்குபவர்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.