Jump to content

பேய் பிசாசு அனுபவம்..


Recommended Posts

Posted

ஒரு செட் பாக்கிடிக்கிற அம்மம்மா. மற்றய செட் படலையடியில் நிற்கிற அம்மம்மா. :D

வீபூதி அருகில் இருக்கா? :lol:

:D :D :lol: :lol: :lol:

  • Replies 99
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீபூதி வீட்டில இல்லை இருந்தா கொஞ்சம் அனுப்புங்கோ மல்லை

  • 2 weeks later...
Posted

வயது வந்தவர்களுக்கு மட்டும்:

நடு நிசியின் ஆதிக்கத்தில் தெருவின் இருமருங்கிலும் நிலவிய நிசப்பதம் மனத்தில் இனம்கான மருள்ச்சியை கொடுத்துக் கொண்டிந்தது. அந்த நிசப்பத்தில், ஓரமாக, இடைஇடை வந்து போகும் சில்வண்டின் சிறிய ரீங்காரமே ஊழிக்காலத்தின் கோரத்தாண்டவமாக நெஞ்சை பிளிந்தது. வழமையாக நிலவில்லா வானத்தில் மின்னும் சிறிய வெள்ளி மீன்களையும் கூட அன்று முகில் மூடி மறைத்திருந்தது. அந்த தெருவில் தொலைவுக்கொரு தூரத்தில் நாட்டப்பட்டிருந்த மின்சார விளக்குகளின் ஒளியை தன்னும் நிலத்திற்கு வந்து சேராவிடாமல் பின் பனி முட ஆரம்பித்துவிட்டது. சுந்தம் வாத்தியார் நடையில் ஏற்படும் சலிப்பை மறைக்க எதையோ வலிய முயன்று பேசிக்கொண்டு வந்தார். அவருடன் நளினி கூட வந்ததால் அது அவருக்கு பெரிய சங்கடமாக இருக்கவில்லை. மற்றைய ஐந்து வயது சிறுமிகள் போல்லல்லாது அதிகம் பேசாதவள் நளினி. கதைக்க வேண்டுமாயின் கதை கேட்ப்போரின் வயதிற்கு தன்னை மாற்றி சுவாரசியமாக கதைசொல்ல தெரிந்த தந்தையின் வலைகளில் எந்தப்புறாவும் ஒருதடவை விழுந்துதான் ஆகும். அதனால் தான் நளினிக்கும், தந்தையின் கதை தொடர்ந்து போகும் போது, தந்தையிடம் எதையாவது கேட்பதையோ அல்லது அதற்கு இன்னொன்றை சொல்வதையோ தவிர்க்க முடியவில்லை. சில நேரங்களில் நடந்தும், சிலநேரங்களில் தனது சின்னக்காலால் ஓடியும் தந்தையின் நடைக்கு ஈடு கொடுத்துக்கொண்டுவந்தாள் சிறுமி. .

கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலத்திற்கு மேல் நடந்து விட்டார்கள். இன்னமும் ஒரு 15 நிமிடம் நடந்தால்தான் வீடு வரும். ஆனால் பாதை சிறிய ஒழுங்கையாக மாறியதால் அங்கு தெருவிலிருந்த மாதிரி தொலைத் தூரத்திற்கு தன்னும் மின் கம்பங்கள் இல்லை. சிறுமி நன்றாக களைத்தும் போய்விட்டள். சுந்தரம் வாத்தியார் பிள்ளையை ஒருகையில் பிடித்த படியும் மறுகையில் மனைவிக்காக, சிறு பொட்டலமாக கட்டிஎடுத்துவந்திருந்த பொங்கள்,புக்கையும் கொண்டபடியும் அந்த தெருவிலிருந்து ஒழுங்கைக்குள் இறங்கினார்.

அந்த ஒழுங்கைக்குள் இறங்கியவுடன் பாம்பின் வாய்குள்ளால் போகத்தொடங்கியிருக்கும் தவளையை போல ஒரு உணர்வு அவருக்கு வந்தது. என்ன? இந்த பாதை தான் முடிந்துவிட்டதா? அல்லது அவர்களின் பயணம்தான் இத்தோடு முடிந்துவிட்டதா? என்று அவருக்கு குளப்பமாக இருந்தது. அவரின் கையில் தான் பிடித்திருப்பது தனது பிள்ளைதானா என்பதைக்கூட கண்டுகொள்ளமுடியாத இருட்டு. ஒரேமிக்க தடுமாறிப் போய்விட்டார் சுந்தரம். ஒரே இழுவையில் ஒற்றை கையால் பிள்ளை இழுத்து தூக்கி எடுக்கிக்கொண்டார். திடுதிடுப்பென பாதை பயங்கர இருளாக மாறியதின் ஆச்சரிய மயக்கத்திலிருந்து விடுபட்டிருக்காத சிறுமி, தந்தையின் பதட்டமான முரட்டு தூக்கலால் ஒரு கணம் ஈடாடிப்போய்விட்டாள். அடுத்தகணம் நினவுக்கு வந்து "என்னப்பா அது"? என்றாள்.

சுந்தரம் வாத்தியார் பள்ளிப் பாடங்களை மட்டும் அல்ல, சாத்திர சம்பிரதாயங்களை எல்லாம் கூட அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து படித்து வைத்திருப்பவர். சில காலத்திற்கு முன்னர் வரை, பேய், பிசாசுகள் என்றல், வழித்துணக்கு வரும் பள்ளி தோழர்களாக பாவித்து கையில் எட்டி பிடித்து "வாடா மைச்சான், நானும் அங்கைதான் போறேன்" என்று சொல்லி தோளோடு தோள் போட்டு சேர்ந்து பயணிக்கும் இயல்புடைய திட நெஞ்சத்தவர். நளினியோ, தந்தை ஒரு அடி பாய்ந்தால் தான் எட்டடி பாயும் குட்டி. உண்மையை சொல்வதானால் சுந்தரத்தாரின் நெஞ்சுதிட்டம் இன்றைக்கு மெல்ல மெல்ல கரைந்து போய், குளம் வற்றி சுடுகாடானது நளினியின் இந்த ஆச்சரியமான இயல்பால்த்தான்.

பிறந்து மூன்று வயது வரும் வரை சுந்தரத்தார் பிள்ளையில் எதையும் பெரிதாக வித்தியாசமாக அவதானித்து இல்லை. நளினி , சிறுவர்கள் தேடி விளையாடும் எதிலும் பெரிய ஆர்வம் காட்டாத பிள்ளை. தான் கண்டவற்றை சிலநேரம் வைத்து ஆராய்ந்துவிட்டு தூக்கி எறிந்துவிட்டு போய் அப்பாம்மாவிடம் சேர்ந்துவிடுவாள். அவளாக கதை,கதை என்று அடம்பிடிப்பதில்லை. ஆனால் பாட்டி தனக்கு தெரிந்தவற்றை எல்லாம் சேர்த்தும், திரிந்தும் இடையறாத வசந்த காலநதியாகா கதைகள் சொல்வாள். நளினி மற்றைய பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடவும் அதிகம் போகமாட்டாள். அந்த ஆக்கமான கதைகளின் தாக்கமோ அல்லது பிள்ளையின் இயல்பான சுபாவமோ தெரியாது, பிள்ளைக்கு இருந்த, வயதுக்கு மிஞ்சிய மன முதிர்ச்சியை மட்டும், முதல் தடவையில் காணும் அயலவர் கூட தெளிவாக இனம் காணத்தக்கதாக இருந்தது.

நளினிக்கு மூன்று வயதுக்குக்கிட்ட இருக்கும் போதுதான் பெற்றோர் அவளை இனம் கண்ட அந்த சம்பவம் நடந்தது. அவளோடு மிகவும் வாரப்பாடக இருந்த அப்பம்மா ஒருநாள் அவளுடன் இருந்து கதைத்துக்கொண்டிருந்துவிட்டு “தலை இடிக்குது பிள்ளை, நீ போய் மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடு” என்றுசொல்லிவிட்டு வந்து உள்விறாந்தையின் மூலையில் இருந்த தடுக்கு பாயில் வந்து படுத்து விட்டாள். வெளியே பாட்டி திரும்பி வருவதற்காக சில நாளிகைகள் காவல் இருந்து பார்த்துவிட்டு அலுத்துப் போய்விட்ட நளினி உள்ளே வந்து பார்த்தாள். அப்பம்மா யாரையும் அடையாளம் காணத்தக்க நிலையில் இல்லை. அரை மயக்கத்தில் இருந்து கொண்டு எதையோ புயத்திக்கொண்டிருந்தா. நளினி ஓடிப்போய் அப்பாவை கூட்டிக்கொண்டு வந்தாள். அம்மாவை கூட்டிக்கொண்டு வந்தாள். வைத்தியர் வந்து பார்த்தார். உறவுகள் வந்து பார்த்தார்கள். ஆனால் பாட்டி நினவுக்கு திரும்பவில்லை. நளினி அப்பம்மாவுடன் பாயின் அருகில் அமர்ந்திருந்தாள். யார் சொல்லியும் நகர மறுத்துவிட்டாள்.

மூன்று நாட்கள் பாட்டி இதே மயக்க நிலையில்தான் இருந்தாள். அந்த மூன்று நாளும், நளினியின் வாழ்க்கையும் அந்த பாயடியில்தான்.அன்று, மிகப்பெரிய முயற்சிகளின் பின்னர் நளினியை தாயும், தந்தையும் அழைத்துவந்து, படுக்கையில் தமக்கு இடையில் படுக்க வைத்துவிட்டு தாமும் தூங்கலாயினர். மூன்று நாட்களிலும் இன்றுதான் அவர்களுக்கு அயர்ந்து தூங்க சில மணித்தியாங்கள் தன்னும் கிடைத்தது. கொஞ்ச நேரம் நன்றாக அயர்ந்து தூங்கியிருப்பார்கள். காலையை அண்டும் நேரம் நளினியின் தாய், மங்கை திடுக்கிட்டு விழித்து, “இஞ்சேருங்கோ மாமி எதோ அந்தரப்படுமாப்போலை ஒரு சத்தம் கேட்குது” என்று சுந்தரத்தாரை எழுப்பினாள். சுந்தரத்தார் எழும்ப முதல் துடித்துப் பதைத்து எழுந்த நளினி, “அப்பம்மா எழும்பிவிட்டா, அப்பம்மா என்னைதேடிக்கொண்டு போறா, அப்பம்மா.. அப்பம்மா நான் இஞ்சை நிக்கிறன்” என்று கத்திய படி ஓடிப்போய் வாசல் கதைவையும் திறந்துவிட்டாள். தாயும், தகப்பனும் ஓடிப்போய் கதவைப் பூட்டி பிள்ளையை தூக்கி கொண்டு வரும்போது அவளின் முகம் நிலை குலந்து கோரமாக இருந்தது. "என்னை இன்றிரவு படுக்க வைத்து அப்பம்மாவை தவறி எங்கோ போக வைத்துவீட்டீர்கள்" என்று கோபத்தோடு பேசிக்கொண்டு வந்தாள் நளினி.

இப்போது பெற்றோர் இருவரும் கிளவிக்கு எப்படி என்று பார்க்க பாயின் கிட்டப் போனார்கள். கிளவியின் உடம்பு மரக்கட்டையாக நிலத்தில் கிடந்தது. நளினி திரும்பவும் பாயின் அருகில் போய் அமர்ந்தாள். அவள் அழவில்லை. அவள் எப்போதும் கண்ணீர்விட்டு அழுததில்லை. ஆனால் அவளின் கண்களில் புரியாத ஏக்கம் ஒன்று காணப்பட்டது. தாயும் தந்தையும் அவளின் பக்கத்தில் அமர்ந்தார்கள்.

காலையில் வைத்தியர் வந்து நாடி பிடித்து சொல்ல வேண்டும். முடியாத இரவாகவும், விடியாத இரவாகவும் போய்கொண்டிருந்த அந்த அதிகாலையில், சுந்தரத்தாரின் மனத்தில் எதோ ஒன்று நெரிஞ்சி முள்ளாக நெருடத்தொடங்கியது. “என்னைத்தூங்க வைத்து அப்பம்மவை போகவிட்டு விட்டீர்கள்” என்று நளினி கோபமாக பேசியபோது அவளின் முகத்தை பார்த்து அவரே ஏங்கிப்போய்விடார். அன்று அது, சாந்தமும் அமைதியும் குடி கொண்ட அவரின் செல்லப்பிள்ளை நளினியின் முகமாக அவருக்கு தென்படவில்லை.

அதன்பின்னர் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் அவர் நளினியிடம் பட்ட அனுபவங்கள்தான் இன்றைய “புதிய மனிதர் சுந்தரம்” பிறந்ததின் அடிப்படைக் கதை. அப்பம்மாவை மட்டும் அல்ல, அவள் இறந்தவர்கள் பலர் அந்த பக்கம் வந்து போவதை கண்டு வைத்து அவர்களின் நடவடிக்கைகள் பற்றி தந்தைக்கு சொல்லி வந்தாள். தான் பிறக்க முன்னர் இருந்தவர்கள் பலரின் உருவங்களை கூட அச்சொட்டாக வர்ணித்தாள். அவற்றில் ஒன்றாகத்தான் சுந்தரத்தார் கேட்க விரும்பாத கதையான சீதாவையும் பற்றி சொன்னாள்.

சீதாவுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது அந்த ஊரார் ஒருவருக்கும் இன்றுவரை தெரிந்திருக்கவில்லை. ஆனால் அவளோ சீதா அவர்களோடுதான் அங்கே வாழ்ந்து வருகிறாள் என்று வாதாடுவாள். விரும்பியோ விரும்பாமலோ, சீதா எங்கே போய்விட்டாள் என்பது சுந்தரத்தாருக்கு விளங்கிவிட்டது. ஆனால் அவருக்கு அதை நாலு பேருக்கு சொல்லி விபரம் விளங்க வைக்க அவரிடம் சாட்சியம் இல்லை. மனத்திலும் துணிச்சல் இல்லை. இப்படி சில நளியின் நடத்தைகள் அவரின் மனதை தொடர்ந்து குடைந்துகொண்டிருந்தன. அதனால்த்தான் ஆறு மாதங்களுக்கு, முன், தான் சாத்திரங்கள் எல்லவற்றையும் படித்திருந்தாலும், ஒருதடவை, ஆறுதலுக்கு பக்கத்து ஊர் சாத்திரியிடமும் “பிள்ளையின் குறிப்பை கொண்டு போய்க்காட்டுவம்” என்று போய் காட்டினார்.

சாத்திரியார் நிதானமாக பேசினார். "இதோ பாருங்க, அவள் தேவகணம். நேரத்திற்கு நேரம், சிலசில தரிசனங்கள் வந்து போகுது. வாறவையல் சில பேர் அவளிலை இருக்கிற அன்பாலை அவளோடை சேர்ந்தும் விடுகிறார்கள். உங்களுக்கு அவளில் வேறு வேறு முகங்கள் தெரியலாம். ஆனால் அவளுக்கு ஆக்களை தெரிவதால் பயம் வருவதில்லை. நீங்கள் பயந்தால், இந்த வருடம் அம்மனூர் காளியின் பொங்கள் வரும் போது ஒரு நேர்த்திக்கடன் வைத்து பொங்கிவிடுங்கள். காளிக்குக்கிட்ட எந்த பெரிய மிடுக்கும் அவ்வளவு துணிச்சலாக வாலாட்ட வருவதில்லை. ஐயரிட்டை உள்ளதை சொல்லி ஓதி ஒரு நூலையும் வாங்கி கட்டிப்போடுங்கோ! அவ்வளவுதான் என்றார்".

சாத்திரியிடம் கேட்டவை எல்லாவற்றையும் வீட்டுக்கு வந்து மங்கையிடமும் சொல்லி மனதில் நேர்த்திக்கடனை ஏற்படுத்திக்கொண்டார் சுந்தரம். அதன் பின் இந்த ஆறுமாதகாலமும் அவருக்கு பொழுது மிக இலகுவாகப் போய்விட்டது. நளினியும், வேண்டாதது எதுவும் வந்து அவரிடம் சொல்லவில்லை. கொஞ்சம் வளரத்தொடங்கியதாலும், அப்பம்மா இல்லாததாலும் மற்றைய சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடத்தொடங்கினாள்.

பிள்ளையின் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றத்தால் மனத்திருப்தி அடைந்து விட்ட சுந்தரம் வாத்தியார் இன்று அம்மனூர் போயிருந்தார். காளியின் பொங்கள் முடித்து, மடை பரவி, பூசை முடித்து, பிரசாதங்கள் பங்கிட்டு, கனநாள் காணதவர்களை கண்டதால் அவர்களுக்கும் ஒரு கதை சொல்லிவிட்டு வர பொழுது நள்ளிரவை தாண்டி விட்டது. இரவில், இந்த தெருவில் பஸ் கிடையாது. அதனால்த்தான் சுந்தரமும், பிள்ளையும் கால்நடையாக இன்று நடந்து வீடு வந்து கொண்டிருந்தார்கள்.

இருட்டோ கச இருட்டு. சுந்தரத்தாருக்கும் ஏங்கிய மனம். “இவ்வளவு கஸ்டப்பட்டு பொங்கி, படைத்து, பேய் கழித்து, பிள்ளையை காப்பாற்றிவிட்டு, இப்படி கச இருட்டுக்கிளாள் அவளை கூட்டிக்கொண்டு போனால், பாதையில் ஏதாவது திரும்ப வந்து சேர்ந்துவிடப்போகிறதே” என்றுதான் அந்த இருட்டை கண்டவுடன் பரதவித்தார் வாத்தியார். தந்தையின் நாரியில் ஏறி அமர்ந்தபின் தந்தையின் மனநிலையை அறிந்து கொண்டுவிட்ட நளினி “அப்பா இங்கே ஒருத்தரும் இல்லை. நீங்கள் பயப்படாதேங்கோ” என்று தைரியமுட்டினாள். ஒருகணம் சுந்தரத்தாரின் மனத்தில் “இது எப்படி இவளுக்கு தெரிகிறது. நான் இன்று பட்ட கஸ்டம் எல்லாம் ஏற்கனவே வீணாகிவிட்டதோ” என்று ஒரு நினைவு வந்தாலும், “யாரும் இல்லை” என்றுதானே சொல்கிறாள் என்று சமாதானம் அடைந்தார்.

இருந்தாலும் வீட்டுக்கு கெதியில் போய்விட வேண்டும் என்று நினத்து விறுக்கு விறுக்கு என்று நடக்கத்தொடங்கினார். இறுதியில் வீட்டுக்கு கிட்ட வந்து சேர்ந்து விட்டார். வீட்டுக்கு இரண்டு சந்திகள் இருக்க வந்த பின்னர்தான் நடையை சிறிது இளக்கினார். இதுவரைக்கும் காடாயும், வெளியாயும் இருந்த பாதையில், இப்போது வீடுகள் வரத்தொடங்கி விட்டன. ஆனாலும் வீடுகளில் விளக்குகள் அணைக்கப்பட்டுவிட்டன. அவற்றில் வதிவோர் எல்லோரும் தூங்க போய்விட்டார்கள். ஆக அங்கேயும் மிஞ்சி இருந்தது அந்த பயங்கர நிசப்த்தம் தான்.

இன்று பகல் முழுவதும் இருந்த கடுமையான வேலையாலும், வீடு போக ஒருமணித்தியாலத்திற்கு மேல் நடந்ததாலும் இப்போது சுந்தரம் நன்கு களைத்து போய்விட்டார். இதுவரையும் தந்தையின் இடுப்பில் இறுக்கப்பிடியில் இருந்த நளினி தான் இறங்கி நடக்க வேண்டும் என்றும் கேட்டாள். சுந்தரம் அவளை இறக்கி நடக்க விட்டுவிட்டு தான் அருகில் நடந்தார். இப்போது அவர் மனத்தில் சற்று தைரியம் வந்துவிட்டது. மீண்டும் சும்மா எதைவது கதைக்கக்க வேண்டும் போல் தோன்றியது. அப்போது அங்கே சற்று தள்ளி காணப்பட்ட வீட்டை காட்டி அது யாருடைய வீடு என்று தெரியுமா என்று நளினியை கேட்டார். அந்த வீடு, அந்த இருட்டில் ஒருவர் கண்ணுக்கும் புலப்படத்தக்கதாக இருக்கவில்லை. அவர் கையை தூக்கி சுட்டி காட்டிய போது அவரின் கையை அவர்தன்னும் காணத்தக்கதாகவும் இருக்கவில்லை. அதை உடனே உணர்ந்து கொண்ட சுந்தரத்தார், அவளின் பதிலுக்கும் காத்திருக்காமல், அதற்கிடையில் கதையை மாற்ற “நீ சிற்றம்பலம் மாமாவின் பிள்ளைகளுடன் விளையாட போவாயா” என்றார். இன்னமும் நளினி பதில் ஏதும் அளிக்கவில்லை. நளினியிடமிருந்து பதில் வராததால் பிள்ளை இருட்டில் தொலைந்துவிட்டாளோ என்று ஏங்கிப்போய் பிள்ளை எங்கே என்று தேடினார். அவளும் களைத்திருந்தால் இரண்டு அடிகள் பின்னால் நடந்து கொண்டிருந்தாள். பிள்ளையை திரும்பவும் கையில் பிடித்து நடப்பதற்கு தானும் இரண்டடி பின்னால் போனார்.

சுந்தரத்தார் காட்ட முயன்றவீடு போமன் திருச்சிற்றம்பலத்தினுடையது. எப்போதும் அடாவடித்தனம் அவரின் வாழ்கை முறை. சுந்தரம் வாத்தியாரை தனது பரம எதிரியாக கொள்பவர் சிற்றம்பலம். அவரின் வீடு ஒழுங்கைக்கு வலதுபக்கத்தில் இருந்தது. ஒழுங்கையில் இருந்து பிரிந்து சென்ற இன்னொரு குச்சொழுங்கையில் வளவின் படலை இருந்தது. அவரின் வீட்டுக்கு வலது பக்கத்துவீட்டில் முத்தம்மாவும், செல்லப்பனும் வசித்து வந்தார்கள். அவர்கள் மதிய வயதை அடையாவிட்டாலும் அவர்களுக்கு பிள்ளைகள் இல்லாமல் போய்விட்டது. கிட்டத்தட்ட 30 நாளுக்கு முன்னர் தெருவில் நடந்த விபத்தொன்றில் செல்லப்பனும் இறந்து போய்விட்டான். முத்தம்மாவும் செல்லப்பனும் ஒருவர் மீது ஒருவர் மீது வைத்திருந்த அன்பால், விபத்தை பார்த்தவர்களின் வாக்குமூலப்படி, அவன் இறக்கும் போது அவளை நினத்து ஏங்கிக் கவலைபட்டு, "முத்து, முத்து .." என்று முனகிக்கொண்டுதான் இறந்தான். அவளுக்கும் அவனின் பிரிவை தாங்க முடியவில்லை. முத்தம்மா அந்த அதிர்வால் கிட்டத்தட்டப் பேய் பிடித்தவள் மாதிரி இந்த 30 நாளையும் கழித்துவிட்டாள். யாராலும் அவளை சமாதானப்படுத்த முடியவில்லை.

செல்லப்பன் இறந்தது ஒரு பஞ்சமியில். அதனால் உறவினர்கள் காடாத்திய பின்னர் வந்து வீட்டில் கழிப்புகள் கழித்தார்கள். பல பாதுகாப்பு முறைகள் செய்தார்கள். முத்தம்மாவையும் வீட்டை விட்டு தங்களுடன் வந்துவிடும் படி கெஞ்சினார்கள். ஆனால், அவளின் மனம் பட்டுக்கொண்டிருந்தபாட்டில் அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அவளால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. மேலும் செல்லப்பன் திரும்ப வரப்போகிறானாயின், வந்து தன்னையும் அழைத்துக்கொண்டு போகட்டும் என்று வேண்டா வெறுப்பாக அவர்களுக்கு பதில் அளித்தாள். 31 நாளுக்குள் அந்த வீட்டிலிருந்து இன்னொன்று போகும் என்று கணக்கு வைத்த உறவினர் தம்மைத்தாம் காப்பற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். வேறு வழியின்றி, நாளைக்கு தாம் திரும்பி வந்தால் பயம் இல்லை என்று அவளை தனியே விட்டுவிட்டு போய்விட்டார்கள். நாளைக்கு வந்து 31டை முடித்து, அவளுக்கு ஆறுதல் கூறி, அவளின் வாழ்க்கையை மீளத் திருத்தி அமைப்பது அவர்களின் எண்ணம்.

இது வரையும் முத்தம்மா புத்தி சுவாதீனக்காரி மாதிரி, பகலிலும், இரவிலும் செல்லப்பனை கூப்பிட்டு, கூப்பிட்டு அவனை வந்து தன்னையும் அழைத்து கொண்டு போகும்படி பிதற்றி கொண்டு திரிந்தாள். இது அயலவர்களுக்கு பீதியை அதிகமாக்கியது. அவள் இப்படி செய்வதால் தன் மனைவியின் வேதனையைக்கண்டு கட்டாயம் செல்லப்பன் அந்த பக்கங்களில் உலாவி வருவான் என்று நினைத்து இந்த நாட்களில் அவர்கள் ஒருவரும் இரவில் நேரமானதின் பின் வீடுகளுக்கு வெளியே வரமாட்டார்கள். நேரத்திற்கே விளக்குகளை அணைத்துவிட்டு தூங்கப் போய்விடுவார்கள்.

எவ்வளவு வேகமாக நடந்தும் தந்தந்தையும் மகளும் இன்னமும் வீடு போய்சேர்ந்த பாடில்லை. சுந்தரத்தாரும், மங்கையும் நாளைக்கு காலையில் போய் முத்தம்மாவுக்கு ஆவன செய்து உதவவும் வேண்டும். அதற்கு வீட்டில் நேரத்திற்கு படுத்து தூங்கவும் வேண்டும். இப்படி அவர் மனத்தில் திட்டங்கள் போட்டுக்கொண்டிருக்கும் போது, அவரின் நினைவை குழப்பத்தக்கதாக, அவருக்கு சற்று தள்ளி யாரோ அசைவது போன்ற அசுகைகள் கேட்டது. சுந்தரம் வாத்தியாருக்கு, பஞ்சமியில் இறந்த செல்லப்பனின் 31 கழிந்து போக இன்னும் சில மணித்தியாலங்கள் இருக்கிறது என்பது திடுதிடுப்பென நினவுக்கு வந்தது. மகளிடம் கேள்வியை கேட்ட சுந்தரம்வாத்தியாரின் மனதில் இப்போது வந்தது முத்தம்மாவின் அண்மைய ஆபத்தான நடத்தைகள்தான். அவர் அந்த செல்லப்பனின் வீட்டு சந்தியில் நின்று தடுமாறாமல் அவசரமாக தனது வீட்டுக்கு போய்விட வேணும் என்று எண்ணினார்.

அந்த இருட்டில், அடங்கிப்போய்விட்ட கிராமத்தில், மனிதர்கள் நடமாடத்தக்க ஒரு சந்தர்ப்பமும் இருக்கவில்லை. அதனால் மனிதர்கள் அல்லாதன உலாவும் அந்த சத்தங்களை தன்னைபோல சாதாரண மனிதர்களே கேட்க கூடியதாக இருக்கிறது என்பதை அவர் அன்று கண்டு கொண்டார். அப்படியாயின் நளினி கட்டாயம் செல்லப்பனை பார்த்துவிடப் போகிறாள் என்று நினைத்த சுந்தரத்தார், பிள்ளையை அவளின் கையைப் பிடித்து இழுத்துகொண்டு ஒட முயன்றார். அப்போது அவரின் தலைக்கு மேல் கேட்போரின் இரத்தத்தை உறைய வைக்கத்தக்கதாக ஒரு பயங்கர அலறல் சத்தத்துடன் பறந்து வந்த ஆந்தை ஒன்று அவரின் தலையை தாக்க முயன்று குறி தப்பி "பட் பட்" என்று இறக்கைகளையை அடித்துக்கொண்டு போய் பக்கத்து மரமொன்றில் இருந்து திரும்பவும் அலறியது. இது வரையும் எதையும் பேசாது வந்த நளினி, தனது கையை பிடித்து இழுத்துகொண்டு ஓட முயன்ற தந்தையிடம் கையை பறித்துவிட்டு, “அப்பா அப்பா பொறு பொறு.” எனறு கத்தினாள். " நீ வேலன் மாமாவை இடிக்க போகிறாய் தள்ளி வா என்று சத்தம் போட்டு கூப்பிட்டாள்". கையை பறித்த அவளை திருப்பி ஓடிப்போய் பிடிக்க என்று அவசரமாக திரும்பிய சுந்தரதாரின் கால் இடறி, விரல் சிதறி போய்விடத்தக்க கடுமையாக பாதையில் இருந்த ஒரு கல்லில் அடித்துவிட்டது.

சுந்தரத்தார் அதிர்ந்து போய் அதே இடத்தில் நின்றுவிட்டர். அவர் என்றுமே உணர்ந்திருக்காத இந்த கல்லடியின் வேதனை தாங்க முயல்கையில் மகள் சொன்ன வேலனின் பெயரை கேட்டதும் ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டு வருவது போல இருந்தது. கடைசியாக வேலைனை சுந்தரத்தார் பார்த்த்து, போமன் சிற்றம்பலத்தின் வஞ்சகத்தால் வேலனின் உடம்பு படாத வேதனைகளை எல்லாம் பட்டு இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததைதான். அது நடந்தது ஆறு வருடங்களுக்கு முன் தான் என்றாலும் ஞாபகப்படுத்தப்பட்டால், அவருக்கு அந்த மரண அவலம் இப்போது நடந்து கொண்டிருப்பது போல ஒரு பிரமை எப்போதும் வரும். அவர் அதே இடத்தில் நின்றுவிட்டார். பூமியை தனது காலின் கீழ் உணரமுடியவில்லை. தான் கீழே விழப்போகிறார் என்றும் தன் பிள்ளையை இந்த நடு நிசியில் யார் வந்து பொறுப்பெடுக்க போகிறார்கள என்றும் எண்ணித்தவித்தார். அவர் கண்கள் தம்மைத்தான் இழுத்து மூடின. உடல் நிலத்தை நோக்கி சரியத்தொடங்க்கியது. அந்த இருட்டில் தந்தைக்கு நடப்பவற்றில் நூறில் ஒன்று தன்னும் நளினிக்கு தெரியாது. ஆனால் அவள் தனது உலகத்தில் தான் கண்ட காட்சியால் தானும் ஒருதடவை அதிர்ந்து போய்விட்டாள்.

வேலன் ஆஜானுபாகுவான உடல் உடைய நடுத்தர வயதுடைய ஆள். பகல் முழுவதும் அந்த உடம்பை வைத்து கடுமையாக உழைப்பான். அருகில் இருப்போர் எல்லோருக்கும் உழைக்கவும் உதவுவானும். வேலை முடிய அப்படியே போய், உழைத்த உடல் அலுப்பு, தீர மூக்கு முட்டும் வரை குடிப்பான். அதன் பின், இரவாகிவிட்டால், கிராமத்தில் எல்லோரும், அவன் சொல்வதை கேட்டுத்தான் ஆகவேணும். தனது பராக்கிரமத்தை வெளிக்காட்ட ஒவ்வொரு கையிலும் ஒரு ஆம்பிளையை களுத்தில் பிடித்து தூக்கி வைத்து காட்டித்தான் மிரட்டுவான்.

அந்த கிராமத்தில் விட்ட குறை, தொட்ட குறைகளினால் இரவுகளில் சுத்தும் ஆவிகளில் வேலனையும் பலதடவை நளினி கண்டிருக்கிறாள். உயிராய் இருந்த போது வேலன் பகலில் எவ்வளவு நல்லவன் என்பதையும், ஆனால் இரவில் குறுக்கே எதிர்ப்பட்டால் எவ்வளவு கோபக்காரனாக மாறுவான் என்பதும் சுந்தரத்தாருக்கு தெரியாததல்ல. ஆனால் அவனின் இந்த நிலையில் அவரால் அவனைக் காண முடியவில்லை. நளினிக்கு அவனைக்காண முடிந்தது மட்டுமல்ல, கோபம் வந்தால் அவனின் கையில் அகப்படுவோருக்கு என்ன நடக்கும் என்பதில், சுந்தரம்வாத்தியாரை விட அவளுக்கு கூடவும்தெரியும். அதனால் தான் இன்று அவளும் பயந்துபோய்விட்டாள்.

தந்தை விட இருந்த பிழையால் கோபம் கொண்ட நளினி ஒரு அடி முன்னால் வந்து ஆடி விழப்போன சுந்தரத்தாரின் முதுகில் தன் சின்னக்கையால் ஒரு குத்து போட்டு விட்டு “என்ன அப்பா உனக்கு மூளையே இல்லையா? அவர் சித்தம்பலம் மாமாவை தாக்க வளம் பார்த்துகொண்டு திரிகிறார். நீ அவருடன் மோதுப் பட்டிருந்தாயானால் உன்னைத்தான் இதிலே வைத்து அடித்து முடித்திருப்பார்” என்றாள்.

அந்த சிறிய அடி சுந்தரம் வாத்தியாரின் உடம்பில் திரும்ப உணர்வை கொண்டு வந்தது. மயக்கம் வந்து கிழே விழப்போனவர் தன்னைத்தான் சுதாகரித்துவிட்டார்.ஆனால் இந்த சலசப்பினால் அவருக்கு சற்று தள்ளி சில உருவங்கள் எதோ இடர்ப்படுவது போல உணர்ந்தார். பயங்கர கனவு கண்டுவிட்டு நித்திரையால் எழுந்தவர் மாதிரி திரும்ப பிள்ளையை தூக்கிக்கொண்டு ஒடலானார். அதே நேரம் அவருக்கு வேறும் யாரோ ஒடுவது போலவும் சத்தங்கள் கேட்டன. தங்களைத்தான் ஏதோ ஒன்று துரத்த ஆரம்பித்திருப்பது போல ஒரு பிரமை தென்பட்டது. பின் முன் பார்க்காமல் தலை தெறிக்க ஓடலானார். “அப்பா அது மற்றப் பக்கம் ஓடுகிறது போல இருக்கிறது. எங்களைத் துரத்தவில்லை. நீ ஏன் இப்படி ஓடுகிறாய்” என்றாள் நளினி. ஆனால் சுந்தரம் வாத்தியாருக்கு, நளினிக்கு தரிசனம் கொடுப்பவற்றை தன்னாலும் எல்லாவகையாலும் உணரமுடிகிறது என்பது தெளிவாக தெரிந்தது. எப்படியாவது அவற்றிடமிருந்து தப்பிவிட வேண்டும் என்று எண்ணினார்.

ஒருகாலத்தில் தான் எல்லாவற்றுக்கும் துணிந்தவர் என்றும், எல்லாவற்றையும் படித்துவிட்டதால் தனக்கு எல்லாம் விளங்குவதாக நினைத்து தன்னை அரைப்பக்க பகுத்தறிவு வாதியாக கண்டு, பேய்கள் பிசாசுகளை மறுத்து வாழ்ந்தவர் சுந்தரம் வாத்தியார், இன்று நிச்சயமாக அவற்றால் எல்லாப்பக்கமும் தான் சூழ்ந்து விட்டிருப்பதை நினைத்து உயிரே போய்விடப்போவது போல பயந்தார். சற்று முன்னர்தான் காளிகோவிலில் பூசையை முடித்து விட்டு சந்தோசமாக மகளுடன் பேசிக்கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தாவர் சுந்தரம். இந்த ஆபத்தான நிலைக்குள் எப்படி மெல்ல மெல்ல சறுக்குண்டார் என்பது அவருக்கு இப்போது பிரித்துப்பார்த்து விளங்கி கொள்ளத்தக்க விடையமல்ல. இப்போது அவருக்கு தான் காளியின் ஆட்சி நிலங்களை கடந்து எங்கோ பாதுகாப்பில்லாத இடத்திற்கு வந்துவிட்டது மட்டும் தெரிந்தது.

அன்று அங்கு தான் தனியவாக நின்றிருந்தால் இந்த மாதிரி இடக்குமுடக்காக எதுவிடமோ வகையாக மாட்டிய பின்னர் மனிதக் கால்களால் ஒடித்தப்பிவிட முடியும் என்று நினத்து ஒட முயன்றிருக்க மாட்டார். அதிலேயே நின்று வருவதை ஏற்பதே சரியென்று நினத்திருப்பார். ஆனால் அவருக்கு இன்று பிள்ளையின் உயிரையும் காப்பாற்ற வேண்டியிருந்ததால் தொடந்து ஓடி பார்ப்போம் என்று ஒரு நப்பாசை வைத்து எடுக்கிய பிள்ளையுடன் வீட்டை நோக்கி ஓடினார்.

தொடரும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மல்லை, ஞாயித்துக் கிழமையும், அதுவுமா, ஆளை ஒரு உலுக்கு, உலுக்கிப்போட்டுத்,போதாக்குறைக்குத் 'தொடரும்' வேற போட்டுட்டுப் போயிருக்கிறியள்! :wub:

Posted

நன்றி புங்கையூரன்.

நீங்கள் என்ன கஸ்டப்படியள் என்பது விளங்குது.

இராத்திரி சாப்பிட்டுவிட்டு படுத்த ரொட்டிக்கும், உருளைகிழங்கு கறியுக்குமே "காட்" விலாவெலும்பை உடைத்துக்கொண்டு வெளியே போகிறேன் என்று அடம் பிடித்தது. போதாக்குறைக்கு அந்த கனவுகளுக்குள் கனவாக யரோ வந்து கதவில் தட்டும் சத்தமும் தொடர்ந்து கேட்டது.

ஒன்று, இனி அந்த கிந்தியனின் நெய் ரொட்டியும், உருளைகிழங்கு கறியும் சாப்பிட கூடாது. அல்லது இந்த கதையை தொடர்ந்து எழுதிபோட்டு படுத்து தூங்க முடியாமல் தவிக்கேலாது.

முடிவை எடுத்துவிட்டு தொடர்கிறேன் (நேரம் கிடைக்கும் போது) :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மல்லை அரசியலை விட்டுட்டு கெதியாய் இதை எழுதுங்கோ சுவாரசியமாய் இருக்கு

Posted

மல்லை அரசியலை விட்டுட்டு கெதியாய் இதை எழுதுங்கோ சுவாரசியமாய் இருக்கு

ஆர்வத்திற்கு நன்றி ரதியக்கா

முயற்சிக்கிறேன். அடுத்த பகுதி அதிகமாக அடுத்த சனிக்கிழமை பகல் எழுதி இரவு போடுவதுதான் நடக்க கூடிய சந்தர்பமாக இப்போது காணப்படுகிறது. அரசியல் மாதிரி இதை நேரே யாழில் எழுத முடியவில்லை. Word ல் எழுதி வந்துதான் யாழில் போட்டேன்.

உங்களுக்கு, தமிழ் சிறியிற்கு, சாத்திரியாருக்கு புங்கையூரனுக்கு Horror கதைகள் பிடிக்கும் போலை. இருக்கு.

நன்றி

Posted

நான் ஊரில், இருந்த போது... இதனைப் போன்றதொரு பேய்க் கதையை கேள்விப்பட்டுள்ளேன்.

பஞ்சமியில் செத்தால்... அடுத்தடுத்து, அஞ்சு பேர் சாவார்கள் என்பது, உண்மையா?

அப்படி தான் சொல்வார்கள்... ஒரு வீட்டில் அவ்வாறு நடந்ததையும் அவதானித்திருக்கிறேன்...

ஆனால் பஞ்சமியில் யாரும் இறந்தால் வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்பார்கள்... வளர்த்தால் அதன் உயிர் தான் முதல் போகுமாம் என்று... (உண்மை பொய் தெரியாது.. உண்மையாக இருந்தால் இங்கும் மனிதர்கள் சுயநலவாதிகளாக செயற்படுகிறார்கள் என்று அர்த்தம்)

அதே போல் வீட்டில் தென்னம்பிள்ளை நடுவார்கள்... அதற்கு காரணம் தெரியாது. ஆனால் மாவீரர் தினத்தில் மாவீரர் குடும்பத்திற்கு தென்னம்பிள்ளை வழங்குவது இதனால் தானோ என்று யோசித்திருக்கிறேன்...

சாதகத்தில் தேவகணங்களாக உள்ளவர்களுக்கு பேய் தெரியுமாம். :D

ஆம் அவ்வாறு தான் கூறுவார்கள். எனக்கு தெரிந்த தேவகணம் உள்ள சில நபர்கள் ஓரிரு தடவை தமக்கு அவ்வாறான அனுபவம் நேர்ந்ததாக கூறியுள்ளார்கள்.

யாழ்ப்பாண டவுனில் விக்னா கல்வி நிலையத்தில் சுதாகரன் சேர் முன்பு ஒரு சம்பவம் கூறியிருந்தார்.

தனது தந்தையார் (தந்தை என்று தான் நினைக்கிறேன்) தேவகணம் உள்ளவர் என்றும்..... அவர் ஒருநாள் வீட்டு வாசலில் நிற்கும் போது தான் வீட்டு கேட் ஐ திறந்து கொண்டு உள்ளே வந்ததாகவும் அப்பொழுது யார் பக்கத்தில் கதைத்துக்கொண்டு வந்தது என்று தந்தையார் தன்னை கேட்டதாகவும் கூறினார்..

உண்மையில் அவருடன் யாரும் கதைத்துக்கொண்டு வரவில்லை. தனியாக தான் வந்தவராம்... ஆனால் தந்தைக்கு ஒரு நபர் கண்ணில் பட்டிருக்கிறார்.

  • 1 month later...
Posted

முத்தம்மாவுக்கும் செல்லப்பனுக்கும் இடையில் இருந்த உறவு தனித்துவமானது. ஒரு தம்பதிகள் பலகாலம் சேர்ந்து வாழ்ந்துவிட்டால் அவர்கள் ஒருவர் இன்றி மற்றவர் வாழமுடியாத மனநிலைக்கு வந்திருப்பதை கண்டிருக்கிறோம். காதலித்து மணமுடிப்பவர்கள் அந்த காதல் மாறாது வாழ்வர்கள் என்ற சில கற்பனை கதைகளை கேட்டிருக்கிறோம். “திருமணங்கள்” சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகின்றன என்றும் சிலவேளைகளின் சிலர் சொல்லவும் கேள்வி பட்டிருக்கிறோம். இந்த மூன்றாம் வகைதான் செல்லப்பனிதும் முத்தமாவினதும் திருமணம். அது சொர்க்கத்தில் நிச்சயக்கப்பட்து.

முத்தம்மாவின் தந்தை அவள் குமரி பருவத்தில் இருந்த போதே இறந்து போய்விட்டார். அவளின் தாய் அவளை பற்றி கவனித்ததில்லை. உண்மையில், இறந்த பின் அல்ல, தந்தை இருக்கும் போதே அவள் ஒருநாளும் முத்தாம்மாவை பொறுப்பெடுத்ததில்லை. அடிக்கடி யாருக்கும் சொல்லாமல் வீட்டைவிட்டு தனியே கிளம்பி போய்விடுவாள். இருட்டியபின் வீட்டுக்கு வருவாள். ஆரம்பத்தில், பள்ளியால் வரும் முத்தம்மா, மாலையில் தந்தை வயலிலிருந்து வீடு வந்து ஏதாவது செய்து கொடுக்கும் வரையும் பட்டினியாக இருப்பாள். வளர வளர, அப்படி நாட்களில், தானும் எதையாவது செய்து சாப்பிட்டுவிட்டு தந்தைக்கும் வைக்க பழகிக்கொண்டாள். ஆனால் திடு திடுப்பென வீட்டுக்கு வந்து குதிக்கும் தாய் அதையும் சாப்பிட்டுவிடுவாள். ஒருதடவை வீட்டை விட்டு போய் சில நாட்கள் திரும்பி வரவில்லை. கவலைப்பட்ட தந்தைக்கு எதுவும் செய்ய முடியவில்லை. முத்தம்மா பள்ளிக்கு போய் வரவும், வீட்டு வேலைகளை கவனிக்கவும் மிகவும் சிரமப்பட வேண்டி இருந்தது. சிலநாட்காளின் பின் ஒரு பிற்பகல் திரும்பி வந்த அன்றும் முத்தம்மா பள்ளியால் வந்து சமைத்து வைத்ததை சாப்பிட்டுவிட்டு குடிசைக்குள் தூங்க போய்விட்டாள்.

மாலையில் வீடு திரும்பிய தந்தை, வழமை போல கைகால் கழுவி விட்டு பிள்ளையையும் அழைத்துக்கொண்டு குசினிப் பக்கம் போனார். முத்தம்மாவுக்கு தாயிடம் பாசம் இருந்தது கிடையாது. சிலநாட்களின் பின்னர் இன்று வீட்டு வந்துவிட்டு வீட்டில் இருந்ததை எல்லாம் சாப்பிட்டுவிட்டு தாய் சுகமாக தூங்க போனதை நினைக்க அவளுக்கு கோபமாக இருந்தது. இப்போது தந்தை குசினிக்கு போய் ஏமாந்துவிடப்போகிறார் என்பதை காண அவளுக்கு கோபமும் ஏமாற்றமும் சேர்ந்து அழுகை அழுகையாக வந்தது. தனது கையை தந்தையிடமிருந்து உதறி எடுத்துவிட்டு திடீரென முத்தம்மா தேம்பி தேம்பி அழத்தொடங்கி விட்டாள். நடந்ததை அறியாமல் திரு திரு என விழித்த தந்தைக்கு குடிசையைக் காட்டி “அம்மாஅஅ தான்..”என்று ஒரு சொல் கூறிவிட்டு திரும்பவும் அழ ஆரம்பித்துவிட்டாள்

அவருக்கு எதையும் ஊகிக்க அதிக நேரம் எடுக்கவில்லை. பசியோடும் களையோடும் இருந்த தந்தைக்கும் இவ்வளவு நாளும் வராத கோபம் இன்று அடக்கமுடியாமல் வந்தது. நேரே குடிசைக்குள் சென்று மனவியை எழுப்பி “நீ இனி இந்தபக்கம் வரவே கூடாது” என்று படலை வரையும் தள்ளிக்கொண்டுபோய் தெருவில் விட்டு விட்டு திரும்பி வந்தார். அதை பார்த்த பின்னர்தான் முத்தம்மாவின் வெள்ளை மணித்துளிகள் உருண்டோக்கொண்டிருந்த மிருதுவான கன்னங்களுக்கிடையில் இருந்த வெளிறிய ஊதாப்பூ இதழ்கள் மலர்ந்து ஒர் புன்னகை அரும்பியது. வறுமையில் வாடியிருந்தாலும், வாடாத மல்லிகை மாதிரி என்றும் மலர்ந்திருக்கும் தன் அருமைச் செல்வத்தின் அருள் முகத்தை கண்டு தன் வாழ்வின் கஸ்டங்களை மறந்து கவலை தீர்க்கப் பழகியிருந்த அவர் இன்று ஒரு கணம் முத்தம்மாவின் துயரத்தைக்கண்டு வெதும்பிப் போய்விட்டார். இப்போது அவள் இயல்பு நிலைக்கு திரும்பியது கண்டு தானும் திருப்த்தி அடைந்து, அவளை அணைத்து, “அந்த தூர்தை இனி இந்த பக்கம் வரமாட்டாள், நீ அழாதே” என்று கூறிக்கொண்டு குசினிப்பக்கம் போனார்.

அன்றிரவு தந்தையும் மகளும் சேர்ந்து சமைத்தார்கள். தந்தை உணவைப் பரிமாறி, இருவரும் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தார்கள். ஆனால் அவரும், மகளும் களைத்திருந்தார்கள். தனக்கு எந்த களையாக இருந்தாலும், பிள்ளைக்கு எத்தனை வயதுதான் வந்துவிட்டாலும், அவளின் தட்டில் இருக்கும் உணவை குழைத்து அவளுக்கு ஓரிருவாய்தன்னும் ஊட்டிவிட்டுத்தான் தனது தட்டை எடுப்பார் தந்தை. அதன் பின்தான் முத்தம்மா தானாக உண்ண ஆரம்பிப்பாள். இது அவள் பருவம் அறியா நாளில் இருந்து நேற்றுவரை, இரவு சாப்பாடு நேரம், இந்த வீட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த சம்பிரதாயச் சடங்கு.

ஆனால் என்றுமே கோபத்தை அறியாத தந்தை சற்று முன்னர் நடந்து முடிந்த கலகலப்பால் இன்னும் சற்று சிடுசிடுப்பாகத்தான் இருந்தார். வழமையில் அன்பாகவும் ஆதரவாகவும் பிள்ளைக்கு சாப்பாடு கொடுக்கும் அவருக்கு, இன்று அந்த பொறுமை இருக்கவில்லை.

அவளின் தட்டை அவளிடம் தள்ளிவிட்டு, தனது தட்டை இழுத்து எடுத்து உணவை ஒரேயடியாக குழைத்து தான் உண்ணலானர். இதுவரையும் தனக்கு உணவோடு வரவேண்டுடிய அன்பு வந்து சேராததால் தந்தையை வைத்த கண் வாங்க்காமல் பார்த்துகொண்டிருந்த முத்தம்மா, லபக், லபக் என்று தந்தை உணவை போட்டு விழுங்குவதை கண்டு, திரும்ப விக்கி விக்கி அழத்தொடங்கினாள். இந்த முறை அவள் அழுதவிதத்தை கண்டு தந்தை பரதவித்துப்போய்விட்டர். சாப்பாட்டை நிறுத்திவிட்டு எழுந்தோடிப்போய் கையை களுவிவிட்டு வந்து பிள்ளை அணைத்து, அன்று பகல் நடந்ததை எல்லாம் விசாரித்து, தனிய இருந்த பிள்ளையின் மனம், நினைத்து நினைத்து அழத்தக்கதாக அன்று பகல் அங்கு என்ன நடந்து விட்டது என்று கண்டு பிடிக்க முயன்றார். முத்தம்மா தனக்கு தாயின் மீது இருந்த கோபத்தை எல்லாம் கொட்டித்தீர்த்துவிட்டு ஆறி அடங்கினாள்.

தந்தை மகளை இடக்கையால் அணைத்து கொண்டு தனது தட்டை எடுத்து உணவை குழைத்து பிள்ளைக்கும் ஊட்டி தானும் உண்ணலானார். சில நிமிடங்கள் வரை, அவர்களின் வாய்கள் உணவு அரைப்பதைவிட வேறு ஒரு சப்பதமும் அந்த விட்டிலிருந்து வரவில்லை. களைப்பாலும், சிடுசிடுப்பாலும் சுய நினைவுக்கு வரமுடியாமல், தானோ அல்லது தன் பிள்ளையோ வீட்டின் எந்த கோடியில் இருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளத்தானும் இயலாதவராக, கையையும் வாயையும் இயந்திரமாக ஆட்டிகொண்டிருந்த தந்தையை வைத்த கண் வாங்காமல் பார்த்துகொண்டு, மெல்ல மெல்ல தன் வாயை ஆட்டிக்கொண்டிருந்தாள் முத்தம்மா. ரோபோ ஒன்று மாதிரி, இடை இடை ஒரு பிடி, உணவை அவளின் வாய்க்குள் திணிப்பதை தவிர அவருக்கு, அவள் வைத்த கண் வாங்காமல் தன்னை பார்த்துக்கொண்டிருப்பதை கண்டு கொள்ள முடியவில்லை. இரண்டு மூன்று வாய்களை உண்டிருப்பாள் முத்தம்மா. அதன் பின் பொறுமையை இழந்துவிட்டாள். முத்தம்மா இந்த முறை தன் வாயிக்கு வந்த உணவை தன் நலிந்த கைகளால் தடுத்து நிறுத்தினாள். நிறுத்திவிட்டு “அப்பா…. அப்பா” என்று தந்தையை இரண்டு முறை அழைத்தாள்.

தந்தைக்கு இன்னமும் மகளின் மனத்தில் சில ஆழமான வடுக்கள் விழுந்திருப்பது தெளிவாகத் தெரிந்தது.

“என்னபிள்ளை?”

“அப்பா நான் கலியாணம் கட்டினாபிறகு அவருக்கு நான்தான் ஒவ்வோருநாளும் நாளும் சமைச்சு போடுவன்”.

‘”என்னரை பிள்ளையை எனக்கு தெரியும் தானே. அவள், உன்னுடைய அம்மா வெறும் ஊத்தைச்சி. அவள் இனி இஞ்சை வரமாட்டாள். நீ கவலைப்பாடாதை.” என்று கூறி நல்ல கையால், திரும்ப கண்ணீர் வடியத் தொடங்கியிருந்த அவள் கண்களைத் துடைத்து விட்டு சாப்பாட்டுக்கையில் இருந்த உணவை திரும்பவும் அவளுக்கு ஊட்ட கொண்டு போனார். அவள் திரும்பவும் அவர் கையை தடுத்து தனது மெல்லியகைகளால், தினம் உழைத்து விறகுதடி மாதிரி விறைத்துப்போய்விட்ட அவரின் கைகளை பிடித்து வைத்துக்கொண்டு கூறினாள் ”அப்பாஅஅஅஅ .. இப்பா நீ எனக்கு ஊட்டி விடுகிறியே அந்த மாதிரித்தான் நானும் என்ரை பிள்ளையளுக்கு ஊட்டி விடுவேன்”.

என்ன சொல்வது என்று அவருக்கு தெரியவில்லை. எடுத்த சோற்றை திரும்ப தட்டில் போட்டார். இடக்கையால் திரும்ப மகளை அணைத்துக்கொண்டு வலக்கையின் தண்டு பகுதியால் தன் கண்களை மூடினார். இதை பார்த்து கொண்டிருந்த முத்தம்மா தன்னை விடுவித்துக் கொண்டு அவரின் கண்களை மூடிய கையை இழுத்து முகத்திலிருந்து நீக்கினாள்.

இப்போது அவரின் கண்களில் இருந்து நீர்த்துளிகள் தாரை தாரையாக விழுந்து கொண்டிருந்தன. முத்தம்மா தனது சின்னக்கையால் அவற்றை துடைத்து விட்டாள். இப்போது திரும்ப அவளின் இதள்களில் ஒரு புன்னைகை தவழ்ந்தது. அவளின் கண்களில் இந்த உலகத்தை இரட்சிக்கும் பார்வதியின் துணிவு காணப்பட்டது. பரமனையே பூமியில் விழுத்தி அவனை வென்றபோது அவளின் கண்களில் காணப்பட்டது போன்ற திருப்தி ஒன்று முத்தமாவின் கண்களிலும் காணப்பட்டது. அவர் திரும்ப தட்டில் போட்ட சோற்று உருண்டையை எடுத்து அவரின் வாயில் வைத்து அவருக்கு ஊட்டினாள். அதன் பின் தன் தட்டை தானே இழுத்தெடுத்து அமைதியாகவும் ஆர்வமாகவும் தன் உணவை உண்ண ஆரம்பித்தாள்.

அன்றிரவு, அதன் பின் அந்த வீட்டில் மேலதிக வேறு ஒரு உடைவுகளோ மன முறிவுகளோ வரவில்லை. இருவரும் தூங்க போய்விட்டார்கள்.

சற்று நேரம் அதிகமாகத்தூங்கிவிட்ட காக்கை ஒன்று தூரத்து மரமொன்றிலிருந்து தூக்கத்தால் தவறவிட்டுவிட்ட தன் உறவுகளை தேடி கரைந்து கொண்டிருந்தது. தன் ஆட்சில் இருக்கும் சிட்டிசன்களை எண்ணிக்கணக்கு பார்த்து சரி செய்து கொள்வதற்காக, பெரிய சேவல் நெஞ்சை நிமிர்த்தி இறக்கையை அடித்து பெடைகளை தேடிக்கூவியது. தலைக்கு மேலே டுவிக் டுவிக் என்று கீச்சிடுக்கொண்டு சிறகை அடித்து தங்கள் தீராத பசிக்கு தீனி தேடி சிட்டுகள் பறந்து போய்கொண்டிருந்தன. இரவு முழுவதும் குட்டிகளுக்கு பால் கொடுத்து நலிந்து போயிருந்த பெட்டை நாய் மறந்து போய்விட்ட பாதையை முகர்ந்துகொண்டு நாட்களுக்கு முன்னர் புதைத்து வைத்த எலும்புத்துண்டை தேடி ஓடிக்கொண்டிருந்தது. மடி நிறையச்சுரந்து போயிருக்கும் பாலின் கடுப்பை, கன்டுக்கு கொடுத்து குறைப்பதற்கு முயலும் தாய் பசு, கன்றை வந்து அவிழ்த்துவிடாமல் இன்னமும் சோம்பேறியக தூங்கிக் கொண்டிருந்த எசமானியை தேடி அம்மா அம்மா என்று அழைத்துக்கொண்டிருந்தது. மெஞ்ஞானத்தை தேடி உதயகாலத்தில் திருபள்ளி எழுச்சி பாடிக்கொண்டு போய்கொண்டிருந்த அந்த பூசர்கள் கூட்டம் அடித்த சேமகலத்திலும், ஊதிய சங்கநாதத்திலும், இரை தேடி நேரத்திற்கே அருகிலிருந்த மாந்தோப்புக்கு வந்துவிட்ட கீளிகளை மிரண்டுபோக கீச்சு கீச்சு என்று கத்திக்கொண்டு ஒன்றாக மேலெழுந்து பறந்து கொண்டிருந்தன.

மண்பதை விடிவதுகண்டு கண்பதை விழித்த பேதை பெண் முத்தாமாவும் தன் நெஞ்சம் எங்கும் பொங்கி பிரவாகிக்கும் தனது அன்பபை திறந்துகாட்ட தனது வழமையான நண்பிகளை தேடி பள்ளிக்கு புறப்படத்தயாரானாள். ,

அவளும் ஐந்து நாளும், தந்தை வயலிற்க்கு வெளிக்கிடும் நேரம் தானும் வெளிக்கிட்டு இருப்பது எதையோ வாய்க்குள் போட்டுக்கொண்டு தவறாமால் பள்ளி போய்விடுவாள் படிப்பதில் அவள் பெரிதாக ஆர்வம் காட்டியதில்லை. ஆர்வம் காட்டும்படி அவளை யாரும் கேட்டதுமில்லை.. ஆனால் தந்தை வெளியே போய்விட்டால் பாலைவனமாகி போய்விடும் வீட்டிருந்து தப்ப, யாரிடமோ அன்பை பார்க்க, யாரிடமோ அன்பை பாராட்ட அந்த பள்ளிதான் அவளுக்கு தஞ்சம். அதனால்த்தான் படிப்பது எப்போதும் சிரமமாகப்பட்டாலும், அவள் அங்கு போவதில் எப்போதும் அக்கறையாக இருந்தாள்.

சற்று சுணங்கி படுக்கைக்கு சென்றதால் பிந்தி எழும்பிவிட்ட முத்தம்மா ஐந்து நாளும் போடும் அந்த ஒரே ஆடையை அவசரமவசரமாக கொளுவிக்கொண்டு நேற்று பள்ளியில் இருந்து வந்த போது எங்கோவோ போட்டுவிட்ட புத்தகங்களை தேடிக்கொண்டிருந்தாள்.

காலையில் தனது வேலைகளில் வெளிக்கிட்ட தந்தை அப்போதுதான் எழுந்து அவசரப்பட்டு பாடசாலைக்கு வெளிக்கிட்டுகொண்டிருந்த மகளை அழைத்தார்.

“பிள்ளை... பிள்ளை”

“என்ன அப்பா. எனக்கு நேரம் போட்டுது; நான் இப்ப உனக்கு ஒன்டும் செய்து தர நேரம் காணாது. என்னை இப்ப கூப்பிடாதை”

“பிள்ளை இன்டைக்கு நீ பள்ளிக்குடம் போக வேண்டாம்”

“ஏன் அப்பா, பிறகு நாளைக்கு வாத்தியார் ஏன் நேற்று வரரேலை என்று கேட்பார். நான் ஓடி ஒடி போனால் நேரத்துக்கு போய்விடுவன்”

“இனி மேல் நீ பள்ளிக்குடம் போக வேண்டாம் பிள்ளை”

கையில் எடுத்த புத்தகங்களை தரையில் போட்டுவிட்டு மகிழ்ச்சியுடன் தந்தையிடம் ஓடிப்போனாள். “அப்பா நீ நிச்சயமாய்த்தான். சொல்லுறியோ. இனிமேல் நான் பள்ளிக்குடம் போகத் தேவை இல்லையோ”

“இல்லையடி செல்லம். எனக்கு நேரம் போக போகுது. நீ சாப்பிட்டுவிட்டு பிறகு வயலுக்கு வா” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

சில நாட்கள் இந்த மாதிரி முத்தம்மாவின் பொழுது போனது. பகலில் சிறுது நேரம் வயலில் சென்று தந்தைக்கு உதவுவாள். பின்னர் வீடு திரும்பி வந்து அங்கும் சில வேலைகளை கவனிப்பாள். பள்ளி நேரம் முடியும் வரை தனது எஞ்சிய நேரத்தை தெருவில் அலைவதிலும், கோவில் கேணியடியில் இருந்த வேப்பாமரத்தின் கீழ் இருந்து கனவு காண்பதிலும் செலவளிப்பாள். அதன் பின் பள்ளித்தோழிகள் வீடு வந்து விடுவார்கள். கொஞ்ச நேரம் அவர்களுடன் பொழுது போக்க முடியும். பகல் முழுவதும் போய்விடும். தந்தை வீடு வந்து விடுவார்.

அவளின் இந்த வண்ணத்துப்பூச்சி கனவு வாழ்க்கை ஓரிரு ஆண்டுகள் போயிருக்கும். அவளின் மெல்லிய கைகால்களுக்கு தோட்ட வேலை என்றுமே தோதுவராது போலத்தான் பட்டது. இருந்தாலும் அங்கேயும் சும்மா போய்வந்தாள்.

இப்படி ஒரு நாளில் தான் அவரின் பழைய பள்ளி ஆசிரியர் அவளின் வீடுக்கு வந்தார். அவர் திரும்ப வருவதைக் கண்ட முத்தம்மாவுக்கு ஒருதடவை தூக்கிவாரித்தான் போட்டது. ஆனாலும் அவளுக்கு தெரியும் இனி தந்தை தன்னை பள்ளிக்கு அனுப்பமாட்டார் என்பது. மேலும் இந்த உலகில் தந்தைக்கு அடுத்து அவளுக்கு பிடித்த மனிதர் அந்த வாத்தியார். பள்ளி நாட்கள்களில் அவர் எப்போதுமே அவளுடன் அன்பாகத்தான் நடந்தார். பலநாட்களுப்பிறகு அவரைக்காண அவளுக்கும் சந்தோசமாகத்தான் இருந்தது.

வீடு தேடி வந்தும் திண்ணையில் தன்னும் அமர மறுத்த அவர் தந்தையிடமும் மகளிடமும் தனது வருகையின் நோக்கத்தைப்பற்றிக் கூறினார்.

“நீங்கள் அவசரப்பட்டு பிள்ளையின் படிப்பை நிறுத்தி விட்டீர்கள். முத்தம்மா புத்திசாலிபெண். நிச்சயமாக படித்து முன்னேறியிருக்க முடியும். சரி அது போய்விட்டது. நானும் இப்போது படிப்பிப்பதை விட்டு விட்டேன். நான் ஒரு சிறிய நெசவு ஆலை திறந்திருக்கிறேன். பயிற்றப்பட்ட 5 பெண்கள் அங்கே வேலைக்கு வரப்போகிறார்கள். எனது உறவுக்கார பெண் ஒருவர் அதை நிர்வகிக்க என்னுடன் வந்து சேருவார். முத்தம்மா. அங்கே வந்து அவர்களுக்கு உதவி வந்தாளானால் இரண்டொரு ஆண்டுகளில் நெசவு பழகிவிடுவாள். அவள் அங்கேயே ஒரு காலத்தில் வேலை செய்ய முடியும் என்றார்.”

முத்தம்மாவுக்கு தான் அங்கே என்ன செய்ய போகிறாள் என்பது விளங்காவிட்டாலும் அங்கே போய் என்ன நடக்கிறது என்பதை பார்க்க ஆவலாக இருந்தது. தந்தையும் சம்மதித்தார். அவளுக்கு அந்த சின்ன ஆலையில் சம்பளம் இல்லாத ஒரு வேலை கிடைத்தது. பகலுக்கு சாப்பாடு கிடைத்தது.

பழகி பழகி சில ஆண்டுகளின் வேலையை தெரிந்து கொண்டாள். பின் அவளுக்கு என்று ஒரு சிறிய சம்பளம் வந்தது. இப்போது அவள் இளைத்துப் போய்விட்ட தந்தை வீட்டில் தனது வயலை விட்டுவிட்டு வீட்டில் நின்றுவிடக்கேட்டாள். அவளுக்கு தந்தை இனி உழைக்க வேண்டாம் போலிருந்தது. தான் அவருக்கு தேவையானதெல்லாவற்றையும் செய்ய விரும்பினாள். ஆனால் அவர் மறுத்துவிட்டார். அது அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. அப்போ ஏன் தான் வேலக்கு போக வேண்டும் என்று நினைத்தாள். அடுத்த நாள் ஆலையில் தான் இனி வேலைக்கு வரமாடேன் என்று கூறிவிட்டு பாக்கி சம்பளத்தையும் கேட்டு வாங்காமல் வீட்டுக்கு வந்துவிட்டாள். வேலை உடைகளை களைந்து கொடியில் போட்டுவிட்டு வீட்டு உடுப்பை மாற்றிகொண்டு வந்து திண்ணையில் அமர்ந்தாள். தந்தை இன்னும் வயலில்லிருந்து வீடு வரவில்லை.

வாழ்கை வெறுமையாக, சூனியமாக தென்பட்டது. தனது சொல்லை கேட்க மறுத்த தந்தை மீது கோபமாக இருந்தது. அவர் அதை கேட்டிருந்தால் அவள் தொடர்ந்து வேலைக்கு போக ஒரு காராணம் இருந்திருந்திருக்கும். மகிழ்சியாக உழைத்திருப்பாள். தந்தையை தான் விரும்பிய படி கவனிதிருந்திருப்பாள். வாழக்கை மகிழ்சியாக போயிருக்கும். ஆனால் அவளின் தந்தை இந்தவிடயத்தில் “ அடி நீ சின்ன குட்டி நாய் வேட்டைக்கு போய் வீட்டை காப்பாத்துவனனெங்கிறாயா என்று கேட்டுவிட்டு” அவளை சட்டை செய்யாமல் தன் பாட்டில் போய்விட்டர். பேதை பெண்ணால் யாரை என்ன செய்ய முடியும். முழந்தாள்களை மடித்து இழுத்து நிமிர்த்தி அவை இரண்டுக்கும் இடையில் அங்கே இல்லாத அந்த ஒருவரும் காணாபடி தன் முகத்தை புதைத்து மறைத்துக்கோண்டு அழுது கொண்டிருந்தாள்.

-தொடரும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மல்லை,கதை அருமை! நன்றிகள்!

ஆனால், இந்தக்கதையில் நான் இன்னும் பேயை, மட்டுக்கட்டவில்லை! :o

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுப்பராய் இருக்குது மல்லை...கைதேர்ந்த எழுத்தாற்றல் உங்களிடம் இருக்குது...தொடருங்கோ

மல்லை,கதை அருமை! நன்றிகள்!

ஆனால், இந்தக்கதையில் நான் இன்னும் பேயை, மட்டுக்கட்டவில்லை! :o

அவங்கட அம்மா பேயா இருக்குமோ என்னவோ :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவங்கட அம்மா பேயா இருக்குமோ என்னவோ :unsure:

நான் நினைக்கிறன் ரதி, மல்லை, இனித்தான் பேய் காட்டப் போறார் எண்டு!

'இன்னும் வரும்' போடா, மறந்து போனார்! :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதையை அவர் இன்னும் முடிக்கவில்லை ஆனால் அவர் எழுதினதில் இருந்து அந்த அம்மவும் பேயாக இருப்பாரோ என ஒரு சந்தேகம் :unsure:

Posted

உண்மையை இப்பவே போட்டுடைச்சால் வாசிக்க வாற நீங்களும் விட்டிட்டு போய்விடுவீர்கள்.

முடிவுவிலை கதையை எழுதுகிற நானோ, அல்லது வாசிக்கிற நீங்களொ, அல்லது இரண்டு பக்கமுமோதான் பேய்களாகலாம். கதைகளை நிறைய வாசித்த அனுபவத்தால் கதை எந்த பக்கம் போகலாம் என்று முன் கூட்டி அனுமானிக்கிறிகள்.

ஆனால் கதைகளை எழுதி அனுபவமில்லாத நான் அதை எப்பவோ போற பொக்கிலை அது போகட்டும் என்று விட்டு விட்டேன்.

எனவே போற போக்கிலை கதை எப்ப முடியும் என்று சொல்வது கஸ்டமாக போகிறது.

இன்னும் வரும்' போட, மறந்து போனார்

போட்டுவிட்டேன்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

[size=4]தங்களிடம் திறமை யுள்ளது தொடருங்கோ படிக்கும் ஆவலுடன். [/size]

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவளவு அழகா கதை எழுதிற நீங்கள் கதை கதையாம் பகுதியையும் கவனிக்கலாமே சிறுகதைகள் எழுத தொடங்கலாமே

Posted

இவளவு அழகா கதை எழுதிற நீங்கள் கதை கதையாம் பகுதியையும் கவனிக்கலாமே சிறுகதைகள் எழுத தொடங்கலாமே

நன்றி சுண்டல். இது முதல் முயற்சி. எழுந்த மானத்தில் சரியாக திட்டமிடாமல் தொங்கியது. சரி வந்தால் மற்றைய பக்கங்க்களுக்கும் போகலாம்.

  • 3 weeks later...
Posted

நேற்று கதை படிச்சன்  நல்ல கதை.  இரவு மகள் பாலுக்கு அழுவாள் . மனிசி என்னைத்தான் துரத்திவிடுவாள் . எப்படி போய்  பால் கரைக்க போறன் என்று பயந்தன் .

  • 2 months later...
Posted
உண்மைச்சம்பவங்கள்
                       நான் வாழ்ந்த இடம் வன்னி அவ்வளவாக பேய்க்கு பயப்பட்டது கிடையாது.எங்கள் வீட்டில் மூன்று சா வீடுகள் நடந்தேறியது.1972 முதல் 1978 வரை.முதலாமவர் எனது தாயின் தந்தையார்,அவர் இறக்கும் போது எனக்கு ஒரு 10 வயது இருக்கும். அவர் இறக்கும் போது அவிட்ட பஞ்சமியில் தான் இறந்தார்.அப்போது எங்கள் வீட்டில் நடு இரவில் அம்மா எழுவதும் பிள்ளைகளை கட்டியணைத்தும் கொள்வார். எங்களுக்கு அந்த நேரத்தில் பயமாகவிருக்கும் பின்னர் காலப்போக்கில் சரியாகிவிட்டது.இருந்தாலும் யாரோ இருமுவது போல யாராவது கதவைத்தட்டுவது போல ஆரம்பத்தில் இருந்ததாம்.பின்னர் சாமான்களை தட்டி விழுத்துவது போன்ற நிகழ்வுகளும் இருந்ததாம்.பின்னர் யார் யாரோவெல்லாம் வந்து நூல் கட்டினார்கள்.சரி வரவில்லை.பிறிதொருவர் வந்து சாம்பல் எங்கே என்று கேட்டாராம்?அப்போ தான் எங்களுக்கு தெரியும் சாம்பல் வீட்டிலிருந்ததாக, பின்னர் சாம்பலை கொண்டுபோய் எங்கோ காட்டில் மறைத்து வைத்தார்கள்.அதன் பின் பெரிதாகஒன்றுமில்லை. இரண்டாமவர் இறக்கும் போதும் பஞ்சமியில் தான் இறந்தார் அவர் இறந்த போது எதுவும் நடந்ததாக ஞாபகம் இல்லை.ஒன்று மட்டும் சொன்னார்கள்.இந்த வீட்டிலிருந்து கெதியாய் இன்னொன்று போகும் என்று:காரணம் போனது இரண்டும் பஞ்சமியாகையால் சில வேளை ஒன்றை எடுத்தால் இரண்டு இலவசம் போல! யாராகவிருக்கும் என்ற குழப்பம் தொடரும்......... 


saheartenergy.jpg

Posted

”எறிமாடன்” எண்டு சொல்லுறவை, செய்வினை செய்வாதால் வாரதாம். யாரவது கேள்விப்படிருக்கிறியளா?

Posted
அமாவாசை. வெள்ளிக்கிழமை. இரவு. மண்டை ஓடு.
 

இந்த நான்கு வார்த்தைகளைக் கொண்டு இது ஒரு பயங்கரமான பேய் கதை என்று நீங்கள் ஊகித்திருந்தால்........ நான் உங்களுக்குத் தமிழ் வாசிக்கத்தெரியும் என்று மட்டும் ஒத்துக்கொள்கிறேன். பத்தில் எட்டு பேய்க்கதைகள்

இப்படித்தானே துவங்குகின்றன. நாமும் பழகின வழியிலேயே போவோம். அப்போதுதான் அதிக பயம்
இருக்காது.

உங்களுக்குப் பேய் கதைகள் மேல் நம்பிக்கை இருக்கிறதா ? சும்மாதான் கேட்டேன். தொடர்ந்து படியுங்கள்.


குப்பையோடு குப்பையாக இருளில் அந்த மண்டை ஓடு விகாரமாக வாய் பிளந்து கிடந்தது. கட்டடம் கட்ட அஸ்திவாரம் தோண்டின போது தட்டுப்பட்டதாம். அதன் உடலில் இருந்து பிரித்துக் குப்பையில் வீசிவிட்டிருக்கிறார்கள். சுடுகாட்டின் மேல் எழும்பிக் கொண்டிருக்கும் கட்டடம். எங்கள் துறைக்காக அரசுப் பணத்தில் புதுசாய் விரசாய் எழும்பிக் கொண்டிருக்கிறது.

 

நேராக அந்த மண்டை ஓட்டின் பார்வை படும் திசையிலேயே கட்டடச் சுவரில் கரியில் எழுதியிருக்கிறது அந்த வாக்கியம்.


 

1.jpg

பத்தடி தூரத்தில் வாட்ச்மேன் கைலாசம் தாத்தா கடிகாரத்தில் மணி ஒன்றடிக்கவும் கொட்டாவி துரத்திவிட்டுத் தன் நாற்காலியில் அமர்கிறார். இரண்டு கம்பளிகள் கொண்டு இருக்கை சூடாக்கிய உலோக நாற்காலி. தன் 74 வருஷங்களையும் கோவையிலேயே கழித்தவர் கைலாசம். இதே நிலம் சுடுகாடாய் இருந்தபோது இரண்டு மூன்று இழவுகளுக்காக வந்திருக்கிறார், கொலை வழக்குகள் உட்பட. வாலிபத்தில் கத்தி பிடித்த கை, இப்போது ஒரு கம்பைத் தரையில் தட்டிக் கொண்டு கடனே என்று காவலுக்கு உலாத்திக்கொண்டிருக்கிறது.

சுற்றுப்பட்டுப் பேய்க்கதைகள் அத்தனையும் , சிலபல பேய்களும் கூட அவருக்கு அத்துப்படி. அவரின் பேரன்

ஒருவன் எப்போதாவது வரும்போது எங்களிடம் மட்டையும் பந்தும் கடன் வாங்கி தப்புத்தப்பாக விளையாடுவார். அப்படித்தான் பழக்கம். விடுதிக்குப் பக்கத்தில் எழும்பிக் கொண்டிருக்கும் புதுக் கட்டடத்தின் பேய் வரலாற்றை எங்களுக்கு அவர்தான் சொன்னார். இதுவரை ஏழெட்டு மண்டை ஓடுகள் தட்டுப்பட்டிருக்கிறதாம். இதில் ஏதோ தப்பு நடக்குதென்று கிட்டத்தட்ட தினமும் எங்களிடம் சொல்கிறார்.

"கடலைக் காட்டையும், களத்துமேட்டையும் கட்டடமாக்கலாம். புல்லு பூண்டால பெரச்சினை வராது. இப்பிடி சுடுகாட்டில தூர் வாரினா புதைச்சு வெச்சதுக்கெல்லாம் ரோஷம் வந்துருமே. என் கெரகம்..... நானே பாக்கப் பொதைச்சதுக்கெல்லாம் நானே காவல் காக்க வேண்டியிருக்கு. ராவைப் போல அடிக்கடி வெளியே வராதீங்க தம்பீ இந்தப் பக்கம்..."


அவரின் கம்புச் சத்தம் காற்றில் மேலேறி வரும்போது அவரின் புலம்பல் சத்தம்தான் கேட்கிறது. நிலவற்ற

நிர்மல இருளின் கீழ் மொட்டை மாடியில் வரிசையாகப் பாய் போட்டுப் படுத்திருக்கிறோம் நாங்கள். நான், ராகேஷ், அர்ஜுன், சித்தார்த், அருள். இன்னும் கொஞ்ச தூரங்களில் ஆங்காங்கே இன்னும் சில பல போர்வைகள்.

நான் மல்லாந்து பார்த்து இருளை வெறித்தவாறே கேட்டேன், " ஏன் மச்சி, இந்தப் பேய் கதை எல்லாம் பாதி
சுடுகாட்டிலயும் மீதி சூசைடிலயும் தான் வருதில்லே ? "

இருளே இறங்கி வந்து அசரீரியாய்ப் பேசுவது போல ராகேஷின் குரல் வந்தது, "ஆமாண்டா..நீதான் மச்சி புதுசா
ஏதாவது எழுதணும். இங்கேயே பாரு.. முதல் வருஷம் அந்தத் தற்கொலைக் கேசு.. ரெண்டாம்
வருஷம் அந்த பாத்ரூம் பேய். அதுவும் சூசைடு. இப்போ கடைசியா சுடுகாட்டுக் கதையும்
கேட்டாச்சு இங்கே."

"இது போருடா ராகேஷ். அந்த ரெண்டு கதைலயாவது பேய்க்கு ஒரு முகம் இருந்துச்சு. சுடுகாடுன்னு
சும்மா சொன்னா ஒரு பயமே வரல. கிழடுகட்டைங்களதான் மூடியிருப்பாங்க. பாப்போம். நீ
எழுதி வெச்சதுக்கு ஏதாவது யூத்தா ஒரு பேய் பதில் சொல்லுதான்னு", சித்தார்த்தும் கலந்து கொண்டான்.

எழுத்துப் பிழையோடு அந்தக் கட்டடத்திலிருந்த கரி வாக்கியம் ராகேஷ் எழுதினதுதான். ஒரு மணி நேரத்துக்கு
முன்னால் அவனும் நரேனும் நாலைந்து பேரிடம் பந்தயம் கட்டி, சரியாகப் பன்னிரெண்டு மணிக்கு, கைலாசம் தாத்தா வைகை ஹாஸ்டல் பக்கம் போன நேரத்தில் மறைந்து சென்று அந்த மண்டை ஓட்டுப்பேய்களுக்கு எழுதி வைத்து வந்த தகவல். பேயெல்லாம் புளுகு என்றும் தனக்குப் பயம் இல்லை என்றும் நிரூபிக்க நடந்த பந்தயம்.


தொடர்ந்து பேச்சும் அரட்டையும் பேய்களையே புரட்டி வந்தது. பேச்சு கொஞ்சம் சூடு பிடிக்கும் நேரத்தில்

சடாரென்று அருள் கூவினான, "டேய்.. அங்க பாரு.. எரியுது"

தூரத்தில் மருதமலை உச்சியில் கொழுந்து விட்டு எரியும் ஜுவாலை தெரிந்தது. முருகன் படிக்கட்டுகள் பாதி
மலையிலேயே முடிந்துவிடும். அதற்கும் மேலே யாரும் அறியாத மலை உச்சிக்காடுகளில் பல இரவுகள் இபடிப் பற்றி எரிவதைப் பார்த்திருக்கிறோம் எங்கள் மொட்டை மாடியிலிருந்து. சிலர் காட்டுத்தீ என்கிறார்கள். அங்கே ஆதிவாசிகள் இருப்பதாகவும் ஒரு பேச்சு உண்டு. கைலாசம் மாதிரி ஆட்கள் மூலம் சில பேய் விளக்கங்களும் உண்டு. இந்தப் பேச்சின் தொடர்ச்சியோடு, பற்றி எரியும் நெருப்பைப் பார்க்கையில், அந்த மண்டை ஓட்டுப்
பேய்களுக்கு ரோஷம் வந்துதான் விட்டதோ என்றொரு சிறு பிரமை ஏற்பட்டது.

நான் ராகேஷிடம் கேட்டேன், "மச்சி இது ஒரு வேளை நீ எழுதினதுக்குப் பேய் சொல்ற பதிலோ? அந்த
நெருப்பிலே ஒரு மண்டை ஓடு ஷேப் தெரியல உனக்கு?"


அப்போதுதான் சட்டென்று அவனும் கவனித்தான். எரியும் ஜுவாலையில் ஒரு மண்டை ஓட்டு உருவ இருள்

அப்பட்டமாகத் தெரிந்தது. "டேய் சிவா.. நெஜமா மச்சி. அங்க பாரேன் தெரியுது. ஆனா
ஏண்டா இங்க எழுதினா அங்க எரியுது ?"

அவன் பதிலைக் கிழித்தபடிக்கு ஒரு மின்னல் சடாரென்று அருகில் பாய்ந்தது. அருள் மறுபடியும்
கூவினான், "டேய் ராகேஷ்.. இதோ வந்திருச்சு பாரு பக்கத்துலயே பதில்"

"ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி உன்னை கவனிச்சிட்டிருக்கு மச்சி.. உன்னைப் பேய் பொறாண்டப் போகுது பாரு" நான் இன்னும் கொஞ்சம் ஆழம் கூட்டி அமைதியாகச் சொன்னேன். ஒரு சின்ன நெருக்கடியான அமைதி
தொடர்ந்தது.

அர்ஜுன் தான் கலைத்தான். "டேய் சும்மா உளறாதீங்கடா. தூங்குங்கடா மூதேவிங்களா" என்று எரிச்சலாகப்
பேசி விட்டுப் போர்வைக்குள் போய்விட்டான். ஆனால் அவன் இப்போதைக்குத் தூங்கமாட்டான்.
இப்படி நான்கு பேர் பேசிக் கொண்டிருக்கையில் நான் மட்டும் தூங்கப் போகிறேன் என்று
நடுவில் போர்வைக்குள் போனவன் எவனும் என்றும் தூங்கிப் போனதாகச் சரித்திரமே
இல்லையே.

மீண்டும் இரண்டு மின்னல்கள் நெருங்கித் தெறித்தன. குளிரும் இருளும் போட்டியிட்டுக் கூடின. எந்த
நட்சத்திரமும் கண்ணில் படவில்லை. அவ்வப்போது காற்று வந்து வேகமாக அறைந்து
போனது.

"சித்தார்த்து.... இது ஜென்மம் X, மர்ம தேசத்துல வர்ற மாதிரியே இருக்குல்லடா?"


 

அவன் பேசவில்லை. எவனுமே பதில் பேசவில்லை. நிசப்தம் இருளில் பெருகித்தெரிந்தது.


"மச்சி மச்சி எனக்கொண்ணு தோணுதுடா" - மூன்றாம் முறையாக அருள் கூவினான். இம்முறை அவன் அமைதியைக் கலைத்த விதம் கொஞ்சம் திகிலாகத்தான் இருந்தது. திகிலோடே தொடர்ந்தான், "எங்க ஊருல

இதே மாதிரி மொட்டை மாடியில தூங்கும்போது விடியுற நேரத்துல வெள்ளை உருவமா ஆவி
கண்ணுக்குத் தெரியும்னு சொல்லுவாங்கடா. அப்போ படக்குன்னு கையைக் காலை அசைக்க
முடியாம இறுகிக்குமாம். ரொம்பக் குளிருமாம். எங்க பாட்டி கூட சொல்லுவாங்க..."

"வெள்ளை ஆவி.... விடியற நேரம்.... நான் கூடக் கேள்விப்பட்டிருக்கேன்டா. எங்க ஊருல இசக்கிப்பேய்னு
ஒண்ணு தினமும் காலைல வெள்ளந்திப் பசங்களையெல்லாம் மொட்டை மாடில வந்து
எழுப்புமாம்"

நான் மிக அமைதியாகக் கேட்டேன். "ஏன் அர்ஜுனு , நீ எதும் பேயைப் பாத்திருக்கியாடா மொட்டை
மாடில?"

அவன் ஈனஸ்வரத்தில் முனகினவாறே போர்வையை விலக்கிச் சொன்னான், "டேய் தூங்க விடுங்கடா...வேற பேச்சே கெடக்கலையா உங்களுக்கு, பயமா இருக்குடா".... நான் சொல்லலை, போர்வைக்குள்
போகிறவனெல்லாம் தூங்கிப் போவதாகச் சரித்திரமே கிடையாது!

இவனுக்கு மட்டும் ஒரு சரித்திரம் உண்டு. அர்ஜுன்.. இவன்
ஆரோக்கியா பால் அர்ஜுன் இல்லை. ஒரு அப்பாவி பயந்தாங்கொள்ளி அர்ஜுன். இரண்டு
பேய்களைப் பார்த்ததாக உறுதியாக நம்புகிறவன். அதில் ஒன்று நாங்கள் நடத்தின நாடகம்
என்று இன்னும் தெரியாது அவனுக்கு. இன்னொன்று யார் நடத்தின நாடகம் என்று
எங்களுக்கும் கூட தெரியாது. நிஜத்தில் பேய் கண்டால் இவனெல்லாம் பயந்து செத்தே
பேயாவது உறுதி. அவ்வளவு தைரியம்! என்னதான் கும்மிருட்டில் கதவடைத்து, விளக்கணைத்து,
சரவுண்ட் சவுண்டில் பேய் படங்கள் பார்த்தாலும், சில படங்கள் கிச்சுகிச்சு
மட்டும்தான் மூட்டும், அப்பேற்பட்ட சம்பவங்களைக் கூட சுவாரசியமாக்குவதற்கு ஒரு
பயந்தாங்கொள்ளி நண்பன் கூட்டத்தில் தேவை. அப்படித்தான் எங்களுக்கு அர்ஜுன்.
சுருக்கமாகச் சொன்னால், சந்திரமுகி பார்த்ததற்கே இரண்டு இரவுகள் தனியாக ஒண்ணுக்கு
போகப் பயந்த வீரன் ! ராகேஷின் அறைத்தோழன்.

அர்ஜுனின் கருணை மனுவை ஏற்றுக்கொண்டு நாங்களும் பேயுரையாடல்களை முடித்துக் கொண்டு போர்வைக்குள் போனோம். மணி இரண்டரை. கொஞ்ச நேரத்துக்குப் பிறகு மூச்சு விடுவது கேட்குமளவு நிசப்தம
மூழ்கியது, இடையில் சில நாய் ஊளைகள். பேய் நடமாட்டம் நாய் கண்ணுக்குத் தெரியுமாமே
!

நீண்ட நிசப்தத்துக்குப் பிறகு, தூரத்தில் ஒரு கட்டைக் குரல் கேட்டது. படக்கென்று அர்ஜுன் விழித்தெழுந்தான். புதுக்கட்டடத்தின் திசையிலிருந்து அவனுக்குக் குரல் கேட்கிறது. "நரேன், நரேன் ..... ராகேஷ்..

ராகேஷ்.... இது உங்களுடைய இடம் இல்லை. எங்களுடைய இடம்.. நரேன்.. ராகேஷ்.."
தூக்கிவாரிப்போட்டது அவனுக்கு. மிகத் துல்லியமாக வந்தது குரல். இதே விஷயத்தைத்
தொடர்ந்து இரண்டு மூன்று முறை சொன்னது. அர்ஜுன் வியர்த்துப் போனான். சுற்றிப்
பார்க்கிறான். மற்ற அனைவரும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

அர்ஜுன் சித்தார்த்தை உலுக்கி உலுக்கி எழுப்புகிறான், "மச்சி, உனக்குக்
கேக்குதா?"

உறக்கம் கலைந்த உளைச்சலில் சித்தார்த்துக்கு ஒன்றும் புரியவில்லை. அர்ஜுன் மீண்டும் படபடத்தான், "டேய் நல்லாக் கேளுடா, உனக்கு எதுவுமே கேக்கலையா?"


சித்தார்த் முயற்சி செய்து கூர்ந்து கவனித்தான்.


"... ராகேஷ்... இது உங்களுடைய இடம் இல்லை... எங்களுடைய இடம்.... நரேன்.."


"எதுவும் கேக்கலையேடா , என்னடா உளர்றே , லுச்சா லூசு, போய்த் தூங்குடா"


"கேக்கலையா .. " அர்ஜுன் லேசாக நடுங்கத் தொடங்கினான். அவன் காதில் இன்னும் ஒலிக்கிறது அந்தக் குரல்.

"உன்னைப் போய் கேட்டேன் பாரு.. செவிட்டு மூதேவி. தூங்குடா.. நான் பாத்துக்கிறேன்"

சித்தார்த் போர்வைக்குள் மறைந்து கொண்டான். அர்ஜுன் முழுத்தூக்கமும் கலைந்து பயந்து உறைந்தான். ராகேஷை எழுப்பலாமா? ஒரு வேளை அவனைப் பார்த்ததும் பேய் ஏதாவது பண்ணிவிட்டால்? நரேன்.....
நரேன் கீழே அவன் அறையில் உறங்குகிறான். அவனுக்கு எதுவும் ஆகிவிட்டதா?

அத்தனை தெய்வங்களையும் வேண்டிக் கொண்டு எழுந்து அந்தக் குரல் வரும் திசையில் நடக்கத் தொடங்கினான். எதையோ முணுமுணுத்துக் கொண்டே போனான். நடக்க நடக்க குரல் இன்னும் தெளிவாகக் கேட்டது. அத்தனையும் ஒரு நிமிட நேரத்துக்குள் நடந்து கொண்டிருக்கிறது, வழியில் ஏதோ ஒரு
போர்வையில் அவன் கால் படவும், போர்வைக்குள் இருந்தவன் வன்மையாகப் புரண்டு உருண்டு
படுத்தான். அந்தக் குரல் சட்டென நின்றுவிட்டது.

அர்ஜுன் உறைந்து நின்றுவிட்டான். உருண்டு போனவனோ மூச்சு பேச்சில்லாமல் கிடக்கிறான். முகம்
தெரியவில்லை. குரல் கேட்கவில்லை. குனிந்து பார்க்க பயம். திரும்பி நடக்க பயம்.
நேராக நடக்கவும் பயம். இருளில் ஒரு பேயை எதிர்த்து நிர்க்கதியாய் நிற்கிறான்.
அப்படியே ஐந்து நிமிடங்கள் கழிந்திருக்கும்.

"நரேன், நரேன்... ராகேஷ்..

ராகேஷ்... இது உங்களுடைய இடம் இல்லை...."

மீண்டும் அதே குரல். அப்போது உருண்டவன் இன்னும் அப்படியே உயிரற்றுக் கிடக்கிறான். ஒரு நொடியில் அத்தனை அட்ரினலினும் பீய்ச்சிப் பாய, உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கீழே ஓடுகிறான் அர்ஜுன். நேராக அவன் அறைக்குள் புகுந்து, கதவைத் தாழிட்டு, விளக்கையெல்லாம் போட்டு, சிரமப்பட்டு மூச்சு விடுகிறான்.
அலமாரியைத் திறந்து வியாயகர் அருகிலிருந்து விபூதியை வாரிப் பூசுகிறான். ஏதோ தப்பு
நடந்திருக்கிறது. கைலாசத்தின் குரல் இப்போது காதில் கேட்டுக் கொண்டே இருக்கிறது.
அந்த அமானுஷ்யக் குரலை நினைத்தாலே பயத்தில் மூத்திரம் வருகிறது. ஆனால் தனியாகப்
போகவும் முடியாத பயம். மர்ம அவஸ்தை !

அந்த அமானுஷ்யம் நரேனையும் ராகேஷையும் தேடிக் கொண்டிருக்கிறதா ? என்ன ஆனான் அந்தப் போர்வைக்குள் இருந்தவன்? ஒன்றுமே தெரியாமல் மேலே ராகேஷ் தூங்கிக் கொண்டிருக்கிறானே?


 

இரண்டு மூன்று பூச்சுகள் விபூதி அப்பிக் கொண்டு ஒரே ஓட்டமாக மீண்டும் மொட்டை மாடிக்கு வந்தான் அர்ஜுன். இடது பக்கம். அந்தப் போர்வைக்குள்ளிருந்தவன் அப்படியே கிடக்கிறான், அசைவே இல்லை. வலது
பக்கம் திரும்பினால், பெரிய அதிர்ச்சி... வெறும் போர்வைகள்தான் இருக்கின்றன. எங்கள்
நால்வரையும் காணவில்லை. நாய் ஒன்று ஏப்பம் விடுவது போல தூரத்தில் ஊளை இடுகிறது.

கையெல்லாம் நடுங்க நடுங்க, தன் செல்லை எடுத்து என்னை அழுத்துகிறான் அர்ஜுன். முதல் முறை மணியிலேயே பட்டென்று நான், "டேய் எங்கடா போனே? உடனே நரேன் ரூமுக்கு வா" என்று பதட்டமாகப் பேசி
அணைத்துவிட்டேன். அர்ஜுன் தன் பயம் ஊர்ஜிதமான அதிர்ச்சியில் அரக்க பரக்க ஓடி
வந்தான்.

நரேன் அறை வாசலில் அவன் கண்ட காட்சி........

நானும் அருளும் நரேனைக் குண்டுக்கட்டாகத் தூக்கிக்கொண்டு வருகிறோம். கூடவே பதட்டமாகவும் குழப்பமாகவும் மற்றவர்கள். நரேனுடன் அறையிலிருக்கும் ரத்னகுருவுக்கே ஒன்றும் புரியாமல் விழித்துக்
கொண்டிருந்தான். உள்ளே கொண்டு சென்று கட்டிலில் கிடத்தினால், நரேன் ஏதோ எல்லாம்
தெரிந்த ஞானி மாதிரி எதையோ வெறித்து விழித்துக்கொண்டிருக்கிறான்.

அர்ஜுன் பயத்தோடும் பதட்டத்தோடும் கேட்டான், "டேய் என்னடா ஆச்சு.... இவனுக்கு என்ன ஆச்சு? எங்க
இருந்தான்?"

ரத்னகுரு சொன்னான்,

"அர்ஜுன், ஒரு பத்து நிமிஷம் முன்னாடி நான் எந்திரிச்சு பாத்ரூம் போகப் போனேன்.
எழுந்தப்பவே இவனை ரூமில காணோம். போய்ப் பாத்தா பாத்ரூமுக்குள்ள இவன்
படுத்திட்டிருக்கான்டா இதே மாதிரியே எதையோ வெறிச்சு மொறைச்சுகிட்டே, தலைக்குக் கையை
அண்டக் குடுத்து ஸ்ரீரங்கநாதர் மாதிரி போஸ் குடுத்திட்டிருக்கான். புடிச்சு எழுப்பி
விசாரிச்சா, எதுவுமே ஞாபகம் இல்லைங்கிறான். நாலு வருஷத்தில இவன் இந்த
மாதிரியெல்லாம் தூக்கத்தில நடந்ததேயில்லைடா"

"நடந்தது இவன் இல்லை குரு.. இங்கே என்னென்னமோ நடக்குது. எனக்கு இப்போ கொஞ்ச கொஞ்சமாப் புரியுது. ராகேஷ்.. ராகேஷ் எங்கே? அவனை உடனே காப்பாத்தணும்? நீங்க எப்போடா கீழே
வந்தீங்க?"

சித்தார்த் சொன்னான்,

"குருதான் மச்சி செல்லில கூப்பிட்டான். உடனே ஓடி வந்தோம். என்னடா புரியுது
உனக்கு?"

"நான் உன்னை எழுப்புனேனே ஞாபகமிருக்கா? எனக்குக் கேட்டுச்சுடா.... அந்தக் குரல்
கேட்டுச்சு எனக்கு. இவனையும் ராகேஷையும் தேடிட்டிருக்கு அது இப்போ" . எல்லாரும்
உறைந்து போய் ராகேஷைப் பார்க்கிறார்கள். அவன் பயந்து போய் நரேனைப்
பார்க்கிறான்.

தண்ணீர் தெளித்து, சகஜமாக்கி, மூச்சு விட நிறைய காற்று விட்டு நரேனிடம் துருவித்துருவி விசாரித்தோம். அவனுக்கு ஒன்றுமே ஞாபகமில்லை. நொடிக்கு நொடி திகில் கூடிக் கொண்டே போனது. விளக்கை எல்லாம் எரியவிட்டு ராகேஷையும் நரேனையும் சுற்றி எல்லாரும் அமர்ந்து கொண்டோம்.


 

அர்ஜுனுக்கு மட்டும் குரல் கேட்டிருக்கிறது. அதுவும் துல்லியமாக கணீரென்று கேட்டிருக்கிறது. அதுதான் அவனை இன்னும் கொஞ்சம் பயமுறுத்தியிருக்கிறது. மற்றவர்களை விட அவன் ரொம்பப் பயந்து
போயிருந்தான். பேயை எவனும் பார்க்கவில்லை. அது பிறாண்டிவிட்டுச் சென்றவனுக்கும்
ஞாபகமில்லை. அர்ஜுன் மட்டும்தான் கேட்டிருக்கிறான். அவன் ஏதாவது செய்ய வேண்டும்
என்று துடித்தான். ஏன் தனக்கு மட்டும் கேட்க வேண்டும் என்று பயந்து குழம்பினான்.
நேரம் மெல்ல மெல்ல இருளை விழுங்கி வீங்கிக் கொண்டே போனது.

4 : 30 . எல்லாரும் அர்ஜுனையே பார்த்துக் கொண்டிருக்கிறோம். திடீரென்று அவன் மௌனம் குலைத்துப்
பயந்தவாறே முனகினான் , "டேய் , ஒரே வழிதான் இருக்கு. எல்லாம் வாங்க, கைலாசம்
வாசல்லதான் இருப்பாரு. அவரைப் பாப்போம். அந்தக் குரலும் இப்ப அமைதியாயிடுச்சு."
சொல்லிவிட்டுக் கதவைத் திறந்து முன்னே நடக்கவும் தொடங்கிவிட்டான்.

அறைக்குள்ளே அரை நிமிஷம் எல்லாரும் மாறி மாறி பார்த்துக்கொண்டோம். பின்பு ஒரு வெடிச்சிரிப்புச் சத்தம்
கேட்டது. வெளியே நடந்த அர்ஜுன் குழம்பி ஓடி வருகிறான். ராகேஷ் வயிற்றைப் பிடித்துக்
கொண்டு கீழே விழுந்து பைத்தியம் பிடித்தது போல சிரிக்கிறான்,
 
"டேய்...சொல்லிருங்கடா.. யப்பா முடியலைடா .. நாலு மணி நேரம் ஆச்சு"

அர்ஜுனுக்குக் குழப்பத்தில் கண்ணீர் வந்துவிட்டது. நானும் சிரித்துக் கலங்கின கண்களுடன் அவனுக்கு முன்கதை விளக்கம் சொன்னேன். ஒரு குரலை நாங்களே செல்லில் பதிவு செய்து வைத்து, அலாரம் டோனாக
வைத்து, செல்லை தூரமாக வைத்துவிட்டு, வேண்டுமென்றே மொட்டை மாடியில் ஒன்றரை மணி
நேரம் பேய்க் கதையாகப் பேசிப் பேசி, கீழே நரேனின் அறையையும் ஒருங்கிணைத்து ஒரு
உச்சகட்ட திகில் நாடகத்தை ஒரே ஒருவனுக்காக அரங்கேற்றியிருக்கிறோம். மருதமலைத் தீயும்
அந்தப் போர்வைக்குள் பிணமாய்த் தூங்கினவனும் முருகனாய்ப் பார்த்துக் கூட்டிச்
சேர்த்த திருவிளையாடல்கள்.

சிரிப்பினூடே சிரமப்பட்டு அர்ஜுனுக்குப் புரியவைத்தேன். ஏமாற்றமும் பயமும் கோபமும் கொப்பளிக்க அவன் எங்களைக் கெட்ட கெட்ட வார்த்தைகளில் திட்டிவிட்டு ஓடிவிட்டான். பரவாயில்லை. அவமானத்தில்
அழுதமாதிரி கூட இருந்தது. பின்னால் உதவும். நரேன் நடித்து முடித்த பரவசத்தில்
ஆச்சரியமாகக் கேட்டான், "செம கெத்து மச்சி... இந்த நாளை அவன் மறக்கவே
மாட்டான்....." அந்த அலாரம் வைத்த செல்லை எடுத்துத் தடவியவாறே "செம சத்தம்டா இது..
அவனுக்கு மொட்டை மாடியில கேட்ட அலாரம் டோன் எனக்கு கிரவுண்ட் ஃப்ளோர் பாத்ரூம்
வரைக்கும் கேட்டிருக்கே"

"என்னது மொட்டை மாடில வெச்ச அலாரம் உனக்கு மூணு மாடி தாண்டி கீழே கேட்டுதா... காமெடி பண்ணாதேடா டேய்" நாங்கள் அனைவரும் சிரித்த திருப்தியில் அப்படி அப்படியே பிய்த்துக்கொண்டோம்.


 

நரேன் மட்டும் குழப்பமாக குருவிடம் சொல்வது கேட்டது, "டேய் குரு. உனக்குக் கேட்டிச்சா டா? நான் நெஜமாவே
கேட்டேனே.. குழப்பமா இருக்கே.. ஒருவேளை................."

 

-------------------------------------------------------------------------

 

திங்கட்கிழமை மதியம். நரேன் எங்களெல்லாரையும் அழைத்து வைத்து அமைதியாக நிற்கிறான். அவன் முகத்தில் ஒரு படபடப்பு குவிந்திருக்கிறது. கொஞ்சம் நடுக்கத்துடன் தன் செல்லில் எடுத்து வைத்திருந்த
புகைப்படத்தைக் காட்டினான்.

 

1.jpg

 

 

காட்டிவிட்டு எங்களனைவரையும் மேலும் கீழும் பார்த்தான். பின்பு வேகமாக எல்லோரையும் இழுத்துக்

கொண்டு அந்தக் கட்டடச் சுவர் பக்கம் ஓடினான், "என்ன எழுதியிருக்கு , வாசி...."

 

2.jpg

 

"என்னடா நரேன் . அதேதானே இது?"

"டேய் சிவா.. நல்லாப் பாருடா. நாங்க எழுதுன தமிழில எழுத்துப்பிழை இருக்கு. இப்போ அதை யாரோ
திருத்தியிருக்காங்க. நீங்க யாராவது செஞ்சீங்களா இதை?"

ஒருவரை ஒருவர் பார்த்து மறுத்து மண்டையாட்டினோம். நரேன் தொடர்ந்தான், "அந்த 'டை'யை யாரோ
திருத்தியிருக்காங்க. நம்ம தலைமுறைல 'டை' எழுதணும்னா துணைக்கால்தான் போடுவோம்.
இப்படிக் கொம்பு போடுற பழக்கம் ரொம்பப் பழசு.......... கிட்டத்தட்ட இங்கே புதைச்சு
வெச்ச பொணமெல்லாம் உயிரொட இருந்த காலம்"

"டேய் என்னடா உளர்றே...
என்ன சொல்ல வர்றே?"

"இல்லடா..... யோசிச்சுப் பாரு. நம்ம அலாரம்ல வெச்ச குரல் எனக்கும் கேட்டிச்சு.
எனக்கென்னமோ............."

அவன் பேச்சை முடிப்பதற்குள் அர்ஜுன் அங்கிருந்து பிய்த்துக்கொண்டு ஓடினான். நாங்கள் அதிசயித்து உறைந்து
நின்றோம். ஐந்து நிமிடம் கழித்து நரேன் செல்லில் அழைத்தான்.
 
"டேய் கன்ஃபார்ம்டா..கைலாசம் ரெண்டு நாளா வேலைக்கு வரலே, வெள்ளிக்கிழமை ராத்திரிதான் மத்த
எல்லா வாட்ச்மேனும் அவரைக் கடைசியா பாத்திருக்காங்க. சனிக்கிழமை காலைல கூட அவரை
யாரும் பாக்கலை. அன்னிக்கு ராத்திரி இங்கே ஏதோ தப்பு நடந்திருக்கு"

 

-------------------------------------------------------------------------

 

திங்கட்கிழமை. அதே நேரம்.

கைலாசம் தாத்தா வீட்டு வாசலில் கவலை தோய்ந்த முகங்கள். ஓரமாய் உட்கார்ந்தொருவன் பாடை கட்டிக்
கொண்டிருக்கிறான். இழவு விழுந்த வீடு துக்கத்தைக் காற்றில் தெளித்துக் கொண்டிருக்கிறது. கைலாசம் தாத்தாவின் பேரன் ஒரு தபால் காகிதக் கட்டிலிருந்து ஒன்றை
உருவி, தலைப்பு எழுதுகிறான்.

 

3.jpg

 

பட்டென்று அவன் தலையில்

தட்டி, கைலாசம் தாத்தா அவனிடமிருந்து வாங்கித் தானே அதைத் திருத்திவிட்டுத்
தொடர்ந்து எழுதுகிறார்.

 

4.jpg
'நேற்று அதிகாலை எனது அண்ணன் புஷ்பவனம்
மாரடைப்பால்......'

"என்னத்த இங்கிலீஷு
மீடியத்துலே படிக்கிறீங்களோ. இந்தக் காலத்து இளசுகளுக்கு ஒரு வாக்கியம் எழுதத்
தெரியலையே நல்ல தமிழில..."

 


 

-------------------------------------------------------------------------

 

உங்களுக்குப் பேய் கதைகளில்
நம்பிக்கை உண்டா?

 

சும்மாதான் கேட்கிறேன்.

 

நரேனுக்கும் கேட்டிருக்கிறதே !

 

மதி
 

 

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பாவம் அந்த தாதியர், அவர் உங்களின் உறவினராகவும் உண்மையை பேசியதாலும் சத்திய மூர்த்தியின் உளவுத்துறையால் பின்தொடரப்பட்டு பழிவாங்கப்படும் சாத்தியமுண்டு.  
    • முன்னர் திண்ணையில் பாய் விரித்து படுத்த ஒருவர் என்றால் அது நீங்களாய்த்தான் இருக்கும்....அடுத்தது நாதமுனி..😂திண்ணை இல்லாததின் பின் அவரும் இல்லை. நாதமுனி   நல்ல மனிதர். அவரை பல தடவைகள் சந்தித்திருக்கின்றேன். கருத்துக்களம் இருக்க திண்ணையில்  பிரயோசனமான உரையாடல்களை ஏன் நிர்வாகம் விரும்புகின்றது என தெரியவில்லை. பல தடவைகள் என்னையும் திண்ணையில் தடை செய்திருந்தார்கள். அது போல் மட்டுறுத்தப்பட்ட உறவுகளை திண்ணை தடையுடன் திண்ணையை ஏனைய உறவுகளுக்கு திறந்து விடலாம் என்பது என் கருத்து. இது நாதமுனிக்காக.....😂🙂  
    • பேச்சு நன்றாக இருந்தது ஐயா
    • உக்ரைனின் மீதான ரஷ்ய பூட்டினின் ஆக்கிரமிப்பு போர் தாக்குதல்களால் மூன்றாவது கடும் குளிர்காலத்தை மின் தடைகள் வெப்பமூட்டும் பாதிப்புகளுடன் உக்ரேனிய மக்கள் அனுபவித்து வருகின்றனர். ஆனால் இங்கே செய்யபடும் ரஷ்ய பிரசாரம் மேற்குலகால் நடத்தப்படும் உக்ரேன் அழிவிற்கு
    • அந்த கூட்டம் தொடர்பான காணொலி  ============ வடக்கில் நீங்கள் பெரிய வசந்தம் கொண்டு வராவிட்டாலும் பரவாயில்லை,  நீர் வடிகாலமைப்பு, கிராமிய அளவில் வேலை வாய்ப்பு, எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் பற்றி கரிசனை,விவசாயிகளின் தன்னிறைவு உற்பத்திக்கான ஊக்குவிப்பு போன்ற விடயங்களில் அக்கறை  எடுத்தாலே போதும் அங்குள்ள மக்கள் தமது வசந்தத்தை தாமே ஏற்படுத்திக்கொள்வார்கள். ஏனென்றால் எந்த அரசாங்கமும் தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட வடக்கிலோ கிழக்கிலோ பாலாறும் தேனாறும் ஓட வைக்கும் என்பதில் எப்போதுமே நம்பிக்கை கொண்டதில்லை. எந்த ஒரு நாட்டிலும் போர் முடிவுக்கு வந்தால் நிவாரணம், மீள் கட்டமைப்பு, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கத்தான் முண்டியடித்து வருவார்கள். ஆனால் யாழ்ப்பாணத்தில் முற்றுமுழுதான சிங்கள ஆக்கிரமிப்பின் பின்னரும், யுத்த முடிவின் பின்னரும் முதலில் ஓடி வந்தது சிங்கள வங்கிகளும், நிதி நிறுவனங்களும், தனியார் வியாபார நிறுவனங்களுமே.. நடைபாதையில் மயங்கி வீழ்ந்து கிடப்பவனின் பொக்கற்றுக்குள் கையைவிட்டு இருப்பதையும் புடுங்கும் அரசுகளை கடந்து வந்த எமக்கு இனி நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். நீங்கள் நல்லது செய்துவிட்டால் ஆச்சரியம், நல்லது செய்யாவிட்டால் அதிர்ச்சியில்லை, வழமையானதுதான்.
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.