Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்தை கைவிடுங்கள் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு சில நாடுகள் திடீர் அழுத்தம்!

Featured Replies

தம்பி தமிழ்சூரியன் ,

உந்த பகவத்கீதை வசனம் எல்லாம் பார்த்து சர்வதேசங்கள் வெளிநாட்டு கொள்கைகள் வகுப்பதில்லை .இப்ப இரண்டு புஷ்களும் என்ன ஜெயிலுக்கையா இருக்கின்றார்கள் .

மக்கள் போராட்டம் என்பது எமது சமூக கட்டைப்பில் சாத்தியம் இல்லாமல் பண்ணபட்டதே ஒழிய சாத்தியமே இல்லை என்று அடித்து கூறமுடியாது.

75-84 கால கட்டங்களை எடுத்து பார்க்கவேண்டும் .இன்று அந்த சாத்தியம் இல்லை என்று வேணுமென்றால் கூறலாம்.

அவர்களுக்கு நம்பிக்கை இல்லாத ஒன்றை நடைமுறை படுத்த முற்பட்டவர்கள் என்பது ஏற்க முடியாத ஒன்று.

நீங்கள் எந்த கால கட்டத்தில் இவைகளை வாசித்தீர்கள் என்று எனக்கு தெரியாது .ஐயரின் பதிவில் பல இடங்களில் ஆரம்ப புலிகளின் உள்முரண்பாடுகளை வாசித்தால் விளங்கும்.தனிய ஐயரின் பதிவில்லை சிலருடன் கதைத்தும் இருக்கின்றேன் .

யாழ் பல்கலை கழகத்தில் மாணவர்களால் தொடங்கபட்ட உண்ணாவிரத்தையே தொடரவிடாமல் குழப்பியது இதற்கு ஒரு சாட்சி.

  • Replies 167
  • Views 7.8k
  • Created
  • Last Reply

நீங்கள் எந்த கால கட்டத்தில் இவைகளை வாசித்தீர்கள் என்று எனக்கு தெரியாது .ஐயரின் பதிவில் பல இடங்களில் ஆரம்ப புலிகளின் உள்முரண்பாடுகளை வாசித்தால் விளங்கும்.தனிய ஐயரின் பதிவில்லை சிலருடன் கதைத்தும் இருக்கின்றேன்

யாழ் பல்கலை கழகத்தில் மாணவர்களால் தொடங்கபட்ட உண்ணாவிரத்தையே தொடரவிடாமல் குழப்பியது இதற்கு ஒரு சாட்சி.

உங்கட போராட்டம் தொடங்கின 80 களில் ஊரைவிட்டு கிழம்பின நீங்கள் ஊரை பற்றி கதைக்கிறீர்கள்... கடந்த மூண்று வருசத்துக்கும் முன்னம் வரைக்கும் புலிகள் மக்களோடைதான் ஈழத்திலை நிண்டுதான் போராடினவை... வெளிநாடுகளிலை இருந்து இல்லை... உங்களுக்கு அந்த துணிவு அறவே இல்லை... எனக்கு அதிலை பிரச்சினையும் இல்லை...

தாய் , விடிவெளி முதல், ஆனந்தவிகடன் சுஜாதா எழுதின ஏன் எதுக்கு எப்பிடி, தலைமை செயலகம் எண்று போராளிகளுக்கு வாசிக்க குடுக்காத புத்தகங்களே கிடையாது... !

Edited by தயா

கார்கியின் தாய் ஒரு நாவல் மட்டுமே. அதில் ஒன்றும் உண்மை இல்லை. அது புரட்சி முடிந்து 30 ஆண்டுகளின் பின் எழுதப்பட்டது என்று நினைக்கிறேன். அர்ச்சுன் உண்மையில் PLOT ல் இருந்தவராயின் தாயின் எந்த பகுதி உண்மையில் பயங்கர ஆயுத போராட்டம் நடக்கும் இயக்கம் ஒன்றுக்கு ஒத்து போகும் என்று விபரித்தால் நல்லது.

இயற்கையில் மிக மென்மையான சுபாவம் படைத்த கார்க்கிக்கு போராடத்துடன் பெரிய தொடர்பு ஒன்றும் இருக்கவில்லை. அவர் தாயையும் மகனையும் அதீத மென்மையான நல்ல உள்ளம் கொண்டவர்களாக வர்ணித்திருக்கிறார். மிக இலகுவகா முடிந்த முடிபான திட்டங்களை போடத்தக்கவர்களாக காடுகிறார். அவர் காட்டும் மோசமான தந்தை கூட வெறும் குடிகாறன் மட்டுமே. குடிப்பதை தவிர அவனிடம் ஒன்றும் பெரிய கெட்டது இருக்கவில்லை. இது கார்கி, போராட்டம் என்ற பெயரில் வளர்ந்த்வர்களுக்கு எழுதிய "Fairy Tale". அருமையான குணம் படைத்த பெண்கள் மகனிடன் சினேகிதம் வைத்துகொள்வார்கள்.

இதுவல்ல இலங்கையில் நடந்த இனக்கலவரங்கள். பிறப்புறுப்புகளுக்குள் குண்டு வைக்கும் இலங்கை இராணுவத்தை தாய் எப்படி சமாளிப்பா என்று எங்கும் கார்க்கி சொல்லவில்லை. புஸ்பராணி, சபஸ்தியாம்பிள்ளை, சிவகுமார், துரையப்பா போன்றவைதாம் நமது கதையின் ஆரம்பம்.

கதை தேடி வாசிப்போருக்கு அருமையான, மென்மையான நாவல். இனிமையான குடும்ப வாழ்க்கைகளாக எடுத்து மணிவண்ணனின், குறிஞ்சி மலர், பொன் விலங்கு போன்றவற்றில் கண் விழிகளில் இருந்து இரத்தத்தை பிழிந்தெடுக்கும் எழுத்துடன், கார்க்கியின் பயங்கர பதாள உலக போராடக்குழுவை வைத்து காட்டும் மிக சுகமான இங்கிதமான எழுத்தையும் ஒப்பிட்டு பார்க்கலாம்.

Edited by மல்லையூரான்

புலிகள் இயக்கத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவரான ஐயர் "ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்" என்ற நூலில் இவ்வாறு எழுதியுள்ளார்

-----------------------------------------------

இன்றும் அரசியல் நிலை பெரிதாக மாற்றம் அடையவில்லை.

ஐயர் மாதிரி ஆக்கள் தாங்கள் போன பாதையில் ஏற்பட்ட பிழைகள் பற்றி கேள்விகள் எழும்பக்கூடாது எனும் எண்ணத்திலும், தங்களை விட்டு போட்டு போராட்டத்தை வெற்றியாக வளர்த்த பிரபாகரன் மீதான காள்புணர்விலும் எழுதும் புரட்டுகள் இவை...

புலிகள் அரசியல் செய்யாமல் சண்டை போட்டார்கள் எண்று சொல்கிற எத்தினை பேருக்கு தெரியும் புலிகள் இலங்கையின் பொருளாதாரத்தை சிதைக்கிறதை நோக்கமாக கொண்டு மட்டும் தான் போராடிக்கொண்டு இருந்தார்கள் எண்று... ???

போராடின புலிகள் வெறும் பதுங்கி தாக்குதல்களும் முகாம்களை மட்டும் அழித்து சில பல டோராக்கள் மீதான தாக்குதல்களும் தமிழீழத்தை பெற்று தரமாட்டாது எண்டதை தெரியாமலா போராடினார்கள் எண்டுறீர்கள்... ???

ஆச்சே மக்களின் போராட்டத்துக்கு அள்ளிவைத்த சுனாமி தான் எங்கட 25 வருட போராட்டத்துக்கும் கொள்ளி வைத்தது எண்டு எப்ப தான் விளங்கிக்கொள்ள போகிறீர்களோ...???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதே கருத்தை ஐயரின் பதிவில் இருந்து ஆதாரம் காட்டி நான் எழுதிய பதிவை தூக்கிவிட்டார்கள் .

அதில் நான் எழுதியிருந்தது இதுதான் .வெகுஜன அமைப்பையும் அதன் போராட்டத்தையும் பற்றி தெரியாதவர்களால் அதை எப்படி நடாத்தமுடியும் .

ஒரு ரஷ்ய ,சீனா புரட்சி பற்றியோ அல்லது கார்க்கியின் தாய் போன்றொரு நாவலோ படித்திருந்தால் விளங்கியிருக்கும். ஏன் புலம் பெயர்ந்த தேசங்களில் கூட தொழிலாளர் யூனியன் வேண்டும் என்று நிற்கின்றோம் .

எதுவுமே அறியாது தமிழ் சினிமா பாணியில் போராட்டம் நாடாத்தினால் முடிவு இதுதான் .

எனக்கு யாராவது "புலிகளால் ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டது"என்பதை விளங்கபடுத்துவீர்களா?

ஒரு நாலுபேரின் மதிப்பை வாங்கக்கூடிய நடை அறியாதவன் தான் உபதேசி ஆகின்றான் என்றால் அவன் மனவியாதியின் அங்கீகாரம் ஒன்றால் மட்டும்தான் அந்த நிலை உருவாகி இருக்கின்றது என்று கொள்ள வேண்டும்!

தலைவர் பிரபாகரனை ஒரு பயந்தாங்கொள்ளி போல் உருவகம் செய்து நக்கல் புரிவது எந்த வகையிலும் ஒரு உபயோகமான ஒரு பதிவாகாதென்பது ஒரு புறம். சொந்த மனநோய் புண்ணின் அரிப்பின் வெளிப்பாடு என்பது மறுபுறமான உண்மை. அதையும் விடுத்து இதை தமிழர்களின் பெரும்பான்மை இரசிக்கும் என்று நினைக்கின்ற அறிவீனம் இனிச் சொல்ல என்ன யதார்த்தம் இருக்கின்றது என்பதே முதன்மையான வினா ஆகின்றது!

நான் நினைக்கின்றேன் மகாத்மா காந்தியிடம் ஒரு அசடன் விவாதம் செய்யும் போது காந்தி அந்த விவாததில் "நான் படித்தவன்" என்ற ஒரு சொல் சேர்த்திருந்தால் அசடனின் விவாதமே சபையில் மதிப்பை சேர்த்திருக்கும்.

ஒரு வேளை அசடன் பதிலாக சேர்த்திருந்தால் அவனுடைய தோல்விக்கு அது பெரிய பாதிப்பைக் கொடுத்திருக்காது! ஏன் என்றால் அறியாமை என்பதன் உண்மையான கனம் அதுதான்.

அந்த வகையிலேயே நான் என்னுடைய நிலைப்பாட்டை சொல்கிறேன். இலங்கைத்தீவில் வேற்றுமைகள், இனவாதம் போன்றன ஒழிக்கப்பட்ட இனங்கள் சிறந்து நட்புணர்வும் புரிந்துணர்வும் கொண்டு வாழும் நிலையை சிறிலங்கா அரசு உருவாக்குமானால் நான் தமிழீழம் பற்றி சிந்திக்க வேண்டிய தேவை வராது.

இப்படியான ஒரு நிலையை உருவாக்குவதற்காக பழி உணர்ச்சியை மறந்து செயற்படுவதற்கு நான் தயராகவே இருக்கிறேன்.

இது நான் சிறிலங்கா அரசிடம் சொல்கின்ற செய்திதான். மகாணசபையை இன்றைக்கு ஏற்றுக் கொள்கிறோம். அதற்கு அதிக அதிகாரங்கள் கேட்டு நாம் அரசியல்ரீதியாக போராடுவோம். அந்த அதிகாரங்களோடு திருப்திப்படுவதும், திருப்திபடாது மீண்டும் தமிழீழம் கேட்பதும் சிறிலங்கா அரசின் கைகளில்தான் இருக்கிறது.

நீங்கள் தயாராக இருக்கிறீர்கள்... (வேண்டும் என்னையும் அதிலை சேர்த்துக்கொள்ளுங்கள்... ) ஆனால் தமிழர்களுக்கு எதையாவது தருவதுக்கு சிங்களம் தயாராக இருக்கிறதா...????

அப்படி நாங்கள் பெற்றுக்கொள்ள முதல் உப்பு சப்பே இல்லாத நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை சிங்களம் நடைமுறைப்படுத்தட்டும்... அதைதானே ஐநாவும் மேற்கு நாடுகளும் கேக்கின்றன...

நீங்கள் சொல்வது போல நாங்கள் செய்தால் வலிந்து திணிக்கப்பட்டு எழும்பும் புத்தர் சிலைகளும் , தமிழ் ஊர்களுக்கு வைக்கப்படும் சிங்களப்பெயர்களும் அதோடு நில உச்சவரம்பு சட்டம் மூலம் தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட அரச காணிகளில் கொண்டு வந்து குடியேற்றப்படும் சிங்களவர்களும் நிறுத்தப்படும் எண்று உத்தரவாதம் உங்களால் தரப்பட முடியுமா...??

  • கருத்துக்கள உறவுகள்

ஆச்சே மக்களின் போராட்டத்துக்கு அள்ளிவைத்த சுனாமி தான் எங்கட 25 வருட போராட்டத்துக்கும் கொள்ளி வைத்தது எண்டு எப்ப தான் விளங்கிக்கொள்ள போகிறீர்களோ...???

இயற்கைகூட எங்கட போராட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொல்லுவது மாதிரி இருக்கு.

சுனாமி வராவிட்டால் ஆயுதப் போர் மூலம் வென்றிருக்கலாம் என்ற அபிப்பிராயம் போராட்டம் முடிவுக்கு வந்தபின்னர் வைப்பது இலகு. ஆனால் சர்வதேசக் காரணிகள், நிலைப்பாடுகள் அப்படியேதான் இருந்தன. அதனால்தான் கடும் தேசியவாதியான மகிந்தவை ஜனாதிபதியாக்கியும், சர்வதேச நாடுகள் அவருக்குப் புலிகளை அழிக்க உதவின.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாட்டிலே மக்கள் செல்வாக்கு பலமாக உள்ள எந்தக் கட்சியாவது ஊழலுக்காக ஆட்சி செய்யாமல் மக்களுக்காகச் செய்கின்றார்கள் என்று எவராவது சொன்னால் அந்த பாமரத்தனத்துக்கு அறிவு வெளிச்சம் கொடுக்க எந்தக் கல்வியாலும் முடியாது என்பதே உண்மை!

முள்ளிவாய்க்காலின் பாவத்தை நீக்கிப் பார்த்தால் கூட திமுக என்ற கட்சியின் மக்கள் மோசடித்தனம் என்பது எல்லைகள் அற்ற ஒன்று என்பது உலகறிந்த உண்மை!

இந்த அடிப்படைத் தளங்களில் நின்று எவராவது முள்ளிவாய்க்காலின் பாவங்கள் கலைஞரின் பதவியை பழிவாங்கி இருப்பது முறை இல்லை என்று சொன்னால் சொல்லப்படுபவரின் அறிவு ஆராட்சிக்கு உரியதாகின்றது. இந்த நபர் புலிகளின் போராட்டத்தை பரிசோதனை செய்வது என்பது கையில் உள்ள புளியங்கொட்டை போன்ற திமுக ஊழல் கண்ணுக்குத் தெரியாத நிலை இருக்கும் போது பேனின் அளவில் உள்ள புலிகளின் குற்றம் இவர் கண்களுக்கு தெரிவது முறையாகுமா?

"லண்டன் தமிழர் தகவல்" என்ற ஒரு இதழ் இப்போது வெளியிடப்பட்டிருக்கின்றது. அதன் கட்டுரைகளின் போக்கு திமுகவின் கட்சி இதழ் போன்றே இருக்கின்றது.

கட்டுரையாளர்கள் பெயர் எல்லாக் கட்டுரைகளும் கொண்டிருக்காவிட்டாலும் ஒன்று இரண்டு கொண்டிருக்கின்றது. அதில் ஒருவர் சிறீரங்கன்.

இதில் ஓர் கட்டுரை "டெசோ" மானாட்டைப் பற்றி இருந்தது கட்டுரை முழுவதும் திமுகவிற்கு பலவகை முட்டுக்கள் கொடுக்கப்பட்டு இருந்தது. இருந்தாலும் சாதுரியமாக புலிகளின் மேல் கல் எறியாமல் நாசூக்காக கலைஞரின் பாவத்தை கழுவப்பார்க்கின்றது அதன் போக்கு. அதில் இப்படி விவாதித்திருக்கின்றார் கட்டுரையாளர்; -புலிகளை அழிக்க உலகம் முழுவதும் ஒன்றாகி சிறிலங்காவுடன் சண்டை போடும் போது கலைஞரால் மட்டும் எப்படி அந்த போரை தடுத்து நிறுத்தி இருக்க முடியும்-- என்று கேட்கின்றது.

கலைஞர் ஊடகமாவது கண்ணைத் திறந்திருந்தால் உலகமே அதனூடாக அந்த அட்டூழியத்தைப் பார்த்திருக்கும் பதிலாக என்ன செய்தார்? தீக்குளிப்பை வயிற்றுக் குத்தின் விளைவு என்று ஆக்கினார். எமக்காக போராடிய வளக்காளரின் மண்டைகளை உடைத்தார். இவை எல்லாம் அவர் தன் அதிகாரத்தின் எல்லைகளுக்குள் இருந்ததைக் கொண்டுதானே செய்தார்!

  • கருத்துக்கள உறவுகள்

ஐயரை இங்கு முன் வைப்போருக்கு ஒரு வேண்டுகோள்

தற்பாழுது அவர் எங்கு உள்ளார் என அறியத்தரமுடியுமா?

அவர் கடைசியாக முக்கியமான ஒருவருக்கு சொன்னது. என்னை எதற்காகவாவது பாவித்துவிடுவார்களோ என்று என் மனச்சாட்சி என்னை பயமுறுத்துகிறது என்று. தற்பொழுது அவர் எங்கே? யாருடைய தூண்டுதலின் பெயரில் இப்புத்தகத்தை எழுதினார்???

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

மல்லையூரான் ஐயா, உங்கள் எழுத்துக்களைப் பார்த்தால் நிறைய விடயங்களை ஆழமாகப் படிக்கின்றீர்கள் என்று தெரிகின்றது. மிகவும் நல்லது. ஒருமுறை ஐயரின் தொடரையும் (யாழில் உள்ளது) வாசித்தால் இன்னும் ஆழமாக கருத்துக்களை வைக்கமுடியும். தமிழீழம் அமைக்கக் கூடிய சட்டங்களைத்தான் படிப்பேன் என்றால் உடனடியாக உருத்திரகுமார் ஐயாவுடன் தொடர்புகொள்ளுங்கள்.

ஐயரை இங்கு முன் வைப்போருக்கு ஒரு வேண்டுகோள்

தற்பாழுது அவர் எங்கு உள்ளார் என அறியத்தரமுடியுமா?

அவர் கடைசியாக முக்கியமான ஒருவருக்கு சொன்னது. என்னை எதற்காகவாவது பாவித்துவிடுவார்களோ என்று என் மனச்சாட்சி என்னை பயமுறுத்துகிறது என்று. தற்பொழுது அவர் எங்கே? யாருடைய தூண்டுதலின் பெயரில் இப்புத்தகத்தை எழுதினார்???

அவர் எங்கிருக்கின்றார் என்பதெல்லாம் தெரியாது. தேவையுமற்றது. ஏன் Facebook இல் நண்பராக சேர்க்கப் போகின்றீர்களா?

புத்தகத்தை வாசித்தால் தன்பாட்டிலேயே அவர் எழுத வெளிக்கிட்டதற்கு விளக்கம் தெரியும் ஐயா. பால் போச்சியை வாய்க்குள் வைத்தாலும் உறிஞ்சமாட்டேன் என்று அடம்பிடிக்கும் குழந்தையாக இருக்காதீர்கள் :icon_mrgreen:

மல்லையூரான் ஐயா, உங்கள் எழுத்துக்களைப் பார்த்தால் நிறைய விடயங்களை ஆழமாகப் படிக்கின்றீர்கள் என்று தெரிகின்றது. மிகவும் நல்லது. ஒருமுறை ஐயரின் தொடரையும் (யாழில் உள்ளது) வாசித்தால் இன்னும் ஆழமாக கருத்துக்களை வைக்கமுடியும். தமிழீழம் அமைக்கக் கூடிய சட்டங்களைத்தான் படிப்பேன் என்றால் உடனடியாக உருத்திரகுமார் ஐயாவுடன் தொடர்புகொள்ளுங்கள்.

நன்றி. நேரம் கிடைக்கும் போது நீங்கள் சொன்னவற்றை செய்ய முயற்சிக்கிறேன் கிருபன் அண்ணை.

நாரதர்,

எந்த ஒரு போராட்டத்திலும் அனைவருமே ஆயுதம் ஏந்திப் போராட மாட்டார்கள் என்பது உண்மை. பெரும்பான்மையான மக்களின் ஆதரவோடுதான் விடுதலைப் புலிகள் போராடினார்கள் என்பதும் உண்மை. ஆனால் ஆதரவளித்தவர்களின் பெரும்பான்மையான ஆதரவு என்பது செயற்பாடுகள் அற்ற தார்மீக ஆதரவு என்கின்ற அளவோடு நின்று விட்டது.

புலிகள் அமைப்பு பல மக்கள் திரள் அமைப்புக்களைக் கொண்டிருந்தது.அதன் கட்டமைபுக்களுக்கு பல்வேறு துறை சார் நிபுணர்கள் உதவினார்கள்.புலிகளின் இரகசிய இராணுவ நவடிக்கைகள் ,வெளிப்படையான நடவடிக்கைகள் எல்லவற்றிலும் மக்கள் பங்கு பற்றினர்.புலம் பெயர் தேசத்தில் பணம் வழங்கினர், போராட்டங்களில் கலந்து கொண்டனர்.இவை எல்லாம் வெறும் தார்மீகப் பங்கெடுப்பு என்றா சொல்கிறீர்கள்?

100 சதவிக மக்களும் ஆயுதம் ஏந்தி இருந்த்தாலும், எம்மால் சர்வதேச பிராந்திய சக்திகளால் பயிற்றுவிக்கப்பட்டு ஆயுடம் கொடுத்து பணம் கொடுத்து வளர்க்கப்பட்ட சிறிலங்கா இராணுவத்துடன் போரிட்டு வென்று இருக்க முடியாது.

போரின் போது உலகம் முழுவதும் மக்கள் தப்பி ஓடுவார்கள். ஆயினும் இப்படியே போனால் ஒரு சில ஆண்டுகளில் அந்தப் பகுதியில் மக்களே இருக்க மாட்டார்கள் என்கின்ற அளவிற்கு நிலை எம்மிடம் இருந்தது. போராடுகின்ற இயக்கம் தமது மக்கள் வெளியேறாமல் தடுப்பதற்காக பாஸ் நடைமுறை கொண்டுவந்ததை நான் மற்றைய போராட்டங்களில் படித்திருக்கவில்லை.

மேலே மல்லையூரான் சில உதரணக்களை எழுதி உள்ளார்.உலகப் போராட்டங்கள் பற்றி நீங்கள் இன்னும் ஆளமாகப் படிக்க நிறைய இருக்கு.

கடைசியாக வன்னி யுத்தத்தின் போது மக்களில் ஒரு பகுதியினர் புலிகளிடம் இருந்து இராணுவத்திடம் தப்பி ஓடுவதற்காக புலிகளை ஒத்த சாகசங்களை எல்லாம் புரிந்தார்கள்.

இது புலிகளின் போராட்டமாக இல்லாமல் மக்களின் போராட்டமாக இருந்திருந்தால், புலிகளின் அழிவோடு போராட்டம் முடிந்திருக்காது. நாம் போராட்டத்தை ஒரு தனிமனிதனில் குவித்து விட்டோம். அந்த மனிதனின் முடிவோடு தமிழீழத்திற்கான போராட்டம் முடிந்து விட்டது..

போராட்டம் எங்கே முடிந்தது? போர் தான் முடிந்திருக்கிறது.

விடுதலைப் புலிகள் மீது அனுதாபம் இருந்தாலும், நடந்தவை பற்றி பெரும் மனக் கவலை இருந்தாலும், சிங்கள அரசு மீது கோபம் இருந்தாலும் "இப்பொழுது பிரச்சனை இல்லை, நிம்மதியாக இருக்கிறோம்" என்பதே பொதுவான மக்களின் கருத்தாக இருக்கிறது

போரைஎவர் தான் விரும்புவார்கள்? போராடுவதைத் தவிர வேறு வழி என்ன இருக்கிறது?

த வகையிலேயே நான் என்னுடைய நிலைப்பாட்டை சொல்கிறேன். இலங்கைத்தீவில் வேற்றுமைகள், இனவாதம் போன்றன ஒழிக்கப்பட்ட இனங்கள் சிறந்து நட்புணர்வும் புரிந்துணர்வும் கொண்டு வாழும் நிலையை சிறிலங்கா அரசு உருவாக்குமானால் நான் தமிழீழம் பற்றி சிந்திக்க வேண்டிய தேவை வராது.

இப்படியான ஒரு நிலையை உருவாக்குவதற்காக பழி உணர்ச்சியை மறந்து செயற்படுவதற்கு நான் தயராகவே இருக்கிறேன்.

இது நான் சிறிலங்கா அரசிடம் சொல்கின்ற செய்திதான். மகாணசபையை இன்றைக்கு ஏற்றுக் கொள்கிறோம். அதற்கு அதிக அதிகாரங்கள் கேட்டு நாம் அரசியல்ரீதியாக போராடுவோம். அந்த அதிகாரங்களோடு திருப்திப்படுவதும், திருப்திபடாது மீண்டும் தமிழீழம் கேட்பதும் சிறிலங்கா அரசின் கைகளில்தான் இருக்கிறது.

சபேசன் நீங்கள் சொல்வதை எதிர்பார்ப்பதை சிறிலங்கா அரசு செய்யும் என்று நீங்கள் உண்மையில் நினைக்கிறீர்களா? சிங்கள அரசுகளின் நெடு நாள் வரலாறும் அண்மைய நிகழ்வுகளும் உங்களுக்கு இத் தகைய நம்பிக்கையைக் கொடுக்கிறதா? இந்தப் பெரிய வல்லரசுகள் இந்திய பிராந்திய வல்லாதிக்கம் எல்லாம் சொல்லியே மகிந்தவோ சிங்கள மக்களோ கேட்க்கத் தாயாரில்லை.எதனடிப்படையில் நீங்கள் கேட்பதை மகிந்தர் வழங்குவார் என்று நினைகிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

அவர் எங்கிருக்கின்றார் என்பதெல்லாம் தெரியாது. தேவையுமற்றது. ஏன் Facebook இல் நண்பராக சேர்க்கப் போகின்றீர்களா?

புத்தகத்தை வாசித்தால் தன்பாட்டிலேயே அவர் எழுத வெளிக்கிட்டதற்கு விளக்கம் தெரியும் ஐயா.

பால் போச்சியை வாய்க்குள் வைத்தாலும் உறிஞ்சமாட்டேன் என்று அடம்பிடிக்கும் குழந்தையாக இருக்காதீர்கள் :icon_mrgreen:

இப்பொழுதெல்லாம்

நண்பர்களே விசம் வைச்சுக்கொல்கிறார்களய்யா?

நாம கேட்காமலேயே போச்சி நம்ம வாய்க்குள்ள வருகுது என்றாலே :lol: வில்லங்கள் எம்முக்குள் ஊட்டப்படுகுது என்று தான் அர்த்தம்.

அதுவும் தயாரித்தவன் முன் வராமல்???? :(

Edited by விசுகு

இங்கு எழுதப்பட்ட அதாவது கருத்துக்களின் அடிப்படையில் ஒன்றுமட்டும் ஆழமாக தெரிகிறது...............தமிழீழத்திற்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ,அது ஆயுதப்போராட்டமாகி அந்த உன்னதமான ,ஆயுத அரசியல் பலம் பொருந்திய அந்தப்போராட்டத்தை அழிப்பதற்கு அல்லது மௌனிப்பதற்கு துணைநின்ற சர்வதேசமும் ,சிங்களஅரசும்,தமிழ் ஒட்டுண்ணிகளும் இந்தப்போராட்டம் அதாவது தமிழர்களின் விடிவிற்கான போராட்டம் மீண்டும் எந்தக்காரணம் கொண்டும் யாராலும் முன்னேடுக்ககூடாது என்பதில் இன்றுவரை உறுதியாகவும் ,தெளிவாகவும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.அதற்காக பல எம் தமிழ் அறிஞ்சர்களை[அவர்கள் விரும்பியோ,விரும்பாமலோ ][எழுத்தாளர்களை ] கொண்டு உண்மையையும் ,சரித்திரத்தையும் மறைப்பதற்கும் ,அவற்றை களங்கப்படுத்தும் வகையிலும் பல கட்டுரைகளையும்,

நூல்களையும் வெளியிட்டு எல்லோரையும் குழப்பும் [மூளைச்சலவை] செய்யும் பணியிலே வெற்றி கண்டு கொண்டிருக்கிறார்கள் என்பதும் திண்ணம்

நாரதர்,

ஒரு விடுதலைப் போராட்டம் நடக்கின்ற பொழுது, அந்தப் போராட்டத்தை நடத்துவதாக சொல்லப்படுகின்ற மக்களை போராட்டத்தை முன்னெடுக்கும் இயக்கம் எதிரியிடம் போய் விடாமல் இருப்பதற்கு உருவாக்கப்பட்ட பாஸ் நடைமுறைக்கு மல்லையூரான் அமெரிக்காவை உதாரணம் காட்டியிருக்கிறார். இது பற்றி மேலதிக தவகல்களை தந்தால் நல்லது. கற்றுக் கொள்வதற்கு நான் என்றும் ஆர்வம் மிக்கவனே.

மற்றையது சிறிலங்கா அரசு நாம் கேட்பதை தருமா என்று கேட்கிறீர்கள். இலகுவில் தரமாட்டார்கள். வட மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கே அவர்கள் பின்னடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள் சிலவற்றை செய்துதான் ஆக வேண்டும். அடுத்த ஆண்டு மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாக சொல்லியிருக்கிறார்கள்.

நாமும் எமது இன்றையை நிலையை உணர்ந்து மிகப் பெரும் பொறுமையோடு இவற்றை அணுக வேண்டும். மாகாணசபைக்கு இருக்கின்ற கொஞ்ச நஞ்ச அதிகாரங்களின் ஊடாக உச்சபட்ச பலனை உருவாக்க வேண்டும்.

இது ஒரு போட்டியாகத்தான் நகரும்.

இன்றைக்கு உலகம் மிகவும் சுருங்கி விட்டது. சிங்களவர்களுக்கும்தான். இதனுடைய பலன் எங்களுக்குத்தான் அதிகமாக இருக்கும்.

நாங்கள் தாயகப் பயணங்களை மேற்கொள்ள வேண்டும். அங்கே ஆய்வுகளை மேற்கொண்டு தமிழர் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப வேண்டும்.

முன்பு போல் கலவரம் செய்து எங்களின் பொருளாதாரத்தை இனி சிங்களத்தால் அழிக்க முடியாது. அப்படி அழித்தால், அதனுடன் அவர்களின் பொருளாதாரமும் நொறுங்கும் என்பது போன்ற ஒரு சங்கிலித் தொடரை அமைப்பதும் பாதுகாப்பானதே.

இதற்கு ஏற்றபடி எமது அரசியலை அமைத்துக் கொள்வதே சரியானது. தமிழீழத்தை கைவிட மாட்டோம் என்று வீரம் பேசிவிட்டு போவது அல்ல.

ஐயரை இங்கு முன் வைப்போருக்கு ஒரு வேண்டுகோள்

தற்பாழுது அவர் எங்கு உள்ளார் என அறியத்தரமுடியுமா?

அவர் கடைசியாக முக்கியமான ஒருவருக்கு சொன்னது. என்னை எதற்காகவாவது பாவித்துவிடுவார்களோ என்று என் மனச்சாட்சி என்னை பயமுறுத்துகிறது என்று. தற்பொழுது அவர் எங்கே? யாருடைய தூண்டுதலின் பெயரில் இப்புத்தகத்தை எழுதினார்???

[size=4]முன்னாள் உறுப்பினர் என்றவுடன் பலரும் ஒருவித மதிப்பை அந்த கருத்தாளருக்கு கொடுப்பது வழக்கம். அவர்களை மேற்கோள் காட்டுவதன் மூலம் சிலர் தமது 'நியாயத்தை' வலியுறுத்த பார்ப்பார்கள்.[/size]

[size=4]ஆனால், பிள்ளையான் இல்லை கருணா போன்றவர்களும் கூட முன்னாள் போராளிகள் தான். எனவே மக்களுக்கு தெரியும் யாரை எங்கே வைப்பது என்று :D [/size]

நாங்கள் தாயகப் பயணங்களை மேற்கொள்ள வேண்டும். அங்கே ஆய்வுகளை மேற்கொண்டு தமிழர் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப வேண்டும்.

[size=4]சாதாரண மக்களால் ஆயுவுகளை இல்லை முதலீடுகளையோ சிங்கள இராணுவ தலையீடுகள் இல்லை ஊழல் இல்லாமல் இன்றைய காலத்தில் செய்யமுடியும் என நான் எண்ணவில்லை.[/size]

[size=4]மாறாக வெளி உலகின் அழுத்தம் மூலம் ஒரு அரசியல் / பொருளாதார தீர்வை பெறுவதன் மூலமே நிலையான ஆய்வுகளையும் முதலீடுகளையும் முன்னெடுக்க முடியும்.[/size]

நாரதர்,

ஒரு விடுதலைப் போராட்டம் நடக்கின்ற பொழுது, அந்தப் போராட்டத்தை நடத்துவதாக சொல்லப்படுகின்ற மக்களை போராட்டத்தை முன்னெடுக்கும் இயக்கம் எதிரியிடம் போய் விடாமல் இருப்பதற்கு உருவாக்கப்பட்ட பாஸ் நடைமுறைக்கு மல்லையூரான் அமெரிக்காவை உதாரணம் காட்டியிருக்கிறார். இது பற்றி மேலதிக தவகல்களை தந்தால் நல்லது. கற்றுக் கொள்வதற்கு நான் என்றும் ஆர்வம் மிக்கவனே.

மற்றையது சிறிலங்கா அரசு நாம் கேட்பதை தருமா என்று கேட்கிறீர்கள். இலகுவில் தரமாட்டார்கள். வட மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கே அவர்கள் பின்னடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் அவர்கள் சிலவற்றை செய்துதான் ஆக வேண்டும். அடுத்த ஆண்டு மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாக சொல்லியிருக்கிறார்கள்.

நாமும் எமது இன்றையை நிலையை உணர்ந்து மிகப் பெரும் பொறுமையோடு இவற்றை அணுக வேண்டும். மாகாணசபைக்கு இருக்கின்ற கொஞ்ச நஞ்ச அதிகாரங்களின் ஊடாக உச்சபட்ச பலனை உருவாக்க வேண்டும்.

இது ஒரு போட்டியாகத்தான் நகரும்.

இன்றைக்கு உலகம் மிகவும் சுருங்கி விட்டது. சிங்களவர்களுக்கும்தான். இதனுடைய பலன் எங்களுக்குத்தான் அதிகமாக இருக்கும்.

முதலில் நான் கேட்ட கேள்விகளுக்கு இன்னமும் பதில் சொல்ல தயாரில்லாமல் என்னிடம் கேள்வி கேட்க வருவது சரியாக இலங்கை அரசின் பிரசார நடவடிக்கைகள் மாதிரியேதான் இருக்கிறது. இதையேதான் நாகேஸ் திருவிளையாடலில் சொல்கிறது" என்னக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும்" என்று.

1.தமிழர்கள் பயந்தவர்கள், பலதீனியர்கள் வீரமானவர்கள் என்று எடுத்த முடிவுக்கான தரவுகளான இரண்டு போராட்டங்களின் ஒற்றுமை/வேற்றுமைகளையும்;

2.100 வருடத்தில் எப்படி தமீழ் ஈழம் வரும் என்ற வழி முறை பாதையையும்,

3. என்னை வைத்து நீங்கள் விரும்பும் தமிழீழத்தை பிரிக்க போவதாக என்று பதில் தந்த போது பதிலுக்கு எனக்கும் உதவதயாரா என்று கேட்டதிற்கும் இன்னமும் பதில் இல்லை.

உங்கள் போராட்டமான 100 வருடத்தில் தமிழ் ஈழம் பிரிப்பதற்கு என்னை அழைத்தால், நான் உதவ தயார். ஆனால் யாரவது இன்னொருவரிடம் உதவி கேட்பவர்கள் இலங்கை அரசு மாதிரி நடக்காமல் உதவி கேட்டவர்களுக்கும் தாங்கள் கைமாறாக உதவ தயார் என்று பகிரங்க அறிக்கை விட முடியுமா? எனது வகை முயற்சியான மகிந்தாவை சர்வதேச விசாரணைகுழு ஒன்றால் விசாரிக்க வைக்கும் முயற்சியில் என்னுடன் சேர்ந்து உழைக்க தயாரா?

இவற்றுக்கு பதில் தந்தால் உடனே அமெரிக்க கட்டயா ராணுவசேவையை பற்றி மிக விரிவான இணைப்பை தருகிறேன்.

நான் எங்கும் ஒடபோவதில்லை. நான் பிழை விட்டால்; அமெரிக்க இராணுவத்தில் கட்டய சேவை இருக்கவில்லை என்றால் நான் மன்னிப்பு கேட்கத்தயார். இது இன்னொரு பலஸ்தீன கல்லெறிதல் குரங்கு சேட்டை அல்ல. இது பகிரங்கமாக இணையத்தில் இருக்கும் கட்டுரை. ஆனால் பலதீனியரை விட தமிழரோ, புலிகளோ பயந்தவர்கள் போன்றோ அல்லது 100 வருடத்தில் வரவிருக்கும் தமிழ் ஈழம் போன்றோ பதில் இல்லாத புணைந்துரைகள் இல்லை. மேலும் தொடரமுடியாமல் போய்விட்டவுடன் நான் 100 ஆண்டுகளின் பின் வரவிருக்கும் போராடத்திற்கு போக போவதாக தரம் கெட்ட கதைகள் கதைக்க எனக்கு தேவை இல்லை.

நியாயமன பதில் என் மூன்று கேவிகளுக்கும் வர வேண்டும். உடனே இணைப்பு வரும்.

[size=6]மூன்றாவது கேள்வி மகிந்தாவை சர்வதேச விசாரணக்கு இட்டு செல்ல உதவ தயாரா?[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]சாதாரண மக்களால் ஆயுவுகளை இல்லை முதலீடுகளையோ சிங்கள இராணுவ தலையீடுகள் இல்லை ஊழல் இல்லாமல் இன்றைய காலத்தில் செய்யமுடியும் என நான் எண்ணவில்லை.[/size]

[size=4]மாறாக வெளி உலகின் அழுத்தம் மூலம் ஒரு அரசியல் / பொருளாதார தீர்வை பெறுவதன் மூலமே நிலையான ஆய்வுகளையும் முதலீடுகளையும் முன்னெடுக்க முடியும்.[/size]

அகூதா

நீங்கள் முதலீடு என்று பணத்தைக்குறிப்பிட்டு பயப்படுகிறீர்கள்.

அவர் முதலீடு என்று கட்டுரைகளை ஆராய்ச்சிகளைக்குறிப்பிடுகிறார்

வந்தால் மலை

போனால் மயிர்(கட்டுரை)

என்பது அவரது எடு கோள்

:lol::D :D

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]முன்னாள் உறுப்பினர் என்றவுடன் பலரும் ஒருவித மதிப்பை அந்த கருத்தாளருக்கு கொடுப்பது வழக்கம். அவர்களை மேற்கோள் காட்டுவதன் மூலம் சிலர் தமது 'நியாயத்தை' வலியுறுத்த பார்ப்பார்கள்.[/size]

[size=4]ஆனால், பிள்ளையான் இல்லை கருணா போன்றவர்களும் கூட முன்னாள் போராளிகள் தான். எனவே மக்களுக்கு தெரியும் யாரை எங்கே வைப்பது என்று :D [/size]

சும்மா இருங்கோ அகூதா

ஆளைத்தேடியதற்கே போச்சிப்போத்தல் வருகுது

உண்மையில் அவருடன் பலகாலமாக இருந்த அவரது நண்பர் என்னிடம் கேட்டார். அவரது தொடர்பு கடந்த 3 வருடமாக விடுபட்டுவிட்டது. எடுத்துத்தர முடியுமா என்று.(பிரான்சிலும் இப்புத்தகம் வெளியிடப்பட்டதால்)

அவரிடமே கடைசியாக ஐயர் தனது மனச்சாட்சி பற்றி சொல்லியுள்ளார் அதனாலேயே அவரும் இந்தப்புத்தகம் பற்றி தனது சந்தேகத்தை என்னிடம் கேட்டார்.

ஆனால் ஐயர் எதற்கும் விலை போகக்கூடிய ஆள் அல்ல என்றும் அவர் தனது நம்பிக்கையை என்னிடம் சொன்னார்.

இல்லை, நான் முதலீடு என்று பணம் மற்றும் அறிவு வளத்தையே குறிப்பிடுகிறேன். ஊழல்கள் இருக்கத்தான் செய்யும். அதற்குள்ளால் ஓட வேண்டிய தேவை எமக்கு இருக்கிறது.

மல்லையூரானை நான் கேள்வி எதுவும் கேட்கவில்லை. அமெரிக்காவின் பாஸ் நடைமுறை பற்றி ஏதாவது இணைப்பு இருந்தால் தரும்படி ஒரு வேண்டுகோளைத்தான் வைத்தேன். நாமும் எமது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா?

நாங்கள் தாயகப் பயணங்களை மேற்கொள்ள வேண்டும். அங்கே ஆய்வுகளை மேற்கொண்டு தமிழர் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப வேண்டும்.

இது இலங்கைக்கு பயண முகவராக செயல்ப்படும் செய்யும் முயற்சி. இது நட்டம் போகும் விமான சேவையை கட்டி எழுப்பும் முயற்சி.

முதலில் சர்வதேச NGO களை உளவு நிறுவனங்கள் என்று பொய் குற்றம் சாட்டாம் முழு வடக்கு கிழக்கும் திறந்து விடட்டும்.

தடை இல்லாமல் 50,000 இந்திய வீடுகளை கட்ட அனுமதி கொடுக்கட்டும்.

மக்களிடம் அவர்களின் காணிகளை கை அளிக்காட்டும் நாங்கள் அதன் பின் அவர்களுக்கு வீடுகள் கட்டுவோம்.

அமெரிக்காவின் பாஸ் நடைமுறை பற்றி ஏதாவது இணைப்பு இருந்தால் தரும்படி ஒரு வேண்டுகோளைத்தான் வைத்தேன். நாமும் எமது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் அல்லவா?

எப்படி உந்த அறிவு வளர போகிறது அதை ஒரு கேள்வி என்று அறிந்து கொள்ள மறுக்கும் போது.வேண்டு கோள் ஒன்றை கேட்பதாகதா? என்னிடம் பதில் ஒன்றையும் எதிர்பார்க்கவில்லையாயின் நான் அப்படி விட்டு விடுகிறேன்.

ஆனால் முதலில் நான் அமெரிக்காவில் பாஸ் இருப்பதாக கூறிய வசனத்தை காட்ட முடியுமா? இது இன்னொரு பலஸ்தீனிய கல்லெறிதலா ?

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.