Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இளையராஜா இசையை ரசிப்போம்.. இளையராஜா அரசியலை அல்ல..

Featured Replies

சேலைகளையும், நகைகளையும், தமிழ் தொலைக்காட்சித் தொடர்களையும், வார இறுதிகளில் களியாட்டங்களையும் விரும்புகின்ற, பிள்ளைகள் எதிர்காலத்தில் நல்ல பேரும் புகழும் பெற்ற வேலைகளில் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகின்ற சாதாரண தமிழச்சி :icon_mrgreen::lol::wub:

உங்களுக்கு ஒரு பச்சை கிருபன்.

  • Replies 272
  • Views 20.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சேலைகளையும், நகைகளையும், தமிழ் தொலைக்காட்சித் தொடர்களையும், வார இறுதிகளில் களியாட்டங்களையும் விரும்புகின்ற, பிள்ளைகள் எதிர்காலத்தில் நல்ல பேரும் புகழும் பெற்ற வேலைகளில் இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகின்ற சாதாரண தமிழச்சி :icon_mrgreen::lol::wub:

இங்கு ஏசியனில் விற்கிற சேலைகளை வாங்கி உடுத்தும் அளவுக்கு என்னிடம் வசதி கிடையாது

என் வீட்டைத்தேடி திருடர்கள் வரமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் வீட்டைப்பூட்டுவதில்கூட கவனங்குறைவு

தமிழ் தொலைக்காட்சிகளில் தொலைந்து கொண்டிருக்க நேர அவகாசம் இல்லை

வார இறுதிக் களியாட்டங்களிலும் கலந்து கொள்வதில்லை

தகவல் பிழையாக இருக்கு கிருபன்

மனதிற்குள் விருப்பங்கள் இருக்குத்தானே, அதுபோதும்! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ஆமா இம்முறை எந்தக் குரூப் மாவீரர் நாளை நடாத்துகிறார்கள்?

போன முறை அனைத்துலகம் இம்முறை நாடு கடந்தவை என்று அப்போது பேசிக் கொண்டார்கள்...

சரி யாருக்காவது தெரியுமா?

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்த நிகழ்விற்குச் செல்லப் போவதில்லை. ஆனாலும் இளையராஜா(சா) வருகை தொடர்பான விடயத்தில் நடந்து கொள்ளும் முறை தொடர்பாக எந்த உடன்பாடும் கிடையாது மட்டுமன்றி, கேவலமான உள்போட்டியாகவே நினைக்கின்றேன். இலங்கை அரசின் சதி என்பது எல்லாம் ஒன்று வெறும் ஊகத்தின் அடிப்படையாகவும், அல்லது தங்களது போட்டியுணர்வை சிங்கள அரசோடு சேர்த்து கதைப்பதின் ஊடாக அழுத்தங்களுக்கு உட்படுத்தும் பழைய பாணியிலான செயற்பாடாகவே தோன்றுகின்றது.

இளையராஜாவின் இசை நிகழ்வு தொடர்பாக விளம்பரங்கள் 2 மாதங்களுக்கு மேலாக பிரச்சாரப்படுத்தப்பட்டு வந்தன. அப்போது எல்லாம் எங்கே சென்றீர்கள்??

இந்த நிகழ்வினை ஒழுங்கு செய்கின்றவர்கள் பலர் புதுமுகங்களாகத் தான் தெரிந்தனர். படங்களில் சிலர், வணக்கம் சிற்றலையினரும், ஈகுருவியினரும் தான் எனக்குத் தெரிந்த முகங்களாக இருந்தனர். புதுசோ, யார் செய்கின்றார்களோ என்பது எல்லாம் கவலையில்லை. ஆனால் ஒருவரைக் கனடா மண்ணில் காலடி எடுக்க வைத்த பின்னர், வெளியே போ, நிறுத்து என்று கூச்சல் இடுவது எல்லாம் சுத்த முட்டாள்தனமானதும், மாவீரர்கள் பெயரில் நடத்துகின்ற ஈனச்செயலுமாகும்.

இது நிறுத்தப்படின் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும். இளையராஜா போன்றவர்கள் தங்களுக்கு இது அவமானமாகவே உணர்வார்கள். ஒழுங்கு செய்தவர்கள், ரசிகர்களும் தங்களுக்கு அவமானமாகவும், எரிச்சலையும் உணர்வார்கள். அது ஒருவகையில் எம் மாவீரர்கள் மீது தான் திரும்புமே தவிர, பிரச்சனைகளை உருவாக்குபவர்கள் மீது அல்ல.

காரத்திகை மாதத்தில் நடத்துவது சரியா, பிழையா என்று வாதிடவில்லை. ஆனால் இளையராஜா வரும்வரை பொத்திக் கொண்டு இருந்து விட்டு, இப்போது வெட்டுகின்றேன், புடுங்குகின்றேன் என்பது ஒட்டுமொத்த கனேடியத் தமிழர்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தும் செய்யலாகும்.

Edited by தூயவன்

[size=6] அந்த பெருமனிதன் செத்துக் கிடந்த பின்னாலும், ஒரு கண்ணீர் சிந்த மறுத்த அந்த ஆண்டு நவம்பரில் கூட பிறந்த நாள் கொண்டாட்டங்களை செய்து கூட்டம்தான் எம்மவர்கள்.[/size]

இந்த கருத்து தொடர் பில்லாததாயின் மட்டுறுத்தினர் இதிலிருந்து நீக்க வேண்டும். தலைவரின் முடிவு நிறுவப்படவில்லை என்றும், இது திசை திருப்பும் நோக்கமுள்ள கருத்தாயின் நொவெம்பர் மாதத்தில் இதற்கு ஒரு அலுவலும் இல்லை. போர் நடந்து முடிந்த மாதம் மே மாதம். .

நிறுவப்படாத நிகழ்சி ஒன்றை வைத்து "கண்ணீர் சிந்த தாயாரில்லாத கல்மன சுயநலகாரர்" மக்கள் என்று கூறி அவர்களை குற்றம் சாட்டும் தொணியில் வேண்டுமென்றே அவர்களை புண்படுத்தி பின்னால் போகவைத்தால் மட்டுமே தனிப்பட்ட சிலர் முன்னால் சென்று கல்மனத்துடன் தாம் நடந்துகொண்டு தமது பொருளாதார ஆதாயங்களை ஈட்டலாம் என்று நினைத்து இந்த கருத்து முன் வைக்கப்பட்டிருக்கிறதாயின் மட்டுக்கள் இந்த புண்படுத்தும் நோக்கமுள்ள கருத்தை நீக்க வேண்டும்.

நொவெம்பர் மாதத்தில் மாவிரர் நிகழ்சிகளுக்கு இடையூறு வரலம் என்பதாலேயே இசை நிகழ்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இதில் தலைவர் இறந்த தாகவும் அதுவும் வணக்கப்படவேண்டும் என்று யாராவது நேர்மையான கருத்தை முன் வைக்கிறார்களாயின், இதில் எல்லோரும் நேர்மையாக நடக்க முன் வர வேண்டும். அதாவது வீரர்களில் எல்லாம் வீரனான தலவரின் வணக்கமும் இந்த மாவிரர் தினத்தில் சேர்க்கப்படவேண்டுமாயின் அது கட்டாயம் இளையராஜாவுக்கு அறிக்கப்பட்டு எந்த விளக்கமும் இன்றி இளையாராஜா தனது நொவெம்பர் மாத நிகழ்சிகளை தவிர்த்து நமது தெய்வ தமிழனை பூசிக்க நமக்கு இடம் தரவேண்டும். இதில் எந்த மற்று கருத்துக்கும் நாம் இடம் கொடுக்க தயராக இருக்க கூடாது. நொவெம்பரில் தலைவரின் வணக்கம் இந்த வருடம் முதல் சேர்க்கப்படுகிறதாயின் நகீரன் இபிதை எழுத்து மூலம் சம்பந்தப்பட்ட ஒழுங்கமைப்பாளர்களுக்கு அறிவிக்கட்டும். வர்ரத்கத்தில் இருப்போர் இந்த நிகழ்வில் இழந்தால் இன்னொன்றில் பெற்றுகொள்வார்கள். அதுதான் வர்த்தகம். வர்த்தகர்கள் தமது நிகழ்சியை காப்புறுதி செய்தும் இருப்பார்கள். இதனால் இவர்கள் உண்மையில் ஒரு சதம் கூட நட்டம் காணமாட்டார்கள். அவர்கள் ந்மது தலைவனை நாம் கொண்டாட இடம் அளிக்க வேண்டும்.

இளையராஜாவுக்கு எப்போது இது ஆறிவிக்க பட்டதென்பதல்ல எமக்கு முக்கியம் எமது தலவனை காரணம் காட்டி சிலர் பணம் சேர்த்துக்கொள்ள நாம் இடம் அளிக்க முடியாது. தலைவரின் வணக்கம் நொவம்பரில் சேர்த்து கொள்ளப்பட வேண்டுமாயின் இளையராஜா நொவம்பரில் எந்த ஈழத்தமிழரின் புலம் பெயர் நாடுகளுக்கும் வரக்கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே பிபிசியின் சிறந்த பாடல் தொகுப்பில் முதலாவதாக நின்ற இளையராஜாவின் "ராக்கம்மா கையத் தட்டு" என்னும் பாடலை விட்டு, வெகு வெகு சாதரண ஒரு பாடலான "பூவும் நடக்கது, பிஞ்சும் நடக்குது" பாடலுக்கு ஈழத் தமிழர்கள் வாக்களித்து, ராக்கம்மா கையை தட்டு பாடலை இரண்டாம் இடத்திற்கு தள்ளிய ரசனை கெட்டத்தனத்தையும் செய்தார்கள்.

ராக்கம்மா கையைத் தட்டு என்ற பாடலை விட ”பூவும் நடக்கது, பிஞ்சும் நடக்குது” என்ற பாடல் குறைவானதல்ல. அதை விட மொழி ஆளுமை, இசை, உணர்வினை வெளிப்படுத்தும் திறன், போன்றவற்றில் இளையராஜாவின் பாடலை விட எவ்வளவோ மேல். அதை வெறும் சாதாரணபாடல் என்று சொல்லுமளவுக்கு ரசனை கெட்ட மனிதராகவே தெரிகின்றீர்கள். ராக்கம்மா கையைத் தட்டு என்பதில் வெறும் பாலியல் சிந்தனையும், படுக்கறை சிந்தனையையும் வெளிப்படுத்தும் வசனநடைகளே. தவிர அதில் இடைவழியில் வருகின்ற தேவாரா வரிகள் தான் உங்களுக்குப் பிடித்ததோ என்னமோ?ஆனால் ஒரு முதியவர் யாருமற்ற தன் நிலமையை எண்ணிப் பாடுகின்ற பாடலைப் போய், காமப்பாடலுடன் கொச்சைத் தமிழில் எழுதிய தரங்கெட்ட பாடலுடன் போய் ஒப்பீடு செய்வதோ??உங்களுக்கு பிடித்தது என்றதற்காக மற்றவர்களின் உணர்வுகள், விருப்பத் தேர்வுகள் பற்றிக் கதைக்க எந்த உரிமையும் கிடையாது. ஒரு மனிதன் தனக்குப் பிடித்த பாடலைத் தெரிவு செய்வதற்கு, உங்களுக்குப் பிடித்ததா? இல்லையா? என்று ஆராய வேண்டிய கடப்பாடு கிடையாது. மற்றவர்களின் இரசனைக்கும் மதிப்பளிக்க கற்றுக் கொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இதன் மூலம் சபேசன் வெறும் குப்பைகளை மட்டும் ரசிக்கின்றார்

கொட்டுகின்றார்

என்ற முடிவுக்கு வரலாம்.

Edited by விசுகு

ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது ...........அதன் படி ஆரம்பித்துவிட்டது..........ஆனால் இந்தமுறை கொஞ்சம் வேளைக்கு ஆரம்பித்துவிட்டது.............

இந்த திரி இவ்வளவு நீண்டு போக ஒரே அடிப்படைக்காரணம் .நம்மிடம் உள்ள குழப்பங்கள் தான் ....................அந்தக்குழப்பங்க்களை அழகான முறையில் உரியவர்கள் பயன்படுத்த தொடங்கிவிட்டனர் என்பதற்கு இந்த திரி நல்ல ஓர் உதாரணமாய் அமையும்............

இப்ப என்ன பிரச்சனை .............இளையராஜாவின் இசை நிகழ்ச்சியால் யாருக்கு பிரச்சனை .........ஒருவருக்கும் பிரச்சனையில்லை ...............ஆனால் யாருக்கு பிரச்னை என்பதை நான் இங்கு குறிப்பிட்டு இன்னும் இந்த திரியை நீட்டிச்செல்ல இஸ்டமில்லை ...அதனால் ஆணித்தரமான சில விடயங்களை குறிப்பிடுகிறேன் .

1 எம் தேசியத்தலைவரின் கலை சார்ந்த சிந்தனைக்கு ஏற்ப இந்த்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சி இனிது நடைபெறவேண்டும்......................

2 கனடா வாழ அத்தனை ஈழத்தமிழ் உறவுகளும் இந்த நிகழ்ச்க்கு சென்று அந்த தமிழர்களின் பெரும் கொடையாகிய அந்த கலந்ஜனை கவ்ரவிக்கவேண்டும்................

3 எதிர்காலத்தில் மாவீரர் தினம் அன்றே இப்படியான நிகழ்வுகள் நடைபெற சாத்தியக்கூறுகள் உள்ளது............அதுவும் பிழையல்ல .ஆனால் எந்த நிகழ்வுக்கு நான்.....,நீ............முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற சரியான முடிவை எடுக்க தயாராய் இருக்கவேண்டும் ..

சாதாரணமான விடயம்...........இழுத்து அனைத்தையும் நாறடிக்காதீர்கள் ,,,,,,,,எனக்கு இவற்றை எழுத ஓர் தகுதி இருப்பதனால் எழுதுகிறேன் ................அந்த தகுதி நான் எப்போதும் மாவீரர் காற்றை சுவாசிப்பவன் ...நான் மட்டுமல்ல நீங்களும்தான் நன்றி வணக்கம் :)

எனக்கும் தமிழ்ப்பற்று கிடையாது என்னுடைய பெயர்கொண்டு பிள்ளைகளின் பெயர்வரை தூயதமிழில் இல்லை நான் நாளாந்தம் பேசும் வார்த்தைகள் தூயதமிழில் இல்லை. அத்தோடு அரசியல் என்றால் எனக்கு அறவே பிடிப்பதில்லை. அரசியலைவிட்டு ஒதுங்கியே வாழ்கின்றேன். 2009 இற்கு பின்னர் எந்தக்குழுமத்தையும் நம்பி அவர்கள் பின்னே சென்றதில்லை

ஆக எனக்கு ஈழவளாக இருக்கக்கூடிய அடிப்படைத்தகுதி இல்லை

நான் தமிழை நேசிக்கிறேன் என்று எனது பெயரையோ பிள்ளைகளின் பெயரையோ மாற்றப்போவதில்லை

தூயதமிழ் என்று தமிழரோடு உரையாடும்போது கதைக்கப்போவதில்லை காரணம் நாங்கள் பாடசாலையில் கற்கும்போதே அரைவாசிச் சொற்கள் தூயதமிழில் இல்லை அதனால் தூயதமிழ் எனக்கு சாத்தியமில்லை

ஈழத்து அரசியல் 2009க்கு முன்னராக இருந்த தூய்மையான சனங்களோடு எனக்கு முடிந்துவிட்டது

அரசியல் என்னும் சேற்றுக்குள் போலிகளை நம்பி நான் குதிக்கத் தயாரில்லை அதனால் எனக்குள் இருக்கும் பிரத்தியேமான சிந்தனைகள் திறமைகள் எல்லாம் மழுங்கடிக்கப்படும்...

இப்ப நான் யார்? :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

நீங்கள் படித்து முன்னேறி நல் வாழ்வு வாழ வெளிநாடு வந்தவர் போல் தெரிகிறது. இலங்கையில் சிங்கள அரசின் நடத்தைகளால் அகதிகளாக வெளியேற நேர்ந்த சிலரின் மனதில் தமது மொழியை, கலாசாரத்தை, பண்பாட்டை விட்டு விட்டு தாம் துரத்தப்படுவதாக நினைத்துக்கொண்டு வெளியேற நேர்ந்ததால் சில வித்தியாசமான மன நிலை இருக்கிறது. தமது நாடு மீளபெறவேண்டும் என்ற அரசியல் சிந்தனை அவர்களின் மனதில் தொடர்கிறது.

அவர்கள் பின்பற்றும் முறைகள் சாதுரியத் தன்மையில் சில சவால்களை சந்தித்தாலும் அவர்களின் மனம் உயரிய நிலையில் இருக்கிறது. சில எதிர்ப்பாளிகள் இதில் களங்கம் கற்பிக்க முடியும். ஆனால் வன்னியில் சங்கல்பம் செய்து கொண்டவர்கள் இறக்கும் வரை போராடியதை நாம் பார்த்தோம் என்ற உண்மையை வைத்து, இவர்கள் தாமும் இறக்கும் வரை தமது நியாயம் கேட்டுகும் பாதையில் முன்னால் போய்தான் தீர்வார்கள் என்ற அனுமானத்தை நாம் கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். ஆயுத போராட்டத்தில் எப்படி எட்டப்பர்கள் இருப்பார்களோ அதே மாதிரி ஜனநாயக போராட்டத்தில் எதிர் பிரச்சாரிகள் இருப்பார்கள் என்ற உண்மையை வைத்துத்தான் ஜனநாய போராட்டங்கள் முன்னெடுக்கபடுகின்றன.

மல்லை நீங்க வேற....

தாயகத்தில் என்னுடைய கல்வி எட்டாந்தரத்தை முடிக்காமலே முற்றுப்பெற்றுப் போனது.... காரணம் 84 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் வல்வையில் மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இராணுவம் தொடர்ந்து வந்த நாட்களில் அந்தக் குண்டுச்சம்பவம் நடந்த இடத்திற்கு அருகாமையில் உள்ளவர்களுக்கு கொடுத்துவந்த பிரச்சனைகளே...எங்கு இராணுவம் தாக்கப்பட்டாலும் முதலில் தாக்கப்பட்ட இடத்தை விட்டு ஓடிவிடுவார்கள் அடுத்த கட்டம் எங்கள் மனைகளை நோக்கி இராணுவ அணி வரும். தொடர்ந்து நாங்கள் துன்புறுத்தப்படுவோம். அதற்குப் பயந்து எங்கும் இராணுவத்தினருக்கு எதிரான தாக்குதல் நடைபெற்றாலும் நாங்கள் எங்கள் இருப்பிடத்தை விட்டு நாளாந்த அகதிகளாக வெளியேறி விடுவோம். அன்றிலிருந்து ஆரம்பித்த எங்களின் அல்லாடிய வாழ்வு நீண்ட துன்பத்தின் விளிம்புவரை கொண்டு சென்றிருக்கிறது அதிலிருந்து மீண்டு வந்து ஒரு மனுசியாக நடமாடுவதே பெரிய விடயம். நாடு மீளப்பெற வேண்டும் என்ற ஓர்ம சிந்தனை நீங்கள் குறிப்பிடும் அவர்களை விட எங்களுக்கு அதிகமாகவே உள்ளது. ஏனென்றால் "மனைகளின் முகப்புக்களையே மயானங்கள் ஆக்கி எம் அன்புக்குரியவர்களை சிதை மூட்டிய வரலாறு" எங்களுக்கு இருக்கிறது. இலங்கை, இந்திய இராணுவத்தின் கைகளில் சிக்குண்டு தத்தளித்த பெண்மையின் வரலாறுகளும் எமக்குண்டு. உயரிய எண்ணங்களுக்கு நீங்கள் குறிப்பிடும் அத்தகையவர்கள்தான் உரித்துடையவர்கள் என்று ஆக்கிவிடாதீர்கள். இறக்கும்வரை போராடிய மாவீரச் செல்வங்களோடு குடும்பங்களை முழுவதுமாக வெளிநாடுகளுக்குள் அழைத்து பக்குவமாக வாழும் இவர்களை ஒப்பிட்டு அவர்களை களங்கப்படுத்திவிடாதீர்கள். இங்கு துணிந்துதான் சொல்கின்றேன் என்னுடைய இரத்த உறவுகள் எவரும் வெளிநாடுகளில் இல்லை இனிமேலும் அவர்கள் வெளிநாடு நோக்கி செல்லப் போவதுமில்லை அதற்காக அவர்கள் பாதிக்கப்படவில்லை என்று அர்த்தம் இல்லை. ஏனோ உங்களுடைய கருத்தை மனம் ஒப்பவில்லை மல்லை

நீங்கள் பட்ட கஸ்டங்களை மதிக்கிறேன்.

நான் சொல்லவருவது யாருடையதும் மனதையும் நாம் உள்சென்று பார்க்க முடியாது. யாரும் 100% சரியும் இல்லை. பிழை விடுபவர்களை சந்தித்தித்து ஏமாந்து அதன் பின்னர் தான் மேலே போக முடியும்.

ராமகிருஸ்ணர் வேதாந்திகளை பற்றி கூறியிருந்தார்.

"வேதாந்தி இறைவனை இடையாறாது தேடுவான். அவன் தான் சந்திக்கும் ஒவ்வொன்றையும் விசாரித்து இது அவனில்லை இது அவனில்லை என்று கழித்து இறவனை காண்கிறான்."

நமக்கு மனதார தெரியும் நாம் ஆரம்பித்திருக்கும் பாதையின் சிக்கலை. இதில் சரியென்ன. பிழை

என்ன? சோர்வென்ன துடிபென்ன? நாம் பின்னால் திரும்பி பார்க்க போவதில்லை. அதை செய்விக்க முயற்சிப்பவர்கள் நம்மிடம் காணப்போவது ஏமாரமே. நமது பாதை பழையதுடன் தொடர்பில்லாதது.

நாம் வேதாந்திகள்.

விசாரித்து கழித்தவைகளை விசாரிக்க வேண்டிய தேவை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆ...

.நாம முகநூல் பக்கம் எட்டிப்பார்க்கவில்லை என்றவுடன் என்னுடைய முகநூல் பக்கத்திலேயே [size=5]நான் இசைஞானிக்கு எதிராக எழுதியிருப்பதுபோன்றும் அதற்கு டக்ளசு வருகை தர இருப்பதாகவும் வருகை தர இருந்த பாரதிராசா மறுத்துவிட்டதாகவும் அதற்கு இலங்கை இந்திய அரசின் கூட்டுச்சதியென்றும்[/size] நான் எழுதி இருப்பதாகப்பதிவிட்டிருக்கிறார்கள்....

நாங்கள் சொல்லாத கருத்தை எங்கள் முகநூலுக்குள் திணித்து நாங்கள் சொல்லியதுபோன்று அமைத்து வெளியிட்டிருக்கிறார்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சொல்லாத கருத்தை எங்கள் முகநூலுக்குள் திணித்து நாங்கள் சொல்லியதுபோன்று அமைத்து வெளியிட்டிருக்கிறார்கள்.....

உங்கள் பாஸ்வேட் கீழேயுள்ளவற்றில் ஒன்றா? :unsure:

1. password

2. 123456

3. 12345678

4. qwerty

5. abc123

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் இதில் எதுவும் இல்லை

நான் நண்பர்களாக அனுமதி வழங்கியவர்களில் ஒருவர் என்னுடைய முகநூலில் ஆக்கத்தை இணைத்துவிட்டு தன்னுடைய முகநூலில் தவிர்த்துள்ளார் அதெப்படி அவருடைய பக்கத்தில் இல்லாத அவருடைய கருத்து என்னுடைய பக்கத்தில் என்னுடைய கருத்துப் போன்று பதியப்பட்டிருக்கும்?

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கார்த்திகை மாதம் புனிதமானது இந்த மாதத்தை தவிருங்கள் என்று தான் பலரும் கேட்கிறார்கள். மாவீரரையும் தேச விடுதலையையும் பற்றி பிரஸ்தாபிப்பவர்கள் அந்த ஒரு மாதத்தை ஒறுத்தால் குடி முழுகப் போவதில்லை. சகாரா! வல்வை மண் பாதிக்கப்பட்டது 29 ஆண்டுகளுக்கு முன் தீவிர ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் என்பது தான் உண்மை. அதன் பிற்பாடு வன்னி மண்ணோ அல்லது யாழ் குடாவின் ஏனைய பகுதிகளோ பாதிக்கப்பட்டது போல் வல்வை பாதிக்கப்படவில்லை என்பைதைக் கருத்தில் கொள்ளுங்கள். உங்கள் கல்வி குறித்து வேதனைதான், ஆனாலும் உங்களைவிடக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட பின்னும் பட்டப் படிப்பு முடித்தவர்கள் எத்தனையோ ஆயிரமாயிரம் பேர் இன்றும் தாயகத்திலும் இங்கும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.

மாவீரர்கள் தெய்வத்திற்கும் மேலானவர்கள் அதனை உங்களைப் போல் அனைத்துத் தமிழர்களும் ஏற்றுக் கொள்வார்கள், ஆனாலும் தானைத் தலைவன் வல்வையின் மைந்தன் என்பதற்காக வல்வை மண்தான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் குத்தகைக்கு எடுத்துள்ளது போல் எழுத நினைப்பது தவறு.

ஏனெனன்றால் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பிற்குள் துரோகம் என்ற பதத்திற்கு முதன் முதலில் வித்திட்ட மாத்தையாவும் அதே வல்வை மண்ணின் மைந்தன் என்பது தான் தமிழீழப் போராட்ட வரலாற்றில் கல்லில் எழுதப்பட்டுள்ள எழுத்தாகும்.

நீங்கள் மட்டும் தான் உண்மையான உணர்வோடும் வேட்கையோடும் பங்களிப்பு செய்தது போல் உங்கள் கருத்துகள் அமைந்துள்ளன. உங்களுக்கு அரசியலில் நம்பிக்கை இல்லையென்றால் மற்றவர்களின் நம்பிக்கையைக் கெடுக்க முனையாதீர்கள்.

தமிழரின் தாகம்

தமிழீழத் தாயகம்

நண்பர்களாக இருப்பவர்கள் உங்கள் பெயரை தங்கள் பதிவுகளில் குறிப்பிடும்போது அது உங்கள் காலக்கோட்டில் வந்துவிடும். எனினும் அவர்கள் நீக்கியபின்னர் உங்கள் காலக்கோட்டில் நிற்கக்கூடாது!

முகநூல்காரர் அனுபவமில்லாதவர்களை வேலைக்கு வைத்திருக்கின்றார்கள் போலுள்ளது!

?????????? :unsure:

பாகன்,

வல்வை மண் போராட்டத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது என்று நீங்கள் குற்றசாட்டுமளவுக்கு நான் எக்கருத்தையும் இங்கு பதிவிடவில்லை. வரலாற்று இடப்பெயர்வு வன்னியைநோக்கி நகரும்வரை வல்வை மண் பாதிப்பைக் கண்டுகொண்டுதான் இருந்தது

நீங்கள் சொல்லும் கணக்கு 29 ஆண்டுகளுக்கு முன் என்பது உங்களுடைய எமது போராட்டம் பற்றிய அதி உச்ச அறிவை வெளிப்படுத்தியிருக்கிறது.....

எல்லோரும் எழுதுகிறார்கள் முப்பது வருடப் போராட்டம் அழிக்கப்பட்டுவிட்டது என்று ஆக அந்தக் கணக்கின்படி பார்த்தால் அதற்கு முன்னான சில வருடங்கள்தான் என்பதாகும்.....

இங்கு வல்வையை தூக்கி வைத்துக் கதைக்க வரவில்லை வரலாறுகள் மழுக்கடிக்கப்படுவதை அதுவும் உங்களைப்போன்ற இரண்டுங்கெட்டான்களாக காலக்கணக்குகளில் பிழைவிட்டுக் கொண்டு எழுதும் கருத்துக்களைத்தான் ஏற்க கடினமாக இருக்கிறது. தயவு செய்து போராட்டத்தின் தெரியாத பக்கங்களை தெரிந்ததாக திரிவு படுத்தி எழுதவேண்டாமே.

எனக்கு மட்டுமே உண்மையான உணர்வு இருக்கிறது என்று எங்கும் நான் எழுதவில்லை எங்களுக்கும் அதிகம் இருக்கிறது என்று மல்லையின் பதிவிற்கு பதிலிட்டிருந்தேன்.

நீங்கள் உங்கள் கருத்தின் அடியில் தமிழரின் தாகம் தமிழீழம் என்று போட்டுவிட்டால் உங்களுடைய கருத்தை சரி என்று ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று இல்லை. அத்தோடு இந்தத் திரிக்குப் பொருத்தமில்லாத விடயத்தை இங்கு பேசாமல் விடுவோம் அதற்கான களத்தில் அதனைப் பற்றிப் பேசுவோம். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களாக இருப்பவர்கள் உங்கள் பெயரை தங்கள் பதிவுகளில் குறிப்பிடும்போது அது உங்கள் காலக்கோட்டில் வந்துவிடும். எனினும் அவர்கள் நீக்கியபின்னர் உங்கள் காலக்கோட்டில் நிற்கக்கூடாது!

முகநூல்காரர் அனுபவமில்லாதவர்களை வேலைக்கு வைத்திருக்கின்றார்கள் போலுள்ளது!

கிருபன்

இது எதுவரை செல்கிறது என்று இசைஞானியின் நிகழ்வுவரை காத்திருந்து பார்ப்போம் என்று விட்டுவிட்டேன்...எனக்கும் பொழுது போக வேண்டாமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோரும் ஒருமித்த கருத்துக்கு வராததால் நான் இந்த நிகழ்விற்கு போகவில்லை/வரவில்லை என்பதை மனவருத்தத்துடன் இளைய ராசவிர்ற்கு தெரிவித்து கொள்ளுகிறேன்.

ஒரே குழப்பம் தமிழர் வாழ்வில் ...................தீருமா............தீரும்வரை காத்திருக்கிறான் சூரியன் ..............தமிழ்சூரியன்

ஊர்ப் பெயரை பெயருக்கு முன்னால் போடுவது அடிப்படையில் தேசியத்துக்கு விரோதமானது. ஊர்வாதங்கள் பிரதேசவாதங்கள் நிலுவையில் இருக்கும்போது இது சிக்கலானது. ஊர்பெயரை பாவிப்பதற்குப் பதிலாக ஈழத்துக் குருவி ஈழத்துக் குரங்கு ஈழத்து வடலி என்று நாட்டைச் சுட்டும் பெயரை பாவிப்பது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ இது எனக்குத்தானா?

ஏற்கனவே சகாரா என்று கனடாவில் வானொலியில் ஒரு பெண் பேசுகிறார், தமிழகத்தில் ஒரு கவிஞர் இருக்கிறார்... அதனால் நான் தனி சகாறாவாக இருந்து வல்வை சகாறா என்று மாற்றிக் கொண்டேன். இதெல்லாம் தேசியத்திற்கு விரோதமானது என்று எந்த யாப்பில் எழுதியிருக்கிறது சுகன்.. :(

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

ஊர்ப் பெயரை பெயருக்கு முன்னால் போடுவது அடிப்படையில் தேசியத்துக்கு விரோதமானது. ஊர்வாதங்கள் பிரதேசவாதங்கள் நிலுவையில் இருக்கும்போது இது சிக்கலானது. ஊர்பெயரை பாவிப்பதற்குப் பதிலாக ஈழத்துக் குருவி ஈழத்துக் குரங்கு ஈழத்து வடலி என்று நாட்டைச் சுட்டும் பெயரை பாவிப்பது நல்லது.

உண்மைதான் சுகன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.