Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐரோப்பிய ஒன்றியம் தடை - உங்கள் கருத்து என்ன?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இது எங்கள் விடிவை சுதந்திரத்தை தடுக்கும் இந்த வல்லாதிக்க சத்திகளின் கடைசி முயற்ச்சி.ஆனால் வீண் முயற்ச்சி.

  • Replies 55
  • Views 11.6k
  • Created
  • Last Reply

எத்தனை தடைகள் வந்தாலும், தமிழீழம் மலர்வது உறுதி

அந்நாள் வெகு தொலைவில்லை.

அந்நாளை நாம் அனைவரும் இணைந்து நோக்குவோம்.

புலிகளை பயங்கரவாத அமைப்பு பட்டியலில் சேர்ப்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்: ஐரோப்பிய ஒன்றியம்  

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு பட்டியலில் சேர்ப்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறோம் என்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது

- "அறப்போரிலும் சரி ஆயுதப்போரிலும் சரி

எமது விடுதலைப் போர்

உலக சிகரத்தை எட்டியிருக்கின்றது."

-வே.பிரபாகரன்

என்பதற்கு

இதற்கு மேலும் சான்றுகள் தேவையில்லை.

"கோழைகளாக இராதீர்கள்

வேங்கைகளாக இருங்கள்

ஆடுகளைத்தான் கோயில்களில்

வெட்டுவார்களே தவிர

வேங்கைகளையல்ல......................"

- டாக்டர் அம்பேத்கார்

ஒரு தேசத்துக்கான கனவுகளோடு வாழும்

பல லட்சக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்போடு

விடியும் தேசத்துக்காக

அனைத்து தமிழரும்

மனதாலாவது ஒன்றுபட வேண்டிய தருணம் இது.

முடியும் என்று அனைவரும் நினைத்தால் முடியாதது ஒன்றுமில்லை.

நமக்குள் ஆயிரம் வேற்றுமையிருக்கலாம்........?

அது வேறு!

நமது எதிர்கால மக்கள்

மகிழ்வோடு சுதந்திரமாய்

நிமிர்ந்து நிற்று வாழ

நமது மக்களின் நிலம் தேவை!

உண்மையான போராளிகளும் - விடுதலை விரும்பிகளும் - மண்ணின் மாந்தரும்

தமிழனுக்கான தாயகம் ஒன்று உருவாவதை

நிச்சயம் எதிர்க்க மாட்டான்.

அதற்காக மனத்தாலாவது பிராத்தனை செய்வான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றய அரசியல் சுூழ்நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நெருக்குவாரங்களிலிருந்து தப்புவதானால் தடையை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை .. எங்களுக்கு ஏற்புடைய வகையில் ஒரு இடைக்கால நிர்வாகசபையைக்கூட ஐ.ஓ. பெற்றுத்தரப்போவதில்லை. அழுதாலும் பிள்ளையை அவள்தான் பெறவேண்டும் ..

  • கருத்துக்கள உறவுகள்

இத் தடை என்பது சிறிலங்கா அரசின் மேல் நேரடியாக போட முடியாது என்பதால் மறைமுகமாக அதற்கும் தடைகள் விதிக்கப்படுவதாகத் தான் அறியக் கிடக்கின்றது. இலங்கையில் யுத்தம் தொடர்ந்தால் அதற்கான சகலவித உதவிகளும் நிறுத்தப்படும். இதன் பிரதி பலனாக இலங்கையில் வாழ்க்கைச் செலவு வீதம் மகிந்தவின் வரவிற்கு பின் அதிகரித்து உள்ளது.

மண்ணெண்ணையின் விலை கூட இருமடங்கு அதிகரிப்பை எட்ட இருப்பதாக சமீபத்திய செய்தி சொல்கின்றது. பொருளாதாரரீதியான இடரை இலங்கையரசும் சந்திக்கப் போகின்றது. இதற்குள் அவதானமாக காய்களை நகர்த்தி வெற்றிகளைப் பெற்றிடுவோம்!!

தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டமும், ஐரோப்பிய யூனியன் தடையும்!

(சனிக்கிழமை, 20 மே 2006, ஜெயராசா)

உலக வரலாற்றை உற்று நோக்குவோமாயின், முன்பு மேற்குலகால் தடை செய்யப்பட்ட பல நாடுகளே இன்று சுதந்திர நாடுகளாக பரிணமித்து, மேற்கின் நண்பர்களாக இருக்கின்றார்கள்.

இந்தியாவில் நடந்த சாத்வீக ரீதியிலான சுதந்திர விடுதலைப் போராட்டமும் பெரிய பிரித்தானியாவுக்கு பயங்கரவாதமாகவே அன்று தெரிந்தது. இஸ்ரேலின் விடிவிற்காக பிரித்தானியாவிற்கு எதிராக நடந்த ஆயுதப் போராட்டமும் பயங்கரவாதமாகவே தெரிந்தது. ... பின்நாளில் வியட்நாம், தென்னாபிரிக்கா, அயர்லாந்து, பலஸ்தீனம், .... கிழக்குத்தீமோர், தென்சூடான் எல்லாமே பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டவைகள்தான். இதில் சிலவற்றுக்கு எதிராக தமது இராணுவ இயந்திரங்களைக் கூட பாரிய அளவில் பயன்படுத்தியது. அந்த இராணுவ அடக்குமுறைகளை, அவர்கள் வீரத்துடனும், விவேகத்துடனும் உறுதியாக எதிர்கொண்டு வெற்றி கண்டதால், இன்று இந்நாடுகள் சுதந்திரமடைந்து பலமான நாடுகளாக பரிணமித்துள்ளன. அதில் குறிப்பாக சுதந்திர தென்னாபிரிக்காவின் பிதாமகன் நெல்சன் மண்டேலாவை, அன்றைய பிரித்தானிய பிரதமர் "உலகின் மிக மோசமான பயங்கரவாதி" என பாரளுமன்றத்தில் முழக்கமிட்டார். அதே நெல்சன் மண்டேலாவிற்கு செங்கம்பள வரவேற்பளித்ததும், அதே மாக்ரிரட் தட்சர் சார்ந்த கொண்சவேட்டிவ் அரசே!!

இப்படி மேற்குலகம் எதை எதையெல்லாம் கூறும், எதை எதையெல்லாம் செய்யும்! அதற்காக ஐயர் வருமட்டும் அமாவாசை காத்திருக்காது" என்பதைப்போல் நாங்கள் பயணம் செய்ய வேண்டிய சரியான பாதையில் உறுதியுடன், தெளிவுடன் செல்வோமாயின், அதே மேற்குலகம் எம்மை நாடி ஓர் நாள் வரும்.

எல்லாம் களத்தில் எம் வலிமையை நிரூபிப்பதிலும், புலத்திலிருந்து களத்திற்கு, நாம் உறுதியாக தோள் கொடுப்பதிலும்தான் தங்கியுள்ளது. வருநாட்களில் களத்தில் ஈட்டப்போகும் பெருவெற்றிகள், சர்வதேசத்தின் எம்மீதான பார்வையை நிச்சயமாக மாற்றும். ஆகவே இன்று ஐரோப்பிய யூனியனில், எமது தேசியத்திற்கெதிராக ஏற்படுத்தப்போகும் தடையை சவாலாக எதிர் கொள்வோம். எத்தனை இடர்கள் வரினும், எம் தேசியத்தை புலத்திலிருந்து மேலும் பலப்படுத்துவதை அதிகரிப்போம். தாயகத்தில் எம்மக்கள் மீதான இனவழிப்புகளையும், அடக்குமுறைகளையும், அவலங்களையும் ஐரோப்பிய வீதிகளில் தொடர்ச்சியாக இறங்கி முழக்கமிடுவோம்.! ஐ ரோப்பிய நாடுகளின் சட்ட வரைமுறைகளுக்குட்பட்டு, உரத்துக் குரல் கொடுப்போம். எம்மத்தியில் இருக்கும் பேதங்களை மறந்து, எம் தேசத்தின் விடிவிற்காக ஒன்றுபடுவோம். எம் தேசத்தின் விடுதலையை விரைவு படுத்துவோம்.

ஆசிரியர் பீடம்.

http://www.nitharsanam.com/?art=17444

  • கருத்துக்கள உறவுகள்

முழு உலகத்தினுடைய கௌரவத்தையும் அபிமானத்தையும் வச்சிக்கொண்டு போராட்டத்த விஸ்தரிக்க ஏலாது பாருங்கோ. வன்னியெண்டிற குண்டுச்சட்டிக்குள்ள குதிரையோட்டிக்கொண்டு பேச்சு வாhத்தையில கீச்சு வார்த்தையில தொடர்ந்து வருசக்கணக்கில இழுபடத்தான் இந்த அபிமானங்களும் கௌரவங்களும் உதவும். ஐரோப்பிய யுூனியன் சிங்களவரோட கதைச்சு நீங்கள் ஒண்டையும் காணமாட்டியள், எங்களாலயும் ஒண்டுஞ் செய்ய ஏலாது ஆனபடியா பயஙகரவாத முலாமை உங்களுக்குப் புூசிவிட்டுப்போட்டு நாங்கள் விலகிறம் உங்களோட நேரடித் தொடர்புகள அறுக்கிறம் எண்டு வழிவிட்டுத் தருகுது. இப்பதான் ஓரளவு கருக்கொண்டிருக்கிற தமிழ்த்;தேசியம் தன்ர எல்லையள முழுமைப்படுத்தி சுயநிர்ணயத் தத்துவத்தோட முழுவளர்ச்சியடைஞ்சி நிமிர்ந்து நிக்கிறத்துக்கு முந்தி தேள்வையில்லாத மரியாதையளையும் கௌரவங்களையும் அங்கீகாரங்களையும் எதிர்பாத்துதெண்டாக் குறைப்பிரசவமாகி அழியிறதலதான் கொண்டுபோய் முடியும். உது நமக்கு விளங்குதில்ல ஆனா அவங்களுக்கு விளங்குது. திரும்பி வரமுடியாத வளர்ச்சிப்பாதையில போற தேசியத்தை அதன்போக்கில போகவிட்டு சிறீலங்காவையும் ஏமாத்தி எங்களையும் சொந்தக் காலில நிக்கிறதுக்கு ஊக்கப்படுத்திற ஐரோப்பிய யுூனியன் எடுக்கிற நடவடிக்கையப் புரிஞசிகொள்ளாம எதிர்மறையா யோசிக்கிறது எங்கட மடத்தனம். நாளைக்கொரு வாசியான அடிவிளக்குள்ள சிறிலங்கா ஓடிப்போய் முறையிட்டா எங்களுககுத்தெரியாது நீதான் தடைசெய்யச் சொன்ன நீ எந்த முகத்தோட நாங்கபோய் அவங்களக் கட்டுப்புடுத்திறது எண்டு கேப்பாங்கள். ஆனபடியா எல்லாத்தையும் அறிவு புூர்வமா நல்லபக்கத்தை எடுத்து ஆராயிறதுதான் சரியெண்டு நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

உது நமக்கு விளங்குதில்ல ஆனா அவங்களுக்கு விளங்குது. திரும்பி வரமுடியாத வளர்ச்சிப்பாதையில போற தேசியத்தை அதன்போக்கில போகவிட்டு சிறீலங்காவையும் ஏமாத்தி எங்களையும் சொந்தக் காலில நிக்கிறதுக்கு ஊக்கப்படுத்திற ஐரோப்பிய யுூனியன் எடுக்கிற நடவடிக்கையப் புரிஞசிகொள்ளாம எதிர்மறையா யோசிக்கிறது எங்கட மடத்தனம் .

உண்மையான வார்த்தைகள். இதை வன்னியில் உள்ள தலைமைத்துவமும், லண்டனில் உள்ள மதியுரைஞரும் புரிந்து கொண்டு மக்களை வழி நடத்துவார்கள் என எதிர்பார்ப்போம்.

நடுநிலைதவறிய நாடுகள் சமாதான முயற்சிகளுக்கு பங்களிக்க முடியாது. நடுநிலைதவறாத, அடக்குமுறைக்கு ஆளான, மக்களின் தலைவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சமாதானத்துக்கு இனிமேல் தூதுவர்களாகட்டும்.

[*] சமாதானத்துக்கு நோபல் பரிசு பெற்ற, இங்கிலாந்து ஆட்சியாளரால் பயங்கரவாதி என்று வருணிக்கப்பட்ட, தென்னாபிரிக்காவின் நெல்சன் மண்டேலா.

[*] சிறி லங்காவுக்கு ஆயுதம் வழங்கும் சீனாவிடம் தனது நாட்டை பறிகொடுத்த, சமாதானத்துக்கு நோபல் பரிசு பெற்ற பௌத்த துறவி, திபெத்தின் தலாய் லாமா.

[*] தமிழர் தரப்பையும், சிறிலங்காவையும் அன்று முதல் இன்று வரை ஒரே விதமாக நடத்தும், போரின் கோரம் புரிந்த, ஜப்பானின் பிரதிநிதி அக்காசி

[*] அடக்குமுறைக்கு எதிராக போராடி, அமெரிக்க பேரரசுக்கு பக்கத்திலேயே, அமெரிக்க வெறுப்புக்கு மத்தியில், மக்களாட்சியை சிறப்புற செய்து வரும் பிடல் காஸ்ரோ

இவர்களின் உதவியுடன், சிறிலங்காவும், தமிழீழ விடுதலைப்புலிகளும் இனிமேல் சமாதான முயற்சிகளை தொடர வேண்டும். இவர்கள் அனைவருமே சிறிலங்காவின் பௌத்த, மார்கஸிய அரசுக்கு பிடித்தமானவர்களும் கூட.

þùÅÇ× ¸¡ÄÓõ §ÀÍí¸û §ÀÍí¸û ±ýÚ ¦º¡ýÉ þó¾ §ÁüÌĸõ, ±ÁÐ À¢Ãîº¨É §Àº¢ò¾£÷ì¸ôÀ¼ÓÊ¡¦¾ýÀ¨¾ ¾ü¦À¡ØÐ¾¡ý ¦¾Ç¢Å¡¸ ¯½÷óÐûÇÐ §À¡Öõ-«Ð¾¡ý þó¾ ¾¨¼ì¸¡É ¬Âò¾õ ±ýÚ ¿¢¨É츢§Èý

டொனால் காம்பை மொளனமாக்கிய கேள்வி "வன்முறையை விடுதலையின் பெயரால் கையிலெடுப்பவனும் பயங்கரவாதி என்றால் அமெரிக்காவின் தந்தை ஜேர்ஜ் வாசிங்டன் ஒரு பயங்கரவாதியா?" மத்திய லத்தீன் அமெரிக்க நாடுகளில் சுயநலன்களிற்கா பயங்கரவாதத்தை திட்டமிட்டு செயல்வடிவம் குடுக்கும் கொலைக் குழுக்களை உருவாக்கிய அமெரிக்க மத்திய புலநாய்வுத்துறையும் அதன் (அமெரிக்க) அரசாங்கமும் பயங்கரவாதிகள் தானே?

தமிழீழத் தேசிய தலைவர் தனது நடைமுறையில் எமக்கு உணர்த்தியது உணர்த்துவது உணர்த்த விரும்புவது:

உலகத்தால் இதுவரை என்ன செய்ய முடிந்தது... இப்போ என்ன செய்கிறது... இனிமேலும் என்ன செய்யப் போகிறது?

ஆகவே எமது "வலிமையே வாழ்வு"

பாலகுமார்ன் அண்ணாவின் அரசியல் அரங்கம் 20.05.2006

http://www.tamilnaatham.com/audio/2006/may...la20060521.smil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐரோப்பிய ஒன்றியத் தீர்மானம் குறித்து சொல்கெய்ம், கென்றிக்சன் கவலை.

விடுதலைப்புலிகள் மீது ஐரோப்பிய நாடாளுமன்றம் கொண்டுவந்திருக்கும் தடை விதிப்பதான தீர்மானம் குறித்து நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் இலங்கையின் சமாதான முயற்சிகளுக்குப் பொறுப்பானவருமான எரிக் சொல்கெய்மும் இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுத்தலைவர் உல்ப் கென்றிக்சனும் கவலை தெரிவித்துள்ளனர்.

இத்தீர்மானமானது எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியதும் சமாதானப்பேச்சுக்களைப் பாதிக்கக்கூடியதுமாகும். என சொல்கெய்ம் தெரிவித்துள்ளார். அத்தோடு விடுதலைப்புலிகள் மீது விதிக்கப்படும் தடை காரணமாக அவர்களுடன் சமாதான முயற்சிகளில் ஈடுபடுகின்ற நாமும் தனிமைப்பட நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இத்தடை காரணமாக விடுதலைப்புலிகள் கெரில்லா யுத்தத்தில் ஈடுபட்டால் கொழும்பிலுள்ள உல்லாசப்பிரயாணக் கேந்திரங்களும் வெளிநாட்டு முதலீடுகளும் பாதிக்கப்படக்கூடும.; என உல்ப் கென்றிக்சன் தெரிவித்துள்ளார்.

நன்றி - சங்கதி

உண்மையான தமிழன் எல்லாரும் புலிகள்தான்.... அவர்களே தங்களின் தலை எழுத்தை எழுதும் காலம் கனிந்து வந்தாச்சு... இப்போ சமாதானம் என்பது சமநிலை பேணப்படாத்தினால் கலைந்து போக வைக்கிறார்கள்.. ஐரோப்பிய ஒண்றியத்திடம் இருந்த வலியுறுத்தும் அல்லது சமாதானத்துக்கு போகச்சொல்லும் குரல் வலுவிளந்து போகிண்ற போது. புலிகளாகிய தமிழருக்கு இருக்கும் இரு தெரிவுகளாகிய சமாதான வளி அடைபட்டுப்போகிண்றது... இப்போ ஒரே தெரிவாகிய தமிழீழம் மட்டுமே முன்னால் இருக்கின்றது...

இண்று (21/05/2006) நடந்து முடிந்த மத்திய லண்டனில் போராட்டத்துக்கு கூடிய ஆயிரக்கணக்கான மக்களின் உணர்வு இதுவாக மட்டுமே இருந்ததை காணக்கூடியதாக இருந்தது....

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அரசின் அழுத்தத்துக்கு

அடிபணிந்தது ஐரோப்பிய ஒன்றியம்!

""தமிழீழ விடுதலைப் புலிகளுக்குத் தடை விதிக்கும் விவகாரத்தில் அமெரிக்க அழுத்தத்துக்கு அடிபணிந்தது மேற்குலகம்.''

இவ்வாறு மேற்குலக இராஜதந்திரிகள் தகவல் வெளியிட்டிருக்கின்றனர்.

""விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தடை விதிப்பது சமாதான முயற்சிகளுக்கு உதவப்போவதில்லை. அது எதிர்மறைவான விளைவுகளையே ஏற்படுத்தும். மீண்டும் முழு அளவிலான போர் வெடிக்க அது வழி செய்யும் என்றே இலங்கை இனப்பிரச் சினைக்கு அமைதித் தீர்வு காணும் முயற்சி களில் அனுசரணைப் பணி வகித்துவரும் நோர்வே கருதுகின்றது. நோர்வேயின் இந்த நிலைப்பாட்டை ஏனைய ஸ்கண்டிநேவிய நாடுகளான சுவீடன், டென்மார்க், பின்லாந்து ஆகியனவும் முழு அளவில் ஏற்றிருந்தன. ஆனால், புலிகளைத் தடைசெய்யவேண் டும் என்பதில் அமெரிக்கத் தரப்பு தீவிரமாக இருந்தது. அமெரிக்கா சார்பில் பிரிட்டன் மேற்படி சுவீடன், டென்மார்க், பின்லாந்து ஆகிய ஸ்கண்டிநேவிய நாடுகளுடன் இராஜ தந்திரப் பேச்சுக்களை நடத்தி அழுத்தம் போட்டு அந்த நாடுகளை மசிய வைத்தது. அந்த நாடுகள் இணங்கியதோடு புலி களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதிப் பதில் இருந்த முட்டுக்கட்டை முழுமையாக நீக்கப்பட்டுவிட்டது'' என்று ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரி ஒருவர் தெரிவித் திருக்கின்றார்.

""புலிகளைத் தடைசெய்யவேண்டும் என்ற அமெரிக்க வற்புறுத்தலே இவ்விட யத்தில் தீர்மானிக்கும் அம்சமாக அமைந் தது'' என்றும் அவர் சொன்னார்.

இதேசமயம்,

ஐரோப்பிய ஒன்றியத் தடை முஸ்தீபு தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தோடு இராஜதந்திர அணுகுமுறையில் விடயங் களைக் கையாண்டு திரைமறைவுப் பேச்சுக் களை நடத்தி விடயத்தை சமாளிப்பதை விடுத்து, இவ்விவகாரம் பற்றிய செய்திகள் வெளியானதும் ஊடகங்கள் மூலம் பகிரங்க மாக ஐரோப்பிய ஒன்றியத்தையும் அதன் நடவடிக்கையின் விளைவுகளையும் கடுமை யாக விமர்சித்து கருத்து வெளியிட்டதன் மூலம் புலிகளுக்கும் ஐரோப்பிய ஒன்றித் துக்கும் இடையில் நிரந்தரத் தெறிப்பை ஏற்படுத்திவிட்டார் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் என்ற சாரப்பட சில இணையத்தளங்களில் தமிழ் அரசியல் விமர் சகர்கள் சிலர் கருத்து வெளியிட்டிருக்கின் றனர்.

இவ்விகாரம் குறித்து ஆராய்ந்த வேறு சில உள்வீட்டுத் தகவல்கள் வெளியாகின.

ஈழத் தமிழர் விவகாரம் குறித்து ஐரோப் பிய ஒன்றியத்தின் மூத்த இராஜதந்திரிகள் சிலர் இரு வாரங்களுக்கு முன்னர் லண்ட னில் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பால சிங்கத்தை அவரது இல்லத்தில் சந்தித்து விரி வாகப் பேச்சு நடத்தியிருக்கின்றனர். அப் போது புலிகள் தரப்பு வாதங்களை ஏற்றுக் கொண்டு இணைங்கிச்சென்ற அவர்கள், இப்போது திடீர் குத்துக்கரணம் அடிக்கும் நிலைப்பாட்டை எடுத்திருப்பது புலிகளின் தலைமைக்கு பெரும் ஆச்சரியத்தையும் விச னத்தையும் கொடுத்திருப்பதாகக் கூறப்படு கின்றது. இவ்விடயத்தில் இராஜதந்திர ரீதி யில் பல முயற்சிகளை எடுத்து விடயங்களைக் கையாண்டு பார்த்த பின்னரே புலிகள் ஐரோப் பிய ஒன்றியத் தடையால் ஏற்படக்கூடிய எதிர்விளைவுகளைப் பகிரங்கமாக சுட்டிக் காட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்று விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

-புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மீதான தடையை எதிர்த்த நாடுகளை வற்புறுத்தி இணங்க வைத்தது பிரிட்டன்

-அமெரிக்காவின் அழுத்தமும் முக்கிய காரணம்

விடுதலைப் புலிகளைத் தடை செய்யும் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் முதலில் கடும் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், பிரிட்டனும் ஏனைய நாடுகளும், கடுமையாக வற்புறுத்தி அவற்றை சம்மதிக்க வைத்ததாக லண்டன் ரைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

இராஜதந்திரிகளை ஆதாரம் காட்டி இது குறித்து ரைம்ஸ் மேலும் கூறுகையில்;

விடுதலைப் புலிகள் மீதான தடையானது இலங்கையில் மீண்டும் முழு அளவில் யுத்தத்தை தோற்றுவிக்குமென்ற கடும் எச்சரிக்கையின் மத்தியிலும் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தத் தீர்மானத்திற்கு சுவீடன்,டென்மார்க் மற்றும் பின்லாந்து ஆகிய ஸ்கன்டிநேவிய நாடுகள் ஆதரவு வழங்க முன்வராத போதும் பிரிட்டனும் ஏனைய நாடுகளும் கடும் அழுத்தம் கொடுத்து இவற்றை சம்மதிக்க வைத்தன.

இதில் அமெரிக்காவின் கடும் அழுத்தமும் இவர்களை இந்தத் தடைக்கு சம்மதிக்க வைத்தது.

இந்த மூன்று நாடுகளினதும் சம்மதத்தையடுத்து கடந்த வியாழக்கிழமை இரவு, விடுதலைப் புலிகளைத் தடை செய்யும் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் 25 நாடுகளும் ஏகமனதாக இணக்கம் தெரிவித்துள்ளன.

இந்தத் தடையானது எதிர்விளைவுகளையே ஏற்படுத்துமெனக் கடுமையாக கருதும் நோர்வே அனுசரணையாளர்களின் நிலைப்பாட்டுக்கு மேற்படி மூன்று நாடுகளும் முதலில் ஆதரவு தெரிவித்து வந்தன.

தற்போது இது தொடர்பாக உடன்பாடொன்று எட்டப்பட்டுள்ளது. எனினும், இது குறித்து எதிர்வரும் 29 ஆம் திகதியே ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்களால் இறுதி முடிவெடுக்கப்படும்.

இந்தத் தடையின் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அரசுகளுடன் புலிகள் இராஜ தந்திரத் தொடர்புகளை வைத்திருக்க முடியாதென்பதுடன் அந்த நாடுகளில் புலிகளால் நிதிசேகரிக்கவும் முடியாது.

மேலும் அவர்களது சொத்துகளை முடக்கவும் அவர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பயணம் செய்ய முடியாத நிலை உருவாகவும் இத் தடை வழிவகுக்கும்.

அமெரிக்கா விடுத்த வேண்டுகோளையடுத்தே புலிகளைத் தடை செய்ய வேண்டுமென்ற முடிவுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் முன்வந்தன. இதனால் இந்தத் தடையைத் தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக அமெரிக்கா இருந்துள்ளது.

புலிகள் மீதான தடை அவர்களை பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டுவருமென அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் கருதுகின்றன.

எனினும், இது எதிர் மறையான விளைவுகளையே ஏற்படுத்துமென இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் உல்வ் ஹென்றிக்சன் (சுவீடன்) எச்சரித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையானது சரியான நேரத்தில் தான் வருகிறதா எனத் தான் கருதவில்லை என்றும் அவர் ரைம்ஸுக்குத் தெரிவித்தார்.

தங்களை ஒவ்வொருவரும் கைவிடுவதாகப் புலிகள் கருதக் கூடுமென்பதுடன் முழு அளவிலான யுத்தத்தை தவிர அவர்களுக்கு வேறு வழியில்லாது போகலாம் எனவும் கூறினார்.

தங்களைத் தடைசெய்யும் நடவடிக்கையானது தென்னிலங்கையில் கடும் போக்காளர்களையும் தெற்கின் மோசமான அரசியல் வாதிகளையும் ஊக்குவிப்பதாக அமைந்து விடுமெனவும் படையினர் மீதான தாக்குதல்களுக்காக அவர்கள் பொது மக்களை மிக மோசமாகத் தண்டிக்கும் நிலை ஏற்படுமெனப் புலிகள் பல்வேறு சந்தர்ப்பங்களில் எச்சரித்து வந்ததாகவும் `லண்டன் ரைம்ஸ்' சுட்டிக் காட்டியுள்ளது.

-தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

அமெ. வழிநடத்தலில் ஐரோப்பிய ஒன்றியம்

"சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி!' என்பார்கள். அதுபோல, இலங்கை விவகாரத்தில் பொருத்தமற்ற நேரத்தில், தேவையற்ற முடிவை எடுத்து, நிலைமையைக் குழப்பியிருக்கும் ஐரோப்பிய ஒன்றியத் தின் செயற்பாடு, சங்கை ஊதிக் கெடுத்த ஆண்டியின் வேலை போலாகியிருக்கின்றது.

தடுமாறிக் கொண்டிருந்த அமைதி முயற்சிகளை சமாதான எத்தனங்களை முற்றாகத் தடம் புரள வைக்கு மாற்போல அமைந்திருக்கிறது ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த அதிரடி நடவடிக்கை.

சர்வதேச பொலீஸ்காரனான அமெரிக்காவின் கைங் கரியத்தில் முன்னெடுக்கப்படும் இந்த நடவடிக்கை, அமெரிக்கா தலைமையிலான வல்லாதிக்க சக்திகள் இவ்விடயத்தில் எதிர்பார்க்கும் பெறுபேறுகளுக்கு மாறானவற்றை எதிர்மறை விளைவுகளை தரப்போகின்றன என்பதுதான் உண்மை.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைச்சரவை எதிர் வரும் 29 ஆம் திகதி கூடும்போதுதான், தமிழீழ விடு தலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்யுமா என்பது பற்றிய இறுதி முடிவு எடுக்கப்படும். என்றாலும், இவ்விடயத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளு மன்றம் சில தினங்களுக்கு முன்னர் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானம் சில விடயங்களை எமக்குச் சொல் லாமல் சொல்கின்றது என்பதும் கவனிக்கத்தக்கது.

""யுத்தத்தை வன்முறையை நிறுத்துங்கள்; அமை திப் பேச்சுக்குக் காலதாமதமின்றிச் செல்லுங்கள்; சிறு வர்களைப் படைக்குச் சேர்க்காதீர்கள்!'' என்றெல்லாம் அந்தப் பிரேரணை பொதுவாகத் தமிழர் தரப்பை புலி களை வற்புறுத்தியிருக்குமானால் அது வேறு விடயம். தனித்தனி நாடுகளில் அமைதியும், சமாதானமும் நிலவு வது உலக சர்வதேச அமைதிக்கு முக்கியமானது, அவசியமானது என்ற அடிப்படையில் விடுக்கப்பட்ட வற்புறுத்தலாகவும், வலியுறுத்தலாகவும் அதைக் கொள்ள முடியும்.

ஆனால், இவை எல்லாவற்றையும் தாண்டி, இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் தனது எல்லைகளை மீறி, தலையீடு செய்யும் விதத்தில் தீர்மானம் நிறை வேற்றியிருக்கின்றது ஐரோப்பிய ஒன்றியம். அதுவே தமிழர் தரப்பை பெரும் விசனத்துக்குள்ளும், எரிச்சலுக் குள்ளும், ஆதங்கத்துக்குள்ளும் ஆழ்த்தியிருக்கின்றது என்பதும் அவதானிக்கத்தக்கது.

* இலங்கைத் தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக தமிழீழ விடுதலைப் புலிகளை ஏற்க முடியாது.

* பிற தரப்புக்களையும் இன, மொழிக் குழுமங் களையும் தரப்புகளாக ஏற்றுக் கொள்ளப் புலிகள் தயா ராக வேண்டும்.

* ஆயுதக் களைவுக்குப் புலிகள் தயாராக இருக்க வேண்டும்.

இப்படியெல்லாம் கட்டுப்பாடுகளையும், மட்டுப்படுத்தல்களையும் விதிக்கும் உத்தரவாக ஐரோப்பிய ஒன்றியத் தீர்மானம் அமைந்தமைதான் தமிழரின் வியப் புக்குரியது; அவர்களுக்கு விசனத்தை ஏற்படுத்துவது.

இவ்வாறு தனது முடிவைத் திணிக்கும் ஒன்றாக ஐரோப்பிய ஒன்றியத் தீர்மானம் அமைந்தமையே அதன் பின்புலத்தில் அமெரிக்கா என்ற வல்லாதிக்கம் இருப் பதை ருசுப்படுத்தப் போதுமானதாகும்.

தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் புலிகள் அல்லர் என் றும்

மற்றைய தரப்புகளையும் புலிகள் பேச்சில் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும் எனவும்

புலிகள் ஆயுதங்களைக் கையளிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்றும்

கூறுவதற்கான உரிமையை அருகதையை ஐரோப் பிய ஒன்றியத்துக்கு வழங்கியவர்கள் யார்?

தமிழர்களுடைய இனப் போராட்டத்துக்கான இன் றைய அடிப்படை வலுவே அவர்களது ஆயுதங் களும் அவற்றைத் தாங்கி நிற்கும் போராளிகளுமே. இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு ஒன்று எட்டப் பட்டு, அது நடைமுறைப்படுத்தப்படுவது உறுதியா வதற்கு முன்னரே புலிகளின் ஆயுதங்களைக் களையக் கோருவதோ அதனை நிர்ப்பந்திப்பதோ பொருத்த மேயற்றது; நடைமுறைச் சாத்தியமே அற்றது. அத்த கைய முடிவு எதற்கும் தமிழர்கள் தலை சாய்க்க மாட்டார் கள் என்பது திண்ணம்.

ஐரோப்பிய ஒன்றித்தின் இந்த உத்தேசத் தடை நடைமுறைக்கு வருமானால், சர்வதேச சமூகத்திலிருந்து தமிழர்களின் விடுதலைப் போராட்ட சக்தியான புலிக ளும் ஏன் தமிழர்களும் கூட தனிமைப் படுத்தப்பட்டு, விலக்கப்பட்டு, புறமொதுக்கப்படும் சூழ்நிலை உரு வாவதும் தவிர்க்க முடியாததாகும்.

சர்வதேச சமூகத்தின் கீழ் நடக்கும் தற்போதைய அமைதி முயற்சிகளின் மூலம் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நப்பாசையிலேயே புலிகள் யுத்தத்தை நிறுத்தி, இலங்கை அரசோடு பேச்சு முயற்சியில் ஈடுபட இணங்கினர்.

ஆனால், சர்வதேச சமூகத்தின் முக்கிய தேசங்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் புலிகளை, தமிழர்களின் பாதுகாப்பு சக்தியை, பயங்கரவாத முத்திரை குத்தி, ஒதுக்குமானால் புலிகளைக் கைவிட்டுத் தனிமைப் படுத்துமானால் தங்களது முழு ஆயுத பலத்துடன் கூடிய யுத்தத்தை முழு அளவில் முன்னெடுப்பதைத் தவிர புலிகள் தரப்புக்கு வேறு மார்க்கமே இல்லாமல் போகும்.

இந்த வகையில் அமைதிக்கு வேட்டு வைக்கும் "அமெரிக்க முஸ்தீபுபோல' ஐரோப்பிய ஒன்றியத் தீர் மானம் வெளிவந்திருக்கின்றது. அவ்வளவே.

-உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

'ஐரோப்பியப் பொருளாதார ஒன்றிய அறிக்கையின் தார்மீகப் பெறுமானம்' என்ற தலைப்பில் பிரான்ஸ் ஜீ.ஜீ.ஆர் தமிழ் நாதத்தில் எழுதிய கட்டுரையினை இங்கே பார்க்கவும்.

http://www.tamilnaatham.com/articles/2006_...gr/20060522.htm

  • கருத்துக்கள உறவுகள்

அழுத்தங்களால், தமிழினம் இலட்சியத்தைக் கைவிடாது

தமிழீழ விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பு பட்டியலில் சேர்ப்பது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளமையானது தமிழினம் சர்வதேச சமூகத்தின் மத்தியில் குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வைத்திருந்த நம்பிக்கையை தவிடு பொடியாக்கியுள்ளது. அது மாத்திரமின்றி சிங்களப் பேரினவாத கடும் போக்காளர்களது தமிழின அழிப்பு நடவடிக்கைகளுக்கு இது தூபமிடும் வகையிலும் அமைந்துள்ளது.

போர் நிறுத்த உடன்படிக்கையை முழுமையாக அமுல்படுத்தாத சிறிலங்கா அரசு தமிழின அழிப்பை திட்டமிட்டு மேற்கொண்டு வரும் நிலையில், அதன் பொய் பிரசார வலையில் சர்வதேச சமூகம் மயங்குகின்றதா என்ற கேள்வி எழுகின்றது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையையும் அதில் உள்ளடக்கப்பட்ட கருத்துக்களையும் நோக்குமிடத்து தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் யதார்த்தத்தை இன்னும் ஐரோப்பிய ஒன்றியம் ஏன் உணரவில்லை என்ற கேள்வியை மட்டுமல்ல அது பக்கச் சார்பாக செயற்படுவதையும் தெளிவாகக் காட்டுகின்றது. தமது ஆயுதங்களை கைவிட்டு இனப்பிரச்சினைக்கான இறுதி அரசியல் தீர்வுக்குவர வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. போர் நிறுத்த உடன்பாடு என்பது விடுதலைப்புலிகள் கொண்டிருக்கும் சமவலு அடிப்படையாகக் கொண்டு தான் கைச்சாத்திடப்பட்டது.

எந்த இடத்திலும் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் கையளிக்க வேண்டும் என்ற பதமோ அல்லது விடயமோ உள்ளடங்கவில்லை. தமிழனின் பலம் புலிகளின் பலம் தான். சமாதானமா, சண்டையா என்பதை தீர்மானிக்கப் போகின்ற பெறுமானமும் ஆயுதங்கள் தான். அந்த அடிப்படையை விடுத்து விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருப்பது சிங்கள இனத்திடம் தமிழினத்தை பலிக்கடாவாக்கவா என்ற கேள்வி எழுகின்றது.

பொறுப்புள்ள உலக அரங்கில் முக்கியத்துவம் மிக்கதாக கருதப்படுகின்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் இவ்வாறு ஒரு சிறுபான்மை இனத்தின் விடுதலைப் போராட்டத்தின் குரல் வளையை நசுக்குகின்ற அல்லது எச்சரிக்கை செய்கின்ற நடவடிக்கையை பக்கச் சார்புடையதாகவே கருத வேண்டியுள்ளது. போர் நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்ட காலத்திலிருந்து இற்றைவரை தமிழர் தாயகத்தின் கள நிலவரங்களை அவதானிக்கின்ற போது பேச்சுக்கள் தோல்விஅ அடைவதற்கும் போர் நிறுத்தம் நிழல் யுத்தமாகி தற்போது முன்னரங்கக் காவல் நிலைகளில் மோதும் நிலை ஏற்படுவதற்கும் யார் காரணம் என்பதை ஆழமாக அறிய வேண்டும.;

அதைத் தவிர்த்தது போர் நிறுத்தத்தை சீர்குலைக்கும் வகையில் சிறிலங்கா அரசும், படையினரும் ஒட்டுக்குழுக்களை வைத்து தமிழீழ விடுதலைப்புலிகள் மீதும், தமிழ் மக்கள் மீதும் நிழல் யுத்தமொன்றைத் திணித்து போர் மூழ்வதற்கான சூழலை ஏற்படுத்திய போதும் விடுதலைப்புலிகள் உச்ச பொறுமை காப்பது சர்வதேச சமூகம் மீது கொண்டிருந்த நம்பிக்கையாலும் சமாதானத்தின் மீதான பற்றுறுதியினாலேம் ஆகும்.

ஆனால், சிங்கள இனவாத அரசு ஒருபக்கம் சமாதானம் எனும் பூச்சாண்டியை சர்வதேச சமூகத்துக்குக் காட்டிக் கொண்டு மறுபுறம் நீண்டதொரு யுத்தத்துக்கான தயார்படுத்தலை திட்டமிட்டு மேற்கொண்டது. ஒட்டுக்குழுக்களால் தான் போர் நிறுத்த உடன்பாடு சிக்கலாகி விட்டது என பல்வேறு தடவைகளில் விடுதலைப்புலிகள் சர்வதேச சமூகத்திடம் தெளிவுபடுத்திய போதும் சிறிலங்கா அரசாங்கத்தைக் கண்டிக்கக் கூடிய எத்தகைய நடவடிக்கையையும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளோ அல்லது சர்வதேச சமூகமோ மேற்கொள்ளவில்லை என்பது வேதனைக்குரியது.

தமிழினம் சிங்களப் படைகளால் வயது வேறுபாடின்றிக் கொன்றொழிக்கப்படுகின்றது. மக்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக உடுத்த உடையுடன் இடம்பெயர் அவலத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கும் போது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று கடும் போக்குத்தனமாக தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான உத்தேசத் தடை குறித்த கருத்தை முன்வைத்திருப்பது பக்கசார்பாக தனத்தை வெளிப்படுத்துகின்றது.

தமிழின விடுதலைப் போராட்டம் என்பது சுயலாபத் தனமான போராட்டமல்ல சிங்கள ஏகாதிபத்திய சக்திகளிடமிருந்து தாயக மண் மீட்புக்கான போராட்டம். ஒட்டு மொத்த தமிழ் மக்களும் போர்க்களம் புகக்கூடிய பயிற்சிகளைப் பெற்று வருகின்றனர். இத்தகைய நிலையில் விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டம் என்ற பதத்துக்குள் வரையறை செய்வதால் அல்லது கட்டுப்பாடுகளை அழுத்தங்களைப் பிரயோகிப்பதால் தமிழினம் தமது இலட்சிய வேட்கையை விட்டு திசை திரும்ப மாட்டாது என்பதை மேற்குலகு புரிந்து கொள்வது அவசியமானது.

எனவே, இனியாவது சர்வதேச சமூகம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை நடுநிலைமையுடன் நோக்குவது அவசியமானது.

- மட்டக்களப்பு ஈழனாதம்

ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தேசத் தடை

கண்காணிப்புப் பணியையும் பாதிக்கும்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய் யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க் கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தேச நிலைப்பாடு இலங் கையில் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பணியை மோசமாகப் பாதிக்கக் கூடும் எனக் கருதப்படுகின்றது.

இலங்கை யுத்த நிறுத்தக் கண்காணிப்புப் பணியை டென்மார்க், சுவீடன், பின்லாந்து, நோர்வே, ஐஸ்லாந்து ஆகிய ஐந்து ஸ்கண்டிநேவிய நாடுகளின் பிரதிநிதிகள் மேற் கொண்டுவருகின்றனர். சுவீடன் நாட்டின் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் உல்ப் ஹென்றிக்ஸன் கண்காணிப்புக் குழு வுக்குத் தலைமை வகிக்கின்றார். அவரின் கீழ் சுமார் அறு பது கண்காணிப்பாளர்கள் பணியாற்றுகின்றனர்.

மேற்படி கண்காணிப்புப் பணிக்கு இந்த அறுபது கண் காணிப்பாளர்களும் போதுமானவர்கள் அல்லர் என்ற நிலை யில் மேலும் பதினைந்து பேரைப் பணிக்கு சேர்ப்பது குறித்துத் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றது. அதற்கான முயற்சி களும் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையிலேயே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தடை விதிப்புப் பற்றிய ஆரம்பத் தகவல்கள் வெளியாகி யிருக்கின்றன.

இலங்கையில் யுத்த நிறுத்தக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஐந்து நாடுகளில் மூன்று டென்மார்க், சுவீடன், பின்லாந்து ஆகியவை ஐரோப்பிய ஒன்றியத் தைச் சேர்ந்தவை.

இந்த நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியமும், அதன் அமைச்சரவையும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்யும் தீர்மானத்துக்கு வந்தால்

தனது நாட்டில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் உள்ள ஓர் இயக்கத்துடன் நேரடி யாகச் சம்பந்தப்பட்ட அந்த இயக்கத்தை ஒரு தரப்பாகக் கொண்ட யுத்த நிறுத்தக் கண்காணிப்பை, அந்த நாட்டின் கண்காணிப்பாளர்கள் மேற்கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுகின்றது.

அதுமட்டுமல்ல, தம்மைத் தடை செய்யப்பட்ட ஓர் இயக்கமாக அறிவித்திருக்கும் ஒரு நாட்டின் கண்காணிப் பாளர்கள், தமது அமைப்பு சம்பந்தப்பட்ட யுத்த நிறுத்த ஏற் பாடுகளை நடுநிலையாளர்களாக நின்று கவனிப்பதை விடுதலைப் புலிகள் இயக்கம் கொள்கை அடிப்படையில் தன்னும் ஏற்றுக்கொள்ளுமா என்ற கேள்வியும் எழுகின்றது.

இவ்விடயத்தில் கண்காணிப்புப் பணி சம்பந்தப்பட்ட விவகாரத்தில் புலிகள் அமைப்பு இதுவரை எந்தக் கருத் தையும் வெளியிடவில்லை. கண்காணிப்புப் பணியில் ஈடு பட்டிருக்கும் ஒரு நாடு, தனது அமைப்பை உத்தியோக பூர்வமாகத் தடை செய்ய முன்னர் அத்தகைய தடை வரும் என்ற எதிர்பார்ப்பில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டி ருக்கும் ஒரு நாட்டுக்கு எதிராகப் புலிகள் அமைப்பு முற் கூட்டியே பகிரங்கமாகக் கருத்துக் கூறமுடியாது. அப்படிக் கூறமுற்படுவது பொருத்தமற்றதாகும்.

எனவே, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஒரு நாடு, புலிகள் அமைப்பைத் தடை செய்தாலும், அந்த நாட் டின் கண்காணிப்புப் பணியைப் புலிகள் அமைப்பு ஆட் சேபிக்காமல் தொடர்ந்து ஏற்றுக் கொண்டே தீரும் என்ற ஒரு தலைப்பட்சமான முடிவுக்கு நாம் இப்போதே வந்துவிட முடியாது.

இலங்கை அரசு, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தைத் தடை செய்திருக்கும்வரை அந்த இயக்கத்துடன் அமை திப் பேச்சுக் கான ஆரம்ப நடவடிக்கைகளைக் கூட எடுக்க மாட்டோம் என்று விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைமை 2002 ஆம் ஆண்டு முற்பகுதியில் இறுக்கமான பிடிவாதத்துடன் இருந்ததும்

புலிகள் மீதான தடையை இலங்கை அரசு உத்தியோகபூர்வமாக நீக்கிய பின்னரே அமைதி முயற்சிகளின் முன் நகர்வுக்குப் புலிகள் இயக்கம் அசைந்து கொடுத்தது என் பதும் கவனிக்கத்தக்கவை.

புலிகள் இயக்கத்தைப் பொறுத்தவரை இந்தத் தடை விவகாரம் உணர்வு ரீதியான விடயங்களைத் தொடக் கூடி யது. எனவே, சர்வதேச பொலீஸ்காரனான அமெரிக்காவுக் குத் தலையாட்டுவதற்காக அமெரிக்காவைத் திருப்திப் படுத்துவதற்காக புலிகள் இயக்கத்தைத் தடை செய்யும் தீர்மானத்துக்கு இணங்கி விட்டு, புலிகள் தரப்போடும் ஈழத் தமிழர் தரப்போடும் வழமையான தொர்பாடல் களைத் தொடரலாம் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலகுவாகக் கருதிவிடக் கூடாது.

ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத் தீர்மானத்தின் அடிப்படையில் புலிகளைத் தடை செய்வதற்கு ஐரோப்பிய ஒன்றிய அமைச்சரவை தீர்மானிக்குமானால்

இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்துக்கு அமைதித் தீர்வு காண அனுசரணைத் தரப்பான நோர்வே எடுத்து வரும் முயற்சிகள் பெரிதும் பாதிக்கப்படும். இந்த எத்தனத்தில் ஈடுபட்டிருக்கும் நோர்வே சர்வதேச ரீதியில் தனிமைப்படுத் தப்பட்டு, கைவிடப்படுவது ஒருபுறமிருக்க

இவ்விவகாரம் தொடர்பான யுத்தநிறுத்தக் கண் காணிப்பில் ஈடுபட்டிருக்கும் நோர்வே, ஐஸ்லாந்து போன்ற ஐரோப்பிய ஒன்றியத்தைச் சாராத நாடுகளும் கண்காணிப் புப் பணியில் தனித்து விடப்படும் சூழ்நிலை உருவாவதும் தவிர்க்க முடியாமல் போகலாம்.

ஏற்கனவே பற்றாக்குறையில் இருக்கும் போர் நிறுத்தக் கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்து, கண்காணிப்புப் பணி முற்றாகப் பாதிப்புற, அது போர் மீள மூளுவதற்கான வாய்ப்பை மேலும் ஏற்படுத்தி னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

-உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

அச்சுறுத்தலுக்கு அடங்கார் பிரபா!

இனப்பிரச்சினை விவகாரத்தில் நாடு இக்கட்டில்-ஒரு திருப்பு முனை நிலையில்-சிக்கி நிற்கின்றது.

இருபத்தியைந்து ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்றம் ஈழத்தமிழர்களின் போராட்ட சக்தியான தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தமது நாடுகளில் தடை செய்யக்கோரும் தீர்மானம் ஒன்றை ஏகமனதாக நிறைவேற்றியிருக்கின்றது. இது குறித்து இறுதி முடிவை ஐரோப்பிய ஒன்றியத்தின் அமைச்சரவை எதிர்வரும் 29 ஆம் திகதி எடுக்கவிருக்கின்றது.

அடுத்த நாள்-அதாவது மே30ஆம் திகதி-இலங்கைக்கு உதவும் நாடுகளின் இணைத் தலைமை அமைப்புகள் டோக்கியோவில் சந்தித்து இலங்கை நிலைமை குறித்து ஆராயவிருக்கின்றன.

இந்நிலையில் இலங்கை சமாதான முயற்சிகளுக்கு அனுசரணைப் பணி வகிக்கும் நோர்வேயின் கொழும் புக்கான தூதுவர் ஹான்ஸ் பிரட்ஸ்கர் நேற்று கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் அரசியல்துறையினரைச் சந்தித்துப் பேசியிருக்கின்றார்.

அனுசரணைப் பணிக்குப் பொறுப்பான நோர்வேயின் விசேட சமாதானத் தூதுவர் ஹன்ஸன் போவர் நேற்று ஒஸ்லோவிலிருந்து புறப்பட்டு இன்று கொழும்பு வரு கின்றார்.

இதேவைளை, அனுசரணைப் பணியைக் கண்காணிக்கும் நோர்வே அமைச்சர் எரிக் சொல்ஹெய்மும் நாளைமறுதினம் கொழும்பு வருகின்றார்.

இவர்கள் எல்லோரும் எதிர்வரும் சனிக்கிழமை கிளிநொச்சி சென்று புலிகளின் தலைமையையும் சந்திக்க முயற்சிப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனால், புலிகளின் தலைவர் பிரபாகரன் வன்னி வரும் நோர்வே அனுசரணைக் குழுப் பிரதிநிதிகள் போன்றவர்களை அங்கு சந்திப்பாரா? இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அமைதி முயற்சிகளை முன்னெடுப்பது குறித்து இந்தச் சந்தர்ப்பத்தில் அவர்களுடன் பேசு வாரா? என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன.

ஐரோப்பிய ஒன்றியத் தடை எதிர்வரும் 29 ஆம் திகதி-அதாவது எதிர்வரும் திங்களன்று-இறுதியாகத் தீர்மானிக்கப்படலாம் என்ற அச்சுறுத்தல் ஒருபுறம்-

அடுத்த நாள் கூடும் இணைத் தலைமைகளும் புலிகளுக்கு எதிராகக் காட்டமாகப் பயமுறுத்தும் எச்சரிக்கை அறிக்கையை வெளியிடலாம் என்ற மிரட்டல் மறுபுறம்-

இவற்றுக்கு மத்தியில்தான்-அவை இடம்பெறுவதற்கு இரண்டு, மூன்று தினங்களுக்கு முன்னர்தான்-ஹன்ஸன் போவரும், சொல்ஹெய்மும் கொழும்பு வந்து, வன்னியில் தலைவர் பிரபாகரனைச் சந்திக்க முயலுகின்றனர்.

புலிகளைத் தடைசெய்வது மற்றும் புலிகளுக்கு எதிராகக் காட்டமான அறிவித்தலை விடுப்பது போன்ற சர்வதேச சமூகத்தின் கடும் நடவடிக்கைகள் என்ற கத்திகளைப் புலிகளின் தலைக்கு மேல் தொங்கவைத்துக்கொண்டு-

அடுத்த ஓரிரு நாள்களில் அது நடக்கும் என்ற அச்சுறுத்தலைப் பின்னணியில் தக்கவைத்துக் கொண்டு-

சர்வதேச சமூகப் பிரதிநிதிகளாக அனுசரணைத் தரப்பான நோர்வேயின் பிரமுகர்கள் புலிகளின் தலைமையைச் சந்திக்க விரும்புகின்றனர்.

அச்சுறுத்தல்கள், அழுத்தம் போன்ற மிரட்டல்களுக்கு அஞ்சி-பயந்து-மிரண்டு-இணங்கி , இசைந்து, அடங்கி, மடங்கி, சுருண்டு போகும் பண்போ, பயமோ உடையவர்கள் அல்லர் புலிகள்.

பின்புலத்தில் அச்சுறுத்தல் பாணி தொக்கி நிற்க, முன்னால் சமரசப் பேச்சுக்கு வரும் தந்திரம் குறித்து நல்ல அனுபவப் பாடம் புலிகளுக்கு உண்டு. இரண்டு, மூன்று லட்சம் அமைதிப் படையினர் ஆக்கிரமித்து நிற்க இந்தியத் தரப்பு கொடுத்த அச்சுறுத்தலையே தூசு என ஊதித் தள்ளியவர்கள் புலிகள்.

எனவே, 29, 30 ஆம் திகதிகளில் சர்வதேச சமூகத்தின் கணிசமான பகுதி புலிகளுக்கு எதிராகத் திரும்பும் என்ற அச்சுறுத்தலுடன் கூடிய நிலைமை இருக்கையில், அதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர் அனுசரணைத் தரப்போடு கூடிப்பேசி, அமைதி முயற்சிகளை முன்நகர்த்துவ தற்கான ஆக்கபூர்வ முடிவுகளை எடுக்கும் திட்டங் களுக்கு புலிகள் இசைவார்கள் என எதிர்பார்ப்பது அர்த்தமற்றது.

சர்வதேச சமூகம் அச்சுறுத்தும் 29, 30 ஆம் திகதிய மிரட்டல்கள் அரங்கேறி முடிந்த பின்னர் வேண்டுமானால்-தமது சுயமான நிலைப்பாட்டில் நின்று கொண்டு-அமைதி முயற்சிகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்புக் குறித்து சர்வதேச சமூகத்துடன் சமரசப் பேச்சு நடத்தப் புலிகள் முன்வரலாம்.

அதற்கு முன் அவர்கள்-குறிப்பாகப் புலிகளின் தலைவர் பிரபாகரன்-நோர்வே அனுசரணைத் தரப்பி னரின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேசுவார் என எதிர் பார்ப்பது துர்லபமே.

அச்சுறுத்தி அடக்க முயலும் எத்தனங்களை முறியடிப்பதுதானே பிரபாகரனின் தனிப் பாணி..... ! அது இம் முறையும் நிகழும் என எதிர்பார்க்கலாம்.

-உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய ஒன்றிய தடையால் புலிகளுக்கு பாதிப்பில்லை அவர்கள் முடக்குவதற்கு எம்மிடம் சொத்துகளுமில்லை

தமிழ்ச்செல்வன் தெரிவிப்பு

விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிர்ச்சியளிக்கும் முடிவு சமாதான நடவடிக்கைகளை இக்கட்டான நிலைமைக்குத் தள்ளும் என்று ஏ.எப்.பி.க்கு விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஏ.எப்.பி.யில் வெளியான கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

விடுதலைப்புலிகளை பயங்கரவாத அமைப்பாக தடை செய்வதற்கு வியாழனன்று ஐரோப்பிய ஒன்றியம் கொள்கையளவில் இணங்கியது. அந்த நகர்வு "அதிர்ச்சியூட்டுவதும் ஆச்சரியப்படுத்துவதுமாகும்" என்று மென்மையாகப் பேசும் 39 வயதுடைய புலிகளின் அரசியற் பிரிவு பொறுப்பாளர் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் தங்கள் நம்பிக்கைகளை வைத்துள்ள சமாதான நடவடிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த நகர்வு மிகவும் இக்கட்டான நிலைமைக்குள் தள்ளிவிடும் என்று நாம் கருதுகின்றோம் என்று விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்கான தலைநகராக செயற்பட்டுவரும் கிளிநொச்சியில் வைத்து தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். இது தெற்கிலுள்ள தீவிரவாத சிந்தனைக் குழுக்களை ஊக்குவிக்கும் என்றார் அவர்.

இந்தியா விடுதலைப்புலிகளை தடைசெய்து ஐந்து வருடங்களின் பின்னர் 1997 இல் அமெரிக்கா புலிகளைத் தடை செய்தது. கடந்த மாதம் கனடாவும் விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் பட்டியலில் இணைத்துக் கொண்டது.

அதிகரித்துவரும் வன்முறைகள், அரசாங்க படையினருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான 2002 யுத்தநிறுத்தத்தை எழுத்தளவில் மட்டும் உள்ளதாக மாற்றியுள்ளது.

ஏப்ரலில் 200 இற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நான்காண்டுகளில் இது மிகவும் இரத்தம் தோய்ந்த மாதமாகும்.

சமாதான நடவடிக்கையின் பொழுது சர்வதேச சமூகம் விடுதலைப்புலிகளை சம அந்தஸ்தில் ஏற்றுக்கொண்டுள்ளது. அந்த சமத்துவம் பேணப்பட வேண்டும் என்று தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

விடுதலைப்புலிகளை தடை செய்வதற்கு பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்துவதற்கு மற்றும் அவர்களின் சர்வதேச நிதி திரட்டலை நிறுத்துவதற்கு, 25 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தை வாஷிங்டன் ஊக்குவிக்கும் என்று இலங்கையில் அமெரிக்க அரசுத் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்து இரண்டு நாட்களின் பின்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு கடந்தவாரம் வெளிவந்தது.

தமிழர்களின் தாயகத்திற்கான புலிகளின் போராட்டத்தில் 1972 இலிருந்து 60,000 இற்கு அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதிகள் பட்டியலில் விடுதலைப்புலிகளை இணைப்பது அவர்களின் சொத்துக்களை முடக்குவதை விளைவாக்கும். ஆனால், தமிழ்ச்செல்வன் இந்த நகர்வை அர்த்தமற்றது என்று குறிப்பிட்டார்.

நாங்கள் தடையாலோ அல்லது சொத்துக்களை முடக்குவதனாலோ எந்த விதத்திலும் பாதிக்கப்படப் போவதில்லை. ஏனென்றால், நாங்கள் எந்த சொத்துக்களையும், கொண்டிருக்கவில்லை என்று தெரிவித்த அவர், தமது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசத்திலுள்ள வரி அமைப்பு முறையிலிருந்தே புலிகள் நிதியைப் பெறுவதாக விளக்கமளித்தார்.

விடுதலைப்புலிகள் ஏனைய உள்ளூரைத் தளமாகக் கொண்ட நிறுவனங்களினூடாகவும் வருமானத்தைப் பெறுவதாகவும் ஆனால், வெளிநாட்டில் எந்தவித சொத்துக்களையோ, முதலீடுகளையோ அல்லது தனிப்பட்ட நலன்களையோ கொண்டிருக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசத்திலுள்ள குடிமக்கள் வெளிநாடுகளிலுள்ள தமது உறவினர்களிடமிருந்து ஆதரவைப் பெறுவதை தமிழ்ச்செல்வன் ஏற்றுக்கொண்டார்.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்திலுள்ள குடிமக்களின் எண்ணிக்கை 500,000 - 600,000 என்று மதிப்பிடப்படுகின்றது.

இலங்கை இராணுவம் எழுந்தமானமாக கொலைகளை மேற்கொள்வதாகவும் கூலிப்படைகளினூடாக செயற்படுவதாகவும் தமிழ்ச்செல்வன் குற்றஞ்சாட்டினார்.

கள யதார்த்தங்களை கருத்தில் கொள்ளாது சர்வதேச சமூகம் ஒருதலைப் பட்சமான முடிவுகளை எடுத்தால், தங்களின் சொந்த முடிவை மேற்கொள்வதை தவிர தமிழ் மக்களுக்கு மாற்றுவழி இல்லை என்று தெரிவித்த அவர், அடக்குமுறை அரசாங்கத்திற்கு எதிராக போராடுவதற்கான சொந்த முடிவை அவர்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்று குறிப்பிட்டார்.

பெருமளவில் நிகழும் கொலைகளை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கண்டிப்பதாக இம் மாத முற்பகுதியில் அரசாங்கத்தின் தலைமை சமாதானப் பேச்சுவார்த்தையாளர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார். இந்தக் கொலைகளுக்கு அரசாங்கப் படைகளின் ஆதரவுடனான துணை இராணுவக் குழுக்களே பெருமளவிற்கு பொறுப்பு என்று விடுதலைப்புலிகள் தெரிவித்துள்ளனர்.

கொலைகளில் அரசாங்கத்திற்கு எந்தவித தொடர்பும் இல்லையென்று மறுத்த நிமால் சிறிபால டி சில்வா, குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துமாறு பாதுகாப்புப் படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலை போர் மீண்டும் தொடங்குவதற்கு வழிவகுக்குமா என்று கேட்டதற்கு தமிழ் மக்களும் அவர்களின் தலைமையான விடுதலைப் புலிகளும் தேசியப் பிரச்சினைக்கு ஒரு தீர்வாக போரைக் கருதவில்லை. போர் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதனை அவர்கள் விரும்பவில்லை என்று தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

ஆனால், அவர்கள் மீது போர் கட்டவிழ்த்து விடப்பட்டால், அதை எதிர்த்து முறியடிப்பதைத் தவிர அவர்களுக்கு வேறு தெரிவு இருக்காது என்று அவர் கூறினார்.

அல்-ஹைடா தற்கொலை தாக்குதலை நடத்துவதற்கு நீண்டகாலத்திற்கு முன்னரே இலங்கை இராணுவத்திற்கு எதிராக வெற்றிகரமான தற்கொலைத் தாக்குதல்களை விடுதலைப்புலிகள் நடத்தியுள்ளனர். விடுதலைப்புலிகளின் குறைந்த உயிரிழப்புடன் இராணுவத்தின் பாரிய சூட்டுப்பலத்தை உச்ச அளவில் அழிப்பதற்கான ஒரு உத்தியாகவே இது கைக்கொள்ளப்பட்டது என்று தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

இது தற்கொலை அல்ல என்று கூறிய அவர், தேசத்தின் நன்மைக்காக ஒருவர் தன்னையே வழங்கும் ்தற்கொடைீ என்றே அந்த செயல் அறியப்படுகின்றது என விளக்கமளித்தார்.

அப்பாவிப் பொது மக்களுக்கோ அல்லது இராணுவ இலக்குகள் அல்லாதவற்றிற்கோ தீங்கிழைக்கும் சர்வதேச பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளுடன் சமநிலையில் எங்களை வைப்பது எப்பொழுதுமே தவறாகும் என்று வலியுறுத்தினார் அவர்.

இராணுவத்தை இலக்கு வைத்த, பொதுமக்கள் மத்தியிலும் கூட உயிரிழப்பை ஏற்படுத்திய தொடர்ச்சியான கிளேமோர் தாக்குதலின் பின்னணியில் விடுதலைப்புலிகள் இருப்பதாக ஸ்கண்டிநேவிய நாடுகளைச் சேர்ந்த யுத்தநிறுத்தக் கண்காணிப்பாளர்கள் சந்தேகிக்கின்றனர்.

கிளேமோர் தாக்குதல்கள் இராணுவத்தால் ஆத்திரமூட்டப்பட்ட பொதுமக்களின் வேலையாக இருக்கக்கூடும் என்றும், ஆனால், அவை புலிகளின் வேலை அல்ல என்றும் தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களுக்குள் எங்களின் எந்தவொரு உறுப்பினர்களையும் நாங்கள் கொண்டிருக்கவில்லை. ஏனென்றால் நாங்கள் யுத்தநிறுத்த உடன்படிக்கையை மதிக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.

-தினக்குரல்

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலாங்கா உண்மையில் சட்டரீதியான இறைமையுள்ள நாடா?உலக நாடுகளும் உண்மையாக சமாதானத்தினை விரும்புகின்றனவா? என்ற தலைப்பில் மெல்பேர்ன் தமிழ்க்குரல் வானொலிக்கு சபேசன் வழங்கிய ஆய்வின் தமிழ் வடிவம்.

http://www.tamilnaatham.com/articles/2006_...an/20060523.htm

  • கருத்துக்கள உறவுகள்

அரபு நாடுகளிலும் விடுதலைப்புலிகளினைத் தடைசெய்ய இலங்கை அரசாங்கம் முயற்சி செய்கிறது

INTERVIEW - Sri Lanka wants Gulf Arabs to ban Tamil rebels

By Heba Kandil

DOHA (Reuters) - Sri Lanka said on Wednesday it wants Gulf Arab states to ban Tamil Tiger rebels and starve them of funds by cracking down on members who force Tamil expatriates in the region to chip in for its activities.

Foreign Minister Mangala Samaraweera, in Doha to attend a conference on cooperation among Asian nations, also called on the international community to press the group back to the negotiations table amid fears of a return to civil war following a recent spike in violence.

"In Qatar there are quite a lot of Tamil people who have reported that they have been intimidated by a few members of the LTTE (Liberation Tigers of Tamil Eelam)," Samaraweera told Reuters after talks with his Qatari counterpart Sheikh Hamad bin Jassim bin Jabr al-Thani in Doha.

"The (group) should be listed by the EU (as a terrorist organisation) and I think it should also be listed in Gulf countries," he said.

"We are now hoping the international community will bring all pressure possible to bring them back to the table. Because we don't actually see anything other than a negotiated settlement."

Energy-rich Gulf states attract millions of guest workers, mainly from the Indian subcontinent, including Sri Lanka, where the Tigers are fighting for a separate state for ethnic Tamils in the north and east of the Indian Ocean island.

The European Union agreed in principle this month to blacklist the LTTE as a terrorist organisation after a wave of deadly attacks on the military.

LTTE, which is already outlawed by the United States, Britain, Canada and India, has warned that such a ban may keep them away from any future peace talks.

The Tigers have pulled out of peace talks indefinitely and say they will not return until soldiers are confined to barracks and the government reins in armed groups, including former comrades turned renegades they say are receiving military help.

Samaraweera said the EU, where the bulk of Tamil expatriates lived, should shut down Tigers offices and freeze their assets.

"I would say the first thing is to cut off the fundraising capabilities. Tamil people contribute not because they are supporters of the LTTE, but because they are intimidated and threatened if they do not give money," he said.

"If families living abroad do not pay up, their relatives living back in Sri Lanka are usually threatened."

The Tigers and the military accuse each other of killing ethnic Tamil civilians, and the violence is reminiscent of the two-decade civil war in which more than 64,000 people died.

Truce monitors and the Tigers have both started referring to a "low intensity war". The government disagrees, saying the ceasefire holds and that it will limit itself to tactical bursts of retaliation if attacked.

http://in.news.yahoo.com/060524/137/64ifz.html

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய தடைக்கு ஈழமுரசில் வந்த கட்டுரைகள்

http://www.eelamurazu.com/To%20Day%20News/...s/Page%2003.pdf

நிறைய யோசிக்கிறம் - பயப்பிடுறம்!

அப்பிடி - எல்லாமே முடிஞ்சு போச்சு என்ற நிலமை - வரல்ல- வராது என்பதற்கு -

ஏற்கனவே -புலிகளை தடைசெய்த நாடுகளில் வாழும் - எம்மவர்கள் - பேசுங்களேன்!

அப்பிடி ஏதும் நிறைய ஆச்சா?

மதில்மேல் பூனைபோல் - இருப்பவர்களை தவிர்க்கணும் -

அதுதான் இந்த தடைகளுக்கு பிறகு செய்யவேண்டியது!

மத்தும்படி - ஒண்ணுமே ஆகாது! 8)

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய தடையினால் பலவீனமடையபோவது யார்?

http://www.tamilnaatham.com/articles/2006_.../jeyaraj/25.htm

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.