Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆளி விதை (FLAX SEED) -சங்கமி .

Featured Replies

[size=5]ஆளை மாற்றும் ஆளிவிதை (Flax Seed) [/size]

[size=5]இதன் பூர்வீகம் மத்தியகிழக்கு நாடுகள் என்றும் அங்கிருந்து இந்தியாவிற்கு பரவியது என்றும் சொல்லப்படுகிறது. ஆரம்பத்தில் ஆளிவிதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணை சாயங்களுக்கு மேல்பூசி உலரவைக்கப்படுவதற்கும், உயர்ரக கடதாசி, லினன் போன்ற துணிவகைகள் உருவாக்குவதற்கும பயன்படுத்தப்பட்டது. [/size]

[size=5]இந்த ஆளிவிதை பற்றி ஊரில் நம்மில் எத்தனை பேருக்கு தெரியும், ஆனால் இங்கு FLAX SEED என்றால் தெரியாதவர்கள் இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு கடந்த பலவருடங்களாக இதன் தேவை அதிகரித்து விட்டது. அதற்கு காரணம் எமது உணவுப் பழக்கவழக்கமும் அதனால் வரும் நோய்களுமே. சரி இப்போது அதன் பலனையும், பலத்தையும் எப்படி பெறலாம் என்று பார்ப்போம். இது ஏறத்தாழ எள்ளுப்போன்றது ஆனால் எள்ளை விட கொஞ்சம் பெரிதா இருக்கும். ஆளிவிதையில் இரண்டு வகை உண்டு ஒன்று மஞ்சள் நிறத்திலும். மற்றயது மண்ணிற நிறத்திலும் காணப்படும். மஞ்சள் ஆளிவிதையை விட மண்ணிறத்தில் உள்ள ஆளிவிதையில் ஒமேகா-3 இன்அளவு கூடுதலாக காணப்படுகிறது. இதில் மிகப்பெரிய ஊட்டச்சத்தான ஒமேகா-3 (OMEGA-3), என்ற நல்ல கொழுப்பும், அதிகூடிய நார்ச்சத்து, மேலும் வைட்டமின்- A,B, D, கல்சியம், மக்னீஷியம், புரதம் போன்ற பல சத்துக்கள் கொண்டது. எப்படி ஒரு பெரிய வசன நடைக்கு முற்றுப்புள்ளி வைப்போமோ அதபோல் பல நோய்களுக்கு இத்தநூண்டு சைஸில் இருக்கும் இந்த தானியமும் முற்றுப்புள்ளி வைக்கும். இது நோய் வருமுன், வரும்போது, வந்தபின் காப்போர், என முக்கியமாக எல்லா வயதினர்க்கும் உதவும் அரிய தானியம். மாமிசம் உண்ணாதவர்களுக்கு இந்த ஆளிவிதை மிக உன்னதமான உணவு. அதபோல் மாமிசம் உண்பவர்கள் salman, Tuna, Halibut போன்ற மீன் வகைகளில் இருந்து பெறலாம். ஆனாலும் கூட தினமும் அவற்றை உண்ணுவது என்பது சாத்தியமில்லை. அதனால் தேநீருக்கு சுவை சேர்க்க எப்படி சீனி போடுவீர்களோ அதேபோல் இரண்டு சீனிகரண்டியுடன் (Teaspoon) ஆளிவிதை மாவை உள்ளெடுக்க ஆரம்பிக்கலாம். [/size]

[size=5]இங்கு எல்லா வயதினரும் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினை உடற்பருமன், அடுத்து காலை வேளை அவசர உலகில் அடியெடுத்து வைக்கும்போது ஏற்படும் மலச்சிக்கல், சுவையான கொழுப்பு கூடிய உணவுகள் தரும் கெட்ட கொழுப்புகள், (சிலரிற்கு அவர்களது உடலே Bad cholesterol ஐ உருவாக்கும்), மார்பகப்புற்று நோய், PROSTATE CANCER , நீரழிவு நோய், ஞாபகமறதி, உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுதல், போன்றவற்றிற்கு உகந்தது. அன்றாட உணவில் அவரவர் வசதிக்கேற்ப எப்படி இதனை சேர்க்கலாம் என்பதை பார்ப்போம். FLAX SEED ஐ பல வடிவங்களில் வாங்கலாம், அதாவது (FLAX SEED POWDER, OIL, CAPSULES)ா, எண்ணை, மாத்திரை. தானியமாக உட்கொண்டால் அவை குடலினால் அவ்வளவாக உறிஞ்சப்படாமலே வெளியேறிவிடும். எண்ணை, மாத்திரைகளைவிட மாவாக உணவுடன் சேர்த்து உண்டால், குடலினால் பெருமளவு உறிஞ்சப்படும். இதற்கு சுலபமான வழி FLAX SEED ஐ கடையில் வாங்கி GRINDER இல் அரைத்து வைத்துக்கொள்ளுங்கள். FLAX SEED எந்தவிதமான சுவையும் இல்லாதது. ஆகவே தினமும் இரண்டு தேக்கரண்டி ஆளிவிதைமாவை தண்ணீரில் கரைத்தோ, அல்லது தயிர் (YOGURT), JUICE, அல்லது காலையில் உண்ணும் சீரியல்களில் போட்டு உண்ணலாம். மேலும் புட்டு, தோசை, இடியப்பம், இட்டலி, இப்படியான எமது உணவுவகைகள் சமைக்கும்போது இதனையும் சேர்த்து சமைக்கலாம். அத்துடன் CAKE, MUFFIN, போன்றவற்றுடன் கலந்து ஓவன் (OVEN) இல் வைத்தும் சமைத்து சாப்பிடலாம். முக்கியமாக ஆளிமாவை உண்ணும்போது கூடவே நன்றாக தண்ணீர் குடிக்கவேண்டும். இது சமிபாட்டின் வேகத்தை கூட்டும். எந்த விடயமாக இருந்தாலும் தினமும் தொடர்ந்து செய்தால்தான் அதன் பலனை முழுமையாக அனுபவிக்கமுடியும். நாம் மட்டுமல்ல எமது பிள்ளைகளுக்கும் இதன் பயனை எடுத்துகூறி அவர்களையும் ஆரோக்கியமான பிரஜைகளாக வாழவைப்போம். [/size]

[size=5]“இளைத்தவன் எள்ளு விதைப்பான் கொழுத்தவன் கொள்ளுவிதைப்பான் [/size]

[size=5]இந்த பழமொழியை மாற்றி “இளைத்தாலும் கொழுத்தாலும் ஆளியை உண்டு ஆரோக்கியமாக வாழ்வோம். [/size]

Edited by arjun

[size=4]மிகவும் பயனுள்ள ஆரோக்கியம் தரும் பதிவு.

வீட்டில் பாண் செய்பவர்கள் இதையும், ஆளி விதைகளையும், சேர்க்கலாம் [/size]

  • கருத்துக்கள உறவுகள்

544230.jpg

எங்களடைய உணவிலும் எள் கலந்து தயாரிக்கும் உணவுகளில் எள்ளிற்குப்பதிலாக இதனைப்பாவிக்கலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=1]

இணைப்புக்கு மிக்க நன்றி [/size]

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அரிய தகவலுக்கு நன்றி.

  • தொடங்கியவர்

costco இல் அரைத்து அந்தமாதிரி pack பண்ணி விற்கின்றார்கள் .காலையில் தினமும் ஒரு கரண்டி சாப்பிட்டு உடம்பில் வித்தியாசத்தை உணர்ந்து வருகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

Smacks சாப்பிடும்போது இதையும் கொஞ்சம் சேர்த்து சாப்பிடுவது வழமை

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

2288281-427644-flax-seeds-with-flower.jpg

ஆளி விதையை... Lein sammen என்று ஜேர்மனில் சொல்வார்கள் என்று அகராதியில் குறிப்பிடப் பட்டுள்ளது.

நாளை கடையில்... இது விற்கிறார்களா... என்று தேடிப்பார்க்க வேண்டும்.

தகவலுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

ஆளி விதை (FLAX SEED) -சங்கமி .

இதையும் ஒருநாளைக்கு ஒரு குறிப்பிட்ட வீதம் தான் சாப்பிட வேண்டும் என்று அறிந்திருக்கிறேன். எவ்வளவு என்று தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இதை நான் சாப்பிட்டதே இல்லை :o இனி மேல் சாப்பிட‌த் தொட‌ங்க வேண்டும்...இணைப்பிற்கு நன்றி அர்ஜீன் அண்ணா

தகவலுக்கு மிக்க நன்றி அர்ஜுன். நானும் உணவு உட்கொள்ளளில் இயலுமானவளவு மாற்றங்களை ஏற்படுத்தி உண்பதற்கு மிகவும் உகந்ததான உணவுவகைகளையும், பழக்கவழக்கங்களையுமே மிக நீண்டகாலமாக கடைப்பிடித்து வருகின்றேன். இதில் பிரதானமானதொன்று Walnut.

இங்கு நாம் கவனிக்கவேண்டிய முக்கியமானதொரு விடயம் என்ன என்றால் உதாரணத்திற்கு Walnut உணவில் சேர்ப்பதற்கு மிகச்சிறந்ததொரு விதை என்றாலும், அளவுக்கதிகமான கொழுப்பு, எண்ணைப்பண்டங்களை உட்கொள்ளும்போது Walnutஐயும் சேர்த்து உட்கொண்டால் பாதகமானவிளைவுகள் தோன்றும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, அடிப்படையில் எப்படியான நல்ல உணவை உட்கொண்டாலும், நல்லதல்லாத உணவுகளை, உணவுப்பழக்கங்களை நாம் கைவிடாதவரை குறிப்பிடத்தக்களவு பயன் ஏதும் எமக்கு கிடைக்காது. பாலில் விஷம் கலந்தால் எப்படியான நிலமை ஏற்படுமோ அவ்வாறானதே நல்ல விடயங்களுடன், நல்லதல்லாத விடயங்களைக்கலப்பது என்று கூறலாம். எனவே, உடல் ஆரோக்கியத்தை முன்னேற்றுவதற்கு உங்கள் உணவுப்பழக்கவழக்கங்களையும் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக படிப்படியாக மாற்றியமையுங்கள். எனக்கு சமையல் கலையில் இதுவரை பெரிதாக ஆர்வம் ஏதும் இல்லை. ஆனால், எதை உண்பது எனும் கலையில் பேரார்வம் உண்டு. காரணம் எதை உண்கின்றோம் என்பது எமது தலைவிதியைத்தீர்மானிக்கின்றது. கூடுதலான அளவு பழங்கள், மரக்கறிவகைகளை எமது உணவில் சேர்க்கவேண்டும். போதியளவு நீர் அருந்த வேண்டும். Looking After Your Body என்று ஓர் சூப்பரான நூல் உள்ளது, வாசித்துப்பாருங்கள்.

கீழுள்ள படம் இணையத்தில் சுட்டது அல்ல. எனது வீட்டிலுள்ள ஆளிவிதை குடுவை. யாழில் இதுபற்றியறிந்தபின் கடந்த இரண்டு கிழமைகளாக நானும் தினமும் ஆளிவிதையை பயன்படுத்தி வருகின்றேன். காலையில் சிறிதளவு தயிர், சீரியலுடன் சேர்த்து உண்டு வருகின்றேன்.

25tyety.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2288281-427644-flax-seeds-with-flower.jpg

ஆளி விதையை... Lein sammen என்று ஜேர்மனில் சொல்வார்கள் என்று அகராதியில் குறிப்பிடப் பட்டுள்ளது.

நாளை கடையில்... இது விற்கிறார்களா... என்று தேடிப்பார்க்க வேண்டும்.

தகவலுக்கு நன்றி.

சிறித்தம்பி!உதெல்லாம் இவங்கள் ஜேர்மன்காரங்களின்ரை தவிட்டுபாணிலை அந்தமாதிரி சேர்த்திருப்பாங்கள்.ஊரிலை கொள்ளு எண்டுறதும் இதுதான்? :rolleyes:

Srithampi.jpg

வெள்ளைப்பாணை வாங்கியுண்டு வியாதிகளைத்தேடாமல் மண்ணிறமான அல்லது சற்று கறுப்பான முழுத்தானியங்கள் கலந்த பாணை வாங்கியுண்டால் அதில் உள்ள பல ஊட்டசத்துக்கள், கனியுப்புக்கள்/தாதுப்பொருட்களை பெற்று ஆரோக்கியமாக வாழலாம். பாண் வாங்கும்போது Whole Grain என்று எழுதியுள்ளதை பார்த்து வாங்கவேண்டும். Whole Grain பாண் காலையில் உண்பதற்கு சிறந்ததொரு உணவுப்பண்டம். நினைவு ஆற்றலுக்கு உதவும் B12ம் இவற்றில் உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.