Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தப்படும் - ஜனாதிபதியே தலைமை தாங்குவார்! - ரம்புக்கவெல்ல தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Hegeliya_rampuhala150SLnews.jpg

புலம்பெயர் தமிழ் மக்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் நடாத்தப்பட திட்டமிடப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகளுக்கு நாட்டின் ஜனாதிபதியே தலைமை தாங்குவார் என தெரிவிக்கப்படுகிறது. மிக நீண்ட காலமாக நிலவி வரும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கம், புலம் பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கும் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்கவெல்ல தெரிவித்துள்ளார். திட்டமிட்டவாறு புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டால் வெகு விரைவில் கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மிக நீண்ட காலமாக நிலவி வரும் நம்பிக்கையின்மையை களைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புக்கள் உருவாவதற்கு ஏதுவாக அமைந்த காரணிகள் தொடர்பில் புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் இன்னும் ஒரு தசாப்த காலத்தில் மீண்டும் யுத்தம் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.seithy.co...&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

எதோ நல்லது நடந்தா சரி

  • கருத்துக்கள உறவுகள்

பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் இன்னும் ஒரு தசாப்த காலத்தில் மீண்டும் யுத்தம் ஏற்படக் கூடிய அபாயம் காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையிலேயே இதை உணர்ந்திருந்தால்

வெளியில் வரவேண்டியதில்லை.

உள் நாட்டிலேயே தீர்வை வைக்கமுடியும்???

[size=4]கூட்டமைப்புடன் மட்டுமே சிங்களம் பேசவேண்டும் ![/size]

நாங்களும் நெல்லையானோடுதான் சேர வேணுமா? அல்லது காணாமல் போவிட்ட நெல்லையான்தான் அரசுடன் இந்த பேச்சு வார்த்தைகளை ஆரம்பிக்கிறாரா?

  • கருத்துக்கள உறவுகள்

இது எந்த சினிமா என்று சொன்னால் நாங்களும் படம் பார்க்க வசதியாக இருக்கும்..

டிஸ்கி:

புலம் பெயர்ந்த ஈழ தோழர்களுடன் பேசுவதற்கு இன்னும் சிங்களம் புதியதாக "டப்பா குழு " ஏதும் அமைக்கலையா..? அதற்கு உதவி செய்ய.. குப்பா குழு ஏதும் இல்லையா..? ரெல் ரெல் மீ... :icon_idea:

டிஸ்கிக்கு டிஸ்கி:

அந்த குழுவிற்குள் போனால் தான் 3050 வாக்கிலாவது நீங்க தீர்வை பெற்று கொள்ளமுடியும்.. அதாவது (சுதந்திரமாக சிறுநீர் கழிக்கும் உரிமை)...

சொல்லிடாருப்பா பெரிய பிளாசபீஸ்...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் காலத்தைகடத்தும் சிங்கள அரசின் கபடமான முயற்சிதான்.

சிறிலங்கா அரசு யாருடன் பேசப் போகிறது? சில அமைப்புக்களுடன் ரகசியப் பேச்சுக்கள் நடத்தப்பட்டதாகவும் ஒரு செய்தி வெளிவந்திருந்தது.

எமக்குள் ஆயிரம் பிளவுகள். சிறிலங்கா அரசு யாருடன் பேசுகிறதோ, அவர்களை மறுதரப்பு துரோகியாக்கி விடும். சிறிலங்கா அரசுடன் வெளிப்படையான பேச்சுக்களை நடத்துவது என்பது புலம்பெயர் தரப்புக்கு மிகவும் சங்கடமான விடயம்.

போர்க்குற்றவாளி என்று ஒருவரை சொல்லிக் கொண்டு அவருடன் பேசுவது முடியாத காரியம்.

பேச்சுவார்த்தைக்குப் போனால் நிறைய விடயங்களை நாம் இழக்க வேண்டி வரும். அதற்கு ஈடாக சிலவற்றை இலங்கையில் செய்து விட்டு பேச்சுவார்த்தைக்கு வந்தால், நாமும் அதுபற்றி பரிசீலிப்பது பிழையாக இருக்காது.

அப்படிப் பேசுகின்ற பொழுது கூட, போருடன் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களுடன் ஒரு மேசையில் அமராது தவிர்க்கின்ற சமார்த்தியம் புலம்பெயர் அமைப்புக்களுக்கு வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

Btf and gtf

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

முதலில்

புலம் பெயர் தமிழருடன் பேச என்ன இருக்கு சிறிலங்காவிடம்???

தாயகத்தில் உள்ளோர் கேட்டதையெல்லாம் கொடுத்தும் புலம் பெயர்ந்தோர் ஏற்க மறுத்து அதனால் அவர்களையும் சமாதானப்படுத்தணும் என்பது போலிருக்கு..... :( :( :(

புலம் பெயர்ந்தோர் தாயகத்திலிலுள்ளவர்களுடன் பேச சிறு அழுத்தம் கொடுக்கமுடியுமே அன்றி.........

- அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்களில் நேரடியாக பங்குபற்றாத புலம்பெயர் தமிழர்களுக்கு பொது மன்னிப்பு (இதன் விளக்கம் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்தார், பரப்புரை செய்தார் என்னும் குற்றச்சாட்டில் எந்த ஒரு புலம்பெயர் தமிழரையும் கைது செய்யவோ விசாரிக்கவோ கூடாது என்பது)

- புலம்பெயர் மக்களின் தாயகத்து காணிப் பிரச்சனைகளுக்கு தீர்வு

- முதலீடுகளுக்கு பாதுகாப்பு

- புலம்பெயர் மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை

- புலம்பெயர் மக்களுக்கு என பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம்

இப்படி நிறைய நாம் பேசக் கூடிய விடயங்கள் இருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

கிழிஞ்சுது போ.......

மரத்தை சுற்றி வளர்ந்த செடியில் விலகிப்போனதுக்கு உரிமையா????

யாரோ கேட்டது போல

சிரிச்சுப்போட்டுத்தான் எழுதுவீங்களோ................??? :lol:

ஒரு மில்லியன் இலங்கையர்களை புறந்தள்ளி விட்டு சிறிலங்கா அரசால் செல்ல முடியாது. தாயகத்தை புறந்தள்ளி விட்டு நாமும் இருக்க முடியாது. ஏதோ ஒரு புள்ளியில் சந்திக்கத்தான் வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மை இருக்கட்டும்

அது சிங்களத்திடம் எடுபடுமா????

எடுபடுவது போன்று எங்களின் நகர்வு இருக்க வேண்டும். புலம்பெயர் மக்களுடன் உத்தியோகபூர்வப் பேச்சு என்பது சிறிலங்கா அரசு மேற்கொண்டிருக்கின்ற ஒரு பெரும் நடவடிக்கை.

போர்க்குற்றசாட்டில் இருந்து விடுபடல், புலம்பெயர் மக்களிடம் பிளவுகளை அதிகரித்தல் போன்ற பல திட்டங்களோடு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

வழமை போன்று தமிழர்கள் இதிலும் அனைத்தையும் பறி கொடுத்து ஏமாறாது, மிகச் சமார்த்தியமாக இதை அணுக வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

- அப்பாவி மக்கள் மீதான தாக்குதல்களில் நேரடியாக பங்குபற்றாத புலம்பெயர் தமிழர்களுக்கு பொது மன்னிப்பு (இதன் விளக்கம் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரித்தார், பரப்புரை செய்தார் என்னும் குற்றச்சாட்டில் எந்த ஒரு புலம்பெயர் தமிழரையும் கைது செய்யவோ விசாரிக்கவோ கூடாது என்பது)

- புலம்பெயர் மக்களின் தாயகத்து காணிப் பிரச்சனைகளுக்கு தீர்வு

- முதலீடுகளுக்கு பாதுகாப்பு

- புலம்பெயர் மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை

- புலம்பெயர் மக்களுக்கு என பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம்

இப்படி நிறைய நாம் பேசக் கூடிய விடயங்கள் இருக்கின்றன.

இதென்னமோ நீங்கள்தான் சிங்களவனுக்கு புதிது புதுதாக சொல்லி கொடுக்கிறமாதிரி இருக்கின்றது சபேசன் :D

  • கருத்துக்கள உறவுகள்

இது சர்வதேசத்தை ஏமாற்ற முன்னெடுக்கப்படும் நடவடிக்கை. தனக்கு வேண்டியவர்கள் சிலரை கொழும்புக்கு அழைத்துப் பேசி.. ஐக்கிய இலங்கைக்குள்.. சிங்கள பெளத்த சிறீலங்காவிற்குள்.. மூவினத்தினரும்.. சமாதான செளயன்னிய.. செளபாக்கிய வாழ்வு என்று ஒரு அறிக்கை தயாரிக்க நடக்கும் முஸ்தீபு..!

இதன் முன்னோடியாகவே கே பி அப்பழுக்கற்றவர் என்ற அறிவிப்பு..! எத்தனையோ அப்பாவி போராளிகளையும் பொதுமக்களையும் சுட்டு கொன்றும் காணாமல் போகடிக்கவும் செய்த சிங்களப் பயங்கரவாத அரசு.. எத்தனையோ ஆயிரம் அரசியல் கைதிகளை ஆண்டுக் கணக்காக சிறையில் வைத்து வதைக்கும் ஒரு அரசு.. கே பி யை அப்பழுக்கற்றவர் என்று விடுவிக்கிறது என்றால்.. அதன் மூலம் அது தனது இராஜதந்திரக் காய் நகர்த்தலைச் செய்கிறது என்பதே அர்த்தம்.

கேபிக்கு அளித்த அதே பொதுமன்னிப்பை ஏன் இதர போராளிகளுக்கு அளிக்க முடியாது..???!

இது புலம்பெயர் மக்களை நோக்கி நடாத்தப்படும் சிங்கள அரசின் சதுரங்கத்தில் இன்னொரு காய் நகர்த்தல். இதற்கு முகம் கொடுக்க வேண்டின் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து.. ஒரு பொதுமைப்பாடான அரசியல்.. பொருண்மிய.. சமூக இலக்குக் கொண்ட தமிழ் மக்கள் நலன் பேணும் இராஜதந்திர அமைப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதன் மூலமே எமது ஒற்றுமைப்பட்ட குரலை சர்வதேச அரங்கில் பலப்படுத்தி நிற்பதோடு எதிரிகளின் சதிகளையும் முறியடிக்க முடியும்.

மற்றும் படி.. இதில் யார் யார் விலைபோகிறார்களோ..????! என்னென்ன துரோகங்கள் அரங்கேறப் போகுதோ யார் அறிவார்..!!

Edited by nedukkalapoovan

ஸ்ரீலங்கா போருக்குபின் விட்ட கோமாளித்தனங்கள் ஒன்றும் இதுவரையில் எடுபடவில்லை.

1.சிறிலங்காவால் சீனாவை வெளிவிட முடியாது.

2.சிறிலங்காவால் ஐ.நா. பிரேரணையில் காட்டபட்டிருக்கும் குற்றங்களில் இருந்து விடுபட முடியாது.

3.சிறிலங்காவால் இப்போது இந்தியாவை கையாள்வது முன்னர் மாதிரி இலகுவகாவில்லை.

4.மெனிக் பாமை மூட சொல்லி சர்வதேசம் அழுத்தம் கொடுத்தபடியால் சனத்தை சூரிய புரம் காட்டுக்குள் போட்டதை சர்வதேசம் கவனித்தது.

5. 13ம் திருத்ததை அரசாங்கம் கட்டயம் மீளப்பெரும்( கடைசி கோட்டில் ஒரு வழக்கு போட்டுவிட்டு நீதிபதியை மிரட்டினால் அவர் பாளுமன்ற்த்தை சட்டத்தை மீளப்பெறுவார்). இதன் தாகத்தை பல வெளிநாடுகள் உணரப்போகின்றன.

அரசு நிறைய காசை வெளியே அனுப்புவதால் பலர் தாம் புலம் பெயர் பிரதிநிதிகள் என்று பலதை முயல்கின்றார்கள்.

சிலர் தமது எரியும் வீட்டில் நெருப்பெடுத்து புகையிலை பற்றும் கீழ்த்தரங்களை சந்தர்ப்பம் வரும் போது வெளிவிடுகிறார்கள். 50,000-60,000 போராளிகள் போய்விட்டார்கள். அவர்களில் சிலர் தானும் தங்களை நினத்தும் பார்த்திருக்கார்கள். ஆனால் கதற கதற 146,000ம் உயிர் இந்த உலகை விட்டு பறிக்கப்பட்டது. அந்த சுறாவை போட்டு புலம் பெயர் மக்களுக்கு, வாக்குரிமை, முதலீடுகளுக்கு பாதுகாப்பு வாக்குறுதி என்ற இறால் பிடிக்கலாம் என்று ஆலோசனை சொல்கிறார்கள். அதை வைத்து நாட்டை விட்டு ஓடிய கோமாளிகளுக்கு வாக்குரிமை பெறலாம் என்று எண்ணம் வைக்கிறார்கள். சரியாக ஜி.ஜி.பொன்னம்பலம் , கக்கீம் போன்றவர்களுக்கு மந்திரிப்பதவி கொடுத்து தமிழரை காட்டிக்கொடுக்க வைத்து மாதிரி, இங்கே சிலர் புலம் பெயர் மக்களுக்கு வாக்குரிமையை வாங்கி கொண்டு இலங்கை அரசுக்கு ஒத்தாசை செய்யுங்கள் என்று கூச்ச நாச்ச மின்றி சொல்கிறார்கள். இவர்கள் இந்த புலம் பெயர்ந்திருக்கும் சில கோமாளிகளான இழகிய இரும்மை எப்படி மெல்லிய அடியோடு வளைப்பது என்பதில் கலைதேறியவர்களாக இருக்கிறார்கள்.

சிறிலங்காவின் உதவிகள் தவிக்கிற வேகத்தை பார்க்க நொவெம்பரில் வரும் அறிக்கையில் இந்தியாவும் ஏதாவது கூடாதுதான் சொல்லியிருக்கோ என்று எனக்கு இப்போது சந்தேகமாக இருக்கு. இது வரையில் அப்படி ஒன்றை நான்எதிர்பார்க்கவில்லை. ஆனால் நொவெம்பர் அறிக்கையில் இந்தியா இலங்கைக்கு எதிராக ஏதாவது கொடுத்திருந்தால் இனி நான் ஆச்சரியப்பட மாட்டேன்.

எங்களுக்கு உரிமை கிடைத்தால் புலம் பெயர் தமிழரின் வாக்குரிமை, முதலீடுகள், கானிநிலம் போன்றவற்றை அந்த தமிழ் பகுதி அரசாங்கம் கவனிக்கும். இதற்கு ஏன் மகிந்த காலை நக்குவான்?

ஆனால் கிட்லரின் கூட்டம் இன்றுவரையும் தேடப்படுவது போல் ஓரிருவர் மனம் வைத்தால் மிகிந்தாவும், சகோதரங்களும் தப்புவது கஸ்டம். இது கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரம்.

Edited by மல்லையூரான்

தாயகத் தமிழர்களுக்கு சகல உரிமைகளையும் கொடுத்தால் மற்றவர்களுடன் பேசவேண்டிய அவசியமில்லை. வெளியில் எரிவது தானாகவே அணைந்து போகும்.

சிலது ஒத்துப் போனாலும் வேற வழியில் பூதம் கிளம்பும்.

  • கருத்துக்கள உறவுகள்

Gtf and btf தான் போவினம் :D

Edited by SUNDHAL

[size=5]புலம்பெயர்ந்தோரின் உதவியை பெறுவதற்கு கேபி உதவுவார்: அமைச்சர் கெஹெலிய[/size]

[size=4]புலம்பெயர் தமிழர்களுடனான பேச்சுவார்த்தை முன்னேற்றமடைந்து வருவதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து கூறுகையில்...

நெர்டோ அமைப்பினை நடத்திவருகின்ற குமரன் பத்மநாதன் (கேபி) தலைமையினான குழுவினரே புலம்பெயர் தமிழருக்கும் அரசுக்குமிடையிலான பேச்சுவார்த்தையினை முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை அரசுமீதான அவநம்பிக்கை மற்றும் தவறான சிந்தனைகளைக் கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழர்களின் மனநிலையை மாற்றுவதற்கு ஒரு மூலோபாயமாக கேபியை அரசு பயன்படுத்தி வருகிறது. கேபி விடயத்தினை நாங்கள் நேர்வழியில் பயன்படுத்த வேண்டும். புலம்பெயர் தமிழர்களையும் வேறு முதலீட்டாளர்களையும் உரியமுறையில் அணுகுவதற்கு கேபியை நாங்கள் பயன்படுத்துகின்றோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் எச்சங்களால் மேற்கொள்ளக்கூடிய நிழல் யுத்தத்தினை முடிவுக்கு கொண்டவருவதற்கு கேபி போன்றவர்களின் உதவி தேவைப்படுகிறது. இவ்விடயம் நாட்டுக்கு நிச்சயமாக நன்மையையே தரும். முன்னாள் எல்.ரி.ரி.ஈ., ஜே.வி.பி. உறுப்பினர்களின் தற்போதையை நிலையினை யாரும் மறந்துவிட வேண்டாம். அதுபோல் கோபியின் நிலையும் மாறும்.

கேபிக்கு நாங்கள் முழு சுதந்திரம் வழங்கவில்லை. ஒரு வரையறைக்குள் அவரது நடவடிக்கைகள் அமையும் என்பதையும் மறந்துவிட வேண்டாம். வடக்கு, கிழக்கில் பாரிய மீள் கட்டுமாணங்களை அவசரமாக மேற்கொள்ள வேண்டிய தேவை இருப்பதால், புலம்பெயர்ந்தோரின் உதவிகளைப் பெறுவதற்கு கேபி போன்றவர்களின் தயவு அளப்பரியது என்றும் அமைச்சர் கெஹெலிய மேலும் குறிப்பிட்டார்.[/size]

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/50869-2012-10-20-07-53-20.html

Gtf and btf தான் போவினம் :D

யார் சொன்னது ? இது புலம் பெயர் அமைப்புகளையும் மக்களையும் குழப்பும் செய்தி

Edited by narathar

[size=5]சிங்கள நேர்காணல் - GTF [/size]

[size=5]http://www.bbc.co.uk/sinhala/multimedia/2012/04/000001_sunday_prog.shtml[/size]

[size=3]

[size=5]For people who may not understand the interview which was in Sinhala, a few salient points raised in the BBC Sinhala Radio news interview are listed below:[/size][/size]

  • [size=5]As far as we know there is no credible Diaspora organisation that is currently in any talks with the Government of Sri Lanka[/size]
  • [size=5]If Rajapaksa wanted to resolve the Tamil National Question he could have easily done so by talking with the elected members of the Tamil people the TNA[/size]
  • [size=5]Nearly 4 years have passed but no genuine efforts have been made by Rajapaksa government in resolving the Tamil National Question[/size]
  • [size=5]We feel that because of the UN processes that are forthcoming where Rajapaksa government will be answerable to the international community is why he is now coming up with these suggestions of talks in such a rush[/size]
  • [size=5]If Rajapaksa regime thinks that the Diaspora will compromise on the demand for justice through an independent international investigation into the allegations of crimes committed at the end of the war, then he is wrong. We will not barter the justice process to any political negotiations. Over 40,000 of our people were killed, we want to know the truth of what happened and how they perished[/size]
  • [size=5]Unless the current government recognises that just as there is a Sinhala Nation that there is a Tamil Nation too in that island, there will be little point in talking[/size]
  • [size=5]Regarding working with KP in Sri Lanka, if someone is doing some good to our people on the ground, what does it matter who does it, we welcome any help. However we certainly are not working with KP. KP is a captured man imprisoned by the Rajapaksa regime.[/size]

சிறிலங்கா அரசு யாருடன் பேசப் போகிறது? சில அமைப்புக்களுடன் ரகசியப் பேச்சுக்கள் நடத்தப்பட்டதாகவும் ஒரு செய்தி வெளிவந்திருந்தது.

இந்தாள் தரம் கெட்ட, கீழ்த்தர, வதந்திகளைத்தான் யாழில் பரப்புகிறது. சும்மா தொடர்ந்து சறடு விடாமல், கதைபவர்களின் பெயர்களையும், ரகசிய பேச்சுகள் போட்ட தளத்தையும் வெளியிடவேண்டும்.

சுரேன் சுரேந்திரனுக்கு, அவரின் கூற்றை மறுத்து, இவர்களால் யாழில் ஒரு திறந்த மடல் வரையமுடியுமா?

[size=4][size=3][size=5]For people who may not understand the interview which was in Sinhala, a few salient points raised in the BBC Sinhala Radio news interview are listed below:[/size][/size][/size]

  • [size=5]As far as we know there is no credible Diaspora organisation that is currently in any talks with the Government of Sri Lanka[/size]



Edited by மல்லையூரான்

[size=2]Minister Rambukwella also announced that reconciliation talks with the Tamil diaspora, through the good offices of ‘KP’ would begin soon. Though Rambukwella is the official spokesperson, his remarks are sometimes not taken seriously and dismissed by those at the highest levels of the government as mere rhetoric. However, he still speaks for the government and if he is right in this instance, a dialogue with the Tamil Diaspora to work out a political package to address Tamil grievances is being held using a man who is most wanted for the murder of late Indian Prime Minister, Rajiv Gandhi. One need hardly say if it would be viewed as a friendly gesture by the Indian government, though the Indian government is yet to react to these developments.[/size]

[size=2]Developments with regard to Sri Lanka-India bilateral relations in the recent weeks make clear that ties are at an almost free-fall decline.[/size]

[size=2]- The Sunday Times. SL[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.