Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவைப் போல் இலங்கைக்கு உதவுவதற்கு சீனாவும் தயார்: சீனத்தூதுவர் தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

China-flag2011-150.jpg

இந்தியா எவ்வாறு இலங்கைக்கு உதவி செய்கின்றதோ அதேபோன்று சீன அரசாங்கமும் உதவிகளை வழங்குவதற்கு தயாராகவே உள்ளது என யாழ்ப்பாணத்திற்கு நேற்று வருகைதந்த சீனத்தூதுவர் வூ ஜியாங்கோ தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட சீனத்தூதுவர் தலைமையிலான குழுவினரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

இலங்கைக்கு மிக அண்மையாகவே இந்தியா உள்ளது. இது புவியியல் ரீதியானது என்பதுடன் வட பகுதி மக்களுக்கும் இந்தியாவிற்கும் இடையே நெருக்கமான உறவுகளையும் தோற்றுவிக்கின்றது. அத்தகைய உறவில் இந்தியாவின் உதவி வடபகுதி மக்களுக்குத் தேவையான ஒன்றாகவேயுள்ளது. இதனை நாம் வரவேற்கின்றோம். இத்தகைய உதவிகளை நாமும் செய்வதற்கு தயாராகவே உள்ளோம்.

தற்பொழுது எமது நாட்டின் உதவியுடன் வடபகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களைப் பார்வையிடுவதற்காகவே நாம் இன்று இங்கு வந்துள்ளோம். தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எம்மைச் சந்தித்து இனப்பிரச்சினை தொடர்பாகத் தெரிவித்துள்ளதுடன் எமது நாட்டின் உதவியையும் கோரியுள்ளனர். இது ஒரு நட்பு ரீதியான சந்திப்பாகும் என்றார்.

இதேவேளை யாழ்.குடாநாட்டிற்கு வருகை தந்த சீனத்தூதுவர் யாழ்.பொது நூலகப் பயன்பாட்டிற்கென 10 இலட்சம் ரூபா காசோலையை யாழ்.மாநகர சபை முதல்வரிடம் கையளித்தார். யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட சீனாவிற்கான இலங்கைத் தூதுவர் வூ ஜியாங்கோ தலைமையிலான குழுவினர், நேற்றுக் காலை 9 மணியளவில் மாநகர சபைக்கு வருகை தந்த யாழ்.மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையிலான குழுவினரைச் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இக் கலந்துரையாடலின் போது முதல்வர், சீன அரசாங்கம் யாழ்.குடாநாட்டிற்கு செய்துவரும் உதவிகளுக்கு நன்றி தெரிவித்ததுடன் தொழில்நுட்பக் கல்வியை விருத்தி செய்வதற்கு உதவிகளை செய்து தரவேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தற்போது அதிலிருந்து மீண்டு வருகின்றனர் எனவும் இவ்வேளையில் நவீன தொழில்நுட்பத்தில் மாணவர்கள் முன்னேறுவதற்கு ஏற்ற உதவிகளைச் செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதன் பின்னர் யாழ். பொதுநூலகத்தைப் பார்வையிட்ட சீனத்தூதுவர் மற்றும் குழுவினர் யாழ். பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் வைத்து யாழ். மாநகர சபை முதல்வர், பொதுநூலக நூலகர் ஆகியோரிடம் 10 இலட்சம் ரூபா காசோலையைக் கையளித்தார்.

யாழ். வந்த சீனத்தூதுவர் அடங்கிய குழுவினருக்கு சிவில் உடையில் இராணுவத்தினர் பாதுகாப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.co...&language=tamil

  • Replies 50
  • Views 3.1k
  • Created
  • Last Reply

இந்தியா எவ்வாறு இலங்கைக்கு உதவி செய்கின்றதோ அதேபோன்று சீன அரசாங்கமும் உதவிகளை வழங்குவதற்கு தயாராகவே உள்ளது என யாழ்ப்பாணத்திற்கு நேற்று வருகைதந்த சீனத்தூதுவர் வூ ஜியாங்கோ தெரிவித்தார்.

சீனா கொடுக்குகட்டி கொண்டு வெளிகிட்டு நிற்கிறது. ராணுவ முகாம் கட்ட வரத்தக்க வடபகுதி மக்களின் எதிர்ப்புக்களை தாஜா பண்ண நினைக்கிறது. ஏற்கனவே வடபகுதி ரோட்டுகளை தான் தான் போட்டேன் என்கிறது. பூநகரி விமானத்தளத்தில் ஆரம்பிக்கலாம்.

சிவசங்கர் மேனனையும்,கிருஸ்ணாவையும் (நாரயணையும்), இனி வடக்கிற்கு போகாமல் பார்த்துக்கொண்டால் சரி.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனின் அதே ராஐதந்திரம்

இந்தியாவுக்கு ஒரு முகம்

சிறீலங்காவுக்கு இன்னொரு முகம்

சீனாவின் இரண்டு மீன்பிடி கப்பல்களை இலங்கை அரசு ஒருதடவை பிடித்து வைத்திருந்து மிரட்டியிருந்தது. சீனாவிலேயே, இந்திய வள்ளக்காரரை(தமிழ்நாடு மீனவர்) சுடுமாப்போல் சுட போகிறார்களோ என்று நினத்து சீனாப்பத்திரிகைகள் இலங்கை எதிர்ப்பு காட்டித்தான் விடுவித்தவை.

இருந்தாலும் கூட்டமைப்பு தீர்வை தேடுவதில் ஆக்க பூர்வமாக செயல்ப்படுகிறது என்று இந்த புதிய தூதுவர் பயப்படாமல் பேசுகிறார்.

இதில் இரண்டில் ஒன்றைத்தான் கூறலாம்.

1. மேற்கு நாடுகளின் கடன்களில் சீனா 33 % -50% வீதத்தை கழித்து எழுதுவது வழக்கமாகிவிட்டது. இலங்கை விடையத்தில் 99%-100% வீதத்தை கழித்து எழுதத்தயாராகிவிட்டது.

2. திறமையானவர் என்று அனுப்பிவைக்க, அமெரிக்க தூதுவர் ரொபேட் பிளேக் இலங்கை சரித்திரம் தெரியாமல் மகிந்தாவிடம் நன்றாக மாட்டியமாதிரி, இவரும் இலங்கை சரித்திரத்தை படிக்காமல் தான் ராஜதந்திரத்தில் திறமைசாலி என்று நினைத்துகொண்டு பேசுகிறாரா தெரியாது.

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
262332_3629575864364_348585644_n.jpg

[size=5]இந்தியக் காட்டுமிராண்டிகள் தமிழின அழிப்பு செய்வது போல் இல்லாமல் உதவிகள் இருக்க வேண்டும் என்று அறியாமையில் இருக்கும் சீனத் தூதுவரை எச்சரிக்க வேண்டும். இல்லை என்றால் சீனாவும் ஒரு காட்டுமிராண்டிகளின் தேசம் என்று தமிழ் மக்கள் நம்பிவிடுவர்.[/size]

[size=4]இந்த வல்லரசுகளை (சீனா, இந்தியா) எமது தாயக நிலங்களின் கேந்திர முக்கியத்துவம் சார்பாக சிங்களத்தை மீறி முடிவுகளை எடுக்க வைப்பது எமக்கு ஒரு அரசியல் தீர்விற்கு வழி சமைக்கும். [/size]

"கியூபா மிசையில் கிறைசிஸ்" தான் இது. நாம் அழிந்தாலும் சிங்களவும் அதில் இந்த முறை சேர்ந்துதான் இருப்பான். சோவியத் ருஸ்சியா எந்த நாட்டிலும் ஒரு தீர்வையும் வைத்தது கிடையாது. சீனா அதை அறிந்திருக்கிறது.

Edited by மல்லையூரான்

[size=4]சீனாவின் இந்த செய்தி டெல்லியிலும் வாசிங்க்டனிலும் ஒருவித கொள்கை மாற்றத்தை கொண்டுவரும் எனில் அது வெற்றியே . [/size]

  • கருத்துக்கள உறவுகள்

சீனா தனது ஈழத் தமிழர்கள் தொடர்பான ராஜதந்திரத்தில் சில patch up வேலைகளைச் செய்யுது. போராட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே இன ஒடுக்குதல்களுக்கும் இனக்கொலைக்கும் ஆதரவு அளித்தபின்னர் போரின் பின்னர் ஐநாவில் இலங்கையின் இனக்கொலைகலை ஆதரித்த பின்னர் தமிழர் மத்தியில் இத்தகைய பூசி மெழுகும் வேலை சீனாவுக்கு அவசியமானதாக இருக்கிறது. அதுவும் முக்கியமாக 13ம் திருத்தச் சட்டம் தொடர்பாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் சிக்கல் உருவாகுவதாக செய்திகள் வெளிவரும் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் 2ம் தடவையாக இந்தியா இலங்கையை எதிர்க்குமென சொல்லப்படுகிற சூழலில் சூழலில் சீனா தனக்கும் வடபகுதியில் ஆள் அனி தேவை என கருதுவதில் வேறு சில அர்த்தங்கள் உள்ளது.

இந்தியாவுக்கும் மேற்குலத்துக்கும் வெளியிலே எமக்கு அரசியல் space இல்லை அந்த space சையும் அழித்துவிட நமது குருட்டு அதிதீவிரவாதிகளுக்கு சீனா களம் அமைத்துக் கொடுக்க்கிறது. நம் மத்தியில் உள்ள

சீனா ஆதரவாளர்களுக்கும் இந்திய விரோதிகளுக்கும் வெற்றிகரமான ஒரு களம் அமைக்கப் படுகிறது. அது ஒரு இராஜதந்திர ரீதியான முள்ளிவாய்க்காலுக்கே நம்மை இட்டுச் செல்லும்.

Edited by poet

சீன இந்திய முரண்பாடு தான் எமது ஆடுகளம். யார் எமது சுய நிர்ணய உரிமையை அ கீகரிகிறார்களோ அவர்களை நாங்கள் ஆதரிப் ம். இதில் இந்தியாவின் நிரந்தர அடிமைகளாக இருக்க ண்டும் என்பது எத்தகைய குருட்டு நம்பிக்கை? இந்த அரசியற் குருடர்களின் சொற்கள் மக்களிடம் இனி எடு படப் போவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்

சீனா தொடர்பாக நமக்கு எந்தவொரு அரசியல் இராசதந்திர space சும் இல்லை. இருந்ததும் இல்லை. சீனா தெளிவாக இலங்கையை ஆதரித்து நிற்க்கும் நாடு. இது வரலாறு. இதுபற்றிய தெளிவுடன் அனாவசியமாக புதிய இராசதந்திர சிக்கல்களை உருவாக்காமல் சம்பந்தர் சரியாகவே சீனாவைக் கையாளுகிறார். புலம்பெயர்ந்த நம்முடைய அணுகுமுறைகள் தமிழர் நலனுக்கு பாதகமாக இருந்தால் நச்மது பங்களிப்பு இல்லாமலே காரியங்கள் நடைபெறும். ஆனால் நமது வலுவும் அழுத்தங்களும் சார்பாக இருந்தால் வரலாறு வேகமாக முன்ன்நகரும் என்பதில் சந்தேகமில்லை.

சீனாவுக்கு இலங்கை முக்கியம். இந்தியாவுக்கு இலங்கையைக் கையாலவும் தமிழ் நாட்டின் அழுத்தம் தொடர்பாகவும் வடகிழக்கு கலைன் கேந்திர முக்கியத்துவம் தொடர்பாகவும் நாம் அவசியம். இந்தியாவுக்குள்ல இந்த வாய்ப்புகளை அழிக்க சீனாவுக்கு பலமான இலங்கை அரசு முக்கியம். இதை நாம் புரிந்து கொள்ள வேணும்.

போரின் முன்னும் போரின் பின்னும் புலபெயர் தளத்தில் இருந்து சென்ற அழுத்தங்கள் எல்லாம் விடுதலைக்குச் சாதகமாக இருக்கவில்லை. ஜெயதேவன் பிரச்சினையில் இருந்து சமாதான பேச்சுவார்த்தையின்போது கடைசி அடிக்கு தீவிரமாக காசு சேர்த்தது வரை மேற்க்கு நாடுகளைக் கோபப்படுத்தியிருந்தது.

இன்று எல்லாம் இழந்த நிலையில் தீவிரமாக எழுதுவது செயல்படுவதல்ல சரியான திசையில் செயல்படுவது மட்டுமே மிக முக்கியம்..

இந்துசமுதிர ஆடுகளத்தில் நமக்கு இருக்கும் பலம் 1. இலங்கை அரசை check பண்ணும் நமது வல்லமை 2. இந்தியாவின் பாதுகாப்புக்கு அவசியமான நமது கடல். என்பவை மட்டுமே. பெரும் தோல்வியின் பின்னர் நமது கடல் இரானுவ ரீதியாக அபகரிக்கப்பட்டுள்ளது. தமிழர் கூட்டமைப்பு ஒருவாறு நமது இலங்கை அரசை check பண்ணும் வல்லமையை மீழ கட்டி எழுப்பி வருகிறது. புலம் பெயர்ந்த எங்கள் முயற்ச்சிகள் இராசதந்திரமின்மையால் பயன் தரவில்லை. இவற்ரைவிட பெரிதாக நம்மிடம் ஒன்றுமில்லை. நம்மைப் பற்றி பெரிதாக மதிப்பிட்டால் நாம் மீண்டும் மீண்டும் தோற்றுப் போவோம்.

தோற்று வல்லமைகளை எல்லாம் இழந்துள்ல நிலையில் மேற்க்கு நாடுகள் டெல்ஹி தொடர்பாக தமிழர் கூட்டமைப்பு சரியான நிலைபாட்டை எடுத்துள்ளமை ஒன்றுதான் எஞ்சியுள்ள எமது பலமாக இருக்கிறது. அதனால்தான் சீனாவுக்கும் putch up work அவசியப் படுகிறது. . தமிழர் கூட்டமைப்புடன் ஆரோக்கியமான விவாதங்களையும் நட்ப்பையும் வளர்த்தெடுப்பதும் கூட்டமைப்பின் நிலைபாட்டை ஆதரிப்பதுதான் இன்று புலம்பெயர்ந்து வாழும் எங்களது வரலாற்றுக் கடமையாக உள்ளது.

Edited by poet

புலிகள் இந்தியாவையும் meeற்குலகையும் நம்பி ஏமாற்றப்பட்டார்கள் கூட்டமைப்பும் அவ்வாறான நிலைக்குச செல்ல வேண்டியதில்லை. எமது பலம் என்பது இருகின்ற முரண்பாடுகளைக் கொண்டு எமக்கான இராசந்திர வழியை உருவாக்குவதே தவிர, குருட்டுத் தனமான பல்லவிகளைப் பாடிக் கொண்டிருப்பது அல்ல. எமக்கான வெளிகளை நாங்களே உருவாக்க வேண்டும்.

.

நாரதர்,

சீனா சிறிலங்காவை மீறி தமிழர்களுக்கு சாதகமாக நடந்து கொள்வதற்கான சாத்தியங்கள் ஏதாவது இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

உலகில் எந்த னாடும் தமது சுய னலங்களின் அடிப்படையிலேயே இயங்குகின்றன. சீனத் தூதுவர் கொழும்பில் இருந்து ஏன் யாழ் சென்றார்? கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை னடந்த பின் ஏன் சென்றார்? புலிகளை வன்னியில் முதன் முதலாகச் சந்த்தித்த இராஜதந்த்ரி ஏன் சீனத் தூதுவராக இருந்தார்? இலங்கை மிகவும் முக்கியமான புவிசார் கடட பாதையில் இருக்கிறது.

வடகிழக்கில் இருக்கும் மக்களின் பிரச்சினைகளைப் பாவித்து வருவது இந்தியாவும் மேற்குலகும் என்னும் னிலை மாறி இப்போது சீனாவும் களத்தில் இறங்கி இருக்கிறது.இந்த னிலையில் மதி யூகம் மிக்கவர்கள் என்ன செய்வார்கள்? எல்லோரிடமும் கதைப்பார்கள், யார் எவர எமக்குத் தேவையானதைத் தரத் தயராக இருக்கிறார்கள் என்பதை முன் வைத்து அவர்களுடன் பேசுவார்கள். னாம் ஒரே ஒரு னாட்டுடன் மட்டுமே பேசுவோம் எனில், மற்றவர் பார்ப்பார் இவர்கள் அந்தக் குறிப்பிட்ட னஆட்டின் ஆளுகைக்குள் மட்டுமே இருக்கிறார்கள் இவர்களுடன் பேசிப் பயன் இல்லை என்று னினைப்பார்கள்.

எனக்கு தட்டச்சு செய்வதில் பிரச்சினை இருக்கிறது. ஈ கலப்பையில் எப்படி na eduppathu?

இரண்டு சனத்தொகையை அதிகரிப்பதை தவிர வேறு எதற்கும் உதவாத வல்லரசுகளின் விளையாட்டில் சிக்கி சின்னாபின்னமாகும் ஈழ தமிழ் இனம்! இதை நம்பி கனவுகாணும் கூட்டமைப்பு ஆச்சரியத்தில் தமிழ் மக்கள்.

இந்தியாவுக்கும் மேற்குலத்துக்கும் வெளியிலே எமக்கு அரசியல் space இல்லை அந்த space சையும் அழித்துவிட நமது குருட்டு அதிதீவிரவாதிகளுக்கு சீனா களம் அமைத்துக் கொடுக்க்கிறது. நம் மத்தியில் உள்ள சீனா ஆதரவாளர்களுக்கும் இந்திய விரோதிகளுக்கும் வெற்றிகரமான ஒரு களம் அமைக்கப் படுகிறது. அது ஒரு இராஜதந்திர ரீதியான முள்ளிவாய்க்காலுக்கே நம்மை இட்டுச் செல்லும்.

[size=4]இந்த அவலம் தரக்கூடிய அரசியலை சிங்களம் உட்பட பல இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள் வெற்றிகரமாக செய்துவருகின்றன. [/size]

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய-மேற்குலக கூட்டு வலு கூடியுள்ளது.. தமிழ்தேசியக் கூட்டமைப்பு, புலம்பெயர் அமைப்புக்கள் இவர்களுக்கு வலு சேர்த்து வருகின்றனர்..! அதனால் சீனாவின் பக்கம் பலம் குறைவது இயல்பானதே.. இக்குறைபாட்டை தமிழரின் இன்னொரு மூலக்கூறு பூர்த்திசெய்ய வேண்டும்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வியாபாரத்திலும் அரசியலிலும் கடந்த காலத்தில் நம்பி ஏமார்ந்தோம் என்று சொல்வதில் எந்த அர்த்தமுமில்லை. நமது வியாபார அல்லது இராசதந்திரங்களில் என்ன தவறு நேர்ந்தது என மீழாய்வு செய்வது மட்டுமே அர்த்தமுள்ளது.

புலிகள் இந்தியாவையும் மேற்குலகையும் நம்பி ஏமாந்தார்கள் என்பது பிழையான கூற்று. இந்தியா மேற்குலகு தொடர்பான காரியங்கள் சிலவற்றில் ஈடுபட்டவன் என்கிற முறையில் என் அனுபவத்தில் இருந்து நான் பேச முடியும். வன்னியில் நான் என் கருத்துக்கள் எதையும் சொல்ல தயங்கியதில்லை. நான் வைத்த விவாதங்களை எதிர்கால போராட்டங்களின் நலன் கருதி மட்டுமே எழுதுகிறேன். அவை சுயபுரானமல்ல.

கடந்த காலத்தில் அரசற்ற அமைப்பான (non state player) நம்மிடம் நாம் அரசு அல்ல என்கிற புரிதலோ நாம் வளங்கலும் கேந்திர முக்கியத்துவமும் குறைந்த மிக சின்னம் சிறிய இனம் என்கிற புரிதலோ வலுப்பெற்றிருக்கவில்லை. இருந்திருந்தால் எங்கள் உண்மையான வளம் வல்லமைகளை உச்ச பட்ச்சம் கையாண்டு சாத்தியமான பேரங்களில் வெற்றிபெற்றிருக்கலாம். நாம் எம்மைப் பற்றி மிகை மதிப்பீடுகளை கொண்டிருந்தோம்.

நம் வளம் கேந்திர முக்கியத்துவம் வல்லமை தொடர்பாக போலியான மிகை மதிப்பீடுகள் வெளியில் இருந்து நம்மீது திணிக்கப் பட்டதாக ஒரு கருத்துள்ளது.வலுவான இராசத்ந்திரமோ அதன் அடிப்படையிலான தெரிவுகளுக்க்க்கூடாக மட்டுமே அரசியல் செய்தாகவேண்டுமென்கிற புரிதலோ நம் மத்தியில் பலகீனமானதாகவே இருந்தது. இலங்கை தொடர்பான சர்வதேச அரசியலையும் நமக்கிருந்த இராசதந்திர வாய்ப்புகளையும் இந்த விடயங்கலை நன்கு புரிந்து வைதிருந்த வே பாலகுமாரன் ஏனோ மெவுனமாக இருந்தார்.

இந்தியா மேற்கு நாடுகளுடனான பேரங்களில் நாம் வெற்றிபெறாதமைக்கு நமது மிகை மதிப்பீடும் இராசதந்த்ர பலகீனமும்கூட முக்கிய காரணங்கள்.

ஆனாலும் 2000 த்தின்பின் பாலா அண்னர் மிக தெளிவாக இருந்தார். பெரும் தோல்விச் சூழல் உருவாவதைத் தவிர்க்கவும் சாத்தியமான வெற்றிக்கு நம்மை இட்டுச் செல்லவும் அவர் முயன்றார். அதற்க்காக அவர் நம் பக்க தவறுகளைச் செம்மை செய்ய முயன்றார். துரதிஸ்ட்டவசமாக அது தொடர்பாக அவருக்கு ஆதரவு இருக்கவில்லை.

நமது எதிர்காலத்துக்கு இராசதந்திர ரீதியாக எதாவது படிப்பினை இருந்தால் அது 2000 - 2006 காலக்கட்ட பாலா அண்னரின் கடைசி முயற்ச்சிகலிலேயே உள்ளது. சம்பந்தர் இதனையே தொடர்கிறார் என நான் நம்புகிறேன்.புதிய சூழலை குளப்பி கானல் நீர்கலை உருவாக்கி எம்மை மீண்டும் மிகை மதிபீட்டுக்குள் தள்ளும் முயற்சியில் சீனா களம் இறங்கி இருக்கிறது.

நமக்கான இரசதந்திர வெளி மேறுலகு இந்தியா தொடர்பாக உள்ளது. அரசனை நம்பி புரிசனை மீண்டும் நாம் கைவிட்டு விடக்கூடாது என்பதுதான் என் கவலை.

Edited by poet

இந்தியாவை நாம் நம்ப வேண்டும் என்றால் ..............சில நிபந்தனைகள் ..................இந்திய படைகள் மீண்டும் இலங்கைக்குள் வரவேண்டும் ................இலங்கை இராணுவத்துடன் போரிடவேண்டும் ...............மீண்டும் தனது ஆழுமையை ,காட்ட வேண்டும் ...அதன்மூலம் சிறிலங்காவும் ,சீனாவும் கலங்கவேண்டும் .................தமிழர்கள் பக்கம் ஒரு வித பலம் உருவாக வேண்டும் .............அதன்மூலம் தமிழீழ போராட்டத்திற்கான சாதகமான நிலைமைகள் உருவாகவேண்டும் .............இந்தியன் இராணுவத்தை மீண்டும் நாம் வெளியேற்ற வேண்டும் ...............நாம் எம் மண்ணை ஆட்சி செய்ய வேண்டும் ...................மீண்டும் அமேரிக்கா நோர்வே மூலம் உள்வரவேண்டும் .........அனைத்தும் நாறவேண்டும்.................உலகம் மகிழ்ச்சியாய் இருக்க வேண்டும் .தமிழரை தவிர ................முடியுமா ???????????????????? :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen: :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் ஐயாவின் கருத்துக்களில் எமது பிரச்சினையை மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டுபோய் பொதுக்கும் முயற்சிகளே தெரிகின்றன..! :rolleyes:

அமெரிக்க தேர்தல் ஒபாமா பக்கம் சரிந்திருப்பது இன்னமும் முழுதாக அழிக்கப்படவில்லை. இது பலநாடுகளுக்கு தேர்தல் வெற்றியை முன்னிட்டு செய்ய வேண்டிய ஆயத்தங்களை செய்ய அறிக்கை விட்டிருக்கு. இதில் சீனாவும் இலங்கையும் உள்ளடங்குவர்.

ரோமினி வந்தால், இன்று காங்கிரஸ் இருக்கும் நிலையில், சுற்றி வளைக்காமல், ஈரானை நேராக அடிப்பார். இது, சில போர் நாட்கள் தவிர, இலங்கையை அதிகம் பாதிக்காது. ஒபாமா வந்தால் ஈரான் மீது ராஜதந்திர தாக்கு மிக கடுமையாக இருக்க போகிறது. இலங்கை கட்டாயம் நசுக்குண்பட போகிறது. அதில் ஒருபாகம் இலங்கை, சீனாவையும் கைவிட வேண்டும் என்று அமெரிக்கா அழுத்தும். மற்றைய கரையில் அமெரிக்காவின் புதிய சீனா எதிர்ப்பு கொள்கையும் மாறாது. (தேர்தலில், இரண்டாவது விவாத்தில் ரோமினி தனது கொள்கைகள் எல்லாவற்றையும் ஓபாமாவினது கொள்கைகளுக்கு சமன் செய்திருந்தார். இதனால் இவரும் அந்த மேடையில் சீனாவை தாக்கியிருந்தார். சீனா பதிலில், கொள்கைகளை முன்வைத்து பேசாமல், அமெரிக்க தலைவர்கள் சீனாவை தாக்கி பதவிக்கு வர முயல்வது அவமானகரமானது என்றிருந்தது. மனதில் கருதியோ இல்லையோ, ரோமினியும் சீனாவை தாக்கியிருந்தார். இது அமெரிக்க மக்கள் இனிமேலைய காலங்களில் குடியரசு கட்சியின் சீனா சார் கொள்கைகளை ஆதரிக்கமாட்டார்கள் என்பதை காட்டுகிறது.) இந்த முன்னேற்றம் இலங்கை, சீன உறவுகளில் சந்தேக ஆப்பை இறுக்க ஆரம்பித்திருக்கிறது.

கிளிஞ்சாலும் பட்டு என்று, பொருளாதார விழுக்காடு வந்தாலும், பிடிங்கி எடுக்க நினைத்தால், சீனாவை இலங்கையில் இருந்து பிடுங்க எடுக்கத்தக்க அமெரிக்காவின் அரசியல் பலத்தை சீனா குறைத்து மதிப்பிடாது.

சபுகஸ்கந்தை ஆலையை தற்காலிகமாக மூட வேண்டி வந்ததை இலங்கை சீனா, கேட்க சொல்லியிருக்கிறது. பதிலிற்கு, சீனா, கூட்டமைப்பு அரசியல் தீர்வை தேடிக்கொள்ள உண்மையாக இருக்கிறது என்று இலங்கையில் வைத்து சொல்லியிருக்கிறது. இது இலங்கையில், தீர்வை தள்ளி போட்டு, அதற்கிடையில் இலங்கையை தனி சிங்கள பௌத்த சர்வாதிகார நாடாக்க முயல்கிறது என்ற மனோகனேசனின் எதிர்வு கூறல்களை உண்மையாக்க, அரசுக்கு இருக்கும் ஒரே ஆயுதமான, "தெரிவு குழுவுக்கு கூட்டமைப்பு வராததால் தீர்வு இழுத்தடி படுகிறது" என்ற சாட்டை பொய்யாக்கிவிட்டது. (மேலும் இதில் நாம் ஒன்றை கவனிக்க வேண்டும், கூட்டமைப்பு தீர்வு காணும் முயற்சில் உண்மையாக இருக்கிறது என்பதை இலங்கையில் வைத்து முதன் முதலில் சொன்னது,சீனாவின் எதிரியான இந்தியாவின் BJP என்ற அரசியல் கட்சிதான்.)

அதாவது சீனா, இலங்கைக்கு சொல்லும் செய்தி, அமெரிக்காவின் விருப்படி, இலங்கையிலிருந்து தான், பிடுங்கி எடுக்கப்பட்டால் ஈழத்தில் காலூன்றுவேன் என்பதாகும்.

நிச்சயம் சீனாவுடன் புலம்பெயர் அமைப்புகள் ஒரு ராஜதந்திர தொடர்பு ஏற்படுத்த இடைவேளி பிறப்பிக்க பட்டிருக்கிறது. ஆனால், கேள்வி, இது செய்யத்தக்கதொன்றா என்பதே. பதில், "சீனா ஒரு மண் குதிரை". அது, இன்று இது வரை தனது நண்பனாக நடித்துவந்த சிங்களத்தையே, உடனேயே வீசியெறிந்து கை கழுவ தயாராகிவிட்டது. (இதை கோமாளி நாடானா இந்தியாவுடன் ஒப்பிட்டாலும் கூட,இந்தியா தனக்கு எவ்வளவு நொந்த பின்னர் கூட இலங்கையை கைவிடாமல் இருக்கிறது என்பதை அறியலாம்-இன்னம் கூட காங்கிரஸ் கூட்டமைப்பு சார்பாக வாய்திறந்து ஒரு வார்த்தை சொல்லவில்லை) இதையே சீனா, ஆபிரிக்க, மத்திய கிழக்கு நாடுகளிலும் செய்தது.

இதையேதான் நான் ஆரம்பம் தொடக்கம், சொல்வது, சீனாவை வெளியே போட்டு, மகிந்தாவை பதவி இறக்கி, சர்வதேசத்தை வைத்து தமிழருக்கு தீர்வை எற்படுத்துவது அமெரிக்காவுக்கு ஒன்றும் முதுகு முறிகிற வேலை அல்ல. அவர்கள் இதில் எதையும் இழக்கமாட்டார்கள். பதிலிற்கு இந்துசமுத்திரத்தில் காலூன்ற இடம்கிடைக்கிறது. ஆனால் மனம் வைக்க வேண்டும்.

இன்று சீனா நமக்கு ஆசைகாட்டும் பொன்மானக மாறி சிங்களத்தை மிரட்டுகிறது. ஆனால் நாம் பின்னால் ஓட முயன்றால் மாயமானாக மாறி சிங்களதுடன் போய்விடும்.

Edited by மல்லையூரான்

கவிஞர் ஐயாவின் கருத்துக்களில் எமது பிரச்சினையை மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டுபோய் பொதுக்கும் முயற்சிகளே தெரிகின்றன..! :rolleyes:

அவர் இவ்வளவு காலமும் நயீப் மயீத்தை முதலமைசாரக உழைத்தவர். அதில் வெற்றியீட்டிவிட்டார். ஆனால் இவர் மயீதுடன் போய் எதையும் பேச முடியாது.

இப்போதைய புதிய கோசம், கிழக்கு முஸ்லீம் மாகணம் என்பது.

துணிவிருந்தால்,அவர் இங்கே சொல்லும் இந்தியாவை வைத்து தீர்வு காணும் கருத்துக்களை நயீப் மயீத்துக்கு பகிரங்க மடல் போடட்டும். ******.

இப்போ இந்தியாவுக்குக்காக ஈட்டுகுத்தி முறிகிறார்.

[size=1]நியானி: தணிக்கை[/size]

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

மல்லை, நவீப் மஜ்ஜீத்தை முதல் அமைச்சராக உழைத்தவர் என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள்? இது அவதூறு அல்லவா?

நமது அரசியல் பாரம்பரியமாக செல்வநாயகம் போன்ற ஈழத் தமிழ் தலைவர்களும் பிரபாகரன் உட்பட போராளிகளும் மலையக தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்கள் அவர்கள் இலங்கை அரசின் பங்காளிகளக இருந்தபோதும் அவர்களுக்கு விதிவிலக்கு அழித்து வாழ்த்தி வரவேற்றிருக்கிறார்கள்.

தொண்டைமான் ஆறுமுகம் தொண்டைமான், எ.சி.எஸ்.கமீத், அஸ்ரப்,. றவ் ஹக்கீம் போன்றவர்கள் தொடர்பாக இத்தகைய அணுகுமுறைகளே கடந்த கால ஈழத் தமிழர் அரசியலிலும் கடைப் பிடிக்கப் பட்டு வந்தது. வன்னியிலும் இதன் தொடற்சியான அணுகுமுறையையே கடைப் பிடித்தார்கள். இது தொடர்பாக 1000 கனக்கான தகவல்கள் நூலகங்களிலும் இணையத்திலும் உள்ளது. இது உங்களுக்குத் தெரியாமல் இருக்க நியாமில்லை. அரசுடன் கூட்டுச் சேர்ந்த தமிழருக்கு இந்தச் சலுகை நிராகரிக்கப் பட்டது. எசிஎஸ் கமீத்துக்குக் வன்னியில் கிடைத்த சலுகை கதிர்காமருக்கு ஒருபோதும் கிடைக்கவில்லை. நானும் இலங்கை அரசின் அமைச்சின் உயர் பதவிகளின் அங்கமான தமிழர்களை அவர்களது வெற்றிகளை ஒருபோதும் வாழ்த்தியதில்லை. மேலும் நாம் கூட்டமைப்பு முஸ்லிம்காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவான நிலைபாடு எடுதிருந்தேன். மல்லை இதெல்லாம் உங்களுக்குத் தெரியாமல் இருக்க நியாயமில்லை. தெரிந்துகொண்டே என்மீது அவதூறு கூறாதீர்கள் என பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். .

இதுவே ஏனைய தமிழ் பேசும் இனங்கள் தொடர்பாக ஆரோக்கியமான இராச தந்திரமாகும். அதுவும் வடக்குக் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் எந்தவகையிலும் தவிர்க்க முடியாத எங்கள் பங்காளிகள். அரசுடன் இருந்த போதும் மலையக மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு விசேட சலுகை கொடுக்கும் எங்கள் தேர்ந்த மரபின் தொடற்ச்சியாகவே என் அணுகுமுறைகளும் அமைகின்றது.

தமிழர் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரசும் கூட்டரசாங்கம் அமைக்க வேண்டும் என என்னளவில் இராசதந்திர ரீதியாக எழுதியும் செயல்பட்டும் வந்தேன். நமது மரபுக்கு உட்பட்டு நஜீப் மஜீத் வென்றபோது அவரை வாழ்த்தினேன்.

மல்லை இராசதந்திரம் நீங்கள் நினைப்பதுபோல வலக்கறிஞர்களின் தர்க்க அடிப்படையில் பெறப்படுவதில்லை. பெரும்பாலான தமிழர்கள் அரசியலும் இராசதந்திரமும் தர்க்கம் என்றே நினைக்கின்றார்கள். இராசதந்திரம் நமது சமூக பொரௌளாதார வரலாற்ரில் இருந்தும் நமது அரசியல் வரலாற்றில் இருந்தும் நமது இனத்துவ அரசியல் ரீதியான சம்பிரதாயங்களில் இருந்தும் நமது கடந்தகால அரசியல் வெற்றி தோல்விகளின் படிப்பினைகளி; இருந்தும் வளர்த்தெடுக்கப் பட வேண்டியது என்பதை வலியுறுத்துகிறேன்.

மல்லை இனி என்னை வசைபாடாமல் கருத்தை கருத்தால் எதிர்கொள்ளுங்கள். அது யாழ் விவாதத்துக்கு மட்டுமல்ல நம் இனத்தின் மீட்ச்சிக்கும் பயன்படும்.

Edited by poet

புலிகள் மாறிலிகளைக் கொண்டிருந்தார்கள் என்று சொல்பவர், இந்தியாவைத் தவிர வேறொன்றும் இல்லை என்னும் மாறிலியைக் கொண்டிருப்பது முரணானது. எமது னலங்கள் மட்டுமே எமக்கு மாறிலிகள்.சீனாவோ ,இந்தியாவோ .அமெரிக்காவோ ஏன் சிறிலங்கா கூட இவற்றை அங்கீகரித்தால் எமக்கு அவர்கள் தான் னண்பர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.