Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெடிவிபத்தில் லெப் கேணல் வீரமணி வீரமரணம்

Featured Replies

லெப் கேணல் வீரமணி வீரமரணம்

களமுனைக் கட்டளைத்தளபதி வீரமணி தவறுதலான வெடிவிபத்தில் வீரச்சாவடைந்தார். நேற்று இச்சம்பவம் இடம்பெற்றது. தளபதி வீரமணியின் வித்துடல் கிளிநொச்சியில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு;ள்ளது. இவரது வித்துடலுக்கு அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் பொன் தியாகம் உட்பட பெருமளவு போராளிகளும் மக்களும் அஞ்சலி செலுத்தினர்.

(தலைப்பு திருத்தப்பட்டு மேலதிக செய்தியும் சங்கதி தளத்தில் இருந்து இணைக்கப்பட்டுள்ளது)

தளபதிக்கு கண்ணீருடனான வீரவணக்கங்கள்

:cry: :cry: :cry: :cry: :cry: :cry:

என்னப்பா நடக்குது?இப்படி விபத்துக்களைக் குறைக்க வேண்டாமா?பொன்னம்மான் முதல் , ஏன் மூத்த தளபதிகள் இப்படியான காரியங்களில் நேரடியாக ஈடுபடுகிறீர்கள்?

நீங்கள் வித்தியாசம் பார்ப்பது கிடயாது சரி, ஆனால் உங்கள் பணி விடுதலைப் போராட்டத்திற்கு நீண்ட நாட்களுக்கு வேணும் அல்லவா?

மனசு கேட்கவில்லை, வீர வணக்கங்கள்.

லெப் கேணல் வீரமணி அண்ணாவுக்கு எனது வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தடுத்து தளபதிகள் மரணம். கவலையாக இருக்கிறது.

லெப் கேணல் வீரமணிக்கு எனது வீரவணக்கங்கள்

லெப். கேணல்வீரமணிக்கு எனது கண்ணீர் அஞ்சலிகளைக் காணிக்கையாகச் செலுத்துகின்றேன்.

தளபதிக்கு வீர வணக்கங்கள்.

லெப் கேணல் வீரமணிக்கு எமது வீரவணக்கங்கள்

யாழ். மாவட்டம் குடாரப்புப் பகுதியில் புதன்கிழமை இடம்பெற்ற தவறுதலான வெடி விபத்தில் லெப்.கேணல் வீரமணி என்ற போராளி வீரச்சாவடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

.........

லெப். கேணல் வீரமணியின் வித்துடலுக்கு பெருமளவு மக்கள் வணக்கம் செலுத்தினர்

[வியாழக்கிழமை, 25 மே 2006, 20:03 ஈழம்]

லெப். கேணல் வீரமணியின் வித்துடல் இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி நினைவு மண்டபத்தில் வணக்கத்திற்காக வைக்கப்பட்டது.

தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் மக்கள் எனப் பெருமளவிலானோர் வணக்கம் செலுத்தியதை அடுத்து வித்துடல் அவருடைய இல்லத்தில் வணக்கத்திற்காக வைக்கப்பட்டுள்ளது.

வட்டக்கச்சியில் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கும், கண்டாவளையில் முற்பகல் 11 மணிக்கும்இ தொடர்ந்து விசுவமடுவிலும் பிற்பகல் 3 மணிக்கு புதுக்குடியிருப்பிலும் லெப். கேணல் வீரமணியின் வித்துடல் மக்கள் வணக்கதிற்காக வைக்கப்பட்டு வணக்க நிகழ்வுகள் நடைபெறும்.

புனித விதைகுழியில் நாளை மறுதினம் சனிக்கிழமை வித்துடல் விதைக்கப்படும்.

கேணல் வீரமணி 1990 ஆம் ஆண்டு மாங்குளம் சிறிலங்கா படைமுகாம் கைப்பற்றப்பட்ட தாக்குதல்,

1991 இல் வவுனியா சிறிலங்காப் படையினர் மீதான தாக்குதல்கள்,

ஆகாய கடல் வெளிச்சமர், மின்னல் எதிர்த்தாக்குதல், வன்னி விக்கிரம 1,2,3 எதிர் நடவடிக்கைகள்,

1992 இல் நடந்த கட்டைக்காடு சிறிலங்கா படைமுகாம் தகர்ப்பு தாக்குதல் வேவு நடவடிக்கை,

1993 இல் நடந்த தவளை நடவடிக்கைக்காக பூநகரி சிறிலங்கா படைத்தளம் மீதான வேவு நடவடிக்கைகள்,

1995 இல் நடந்த ராம்சக்தி எதிர்நடவடிக்கை,

திருகோணமலை படை முகாம்கள், காவல்துறை நிலையங்கள் மீதான தாக்குதல்கள்,

சூரியக்கதிர் எதிர் நடவடிக்கையில் வேவுப்பணி,

1997 கிளிநொச்சி படைமுகாம் மீதான வேவு நடவடிக்கைகள்,

மன்னார் படைமுகாம்கள் மீதான தாக்குதல்கள்,

ஜெயசிக்குறு எதிர்ச்சமர், வேவு நடவடிக்கைகள்,

1998 இல் நடந்த பரந்தன் கிளிநொச்சி படையினர் மீதான ஊடறுப்புத்தாக்குதல்,

ஓயாத அலைகள் - 02 நடவடிக்கை,

ஓயாத அலைகள் - 03 நடவடிக்கை,

1999 இல் வவுனியா படைநிலைகள் மீதான வேவு நடவடிக்கைகள் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளார்.

லெப். கேணல் வீரமணி ஒயாத அலைகள் - 03 இல் பரந்தன் படைத்தளம் கைப்பற்றப்பட்ட பகல் நேரத்தாக்குதலில் ஊடறுப்பு அணிப்பொறுப்பாளராக விளங்கினார்.

2000 ஆம் ஆண்டில் முகாவில் முன்னரங்க நிலைப்பொறுப்பாளராக செயற்பட்டார்.

ஆனையிறவுத் தளம் வெற்றிகொள்ளப்பட்ட தாக்குதலில் அணிகளின் பொறுப்பாளராக விளங்கினார். ஓயாத அலைகள் - 04 நடவடிக்கையிலும் முனைப்பாக வீரமணி செயற்பட்டார்.

அதன்பின் சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் சிறப்புத்தளபதியாக 2 ஆண்டுகள் பணியாற்றினார்.

தீச்சுவாலை முறியடிப்புச்சமரில் இவரின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.

இறுதியாக நாகர்கோவில் களமுனைத்தளபதியாக லெப். கேணல் வீரமணி செயற்பட்டு வந்தார்.

....

நன்றி புதினம்

தளபதி வீரமணிக்கு எமது வீரவணக்கங்கள்

லெப். கேணல் வீரமணி அவர்களுக்கு எமது வீரவணக்கம்.

¦Äô.§¸½ø.Å£ÃÁ½¢ìÌ ¸ñ½£÷ «ïºÄ¢..!

எனது வீரவணக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

லெப் கேணல் வீரமணிக்கு வீர வணக்கங்கள்!

( ஓயாத அலைகள் 3 இல் ஆனையிறவுச் சமர் தொடர்பாக இவர் கொடுத்த போட்டி வந்திருந்தபோது உண்மையில் இப்படியான தளபதிகளை எண்ணிப் பெருமிதம் அடைந்திருந்தோம். ஆனால் விதி இப்படிச் சதி செய்கின்றதே! :cry: :cry: :cry: )

லெப். கேணல் வீரமணி அவர்களுக்கு எமது வீரவணக்கம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லெப். கேணல் வீரமணி அவர்கட்கு எனது வீரஅஞ்சலி.

இளப்புகளும் பிரிவுகளும் தமிழனுக்கு ஒன்றும் புதிதல்ல

ஆனால் இளக்க எதுவும் இல்லா இன்னிலையில் மீண்டும்

ஒரு பிரிவு

துயர் நிறைந்த பூமியில் வரலாறாய் உன் வீரத்தை விட்டு செல்கிறாய் மாவீரா...!

உன் இலட்சியம் நிறைவேறும் நாள் வெகு தூரம் இல்லை.

தொடர்ச்சியான வெடிவிபத்துக்களின் பின்னால் - மிக பெரிய தயார் படுத்தலிருக்கும்!

வன்னிமீட்பு - நினைவுக்கு வருது!

தூயவன் குறிப்பிடதுபோல - ஓயாத அலைகள் -

தீச்சுவாலை - சாள்ஸ் அன்ரனி - தளபதிகளுள் ஒருவராய் -

தேசத்துக்காய் அவர் ஆற்றிய பணி ஏராளம்!

இன்னும் நிறைய நேசிக்கிறோம் - உங்களை!

வீரவணக்கங்கள்- சென்றுவாருங்கள்!

veeramani19gf.jpg

200605260014tb.jpg

200605260106uz.jpg

லெப். கேணல் வீரமணி அவர்களுக்கு எமது வீரவணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

தொடாந்தும் விதி..தமிழர்களுக்கு எதிராக தானட சதி செய்து கொண்டு இருக்கின்றது...இனியும் அனுபவம் உள்ள தளபதிகளை இழக்க முடியாது..தயவு செய்து தயவு செய்து தலைமைப்பீட்ம் தளபதிகளில் பாதுகாப்பில் அதிக அக்கரை எடுக்குமா?

வீரமணி அண்ணாக்கு வீரவணக்கங்கள்.. :cry: :cry:

  • கருத்துக்கள உறவுகள்

மக்களினதும் போராளிகளினதும் கண்ணீரஞ்சலியுடன் தளபதி வீரமணியின் வித்துடல் விதைக்கப்பட்டது

மக்களினதும் போராளிகளினதும் கண்ணீரஞ்சலியுடன் தளபதி வீரமணியின் உடல் விதைக்கப்பட்டது. தளபதி வீரமணிக்கு மக்களும் போராளிகளும் இன்ற கண்ணீர்மல்க இறுதிவிடை கொடுத்தனர் இன்று மாலை பெருந்திரளானோரின் இறுதி வணக்கத்துடனும் புூரண இராணுவ மரியாதையுடனும் அவரின் வித்துடல் கிளிநொச்சி மாவீரர் துயிலுமில்லத்தில்விதைக்கப்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.