Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இது ஒரு புதிய முயற்சி

Featured Replies

வடிவா கவிதை எழுத எனக்கும் தான். முடியாமல் இருக்கே :)

  • Replies 105
  • Views 37.6k
  • Created
  • Last Reply

எல்லாரும் வடிவா கவிதை எழுதுகினம். எனக்கும் எழுத ஆசைதான். முடியாமல் இருக்கே

கறுப்பிக்கு கவிதை எழுதத் தெரியாதா?

பொய் சொல்லத் தெரியுதே....... பொய்தானே!

  • கருத்துக்கள உறவுகள்

ஆதிவாசி வடிவா எழுதத்தெரியாது

எனக்கு தெரியும்

கவிதை

இது

கவிதை...

கா....கா..கா...

எனக்கு தெரியும்

கவிதை

இது

கவிதை...

கா....கா..கா...

:lol::D:D

girl_in_refugeecamp_744_624.jpg

வந்த கடலையும் காணோம்

இருந்த அம்மாவையும் காணோம்

சூனாமி.....

  • 5 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்க புதிய முயற்ச்சியை காணவில்லை? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

தூசு தட்டி போட்டிருக்கறீங்க சாத்திரி ஓடி வருவார்

சாத்து இல்லாட்டி என்ன நிரோ ஒரு படத்தைப்போட்டிட்டுத் தொடங்க வேண்டியதுதானே.

  • 1 month later...

எங்கே புதிய முயற்சியை காணவில்லை எம் போன்ற புதிய எழுத்தாளர்களுக்

இது தேவையான ஒரு முயற்சி என்று நினைக்கின்றேன் இது

மீண்டும் வருமா?

எங்கே புதிய முயற்சியை காணவில்லை எம் போன்ற புதிய எழுத்தாளர்களுக்

இது தேவையான ஒரு முயற்சி என்று நினைக்கின்றேன் இது

மீண்டும் வருமா?

அட களத்தில இப்படி ஒண்டிருக்கா..............? கஜந்தி நீங்களே ஒரு படத்தை போடுங்கள் :P

அட களத்தில இப்படி ஒண்டிருக்கா..............? கஜந்தி நீங்களே ஒரு படத்தை போடுங்கள் :P

நீங்கள் போட்டால் நான் முயற்சி செய்கின்றேன்

இந்த நக்கள் தானே கூடாது நண்பா

  • 4 weeks later...

நான் ஒரு படத்தை இணைக்கிறேன்.... (யாரும் கோவிக்க மாட்டீங்க தானே...?) எங்க பார்ப்போம் உங்க கற்பனைக் குதிரையை ஓடவிடுங்கள் பார்ப்போம்..... (களத்தை விட்டு ஓடாமல் இருந்தால் சரி)

makal.jpg

இதற்கு நான் ஒரு கவிதை தருகிறேன்... நீங்களும் எழுதுங்கள் ....

//

இன்று நீ

நாளை நானும்

உனக்குப் பக்கத்தில்

படமாக...!

//

படத்தின் இணைப்பு சரிசெய்யப்பட்டுள்ளது.

Edited by yarlpriya

  • 4 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உயிர் தந்த உத்தமியே அம்மா-எனை

உடன் அழைத்து சென்றிருக்கலாமே

மனிதமில்லா இவ்வுலகில் வாழ-எனை

ஏன் விட்டு சென்றாய் தாயே!

  • 4 months later...

இந்த இடம் பெயர்வுதான் இறுதியாக இருக்க வேண்டும்.

இன்னும் ஓடுவதற்க்கு இடமில்லை.................................

  • 2 weeks later...

தன் மழலைகளுக்கு உறவுகளை அறிமுகப்படுத்திவைக்கும் உறவு அம்மா

ஆனால் என் வாழ்வில்....?

"இவர்தான் உன் அம்மா"

என்றுஇப்படத்தைக்காட்டி அறிமுகம் செய்து வைத்தனர் என் உறவுகள்.

  • 6 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மண்ணின் விடுதலைகாய்.....

இன அழிப்பின் அடையாளச் சின்னங்களாய்

தளிர்களும் தளிர் தந்த மரங்களுமாய்

மண்ணிலே வீழ்ந்து கிடப்பதனை பாராயோ.

இதை உலகம் பார்த்தால்

என்ன தான் சொல்வார்கள்

பயங்கரவாதி என்று

பயமில்லாமல் சொல்வார்கள்.

குண்டு போட்டவனை கேட்டால்

இரண்டு புலியுடன் சேர்த்து

இரண்டு புலி குட்டியும் என்பார்கள்.

உணவுண்ணும் போதும் உறங்கும் போதும்

கொலை செய்யும் கொடுமை

அது கொடுமையிலும் கொடுமை

அதைத்தான் இன்று அழகாக செய்துவிட்டு

ஆடுகிறான் ஆனந்தமாய்

வெற்றியை குவித்ததென்று.

பால் கொடுத்த மார்பும்

குழந்தையை தாங்கிய தோளும்

பாலகரை உறங்கவிட்டு

பசியாறும் தருணமதில்

கழுகொன்று பறந்துவந்து -அந்த

உயிர்களை கருக்கியதன் கொடுமையென்ன.

உங்களின் உயிர் தந்த

ஒவ்வோர் துளி இரத்தம்

எம் மண்ணின் விடுதலைகாய்

இம் மண்ணுகாய் உரமாகும்.

இளங்கவி

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே படத்தை காணவில்லை ? படம் போடும் விண்ணர் ஒருவரும் இல்லையா?

  • 2 weeks later...

இந்த மாதத்திற்கான் தலைப்பு இதோ எங்கே உங்கள் கற்பனையை தட்டி விடுங்கள்

allai0419kx1ml.jpg

வெள்ளை உள்ளத்துடன் பொக்கை வாய்

பல்லை காட்டும் பச்சிளம் குழந்தையின்

தொல்லை தாங்கவில்லையென்றா

கள்ளை உட்கொண்ட காடையன் போல் காவு கொண்டாய்?

இல்லை உனக்கில்லை மன்னிப்பு - இனி

எல்லைப் பிரிக்காமல் - உன்னிடம்

பல்லை காட்ட நாங்களென்ன மானமென்ற

சொல்லை அறியாரோ?

காடையனே உன் கணக்கற்ற படைகள் கண்டு

நடைபினமாய் வாழ நாங்கள்

சோடை போனவர்கள் இல்லையடா

பாடை கட்டவே பதிலலிப்போம் நாளை

மேடையிலெ வெற்று கோசம் போட்டு

சாடையாலே பேசி சட்டென கால்பிடித்து

தாடையை சொறியும் தற்குறியோ நாங்கள் - இல்லை

கோடை இடியென எழுவோம்!

கொட்டும் மழையென கொட்டும் எங்கள் வீரம்

பட்டுடுத்தும் எங்கள் பாவையரும் பங்களிப்பர்

சொட்டு சொட்டென சொட்டும் உன் ரத்தம

எட்டு திக்கெட்டும் எட்டும் உன் மரண ஒலி!

  • 7 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

allai0419kx1ml.jpg

ஆலமரத்தில் விளையாடிய ஒரு கூட்டு கிளிகள்

அனைத்தும் நச்சுப்பாம்பின் வலையில் சிக்கியதேனோ?

நாஙகள் அனைவரும் தமிழ் பேசுவோம் என்பதாலா?

கொடியவன் வருவான் என்று தெரிந்தும்

வேற்றிடம் செல்ல முடியாமல் போனதேனோ?

நாஙகள் வீரமிக்கவர்கள் என்பதாலா?

எனது குழந்தைகளும் எதிர்பார்த்திருக்கும்

தமிழக சகோதரன் வரமாட்டானா என்று!

நாங்களும் எதிர்பார்த்தோம்!எங்களுக்கு

பிள்ளைபாசம் காட்ட தாயக தமிழன்னை வரமாட்டாளா என்று?

தாயகமாம் தமிழ் நாட்டிலிருந்து

நற்செய்தி வரவில்லை!

தாயகத் தமிழனும்

அங்கே அடிமையாம்!

இந்தி பேசுபவனுக்கு!

ஏய் உலகமே!விழிதிறந்து பார்!

யாருக்கு கிடைக்கும் இந்த பிள்ளைபாசம்?

இறப்பின் போதும்

தாய் தந்தையருக்கிடையில் பாதுகாப்பாய்!

ஏய் உலகமே! காதுகொடுத்து கேள்!

இதுதான் சகோதரப் பாசம்!

சாவிலும் தொடரும் எங்களின் கட்டியனைப்பு!

ஒர் தட்டில் சோறுண்டு பார்திருப்பீர்கள்!

இதோ ஓரே பாயில் குடும்பத்தோடு

எங்களின் இறுதி யாத்திரை!

யார் முழுமனதோடு வேன்டுவார்

இந்த அகால நித்திரை?உயிருடன் இருக்கும்

நீங்களும் சேர்ந்து கொள்ளுங்கள்!

நாங்களும் பிணங்கள்தான் என்று!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கே இந்தப் படத்திற்கு எழுதுங்கள்....

girl_in_refugeecamp_744_624.jpg

இனி என்ன?

பெத்தவளும் போய்ட்டா?

பெத்தவனும் போய்ட்டான்?

நானே உலகமென்ரு வளைய வந்த

தம்பியும் போய்ட்டான்?

என் ஒற்றைக்கைப்பிடி சோற்றுக்கு

வாலாட்டும் எனது செல்ல

நாயும் போய்விட்டது?

இனி என்ன?

நான்கு சுவரும்

ஒற்றை கதவும்

என் துணையோ?

இல்லை

நிமிர்ந்து பார்க்க

பரந்த வானம் மட்டும் உண்டோ?

இல்லை

என்னுடன் விளையாட

நட்சத்திரமும் வென்னிலவும்

மட்டுமே வருமோ?

இல்லை

இனி பசியார உணவுவென்பது

கிடைக்குமோ?

இல்லை

தாகம் தீர்க்க

தண்ணீராவது

கிடைக்குமோ?

இல்லை

நச்சுக்காற்று தவிர்த்து

என் உயிர் தமிழ் மூச்சுக்காற்று

என்மீது எதெனும்

எப்போதேனும்

படுமோ?

இல்லை

பதுங்குகுழி புகு ந்தாலும்

நிலம் பறித்துக்க் கொல்வானோ?

இல்லை

பாடசாலை

நுழைந்தாலும் செல்

வீசிக்கொல்வானோ?

பதுங்க

அடர்ந்த கானகம்

மட்டும் உண்டோ?

இல்லை

கானகம் கண்டும்

விச கிழங்கு

உண்பேனோ?

இல்லை

நச்சு பாம்பு

தீண்டுமோ?

இல்லை

என் உயிர் காக்க

சுடுகுழல்

தாங்குவேனோ?

எவரேனும் வருவாரோ?

என் உயிர் காப்பாரோ?

Edited by thamizthenral

எங்கள் உயிர் உயிர் இல்லையா?

பிஞ்சென்றும் பூவென்றும் பிரித்து

அவ் சிறு வண்டு கூட பார்த்து தான் தேன்பருகும்.

இங்கு சிங்கள வெறியனுக்கு தமிழ் பிஞ்சின்

இறப்பெனில் சந்தோசம்.

அதை செய்த சிப்பாய்க்கு பதவி

உயர்வுகள் தானாக கிட்டும்.

பெற்றதாய் முன்னே தந்தையும் தமையனும் கூடவே

இறந்து கிடப்பது தான் விதியா????

இதை பார்த்து வெறும் காகித துண்டின் அறிக்கைகள்

எழுதிடத்தான் ஐ.நாவே நீயா??

சர்வவல்லமை கொண்டதாய் சொல்லும்

சர்வ தேசத்தின் பணியா??

காந்திய நாடே நீகொடுத்த குண்டுகள் இங்கு

இவரை துளைத்துள்ளது.

அந்த பிஞ்கின் உயிரையும் கூட குடித்துள்ளது.

இதுதான் காந்தி உனக்கு சொல்லி தந்ததா??

இல்லை புத்தரின் போதனையும் இதுதானா??

வாழப்பிறந்தவரா நாங்கள் இல்லை

பலராலும் வஞ்சிக்க பிறந்தவரா??

சொல்லி விட்டு கொல்லுங்கள் சாகும் போது தன்னும்

தெரிந்து கொண்டு இறப்போம்

ஏன் நாம் கொல்லப்பட்டோம் யாரால் என்று

அவலச்சா வேண்டாம் எமக்கு அதுதான் விதி என்றால்

நாட்டைதா எம் உயிரை ஈடுவைத்து

அறியாத பிஞ்சுதான் உனக்கு குறியென்றால்

நீதான் உனக்கு உலகத்தில் பெரும் வீரன்

நச்சு வாயுதான் உன் மகத்தான கணையென்றாலும்

காலடியில் எம் பிணம் வீழும் நிச்சயம் ஆனால் எம் மண் வீழா.

இப் பிஞ்சில் இருந்து கொட்டிய ஒவ்வொரு குருதிச் சொட்டும்

மொட்டாகி மலராகி நாளை உன்னைத் தாக்கும் கணையாகும்

புலத்திலும் எம் நிலத்திலும் இது நிச்சயம் நடக்கும்.

காலங்கள் வேண்டும் சில காத்திருப்புக்கள் வேண்டும்..

அதுவரைக்கும நீ வென்றவனாய் இருந்து கொள்...

Edited by rakasija suki

  • 1 month later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரை நீர் அணைத்தீர்

பெற்று வளர்த்து சீராட்டித ;தாலாட்டி

தங்கள் அ;டி தழைக்க திருமணமும் - செய்திங்கு

ஆசைக்கு ஒன்றெண்டு அருமையாய் இரண்டு பெத்து

வாழ்க்கை எனும் ஓடம் அன்பெனும் கடலினிலே

அலைகளையும் கடந்து பயணித்திருக்கையிலே

பேரிடி ஒன்று வருகின்றதென்று தம்

குஞ்சுகளைக் காப்பாற்ற தந்தையும் தாயும்

சுற்றி அணைத்து குஞ்சுகளை காப்பாற்ற

முனைந்தனையோ

நம்முயிர் அணைந்தாலும்

நம் குஞ்சுகள் தப்பிப் பிழைத்துவிடும்

என்றே அணைத்தாலும் எதிரியின்

எறிகணையில் மரத்தோடு ப+வும் பிஞ்சும்

உதிர்ந்து விழுந்து இங்கு

வாழ்க்கை கடலது இரத்தத்தில் தோய்ந்ததம்மா

மனிதநேயம் கொண்ட உலகமிதா

கொல்லும் அவனுக்கு ஆயுதமும்

உதவிப்பணமும் கொடுத்து அப்பாவித்தமிழனையே

இரையெடுக்கும் உலத்துக்கெங்கே மனிதநேயம்

கண்ணிருந்தும் கண்ணின்றி. காதிருந்தும் காதின்றி

வாயிருந்தும் வாயின்றி வாழுமிந்த வரட்டுலகம்

குடும்பம் இது உனக்கு என்ன கொடுமை செய்ததென்று

மூன்று நிலையும் கெட்டு நின்றாய்

தமிழனாய் பிறந்ததாலோ தமிழுரிமை கேட்டதாலோ

அஞ்சாத்தமிழர் நாம் உரிமையுடன் வாழ்வோம் நாம்

அஃதின்றேல் உயிரை விட்டிடுவோம் - என்று

அஞ்சாமல் எதிரியின் எறிகணையை அணைத்தீரோ

மனிதநேயமற்ற உலகினிலே வாழ்ந்தென்ன என்று

பூவையும, பிஞ்சையும் அழைத்துச் சென்றீரேர்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி என்னய்யா நீர்...? கவிதை எழுத நாங்கள தயார் தான் ஆனால் நீங்கள் தந்த கருப் படம் கவிதைக்குரியதல்ல.. கண்ணீருக்கு உரியது... உமக்கு இப்படிப்பட்ட இழப்புகள் இல்லை போலும்... எமக்கு...... நண்பர்களின் இறந்த உடல்கள்....... மச்சான் தண்ணி தாடா.. என்று கேட்டவனுக்கு ஏதும் செய்ய முடியாமல் பார்த்த கணங்கள்.... எம்மடியில் எம் கண்களுக்கு முன்னால் குடும்பத்துடன் கண் மூடிய கண்ணீர் கதை.. எல்லாமே மீண்டும் ஞாபகம் வருகுதே சாத்திரி...

  • 2 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழத்தமிழா ஈழத்தமிழா நிமிர்ந்து பார்

இங்கே கூண்டோடு கொல்லப்பட்ட உற்றானின் குடும்பம்்

வீழ்ந்து கிடக்கின்றது குருதி சிந்தி

சற்றே யோசித்துப்பார் - நீ எவ்வளவு சுயநலமானவன் என்று

அன்றிலிருந்து இன்று வரை - நடக்கும் இன அழிப்பு

காந்தி வழிப்போராட்டம் - அன்றைய வடிவம்

ஆயுத வழிப்போராட்டம் - நேற்றைய வடிவம்

எம் தமிழ் உறவுகளின் ஒற்றுமைக்கான போராட்டம் - இன்றைய வடிவம்

சிங்கள இன வெறியரின் துாக்குத்தண்டனை - நாளைய போராட்டம்

அறத்தமிழன் - அன்று

மறத்தமிழன் - இன்று

ஒற்றுமை - தமிழன் கேள்விப்படாத வார்த்தை

காட்டிக்கொடுப்பு - தமிழனிற்கு பிடித்த பொழுதுபோக்கு

தாய்க்குரங்கை பசிக்காகக் கொன்ற புலி

தனது தீனிக்காக துாக்கி்ச் சென்ற போது ஈன்றது - ஒரு குட்டியை

அதனை அறிந்த புலி தாய்க்குரங்கை புசிக்காது - அணைத்தது

அக்குட்டியை - இது என்ன கனவா

நியமான உண்மை

தந்தையை அரவணைத்த படி மீளாத உறக்கம் - ழூத்த குட்டி

தாயை அரவணைத்த படி மீளாத உறக்கம் - கடைக்குட்டி

குடும்பப்பாதுகாவலராய் கடமை செய்த பெற்றோரே

உங்களிடமிருந்து தான் நாம் கற்றுக்கொள்ளவேண்டும் - குடும்பமே ஒரு கோயில் என்று

அடே பாவிச்சிங்களவா - ஏன் கொன்றாய்

ஒரு அழகான குருவியின் குடும்பத்தை

எம்புலி மறவருடன் போராடமுடியாத நீ - ஏன் காட்டினாய்

உனது கீழ்த்தர மிருக குணத்தை - உனக்குக்கேட்கவில்லையா

அக்குருவிக்குஞ்சுகளின் கதறல்

அடே பாவிச்சிங்களனே கடவுள் உன்னை மன்னித்தாலும்

எம் தமிழனை மன்னிக்கமாட்டான் - ஏனெனில்

நீ செய்வது அநீதி என்று தெரிந்திருந்தும்

ஒற்றுமை இன்றி இருந்து விட்டான் - சுயநலமாய்

எம் விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவைத்தழுவிய மாவீரரே

பலியாகிய எம்தமிழ் உறவுகளே - கேளுங்கள்

உங்களின் விடுதலை தாகத்தை அணையாது காப்போம்

ஒற்றுமை எனும் பலம் கொண்டு

நன்றி

எமதனைவரினதும் பணி அவர்களின் கனவை நனவாக்குவதே.

இன்றைய சூழ்நிலையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை ஆதரித்து எம்தமிழ் மறவர் கைகளை பலப்படுத்துவோம்.

இவர்களைப் போல் படுகொலை செய்யப்பட்ட ஆயிரமாயிரம் உறவுகளின் படுகொலைகளிற்கு நீதி கோட்போம்

தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.