Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா கசாப்பினைத் துாக்கிலிட்டுள்ளது

Featured Replies

நோர்வே வரலாற்றிலேயே மோசமான கொலையாளியான ப்ரெய்விக் பிடிபட்ட பின்பு 'இன்னும் அதிகமானோரைக் கொல்ல முடியாமல் போனதற்காக வருந்துகிறேன்' என்றார். நீதிமன்றம் அவருக்கு 21 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அறிவித்தபோது மரண தண்டனைக்கு எதிராக நோர்வேக்காரர்கள் சொன்ன நியாயம் இதுதான்: ப்ரெய்விக் பைத்தியக்காரனாக இருக்கலாம்; ஒட்டுமொத்த நோர்வேயும் அப்படி இருக்க முடியாது!

-Ilamaran Mathivanan via FB

[size=1]

[size=4]அது நோர்வே. இது இந்தியா :D[/size][/size][size=1]

[size=4]நோர்வே நாட்டவர்கள் காந்தி கொள்கைகளில் பெரு[/size][size=4]ம்பாலானவற்றை நடைமுறையில் கடைப்பிடிப்பவர்கள்.[/size][/size][size=1]

[size=4]இந்தியர்கள் 'காந்தி எமது தேசத்தின் தத்தை" எனக்கூறி பெருமைப்படுபவர்கள். [/size][/size]

  • Replies 68
  • Views 4.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நோர்வே நாட்டவர்களுக்கு "காந்தி" என்றால் மோகன்ராம் கரம்சந்த்.. :rolleyes:

இந்தியர்களுக்கு "காந்தி" என்றால்?? :unsure:

Spoiler
சோனியா மைனோ.. :wub:
  • கருத்துக்கள உறவுகள்

கசாப்புக் கடை

வளர்மதி

[size=4]கோடரி கொண்டு கபாலம் பிளந்து[/size]

[size=4]என்னை அவர்கள் கொல்லவில்லை.[/size]

[size=4]புருவங்களுக்கிடையில் குண்டு துளைத்தும்[/size]

[size=4]நான் இறக்கவில்லை.[/size]

[size=4]வாள் கொண்டு கழுத்தையறுத்தும்[/size]

[size=4]அவர்கள் என்னைக் கொல்லவில்லை.[/size]

[size=4]இதயத்தை ஊடுருவித் துளைத்தெடுத்த[/size]

[size=4]வெடிச் சிதறலாலும் நான் இறக்கவில்லை.[/size]

[size=4]காரக்கிரகமொன்றில் அடைத்து விஷவாயு செலுத்தியும்[/size]

[size=4]அவர்கள் என்னைக் கொல்லவில்லை.[/size]

[size=4]குறுவாளால் குறி அறுபட்டும்[/size]

[size=4]நான் இறக்கவில்லை.[/size]

[size=4]கால்களுக்கிடையில் சூலாயுதம் திணித்தும்[/size]

[size=4]அவர்கள் என்னைக் கொல்லவில்லை.[/size]

[size=4]பலகை ஒன்றின் மீது இலகுவாக[/size]

[size=4]நெஞ்சு நிமிர்த்தி நின்றிருந்தேன்.[/size]

[size=4]கரங்கள் பின்னே கட்டியிருக்க[/size]

[size=4]முகமிழந்து[/size]

[size=4]விழியகலத் திறந்திருக்க[/size]

[size=4]கனத்த சுருக்கு[/size]

[size=4]கழுத்தை இறுக்க[/size]

[size=4]பலகை இழுபட[/size]

[size=4]முண்டம் துடிதுடிக்க[/size]

[size=4]ஐந்து நிமிடம் ஐம்பத்தைந்து நொடிகள்.[/size]

http://vinaiyaanathogai.wordpress.com/2012/11/22/%e0%ae%95%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%ae%9f%e0%af%88/

  • கருத்துக்கள உறவுகள்

என்ற உங்களுடைய கேள்விகளுக்கு அப்பால் தூக்கு தண்டனை வழங்குவதை கடுமையாக எதிர்ப்பவன் என்பதற்கு அப்பால் கசாப் ஒன்றும் நல்லவன் கிடையாதே துப்பாக்கியுடன் அவன் போட்ட வெறியாட்டத்தில் எத்தனை அப்பாவிகள் கொல்லப்பட்டனர் எனினும் தூக்குத்தண்டனைக்கு பதில் ஆயுள்த்தண்டனையை இந்திய பேரரசு வழங்கி இருக்கலாம் என்பது என்னுடைய கருத்தாக இருதாளும் கூட விடுதலைப்புலிகள் கூட தவிர்க்க முடியாத சில இடங்களில் சில குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கி இருந்ததையும் நாங்கள் நினைத்துப்பார்க்க வேண்டும்

திடீரென்று எங்கிருந்து வந்தது இந்த இந்தியப் பாசம்? எமக்கு நடந்த அநியாயங்கள் எல்லாம் மூன்று வருடத்தில் மறந்தாயிற்றா?? "இந்தியப் பேரரசு" என்றெல்லாம் விழிக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கசாப் தொடர்பாக எனக்கு எந்தவித அபிப்பிராயமும் இல்லை.கசாப்பின் நாடும் , அவருக்கு தண்டனை கொடுத்த நாடும், எம்மக்களின் அழிவில் முன்னின்று நடத்தியவர்கள். ஒரு பார்வையாளனாகவே இதில் இருக்கின்றேன்.

சரியாகச் சொன்னீர்கள் அன்பரே.

ஏனோ தெரியவில்லை, இப்போது சிலருக்கு இந்திய மோகம் அதிகரித்துக்கொண்டு போகிறது. எமக்குச் சம்பந்தமேயில்லாத மஹாராஷ்ட்டிர இந்து மதவாதியின் மறைவுக்காக ஒப்பாரி வைக்காத குறை. காஷ்மீரில் இந்திய மிருகங்களால் தினமும் வேட்டையாடப்படும் மக்களின் ஒருவன் தனது இனத்தின் மீதான தாக்குதலுக்குப் பழி தீர்க்கத் தாக்குதல் நடத்தியதை இந்தியக் குடிமகண் ஒருவனுக்கு வரும் கோபத்தைக் காட்டிலும் அதிக கோபமும், அவனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையில் அதிக மகிழ்ச்சியும் இங்கே சிலருக்கு ஏற்பட்டு விடுகிறது.

என்னதான் நடக்கிறது இங்கே??

  • கருத்துக்கள உறவுகள்

கசாப் செய்தது தவறென்றால், 2009 வரை அவ்வப்போது தெற்கில் சிவிலியன் இலக்குகள் மீது புலிகள் நடத்திய தாக்குதலும் தவறுதான். தன் இனத்தின் மீதான அரச தாக்குதலுக்குப் பழிவாங்கும் முகமாகவோ, அல்லது இனித் தாக்கினால் திருப்பித் தாக்குவோம் என்கிற செய்தியைச் சொல்வதற்காகவோ இவை நடைபெற்றிருக்கலாம் என்பதுதான் எனது எண்ணம். ஆனால் அதுவே உண்மையாக இருக்கவேண்டுமென்பதோ அல்லது அதனால் அந்த நோக்கங்கள் நிறைவேறின என்றோ என்னால் சொல்ல முடியாது.

மும்பைத் தாக்குதலுக்கும், 1995 கொழும்பு மத்திய வங்கி மற்றும் 1996 தெகிவளை புகையிரதத் தாக்குதலுக்கும் இடையே அதிக வேறுபாடு கிடையாது. சொல்லப்பட்ட காரணங்கள் எதுவாயிருப்பினும், கொல்லப்பட்டவர்கள் அனைவரும் சிவிலியன்களே. இன்றைக்கு கசாப்பிற்கு மரண தண்டனை கொடுத்தது சரிதான் என்று வாதாடும் நீங்கள் இலங்கையின் தெற்கில் நடந்த தாக்குதல்களுக்கு மரண தண்டனைதான் சரியான தீர்வென்கிறீர்களா??

கசாப் என்ன செய்தான் என்பறு பார்க்குமுன்னர் ஏன் அவன் அதைச் செய்தான் என்பதைப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கசாப் முப்பையில் தனிநாடு கேட்டு தாக்குதல் நடத்தவில்லை. அவர் பாகிஸ்தான் ஏஜெண்டாக இந்திய றோ பாகிஸ்தான் மண்ணில் நடத்திய தாக்குதல்களுக்கு பழிவாங்க இந்தத் தாக்குதலில் பயன்படுத்தப்பட்டிருப்பார். அவரின் செயல் அவரளவில் நியாயத்துக்குரியதாகவே இருந்திருக்கும். ஆனால் இந்திய மண்ணில் அது குற்றமாக காட்டப்பட்டிருக்கும்.

தென்னிலங்கையில் நடந்த தாக்குதல்கள்.. ஒரு இன அழிப்புச் செய்யும் அரசுக்கும் அதற்கு ஆதரவளித்து நின்ற மக்கள் கூட்டத்திற்கும் எதிரானது..! சிங்களவர்களில் எத்தனை பேர் தமிழின அழிப்பை எதிர்த்து தங்கள் தலைமைகளை புத்தரின் போதனையின் கீழ் வழிநடத்தியுள்ளனர். அவர்கள் அப்படிச் செய்யாமல்.. தமிழர்களை அழிக்கவும் கொல்லவுமே தமது தலைமைகள் ஊட்டி பேரின வெறியில் கிடந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தமிழர்கள் தென்னிலங்கையில் 1952 இல் இருந்து கொல்லப்பட்டதற்கு எத்தனை சிங்களவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தூக்குத் தண்டனை அனுபவித்தனர்..???!

இன்று காங்கிரஸ் தமிழக உறுப்பினர் ஈ வி கே எஸ் இளங்கோவனும் கூவுகிறார்..ராஜீவ் கொலையாளிகளை தூக்கில் போடு என்று. ராஜீவ் ஈழத்தில் செய்த கொலைகளுக்கு ஈ வி கே எஸ் இளங்கோவனை பிடிச்சு தூக்கில் போட யார் முன் வருவினம்..???!

உண்மையில்.. இந்த உலகில் நீதி என்பது அதிகாரம் படைத்தவர்களின் பக்கம் சாயவோ.. சாரவோ தான் உள்ளது. கசாப் தனது மண்ணில் சொந்த மதத்தினர் மீது இந்திய றோ பயங்கரவாதிகள் தொடுத்த தாக்குதலுக்கு பழிவாங்கத்தான்.. மும்பை தாக்குதலை நடத்தி இருந்தாலும்... நீதி என்பது மும்பையில் கொல்லப்பட்டவர்கள் மட்டுமே மனிதர்கள் என்று பார்க்கும் வகைக்கு சார்பு படுத்தப்பட்டுள்ளது. இது உண்மையில் அநீதியான செயல்..! இருந்தாலும்.. யார் இதனை தட்டிக் கேட்க முடியும். அதிகாரம் ஆயுதத்தால் பேசினால்.. அது நீதி. தர்மம் ஆயுதம் தூக்கினால் அது அநீதி.. தீவிரவாதம். இப்படியான ஒரு உலக ஒழுங்கில் மனிதர்கள் மந்தைகளாக்கப்பட்டுள்ள நிலையில்.. இவற்றைப் பற்றி பேசிப் பயனில்லை.

ராஜீவ் என்ற ஒரு படுகொலையாளன் கொல்லப்பட்டதற்கு.. 3 வருக்குத் தூக்குத்தண்டனை என்பது ஏற்றுக் கொள்ள முடியாத அநீதி. அந்த ராஜீவைச் சாட்டி பல ஆயிரம் தமிழர்களை ஈழத்தில் கொன்றவர்கள் சொகுசு அரசியல் செய்ய.. அந்த மூவரும் தானா.. பலியிடப்படனும். இவற்றை அநீதி என்று தெரிந்தும்.. தடுக்க எம்மால் முடியவில்லையே. காரணம்.. தர்மத்தை விட அதிகாரம் பொதிந்த அநீதி.. கோலோஞ்சியுள்ளது. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இஙிகே சிலர் கசாப்பினை ஆதரிப்பதாகச் சொல்லிக் கொண்டு, புலிகள் பற்றிக் குற்றம் சாட்டவிழைகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிலங்கையில் புலிகள் மட்டும் தாக்குதல் நடத்தவில்லை. தமிழீழம் கேட்டுப் போராடின இயக்கங்கள் பலதும் தாக்குதல் நடத்த திட்ட மிட்டுள்ளன. சில தாக்குதலும் நடத்தியுள்ளன. அதற்கும் மேலாக ஜே வி பியும் தாக்குதல் நடத்தியுள்ளது. புலிகள் மீது மட்டும் எதற்கும் குற்றச்சாட்டுவது எம்முள் சிலருக்குள்ள ஒரு குற்ற உணர்வின் தூண்டல். ஆனால் அது அவர்கள் சார்பில் உள்ள தெளிவின்மைகளின் விளைவே அன்றி வேறல்ல..!

சிங்களவர்கள் தமிழர்களை அழிக்க முதல் தமிழர்கள் சிங்களவர்களை தாக்கவே இல்லை. இந்த உண்மையின் அடிப்படையில் இருந்து கேள்விகளை எழுப்புவார்களாக இருந்தால்.. அந்த குற்ற உணர்வுகளுக்கு விடை சுலபம்..!

  • கருத்துக்கள உறவுகள்

[size=5]கசாப்பின் கடைசி நிமிடங்கள் - வெளியே கசிந்த இரகசியம்! [/size]

kasab-231112-150.jpg

மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப்பை தூக்கிலிட்டதில் ரகசியம் காக்கப்பட்டது எப்படி என்ற விவரம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஆர்தர் ரோடு சிறை மற்றும் எரவாடா சிறையில் உள்ள அதிகாரிகள் மூலம் சேகரித்த தகவல்கள் வருமாறு:

கசாப் அனுப்பிய கருணை மனுவை கடந்த 5ம் தேதி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நிராகரித்து, உள்துறை அமைச்சகத்துக்கு பைலை அனுப்பினார். வெளிநாட்டு பயணத்தை முடித்து திரும்பிய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே, 8 ம் தேதி காலை பைலை பார்த்து உடனே கையெழுத்திட்டு, மகாராஷ்டிர அரசுக்கு அனுப்பினார். மகாராஷ்டிர அரசு ஆலோசித்து, நவ. 20, 21 தேதிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப ஒரு நாள் தூக்கு நிறைவேற்றலாம் என்று முடிவு செய்தது.

ஆர்தர் ரோடு சிறையில் கடந்த திங்கள் கிழமை காலை முதலே பரபரப்பு அதிகரித்தது. ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தவிர யாருக்கும் விவரம் தெரியவில்லை. அன்று இரவு 9 மணிக்கு கசாப் தூக்கு நடவடிக்கைக்கு ஆபரேஷன் எக்ஸ் என பெயரிடப்பட்டது. யார் யார் கசாப்பை அழைத்து செல்லும் பயணத்தில் பங்கேற்பது என்பதை மும்பை போலீஸ் கமிஷனர் முடிவு செய்தார். அதன்படி, ஆறு வாகனங்களில் அதிரடிப்படையினர் உட்பட 17 அதிகாரிகள் கசாப்பை பாதுகாப்பாக அழைத்துச்செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

நள்ளிரவில் நிசப்தத்தை கிழிக்கும் வகையில் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக 6 போலீஸ் வாகனங்கள் சீறிக் கிளம்பின. ஏதோ அவசர பார்சல் தான் செல்கிறது என்று அங்குள்ள போலீசார் நினைத்தனர். வழக்கமாக அந்த நேரத்தில் செல்லும் என்பதால் யாருக்கும் வித்தியாசமாக தோன்றவில்லை. 20 ம் தேதி அதிகாலை 2 மணியளவில் புனே எரவாடா சிறை வளாகத்துக்குள் ஆறு வாகனங்களும் நுழைகின்றன. 3 மணி வரை நடைமுறைகள் முடிந்து, கசாப், தனிமை சிறையில் அடைக்கப்பட்டான்.

அன்று காலை 10 மணிக்கு கசாப் தூக்கிலிடப்படுவது குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகத்துக்கு தகவல் அனுப்பபட்டது. அவர்களும் அதை பெற்றதாக பதில் தகவல் அனுப்பினர். செவ்வாய் கிழமை முழுக்க கசாப் பெரிதாக பதற்றம் காட்டவில்லை. வழக்கமாக முணுமுணுக்கும் இந்தி சினிமா பாடல்களை பாடிக்கொண்டிருந்தான். வெளியில் இருந்து சாப்பாடு வேண்டுமா? பிரியாணி வேண்டுமா என்று போலீஸ் அதிகாரிகள் கேட்டனர். ஆனால், சிறை சாப்பாடு போதும் என்று கூறிவிட்டான்.

மறுநாள் புதன் அதிகாலை பான்சி யார்டு சிறை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு தான் தூக்கு மேடை உள்ளது. மேடை அருகே உள்ள இருட்டறையில் அவன் தங்க வைக்கப்பட்டான். காலை 5.20க்கு உயர் அதிகாரிகள் வந்தனர். தாசில்தார் ஷிர்கேயும் வந்தார். கசாப் அறைக்கு சில உயர் அதிகாரிகள் மட்டும் சென்றனர். ஆறு மணி அளவில் அவனுக்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். 52 கிலோ எடை உள்ளதாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

சாப்பிட ஏதாவது வேண்டுமா என்று அதிகாரிகள் கேட்டனர். மசாலா டீ வேண்டும் என்றான். இரண்டு டம்ளர் டீயை வாங்கி குடித்தான். இதன் பின், தூக்கு மேடைக்கு அழைத்துச்செல்ல நான்கு போலீசார் வந்தனர். கை, கால்கள் கட்டப்பட்டன. முகம் கறுப்பு துணியால் மூடப்பட்டது. காலை 7.25 மணி வரை அறையிலேயே கசாப்பை காக்க வைத்தனர். அதற்குள் தடை ஆணை வருகிறதா என்று பார்க்கத்தான். அதன்பின், அவனை நான்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

தூக்கு மேடைக்கு போக சில படிகள் சாய்வாக ஏற வேண்டும். அதில் ஏறுவதற்கு போலீசார் கையை தூக்கி உதவினர்.அப்போது மட்டும், என் தாய்க்கு சொல்லி விட்டீர்களா என்று கேட்டான். ஆம் என்று அதிகாரிகள் தலையசைத்தனர். அவன் இருந்த அறையிலும், தூக்கு மேடை முன்பு அவன் வந்த பின்னும் மரண தண்டனை வாரன்ட் படிக்கப்பட்டது. பின், அதில் தாசில்தாரிடம் கையெழுத்து வாங்கப்பட்டது. அவர்தான் இதற்கு சாட்சி.

சரியாக 7.30க்கு தூக்கு மேடை கீழே பலகை நகர்த்தப்பட்டு, கசாப் உடல் கயிற்றில் தொங்கியது. 7.45 மணி வரை கயிற்றில் தொங்கியது அவன் உடல். பின், டாக்டர்கள் பரிசோதித்து விட்டு, இறந்து விட்டதாக உறுதி செய்தனர். அதன் பின் அவன் உடல் கீழே இறக்கி வைக்கப்பட்டது. அவன் உடலை புதைக்க, அருகேயே ஆறு குழிகள் வெட்டப்பட்டிருந்தன. அவற்றில் ஒரு குழியில் 9 மணிக்கு அவன் உடல் இறக்கப்பட்டது.

உள்ளூரில் இருந்து மவுல்வி ஒருவர் அழைக்கப்பட்டு, மத முறைப்படி அவன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.தூக்கு முடிந்தபின் தான், முதல் நாள் ஷிப்டுக்கு வந்த சிறை போலீசார் அத்தனை பேரும் வெளியேற அனுமதிக்கப்பட்டனர். அதுவரை அவர்கள் சிறையில் இருந்து வெளியே வரக்கூடாது என்று உத்தரவு போய்விட்டது.

http://www.seithy.com/breifNews.php?newsID=70674&category=IndianNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

சரி.. கசாப்பை தூக்கில் போட்டுவிட்டார்கள்..! கசாப் குழுவை இந்தியாவுக்குள்ளே வரவிட்ட ஊழல் கரையோரக் காவல் துறைக்கு என்ன தண்டனை? :D

[size=2]

[size=5]கசாப்பை போல ராஜீவ் கொலையாளிகளையும் தூக்கிலிட வேண்டும்[/size][/size]

[size=2]

[size=4]கசாப்பை தூக்கிலிட்டதைப் போல ராஜீவ்காந்தியை கொன்ற கொலையாளிகளையும் உடனே தூக்கில் போட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகளுக்கு ஆதரவு தருபவர்களையும் நாடு கடத்த வேண்டும். தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யும் வைகோ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.[/size][/size][size=2]

[size=4]வைகோ தூக்கு தண்டனையை 'ரத்து செய்ய வேண்டும் என்று கூறுவது அபத்தமானது என அவர் தெரிவித்துள்ளார்.[/size][/size][size=2]

[size=4]மேலும் மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப்பை தூக்கில் போட்டதை நாடு முழுவதும் உள்ள மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். எனவே ராஜீவ்காந்தியை கொன்ற கொலையாளிகளையும், பாராளுமன்றத்தை தாக்கிய தீவிரவாதிகளையும் உடனே தூக்கில் போட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.[/size][/size]

http://www.virakesari.lk/article/world.php?vid=293

  • கருத்துக்கள உறவுகள்

இஙிகே சிலர் கசாப்பினை ஆதரிப்பதாகச் சொல்லிக் கொண்டு, புலிகள் பற்றிக் குற்றம் சாட்டவிழைகின்றனர்.

தூயவன்,

நீங்கள் தாராளாமாக எனது பெயரையே குறிப்பிடலாம். எதுக்கு " சிலர்" என்கிறீர்கள்? நான் கசாப்பை ஆதரிக்கவில்லை. ஆனால் இந்திய மோகத்தினால் கசாப்பை நீங்களும் குற்றவாளி என்று வாதிடுவதுதான் பிழை என்கிறேன். இந்தியன் என்னவும் சொல்லட்டும், அதில் எனக்குப் பிரச்சினையில்லை. ஏனென்றால் அவன் ஈழத்திலும், காஷ்மீரிலும், அசாமிலும், பஞ்சாப்பிலும் அரங்கேற்றிய கொலைகளுக்கு பின்னரும்கூட எதிர்த்துப் போராடியவர்களைப் பயங்கரவாதிகள் என்றுதான் சொன்னான். அதுமட்டுமல்லாமல் அந்த இனங்களையெல்லாம் ஒன்றில் அழித்தான் அல்லது அழிக்கத் துணை போனான்.

நான் இங்கே கூறுவது இந்திய அபிமானத்தால் கசாப்பை நீங்களும் குற்றவாளி என்று குறிப்பிடுவது பற்றி. என்னைப் பொறுத்தவரை கசாப் செய்தது பிழையே இல்லை. அப்படி பிழை என்று கூறினால் நாம் செய்தவையெல்லாம் பிழை என்று ஆகிவிடும்.

நீங்கள் மும்பயில் ஒரு நியாயமும், கொழும்பில் இன்னொரு நியாயமும் பேசுவது ஏனென்றுதான் புரியவில்லை.

நீங்கள் ஆதரிக்கும் இந்தியத் தேசியவாதமும், இந்துத்துவாவும் இந்திய மக்களின் பாதிப்பேருக்கு மேல் செய்துவரும் அட்டூழியங்களப் பாருங்கள். காஷ்மீரில் நடக்கும் கொடுமைகளை வெறுமனே பாக்கிஸ்த்தான் - இந்திய போட்டி நடவடிக்கைகள் என்று சப்பைக் கட்டுக் கட்டி காஷ்மீரில் அப்பாவிகள் மேல் இந்திய மிருகங்கள் நடத்தும் கொலை வெறித்தாண்டவத்தை மறைக்காதீர்கள்.

நான் சொல்லவருவது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன். மறைந்திருந்து கல்லெறிய வேண்டாம், நேரே பெயர் சொல்லியே கருத்தாடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிலங்கையில் புலிகள் மட்டும் தாக்குதல் நடத்தவில்லை. தமிழீழம் கேட்டுப் போராடின இயக்கங்கள் பலதும் தாக்குதல் நடத்த திட்ட மிட்டுள்ளன. சில தாக்குதலும் நடத்தியுள்ளன. அதற்கும் மேலாக ஜே வி பியும் தாக்குதல் நடத்தியுள்ளது. புலிகள் மீது மட்டும் எதற்கும் குற்றச்சாட்டுவது எம்முள் சிலருக்குள்ள ஒரு குற்ற உணர்வின் தூண்டல். ஆனால் அது அவர்கள் சார்பில் உள்ள தெளிவின்மைகளின் விளைவே அன்றி வேறல்ல..!

சிங்களவர்கள் தமிழர்களை அழிக்க முதல் தமிழர்கள் சிங்களவர்களை தாக்கவே இல்லை. இந்த உண்மையின் அடிப்படையில் இருந்து கேள்விகளை எழுப்புவார்களாக இருந்தால்.. அந்த குற்ற உணர்வுகளுக்கு விடை சுலபம்..!

நான் புலிகளைக் குற்றம் சாட்டவில்லை நெடுக்கு. நீங்கள் மும்பாயில் நடந்தவற்றையும், தென்னிலங்கையில் நடந்தவற்றையும் வேறு வேறாகப் பார்க்கிறீர்கள் என்றுதான் சொல்லவருகின்றேன். ஏனென்றால், தென்னிலங்கையில் தாக்குதல் நடத்துவதற்கு எமக்கு எவ்வளவு பலமான நியாயங்கள் இருந்தனவோ, அவ்வளவு பலமான நியாயங்கள் கசாப் குழுவினருக்கும் மும்பயில் தாக்குதல் நடத்த இருந்திருக்கின்றன என்பதுதான் எனது வாதம். புலிகள் நடத்தினால் அது நியாயம், கசாப் நடத்தினால் அது அநியாயம் என்று வாதிடுவதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நீங்கள் சொல்லும், சிங்களவர் தமிழரை முதலில் தாக்கினார்கள், பின்னர்தான் தமிழர்கள் தாக்கினார்கள் என்பதெல்லாம் எனக்கும் தெரியும். நானும் இந்தப் போராட்டத்தில் கடந்த 39 வருடங்களாக கலந்திருக்கிறேன், அனுபவித்தும், கேட்டும் வருகிறேன். நீங்கள் எனக்கு இப்போது தான் ஏதோ புதிதாகப் பார்ப்பவர்மாதிரி கதை சொல்வதுதான் வேடிக்கை.

எனக்கிருப்பது குற்றவுணர்வில்லை. மாறாக காஷ்மீரத்து மக்களின் விடுதலைப் போராட்டத்தை நீங்களும் வெறும் பயங்கரவாதம் என்று இந்திய பயங்கரவாதிகள் போல் உச்சரிப்பதன் மேலுள்ள வருத்தம், அவ்வளவுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் புலிகளைக் குற்றம் சாட்டவில்லை நெடுக்கு. நீங்கள் மும்பாயில் நடந்தவற்றையும், தென்னிலங்கையில் நடந்தவற்றையும் வேறு வேறாகப் பார்க்கிறீர்கள் என்றுதான் சொல்லவருகின்றேன். ஏனென்றால், தென்னிலங்கையில் தாக்குதல் நடத்துவதற்கு எமக்கு எவ்வளவு பலமான நியாயங்கள் இருந்தனவோ, அவ்வளவு பலமான நியாயங்கள் கசாப் குழுவினருக்கும் மும்பயில் தாக்குதல் நடத்த இருந்திருக்கின்றன என்பதுதான் எனது வாதம். புலிகள் நடத்தினால் அது நியாயம், கசாப் நடத்தினால் அது அநியாயம் என்று வாதிடுவதைத்தான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நீங்கள் சொல்லும், சிங்களவர் தமிழரை முதலில் தாக்கினார்கள், பின்னர்தான் தமிழர்கள் தாக்கினார்கள் என்பதெல்லாம் எனக்கும் தெரியும். நானும் இந்தப் போராட்டத்தில் கடந்த 39 வருடங்களாக கலந்திருக்கிறேன், அனுபவித்தும், கேட்டும் வருகிறேன். நீங்கள் எனக்கு இப்போது தான் ஏதோ புதிதாகப் பார்ப்பவர்மாதிரி கதை சொல்வதுதான் வேடிக்கை.

எனக்கிருப்பது குற்றவுணர்வில்லை. மாறாக காஷ்மீரத்து மக்களின் விடுதலைப் போராட்டத்தை நீங்களும் வெறும் பயங்கரவாதம் என்று இந்திய பயங்கரவாதிகள் போல் உச்சரிப்பதன் மேலுள்ள வருத்தம், அவ்வளவுதான்.

நீங்கள் முற்றாக எனது கருத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். நான் கசாப்பின் மரண தண்டனை குறித்து.. இந்திய தளங்களில் வைத்தே எதிர்ப்புக் கருத்தைப் பதிவு செய்துள்ளேன்.

நீங்கள் மற்றவர்கள் சிலரின் கருத்துக்குப் பதில் எழுதியதை இப்போ எனக்கான பதிலாக காட்டுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அது தவறு.

நான் சொல்லவந்தது.. தென்னிலங்கையில் நடந்த பதில் தாக்குதல்களை இதற்குள் கொண்டு வந்து இதனை அதனால் சமப்படுத்திக் கொண்டிருப்பதை இட்டு எனது கருத்தை மட்டுமே..! மற்றும்படி இதில் எனக்கும் உங்களுக்கும் இடையே எந்த கருத்து முரண்பாடும் இருப்பதாகத் தெரியவில்லை. :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் முற்றாக எனது கருத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். நான் கசாப்பின் மரண தண்டனை குறித்து.. இந்திய தளங்களில் வைத்தே எதிர்ப்புக் கருத்தைப் பதிவு செய்துள்ளேன்.

நீங்கள் மற்றவர்கள் சிலரின் கருத்துக்குப் பதில் எழுதியதை இப்போ எனக்கான பதிலாக காட்டுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அது தவறு.

நான் சொல்லவந்தது.. தென்னிலங்கையில் நடந்த பதில் தாக்குதல்களை இதற்குள் கொண்டு வந்து இதனை அதனால் சமப்படுத்திக் கொண்டிருப்பதை இட்டு எனது கருத்தை மட்டுமே..! மற்றும்படி இதில் எனக்கும் உங்களுக்கும் இடையே எந்த கருத்து முரண்பாடும் இருப்பதாகத் தெரியவில்லை. :icon_idea::)

நெடுக்கு,

நான் தென்னிலங்கைத் தாக்குதல்களுக்கு என்ன காரணங்களை முன்வைத்தோமோ, அதேயளவு காரணங்கள் கசாப்பிற்கும் இருந்திருக்காலம் என்றுதான் நினைக்கிறேன். என்னைப்பொறுத்தவரை ஈழ விடுதலைப் போராட்டத்திற்கும், காஷ்மீரத்து விடுதலைப் போராட்டத்திற்கும் அதிக வேறுபாடில்லை. எங்கே, கசாப் செய்தது பிழை, ஆகவே அவனைத் தூக்கிலிட்டது சரிதான் என்று நாம் வாதாடினால், எம்மேலான விமர்சனத்தையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டி வரும் என்றுதான் நான் வருந்துகிறேன்.

கசாப் தூக்கிலிடப்பட்டதைப் போல ராஜீவ் கொலை வழக்கில் பொய்க்குற்றச்சட்டு சுமத்தப்பட்டு மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்று காங்கிரஸ் இளங்கோவன் கூறியிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். ஆகவே, கசாப்பைத் தூக்கிலிட்டது சரிதான் என்று இங்கு வாதிடும் நண்பர்கள் ராஜீவ் கொலை வழக்கின் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பற்றி இளங்கோவன் சொல்வதும் சரிதான் என்று நினைக்கிறார்களோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இஙிகே சிலர் கசாப்பினை ஆதரிப்பதாகச் சொல்லிக் கொண்டு, புலிகள் பற்றிக் குற்றம் சாட்டவிழைகின்றனர்.

இங்கே சிலர் கசாப் செய்தது பிழை, ஆகவே அவனைத் தூக்கிலிட்டது சரிதான் என்று வாதிடுவதன் மூலம், புலிகளையும் தூக்கிலிட வேண்டும் என்று குற்றம் சாட்ட விழைகின்றனர்.

[size=2]

283324_439964846083401_942664486_n.jpg[/size]

நெடுக்கு,

நான் தென்னிலங்கைத் தாக்குதல்களுக்கு என்ன காரணங்களை முன்வைத்தோமோ, அதேயளவு காரணங்கள் கசாப்பிற்கும் இருந்திருக்காலம் என்றுதான் நினைக்கிறேன். என்னைப்பொறுத்தவரை ஈழ விடுதலைப் போராட்டத்திற்கும், காஷ்மீரத்து விடுதலைப் போராட்டத்திற்கும் அதிக வேறுபாடில்லை. எங்கே, கசாப் செய்தது பிழை, ஆகவே அவனைத் தூக்கிலிட்டது சரிதான் என்று நாம் வாதாடினால், எம்மேலான விமர்சனத்தையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டி வரும் என்றுதான் நான் வருந்துகிறேன்.

அமெரிக்கா பலதடவை இந்தியா, கஸ்மீரை ஏமாற்றி பிடித்துவிட்டத்தால் அதை விட்டுவிட வேண்டும் என்று கூறியிருக்கிறது. ஆனால் கசாப்பின் குழு அல்கைதாவுடன் தொடர்புடையது. அமெரிக்கா அவர்களை கருத்தில்லாத வன்முறையாளர்களாகத்தான் பார்க்கிறது. கஸ்மீரின் மற்றைய பகுதியை கைபற்றி வைத்திருக்கும் பாகிஸ்தான் இந்த தூக்குக்கு தனது சம்மததை தெரிவித்து வெளிப்படைக்கு தானும் கசாப்கூட்டத்தாரின் கொலைகளை எதிர்த்திருக்கிறது.

நாம் JVP தெற்கில் செய்த கொலைகளுடந்தான் மும்பாய் கொலைகளை ஒப்பிடலாம்.

லக்சர் இ தொய்ப்பா தனது நொக்கம் என்ன என்று வெளிவிட வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.