Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்று விடயங்கள்

Featured Replies

அன்பு வணக்கம், நேற்றிரவு மூன்று விடயங்கள் பற்றிய உங்கள் அபிப்பிராயங்களை கருத்துக்களத்தில் வினவலாம் என்று நினைத்தேன். அம்மூன்றில் இன்றுகாலை ஒன்று மறந்துவிட்டது. நினைவில் வராதுபோனதற்கு மாற்றீடாய் ஒன்றையும் சேர்த்து மூன்றுவிடயங்களை இங்கு இணைக்கின்றேன். இதுபற்றிய உங்கள் கருத்தைக்கூறுங்கள். எனக்கு வேறு எவரினுடையதாவது கட்டுரை இணைப்புக்களோ, பொன்மொழிகளோ தேவையில்லை. உங்கள் வாழ்வியலின் உண்மையான அணுகுமுறைகளை மாத்திரம் இவ்விடயங்கள் சம்மந்தமாக அறிந்துகொள்ளவிரும்புகின்றேன்.

விடயம் ஒன்று: உங்களுக்கு ஒருவர் உதவி செய்கின்றார் என வைப்போம். உதவிசெய்தவர் உதவிபெற்றவரிடம் தான் முன்பு செய்த உதவியை நினைவுபடுத்தி அல்லது அடிக்கடி குத்திக்காட்டி "தற்போது ஏதும் தவறு இழைக்கும்போது அல்லது தற்போது தான் செய்கின்ற தவறை உங்களிடம் நியாயப்படுத்தும்போது", இப்படியான சூழ்நிலையில், நீங்கள் உதவியைபெற்றவராயின் உதவியைச்செய்தவர் விடயத்தில் உங்கள் அணுகுமுறைகள் எவை?

விடயம் இரண்டு: "நண்பர்" என யாரை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்? நண்பர் என்பதற்கு உங்களின் "அர்த்தம்" என்ன? நண்பர்களில் நெருக்கம், நெருக்கமின்மை என வகையீடுகளை நீங்கள் வைத்துள்ளீர்களா? எல்லா நண்பர்களையும் ஒரே மாதிரியாகவே மதிப்பீர்களா? அல்லது நண்பர்களிடையே வேறுபாடு காட்டுவீர்களா?

விடயம் மூன்று: ஓர் தனிநபரின் வாழ்வின் வெற்றியை, அவரது வாழ்வின் திருப்தியை தீர்மானிக்கவேண்டியது, எடைபோடவேண்டியது குறிப்பிட்ட அந்தத்தனிநபரா அல்லது மற்றவர்கள், சமூகமா? உங்கள் வாழ்வின் அர்த்தம் அல்லது வெற்றிபற்றி மற்றவர்கள்கூறும் விமர்சனங்கள்பற்றிய உங்கள் அணுகுமுறைகள் எவை? அதை எவ்வாறு கையாள்வீர்கள்?

அனைவரினதும் கருத்துக்களிற்கு முன்கூட்டிய நன்றிகள்!

வணக்கம் கலைஞன்

1-ஆபத்தானவர்கள் ............இவர்களின் சகவாசத்தால் எம் வாழ்க்கை ,ஆளுமை ,தனித்துவம் சீரழிந்து விடும் .........எப்படியாவது இவரை விட்டு விலக முயற்சிப்பேன் ............ஆனால் நன்றி மறப்பது நன்றன்று என கேட்பீர்கள் .உண்மை ஆனால் உதவி என்பது ஒருவன் தன சுயநலத்திற்காய் செய்வது அல்ல ..........நீங்கள் மேல் குறிப்பிட்ட நபர் உதவி என்பதற்கப்பால் உபத்திரவத்தையே செய்திருக்கிறார் ...ஆகவே அவரை விட்டு விலகுவது தவறில்லை

2-நண்பன் என்னும் வரைவிலக்கணம் நீங்கள் மேலே கூறியபடி மாறுபடுவதில்லை.............ஆனால் என்னை பொறுத்த வரையில் நண்பராக நான் ஏற்றுக்கொள்வது என்னைப்போல் எனது கருத்துடன் ஒன்றி ,ஒருமித்து இருப்பவரையே நான் உண்மையான நண்பராக ஏற்றுக்கொள்வேன் ...அந்த நட்பே இன்று வரை தொடருகிறது ...........தவறாக புரியவேண்டாம் எனது கருத்துடன் ஒருமித்துப்போகாதவருடனும் பழகுகிறேன் ....ஆனால் நண்பராக இல்லை .........

3-வெற்றியையும் .திருப்தியையும் நானே தீர்மாநிப்பவனாய் இருக்க வேண்டும் .அதை இன்னொருவன் தீர்மானிப்பது .எனக்கு உண்மையான வெற்றியை இருக்காது ...........சமூகம் வரவேற்கத்தக்க வெற்றிகள் ஆரோக்கியமான ,திருப்திகலையே நான் இங்கு குறிப்பிடுகிறேன்

நன்றி கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

1)ஏன்டா அவர்களிடம் உதவி பெற்றோம் எனத் தோன்றும்...அவங்களோட பழகவே விருப்பம் இராது எப்படியும் வெட்டி விடத் தான் பார்ப்பேன்

2)நண்பர் என்டால் நல்லதோ,கெட்டதோ ஒருத்தருக்கொருத்தர் கூட இருந்து எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் மற்றவர்களது[தனது நண்பரது] சுக துக்கங்களில் பங்கு எடுப்பவராக இருக்க வேண்டும்...நண்பருக்கு நண்பர் வேறுபடும்.எந்த நண்பரிடம் மனம் விட்டு எல்லாத்தையும்,எவ்வித பயமில்லாமல் சொல்லலாமோ அவரை மிகவும் நெருக்கமான நண்பராக கொள்வேன்.அதை விட எந்த நண்பர் நான் நல்லாய் இருக்க வேண்டும் என்று அதிகம் நினைப்பவராகவும்,துயரமான நேரத்தில் அதிகம் கூட இருப்பவராகவும் இருக்க வேண்டும்.இவர்கள் மிகவும் நெருக்கத்திற்குரிய நண்பராக இருப்பர்

3)எனது வாழ்வின் வெற்றியை,திருப்தியை,வாழ்க்கையின் அர்த்தத்தை தீர்மானிக்கிறது நான் தான்.எனக்குத் தானே என்னைப் பற்றி அதிகம் தெரியும்...என்ட‌ வாழ்க்கை பற்றி அதிகம் மற்றவர்களிட‌மிருந்து நெகடிவ் கொமண்ட் தான் வரும்...முந்தி எல்லாம் அதை நினைச்சு ஒரே கவலைப்படுவதும்,அழுகின்றதும் இப்ப அப்படி ஒன்றும் இல்லை...நாங்கள் எப்படி இருந்தாலும் அவர்கள் ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார்கள் அதனால் ஒரு காதில் வாங்கி மற்றக் காதால் விட்டுடுவேன்...இந்த சமூகத்திற்கு முன்னால் நான் நல்லாய் வாழ்ந்து,நல்லதொரு இட‌த்தைப் பிடிக்க வேண்டும் என்று அவர்கள் ஏதாவது குத்தலாய் கதைக்கும் போது மனதிக்குள் வரும் ஆனால் அதை செயற்படுத்திற மாதிரி ஒன்றுமே செய்ய மாட்டேன் நான் தான் சுத்த சோம்பேறியாச்சே :lol::D:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் கலைஞன் அண்ணா,

இந்த விடையங்களில் நான் மிகவும் மாறுபட்டவன்,எப்போதும் உண்மையாய் இருப்பவர்களை,உண்மையாய் இருக்க வேண்டும் என்று நினைப்பவன். அரிச்சந்திரன் கிடையாது பொய் சொன்னாலும் காரணம் இல்லாமல்,ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் யாருடனும் பழகுவதில்லை வீட்டில் பொய்சொல்வதாக இருந்தால் கூட அவர்கள் மீது இருக்கும் மரியாதஇ நிமித்தம் சிலவற்றை மறைக்கவேண்டி வந்ததே தவிர சந்தர்ப்பம் வரும் போது எல்லாவற்றையும் சொல்லிவிடுவேன். இரகசியம் என்று சொல்லி ஏதும் இல்லை. நானறிய எனது சகோதரங்கள்,குடும்பம் தவிர்த்து யாரிடமும் உதவி பெற்றதாக ஞாபகமே இல்லை அப்படியாயின் யாரும் சொல்லித்தான் தெரியவேண்டும்.

அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தால் வாங்கிய உதவியை திருப்பிக்கொடுக்கும் வரை மௌனமாய் இருப்பேன் குடுத்ததும் அது தான் அவருக்கும் எனக்குமான கடைசி நாளாய் இருக்கும்.

இரண்டாவதுக்கும் எனக்கும் எட்டாப்பொருத்தம் போல,நானும் அந்தளவுக்கு பெரிதாக நட்பைத்தேடவில்லை,அதுவும் எனக்கு அமையவில்லை பல நண்பர்கள் பாடசாலைக்காலம்,கல்லூரிக்காலம்,ஏஜென்சியிடம் இருந்தபோது,காம்ப்பிலை இருந்த போது,இணையத்த்இல்,வேலையில் என்று இருந்த போதும் சொல்லிக்கொள்ளும்படி உயிர்நண்பன் என்ற வரிசையில் ஒருவர்கூட இல்லை அந்தந்த நேரங்களுடன் அவை போய் விட்டன சமூக வலைத்தளங்களில் சாதாரண நலன் விசாரிப்பதிலேயே இருக்கின்றன. காரணம் தெரியவில்லை.

மூன்றாவது:

நிச்சயமாக நானாகத்தான் இருக்க வேண்டும் ஆனால் அதில் சமூகத்தின் தாக்கத்தையும் புறக்கணிக்க முடியவில்லை.

சமூகம் சார்ந்த எனது தெரிவுகளே அவற்றைத்தீர்மானிக்க வேண்டும்.

நன்றி.. :)

விடயம் ஒன்று: அவரின் பிழையை கட்டாயமாக சுட்டிக் காட்டுவேன். பின்பு அவர்களிடம் இருந்து ஒதுங்கி விடுவேன். (சொந்த அனுபவம்)

விடயம் இரண்டு: நண்பர்களுடன் மனம் விட்டுக் கதைக்கக் கூடியதாய் இருப்பதை நான் உணர்வது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம், வேறுபாடு காட்டுவதில்லை.

விடயம் மூன்று: சிக்கலான கேள்வி, வாழ்வின் வெற்றி, முன்னேற்றம், திருப்தி பற்றி அவருக்கு என்ன மனத் திருப்தி உள்ளது என்பதைப் பொறுத்தது.

1) உதவி செய்பவரும் உதவி பெறுபவரும், பரிமாறப்படுவது உதவி என்று நினைத்துப் பரிமாறினால், குத்திக்காட்டல் மட்டுமன்றி பல பேரம்பேசல்கள் எதிர்பார்க்கப்படவேண்டியனவே. ஏனெனில் "உதவி" என்ற பெயரே, செய்யப்படுவதை கணக்கியலின் ஏதோ ஒரு ஆவணத்தில் பதிவு செய்து விடும். பெற்றவரும் செய்தவரும் அந்த உதவியின் பெறுமதி தொடர்பில் வேறுபட்ட அபிப்பிராயங்களை வைத்திருக்கையில் பிரச்சினைகளிற்கான சாத்தியம் மேலும் அதிகம். ஆனால் எந்தப் பரிமாற்றத்தையும் போல, பரிமாற்றம் என்பது இரு தரப்பாலும் அங்கீகரிக்கப்படின் மட்டுமே அது பரிமாற்றம் ஆக முடியும். பெற்றவர் ஒரு உதவியினைத் தூசாக நினைப்பின் செய்தவர் என்னத்தைக் குத்திக்காட்டினும் ஏதும் நடக்கப்போவதில்லை. பெற்றவரும், தான் பெற்ற உதவி அளப்பரியது என்று நினைக்கையில் தான் குத்திக்காட்டல் வெற்றிபெறும்.

அப்படியாயின், பெற்ற உதவி அளப்பரியது என்று நாம் கருதின், நாம் குத்திக்காட்டல் என்று கருதுவது ஏன் எமக்குக் குத்திக்காட்டலாகப் படுகிறது? என்று பார்ப்பின்: ஒரு வரியில் சொல்லின் 'நக்குண்டார் நாவிழந்தார்' தார்ப்பரியம் எனலாம். இதைத் தான் எமக்குச் சொல்லி வழர்த்தார்க்ள். நன்றி மறவாமை என்பது ஏறத்தாள ஒரு அடிமை சாசனம் என்ற ரீதியில் எமக்குள் கட்டமைக்கப்பட்டுள்ளது. மதங்களில் ஆகட்டும் சமூகத்தில் ஆகட்டும் இந்த நன்றி மறiவாமைத் தார்ப்பரியம் முற்றிலும் தவறாகப் புரியப்பட்டுள்ள விடயங்களில் ஒன்று என்பது எனது அபிப்பிராயம். அது ஒரு பெரிய கோணம்.இது பற்றித் தெளிவாகப் பேசின் அதுவே ஒரு பதிவாகிவிடும்.

அதைவிட்டுவிட்டு, பிறிதொரு கோணத்தில் பார்த்தால், தனிப்பட்ட ரீதியில், 'நக்குண்டார் நாவிழந்தார்' என்ற தார்ப்பரியத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில் எனக்குப் பசித்த நேரத்தில் உணவு கொடுத்தவர் கொடுத்திராவிடின் நான் ஏதோ ஒரு வழியில் எனது வாழ்வைத் தக்கவைத்திருப்பேன் அல்லது இறந்துபொயிருப்பேன். இறந்திருந்தால் எதுமே அர்த்தமின்றிப் போயிருக்கும். வாழ்ந்திருந்தால் வேறு வழி அடையாளப்படுத்தப்பட்டிருக்கும். அவ்வளவு தான்.

3) ஒரு வகையில் பார்த்தால் 'வெற்றி' என்ற கருத்தே மற்றவை சார்ந்து தான் சாத்தியப்படும். ஏனெனில் போட்டி இருந்தால் தானே வெற்றி தோல்வி சாத்தியம். போட்டி என்பதே பிறிதொன்று இருந்தால் தானே சாத்தியம். அந்தவகையில் வெற்றி என்பது பிறவைச் சார்ந்தே சாத்தியம் என்று தோன்றும்.

பிறிதொரு கோணத்தில் பார்த்தால், உங்கள் கேள்வியில் உள்ள 'திருப்பத்தி'யில் இருந்து ஆரம்பித்தால், திருப்த்தி என்பது எவராலும் எவரிற்கும் கொடுக்க முடியாதது. அது தானாக உணரவேண்டியது. திருப்த்தியாக அனைத்துக் கணத்திலும் வாழவேண்டும் என்ற அவா

அனைவரிற்கும் இருக்கும். ஆனால் பல கணங்களில் அது சாத்தியப்படாது. அந்தவகையில், திருப்தியான கணங்கள் அனைத்தும் வெற்றியான கணங்கள். மற்றவை தோல்வி நேரம் என்று தோன்றும். திருப்த்தி சார்ந்த கோணத்தில பார்க்கையில், இது மனவெளியின் போராட்டம, தன்னோடு தான் நடத்தும் போட்டியின் விளைவு, இதற்கு இன்னுமொருவர் தேவையில்லை, தான் மட்டும் போதும். எனவே, "வெற்றி" பிரராலும் நிச்சயிக்கப்படலாம், தன்னாலும் நிச்சயிக்கப்படலாம். என்னைப் பொறுத்தவரை, எனது வெற்றி பிறர்சார்ந்து நிச்சயிக்கப்பட்டதா எனக்குள்ளாக நிச்சயிக்கப்பட்டதா என்பது பொருட்டே இல்லை. வெற்றி என்று தோன்றுகிறதா, அனுபவித்துக் கொண்டே செல்லவேண்டியது தான்.

நான் நினைக்கிறேன், இந்த வெற்றியைத் தீர்மானிப்பது யார் என்ற எண்ணம் எமக்குள் எழுவதன் அடிப்படையே நாம் தோல்வி பற்றிச் சிந்திக்கிறோம் என்பது தான். எவனோ எம்மைத் தோல்வியாளனாகப் பார்க்கிறான் என்ற எண்ணம் தோன்றுகையில் தான் எனது வெற்றியைத் தீர்மானிக்க நீ யார் என்ற கேள்வியை மனம் எடுத்து வீசும். அது எனக்குள்ளான என்னைச் சார்ந்த எனது மதிப்பீட்டில் உணரப்பட்ட தோல்வியாக இருக்கலாம். அல்லது யாரோ என்னை தோல்வியாளனாக வெளிப்படையாகச் சித்தரித்ததன் வெளிப்பாடாக இருக்கலாம். ஆனால் வெற்றியின் வரைவிலக்கணம் சார்ந்த கேள்வி தோல்வியைச் சார்ந்தே எழமுடியும் என்றே எனக்குத் தோன்றுகின்றது.

தோல்வி என்பது எமக்குள் சிறுவயது முதல் விதைக்கப்பட்டு வழர்க்கப்பட்ட ஒரு பூதம். தோல்வி என்றால் என்ன என்று கேட்காமலேயே 'தோல்வி' என்ற வார்தையினைக் கேட்டால் நடுங்கும் அளவிற்குத் தோல்விப் பூச்சாண்டி எமக்குள் நிமிர்ந்து நிற்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அன்பு வணக்கம், நேற்றிரவு மூன்று விடயங்கள் பற்றிய உங்கள் அபிப்பிராயங்களை கருத்துக்களத்தில் வினவலாம் என்று நினைத்தேன். அம்மூன்றில் இன்றுகாலை ஒன்று மறந்துவிட்டது. நினைவில் வராதுபோனதற்கு மாற்றீடாய் ஒன்றையும் சேர்த்து மூன்றுவிடயங்களை இங்கு இணைக்கின்றேன். இதுபற்றிய உங்கள் கருத்தைக்கூறுங்கள். எனக்கு வேறு எவரினுடையதாவது கட்டுரை இணைப்புக்களோ, பொன்மொழிகளோ தேவையில்லை. உங்கள் வாழ்வியலின் உண்மையான அணுகுமுறைகளை மாத்திரம் இவ்விடயங்கள் சம்மந்தமாக அறிந்துகொள்ளவிரும்புகின்றேன்.

விடயம் ஒன்று: உங்களுக்கு ஒருவர் உதவி செய்கின்றார் என வைப்போம். உதவிசெய்தவர் உதவிபெற்றவரிடம் தான் முன்பு செய்த உதவியை நினைவுபடுத்தி அல்லது அடிக்கடி குத்திக்காட்டி "தற்போது ஏதும் தவறு இழைக்கும்போது அல்லது தற்போது தான் செய்கின்ற தவறை உங்களிடம் நியாயப்படுத்தும்போது", இப்படியான சூழ்நிலையில், நீங்கள் உதவியைபெற்றவராயின் உதவியைச்செய்தவர் விடயத்தில் உங்கள் அணுகுமுறைகள் எவை?

ஒருவரின் உதவியை பெற்றாலே ஏதோ வகையில் நாம் கடமைப்பட்டவர்களாகி விடுவோம். அது உறவினராக இருக்கலாம் அல்லது நண்பராக இருக்கலாம்.ஆனால் அதற்காக கடன் தந்தவர் எந்தவிதத்திலும் எடுக்க அனுமதிக்க கூடாது.

1.அப்படி குத்திக்காட்டுபவர் ஆயின் அவரிடம் உங்களின் பணத்தை எப்படியாயினும் தந்து விட்டுவதாகவும் குத்திக்காட்டி மனதை நோகடிக்க வேண்டாம் என அன்பாக கேட்டுக் கொள்லாம்.

2.எப்படியாயினும் மாற மாட்டார் என தெரியின் கடன் அட்டையில் அதிக வட்டிக்காவது எடுத்து அவரின் முகத்தில் வீசி எறிய வேண்டியது தான்.

3.கடன் கொடுத்தவர் வாய் பேசாதவாறு செய்தல்.

உ+ம்: வெளிநாட்டுக்கு வரும் போது எனது பெற்றோர் உறவினரிடம் பணம் கொஞ்சம் வாங்கி என்னை அனுப்பினார்கள்.பணத்தை உடனடியாக தரும்படி கேட்காததாலும் முழு நேர மாணவனாக அப்பொழுது இருந்ததாலும் பணத்தை உடனடியாக அனுப்ப முடியவில்லை. பின்னர் அவரின் பணத்தை கொடுத்து விட்டேன். பின் உறவினரின் மகன் எனக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தான். அதாவது தான் பெரதெனியாவில் படிக்க வருவதாகவும் தனது தந்தை சுகவீனமாக இருப்பதால் அதிக பணம் இல்லை என்றும் தனக்கு உதவும் படியும் கேட்டிருந்தான். அவன் படித்து முடிப்பதற்கும் வெளிநாட்டுக்கு செல்லவும் என்னால் உதவி செய்யப்பட்டது.

நல்ல உள்ளம். எனக்கு என் நண்பனின் அக்கா, தாலி அடகு வைத்து தர வெளிக்கிட்டவா, பின் வங்கியில் கடன் வாங்கி படித்தேன்

01) உதவி பெறுவது குறைவு, பெற்றாலும் அதைவிட கூடுதலாக செய்திடுவேன், இதுவரை எந்த பிரச்சனையுமில்லை .

02) நண்பனென்று வந்துவிட்டால் வேறுபாடில்லை, நண்பன்தான், மற்றவர்கள் என் மூக்கு நுனி வரைதான் அனுமதிப்பேன்.

03) வெற்றி என்பது என் மனநிலையை பொறுத்தது, பாராட்டினால் சந்தோஷம், ஏதாவது குறை கூறினால் அடுத்த வெற்றிக்கு இன்னும் உதவும்

  • கருத்துக்கள உறவுகள்

விடயம் ஒன்று:

ஒரு காலத்தில் உதவி செய்தவர் என்பதற்காக செய்நன்றி மறந்தாருக்கு உய்வில்லை என்று எல்லாவற்றையும் பொறுத்துப் போவது முட்டாள்தனம். உதவிகள் செய்ய்யும்போது பலனை எதிர்பார்க்காமல் செய்யவேண்டும். எப்போது பலனை (பணம் மட்டுமல்ல, ஒருவருக்குக் கீழ்ப்பணிவதும் இதற்குள் அடங்கலாம்) ஒருவர் எதிர்பார்த்து உதவி செய்கின்றாரோ, அவர் உதவி என்ற போர்வையில் முதலீடுதான் செய்கின்றார். எனவே உறவு வியாபார ரீதியில்தான் இருக்கவேண்டும்!

விடயம் இரண்டு:

நண்பர்கள் என்று எல்லோரையும் பொதுமைப்படுத்திவிடமுடியாது. சுக துக்கங்களை மனந்திறந்து பேசுவதற்கான நம்பிக்கையைப் பெற்றவர்கள் மிக நெருங்கிய நண்பர்களாக இருப்பார்கள். பொழுதுபோக்கவென பழகவும் நண்பர்கள் இருப்பார்கள். நெருக்கமும் நெருக்கமின்மையும் நம்பிக்கையின் அடிப்படையிலும், ஒரே அலைநீளத்தில் சிந்திக்கக் கூடிய தன்மையிலும் இருந்து உருவாகின்றது. ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள், பின்னர் இடைவெளி கூடும்போது நெருக்கம் குறைந்து நெருங்கிய நண்பர்களிலிருந்து, வெறும் நண்பர்கள் என்ற பட்டியலில் போய்விடக்கூடும். ஆகவே மாற்றங்களையும் எப்போதும் ஏற்றுக்கொள்ளும்போது நண்பர்களாக இருப்பவர்களின் நடத்தை மாறினால் அதற்கேற்ப நாங்களும் மாறவேண்டும். அதையிட்டுக் கவலைப்படுபவர்கள் நட்புக்கு மேலான உறவை எதிர்பார்ப்பவர்கள் என்று கருதுகின்றேன் (பொருள்முதல்வாதத்தில் உலகம் இயங்குகின்றது என்ற கோணத்தில் சிந்தித்துப் பார்க்கலாம்!)

விடயம் மூன்று:

ஒருவரின் வெற்றி தோல்விக்கு அவரும், சூழலும்தான் முக்கிய காரணங்கள். மனந்தளராத, விடாமுயற்சி கொண்ட எதிலும் ஆர்வம் கொண்டவர்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண்பார்கள். தோல்விகளை வெற்றிக்குப் படிகட்டுக்களாக்கும் பக்குவம் இலகுவில் வராது. வந்தால் தோல்வி என்று எதுவும் இல்லை. சமூகம் என்ன நினைக்கும் என்று சிந்தித்தால் வாழ்வில் முன்னேற்றம் காண்பது நடப்பதற்குச் சாத்தியம் குறைவு. ஏனெனில் சமூகம் சுயநலம் பிடித்தவர்களால் நிரம்பி இருக்கின்றது. முன்னேற்றமடைந்த ஒருவன் கீழே விழும்போது கை தூக்குவதைவிடுத்து கைகொட்டிச் சிரிப்பவர்கள் அதிகம் நிறைந்தது சமூகம்.

  • தொடங்கியவர்

கருத்துக்களை பகிர்ந்தவர்கள் அனைவருக்கும் முதற்கண் வணக்கமும், நன்றிகளும்.

விடயம் ஒன்று: தெளிவு ஏற்பட்டுள்ளது. இதை எவ்வகையாகக் கையாள்வது என சில தீர்மானங்கள் எடுத்துள்ளேன். ஏற்கனவேயுள்ள எனது அணுகுமுறைகளுடன் பார்க்கும்போது இவை புதியன அல்ல, ஆனால், சில சிறிய மாற்றங்களைச்செய்துள்ளேன்.

தமிழ்சூரியனின் ஓர் கருத்து இவ்விடயத்தில் அருமையாய் உள்ளது. அதாவது, "உதவி என்பது ஒருவர் தனது சுயநலத்திற்காய் செய்வது இல்லை" என்பது. இது தொடர்ந்து வாதத்திற்குரிய பொருளாகவும் உள்ளது. ஏதாவது சுயநலம் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாகவேனும் இல்லாமல் யாராவது உதவிசெய்வார்களா என்றும் சிந்தித்துப்பார்க்கவும் வேண்டும். இவ்வாறே, கிருபன் கூறுவதுபோல் ஒருவர் உதவியை முதலீடாக கையாண்டால் உறவு, தொடர்புகள் வியாபார கொடுக்கல், வாங்கல்களாக கையாளப்படும்போது அது எப்படியான அனுபவமாக அமையும் என்பது கேள்விக்குறியது.

தப்பிலி, குறிப்பிட்ட சூழ்நிலையில் தொடர்பை வெட்டிவிடுவதாகவும், இது சொந்த அனுபவம் எனவும் கூறினீர்கள். நிச்சயம் பலருக்கு அதே அனுபவம் இருக்கலாம்.

இன்னுமொருவனின் "அடிமை சாசனம்" எனும் பதம் நிச்சயம் ஒரு உலுக்கு உலுக்கி ஆட்டுவித்தது. இன்னுமொருவன், நிச்சயம் நேரம் கிடைக்கும்போது இதுபற்றி தனிப்பகுதியில் விரிவாக ஆராயுங்கள்.

விடயம் இரண்டு: இன்னுமொருவன், நுணாவிலான் ஆகியோர் இதுபற்றி கருத்துக்கூறவில்லை. நேரம் இல்லையா அல்லது வேறேதும் காரணமா? ஜீவா தனக்குக்குறிப்பிட்டுச்சொல்லும்வகையில் நண்பர் இல்லை என்று கூறியது புருவத்தை உயர்த்தவைத்தது.

விடயம் மூன்று: எமக்குத் தானே எம்மைப் பற்றி அதிகம் தெரியும், எனவே, எமது திருப்தி, வெற்றிபற்றி மற்றவர்களின் அளவுகோல் விடயத்தில் நாம் அதிகம் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை எனும் தொனியில் ரதி கூறிய கருத்து சிந்திக்கவைத்தது, ஓரளவு ஏற்றுக்கொள்ளக்கூடியதாயும் உள்ளது. இதுபற்றி இன்னுமொருவனின் விரிவானதும், ஆழமானதுமான பார்வையில் சில விடயங்கள் கேட்பதற்கு கசப்பாக இருந்தாலும் பயனுள்ளதாகவும், தொடர்ந்து சிந்திக்கவேண்டியனவாகவும் உள்ளன.

கிருபன் இப்படிக்கூறுவதும்;

"சமூகம் என்ன நினைக்கும் என்று சிந்தித்தால் வாழ்வில் முன்னேற்றம் காண்பது நடப்பதற்குச் சாத்தியம் குறைவு. ஏனெனில் சமூகம் சுயநலம் பிடித்தவர்களால் நிரம்பி இருக்கின்றது. முன்னேற்றமடைந்த ஒருவன் கீழே விழும்போது கை தூக்குவதைவிடுத்து கைகொட்டிச் சிரிப்பவர்கள் அதிகம் நிறைந்தது சமூகம்."

இவ்வாறே, ஜீவா தனது கையெழுத்தில் இவ்வாறு எழுதியுள்ளதும்;

பழி சொல்லுற உலகத்துக்கு வழிசொல்லத்தெரியாது..

சிந்திக்கவேண்டியன.

+++

விடயம் இரண்டு, விடயம் மூன்று சம்மந்தமாக இன்னும் சற்று விரிவான, வேறுபட்ட கோணங்களிலான கருத்துக்களையும் அறிந்துகொள்ள விரும்புகின்றேன். நேரம் உள்ளபோது மற்றவர்களும் உங்கள் அணுகுமுறைகளை விபரியுங்கள்.

தமிழ்சூரியன், ரதி, ஜீவா, தப்பிலி, இன்னுமொருவன், நுணாவிலான், வந்தியத்தேவன், கிருபன்... உங்கள் கருத்துக்களுக்கு மீண்டும் நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

விடயம் இரண்டு: "நண்பர்" என யாரை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்? நண்பர் என்பதற்கு உங்களின் "அர்த்தம்" என்ன? நண்பர்களில் நெருக்கம், நெருக்கமின்மை என வகையீடுகளை நீங்கள் வைத்துள்ளீர்களா? எல்லா நண்பர்களையும் ஒரே மாதிரியாகவே மதிப்பீர்களா? அல்லது நண்பர்களிடையே வேறுபாடு காட்டுவீர்களா?

நண்பர் என்பவர் பொதுவாக ஒரே அலை எண் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று கூறுவார்கள்.அதாவது ஒரே பொதுமை உள்ளவர்களாக (உ+ம்: நண்பர்கள் கிறிக்கட் விளையாடுபவர்கள்)இருந்தால் நல்லது. இத்தகைய நண்பர்களின் நட்பு ஒரு இல்லை வரை தான் இருக்கும்.சொந்த வாழ்க்கை பற்றி எல்லாம் இவர்களுடன் பேச முடியாது.உயிர் நண்பர்கள் என்போர் என்னை பொறுத்த வரையில் எதேச்சையாக எமது வாழ்வில் நுழைவார்கள். சந்தர்ப்ப வசத்தால் பிரிந்து இருந்தாலும் (25 வருடங்கள் ஆயினும்) தொடர்பை ஏற்படுத்தி மணிக்கணக்காக பேசுவார்கள்.

வாழ்வின் இன்ப துன்பங்களில் தோளோடு தோள் நிற்பார்கள். பாடசாலை நாட்களில் எப்படி மனம் திறந்து பேசினார்களோ அதே போல் 25 வருடங்களின் பின்னும் பேசுவார்கள். பணம் , மனைவி,பிள்ளைகள், புதிய நாடுகள், புதிய நண்பர்கள் புதிதாக அவர்களுடன் இணைந்து கொண்டாலும் நட்பின் தன்மையில் மாற்றம் இருக்காது.

  • தொடங்கியவர்

உன்னை அப்படியே முழுமையாக ஏற்றுக்கொள்பவன் எவனோ அவனே உனது உண்மையான நண்பன் எனும் தொனியில் (someone who fully accepts you as who you are) ஒருவரின் கருத்தைக்கேட்டேன். ஆளாளுக்கு வெவ்வேறு விதமான வியாக்கியானங்களை வைத்திருக்கலாம். விடயங்கள் இரண்டு, மூன்று சம்மந்தமாக தொடர்ந்து சிந்திக்கின்றேன்.

அன்பு வணக்கம், நேற்றிரவு மூன்று விடயங்கள் பற்றிய உங்கள் அபிப்பிராயங்களை கருத்துக்களத்தில் வினவலாம் என்று நினைத்தேன். அம்மூன்றில் இன்றுகாலை ஒன்று மறந்துவிட்டது. நினைவில் வராதுபோனதற்கு மாற்றீடாய் ஒன்றையும் சேர்த்து மூன்றுவிடயங்களை இங்கு இணைக்கின்றேன். இதுபற்றிய உங்கள் கருத்தைக்கூறுங்கள். எனக்கு வேறு எவரினுடையதாவது கட்டுரை இணைப்புக்களோ, பொன்மொழிகளோ தேவையில்லை. உங்கள் வாழ்வியலின் உண்மையான அணுகுமுறைகளை மாத்திரம் இவ்விடயங்கள் சம்மந்தமாக அறிந்துகொள்ளவிரும்புகின்றேன்.

விடயம் ஒன்று: உங்களுக்கு ஒருவர் உதவி செய்கின்றார் என வைப்போம். உதவிசெய்தவர் உதவிபெற்றவரிடம் தான் முன்பு செய்த உதவியை நினைவுபடுத்தி அல்லது அடிக்கடி குத்திக்காட்டி "தற்போது ஏதும் தவறு இழைக்கும்போது அல்லது தற்போது தான் செய்கின்ற தவறை உங்களிடம் நியாயப்படுத்தும்போது", இப்படியான சூழ்நிலையில், நீங்கள் உதவியைபெற்றவராயின் உதவியைச்செய்தவர் விடயத்தில் உங்கள் அணுகுமுறைகள் எவை?

விடயம் இரண்டு: "நண்பர்" என யாரை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள்? நண்பர் என்பதற்கு உங்களின் "அர்த்தம்" என்ன? நண்பர்களில் நெருக்கம், நெருக்கமின்மை என வகையீடுகளை நீங்கள் வைத்துள்ளீர்களா? எல்லா நண்பர்களையும் ஒரே மாதிரியாகவே மதிப்பீர்களா? அல்லது நண்பர்களிடையே வேறுபாடு காட்டுவீர்களா?

விடயம் மூன்று: ஓர் தனிநபரின் வாழ்வின் வெற்றியை, அவரது வாழ்வின் திருப்தியை தீர்மானிக்கவேண்டியது, எடைபோடவேண்டியது குறிப்பிட்ட அந்தத்தனிநபரா அல்லது மற்றவர்கள், சமூகமா? உங்கள் வாழ்வின் அர்த்தம் அல்லது வெற்றிபற்றி மற்றவர்கள்கூறும் விமர்சனங்கள்பற்றிய உங்கள் அணுகுமுறைகள் எவை? அதை எவ்வாறு கையாள்வீர்கள்?

அனைவரினதும் கருத்துக்களிற்கு முன்கூட்டிய நன்றிகள்!

Edited by சண்டமாருதன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.