Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அஜீவன் அண்ணாவுடன் யாழ் கள உறவுகள் ஓர் இனிய சந்திப்பு

Featured Replies

அப்படி வாங்க வழிக்கு,

இப்ப நானா கேட்டன் படம் நடிக்க,

பீ ஏவா உங்களைத் தான் போடலாம் எண்டிருந்தன், :lol:

நல்ல ஆளை பாத்தீங்க அங்கிள் பீஏவா :lol::lol:

  • Replies 226
  • Views 34.8k
  • Created
  • Last Reply

ஏன் கனடாவில உந்த நயகரா நீர் வீழ்ச்சி நல்ல லொகேசன் தானே?

என்ன அந்த ஆத்தைவிட உதில கொஞ்சம் கூடத் தண்ணி வரும்.சினேகிதி தானே ஓடம் ஓட்டப் போறா உதில. :lol:

அதென்ன படம் பிரகஸ்ராச் நடிச்சது? ஸ்டோரி சொல்லுங்க அப்புறம் தான் , நம்மட இமேஜுக்கு அது சரிவருமா எண்டு பாத்து, கால் சீட் பத்திக்கதைக்கலாம்.

ஏன் சினேகிதி மேல என் கோபம் அங்கிள் நயகராவில தள்ளப்பாக்கிறீங்க :roll: :roll: :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் சினேகிதி மேல என் கோபம் அங்கிள் நயகராவில தள்ளப்பாக்கிறீங்க :roll: :roll: :roll:

அதுக்காக தான் சொன்னனான் முதல்மரியாதை கதையை விடுவம். சினேகிதி நயகரால ஓடம் விடக் கஸ்டம். அதோட நயகரா அகலம் கூட... இந்தகரைல நின்று " நீ தானா அந்த குயில்" என்று பாட மற்றகரைக்கு கேட்கிற மாதிரி சூட் பண்ணினாலும் நம்புற மாதிரி இருக்காது.

அதோட நாரதர் பெரிய கல் தூக்குவாரோ?? தூக்க முடியாமல் கஸ்டப்பட பிறகு அஜீவன் அண்ணாக்கு சீ என்று போகும்.

நரதர் பிரகாஸ்ராஜ் ட படம் உங்க இமேஜுக்கு மட்டுமில்லை நாரதர் அண்ணா வயதுக்கும் நல்லாவே ஸூட்டாகும் படத்தின்ட பேர்தான் ஏனோ நினைவில வராதாம். வந்ததும் சொல்லுறன்.

:lol: :P :P :P

அஜீவன் முதல் மரியாதையை ஆங்கிலத்தில் எடுக்கிறதோ டாவின்சி கோட்டை தமிழில் எடுக்கிறதோ எண்டு கேபிள் காரிலை இருந்து யோசிக்கிறாராம். :roll:

பெரியவர் ரஜனியே ஸ்ரேயாவோட டூயட் பாடுறார் உங்களுக்கென்ன அங்கிள் மேக்கப்பை பற்றி கவலை படாதீங்க எல்லாம் தூயவன் கரித்துணியால போட்டு விடுவார் டச்சப் நான் செய்யிறன் Don't worry :wink: :P

என்னாங்க லாயாராம்மா... இப்பூடி சொல்லீட்டீங்க...நாரதசாமிக்க

----------------------------------------------------------

அது சரி உவை கனடாவிலை ஒரு சந்திப்பை நடத்திப் போட்டு பெரிய நடப்புக் காட்டுகினம். வேறை ஒருத்தரும் முயற்சிக்கெல்லையோ? நாங்கள் UKயிலை சந்திப்பமே?

அன்புடன்

மணிவாசகன்

என்னாங்க லாயாராம்மா... இப்பூடி சொல்லீட்டீங்க...நாரதசாமிக்க

அதுக்கு தான் நம்ம மேக்கப் ஆர்ட்டிஸ்ட் தூயவன் கரித்துணி மேக்கப் போடுவார் கவலைப்படாதீங்க

அங்கிளின் பீஏவா உங்களை சிபாரிசு செய்யவா மதராஸி ஸார்

அது சரி உவை கனடாவிலை ஒரு சந்திப்பை நடத்திப் போட்டு பெரிய நடப்புக் காட்டுகினம். வேறை ஒருத்தரும் முயற்சிக்கெல்லையோ? நாங்கள் UKயிலை சந்திப்பமே?

அன்புடன்

மணிவாசகன்

ஐயோ மணிவாசகன் உந்த யுகேயில சந்திப்பம் எண்டு கதை எடுக்காதயுங்கோ,

பிறகு அங்க சனம் சாக உங்களுக்கு சந்திப்பு ஒரு கேடா எண்டு கதை விடுவானுங்கள்,( தங்கட சொந்தக் கொண்டாட்டங்களை ஒருதருக்கும் தெரியாமச் செய்துகொண்டு இருப்பாங்கள்).பிறகு வட்டம் போடுறியள் கூடிக்கதைக்கிறியள் திட்டம் போடுறியள் எண்டு ஊருப்பட்ட கதை வரும்.

உதைப்பற்றித் தெரிய வேணும் எண்டா யாழ்க்கள உறுபினர்கள் பொங்கல் ஒன்று கூடல் எண்ட தலைப்புக்குள்ள போய் வாசிச்சிட்டு வாங்கா.....

என்ன நாரதர் நீங்களே கலகத்தைக் கண்டு பயப்படலாமா? சொல்லுவார் சொன்னால் கேட்பாருக்கு மதியென்ன எண்டு கேள்விப்பட்டிருப்பீங்கள் தானே? ஒரு முயற்சி தானே? என்ன சொல்லுறீங்கள்?

அன்புடன்

மணிவாசகன்.

என்ன நாரதர் நீங்களே கலகத்தைக் கண்டு பயப்படலாமா? சொல்லுவார் சொன்னால் கேட்பாருக்கு மதியென்ன எண்டு கேள்விப்பட்டிருப்பீங்கள் தானே? ஒரு முயற்சி தானே? என்ன சொல்லுறீங்கள்?

அன்புடன்

மணிவாசகன்.

எதோ சொன்னன், சரி அப்ப நீங்க செய்யுங்க ,

முதலில ஒரு அறிவித்தல் போடுங்க யார் யார் வருகினம் எண்டு பாப்பம்.

சில பேர் நேரத்திற்கே கொலிடே புக் பண்ணியிருவினம்.சில பேர் கோவிலுக்குப் போயிடிவினம் பிறகு நானும் நீங்களும் தான் சந்திக்க வேண்டி வரும்.

உது அப்படி எண்டா நான் உதுக் கெண்டு லண்டன் வர ஏலாது,வரேக்க உங்களைச் சந்திக்கிறன்.ஒகேயா? :wink:

அதுக்கு தான் நம்ம மேக்கப் ஆர்ட்டிஸ்ட் தூயவன் கரித்துணி மேக்கப் போடுவார் கவலைப்படாதீங்க

அங்கிளின் பீஏவா உங்களை சிபாரிசு செய்யவா மதராஸி ஸார்

அங்கிளுக்கு ஆம்பிளை பீஏ ங்களாங்க....என்னங்க நீங்கள்.........

ஏன் நான் நல்லா இருக்கிறது உங்களுக்கு பொறுக்க வில்லயா?

அஜீவன் அண்ணா என்ன 'முதல் மரியாதையின்ட' ரீமேக் ஓ எடுக்கிறார்?

:lol::lol:

இதோ நடப்புக்காட்டுறமாம் என்ன நடப்புக் காட்டினாங்கள் மணிவாசனண்ணா?

விட்டா நித்தி விஸ்ணு அண்ணா நாரதர் அண்ணா எல்லாரும் சேர்ந்து இங்கயே படம் எடுத்து முடிச்சுடுவீங்கள் போல இருக்கு.

அங்கிளுக்கு ஆம்பிளை பீஏ ங்களாங்க....என்னங்க நீங்கள்.........

மதராசி சாருக்கு ஊரில ஆயிரம் .......ம் இருக்கும்,

பிஏவா வேலை செய்ய எங்க நேரம் இருக்கு? :wink:

வணக்கம் நாரதர்

பிறகு நானும் நீங்களும் தான் சந்திக்க வேண்டி வரும்.

அதுக்கென்ன ஒராள் வந்து நிண்டிட்டுத் திரும்பிப் போனாத் தான் கவலைப்பட வேணும். ரெண்டு பேர் சந்தித்தாலே வெற்றி தானே. எதுக்கும் பொறுத்துப் பாப்பம். எங்கடை உறவுகளின்ரை கருத்துகள் எப்படி இருக்குது எண்டு

அன்புடன்

மணிவாசகன்

யாராவது தூயா ஆரம்பிச்ச தாயகப்பாடல்களுக்கான இணைப்பு தருவீர்களா பிளீஸ்

உம்!!

நான் கொடுத்த கரித்துணி மேக்கப் எவ்வளவு எல்லோரையம் வடிவாக வைத்திருக்கின்றது! அஜீவன் அண்ணாவும் அப்படிப் போட்டிருந்தால் நன்றாக இருக்குமே! :wink: :wink: :P :P

பரவாயில்லை! அடுத்த முறை எல்லோரும் அதை முயற்சி செய்யுங்கள்! :wink:

அடே அண்ணா சரி மேக்கஒ போட்டிங்கள் தான் போட்டிங்கள் ரசிகை அக்காகும்(?) ராமா அக்காகும் போடமா விட்டு இருகலாமே :P :P

கொன்ஞ்சம் ஆவது சகிச்சு இருக்கலாம் :wink: :wink:

தூயா ஆரம்பிச்ச தாயகப்பாடல்களுக்கான இணைப்பு தந்த றமாக்காக்கும் கந்தப்புக்கும் நன்றி:-)

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்கு மேக்கப்பே நான் போடவே இல்லையே!! மேக்கப் போடமல் தான் இப்படி அழகு!! :wink: :P

வணக்கம் இனிய உறவுகளே

போகுமிடமெல்லாம் நினைப்பதெல்லாம்

நினைத்தது போல நடக்க வாய்ப்பிருக்காது.

இருந்தாலும் அவற்றை சமாளித்து மீண்டு வருவதற்கு மனது ஏனோ உடனடியாக அனுமதிப்பதில்லை.

புதிய நாடுகள் - புதுமையான அனுபவங்கள்.

அமெரிக்காவில் உள்ள நண்பர்கள் என்னோடு என்ன பேசினார்களோ

அதைவிட நன்றாகவே செயல்படுத்த உதவினார்கள்.

அதே போல நினைத்து டொரொன்டோ(கனடா) வந்தால் ................?

டொரோன்டோவில் நான் எதிர்பார்த்தவை மட்டுமல்ல

பேசிய படி ஒழுங்குகளை செய்திருப்பதாகக் கூறிய நண்பர்

செய்த குறளி வித்தைகளால் 3 நாட்களை அநியாயமாக சாகடித்ததை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.

அவர் தன்னை ஒரு அறிவு ஜீவியாகக் காட்டிக் கொண்டார்

என்பதை விட முயல்கிறார் என்பது நகைப்பாகவே இருந்தது எனக்குள்................

ஆனால்

அவர் ஒரு மனநோயளியாக மட்டுமல்ல

சிறு பிள்ளைத்தனமாகவும் நடந்து கொண்டதை பார்த்த போது

நான் மனநல மருத்துவ மனைகளில் பார்த்ததை விட

மோசமான ஒரு நோயாளியாகவே அவரைக் காண முடிந்தது.

இன்னுமொரு தேசத்திலிருந்து போகும் போது

காலம் என்பது எவ்வளவு தூரம் பயணற்றுப் போகிறதோ

அது ஒரு கொடுமை...........

அதை அது புரிந்து கொள்ளவில்லை.

இருந்தாலும் இறுதி நாளில் நாடகம் பார்க்கப் போன போது

அந்த மனநோயாளி என்னைக் கண்டதும்

ஓடி ஒளிந்து கொள்ள முயன்றதை பார்த்த போது

எனக்கே கேவலமாக இருந்தது.

அந்த இடத்திலும் நான் அவர் முன்னால் நடந்த போது

குறுகிப் போன அவரை சட்டை செய்யாமல் பக்கத்திலிருந்தவரிடம் வணக்கம் என்று சொல்லி

வேண்டுமென்றே நடந்த போது............ :wink: :lol: :wink:

அந்த மனநோயாளியை நம்பி 3 நாட்களை சாகடித்து

பின்னர் என்னை மீண்டும் தயார்படுத்திக் கொள்ள

எனக்கு அமைதியாக தெம்பாய் நின்று

உறுதுணை செய்த என் உடன் பிறப்பான நண்பன் பரதனையும்

இறுதி நேரத்தில் முகம் தெரியாமல் இருந்தும்

சுயநலமே இல்லாமல் நினைத்தவற்றை விட

அதற்கும் மேலாக தன்னால் முடிந்த அனைத்தயும் செய்து

எனக்கு உதவிய நண்பர் கணபதி ரவீந்திரனையும்

சகோதரி ரூபியையும் என்னால் மறக்கவே முடியாது.

அத்தோடு அவர்கள் ஏற்படுத்தித் தந்த ஏனைய உறவுகளால்

கனேடிய தமிழ் வானோலி மற்றும் தொலைக் காட்சிகளுக்கு

புயல் வேகமாய் போய் வர வேண்டியதாயிற்று.............

அங்கும் எப்படியோ பல தெரிந்த - தெரியாத முகங்கள்

பின்னர் உறவாகிப் போனதுதான் பெரு மகிழ்ச்சி.

அவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

அவர்கள் பற்றி பின்னர் விபரமாக எழுதுகிறேன்.

வானோலிகளில் பேட்டிகளின் போதும் பெயர் சொல்லாமல் கடிந்து கொண்டேன்.

ஆனால் தனிப்பட சொல்லி விட்டே வந்தேன்.

இவர்களது அறிவுஜீவியான நாடக முகமூடிகள் விரைவில் கிழிக்கப்பட வேண்டும்.

அப்படியான அனுபவங்களோடு நேற்று வீடு (சுவிஸ்)வந்தேன்.

தவிர

வன்கூவரிலிருந்து டொரொன்டோ வழி சுவிஸ் வர 19 மணி நேரத்துக்கு மேல் எடுத்ததில் பிரயாண அசதி வேறு..............

வந்தவுடன் வேலைக்கு வேறு உடன் போக வேண்டியதாயிற்று...........

யாழ்கள கனடா இனிய சகோதர உறவுகளுக்கும் நடந்தவற்றை கொஞ்சமாக சொல்லி விட்டே வந்தேன்.

அதனால் அவர்களும் கொஞ்ச நேர சந்திப்பை கூட

பொறுத்துக் கொண்டு உதவியது மனதுக்கு ஆறுதல்.

அவர்களுக்கும் நன்றி.

அதுவரை ............................... :lol:

என்றென்றும் அன்போடு உங்கள்

அஜீவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.