Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்?

Featured Replies

kevin-and-a-eagle-1.jpg?resize=500%2C312

புலிட்சர் விருதின் முலம் உலகப் புகழ்பெற்ற படம்

 

 

புலிட்சர் விருதின் முலம் உலகப் புகழ்பெற்ற இந்தப் படத்தை எடுத்த கெவின் கார்ட்டர் தற்கொலை செய்து கொண்டார் ஏன்?

கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் அழகிய ஊரான ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர். உலகப் புகழ்பெற்ற புகைப்படக்காரர். எல்லா சிறந்த புகைப்படக்காரர்களைப் போன்றே இவருக்கும் நல்ல புகைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற ஆசையும் ஆர்வமும் இருந்தன. இந்த ஆர்வம் அவரை நாடு,நகரம்,கிராமம்,காடு, மலை என்று கொண்டு சென்றது.

1993 இல் இந்த ஆர்வம் அவரைத் தனது சக புகைப்படப் பத்திரிக்கையாளர்களுடன் சூடானுக்குக் கொண்டு சென்றது. அப்போது சூடான் வரலாறு காணாத பஞ்சத்தில் சிக்கித் தவித்துக் கொண்டு இருந்தது.குறிப்பாக சூடானின் தென்பகுதி மக்கள் உண்ண உணவின்றி, பருக நீரின்றி பசி, தாகத்தில் தவித்துக் கொண்டிருந்தனர்.பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்ய கெவின் தொலைதூர கிராமங்கள் வரை சென்றார்.

kevin-and-a-eagle-2.jpg?resize=500%2C312

கெவின் கார்ட்டர்

இறுதியாக அவர் முயற்சி கைகூடியது. ஒரு நாள் தன் காமிராவை தோளில் தொங்க விட்டுக் கொண்டு உள்ளத்தை உலுக்கக் கூடிய படத்துக்கான காட்சியைத் தேடியலைந்து கொண்டிருந்தபோது அப்படிப்பட்ட காட்சி தென்பட்டது அவரது நற்பேறு என்றுதான் கூற வேண்டும்.பசி பஞ்சத்தால் அடிபட்ட நோஞ்சன் நிலையில் உள்ள ஒரு சிறுமி நடக்கக் கூட இயலாத நிலையில்  எலும்புக் கூடு போன்ற தன்னுடலை தவழ்ந்து இழுத்துக் கொண்டு மெல்ல மெல்ல ஊர்ந்து செல்வதைக் கண்டார்.

அந்தச் சிறுமி ஐக்கிய நாடுகளின் சபையின் சார்பாக அமைக்கப்பட்டு இருந்த உணவு வழங்கும் முகாமை நோக்கி தள்ளாடியபடி தவழ்ந்து கொண்டிருந்தது உண்மையிலேயே இதயத்தைப் பிழியக் கூடியதாக இருந்தது.

 

தோளில் இருந்து காமிராவை இறக்கி கோணம் பார்த்த கெவினுக்கு இன்னொரு வியப்பும் காத்திருந்தது.

 

ஆம்; அந்த எலும்பும் தோலுமான சிறுமிக்கும்ப் பின்னாலேயே சிறிது தொலைவில் ஒரு பிணம் தின்னிக்கழுகும் சிறுமியின் மீது பார்வையை நிலை நிறுத்திக் கொண்டு இருந்தது.

 

எப்போது சிறுமியின் உடலை விட்டு உயிர் பிரியும்; மீதியுள்ள அந்தத் தோலையும் அதைச் சுற்றி இருக்கும் சிறிது மாமிசத்தையும் எப்போது சாப்பிடலாம் எனக் காத்திருந்தது பிணம் தின்னிக்கழுகு.

 

கெவின் கேமரா லென்சை கண்ணுக்கு ஒத்திக் கொண்டார்; சிறுமியையும் கழுகையும் ஒரு பிரேமில் அடக்கிக் கொண்டு ‘க்ளிக்’ செய்தார்.

 

இப்போது அவரது புகைப்படக்கருவியில் மிக அரிதினும் அரிதான படம் பதிவாகி விட்டது.

 

இதை விற்றால் நல்ல விலை கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில் காமிராவைத் தோளில் மாட்டிக் கொண்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்தார்; பறந்து விட்டார். இந்த அரிதான படத்தை ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிக்கைக்கு விற்று விட்டார்.

 

இந்தப் புகைப்படம் 1993 மார்ச் திங்கள் 26 ஆம் நாள் காலை நாளிதழில் முதல் பக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தைப் பார்த்ததும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொலைப்பேசி மூலம் தொடர்புக் கொண்டனர்.

 

அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டனர். புகைப்படத்தில் உள்ள சிறுமி என்ன ஆனாள்? அவள் உயிருடன் பிழைத்தாளா அல்லது இறந்து விட்டாளா? இந்தக் கேள்விக்கான பதில் பத்திரிக்கையின் தொலைப் பேசி ஆப்ரேட்டரிடமோ படத்தை எடுத்த கெவின் கார்ட்டர்டமோ இல்லை.

 

1994இமே 23 அன்று பெரும் கை தட்டல்களுக்கு இடையே கெவின் கார்ட்டர் கொலம்பியப் பல்கலைக்கழகத்தின் பிரமாண்டமான அரங்கத்தில் இந்த அரிதான புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார் இந்த விருது புகைப்படத் துறையில் நோபல் விருதுக்கு இணையானது.

 

விருது பெற்ற சில நாட்களுக்குப்பின் கெவின் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

 

கெவினுக்கும் அங்கு இருந்த பிணம்தின்னிக் கழுகுக்கும் என்ன வேற்றுமை? இரண்டும் ஒரே விதமாகத்தான்

செயல்பட்டுள்ளனர்.

 

‘குறைந்தபட்சம் புகைப்பட நிபுனர் கெவின் அந்த சிறுமிக்கு ஒரு வாய் தண்ணீர் அல்லது சாண்ட்விச் தந்து உயிரைக் காப்பாற்றி இருக்கலாம்; அல்லது தனது வலுவான கைகளினால் அந்தச் சிறுமியைத் தூக்கிச் சென்று உணவளிக்கும் அமைப்பு அலுவலகத்தின் வாயிலிலாவது சேர்த்து இருக்கலாம்; கல்லெடுத்து வீசி அந்தக் கழுகையாவது விரட்டி இருக்கலாம்; ஆனால் இவற்றில் எதையும் செய்யாமல் வெறும் ஒரு படத்தை எடுத்தார்; அதை அதிக விலை தந்த பத்திரிக்கைக்கு விற்று விட்டார் என்று ஒருவர் அவர் மீது குற்றம் சாட்டியதுதான் காரணம்.

 

புகைப்பட வல்லுநர் கெவின் விரைவில் ஜோஹன்ஸ் பர்க் திரும்பி விட்டர். இரண்டு மாதங்களுக்குப் பின் கடற்கரைக்கு அருகில் அவரது கார் நின்று கொண்டிருந்தது. அதில் அவர் பிணமாகக் கிடந்தார்.

 

கெவின் தற்கொலை செய்துகொண்டார்.அவரது பிணத்திற்கு அருகில் காவல்துறைக்கு ஒரு கடிதம் கிடைத்தது. அதில் சில வரிகளே இருந்தன. முதல் முதல் வரி I am Really, Really Sorry.

 

இன்று பல்வேறு செய்தி சேனல்களிலும் அடிபட்டும் விபத்துக்குள்ளாகியும் இரத்தச் சிதறலில் துடித்துக் கிடப்பவர்களைப் படங்களாய்ப் பார்க்கும் போதும் அவர்களின் அபயக் குரலைக் கேட்கும் போதும் ஏனோ கெவின் கார்ட்டர் நினைவுக்கு வருகிறார்.

 

நன்றி

அருண் குமார்.

http://rste.org/2012/12/07/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க நெஞ்சை எதோ செய்கிறது. குற்ற உணர்வு எல்லாவற்றிலும் மேலான நீதிபதி. ஆனால் இந்தக் குற்ற உணர்வுகூடத் தமிழனுக்கு இல்லாமல்த்தான் தன இனத்தையே காட்டிக்குடுக்கவும் சோரம் போகவும் அலைகிறான். நன்றி அகூதா

  • தொடங்கியவர்

மனச்சாட்சி இல்லாதவர்களால் நீண்டகாலம் நிம்மதியாக வாழ முடியாது என்பதையும்,
அவர்கள் இறப்பு கூட அநாதரவான ஒரு சம்பவமாக அமையலாம் என்பதை


கெவினின் கதை கூறுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

எம் அழிவை  பார்த்துக்கொண்டிருந்தோர் அழிவது எப்போது..........???

  • கருத்துக்கள உறவுகள்

kevin-and-a-eagle-2.jpg?resize=500%2C312

கெவின் கார்ட்டர்

 

இணைப்புக்கு நன்றி அகூதா.

இதுபோன்று ............

பாங்கிமூன்

நம்பியார்(ஐநா)

சோனியா (காந்தி)

எரிக் சோல்கைம்

யசூகி அகாசி   

 

 

போன்றோரையும் மனச்சாட்சி உலுக்குமா? அல்லது இவர்களுக்கு மனமென்று ஒன்று இருக்கிறதா என உலகத்தில் பின்னாளில் ஆராய்வார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

கெவின் கார்ட்டர் சிறந்த புகைப்படப் பிடிப்பாளராக, இருக்கலாம். ஆனால்... அவன், மனிதன் அல்ல. அவன் தற்கொலை செய்ததின் மூலம்.. தனது பாவத்திற்குப் பிராயச்சித்தம் தேடிக் கொண்டுவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க நெஞ்சை எதோ செய்கிறது. குற்ற உணர்வு எல்லாவற்றிலும் மேலான நீதிபதி. ஆனால் இந்தக் குற்ற உணர்வுகூடத் தமிழனுக்கு இல்லாமல்த்தான் தன இனத்தையே காட்டிக்குடுக்கவும் சோரம் போகவும் அலைகிறான். நன்றி அகூதா

 

அது மனிதர்களுக்கு மட்டுமே இருக்க  கூடியது.

 
மனித வடிவில் இருந்துவிட்டால் மிருகங்களுக்கு வந்திவிடும் என எதிர்பார்க்க முடியாது.

இந்த வார ஆரம்பத்தில் அமெரிக்காவில் ஒருவரை இன்னொருவர் subway station இல் வைத்து ரயில் வரும் போது தள்ளி விட்டு இருக்கின்றார். வீழ்ந்தவர் ரயில் வருவதை கண்டு தண்டவாளத்தில் இருந்து மேடைக்கு ஏற உதவி கேட்டு இருக்கின்றார். ஒருவரும் உதவி செய்யவில்லை. 21 வினாடிகள் கழிந்து ரயில் அவரை முட்டி மோதி கடந்து போய் நின்று இருக்கு. அவரும் இறந்து விட்டார்.

 

இவ்வளத்தையும் ஒரு புகைப்படக்காரர் படம் பிடித்து பத்திரிகையில் போட்டு இருக்கின்றார். கிடைத்த 21 வினாடிகளில் அவரைக் காப்பாற்ற முயலவில்லை.

 

victim122928--525x325.jpg

  • தொடங்கியவர்

இன்றைய உலகில் ஆளுக்கு ஒரு கைத்தொலைபேசி

அதில் புகைப்படம் எடுக்கும் வசதிகள்


அவற்றை எடுத்து சமூகவலை தளங்களில் ஏற்றுவதும்....

தம்மை பிரபல்யம் அடைய ச்செய்வதும்...
பணம் சம்பாதிப்பதும் ....

 

சில சமயங்களில் தொலைந்தது மனிதம் !

  • தொடங்கியவர்

கொத்துக் குண்டு சீறி வந்து மடியில் விழுந்ததே
தாய் கர்ப்பம் கொண்ட குழந்தை
கூட தீயில் எரிந்ததே
கைகள் கால்கள் அங்குமிங்கும் சிதறிக் கிடந்ததே
அட கொத்துக் கொத்தாய் தமிழர் உடல்
மண்ணில் புதைந்ததே



189294_356377684457801_719083850_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இந்த, உலகமே.... பம்மாத்து உலகம். மாயா கலன்டர்படி.... டிசம்பர் 21ம் திகதி இந்தப் பூமியே... அழிந்து, நல்ல மனிதர் பிறக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ரயில் விபத்து கொடுமையானதா இருக்கு.. :blink:



21 வினாடிகளுக்குள் ரயில் நிலையத்தின் முடிவுவரை ஓடிப்போயிருந்தால் தப்பியிருப்பாரோ? :blink:

  • கருத்துக்கள உறவுகள்

கெவின் கார்ட்டர் சிறந்த புகைப்படப் பிடிப்பாளராக, இருக்கலாம். ஆனால்... அவன், மனிதன் அல்ல. அவன் தற்கொலை செய்ததின் மூலம்.. தனது பாவத்திற்குப் பிராயச்சித்தம் தேடிக் கொண்டுவிட்டார்.

  • தொடங்கியவர்

மூன்று வருடங்கள் கடந்து மீண்டும் நேற்று டொராண்டோவின் அமெரிக்க தூதுவரலாயத்தின் முன்னால் நின்றோம். நின்ற பல நூறு பேருடன், சிறுவர், இளையவர், முதியோர் என.

 

பல நூறு மக்கள் நிமிடத்திற்கு கடந்து செல்ல, அமெரிக்க தூதுவராரலயத்தில் இருந்து எங்களை பார்க்க .. அவர்கள் எனக்கு கெவின் கார்டரின் தெரிந்தார்கள்.


அந்த சூடான் குழந்தை .... தாயக உறவுகளாக தெரிந்தனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.