Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய... பாடல்.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலை ரசித்த... உடையார், தப்பிலிக்கு நன்றி :).
இன்று ஒளிபரப்பாகும், பாடலை முன்பு கேட்டுள்ளீர்களா....
"பூவும் பொட்டும்" படத்திலிருந்து.... "நாதஸ்வர ஓசையிலே... தேவன் வந்து பாடுகின்றான்"
கவி வரிகள்: கண்ணதாசன்.
இசையமைப்பு: கோவர்தன்.
பாடியவர்கள்: சௌந்தர்ராஜன் & சுசீலா.
நடிகர்கள்: ஏ.வி.எம்.ராஜன் & பாரதி.

 

http://www.youtube.com/watch?v=67KTtmQcn2g

Edited by தமிழ் சிறி

  • Replies 2.1k
  • Views 180k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் வருகைக்கு, நன்றி வந்தியத் தேவன் :).
"பாலும் பழமும்" படத்திலிருந்து(1961, "பாலும் பழமும் கைகளில் ஏந்தி...."

பாடலாசிரியர்: கண்ணதாசன்.
பாடியவர்: சௌந்தர்ராஜன்.
இசை: விஸ்வநாதன் & ராமமூர்த்தி.
நடிப்பு: சிவாஜிகணேசன் & சரோஜாதேவி.


நன்றி சிறி, இது அருமையான பாட்டு, இதன் விளக்கம் ஒருவர் கொடுத்துள்ளார் கீழே பாருங்கள்

 

என்னைக்கவர்ந்த பாலும் பழமும் கைகளில் ஏந்தி என்ற திரைப் பாடலையும் அதன் பொருளையும் விதை2விருட்சம் வாயிலாக உங்களோடு பகிர்ந்துகொள்வது பெரு மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். இதோ எனது வரிகள் கீழே விவரித்துள்ளேன்.


 

1961ஆம் ஆண்டு இயக்குநர் பீம்சிங்க இயக்க‍த்தில் பாலும் பழமும் என்ற திரைக்காவியம் வெளியாகி பெரு வெற்றி பெற்ற‍து. இதில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கதாநாய கனாகவும், கன்ன‍டத்து பைங்கிளி, கொஞ்சு கிளி சரோஜாதேவி கதா நாயகியாக நடித்துள்ள‍னர். மேலும் இத்திரைப்படத்தில் நடிகவேள் எம்.ஆர். ராதா, டி.எஸ். பாலையா, எஸ்.வி. சுப்பையா, சௌகார் ஜானகி, மனோரமா மற்றும் பலர் நடித்து மெருகூட்டியிருப்ப‍ர்.


 

இத்திரைப்படதில் வரும் அனைத்துப்பாடல்களையும் எத்த‍ன முறை கேட்டாலும் ஏதோ புதியதா க கேட்பது போலவே ஒரு உணர்வு நமக்கு ஏற்படும். இத்திரைப்படத்தில் மிகவும் என்னை கவர்ந்த பாடல் என் றால், அது பாலும் பழமும் என்று தொடங்கும் பாடலே!


 

இப்பாடல் நடபைரவி என்ற ராகத்தில் அமைந்துள்ள‍து. இது இருபதாவது மேளகர்த் தா ராக மாகும். இது பெண் பால் ராகம் என்றும் தமிழி சையில்“ஓரி” ராகம் என்றும்  அழைக்க‍ப்பட்டு வருகி றது.  இது ஹிந்துஸ்தானி இசையில் மரபில் ‘ஆசாவரி’ என்றழைக் கபடும். இது மாலையில் பாடப்படும் பாடவே ண்டிய ராகமா கும்.


 

மெல்லைசை மன்ன‍ர்களால் வடிவம்பெற்று, கவியரசர் கண்ண‍தா சனின் அற்புத வரிகளால் உயிரூ ட்ட‍ப்பட்டு, காவியப்பாடகர் டி. எம் .சௌந்தர்ராஜனால் உணர் வூட்ட‍ப்பட்டு, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களால் செரிவூட்ட‍ப்பட்டு இனிதே அமை ந்த இப்பாட ல் ஆகும்.


 

இந்த ராகத்தின் ஸ்வரங்கள் :


 

ஆரோஹணம் : ஸ ரி2 க1 ம1 ப த1 நி1 ஸ்
அவரோஹணம் : ஸ் நி1 த1 ப ம1 க1 ரி2 ஸ


 

{ஷட்ஜமம், சதுஸ்ருதி, ரிஷபம், சாதாரண காந்தாரம், சுத்த மத்யமம், பஞ்சமம், சுத்த தைவதம், கைஷிகி நிஷாதம்}


 

இதில் அனைத்து உணர்வுகளை யும் ஒருங்கே அமைந்திருக்கும்


 

த‌னது மனைவி, நோய் வருவத ற்கு முன்பு எப்ப‍டி இருந்தாள் என்ப தையும், தீரா நோய்வாய்ப் பட்ட‍போது அவளது உடலும் உள்ள‍மும் எப்ப‍டி சோர்ந்து, போ னது என்பதை ஒப்பிட்டு வாசமு ள்ள‍ வரிகளை பயன்படுத்தி வாசமிழந்த அம்மலரை தேற்றி, அவள் மனதளவில் அவளை நம்பிக்கை விதைகளை விதைத்து வடித்ததை கேட்கும்போது பார்க்கும்போது, உணரும்போது,  நமது கண்களில் நீர் வர வழைக்கி றது.


 

அந்த‌ கணவன் தனது மனைவியின் மீதுள்ள‍ கொண்டுள்ள‍ அன்பின் ஆழ த்தையும் காதலின் புனிதத் துவத்தை யும் எடுத்துக்காட்டுவதாக அமைந்து ள்ள‍து இதன் சிறப்புக்கு மேலும் மெரூ கூட்டுவதாக இருக் கிறது.


 

பாடல் வரிகள் அடைப்புக்குறிக்குள் உள்ள‍ நீல நிற வரிகள் , விளக் க‍ம் சிகப்பு நிறத்திலுள்ள‍ வரிகள்)
 


 

(பாலும் பழமும் கைகளில் ஏந்தி)
இரவில் த‌னது பசி அறிந்து  ஒரு கையில் பாலும், மறு கையில் பழங் களையும் தனது மனைவி எடுத்து – அதை


 

(பவழ வாயில் புன்னகை சிந்தி)
புன்ன‍ கை  பூத்த‍ மலராக பூத்து குலுங்கியவாறே


 

(கோல மயில் போல் நீ வருவாயே)
கார்மேகம் கண்டுவிட்ட‍ அழகிய தோகை மயிலென‌ வந்தாயே என் றும்

(கொஞ்சும் கிளியே அமைதி கொள்வாயே)
கொஞ்சும் கிளிபோல பேசுபவளே மன‌ அமைதி கொள் என்றும்


 

(பிஞ்சு முகத்தின் ஒளியிழந்தாயே)
மழலையின் முகப்பொலிவை தனது மனைவி இழந்துவிட்டாலே!


 

(பேசிப் பழகும் மொழி மறந்தாயே)
ஒரு வார்த்தைக்கூட பேச சக்தி அற்றும் செவி அடைத்தும் கிடக்கி றாயே


 

(அஞ்சி நடக்கும் நடை மெலிந்தாயே)
ந‌டக்கக்கூட முடியாமல் மெல்ல‍ நடப்ப‍தாகவும்


 

(அன்னக் கொடியே அமைதி கொள்வாயே)
அன்னக் கொடியிடைபெண்ணே மன அமைதிகொள்


 

(உண்ணும் அழகைப் பார்த்திருப்பாயே)
நீ பறிமாறிய உணவை, நான் உணவரு ந்தும்போது அந்த அவள் அழகை ரசித்த‍ தாகவும்,


 

(உறங்க வைத்தே விழித்திருப்பாயே)
நான் உறங்கும் வரையில் விழித்திருப்பாயே!


 

(கண்ணை இமைபோல் காத்திருப்பாயே)
கண்களை காக்கும் இமைகள் போல என்னை காத்தாயே!

(காதற் கொடியே கண் மலர்வாயே)
க‌தல்பெண்ணே கண்திறந்து பார்ப்பா யே


 

(ஈன்ற தாயை நான் கண்டதில்லை)
தாயைக்கூட பார்க்காத எனக்கு மனைவியான உன் வடிவில் தாயை யும் கண்டுவிட்டேன்.


 

(எனது தெய்வம் வேறெங்கும் இல்லை)
தெய்வம் என்று தனியாக ஒன்று இல்லை அந்த தெய்வமே எனது தாய் நீதானம்மா

(உயிரைக் கொடுத்தும் உனை நான் காப்பேன்)
தாயாகவும், தெய்வமாக இருக்கும் உன்னை எனது உயிரைக் கொடுத்து காத்திடுவேன்.


 

(உதய நிலவே கண் மலர்வாயே)
உதிக்கும் (குளிர்ச்சியான) நிலவே கண் திறப்பாயே


 

பாலும் பழமும் கைகளில் ஏந்தி
பவழ வாயில் புன்னகை சிந்தி
கோல மயில் போல் நீ வருவயே
கொஞ்சும் கிளியே அமைதி கொள்வா யே


 

என்று நெஞ்சுருக பாடி, ஒரு கணவன் தனது மனைவியின்பால் தான் கொண்டுள்ள‍ காதலின் ஆழத்தை அழகாகவும் அற்புதமாக சித்தரிக் க‍ப்பட்டிருக்கும் இந்த பாடல் என்னை கவர்ந்ததுபோல் உங்களையும் கவரும் என்ற நம்பிக்கையுடன் கீழே அந்த அற்புத பாடல் தாங்கிய வீடியோ உங்களை மகிழ்விக்க‍ காத்திருக்கிறது. பாருங்க, கேளுங் க, உணருங்க!

 

http://vidhai2virutcham.wordpress.com/



படங்களை போட முடியவில்லை, இதில் போய் பாருங்கள்

 

http://vidhai2virutcham.wordpress.com/2012/11/13/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A8/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சிறி, இது அருமையான பாட்டு, இதன் விளக்கம் ஒருவர் கொடுத்துள்ளார் கீழே பாருங்கள்

 

 

http://vidhai2virutcham.wordpress.com/

படங்களை போட முடியவில்லை, இதில் போய் பாருங்கள்

 

http://vidhai2virutcham.wordpress.com/2012/11/13/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A8/

 

நன்றி வந்தி, உங்கள் இணைப்புக்குச் சென்று பார்த்தேன். மிக ர‌சித்து அழகாக வர்ணித்திருந்தார்.

உண்மையில், இன்று காலை... இந்தப் பாடலை இணைக்க முதல், முழுதாகக் கேட்டுப் பார்த்த போது கண்கள் கலங்கிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் இந்தப் பாடல் பிடிக்கும், தமிழ் சிறி, வந்தி!

 

இந்தப் பாட்டுக்குப் பிறகுதானா, எங்கட கலியாண வீடுகளில ..சீலையால மறைச்சுப் பால்,பழம் கொடுக்கிற விளையாட்டுத் தொடங்கினது? :D .,

 

  • கருத்துக்கள உறவுகள்

பழைய பாடல்கள் எல்லாமே அருமைதான். நன்றி சிறி பாடலுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சிறி பாடலுக்கு, இன்று ஒரு தகவல் என்ற மாதிரி, இன்று ஒரு பாடல் நன்றாக போகிறது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடலை ரசித்து, ஊக்கம் தந்த வ‌ந்தியத்தேவன், புங்கையூரான், சுமோ, உடையார் ஆகியோருக்கு நன்றி :).
உங்களது ஊக்கம் என்னை, மிகச் சிறந்த பாடல்களை தேடி எடுப்பதற்கு... உந்து சக்தியாக இருக்கின்றது :rolleyes:.
தீர்க்க சுமங்கலி (1974) படத்திலிருந்து, "மல்லிகை என் மன்னன் மயங்கும்..." பாடல்.

பாடலை இயற்றியவர்: வாலி.
இசையமைப்பு: விஸ்வநாதன்.
பாடியவர்: வாணி ஜெயராம்.
நடிகர்கள்: முத்துராமன் & கே.ஆர்.விஜயா.


 

  • கருத்துக்கள உறவுகள்

நம் இல்லம் சொர்கம்தான்

நம் உள்ளம் வெள்ளம்தான் ஒன்றோடு ஒன்றானது

என் சொந்தமும் இந்த பந்தமும் உன்னோடுதான்

நான் தேடிக்கொண்டது

 

நல்ல அருமையான பாடல் சிறியண்ணா. பாடலின் ஒவ்வொரு வரியையும் ரசிக்கிறேன். கவிஞர் வாலி இப்படி இலக்கியத் தரமான பாடல்களையும் தந்திருக்கிறாரா என வியக்க வைத்தது.

நன்றி சிறி, நல்ல பாடல்களாக தேர்வு செய்து இணைக்கின்றீர்கள், தொடருங்கள்...

 

மல்லிகை பூ வாசத்துடன், அந்த பந்தலுக்கு கீழிருந்து....ஆகா...என்ன ஒரு சுகம்...அனுபவம்...உடம்பே சிலிர்க்கின்றது. இனி எப்போ...

  • கருத்துக்கள உறவுகள்

பாடலுக்கு நன்றி சிறி. எனக்காக ஆயிரம் நிலவேவா என்ற பாடலை இணைக்க முடியுமா??

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கடை சிறித்தம்பி பேய்க்காய்.....    Srithambi.gif  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை ர‌சிக்க‌ வ‌ருகை த‌ந்த‌... காவாலி, வ‌ந்திய‌த்தேவ‌ன், சுமோ, உடையார், குமார‌சாமி அண்ணாவிற்கு ந‌ன்றி :).
இன்றைய‌ பாட‌ல், சுமோவின் விருப்ப‌ப் பாட‌லாக‌ ஓளிப‌ர‌ப்பாகின்ற‌து.
அடிமைப் பெண் (1969) ப‌ட‌த்திலிருந்து, "ஆயிர‌ம் நில‌வே... வா..."

1966´ம் ஆண்டு இந்த‌ப் படம் எம்.ஜீ.ஆரால் த‌யாரிக்க‌ப் ப‌ட்டுக்கொண்டிருந்த‌ வேளை, எம்.ஆர்.ராதாவால்... எம்.ஜீ.ஆர். சுட‌ப்ப‌ட்ட‌தால். இப்ப‌ட‌ம் தாம‌த‌மாக‌ வெளிவ‌ந்த‌து.
இசைய‌மைப்பு: கே.வி.மகாதேவ‌ன்.
பாடிய‌வ‌ர்க‌ள்: பால‌சுப்பிர‌ம‌ணிய‌ம் & சுசீலா.
ந‌டிப்பு: எம்.ஜீ.ஆர். & ஜெய‌ல‌லிதா.


  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர், வாத்தியாரின்ட ஸ்டைல் நல்லா இருக்கு. பாட்டு நல்லா பிடிச்சிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

பாட‌லை ர‌சிக்க‌ வ‌ருகை த‌ந்த‌... காவாலி, வ‌ந்திய‌த்தேவ‌ன், சுமோ, உடையார், குமார‌சாமி அண்ணாவிற்கு ந‌ன்றி :).

இன்றைய‌ பாட‌ல், சுமோவின் விருப்ப‌ப் பாட‌லாக‌ ஓளிப‌ர‌ப்பாகின்ற‌து.

அடிமைப் பெண் (1969) ப‌ட‌த்திலிருந்து, "ஆயிர‌ம் நில‌வே... வா..."

1966´ம் ஆண்டு இந்த‌ப் படம் எம்.ஜீ.ஆரால் த‌யாரிக்க‌ப் ப‌ட்டுக்கொண்டிருந்த‌ வேளை, எம்.ஆர்.ராதாவால்... எம்.ஜீ.ஆர். சுட‌ப்ப‌ட்ட‌தால். இப்ப‌ட‌ம் தாம‌த‌மாக‌ வெளிவ‌ந்த‌து.

இசைய‌மைப்பு: கே.வி.மகாதேவ‌ன்.

பாடிய‌வ‌ர்க‌ள்: பால‌சுப்பிர‌ம‌ணிய‌ம் & சுசீலா.

ந‌டிப்பு: எம்.ஜீ.ஆர். & ஜெய‌ல‌லிதா.

எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை, ஒரே நாளில் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்ற பாடல் இது, தமிழ் சிறி! :D

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சிறி பாடலுக்கு. எனக்கு இப்பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை. நீயா படத்திலிருந்தும் பாடல்களைப் போடுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல் ரசிகர்களான... காவாலி, புங்கையூரான், வந்தியத்தேவன், சுமோவுக்கும் நன்றி :).
காவாலிக்குப் பிடித்தது... எம்.ஜீ. ஆரின்... கறுப்பு, வெள்ளைப் படம் என்பதால்.... காவாலிக்காக, இன்றைய பாடல்.
"மன்னாதி மன்னன்" படத்திலிருந்து, "அச்சம் என்பது, மடமையடா....."

கவி வரிகள்: கண்ணதாசன்
பாடியவர்: சௌந்தர்ராஜன்.
நடிப்பு: எம்.ஜீ.ஆர்.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருமதி டாக்டர் காவலிக்காக.... இந்தப் பாடல். :) 


http://www.youtube.com/watch?v=8Tyytku1T4w

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் ரசிகர்களான... காவாலி, புங்கையூரான், வந்தியத்தேவன், சுமோவுக்கும் நன்றி :).

காவாலிக்குப் பிடித்தது... எம்.ஜீ. ஆரின்... கறுப்பு, வெள்ளைப் படம் என்பதால்.... காவாலிக்காக, இன்றைய பாடல்.

"மன்னாதி மன்னன்" படத்திலிருந்து, "அச்சம் என்பது, மடமையடா....."

கவி வரிகள்: கண்ணதாசன்

பாடியவர்: சௌந்தர்ராஜன்.

நடிப்பு: எம்.ஜீ.ஆர்.

 

 

இந்தப் பாடலை முன்னரும் பலமுறை கேட்டிருக்கின்றேன். ஆனால் வாத்தியார் பாடல் எனத் தெரியாது. கருத்துள்ள நல்ல பாடல்

 

எனக்கு பழைய நடிகர்களில் வாத்தியாரைத்தான் பிடிக்கும். அலட்டல் இல்லை நடிப்பு எண்டு சொல்லிக்கொண்டு புருவத்தை உயர்த்திறது வாயைச் சுழிக்கிறது சும்மா அலம்புறது எல்லாம் இல்லை. நடிப்பில் ஒரு வேகம் இருக்கும். அதனால் பிடிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

திருமதி டாக்டர் காவலிக்காக.... இந்தப் பாடல். :) 

http://www.youtube.com/watch?v=8Tyytku1T4w

 

நன்றி சிறியண்ணா எனது திருமணநாளை நினைவுபடுத்தியமைக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே.... இன்று திருமண நாளா.. காவாவி.
என்ன.. அற்புதம், நல்ல உள்ளங்களுடன் கடவுள் என்றும் சேர்ந்திருப்பார். :)

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே.... இன்று திருமண நாளா.. காவாவி.

என்ன.. அற்புதம், நல்ல உள்ளங்களுடன் கடவுள் என்றும் சேர்ந்திருப்பார். :)

 

மன்னிக்கணும் சிறியண்ணா, இன்று எனது வெடிங் அனுவேசரி நாள் இல்லை. இந்தப் பாடலைப் பார்த்தபோது, எனது திருமண நாள் நினைவுக்கு வந்தது. திருமணம் எங்கள் முறைப்படி நடந்தது, பிறகு வரவேற்பு அவர்கள் முறையில் நடந்தது. அந்த இரவு ஹெயார் கிளிப்புகளையும் ஊசிகளையும் கழட்டிக் கழட்டியே களைச்சுப்போனன் :D

 

உங்கள்  வாழ்த்துக்களுக்கு எங்கள் நன்றி அண்ணா :)

Edited by காவாலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.