Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கும்கி: மிகவும் பிடித்து இருந்தது: நிழலி

Featured Replies

துப்பாக்கி போன்ற குப்பைக் கூடைக்குள் கூட போட முடியாத மோசமான தரமுடைய படத்தைப் பார்த்த பின் இனி எப்ப ஓரளவுக்கேனும் நல்ல தமிழ் படம் பார்க்கலாம் என்று இருந்த எனக்கு கும்கி படம் பற்றி எந்தவிதமான எதிர்பார்ப்பும் இருக்கவில்லை.

இன்று TMT இணையம் மூலம் கும்கி படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சில சினிமாத்தன காட்சிகள் தவிர்ந்த (கிளைமாக்ஸில் யானைக்கு கிடைக்கும் முடிவு) மிச்ச காட்சிகள் எல்லாம் அப்படியே மனசை அள்ளும் காட்சிகள்.

தமிழகத்தின் காடுகளுக்குள் இன்றும் மரணித்துப் போகாமல் இருக்கும் மனிதர்களின் இயற்கையுடனான பின்னிப் பிணைந்த வாழ்க்கையையும், அவர்களின் நம்பிக்கைகளையும் அதை அவர்கள் காப்பாற்ற முயலும் முரட்டுத்தனத்தையும் அழகாக காட்டியுள்ளார்கள்.

தமிழ் சினிமாவில் யானையை இந்தளவுக்கு பயன்படுத்தி இருப்பார்களா என்று தெரியவில்லை. யானை தான் படம். அதை கண் கொட்டாமல் பார்ப்பதே அழகு.

கதாநாயகி.....ஆயிரம் கவிதைகளிலும் விபரிக்க முடியா அழகு. கறுப்பு நிற தேகம், மருளும் பின் மிரட்டும்.பின் காதலில் கொஞ்சும் கண்கள்.

தம்பி ராமையா வும் அந்த யானையும் தான் படத்தின் உண்மையான கதாநாயகர்கள்.

மண் வாசனையை பரப்பும் சினிமாக்களின் வரிசையில் இதனையும் இணைக்கலாம். எமக்குத் தெரியாத ஒரு சமூகத்தின் வாழ்வும், அவர்களின் நம்பிக்கைகளும், அதனை காக்க காதலைக் கூட தியாகம் செய்ய முனையும் மனிதர்களும், இயற்கையும், அதனூடாக தம் இருப்பைப் பேண துடிக்கும் மனிதர்களுமாக நிறைந்த படம்.

சந்தர்ப்பம் கிடைத்தால் ஒருக்கால் பார்க்கவும்.

  • Replies 57
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாநாயகி.....ஆயிரம் கவிதைகளிலும் விபரிக்க முடியா அழகு. கறுப்பு நிற தேகம், மருளும் பின் மிரட்டும்.பின் காதலில் கொஞ்சும் கண்கள்.
"சோழியன் குடுமி சும்மா ஆடாது" எண்டது உண்மைதான்.....இரண்டு பிள்ளை பெத்தாப்பிறகும் அலையிறாங்கள்.... :lol:  :D
 
  • தொடங்கியவர்

"சோழியன் குடுமி சும்மா ஆடாது" எண்டது உண்மைதான்.....இரண்டு பிள்ளை பெத்தாப்பிறகும் அலையிறாங்கள்.... :lol:  :D
 
இரண்டு பூட்டப்பிள்ளைகளைக் கண்டாலும் அழகை ரசிப்பதில் தவறில்லை தானே அண்ணை.

ஒரு பெண்ணின் அழகை ரசிக்கத் தெரிகின்றவர்களால் மட்டுமே அழகியல் கவிதைகளை ரசிக்க முடியும் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிழலி அண்ணா...பகிர்விற்கு..நாளை நானும் பார்க்கபோகிறேன்..இந்த படம் குறித்து இணையத்தில் கண்ட இன்னொரு பகிர்வு..

563844_476602595719123_1235447176_n.jpg

" கும்கி - அழகு குவியல் " இந்த வருடத்தில் வழக்கு எண் படத்திற்கு அடுத்து பெரிதும் பிரமிக்க வைத்த படம் கும்கி மட்டுமே.பண்டைய நாகரீகத்தை உலகிற்கு எடுத்துச் சொல்ல எச்சம் மிச்சமாக விளங்கும் மலைவாழ் மக்களையும்,இயற்கையின் பேரழகையும் பதிவு செய்ததற்காக பிரபு சாலமன் பாராட்டப்பட வேண்டியவர்!.விக்ரம் பிரபுவின் நடிப்பும்,கிறங்க பேசும் காதல் வசனங்களும் படம் பார்க்கற நம்மையும் லவ் பண்ண தூண்டுது.'வடு'வழகி லஷ்மிமேனனுக்கு தான் எத்தனை,எத்தனை முகப்பாவனைகள்.செம ஃக்யூட்...
 
* படத்துல தம்பி ராமையாவுக்கே அதிக காட்சியமைப்புகள் கொடுத்ததால நமக்கு எரிச்சல் உண்டாகி அவரு தலையில ஓங்கிக் கொட்டனும்னு ஃபீலிங் வர்றதை தவிர்க்க முடியாது.ஃக்ளைமேக்ஸ்ல காதலன் காதலியை பிரிச்சிட்டாலே படம் ஹிட் ஆகிடும்ங்கற நினைப்பு இன்னும் எத்தனை இயக்குனர்களுக்கு இருக்கோ!.மைனாவை போலவே இதுலயும் பிரிச்சி கடுப்பெத்துறார் பிரபு சாலமன்.சில குறைகள் மட்டுமே இருந்தாலும் மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவை வளைத்து வளைத்துப் படம் பிடித்து காட்டிய ஒளிப்பதிவாளர் சுகுமாரனின் பிரம்மாண்டத்தையும்,வெளியாவதற்கு முன்னரே பலரின் (நானும் உட்பட :-) ) மொபைல் காலர் டியூனாக மாறிய பாடல்களையும் கண்களுக்கு விருந்தளிக்க படத்தை நிச்சயம் தியேட்டரில் போய் பாருங்கள்.உலகின் ஒட்டு மொத்த அழகையும் குத்தகை எடுத்திருக்கும் இயற்கையுடன் வாழ்ந்துவிட்டு வருவீர்கள்.படத்தில் யானை மாணிக்கத்தின் நடிப்பும் நெகிழ வைக்கும்..!
 
* மூணாரின் சம்பகாடு,ஏற்காடு,நீலகிரி,பாலமலை,மார்த்தாண்டம் அருகேயுள்ள காடுகள்,இராமக்கல்,கல்வராயன் மலை போன்ற இடங்களில் வாழும் மலைவாழ் மக்களுடன் தங்கி பல கட்டுரைகள் எழுதியதாலும்,அவர்களின் வாழ்க்கை முறைகளை நன்கு அறிந்தவள் என்பதாலும் எதிர்பார்ப்புடன் இப்படத்தை முதல் நாளே சென்று பார்த்தேன்.படத்தில் பெண்களின் உடை மற்றும் உணவு முறைகளைத் தவிர பதிவு செய்திருந்த அனைத்து தகவல்களுமே மலைவாழ் மக்களின் வாழ்வியல் உண்மை!..காட்டுப் பன்றிகளும்,யானைகளும் அடிக்கடி அவர்களது பயிர்களை நாசம் செய்துவிட்டுப் போய்விடும் என்பதையும், வனத்துறை சமவெளிகளில் வாழச் சொல்லி ஆளுக்கு 10 லட்சம் ரூபாய் கொடுக்கிறோம் என்று கூறியும் இயற்கையின் மீதான நேசிப்பால் சமவெளிக்கு வர மறுக்கும் மலைவாழ் மக்களின் அன்பையும் நன்கு அறிவேன்..தற்போதைய மார்டன் உலகத்தை நம் மூதாதையர்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த ' 'பொறுமை' சாலமனுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்.. !!! ஃகிரேட் ஃகிரேட் .....
 
Vini Sharpana

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவாக படங்கள் பார்ப்பதில் ஆர்வம் இல்லை,நேரம்  செலவளிப்பதிலும் தான்..இந்த விமர்சனங்களைப் படிக்கும் போது கும்கி பார்க்கனும்  என்ற ஆவல் பார்க்கலாம்...

துப்பாக்கி போன்ற குப்பைக் கூடைக்குள் கூட போட முடியாத மோசமான தரமுடைய படத்தைப் பார்த்த.

துப்பாக்கி ஒரு தரப்பு ரசிகர் கூட்டத்துக்காக எடுக்கப்பட்டது. எடுத்தவர்களும் அதையே தான் சொல்கிறார்கள். நடித்தவரும் அவார்டு படங்களில் நடிக்க நட்டம் இல்லை நான் சாதாரண ரசிகனுக்காக நடிப்பவன் என்று சொல்பவரே. அப்படி இருக்கும்போது நீங்கள் அந்தப் படத்தில் வேற என்ன எதிர்பார்த்தீர்கள்?? திரைப்படம் என்பதே கேளிக்கை தானே? பிடிக்கவில்லையெனில் கடந்து செல்லலாமே காரித்துப்புவது தகுமா?

  • கருத்துக்கள உறவுகள்

அதுவும் துப்பாக்கி வசூலில் செம சாதனை :D

  • தொடங்கியவர்
அதுவும் துப்பாக்கி வசூலில் செம சாதனை :D

ஒரு படத்தின் வசூலை வைத்துத் தான் அதன் தரத்தினை நிர்ணயிப்பது என்றால் ஷகீலாவின் படம் தான் அதி கூடிய தரத்தில் இருக்க வேண்டும்! :)

  • கருத்துக்கள உறவுகள்

இதனை ஆஸ்திரேலியா விஜய் ரசிகர் மன்றத்தின் சார்பில் வன்மையாக கண்டிகின்றோம்....... :D

  • கருத்துக்கள உறவுகள்

நிழலியே படத்தை பற்றி நல்லதாக எழுதியிருக்கிறீர்கள்.

பின்னர் கேட்கவா வேண்டும்.

படம் பார்க்க ஆவலைத் தூண்டுகிறது.

எங்கே பார்க்கலாம்.

ஒரு படத்தின் வசூலை வைத்துத் தான் அதன் தரத்தினை நிர்ணயிப்பது என்றால் ஷகீலாவின் படம் தான் அதி கூடிய தரத்தில் இருக்க வேண்டும்! :)

இதை வாசிக்க பாதி மீசை பின்னூட்டம்தான் தான் நினைவு வந்தது .

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் எடுப்பதே வசூலை அடிப்படையாக வைத்து தானே தமிழ் திரையுலகில் கதை அம்சத்தோடு சமூக சிந்தநியோடு எடுக்கப்பட்ட படங்கள் தோல்விய தானே தழுவி இஉக்கின்ட்ரன சில படங்களை தவிர

தயாரிப்பளருக்கு 10 கோடி போட்டால் இருபது கோடி லாபம் வரணும் அந்த கணக்கில தானே படம் எடுக்கிறாங்க சோ துப்பாக்கி படத்தோட விஜய் க்கு ஒரு 5 படம் கைல வந்திருக்கும் இன்னும் சொத்துக்கள வாங்கி குவிக்கலாம் முருகதாஸ் க்கும் அதே தான் தானுக்கு சொல்லி வேலை இல்லை :D

  • கருத்துக்கள உறவுகள்

'துங்க கரிமுகத்து தூமகனை' பக்தி படங்களுக்கும், பாப்பா படங்களுக்கும் மட்டுமே பயன்படுத்திய தமிழ்சினிமாவில் அந்த கருத்த பெருத்த உருவத்தை முதன்முறையாக வேறொரு லொக்கேஷனில் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் பிரபுசாலமன். இந்த ஒரு விஷயத்துக்காகவே அவருக்கு ஆயிரம் தும்பிக்கைகளின் ஆசிர்வாதம் நிச்சயம்.

மலைகிராமத்து பயிர்களை மானாவாரியாக தின்று தொலைப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், உயிர்களையும் பந்தாடிவிட்டு போகிறான் 'கொம்பன்' என்கிற காட்டு யானை. தமிழ்சினிமாவில் இன்றுவரை வந்த வில்லன்களையெல்லாம் தின்று செரித்துவிட்ட ஆக்ரோஷத்துடன் திரிகிற அவனை தீர்த்துக்கட்ட முடியாமல் கையை பிசைகிறது அந்த மலைகிராமம். யானைகளை விரட்டுவதற்காக பழக்கப்பட்ட கும்கி யானையை கூட்டிவரலாமே என்ற யோசனைக்கு செவிசாய்க்கும் ஊர் பெரிசுகள் அதற்காக மெனக்கெட, வந்து சேர்கிறான் மாணிக்கம். சரியான தும்பிக்கை நடுங்கி... இவனை சண்டைக்கு பழக்குவதற்காக ஒரு எருமையை கொண்டு வந்து நிறுத்தினால்கூட அதற்கே தடதடக்கும் அப்பாவி.

இந்த டூப்ளிகேட் கும்கி, கொம்பனை வென்றதா? இது மெயின் கதை. அப்படியே பாகனுக்கும் அந்த ஊர் தேவதை ஒருத்திக்கும் ஏற்படும் காதல் கிளைக் கதை. ஒரு கட்டத்தில் இந்த கிளைக்கதையே மெயின் கதையை ஃபுல் மீல்ஸ் ஆக்கி மென்று விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தி, 'என்ட் கார்டு' போடுகிறார் பிரபுசாலமன்.

இப்படி ஒரு புதுமையான கதையில், காதல் தேவைதானா என்று ஒரு சாரரரும், கண்டிப்பாக தேவைதான் என்று இன்னொரு சாரரும் தியேட்டர் வாசலில் நின்று கொண்டு பட்டிமன்றம் நடத்துவது தனிக்கதை!

தொடை நடுங்கி ஹீரோக்கள் யாரும் தொடவே அஞ்சுகிற முரட்டுக் கேரக்டர் அறிமுக ஹீரோவான விக்ரம் பிரபுவுக்கு. இவர் யானையை படுக்கப் போட்டு குளிப்பாட்டுகிற காட்சிகளில் நமக்கு நெஞ்சுவலி வருகிறது. யானையின் காலில் ஏறி, அசால்டாக முதுகுக்கு தாவும் அவரது டெக்னிக், நிஜ பாகன்களையே கூட 'நீட்' சொல்ல வைக்கும். பல நேரங்களில் அதன் முதுகில் ஏறி உலாவரும் அந்த அழகு, விக்ரமுக்கு தனி கம்பீரத்தை கொடுக்கிறது. ஆனால் ஒரு அழகியை பார்த்த மாத்திரத்தில் இவர் காதல் படுகுழியில் விழுந்து தொலைப்பதுதான் ஜெனிட்டிக்காக ஊறிப்போன சினிமாட்டிக் நெருடல்.

முதல் படத்திலேயே அன்னை இல்லத்தின் பெருமையை காப்பாற்றியிருக்கும் விக்ரம் பிரபு செய்ய வேண்டிய முதல் வேலை, அந்தகால ஸ்ரீதேவி செய்து கொண்டாரே, அதே அழகு ஃபார்முலாவைதான்! நேரடியாகவே சொல்வதற்கென்ன? அந்த மூக்கில் கத்தி வைக்காமல் முன் செல்வது கஷ்டம் பிரதர்!

கிராமத்து பேரழகியாக லட்சுமிமேனன். ஓராயிரம் ஆக்ஸ்போர்டு டிக்ஷனரியை ஒளித்து வைத்திருக்கிறது அவரது கண்கள். சட் சட்டென சிறகடித்து உணர்ச்சிகளை கொட்டுகிற வித்தையால் டயலாக்குகளுக்கு வேலை இல்லாமல் செய்கிறார். வந்திருப்பது நிஜ கும்கி அல்ல. அதை பராமரிப்பவன் தன் மீதுள்ள காதலால் உயிரையே கொடுக்க துணிந்தவன் என்பதெல்லாம் புரிந்தபின் லட்சுமி காட்டும் எக்ஸ்பிரஷன்களை பார்த்து ரசிக்க இன்னொரு முறை கூட தியேட்டருக்கு போகலாம்.

சில அறிமுகங்கள்தான் இன்னும் பல கி.மீ து£ர பயணத்திற்கு தகுதியாக இருப்பார்கள். ஹீரோயின் அப்பாவாக நடித்திருக்கும் ஜோ மல்லு£ரி அந்த ரகம். ஒரு கிராமத்து தலைவனுக்குரிய கம்பீரத்தையும், ஒரு பழங்குடி மனிதனுக்குரிய அன்பையும், கருணையையும் அசால்ட்டாக வெளிப்படுத்திவிடுகிறார் மனுஷன். தன் மகள் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கையை அடுத்த காட்சியிலேயே யானை பாகன் மீதும் வைத்திருப்பதாக காட்டும் காட்சிகள் மிகச் சிறப்பானவை.

தான் பேசாமல் தன் மைண்ட் வாய்சை பேசவிட்டு வேடிக்கை காட்டுகிறார் தம்பி ராமய்யா. யதார்த்த வசனங்களில் அவ்வப்போது அரசியலையும் குழைத்து அடிக்கும் அவரது ஸ்டைல் செம ஷார்ப். (புரிஞ்சுருச்சு... வடிவேலுவுக்கு நீங்கதான் பேக் மற்றும் பிரண்ட் ரவுண்டா இருந்தீங்க என்பதும்)

அப்படியே மாணிக்கத்தை பற்றியும் சொல்லியாக வேண்டும். வெறும் மிருக ஜாதிதானே, அதற்கு ஏது உணர்ச்சி என்று யாரும் கேட்டுவிட முடியாதளவுக்கு இந்த யானையை பயன்படுத்தியிருக்கிறார்கள். 'அடுத்த பலி நீதாண்டியேய்...' என்கிற மாதிரி அப்பாவியாக நிற்கும் அதை பார்க்கும்போதே பரிதாபம் வருகிறது. அதற்கு மதம் பிடிக்கிற நேரத்தில் கொம்பன் வந்ததால்தான் கொஞ்சம் பதற்றம் குறைந்தது. இல்லையென்றால்...? அது மிதிபடுவதை சகித்திருக்கவே முடியாது. ஆனால் இந்த பச்சாதாபம் அது சாகும்போது ஏற்பட்டிருக்க வேண்டுமல்லவா? இல்லையே! இந்த தவறுக்கு பொறுப்பேற்க வேண்டியது மோசமான சி.ஜி தொழில்நுட்ப வல்லுனர்களே ஒழிய டைரக்டர் அல்ல.

கொம்பன் ஊருக்குள் இறங்கப் போறான்... வரப்போறான் என்று இவர்கள் பில்டப் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்களே தவிர, கொம்பன் வந்தபாடில்லை. நடுவில் ஓரிரு முறை அவனை காட்டியிருந்தால் இன்னும் டென்ஷன் ஏறியிருக்குமே ஸார்.

இந்த படத்தையெல்லாம் 3டி யில் காட்ட மாட்டாங்களா என்ற ஏக்கத்தை தருகிறது சுகுமாரின் ஒளிப்பதிவு. அடர்ந்த காட்டிலும் அருவிகளின் உச்சத்திலும் அசராமல் துள்ளித்திரிய விட்டிருக்கிறார் படம் பார்க்கிற அத்தனை பேரையும்.

அடிக்கடி வருகிற பாடல்களில் இரண்டை பாவம் பார்க்காமல் வெட்டியெறியலாம். (இது படத்தின் வேகத்தை குறைக்கிறது எனகிற காரணத்திற்காக மட்டுமே) என்றாலும், டி.இமானின் இசை காதுகளுக்குள் பனிச்சாரல் வீசிச் செல்கிறது.

இந்த கதையை வைத்துக் கொண்டு சுற்றுசூழல் பற்றி பேசியிருக்கலாம், வனவிலங்குகள் நலன் குறித்து அலசியிருக்கலாம். பழங்குடியினரின் முன்னேற்றம் பற்றி கவலைப்பட்டிருக்கலாம். ஆனால் தன் தும்பிக்கை தேங்காய் உடைப்பதற்கே என்கிற மாதிரி சும்மாவே இருந்துவிட்டார் பிரபுசாலமன்.

அதனாலென்ன...? யானை நடந்த பாதையெல்லாம் அதன் காலடி தடம் போல அழுத்தமாக பதிந்து கிடக்கும் பிரபுசாலமனின் இந்த முயற்சி!

-ஆர்.எஸ்.அந்தணன்

எனக்கு ஒரு படத்தின் விமர்சனம் எண்டா தமிழ்சினிமா.காம் அந்தணின் வினர்சனம் வாசிக்க தான் நிறைய பிடிக்கும் அவர் எழுதும் அழகே தனி ரகம்

  • தொடங்கியவர்
இதை வாசிக்க பாதி மீசை பின்னூட்டம்தான் தான் நினைவு வந்தது .

..அப்படி வராவிட்டால் தானே அதிசயம்.

பத்துப் பேரின் கவனைத்தை திருப்பப் போறோம் என்று விட்டு பாடையில் ஏறி பள்ளிக் கூடம் போகின்ற கூட்டத்தில் இருப்பவர்களுக்கு அப்படித்தான் நினைவுக்கு வரும்.

ஒரு படத்தின் வசூலை வைத்துத் தான் அதன் தரத்தினை நிர்ணயிப்பது என்றால் ஷகீலாவின் படம் தான் அதி கூடிய தரத்தில் இருக்க வேண்டும்! :)

பேச்சுக்காக வைத்துக் கொண்டாலும் கூட எனக்கு தெரிந்து சகீலா படம் எந்த திரையரங்கிலும் நூறு நாள் ஓடியது  கிடையாது.  ஆயிரம் திரையரங்குகளில் எதாவது ஒன்று ரெண்டிலே அந்த மாதிரி படம் போடுவார்கள்.  அதையும் சொற்ப நாட்களில் தூக்கி விடுவார்கள். காமம் கலவியை ஆர்வமாகக் கொண்ட நீங்கள் சகீலாவை விமர்சிக்கலாமா  !!?? 

தரத்தின் அளவுகோள் மனிதருக்கு மனிதர் மாறுபடும். உங்களது ரசனை உயர்ந்ததும் கிடையாது மற்றவர்களின் ரசனை தாழ்ந்ததும் கிடையாது. அது ஒவ்வொருவரின் அறிதலையும் புரிதலையும் பொருத்தது. எல்லாருக்கும் எல்லா  விடயமும் பிடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால்  பலபேருக்கு  பிடித்த  ஒன்றை  தனக்கு  பிடிக்காது  என்பதாலேயே  தூற்றுவது என்பது முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.  மக்களால் ரசிக்கப்படாத எதுவும் இவ்வுலகத்தில் மதிக்கப் படுவதில்லை. மக்களால் மதிக்கப்படாத எதுவும் இங்கு மகுடத்தில் அமர முடியாது. சினிமா என்ற கற்பனையில் வாழ்வையும் வரலாறையும் தேடுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது.  

No Offence ...

 நன்றி ,நான் எழுத நினைத்தை எழுதியதற்கு .அரசியலுக்கு ஒரு அளவுகோலும் சினிமாவிற்கு இன்னுமொன்றும் என்று தமக்கேற்ற தொப்பிதான் அணிகின்றார்கள் .

  • தொடங்கியவர்

பேச்சுக்காக வைத்துக் கொண்டாலும் கூட எனக்கு தெரிந்து சகீலா படம் எந்த திரையரங்கிலும் நூறு நாள் ஓடியது  கிடையாது.  ஆயிரம் திரையரங்குகளில் எதாவது ஒன்று ரெண்டிலே அந்த மாதிரி படம் போடுவார்கள்.  அதையும் சொற்ப நாட்களில் தூக்கி விடுவார்கள். காமம் கலவியை ஆர்வமாகக் கொண்ட நீங்கள் சகீலாவை விமர்சிக்கலாமா  !!?? 

தரத்தின் அளவுகோள் மனிதருக்கு மனிதர் மாறுபடும். உங்களது ரசனை உயர்ந்ததும் கிடையாது மற்றவர்களின் ரசனை தாழ்ந்ததும் கிடையாது. அது ஒவ்வொருவரின் அறிதலையும் புரிதலையும் பொருத்தது. எல்லாருக்கும் எல்லா  விடயமும் பிடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால்  பலபேருக்கு  பிடித்த  ஒன்றை  தனக்கு  பிடிக்காது  என்பதாலேயே  தூற்றுவது என்பது முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.  மக்களால் ரசிக்கப்படாத எதுவும் இவ்வுலகத்தில் மதிக்கப் படுவதில்லை. மக்களால் மதிக்கப்படாத எதுவும் இங்கு மகுடத்தில் அமர முடியாது. சினிமா என்ற கற்பனையில் வாழ்வையும் வரலாறையும் தேடுவதில் எனக்கு உடன்பாடு கிடையாது.  

No Offence ...

சகீலாவின் படத்தை ஒரு எடுகோளுக்கு பயன்படுத்தி இருந்தேன். அதே நேரத்தில் காமம் கலவியை ஆர்வமாகக் கொண்டவர்களால் எக்காலத்திலும் சகீலா படம் போன்ற காமத்தை படு கேவலமாக வெளிப்படுத்தும் சினிமாவை எக்காலத்திலும் ஏற்கவும் முடியாது, ரசிக்கவும் முடியாது. காமமும் கலவியும் அழகியல் நிரம்பிய பூரணத்துவமுடைய அம்சங்கள். இதனை அழகாக வெளிப்படுத்த முடியாத அரசியல் நிலை இருக்கின்றது என்பதால் தான் சகீலாவின் படம் போன்ற வக்கிர வெளிப்பாடுகள் கொண்ட படங்கள் வெளிவருகின்றன. 

தரத்தின் அளவு மனிதருக்கு மனிதர் வேறுபடும் என்பதை ஏற்கின்றேன். அதே நேரத்தில் வெற்றி பெற்ற கலை வெளிப்பாடுகள் எல்லாம் தரத்தில் உயர்ந்தவையாக இருக்க வேண்டியது அவசியம் இல்லை.

கண்டிப்பாக ரசனையில் உயர்ந்தது தாழ்ந்தது என்று இருக்கின்றது. பல இலட்சக்கணக்கானோர் ரசிக்கின்றார்கள் என்பதற்காக அது தரத்தில் உயர்ந்திட முடியாது. இன்று தமிழகத் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படும் தொலைக்காட்சி தொடர் நாடகங்களைக் கூட இலட்சக்கணக்கில் ரசிக்கின்றனர். உங்கள அளவு கோலின் படி, பலர் ரசிப்பதால் இவையும் தரமானதாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை ரசிப்பவர்களின் ரசிப்புத் திறனையும் பாராட்டி ஊக்குவிக்கவேண்டும்.

பல பேருக்கு ஒன்று பிடிக்கின்றது என்பதற்காக எனக்கு பிடிக்காத ஒன்றை பிடிக்கின்றது என்று நான் ஏன் கூற வேண்டும்? வெகுசன அபிப்பிராயத்துக்கு எதிரான என் அபிப்பிராயம் இருந்தால் ஏன் அதனை வெளிப்படுத்தக் கூடாது? என்னைப் பொறுத்தவரைக்கும் துப்பாக்கி ஒரு குப்பை. அது கோபுரமாக நீங்கள் போற்றுவதற்குரிய உரிமை உங்களுக்கு எப்படி இருக்கின்றதோ அதே போன்று தான் அதனை படு குப்பை என்று விமர்சிக்கவும் எனக்கு உரிமை இருக்கின்றது.

கலைகள் எல்லாம் மக்களின் வாழ்வியலை பிரதிபலிப்பன. சினிமாவும் ஒரு கலைவடிவம். உலக சினிமாக்கள் எல்லாம் வாழ்வியலையும் வரலாற்றையும் வெளிப்படுத்தி ஏராளமாக வந்துள்ளன. எல்லா சினிமாவும் கலைப்படங்களாக இருக்கவும் தேவையில்லை. ஆனால் நல்ல சினிமாவாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருப்பதில் தவறில்லை என்று நினைக்கின்றேன். ஏனெனில் நான் செலவிடும் ஒவ்வொரு மணித்துளியும் எனக்கு பெறுமதியானவை. 

  • கருத்துக்கள உறவுகள்

கும்கி படத்திற்குள் துபகியை வைத்து கதைப்பதே அது அந்த படத்திற்கு கிடைத்த வெற்றி தானே படம் பாக்கதவர்கள் கூட அப்பிடி என்ன அந்த படத்தில் இருக்கு என்று பார்க்க போறார்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கின்றேன்

தான் கொடுத்த பணத்துக்கு அந்தப்படம் பலனைத்தரவில்லை என்றரீதியில் நிழலியின் கருத்து உள்ளது என்று.  அந்தவரகயில் அவரது விமர்சனம் சரியானதே.

அத்துடன் நல்ல படங்களை ரசிக்கவேண்டும் ஊக்குவிக்கவேண்டும் என்றும் நினைக்கிறார் போலும்

அதனால் வந்த ஆவேசமாகவும் இருக்கலாம்

எனக்கும் சில படங்கள் பற்றி இப்படி ஆவேசம் வருவதுண்டு.

ஆனால்  எந்த புற்றில் எந்த பாம்போ என்ற நிலை.  பக்கத்தில் கிடப்பவன் எவன் ரசிகன் என்று எப்படி கணிப்பது??

இங்கு அது சுண்டலுக்கும்உறைத்துள்ளது போல்....??? :lol:

கண்டிப்பாக ரசனையில் உயர்ந்தது தாழ்ந்தது என்று இருக்கின்றது. பல இலட்சக்கணக்கானோர் ரசிக்கின்றார்கள் என்பதற்காக அது தரத்தில் உயர்ந்திட முடியாது. இன்று தமிழகத் தொலைக்காட்சிகளில் காண்பிக்கப்படும் தொலைக்காட்சி தொடர் நாடகங்களைக் கூட இலட்சக்கணக்கில் ரசிக்கின்றனர். உங்கள அளவு கோலின் படி, பலர் ரசிப்பதால் இவையும் தரமானதாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை ரசிப்பவர்களின் ரசிப்புத் திறனையும் பாராட்டி ஊக்குவிக்கவேண்டும்.

தரம் என்பது பொருள்களுக்கு வேண்டுமானால் வரையறை செய்யலாம். ஆனால் கலை சார்ந்த விடயங்களுக்கு இது முடியாது. சர்க்கரை என்றால் இனிக்க வேண்டும், பாகற்க்காய் என்றால் கசக்க வேண்டும். இந்த இனிப்பு, கசப்பு சுவை உலகெங்கும் உள்ளவர்களால் ஒரே மாதிரியாக அறியப் படுகிறது. அதனால் இனிப்பு, கசப்பு என்பதை நாம் ஒரு வரையறைக்குள் உள்ளடக்கம் செய்ய இயலும். ஆனால் இதைப் பார்த்தவுடன் அழுகை வர வேண்டும், இதை பார்த்தவுடன் வியப்பு வர வேண்டும்,சிரிக்க வேண்டும்  என்பதை வரையறை செய்ய இயலாது. அதை அவரவர் உயித்து உணரவேண்டும். இந்த உணர்தல்அந்த மனிதர்களின் அறிதல் திறனையும், அனுபவத்தையும், அவர்களது சமூக சூழலும் தான் முடிவு செய்யும்.  தொலைக்காட்சி தொடர் நாடகங்களும் சமூக சூழல் சார்ந்த விடயமே. ஏனெனில் அதைப் பார்ப்பவர்கள் 95 விழுக்காடு பெண்களே. அது ஒரு உளவியல் ரீதியான பழக்கம். அதை வெறும் ரசனை என்ற கருத்துக்குள் அடக்க முடியாது. 

பல பேருக்கு ஒன்று பிடிக்கின்றது என்பதற்காக எனக்கு பிடிக்காத ஒன்றை பிடிக்கின்றது என்று நான் ஏன் கூற வேண்டும்? வெகுசன அபிப்பிராயத்துக்கு எதிரான என் அபிப்பிராயம் இருந்தால் ஏன் அதனை வெளிப்படுத்தக் கூடாது? என்னைப் பொறுத்தவரைக்கும் துப்பாக்கி ஒரு குப்பை. ....   நல்ல சினிமாவாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு 

இது  வெறும்  அபிப்பிராயம் என்றளவில் இருந்தால் பிரச்னை இல்லை. இது நல்ல சினிமாவுக்குள் இல்லை என்று வரையறைக்குள் உட்படுத்த முயலுகிறீர்கள்.
 
நான் துப்பாக்கியை தூக்கி பிடிக்கவும் இல்லை விமர்சிக்கவும் இல்லை. ஒரு மூன்று மணி நேரம் பல மக்களின் கவலைகளை மறக்கச் செய்த படம் என்றளவில் ரசிக்கிறேன்.
 
இதுவரை உங்களது கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி. 

ஒரு படத்தின் வசூலை வைத்துத் தான் அதன் தரத்தினை நிர்ணயிப்பது என்றால் ஷகீலாவின் படம் தான் அதி கூடிய தரத்தில் இருக்க வேண்டும்! :)

எனக்கு கிராமத்து கதைகள் அதிகம் பிடிக்கும் அதை முதலில் சொல்லி விடுகிறேன்.......

சரி  நிழலி எப்படி ஒரு படம் வசூலில் சாதனைபடைக்கிறது?

ஏன் சாதனை படைக்கிறது.

நீங்கள் உங்களுக்கு நல்ல ரசனை இருக்கு என்பதை பறை சாற்றவே நீங்கல்  அவசரப்பட்டு  துப்பாக்கி குப்பை படம் என்று கூறியுள்ளீர்கள் என நான்  நினைக்கிறேன்( மேல நான் சொன்னது போல்).

காத்தை  காசு கொடுத்து பெறலாம் என்று நீங்கள்  சொன்னது  கும்கியை  நீங்கள் உண்மையி ரசித்து பாத்தீர்களா என சந்தேகப்பட வைக்கிறது.

இருந்தாலும் ஒன்றை உயர்தி சொல்வதற்க்காக  என்னொன்றை தாழ்த்துவது  அழகல்ல.

நான் நினைக்கின்றேன்

தான் கொடுத்த பணத்துக்கு அந்தப்படம் பலனைத்தரவில்லை என்றரீதியில் நிழலியின் கருத்து உள்ளது என்று.  அந்தவரகயில் அவரது விமர்சனம் சரியானதே.

அத்துடன் நல்ல படங்களை ரசிக்கவேண்டும் ஊக்குவிக்கவேண்டும் என்றும் நினைக்கிறார் போலும்

அதனால் வந்த ஆவேசமாகவும் இருக்கலாம்

எனக்கும் சில படங்கள் பற்றி இப்படி ஆவேசம் வருவதுண்டு.

ஆனால்  எந்த புற்றில் எந்த பாம்போ என்ற நிலை.  பக்கத்தில் கிடப்பவன் எவன் ரசிகன் என்று எப்படி கணிப்பது??

இங்கு அது சுண்டலுக்கும்உறைத்துள்ளது போல்....??? :lol:

நீங்கள் ரஜனி ரசிகர் தானே அண்ணை?

உங்களுக்கு தெரியுமா ரஜனி ரசிகரை படிக்காதவர்கள் என்ற  கண்ணோட்டத்தில் தான் மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்று??????????

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி எழுதியது படம் பார்க்கத் தூண்டுகிறது. நிழலி தேவையில்லாமல் நேரத்தை விவாதத்தில் கழிப்பதைவிட உங்கள் மிகுதிக் கதையை எழுதுவிடுங்கோ. அல்லது நீங்களே அதை மறந்து விடுவீர்கள். :D :D :D

தரமான சினிமா என்பது வேறு. பல வருசங்கள் சென்றாலும் மனதில் பதிந்திருந்து உணர்வலைகளை உருவாக்கும்.

வெற்றி பெற்ற படங்கள் எல்லாம் நல்ல சினிமா என்று இலக்கணம் இல்லை. சம காலத்திற்கேற்ப கதாபாத்திரங்களை உருவாக்கி, அவர்களைச் சுற்றி கமெராவை சுழல வைத்தும்  , இசையைப்  பின்னணியாகவும் வைத்து எடுத்திருப்பார்கள். மெருகூட்ட இப்போ நிறைய கிராபிக்சும் வந்து விட்டது. அவைகள் குறிப்பிட்ட காலங்களில் வசூல் படங்களாகப் போற்றப்படும்.

நல்ல படங்கள் இளையராஜ  இசை போன்றது எப்பொழுது  திரும்ப திரும கேக்கலாம், வசூல் படங்கள் ஏ ஆர் ரகுமானின் இசை போன்ரது வந்த கொஞ்ச காலம்  அந்த மாதிரி இருக்கும் போக போக  கேக்க இனிமையாக இருக்காது.

அதுக்காக  உழைக்க வந்த இடத்தில்   உடனே உழைப்பு  அதன் பின் தான்  கலைச்சேவை......

ஆனால் எனது கருத்து  அது எப்படி நிழலி சொல்லலாம்  துப்பாக்கி குப்பை படம் என்று? :D

  • தொடங்கியவர்

ஆனால் எனது கருத்து  அது எப்படி நிழலி சொல்லலாம்  துப்பாக்கி குப்பை படம் என்று? :D

முடியல....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.