Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களுக்கு உலக முகவரி தந்தது இலங்கை தமிழர்கள்தான்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என் நண்பர் ஒருவர் தமிழ்நாட்டில் இருக்கிறார்... அவர் என்னிடம் ஒரு விடயம் சொன்னார் .. அதை கேட்டு நான் திகைத்து போனேன் . அவர் சொன்னார் ?.. நான் சென்ற வருடம் வெளிநாடு ஒன்றுக்கு சென்றிருந்தேன். அந்த நாட்டு விமான நிலையத்தில் இறங்கியதும். நாம் எந்த நாட்டில் இருந்து வருகிரோமோ, அந்த நாட்டு மொழியில் நமக்கு வணக்கம் சொல்வார்கள். நான் இந்தியா என்றதால், என்னிடம் இந்தி மொழியில் வணக்கம் சொல்லி என்னை வரவேற்றார்கள்.... நான் அதுக்கு பதில் சொல்லவில்லை.

அதனால் அந்த நாட்டை சேர்ந்த ஒருவர் என்னிடம் கேட்டார் ஏன் நான் வணக்கம் சொன்னதுக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை என்று கேட்டார். நான் சொன்னேன் எல்லா மொழியிலும் வணக்கம் சொல்லுரிங்க என் மொழியில் நீங்கள் வணக்கம் சொல்லவில்லையே. அதான் பதில் சொல்லவில்லை. அவர்கள் கேட்டார்கள் நீங்கள் இந்தியன் தானே. ஆம் நான் இந்தியன் ஆனால் என் தாய் மொழி தமிழ் என்று சொன்னேன்.

அப்ப அவன் சொன்னான் அப்படி ஒரு மொழி இருப்பதாக தெரியவில்லையே. என்று சொன்னான் , என்னை கொஞ்சம் இருங்கள் என்று சொல்லி. அவன் சிறிது நேரம் யோசித்து விட்டு. அவன் கேட்டான் ,,ஆ ஆ ஸ்ரீ லங்கா, LDD தமிழ் டைகர், பிரபாகரன். பேசுற மொழிதானே தமிழ் .அதைதான் நீங்களும் பேசுறிங்கலா என்று கேடான் .நான் ஆஜ்ஜிரியத்தோடோடு ஆம் என்றேன் .

அவன் என்னை தனியாக ஒரு அறைக்கு அழைத்து சென்று என்னை தமிழில் வணக்கம் சொல்ல சொல்லி. என் குரலை பதிவு செய்தார்கள் . பிறகு என்னிடம் தமிழில் வணக்கம் சொன்னார்கள். அவன் சொன்னான் இனி எங்கள் நாட்டுக்கு தமிழர்கள் வந்தால் வணக்கம் சொல்லுவோம் என்றான்..

நான் வெளியே வந்து யோசித்தேன் .என்னடா தமிழ்நாட்டில் ஏலு கோடி தமிழன் இருக்கிறோம். எங்களை யாருக்கும் தெரியவில்லையே.. இலங்கை தமிழனை மட்டும் எப்படி தெரியுது இவர்களுக்கு.

அந்தமாரி நான் அந்த நாட்டில் உள்ள பலபேரை சந்திதேன். நான் தமிழன் என்று சொன்னாலே அவன் கேகிறான். நீங்கள் இலங்கையா? தமிழ் டைகரா? என்று. கேக்கிரார்கள்.

அப்பத்தான் எனக்கு புரிந்தது .நாம் இத்தனை கோடி தமிழன் இருந்து என்ன பயன். நம்மை யாருக்கும் தெரியவில்லையே எனக்கு ஒன்று மட்டும் புரிந்தது. இந்த உலகத்துக்கு தமிழனையும், தமிழ் மொழியையும், அறிமுகம் செய்தவர்கள், திரு பிரபாகரனும், ஈழ தமிழர்களும்தான் என்று புரிந்து கொண்டேன் .. பிரபாகரன் என்ற ஒரு தலைவன் மட்டும் இல்லை என்றால் இந்த உலகில் தமிழனை யாருக்கும் அடையாளம் தெரியாது என்பது உண்மை .. நன்றி .

என் நண்பன் சொன்னதை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். என்று நினைத்தேன். எனக்கு பெருமையாக இருக்கு நானும் தமிழன் என்றுசொல்ல.நன்றி.

முகப்பு புத்தகத்திலிருந்து

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில்சில ஆண்டுகளுக்கு முன்புவரையில் இந்தியர் என்று சொல்வதில் பிரச்சினை இருக்கவில்லை. ஆகவே தமிழ் எடுபடவில்லை.. :unsure:

 

எங்களில் பலருக்கு  ஆரம்பம் முதலே சிறீலங்கன் என்று சொல்லுவதில் தயக்கம் இருந்தது. :rolleyes:




பல ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் "க‌ணையாழி" என்ற மாத இதழில் தமிழகப் பேராசிரியர் எழுதிய விடயம் ஞாபகம் வருகிறது.
ஐரோப்பாவில் நடைபெற்ற யுனெஸ்கோ[unesco ] மகாநாட்டில் அவர் தமிழ்மொழி பற்றிப் பேசியதாகவும், இடைவேளையின்போது ஓர் ஐரோப்பிய அறிஞர் தம்மிடம்
வந்து 'தமிழ்மொழி என்பது இலங்கையில் பேசப்படும் மொழிதானே' என்று கூறியதாகவும்  தாம் அம்மொழி தமிழ்நாட்டில்தான் பெருந்தொகையான மக்களால்
பேசப்படுகிறது என்று சிரமப்பட்டு விளக்கியதாகவும் எழுதியிருந்தார்.இதுபோன்றே வேறொரு தமிழ்நாட்டவர் இஸ்ரேலுக்கு சென்றபோது தாம் ஒரு தமிழர் என்று
கூறியபோது அவர்கள் அப்படியானால்   'நீர் ஒரு தமிழ்ப்புலி'[You are a Tamil Tiger ]  என்று கூறியதாகவும் வாசித்த ஞாபகம் இருக்கிறது.எனவே தமிழர்கள் எல்லோருக்கும் முகவரி தேடித்தந்தவர்கள், மதிப்பும் கௌரவமும் ஏற்பட வழிவகுத்தவர்கள் தலைவர் பிரபாகரன் வழிகாட்டலில் விடுதலைப்போராட்டத்தை
முன்னெடுத்த‌ ஈழத்தமிழர்கள்தான்.

Edited by மகம்

ஜெர்மனி என்றால் முதலில் நினைவிற்கு வருபவர் கிட்லர் தான் .

சுவிடன் என்ற நாடு பற்றி செய்திகள் வருவது மிக குறைவு ஏனெனில் மிக அமைதியான நாடு ,ஆப்கானிஸ்தானை தெரியாதவர்கள் இல்லை.

ஏன் நல்ல நிலையில் படித்து பட்டம் பெற்ற எமது இளையவரை விட நாலு குழப்படி செய்தவர்கள் தான் பிரபலம் .

மூன்று இலட்சம் இருக்கும் கனடாவில் கூட இன்னும் ஒருவரும் 'புலிகளை' வென்ற தமிழர்களாக இல்லை  :D

 

பல இடங்களில் நான் என்னை அறிமுகப்படுத்துவதே 'தமிழ் புலி' ... தமிழன் என்றுதான்.

 

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணாவும் தானும் பலநாடுகள் சுற்றிய பிரபலமான ஒருவர் என்று தனது பதிவுகள்மூலம் கூறியுள்ளார்..! :D

  • கருத்துக்கள உறவுகள்
ஜெர்மனி என்றால் முதலில் நினைவிற்கு வருபவர் கிட்லர் தான் .

சுவிடன் என்ற நாடு பற்றி செய்திகள் வருவது மிக குறைவு ஏனெனில் மிக அமைதியான நாடு ,ஆப்கானிஸ்தானை தெரியாதவர்கள் இல்லை.

ஏன் நல்ல நிலையில் படித்து பட்டம் பெற்ற எமது இளையவரை விட நாலு குழப்படி செய்தவர்கள் தான் பிரபலம் .

 

முப்பது வருடப் போராட்டத்தையும் நாற்பதாயிரம் போராளிகளின் தியாகத்தையும் குழப்படி என்பதுக்குள் அடக்கிவிடமுடியாது. இப்படி அடக்கிவிட முற்படுவதுதான் எமது நல்ல படிப்பின் லட்சணமாக இருக்கின்றது.

 

நல்ல நிலையில் படித்துப் பட்டம் பெறுபவன் தனக்காகவே அதைச்  செய்கின்றபோது பிரபலமடைவதற்கான அவசியம் எதுவும் இல்லையே ! எமது சமூகத்தில் படிப்பு என்பதுக்கு முதுகெலும்பை சன்மானமாக கொடுக்கவேண்டியிருப்பதால் பிரபலத்தை எதிர்பார்க்கவும் முடியாது.

போராளிகளை எங்கே குழப்படி என்று சொன்னேன் .

உலகின் வேறொரு மூலையில் இருக்கும் இன்னொரு நாட்டின் வரலாறு, புவியியல் ,இனங்கள் பற்றி தெரியவேண்டுமாயின் அந்த நாட்டைப் பற்றிய செய்திகள் விபரங்கள் ஊடகங்களில் வந்துகொண்டிருக்க வேண்டும் .

நேற்று DIE HARD படம் பார்த்துக்கொண்டிருக்கும் போது வில்லன் போலீசிடம் கடத்தலுக்கான நிபந்தனைகளில் மூன்று நாடுகளில் இருக்கும் தமது கைதிகளை விடுவிக்குமாறு கேட்பார் அதில் சிறிலங்காவும் ஒன்று .

பிரச்சனை என்று ஒன்று இல்லாவிடால் எமக்கு கொசாவோ ,கொங்கோ ,ருவாண்டா .எல்லாம் எங்கு இருக்கேன்றே எமக்கு தெரிந்திருக்க மாட்டாது .

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்கள் இந்தியாவில் 80 மில்லியனுக்கு மேல் இருந்தும், தமிழர்கள் என்றால் இலங்கையில் தனிநாடு கேட்டுப் போராடும் தமிழர்கள்தான் என்று பலருக்கு அறிமுகமாகியிருப்பதை நேரடியாகவே அனுபவப்பட்டிருக்கின்றேன். முன்னரெல்லாம் பெருமையாக இருந்தாலும் இப்போது பிறரின் தயவில்தான் எமக்கு ஏதாவது தீர்வு கிடைக்கும் என்ற நிலையால் பெருமைப்பட முடியவில்லை. 

ஏன் தமிழக தமிழர் தனியாக தெரிய வந்திருக்க வேண்டும்? இவர்கள் வெளிநாடு செல்லும் போது முறையான இந்திய பாஸ்போட்டுடன் சென்று தம்மை இந்தியன் என்றுதான் அடையாளப்படுத்துகிறார்கள். அவர்களின் தேசிய இனம் இந்தியன் என்றுதான் பாஸ்போட்டில் இருக்கும். நாம் தான் பல விமான நிலையங்களிலும், நாடுகடக்கும் நிலைகளிலும் நாம்தமிழர், இலங்கையின் அகதிகள் என்று அறிமுகப்படுத்துகிறோம். 

 

எம்மில் சிலர் பெருமையுடன் ஈழத்தமிழர் என்று  சொல்லுகிறோம். ஆனல் தமிழினம் தன்னைத்தான் அடையாளப்படுத்த தமிழ் நாட்டு தலைவர்கள் இந்தியாவில் தமக்கென ஒரு அடையாளத்தை மத்திய அரசிடம் வாதாடி பெற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின் உலகம் நம்மை அறியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
உலகின் பல இடங்களிலும் தமிழர்கள் என்றால் ஈழத்தமிழர் பிரச்சனைகளும் புலம்பெயர் தமிழர்களுமே நினைவுக்கு வருகின்றார்கள். இந்தியா என்றால் சாருக்கான், ஹிந்தியின் பஞ்சவர்ண நடனங்கள் தான் முன்னணியில் நிற்கின்றன.......இது என் சொந்த அனுபவம்.
 
 
நன்றி Ahasthiyan.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.