Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலன் பெயர்ந்தவனின் புலம்பல்: ஊடகங்களும் உசுப்பேத்தலும்

Featured Replies

வணக்கம் பிள்ளையள்! ஆடிக்கொருக்கால் ஆவணிக்கொருக்கால் வந்து உங்களோடை புலம்பிப் போட்டுப் போறதே எனக்குத் தொழிலாப் போச்சுது. என்ன செய்ய அடிக்கடி வந்து உங்களோடை ஊர்க்கதைகளைப் பறைய எனக்கும் ஆசை தான். ஆனால் இந்தக் கண்டறியாத நாட்டிலை அதுக்கெல்லாம் நேரமெங்கையணை? சரி நான் நேரை விசயத்துக்கே வாறன். இப்ப எங்கடை தமிழ் ஊடகங்களுக்குச் செய்திப் பஞ்சம் வந்திட்டுது. அதிலையும் மழைக்கு முளைக்கிற காளான்கள் மாதிரி ஒவ்வொரு நாளும் முளைக்கிற இணைய செய்திச் சேவைகள் தங்கடை பக்கங்களை நிரப்ப என்னத்தைப் போடலாம் எண் ஆவெண்டு பாத்துக் கொண்டிருக்க கொண்டிருக்க இன்னொரு பக்கம் புதுசா வாற செய்தித் தளங்களாலை தங்கடை இடம் பறிபோயிடுமோ எண்ட பயத்திலை இருக்கிற பழைய ஆக்களும் பரபரப்புச் செய்திகளுக்கு ஆலாய்ப் பறக்கினம். குப்பைத் தொட்டிக்குள்ளை புதுசா எச்சில் இலை வந்து விழாதா எண்டு நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டிருக்கிற ஊர்நாய்களைப் போல பரபரப்புச் செய்தி தேடிற ஆக்கள் கொஞ்சக் காலமா அங்கை தாயகத்திலை அங்கை புலிக்கொடி ஏறிச்சு இங்கை புலிக்கொடி ஏறிச்சு எண்டு சுடச் சுடச் செய்தி போட்டு விளையாட்டுக் காட்டுகினம். இப்படிச் செய்தி தேடி அலையிற கூட்டத்துக்கு அந்தச் செய்தியின்ரை உண்மைத் தன்மை, அந்தச் செய்தி ஏற்படுத்தக் கூடிய பாதிப்புகள், அந்தச் சம்பவத்தின்ரை அரசியல் பின்னணி, அதுக்குப் பின்னாலை இருக்கக் கூடிய அரசாங்கத்தின்ரை சூழ்ச்சிகள் இதுகளைப் பற்றியெல்லாம் கவலைப் பட எங்கை நேரம்... இப்படி ஊடகங்கள் தான் பொறுப்பில்லாமல் செய்தி போடுதெண்டால் இதைப் பாத்து விசலடிக்கிறதுக்கும் அட புலிக் கொடி ஏறீட்டுது. இனித் தமிழீழம் காலடிக்குள்ளை வந்திட்டுது எண்டு பின்னூட்டம் போடுறதுக்கும் கொஞ்சப் பேர் இருக்கினம். எங்களுக்கென்ன பாதுகாப்பான நாட்டிலை அரசியல் பொருளாதாரப் பாதுகாப்பு இருக்குது. ஆனால் ஊரிலை இருக்கிற சனத்தின்ரை நிலமை என்ன எண்டதைப் பற்றி இந்தச் செய்தி போடுற ஆக்களும் அந்தச் செய்திகளைப் பாத்து வாயூறிற ஆக்களும் கொஞ்சம் நினைச்சுப் பாத்தால் புண்ணியம் கிடைக்கும். உப்பிடித் தான் யாழ்;பபாணக் கம்பஸ் விசயத்தையும் இந்த ஊடகங்கள் ஆ ஊ எண்டு எழுதிச்சினம். கொஞ்சப் பேரும் அட பாருங்கோ எங்கடை பெடியளின்ரை வீரத்தை அது இது எண்டு எழுதித்; தள்ளிச்சினம். ஆனால் அந்தப் பிள்ளைகளை அவங்கள் பிடிச்சுக் கொண்டு போய் படாத பாடு படுத்திறான்கள். நாங்கள் என்னத்தைச் செய்து கிளிச்சிட்டம். அட இங்கை வெளிநாடுகளிலை அந்தப் பிள்ளைகளுக்காண்டிப் போராட்டங்கள் நடக்குது தானே எண்டு கேக்கற ஆக்கள் கொஞ்சம் யோசிச்சுப் பாக்க வேணும். இந்தப் போராட்டங்களிலை எத்தனை பேர் போய் நிக்கினம் எண்டு பாருங்கோ. லட்சக்கணக்கிலை தமிழாக்கள் இருக்கிற கனடா இங்கிலாந்து மாதிரியான நாடுகளிலை நூறு பேர் கூட இந்தப் போராட்டங்களுக்கு போனதாக் காணேல்லை. இந்த லட்சணத்திலை தண்ணிப் பார்ட்டியிலை கூடியிருந்து பெடியளும் அவசரப்பட்டிட்டாங்கள் கொஞ்சம் பொறுத்துப் போயிருக்கலாம் எண்டு லெக்சர் அடிக்கிற ஆக்களைக் கண்டால் பத்திக் கொண்டு வருகுது. அங்கை சனம் அடிமைப் பட்டுக் கிடக்குது. அந்தச் சனத்துக்காக பாடுபட வேண்டியது எங்கடை கடமை. அதை விட்டுப் போட்டு அங்கை பறக்குது இங்கை பறக்குது எண்டு படங்காட்டாமல் ஆக வேண்டியதைச் செய்யலாமெல்லே. நான் சொல்லிறது பிழையோ சரியோ நீங்கள் தான் சொல்ல வேணும்….

Edited by Manivasahan

இந்தப் போராட்டங்களிலை எத்தனை பேர் போய் நிக்கினம் எண்டு பாருங்கோ.

லட்சக்கணக்கிலை தமிழாக்கள் இருக்கிற கனடா இங்கிலாந்து மாதிரியான நாடுகளிலை நூறு பேர் கூட இந்தப் போராட்டங்களுக்கு போனதாக் காணேல்லை. 

- மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு ஆர்ப்பாட்டங்களை உலக தலைநகரங்கள் எங்கும் நிகழ்த்தியும் மக்களை காப்பாற்ற முடியவில்லை என்ற நம்பிக்கையீனம்

- ஒரு நல்ல தலைமை இல்லாமை

  • தொடங்கியவர்

கருத்துக்கு நன்றி அகூதா! ஆனாலும் அடக்குமுறைகக்கு ஆளாகியிருக்கிற தமது உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தால் மரணமே பதில் என்ற நிலையில் வாழுகின்ற எம் சகோதரர்களுக்கு எம்மை விட்டால் யார் இருக்கிறார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

மணிவாசகன், திரும்பவும் கண்டது, மிகவும் மகிழ்ச்சி!

உங்கள் கருத்துடன், நூற்றுப்பத்து வீதம் உடன்படுகின்றேன்!

இந்தச் செய்திதாள்கள், உண்மையில், எந்தச் சார்பு நிலையை எடுக்கின்றன, என்று எனக்கு ஒரே குழப்பம்!

நீண்ட வாசிப்புக்களின் பின்பு தான் விளங்கியது, இவற்றில் வரும் செய்திகளின் நோக்கமே, குழப்புவது தான் என்று!

(மன்னித்துக் கொள்ளுங்கள், நான் இயல்பாகவே, கொஞ்சம் டியுப் லைட்)

இடைக்கிடை வந்தாலும், உங்கள் ஒவ்வொரு பதிவும், திருவாசகம் தான்! :D

  • கருத்துக்கள உறவுகள்
புலிகளின் காலத்திலை கூட இவைக்கு செய்திகளுக்கு தட்டுபாடு வந்திருக்குதுங்கோ. கல்மடு  குளம் புலிகளால் உடைக்கப்பட்டு பல ஆயிரம் இராணுவம் பலி என ஒரு சில ஊடகங்கள் செய்தியை பரவ விட்டதுமிலாமல் யாழ் களம் பட்ட அல்லோலகல்லோலம் சொல்லி மாளாது.
 
பிற்குறிப்பு: பாடல்களின் இராகங்களின் பெயரில் கூட பத்திரிகைகள் வந்திருக்குது என்றால் நம்பவா போகிறீர்கள். :D

வணக்கம் புங்கையூரான் நேரச்சிக்கல் காரணமாய் தொடர்ந்து எழுத முடிவதில்லை. ஊடகங்கள் பக்கச்சார்பு நிலை என்பதை விட ஒரு நாளைக்கு எத்தனை செய்திகளைப் பகிர்ந்து கொள்கிறோம் என்பதிலேயே அக்கறை காட்டுகின்றன. அதனால்அந்தச் செய்தியின் பின்னணி குறித்த ஆராய்தல் அல்லது புரிதல் அவர்களுக்கு இல்லை என்பதே உண்மை.

புலிகளின் காலத்திலை கூட இவைக்கு செய்திகளுக்கு தட்டுபாடு வந்திருக்குதுங்கோ. கல்மடு  குளம் புலிகளால் உடைக்கப்பட்டு பல ஆயிரம் இராணுவம் பலி என ஒரு சில ஊடகங்கள் செய்தியை பரவ விட்டதுமிலாமல் யாழ் களம் பட்ட அல்லோலகல்லோலம் சொல்லி மாளாது.
 
பிற்குறிப்பு: பாடல்களின் இராகங்களின் பெயரில் கூட பத்திரிகைகள் வந்திருக்குது என்றால் நம்பவா போகிறீர்கள். :D

வணக்கம் நுணாவிலான் செய்தித் தட்டுப்பாடு என்பதற்கப்பால் சில பிரபல ஊடகங்கள் ஒவ்வொருவரும் பிரசுரிக்கும் செய்திகளுக்கேற்பவே கொடுப்பனவுகளை வழங்குகின்றனவாம். எனவே எதையாவது எழுதிப் போட்டுவிட வேண்டும் என்ற எண்ணமே செய்தியாளர்களிடம் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு சமூகம்  ஏதோ ஒரு வகையில் தனது எதிர்ப்பைக்காட்டும்

அந்தவகை  எதிர்ப்புக்களுக்கு புலம  பெயர்ந்தவரும் தம்மாலான ஆதரவையும் அதை வெளிக்கொண்டுவருவதற்கான முயற்சிகளையும்   செய்யணும்.

ஆனால் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட வீதத்தினரே செய்வது முடியாத காரியம்.

அதுவே இன்றைய  வீழ்ச்சிக்கு காரணம்

அத்துடன் தேசியத்துக்காக வேலை செய்வது அல்லது  அந்த மக்களுக்காக  பேசுவது  இன்று பெரும் எதிர்ப்புக்களுக்கும் சவால்களுக்குமானது.

என்னையே  எடுத்துக்கொண்டால் பலவற்றிலிருந்து இன்று விலகியிருக்கவே முனைகின்றேன்.  காரணம் வசையும் முதுகில் குத்துதல்களும் செய்த தியாகங்களையும் நேரங்களையும் கேவலப்படுத்துதலும் தொடர்கிறது.

இந்தநிலையிலல் மீண்டும்  மீண்டும் ஒருவரே சுமப்பது எந்தவகை நியாயங்களுக்குள் வரும்.................????????? :(

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் மணி

சமருக்கு எங்க எந்த எயரில் ரிக்கற் போடலாம் என்று இருக்கெக்கை நீங்களும் ஒரு பாடு

  • தொடங்கியவர்

ஆனால் தமிழருக்கான ஆங்கில ஊடகங்கள் பெரிதாக முளைப்பதாக தெரியவில்லை.

ஆங்கில ஊடகங்களை ஆரம்பித்து நடத்திப் பணம் பண்ண முடியாதே! தமிழ் நாட்டிலுள்ள சிலரை மிகக் குறைந்த கட்டணத்தில் தொழிலுக்கமர்த்தி நம் தமிழ் மக்களை உசுப்பேற்றும் செய்திகளைப் போட்டு தமது இணையத்தளத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதல்லவா இவர்களது நோக்கம்...

அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு சமூகம்  ஏதோ ஒரு வகையில் தனது எதிர்ப்பைக்காட்டும்

அந்தவகை  எதிர்ப்புக்களுக்கு புலம  பெயர்ந்தவரும் தம்மாலான ஆதரவையும் அதை வெளிக்கொண்டுவருவதற்கான முயற்சிகளையும்   செய்யணும்.

ஆனால் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட வீதத்தினரே செய்வது முடியாத காரியம்.

அதுவே இன்றைய  வீழ்ச்சிக்கு காரணம்

அத்துடன் தேசியத்துக்காக வேலை செய்வது அல்லது  அந்த மக்களுக்காக  பேசுவது  இன்று பெரும் எதிர்ப்புக்களுக்கும் சவால்களுக்குமானது.

என்னையே  எடுத்துக்கொண்டால் பலவற்றிலிருந்து இன்று விலகியிருக்கவே முனைகின்றேன்.  காரணம் வசையும் முதுகில் குத்துதல்களும் செய்த தியாகங்களையும் நேரங்களையும் கேவலப்படுத்துதலும் தொடர்கிறது.

இந்தநிலையிலல் மீண்டும்  மீண்டும் ஒருவரே சுமப்பது எந்தவகை நியாயங்களுக்குள் வரும்.................????????? :(

வணக்கம் விசுகு அண்ணா! உங்கள் ஆதங்கம் புரிகிறது. தலைமைகள் பிரிந்து நிற்கின்ற இந்தச் சு+ழலில் மக்கள் போராட்டமே தகுந்த வழி.

வணக்கம் மணி

சமருக்கு எங்க எந்த எயரில் ரிக்கற் போடலாம் என்று இருக்கெக்கை நீங்களும் ஒரு பாடு

வணக்கம் ஈழப்பிரியன் போபவர்கள் போகட்டும். ஆனால் போய் ஆடுகின்ற கூத்தெல்லாம் ஆடிவிட்டு இங்கு வந்து அங்குள்ள மக்களையும் அவர்களது இன்றைய நிலையையும் விமர்சிப்பவர்கள் மீது கோபம் பீறிடுகிறது....

இது 90 களில்(?) ஆரம்பித்த  ஈழநாடு, ஈழமுரசு ஊடகத்தனத்தின் நீட்சி. 'வீரவேங்கை', 'களத்தில்' உண்மையாக தாங்கள் பட்ட கஷ்டங்களை வெளியிட்ட வேளையில் அவர்கள் வெற்றிச் செய்திகளை மாத்திரமே ஊதிப் பெருப்பித்து வெகுஜன ஊடகமாக செயற்பட்டார்கள்.  

இதன் தொடர்ச்சி சமாதான காலத்திலும் ,பின்பு வந்த போர்க் காலத்திலும் பந்திக் கட்டுரையாளர்களும், இராணுவ ஆராய்ச்சியாளர்களும் (அடி பிஞ்ச செருப்பால)  புலம் பெயர்ந்தவர்களை உசுப்பேத்திக் கொண்டு காளான்களாக முளைத்தார்கள்.  இதன் பரிணாம வளர்ச்சியே இன்றைய இணையங்கள்.

கதைகதையாம் பகுதிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் :unsure: :unsure: :rolleyes: ??

எந்தவொரு கட்சிக்கோ அல்லது அமைப்பிற்கோ பிரச்சார ஊடகங்கள் ஈருப்பது காலம் காலமாக இருந்து வருவது தான். அவை ஒருபக்கச் சார்பான செய்திகளையே இணைப்பதும் வழமை தான். நான் இங்கே குறிப்பிடுகின்ற ஊடகங்கள் அப்படிப்பட்டவையல்ல. அவை பொது ஊடகங்கள். அவைக்கென்று தனியான அரசியல கருத்துக்களோ அல்லது கொள்கைகளோ கிடையாது. அவை தமிழர்நலன் சார்ந்து இயங்கவே விரும்புகின்றன. ஆனால் அறிந்தோ அறியாமலோ தமிழர் நலன்களுக்கெதிரான செய்திகளை அல்லது தமிழர் தொடர்பான தவறான பிரச்சாரங்களை சிங்கசள தேசம் சர்வதேச ரீதியில் நடத்துவதற்கு வழி செய்யும் செய்திகளை பிரசுரிக்கின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.

கதைகதையாம் பகுதிக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் :unsure: :unsure: :rolleyes: ??

ஏலவே பதிந்த பு.பெ. புலம்பல் இந்தப் பகுதிக்குள் பதியப்பட்டதன் தொடர்ச்சியாக வஇதனையும்இங்கே பதிந்து விட்டேன். சரியான பகுதியையும் குறிப்பிட்டால் நகர்த்துவதற்கு உதவியாக இருந்திருக்கும்.

மணிவாசகா

மெய்விளம்பிகளை இப்பிடியெல்லாம் எழுதிக்கிழிக்கக்கூடா :lol:

எந்தவொரு கட்சிக்கோ அல்லது அமைப்பிற்கோ பிரச்சார ஊடகங்கள் ஈருப்பது காலம் காலமாக இருந்து வருவது தான். அவை ஒருபக்கச் சார்பான செய்திகளையே இணைப்பதும் வழமை தான். நான் இங்கே குறிப்பிடுகின்ற ஊடகங்கள் அப்படிப்பட்டவையல்ல. அவை பொது ஊடகங்கள். அவைக்கென்று தனியான அரசியல கருத்துக்களோ அல்லது கொள்கைகளோ கிடையாது. அவை தமிழர்நலன் சார்ந்து இயங்கவே விரும்புகின்றன. ஆனால் அறிந்தோ அறியாமலோ தமிழர் நலன்களுக்கெதிரான செய்திகளை அல்லது தமிழர் தொடர்பான தவறான பிரச்சாரங்களை சிங்கசள தேசம் சர்வதேச ரீதியில் நடத்துவதற்கு வழி செய்யும் செய்திகளை பிரசுரிக்கின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.

ஏலவே பதிந்த பு.பெ. புலம்பல் இந்தப் பகுதிக்குள் பதியப்பட்டதன் தொடர்ச்சியாக வஇதனையும்இங்கே பதிந்து விட்டேன். சரியான பகுதியையும் குறிப்பிட்டால் நகர்த்துவதற்கு உதவியாக இருந்திருக்கும்.

உங்களுடைய இதேபாணியிலான சில  பதிவுகள் " வாழும்புலம் "  பகுதியில் பதிந்திருப்பதைக் கண்டுள்ளேன் மணி . அதை நினைவுபடுத்தவே அப்படி எழுதினேன் . மற்றும்படி உங்களைக் கடுப்படிக்க எழுதவில்லை :) :) .

  • தொடங்கியவர்

மணிவாசகா

மெய்விளம்பிகளை இப்பிடியெல்லாம் எழுதிக்கிழிக்கக்கூடா :lol:

மெய்விளம்பிகள்சொல்வதெல்லாம் மெய் என்று நம்பி விடக்கூடாதே என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்ட பதிவிது ஆதீதீதீ

உங்களுடைய இதேபாணியிலான சில  பதிவுகள் " வாழும்புலம் "  பகுதியில் பதிந்திருப்பதைக் கண்டுள்ளேன் மணி . அதை நினைவுபடுத்தவே அப்படி எழுதினேன் . மற்றும்படி உங்களைக் கடுப்படிக்க எழுதவில்லை :) :) .

இதற்கெல்லாம் கோவோடு கோவிக்க முடியுமா? சுட்டிக் காட்டியமைக்கு நன்றி எங்கே பதிவிடுவது என்ற குழப்பத்தில் சிலவற்றை கதைப் பகுதியிலும் இன்னும் சிலவற்றை வாழும் புலம்பகுதியிலும் பதிவிட்டு விட்டேன்... மன்னிக்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.