Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செயல்திட்டம் 1 - FWD MESSAGES - UPDATED 09/07/06

Featured Replies

வணக்கம்,

களத்தில் நாங்கள் முன்னர் கலந்துரயாடியது போல, வோவர்ட் மெசேஜ் (FWD MESSAGE) எனும் ஒரு சிறு ஆயுதத்தை கையில் எடுத்திருக்கின்றோம்.

எம்மை சுற்றி உள்ளவர்களுக்கு எம்மினம் படும் வேதனைகளையும், சோகங்களையும் சொல்வதற்கே இந்த திட்டம்.

இதை நாங்கள் 50 பேருக்கு அனுப்பி ஒருவர் படித்தாலும்/பார்த்தாலும் கூட எமக்கு வெற்றி தான்.

(இதில் மற்றைய நாட்டவர்களிற்கு மட்டுமல்ல...எங்கள் தமிழர்களிலே கூட சிலருக்கு எங்கள் வேதனை தெரியாமல் உள்ளது)

இந்த திட்டத்தின் வரலாறு என்ன என்று தெரியாதவர்கள் இங்கே சென்று பார்க்கலாம்.

http://www.yarl.com/forum3/viewtopic.php?t...er=asc&&start=0

அனைவரும் உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் இப்பகுதியில் வரும் தொகுப்புகளை அனுப்ப வேண்டும் என கேட்டுகொள்கின்றோம்.

நன்றி

  • தொடங்கியவர்

முதலாவது தொகுப்பு:

http://connecttamils.com//images/MISC/This...file_%20%21.ppt

தரஏற்றம் செய்ய உதவிய கெனக்ட் தமிழ்.கொம் இற்கு மனமார்ந்த நன்றிகள்.

சிறப்பாக இருக்கிறது பாராட்டுகள்.

அல்லைப்பிட்டி படுகொலைகள் மற்றும் புங்குடுதீவு படங்களை eelavision.com இல் எடுக்கலாம்.

நீங்கள் போட்டிருக்கிற மின்னஞ்சல்களிற்கு அருகில் அந்த நிறுவனத்தின் பெயரை எழுதினால் மேலதிக விளக்கம் இருக்கும்.

கூடவே சர்வதேச மன்னிப்புச்சபை, ஆசிய மனிதஉரிமைகள் அமைப்பு போன்றவர்கள் அண்மைக்காலங்களில் இலங்கை அரசை கண்டித்து வெளியிட்ட அறிக்கைளிற்கான இணைப்பும் இந்த ஆவணத்திற்கு credibility கூட உதவும்.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=18467

இதிலுள்ள graph அயும் போடலாம். ஆனால் அளவிற்கு அதிகமாக அரசியலாகிவிடக்கூடும்.

NESHORE இன் இணையத்தளத்திற்கும் இணைப்பு கொடுக்கலாம் ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. தெரிந்தவர்கள் போடவும்

  • தொடங்கியவர்

மிக்க் நன்றி குறுக்கால போவான்.

அடுத்து செய்யும் கோப்புகளில் நீங்கள் சொன்னவற்றை போடுகின்றேன்.

நீங்கள் செய்தாலும் எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்..

நன்றி

முன்மாதிரியான முயற்சி தூயா, வாழ்த்துக்கள்.

நாமும் எம்மால் முடிந்த பங்களிப்பை வழங்குவோம்.

தூயா ,

இதை மோகன் அண்ணாவுக்கு அனுப்பி யாழின் முன் பக்கத்தில போட(with a banner), சிறு விளக்கத்துடன் இணைப்பை வழங்கச் சொல்லி அனுப்பவும்.

மற்றது சிரிலங்கா அரச பயங்கரவாதம்( Sri Lankan state terrorisim) தான் காரணம் என்றும் வர வேண்டும் என்று நினக்கிறன்.

நேற்று ரசிகை,அருவி ஆக்கள் செய்த மெசேஜ் பாத்தனான் அதிலை இதுகளை இணைத்தால் நல்லம். மற்றது செய்திகளுக்கான இணைப்பை தமிழ் நெற்ரில இருந்து வழங்கினா மேலும் தகவல்களை அறிய விரும்புவர்கள் அங்க போய் வாசிப்பினம்.

நல்ல முயற்சி ,வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

மிக்க நன்றி அருவி.

நன்றி நாரதர்..இது முதலாவது கோப்பு..அதனால் ஏகப்பட்ட பிழைகள் ;)

அடுத்த தடவை செய்யும் போது...மற்றவர்கள் செய்யும் போது நீங்கள் அனைவரும் கூறிய யோசனைகளை சேர்த்துகொள்ளலாம்..

நல்ல ஒரு முயற்ச்சி வாழ்த்துக்கள்,,

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல முயற்சி வாழ்த்துக்கள் தூயா பபா

துயாக்கு ஆட்சேபணை இல்லாட்டில் மற்றவர்களும் தங்களுடைய மெசேஜ்களை இங்க அப்லோட் செய்யலாமே

  • தொடங்கியவர்

ஒம் முன்னரே நாங்கள் பேசியது போல..அனைவரும் சேர்ந்து செயல்படுவோம்

தங்கள் ஆக்கபுூர்வமான முயற்சிக்கு நன்றிகள் பல தூயா. எனக்குத் தெரிந்தவர்களுக்கும் தங்களது தொகுப்பை அனுப்பி வைத்துள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்தவர்களுக்கு நானும் அனுப்பிவிட்டேன்

  • தொடங்கியவர்

நன்றி மணிமாறன் & கந்தப்பு..

நீங்கள் உருவாக்கும் கோப்புகளையும் எங்களுடம் பகிர்ந்துகொள்ளுங்கள்

நான் அனுப்பிய ஒரு மன்னார் கொலை பற்றிய செய்திக்கு டெயிலி நியுஸ் சிங்கள பெண் நிருபர் அனுப்பிய பதில் கீழே தருகிறேன். அவருக்கு சரியான பதிலை எழுத யாரும் உதவமுடியுமா??

From: Ruwanthi Kariyawasam

To: hotmail

Sent: Saturday, June 10, 2006 6:52 PM

Subject: Re: Fw: In the name of Buddha...

Heeeeeeeeey Idiot,

As it has report in very confident ways Tamil Tigers are responsible for these brutal killings. Because of the LTTE suspected members of this family were spying to Sri Lanka Army LTTE killed them so brutally and now exhibit on pro tigers website to have sympathy of the international community. But now the international community knows well who are the tigers , not reasonable in any way and doing brutal killings all ways, even to the Tamil people. Sri Lanka government and the Army who protects the Tamil community from tigers.Don't be stupid so much. Are you a member of Tigers to support them so much with a blind eye and being a mouth piece to them? And what is the connection of Buddha for this?

Don't write such mad things that shows your colors.

Idiot,

LTTE is killing even tamil people, and disturbing to their life. If there is no LTTE all the communities can live peacefully in Sri Lanka.

Not us start killings but the some extreemist tamils start that while they forming LTTE . But that is not the way to fight for the rights by the power of wepons. So now all the community suffering from it. Truely there was not a country in Sri Lanka for tamils and the cmmunity should accept it and try to live peacefully with the majority Sinhala people and otehr communities peacefully.

அதிபன் முதலில் இது பதில் அழிக்கக்கூடிய விதத்தில் எழுதப்படவில்லை, வேண்டுமென்றே உண்மைகளை மறைப்பவர்களுக்கு பதில் எழுதி என்னத்தைக்காணப் போகிறீர்கள்?

நாம் செய்ய வேண்டியது நியாயமாகச் சிந்திப்பவர்களுக்கு இந்தச் செய்திகளை எடுத்துச் செல்வதே.

தூயா நீங்கள் எழுதிய கோப்பில் பல எழுத்துப் பிழைகளும்,இலக்கணப் பிழைகளும் உள்ளன அத்தோடு கடைசியாக கொடுத்துள்ள மின்னஞல் முகவரிகளை வாசிக்க முன்னமே கடைசி காட்சி முடிவுறுகிறது.

இனி செய்யும் கோப்புக்களில் இவற்றைக்கவனிக்கவும்.மேலும் யாராவது செய்த கோப்புக்களை சரி பார்க்க அனுப்பினால் நான் சரி பார்த்து அனுப்புகிறேன்.

தூயா அனுப்பிய கோப்பை நான் தெரிந்த அனைவருக்கும் அனுப்பி விட்டேன்.அதோடு கடைசியில் இதை நீங்களும் உங்கள் நண்பர்களுக்கு அனுப்புங்கள் என்று போடவும்.

மேலும் இணயத்தில் வலைப்பூக்களை பதியும் இந்திய நண்பர்களும் இவ்வாறான கோப்புக்களை தங்களுக்கு செய்து அனுப்புமாறு கோரி உள்ளனர்.தயவு செய்து நேரம் இருப்பவர்கள் செய்து தாங்க, நான் பிழை பார்த்து, அனுப்புகிறேன்.அவர்கள் அவற்றைப்பிரதி பண்ணி கடிதமாக பத்திரிகைகளுக்கும், நாடாளுமன்ற ,சட்டமன்ற உறுபினர்களுக்கும் அனுப்புவதாக கூறி உள்ளனர்.

இதில் குறிப்பாக இந்திய அரசாங்கம் என்ன செய்ய வேணும் எண்டு இருக்க வேணும்.

எனக்கு பட்டவற்றில்,

1)இலங்கை அரசாங்கத்திற்கான இராணுவ, நிதி,தொழில் நுட்ப உதவிகளை உடனடியாக நிற்பாட்ட வேண்டும்.

2) விடுதலைப் புலிகள் மேலான தடையை நீக்க வேண்டும்.

3) தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை உடனடியாக நிற்பாட்டச் சொல்லி இலங்கை அரசைக் கண்டித்து அறிக்கை வெளியிட வேண்டும்.

4)தமிழ் மக்களின் நியாயமான அரசியற் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும்.

5)சட்டமன்றம்,பாராளுமன்றத்தில

http://thoughtsintamil.blogspot.com/2006/0...og-post_13.html

Badri Tue Jun 13, 02:53:25 PM IST மணிக்குச் சொன்னது:

இந்தப் பதிவுக்கு 'நன்றி'யெல்லாம் தேவையில்லை. ஆனால் இந்திய மக்களுக்கு இது சென்று போய்ச் சேரவேண்டுமென்றால் கீழ்க்கண்ட சிலவற்றைச் செய்யவேண்டும்.

1. அங்கும் இங்குமாக தோன்றியதை எல்லாம் எழுதாமல், விளக்கமாக இதுவரையில் அப்பாவித் தமிழ் மக்கள்மீது ராணுவம் கட்டவிழ்த்துவிட்டுள்ள தாக்குதல்களை ஆதாரத்துடன் சிறு பிரசுரமாக (PDF கோப்பு) தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி அதனை பல்வேறு அஞ்சல் குழுக்கள், நண்பர்களது மின்னஞ்சல் முகவரி போன்றவை மூலம் பரப்ப வேண்டும்.

2. அதே பிரசுரத்தை தமிழில் அச்சடித்து அத்துடன் கலர் படங்களையும் சேர்த்து தமிழக.புதுச்சேரி சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தபாலில் அனுப்ப வேண்டும்.

3. ஆங்கிலத்தில் அச்சடித்த (படங்களுடன்) பிரசுரத்தை பிற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அஞ்சலில் அனுப்பவேண்டும்.

4. தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரிகை அலுவலகங்களுக்கும் தமிழில் ஒரு பிரதியும் நாட்டின் அனைத்து ஆங்கில நாளேடுகளுக்கும் ஆங்கிலத்தில் ஒரு பிரதியும் அனுப்பி வைக்கவேண்டும்.

5. அனைத்துத் தொலைக்காட்சி சானல்களுக்கும் இதே விவரங்களை அனுப்பவேண்டும்.

இந்தப் பிரசுரங்கள் அனைத்திலும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான செய்திகள் ஏதும் இல்லாது செய்யவேண்டும். இலங்கை ராணுவம் பொதுமக்கள்மீது கட்டவிழ்த்துவிடும் உரிமைமீறல்களை மட்டும் ஆதாரங்களுடன் முன்னிலைப்படுத்தி இவற்றைத் தடுக்க இந்திய அரசு என்ன செய்யவேண்டும் என்பதை உறுதியாகச் சொல்லுமாறு இந்தப் பிரசுரம் அமைய வேண்டும்.

அப்படிச் செய்யாவிட்டால் - அதாவது விடுதலைப் புலிகள் ஆதரவு வார்த்தைகளைச் சொல்வதால் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கம் என்று எதையாவது சொல்லி அடிப்படை நோக்கத்தைக் கவனிக்க விட்டுவிடுவார்கள்.

முக்கிய நோக்கம் - இலங்கை ராணுவம் அப்பாவித் தமிழ் மக்களைக் குறிவைத்து கொடூரமாகத் தாக்குவதை நிறுத்துவது. அவ்வாறு இலங்கை அரசை நெருக்கச் சொல்லி இந்திய அரசை வற்புறுத்துவது.

இதற்கு இலங்கைத் தமிழர்களும், அவர்களுக்கு ஆதரவு தரும் இந்தியத் தமிழர்களும் ஒன்றிணைந்து செயலாற்றவேண்டும். என்னால் முடிந்த உதவிகளை நான் செய்யத் தயாராக இருக்கிறேன். Edit

ஏன் NESHOR முடங்கிப் போய் இருக்கிறது. முன்பு கிரமமாக ஒவ்வொரு பாரிய கோரங்களிற்கும் விபரமான அறிக்கைகள் வெளியிடுவார்கள். :roll: :?

தனிமனிதர்களாகவே அனோமதயமாக அல்லாது ஒரு அமைப்பின் அறிக்கையாக வெளியிடுவது எப்பவும் சிறந்தது. NESHOR என்பது அறிமுகம் தேவையில்லாத வெளிநாட்டு அமைப்புகளோடு தொடர்புகளை பேணும் ஒரளவு பிரபல்யமான அமைப்பு.

மற்றது தயாரிக்கும் அறிக்கையின் தோற்றத்தில் ஒரு consistency இருக்க வேண்டும். அதாவது எழுத்துருக்கள், அதன் அளவு, நிறம் என்பவற்றில்.

மற்றும் படி NESHOR, TRO போன்றவற்றின் அறிக்கைகளில் மின்அஞ்சலிற்கு hotmail, yahoo போன்றவற்றை பயன்படுத்துவதை காணலாம். இது முற்றாக தவிர்க்கப்பட வேண்டும். அவர்களது உத்தியோகபூர்வ domain இல் alias அய்ஆவது பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் professional ஆக இருக்காது.

ஆதிபன் அண்ணா டெய்லி நியுஸ் பேப்பரில பேப்பர் பொறுக்கிற ஆள் எழுதின மாதிரியல்லோ இருக்கு ஏகப்பட்ட எழுத்து பிழை :roll: :roll:

நாரதர் அங்கிளின் ஐடியா(ஸாரி பத்ரி ஸாரோடது தானே) நல்லது இதற்கு எம்மால முடிந்தளவு உதவிகளை

செய்யலாம் அதோடு நாம் இருக்கிற நாடுகளின் அரச அலுவலகங்கள் பாராளுமன்ற உறுப்பினர் லோக்கல் கவுன்சிலர் போன்றோருக்கு அனுப்பி உதவலாமே :wink:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தபால் மு}லமான உங்கள் கண்டனங்களை உரிய அமைப்புக்களிற்கு அனுப்பிவைக்க இங்கு செல்லுங்கள்..

http://sooriyan.com/index.php?option=conte...&id=3138&Itemid

தூயாவின் முயற்சியை தொடர்ந்து நானும் ரமாவும் இதனை உருவாக்கினோம். குறை நிறைகளை சுட்டிக் காட்டவும்.

http://connecttamils.com//images/MISC/Tamils_cry.ppt

நன்றிகள் www.connecttamils.com

தூயாவின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!.....

PPT பைலாக கொடுக்காமல் PPS ஆக கொடுங்கள்... என் கம்ப்யூட்டரில் Fonts கேட்கிறது... இருப்பினும் Fonts மாற்றி என் தொடர்பில் இருக்கும் எல்லோருக்கும் அனுப்பி இருக்கிறேன்.....

இலங்கை நிலவரம் பற்றி

என் முந்தைய பதிவின் பின்னூட்டத்தில் நான் எழுதியிருந்தபடி முதல் கட்டமாக தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் முக்கியமான தமிழக அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் கொடுப்பதற்காக ஒரு சிறு அறிக்கையைத் தயார் செய்துள்ளேன். அடுத்த இரண்டு நாள்களுக்குள் முடிந்தவரை பல அரசியல்வாதிகளுக்கு இந்தக் கடிதம் சென்றடையலாம்.

இன்று மாலை பிரிண்ட் அவுட் எடுத்து அனுப்ப ஆரம்பிப்பேன். அதற்குள் முக்கியமாக ஏதேனும் தகவல் பிழை இருப்பின் அதனை எனக்குத் தெரியப்படுத்துங்கள்.

PDF கோப்பு: இலங்கை ராணுவத்தின் அத்துமீறல்களைக் கண்டிப்பது இந்தியாவின் தார்மீகக் கடமை

மேலதிகதொடர்புக்கு>http://thoughtsintamil.blogspot.com/2006/0...og-post_15.html

இலங்கை குறித்து ஐ.நாவுக்கு மனு

இலங்கையில் அப்பாவிப் பொதுமக்கள் மீது அதிகரித்து வரும் அரச வன்முறைகளை ஐ.நாவின் மனித உரிமை ஆணையத்துக்குத் தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் மனு ஒன்று தயாரிக்கப் பட்டிருக்கிறது. கீழேயிருக்கும் சுட்டிக்குச் சென்று தயவு செய்து அனைவரும் கையொப்பமிடவும் (ஓரிரு நிமிடங்கள் போதுமானது). தத்தம் நண்பர்களுக்கும் மடலாடற்குழுக்களுக்கும் செய்தியைப் பரப்பவும். நன்றி!

கையொப்பம் இடுவதற்கான சுட்டி: Petition Online http://www.petitiononline.com/UN061506/pet...ition-sign.html

நன்றி>http://bhaarathi.net/sundara/?p=273

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.