Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்று மாவீரன் வீரபாண்டிய கட்டப்பொம்மன் அவர்களின் 271ஆவது பிறந்த நாள் 03.01.1740

Featured Replies

இன்று மாவீரன் வீரபாண்டிய கட்டப்பொம்மன் அவர்களின் 271ஆவது பிறந்த நாள் 03.01.1740 "
=========================
03.01.1740 அன்று ஆறுமுகத்தம்மாள் - திக்குவிஜய கட்டபொம்மு மண இணையருக்கு மகனாக பிறந்தான் வீரபாண்டிய கட்டப்பொம்மன்.

வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு குமாரசாமி என்ற ஊமைத்துரை, துரைச்சிங்கம் என்ற இரு ஆண் உடன்பிறப்புகளும், ஈஸ்வர வடிவு, துரைக்கண்ணு என்ற இரு பெண் உடன்பிறப்புகளும் இருந்தனர்.

ஆதியில் திருநெல்வேலி மாவட்டம் சாலிக்குளத்தை அடுத்துள்ள காட்டில் வேட்டையாடச் சென்றனர் கட்டபொம்மனின் மூதாதையர். அங்கு குறிப்பிட்ட இடத்தில் முயல் திடீரென்று வேட்டை நாய்களை எதிர்த்து விரட்டத் துவங்கியது. வீரமூட்டும் சக்தி அந்த நிலத்திற்கு இருப்பதை அறிந்து வியந்து, தமது பாட்டன் "பாஞ்சாலன்" நினைவாக பாஞ்சாலங்குறிச்சி என்று பெயரிட்டு கோட்டை கொத்தளங்களுடன் தலைநகர் அங்கு அமைக்கப்பட்டது.

இந்த அரச மரபில் 47வது மன்னனாக வந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். 02.02.1790 இல் பாஞ்சாலங்குறிச்சியில் அரசுக் கட்டில் ஏறிய வீரபாண்டிய கட்டபொம்மனது துணைவியார் வீரஜக்கம்மாள். இவர்களுக்குப் பிள்ளைப் பேறு இல்லை.

543973_238445066287635_68683946_n.jpg

09 ஆண்டுகள், 08 மாதம், 14 நாட்கள் அரசுப் பொறுப்பிலிருந்த வீரபாண்டிய கட்டபொம்மனிடம், கிழக்கிந்தியக் கம்பெனியார் 1793 இல் கப்பம், வரி என்பன கேட்டனர். 1797 இல் முதன் முதலாக ஆங்கிலேய ஆலன்துரை பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டைக்கு வந்தார். 1797-1798 இல் முதல்முறையாக போர் தொடுக்கப்பட்டு, போரில் வீரபாண்டிய கட்ட பொம்மனிடம் ஆலன்துரை தோற்று ஓடினார்.

நெல்லை மாவட்டக் ஆட்சியர் ஜாக்சன் வீரபாண்டிய கட்டபொம்மனைச் சந்திக்க அழைத்தார். பல இடங்களுக்கு அலைக் கழித்தார். இறுதியில் 10.09.1798 இல் இராமநாதபுரத்தில் செவ்வி கண்டார். அப்போது தந்திரத்தால் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கைது செய்ய முயன்றார். வீரபாண்டிய கட்டபொம்மன் போரிட்டு வெற்றி வீரராகப் பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்தடைந்தார்.

05.09.1799 இல் பானர்மன் என்ற ஆங்கில தளபதியால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை முற்றுகையிடப்பட்டது. போரில் பல வெள்ளையர்கள் உயிரிழந்தனர். இருப்பினும் கோட்டை வீழ்ந்து விடும் என்ற நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறினார். திருச்சி வரை சென்று ஆங்கிலேய மேலதிகாரிகளைச் சந்தித்து, விரைவில் வந்து விடுகிறேன் என்று வீட்டாரிடம் விடைபெற்றுவிட்டு, ஒரு தண்டிகை, ஏழு குதிரைகள், ஐம்பது வீரர்கள், தம்பியர், தளபதிகளோடு சித்தார்த்தி ஆண்டு ஆவணித்திங்கள் 22ஆம் நாள் (07.09.1799) இரவு 10.30 மணிக்கு பாஞ்சாலங்குறிச்சி கோட்டையை விட்டு வீரபாண்டிய கட்டபொம்மன் வெளியேறி வடதிசை வழியே விரைந்து சென்றார்.

09.09.1799 இல் வெள்ளையர்களால் பாஞ்சாலங்குறிச்சி கோட்டை கைப்பற்றப்பட்டது. 01.10.1799 இல் புதுக்கோட்டையில் வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டார். 16.10.1799 இல் கயத்தாற்றில் தூக்கில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

58225_238443339621141_1617521052_n.jpg

மதுரையிலிருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் மாவீரன் வீரபாண்டிய கட்டப்பொம்மனின் பாஞ்சாலஞ்குறிச்சி கோட்டை அமைந்துள்ளது.

270350_238444279621047_1879562858_n.jpg

தோழமையுடன்
தமிழ்ச்செல்வன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பிற்கு நன்றி அகூதா.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அகூதா 

74570_321955567909950_426240095_n.jpg

வீர முழக்கம் முழங்கிய வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய வரலாற்று தகவல்கள் !!

இந்திய விடுதலைப் போரைப் பற்றி வட இந்திய ஆய்வாளர்கள் குறிப்பிடுகையில் சிப்பாய் கலகத்தில் இருந்தே துவக்குவார்கள், ஆனால் அதற்கு முன்னரே தமிழகத்தில் விடுதலை வித்து விதைக்கப் பட்டுவிட்டது.பூலித்தேவன் மற்றும் கட்ட பொம்மன் இருவரும் சற்றேரக்குறைய ஒரே காலக்கட்டத்தில் கிழக்கிந்திய கம்பெனியரின் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போராடியவர்கள். இவர்களின் போராட்டம் தோல்வியில் முடியவும், அதன் முக்கியத்துவம் ஒட்டு மொத்த இந்திய வரலாற்றிலும் குறைத்து மதிப்பிடவும் என்ன காரணம் என்று அலசுவதே எனது நோக்கம் வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கும் வெள்ளையர்களுக்கும் மோதல் உருவாகக் காரணம் என்ன என்பதை சிவாஜி நடித்த வீரபாண்டிய கட்ட பொம்மன் படம் பார்த்த அனைவரும் அறிவர், படத்தில் முழுவதும் காட்டப்படவில்லை.வீரபாண்டியகட்டபொம்மன் பற்றிய இன்னும் கூடுதல் தகவல் இருந்தால் நண்பர்கள் கருத்தில் பதிவு செய்யலாம் .

1791ஆம் ஆண்டு வீரபாண்டிய கட்டபொம்மன் தனது 30ஆவது வயதில் பாஞ்சாலங்குறிச்சியின் அரியணை ஏறினார் 

இதே காலத்தில்தான் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் நேரடி ஆட்சி திருநெல்வேலிச் சீமையிலும் ஏற்படுகிறது . வரி வசூலிப்பதற்காக கலெக்டர்கள் எனப்படும் ஆங்கிலேய நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர்.

கம்பெனியின் நிர்வாகிகளிடையே நடந்த கடிதப் பரிமாற்றங்களைப் பார்க்கும் போது வரி வசூலிப்பதற்குப் பாளையக்காரர்களைத் தடைக் கற்களாகப் பார்த்ததும், அவர்களை ஒழிக்கவேண்டும் என்ற அணுகுமுறையும் தெரிகிறது.அதற்குத் தோதாக, அடங்க மறுக்கும் பாளையக்காரர்களையும், அனுசரணையாகப் போகும் அடிவருடிகளையும் ஒருவருக்கு மற்றவர் எதிரிகளாக்கும் பிரித்தாளும் சூழ்ச்சியை மேற்கொள்கின்றனர் வெள்ளையர். அடிவருடிகளுக்கு எலும்புத் துண்டுகளும், கிளர்ச்சியாளர்களுக்குத் தண்டனையும் அதிக வரியும் விதிக்கப்படுகின்றது .இப்படித்தான் கிளர்ச்சியாளரான கட்டபொம்மனது பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தின் சில பகுதிகள், துரோகி எட்டப்பனுக்குத் தரப்படுகின்றன.அதேபோன்று வானம்பார்த்த புஞ்சைப் பூமியான பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்துக்கு ஓரளவு வருவாய் அளித்து வந்த திருவைகுண்டம், ஆழ்வார்த் திருநகர் போன்ற வளமான பகுதிகளைக் கம்பெனி தனது நேரடி ஆட்சியின் கீழ்க் கொண்டு வருகிறது.

கட்டபொம்மன் முறையாகக் கப்பம் கட்டாததால் இந்த நடவடிக்கைகளை எடுத்ததாகக் கூறியது கம்பெனி. சினம் கொண்ட கட்டபொம்மன் இந்தப் பகுதிகளுக்குத் தனது படைகளை அனுப்பி வரி வசூல் செய்கிறார்.தனது ஆட்சி நிறுவப்பட்ட இடங்களிலெல்லாம் வரி வசூல் என்ற பெயரில் வெளிப்படையான கொள்ளையை நடத்தி வந்த கம்பெனி, கட்டபொம்மனது இந்த நடவடிக்கையை "கொள்ளை' என்று குற்றம் சாட்டியது.இந்தக் காலகட்டத்தில் இராமநாதபுரம் , திருநெல்வேலிப் பகுதிகளுக்கு ஜாக்சன் என்பவர் கலெக்டராக நியமிக்கப்படுகிறார்.அழிவைத் தேடிக்கொள்ள வேண்டாமென்றால் இரண்டு நாட்களில் இராமநாதபுரத்தில் கட்டபொம்மன் தன்னை சந்திக்க வேண்டுமென ஜாக்சன் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடுகின்றார்.

நாள் குறித்த ஜாக்சனோ கட்டபொம்மனை தன் சுற்றுப் பிரயாணத்தில் ஊர் ஊராகச் அலைக்கழித்து, 23 நாட்கள் கழித்து இராமநாதபுரத்தில் சந்திக்கிறார்.
தன்னை அவமானப்படுத்திய ஜாக்சன் குறித்து சென்னை சென்று விளக்கம் அளிக்கிறார் கட்டபொம்மன். ஜாக்சன் மாற்றப்படுகிறார்.கட்டபொம்மனது வீரம் ஏனைய பாளையக்காரர்களிடம் புகழாய்ப் பரவுகிறது. இந்நிலையில் புதிய கலெக்டராய் லூஷிங்டன் பதவியேற்கிறார். அதே சமயம் கம்பெனியுடனான கட்டபொம்மனது முரண்பாடு அரசியல் ரீதியில் கூர்மையடைகிறது .பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்கு மாபெரும் சவாலாக விளங்கி வந்த திப்பு சுல்தான் மே மாதம் 1799இல் வீரமரணம் எய்தவே, கம்பெனியின் பீரங்கிகள் கட்டபொம்மனை நோக்கித் திரும்புகின்றன

உடனே தன்னை வந்து சந்திக்குமாறு கட்டபொம்மனுக்கு கட்டளையிடுகிறார் லூஷிங்டன். முறையான அழைப்பு (கவுல்) இன்றி சந்திக்க இயலாதென கட்டபொம்மன் மறுக்கிறார்.போர்த் தயாரிப்புக்குப் போதிய அவகாசம் பெறும் நோக்கத்துடன் அப்போது நடந்த கடிதப் போக்குவரத்தில் கட்டபொம்மன் நிதானமான போக்கையே கடைப்பிடிக்கிறார் . ஆனால் கம்பெனியோ அவரது நடவடிக்கைகளை மட்டும் வைத்து மதிப்பிடுகிறது.

நிமிர்ந்து நின்ற கட்டபொம்மன்

இறுதியில் செப் 1,1799 அன்று பானர்மென் தலைமையில் ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சியை முற்றுகையிடுகிறது. கடுமையாக எதிர்த்துப் போராடினார் கட்டபொம்மன். கோட்டக்குள் வெள்ளையர் படைகள் நுழைந்ததையடுத்து அங்கிருந்து வெளியேறிய கட்டபொம்மன் புதுக்கோட்டை அரசரால் பிடித்துக் கொடுக்கப்பட்டு கைதாகிறார்.மரத்தடியில் விசாரணை நடத்தி கட்டபொம்மனை குற்றவாளியென்கிறான் வெள்ளையன். தன் மீது சுமத்தப்பட்ட "குற்றங்களை' கட்டபொம்மன் மறுக்கவில்லை. உயிர்ப்பிச்சை கேட்கவுமில்லை. ஒரு தேச பக்தனுக்கேயுரிய கம்பீரத்தோடு "ஆம். கம்பெனிக்கு எதிராக பாளையங்களைத் திரட்டினேன், போர் நடத்தினேன்" என்று சுற்றி நின்ற பாளையக்காரர்கள் வெட்கித் தலை குனியும் வண்ணம் முழங்கியவாறு தூக்குமேடையேறினார் கட்டபொம்மன்.

விசாரணையின் போது கூடியிருந்த பாளையக்காரர் அனைவர் முன்னிலையிலும் நின்ற கட்டபொம்மனது நடத்தை , வீரமும் பெருமிதமும் நிறைந்ததாக இருந்தது. தன்னைப் பிடித்துக் கொடுக்கத் தீவிரமாக முனைந்த எட்டயபுரம் பாளையக்காரன் மீதும், சிவகிரி பாளையக்காரன் மீதும் இகழ்ச்சியும் வெறுப்பும் நிறைந்த பார்வையை வீசிக் கொண்டிருந்தாராம். கட்டபொம்மனின் இளவல்களான ஊமைத்துரை, சிவத்தையா ஆகியோருடன் பல உறவினர்களும் வீரர்களும் பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர் .தூக்குமேடை ஏறியபோது, "இப்படிச் சாவதைவிட பாஞ்சாலங்குறிச்சி கோட்டையைப் பாதுகாப்பதற்காகப் போரிட்டுச் செத்திருக்கலாம்' என்று கட்டபொம்மன் மனம் நொந்து கூறினாராம்.

ஆங்கிலேயேத் தளபதி பேனர்மேன் உத்தரவிற்கிணங்க, 1799ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதியன்று கட்டபொம்மன் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.
அடுத்து வந்த சில ஆண்டுகளில் தென்னிந்திய அளவில் ஆங்கிலேயரை எதிர்த்து பாளையக்காரர்கள் நடத்திய வீரஞ்செறிந்த கிளர்ச்சிக்கு கட்டபொம்மனது தியாகம் ஒரு முன்னறிவிப்பாய் இருந்தது.கட்டபொம்மனது நினைவும் பாஞ்சாலங்குறிச்சியின் வீர வரலாறும் மக்கள் மனங்களில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றன. கட்டபொம்மன் வரலாறு 16க்கும் மேற்பட்ட கதைப் பாடல்களாய் பாடப்பட்டு வருகிறது.

இன்றைக்கும் சித்திரை மாதம் நடக்கும் சக்கதேவி திருவிழாவின் இரண்டாம் நாள் இரவில் விடிய விடிய நடக்கிறது கட்டபொம்மன் நாடகம்.'Divide and Rule' என்பதே ஆங்கிலேயர்கள் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த காலங்களில் அவர்களின் தாரக மந்திரமாக பல நேரங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்பதை அறிகிறோம்.ஆனால், சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், இதே மந்திரம் பல அரசியல் கட்சிகளால், அவற்றின் தலைவர்களால், முதலாளிகளால், நிறுவனங்களின் நிர்வாகத்தால் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டுதான் வருகின்றன என்பதை மறுக்க முடியுமா?

மேற்கூறிய காரணங்களினால் இந்திய அளவில் சுதந்திரப் போராட்டம் பற்றி குறிப்பிடுகையில் சிப்பாய் கலகத்தில் இருந்தே துவங்குகிறார்களா அல்லது மங்கல் பாண்டே என்ற பிராமண சிப்பாய் துவக்கியதால் முக்கியத்துவம் அளிகிறார்களா என்று பல சரித்திர ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள் விடையை கூறாமல். வாசகர்கள் நீங்களும் கூறலாம் தெரிந்தால்.

என்ன வேறுபாடு? முன்பு ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தோம். இப்போது...!?

நன்றி 
சந்திரன்
 
இன்று ஒரு தகவல்(பக்கம்)
  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி அகூதா

புன்னகை புரியும் தமிழ் மண்ணே உன்னை விட்டுப்போவது ஒன்றே தான் என் கவலை ....ஆயினும் எதிர்காலத்தில் ஆயிரம் ஆயிரம் இளங்காளையர் வருவார் .உன் உயர்வை உயர்த்துவார்..................

இணைப்பிற்கு நன்றிகள் அகூதா ,Small Point .

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தகவல்களைப் பகிர்ந்து கொண்டமைக்காக நன்றி அகூதா.

எனக்கு தெரிந்த வரலாற்றின்படி கட்டபொம்மன் விடுதலைப் போராட்டத்துக்கு எல்லாம் போராடவில்லை மேலும் அவர் தமிழ் மன்னரும் கிடையாது. அப்படி ஒரு பிம்பம் சினிமாவினால் உருவாக்கப் பட்டது. இதைப் பற்றி சில வருடங்களுக்கு முன்பு எனது வலைப்பதிவில் ஒரு பதிவு போட்டிருந்தேன்.

எட்டையபுர பாளையத்தையும், பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தையும் ஆண்டுவந்த தெலுங்கு மன்னர்கள் தான் முத்துக்குமார வெங்கடேஸ்வர என்ற "எட்டப்பநாயக்கர் அய்யன்" மற்றும் கட்ட பொம்மன். கட்டப்பொம்மன்(தெலுங்கில்கெட்டிபொம்மு - ‍வலிமை,போர்த்திறமை கொண்டவர்) போர்க்குணம்கொண்டவர். எட்டப்பன் அதற்க்கு நேர்மாறனவர் கலை,கூத்து என்று நாட்டம் உள்ளவர்.ஆரம்ப காலத்தில் இருவருமே ஆங்கிலேயருக்கு கப்பம் கட்டி வந்தனர். இதில் எட்டப்பன் குடும்பத்தினர் ஆங்கிலேயருக்கு மிக நெருக்கமாக இருந்துள்ளார்.நெருக்கத்தின் காரணமாக பல சலுகைகளை பெற்றுள்ளனர். சுப்பளாபுரம் என்ற ஊர் முன்பு பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் எல்லைக்குள்(கட்டபொம்மன் கட்டுபாட்டில்) இருந்துள்ளது.  அதை பின்பு எட்டையபுரத்து பாளையத்துக்கு கொடுத்துள்ளனர். இங்கு கட்டப்பொம்மன் படையினர் அடிக்கடி புகுந்து வரி வசூலிப்பதும், கொடுக்காதவர்களை அடிப்பதுமாக இருந்துள்ளனர். கட்டப்பொம்மனுடன் நேரடியாக மோத முடியாத எட்டப்பன் ஆங்கிலேயர்களின் உதவியை நாடியிருக்கிறார். ஆங்கிலேய படைகள் அடிக்கடி எட்டப்பனுக்கு உதவி புரிந்துள்ளன. இதன்காரணமாகவும், ஜாக்சன் துரை மீது இருந்த வெறுப்பு காரணமாகவும் கட்டப்பொம்மன் வரி கட்ட முடியாது என்று எதிர்த்துள்ளார். இவர் மட்டுமல்ல பல பாளையக்காரர்கள் ஜாக்சன் துரை மீது இருந்த வெறுப்பு காரணமாக வரி கட்டமுடியாது என்று எதிர்த்துள்ளார்கள். (பின்னாளில் ஜாக்சன் துரை மாற்ற்ப்பட்டார்). இதுதான் கட்டபொம்மன் வெள்ளையரை எதிர்த்ததற்கு காரணம்.

அவர் உணர்வுப் பூரணமாக போராட தமிழ்நாடு ஒன்றும் அவர் சொந்த மண் கிடையாதே. மேலும் அப்பொழுது இந்தியா என்ற தேசிய கருத்தாக்கம் ஒன்றும் கிடையாது. தமிழ் மன்னர்களிடமிருந்து போரின் மூலம் வெற்றி கொண்ட கிருஸ்ண தேவராயர், தமிழ் நாட்டை பல பகுதிகளாக பிரித்து அதைக் கண்காணிக்க அவரால் நியமிக்கப் பட்டவர்களே இந்தப் பாளையக் காரர்கள். விஜய நகர பேரரசு சிதைவடையும்போது இந்தப் பாளையக் காரர்கள் தன்னைத் தானே மன்னர்களே முடி சூடிக் கொண்டார்கள். அப்பொழுது வந்த தெலுங்க மக்கள்தான் தமிழ் நாட்டில் இன்று பரந்து விரிந்து பணக்காரர்களாக இருக்கிறார்கள்.

யாரையும் தூற்ற இதை எழுதவில்லை. வரலாற்றின் உணமை பக்கங்களை நீங்கள் உணர வேண்டும்.     

Edited by ஆதித்ய இளம்பிறையன்

வரலாறு என்பது இதுதானா ?? நட்புடன் சில கேள்விகள் .............இந்திய .வரலாற்றை ஆராய்ச்சி செய்தவர்களும், அல்லது அதைப்பற்றி படித்தோரும் பொய்யர்களா? ,புழுகர்களா?..... இந்த வீரபாண்டிய கட்டபொம்மம்னின் கதையை திரைப்படமாக்கினார்கள். இதுதான் வரலாறு என்று உணர்த்தினார்கள் .ஆனால் அத்தனையும் அண்டப்புளுகா??? ............ ஒரு விடயம் இன்றைய சூழலில் எமது போராட்ட வரலாற்றை, அதன் உண்மைகளை ,கண்ணால் கண்ட நிலையிலேயே அதை மாற்றி சுதப்பி எதிர்மாறாக எம் வரலாறு எழுதப்பட்டுக்கொண்டு இருக்கும் இந்த வேளையில் ..........கண்ணால் காணாத , பல யுகங்களுக்கு முன் நடந்தவற்றை எப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் தானே ..............நன்றிகள் இவை எனக்குள் எழுந்த கேள்விகளும் பதில்களும் ..மாறாக யாரையும் புண்படுத்துவதற்கல்ல.........

  • தொடங்கியவர்

ஆதித்ய இளம்பிறையன்,

நீங்கள் கூறுவது உண்மையாக இருக்கலாம் என்பதை ஏற்க கடினமாக உள்ளது. ஆனால், வரலாறு என்பது திரிபடைந்து இருக்கலாம்.

அவர் உணர்வுப் பூரணமாக போராட தமிழ்நாடு ஒன்றும் அவர் சொந்த மண் கிடையாதே. மேலும் அப்பொழுது இந்தியா என்ற தேசிய கருத்தாக்கம் ஒன்றும் கிடையாது. தமிழ் மன்னர்களிடமிருந்து போரின் மூலம் வெற்றி கொண்ட கிருஸ்ண தேவராயர், தமிழ் நாட்டை பல பகுதிகளாக பிரித்து அதைக் கண்காணிக்க அவரால் நியமிக்கப் பட்டவர்களே இந்தப் பாளையக் காரர்கள். விஜய நகர பேரரசு சிதைவடையும்போது இந்தப் பாளையக் காரர்கள் தன்னைத் தானே மன்னர்களே முடி சூடிக் கொண்டார்கள். அப்பொழுது வந்த தெலுங்க மக்கள்தான் தமிழ் நாட்டில் இன்று பரந்து விரிந்து பணக்காரர்களாக இருக்கிறார்கள்.

யாரையும் தூற்ற இதை எழுதவில்லை. வரலாற்றின் உணமை பக்கங்களை நீங்கள் உணர வேண்டும்.     

தமிழர்கள் பொதுவாக  இரு கை கூப்பி மற்றைய இனத்தாரை ஏற்பதுண்டு.அப்படி ஏற்றவர்கள் தமிழ் தலைவர்களை விடவும் தமிழர்களுக்காக செயல்பட்டதும் உண்டு .

விக்கிபீடியாவில் உள்ள கருத்து. உங்கள் கருத்தையும் பதியலாம், ஏற்கப்படலாம்.

http://en.wikipedia.org/wiki/Veerapandiya_Kattabomman

 220px-Veerapandya_Kattabomman.jpg

வரலாறு என்பது இதுதானா ?? நட்புடன் சில கேள்விகள் .............இந்திய .வரலாற்றை ஆராய்ச்சி செய்தவர்களும், அல்லது அதைப்பற்றி படித்தோரும் பொய்யர்களா? ,புழுகர்களா?..... இந்த வீரபாண்டிய கட்டபொம்மம்னின் கதையை திரைப்படமாக்கினார்கள். இதுதான் வரலாறு என்று உணர்த்தினார்கள் .ஆனால் அத்தனையும் அண்டப்புளுகா??? ............ ..

ஆதித்ய இளம்பிறையன்,

நீங்கள் கூறுவது உண்மையாக இருக்கலாம் என்பதை ஏற்க கடினமாக உள்ளது. ஆனால், வரலாறு என்பது திரிபடைந்து இருக்கலாம்.

தமிழர்கள் பொதுவாக  இரு கை கூப்பி மற்றைய இனத்தாரை ஏற்பதுண்டு.அப்படி ஏற்றவர்கள் தமிழ் தலைவர்களை விடவும் தமிழர்களுக்காக செயல்பட்டதும் உண்டு .

வல்லான் வகுத்தே வரலாறு. வென்றவன் எழுதிச் சென்றதையே கற்பிக்கிறார்கள் அதையே நாமும் கற்கிறோம்.  அறிவியல் வளர்ந்துள்ள இந்த காலக் கட்டத்தில் கூட சிந்து சமவெளியில் கண்டெடுக்கப் பட்ட காளை மாட்டு சிலையை குதிரை என்று இந்திய தொல்பொருள் அறிஞர்கள் சொல்ல வில்லையா?

ஒரு வரலாற்றுக் கதையை திரைபடமாக்கும்போது அல்லது புதினமாக எழுதும்போது அதைப் பார்ப்பவர்கள் / வசிப்பவர்கள்  ஆர்வத்தை தூண்டும் வகையில் மிகைப் படுத்தப்படும். அதை வரலாறு என்று எண்ணுவது நமது பிழை. கல்கி எழுதிய பொன்னியின் செல்வனும் அப்படியே. இன்னும் வலைப்பதிவுகளில் பொன்னியின் செல்வனில் வரும் நந்தினியையும், ஆழ்வார்க்கடியனையும்  வரலாற்றுப் பாத்திரங்களாக எண்ணி விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது. கட்ட பொம்மன் படம் பார்த்து விட்டு சிவாஜி போல அவரும் வீரமாக தமிழ் பேசியிருப்பார் என்று எண்ணுகிறோம். கட்ட பொம்மன் காலம் முடிந்து 250 வருடங்கள் ஆகிறது. இன்னும் தமிழ் நாட்டில் உள்ள தெலுங்கு மக்கள் தெலுங்கில்தான் பெசிக்கொள்கிறார்கள். அவர் தமிழ் பேசியிருப்பாரா என்பதே சந்தேகம் தான். இன்றும் தமிழகத்தில் இதுபோல எழுதப்பட்ட வாசகங்களை நிறையக் காணலாம் .

"கட்டபொம்மனின் 250 வது பிறந்த நாளில் தெலுங்கு பேசும் மக்களே ஒன்று திரள்வீர் !!"

என்னைப் பொறுத்த வரையில் தமிழ் மக்கள் பெருமைப்படும் வகையில் வெள்ளையரை எதிர்த்து போரிட்டவர்கள் மருது பாண்டியர்கள் தான். சாதாரணக் குடியில் பிறந்து வீரத்தால் தளபதியாகி, 1780ல் வெள்ளையர்களிடமிருந்து போரிட்டு சிவகங்கையை கைப்பற்றியவர்கள். அவர்களது வீரம், சிந்தனை கலைத் தாகம் யாருடனும் ஒப்பிட முடியாது. அறுபது ஆயிரம் படை வீரர்கள் வெள்ளையரை எதிர்த்து போரிட காளையார்கோவில் காட்டுக்குள் தயாராக  இருக்கின்றனர். கைதர் அலியிடம் இருந்து வாங்கிய வெடி பொருட்களுடன். இரவில் ஒரு தண்டோரா.. மருது சகோதரர்கள் சரணடையா விட்டால் காளையார்கோவில் கோபுரத்தை இடித்து விடுவோம் என்று.  அடுத்த நாளே மருது சகோதரர்கள் இரண்டு பேரும் சரணடைந்தனர். கோட்டைக்காக போரிட்டவர்கள் கோவிலுக்காக தன்னுயிரைத் தந்தனர்.

மருது பாண்டியர்களை போரில் வென்றவுடன் "கதிரவனின் கதிர்கள் நுழைய முடியாதவாறு மரங்கள் செறிந்த காவற் காடுகளை கொண்ட காட்டரன்"  என்று சங்க இலக்கியங்களால் புகழப்பட்ட காளையார்கோவில் காடுகளைக் கொளுத்தும் படி கும்பினியின் மேலிடமே உத்தரவிட்டது. அன்று அழிந்தது தான். காடு போயிற்று; அந்தப் பக்கமே வறண்டு, செங்காட்டு பூமியானது.(மருது பாண்டியர்கள் இருக்கும்போது கிழக்குத் தொடர்ச்சி மலையில் ஆரம்பித்து பழனி, திண்டுக்கல், அழகர்மலை, பிரான்மலை, காரைக்குடி, சாக்கோட்டை, காளையார்கோயில், கீழாநல்லிக்கோட்டை வரைக்கும் பல நூறு மைல்களுக்கு ஒரு அடர்ந்த கானகம் இருந்தது.)

இவர்களுடன் இராணி வேலுநாச்சியார் என்ற வீரத் தமிழிச்சியும் வருகின்றார் .

http://www.yarl.com/forum3/index.php?showtopic=108688

Edited by கோமகன்

வரலாறுகள் ,சிந்தனைகள் என்ற அடிப்படியில் சிந்திப்போமானால் ,தமிழக முன்னாள் முதல்வர் கருணாதி கூட பிறப்பால் தமிழர் இல்லை என்று சொல்லும் இன்றைய வரலாற்றில் .....இவர் தமிழனுக்கு உரிய எந்த குணா அம்சங்களையும் கொண்டிருக்கவில்லை .ஆகவே அவர் தமிழன் இல்லை என்ற கருத்து ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் உள்ளது .அனால் தமிழனுக்கே என்ற ஒரு துடிப்புடன் .தமிழனுக்கே என்ற ஒரு குணத்துடன் செயற்பட்டதாக வரலாறு கூறும் வீரபாண்டிய கட்டப்பொம்மன் ஒரு தமிழன் என்று கூறக்கூடிய யதார்த்தம் உள்ளது என்பதே என் கருத்து .நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.