Jump to content

வெட்டுண்ட ஆடு...


Recommended Posts

முட்டுவதற்கு வளர்க்கப்பட்ட ஆடு

வெட்டுண்டு கிடக்கிறது

மற்றைய ஆடுகள் கதறுகின்றன

கத்திக்கு சொந்தக்காரன் யார் என்று பதறுகின்றன

முன்பு ஒரு நாள்..

ஆடு கட்டுக்குள் அடங்க மறுத்தது

யாருக்கும் சொல்லாமல் கயிறு அறுத்தது

ஆயினும் பின்பு ஆடு திருந்தியது

தானாகவே வீடு திரும்பியது

காலங்கள் ஓடியது..

ஓநாய்களை முட்டப் பழகிய ஆடு

புதிய களத்திற்கு ஒரு நாள் வந்தது

அங்கே ஓநாய்கள் நிற்கவில்லை

உடன்பிறந்த ஆடுகள்தான் நின்றிருந்தன

முட்டுவதில் பழைய வேகம் இல்லை

முட்டுகிறதா?

ஒட்டுகிறதா?

எசமானர்களுக்கு சந்தேகம் வந்தது உண்மைதான்.

இன்றைக்கு ஆடு வெட்டப்பட்டுக் கிடக்கிறது

மற்றைய ஆடுகள் எசமானர்கள் பின்னே நடக்கின்றன

ஓநாய்களின் பற்தடம் தேடித் திரிகின்றன

ஓநாய்களோ தமக்குள் மெதுவாய் சிரிக்கின்றன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னப்பா இண்டைக்கு ஒரே ஆ(ட்)டு மயமா இருக்கு யாழிலை.. :rolleyes:

 

ஏன் இந்த கோழியள்,பருந்து,வல்லூறு,கீரியளை உவமானம்,உவமேயமா வச்சு எழுதக்கூடாதோ????? :lol::icon_mrgreen::icon_idea:

Link to comment
Share on other sites

         வீர வேங்கை 

 

 

நாயும் நரிகளும் நம்பிக்கைத் துரோகமான

       ஓநாய்களுமொன்றாக வேள்விநாளில்

மேயுமாடோன்று மேட்டினிலே விழுந்திருக்காம்,

      கேளிர் செய்தியை கேளீரே வாரீர்

பேயோடு சேர்ந்து பிணம்தின்போம், கூடிக்

       களிப்போமென குலத்தோடுசுற்றமும் போக

பாயும் புலியொன்று பசுத்தோல் போர்த்திருந்து

       பற்றிக்கொண்டது போக்கிரி கூட்டத்தை   

Link to comment
Share on other sites

ஒட்டுக்குழுக்களை இப்படி இழிவாக வர்ணித்துள்ளீர்கள் :D

 

முட்டுவதில் பழைய வேகம் இல்லை
முட்டுகிறதா?
ஒட்டுகிறதா?
எசமானர்களுக்கு சந்தேகம் வந்தது உண்மைதான்.

 

 

  traitors-kp-dauglas-karuna-pillaiyaan-ma

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கு ஆடு வெட்டப்பட்டுக் கிடக்கிறது 

மற்றைய ஆடுகள் எசமானர்கள் பின்னே நடக்கின்றன 

ஓநாய்களின் பற்தடம் தேடித் திரிகின்றன 

ஓநாய்களோ தமக்குள் மெதுவாய் சிரிக்கின்றன

கவிதைக்கு நன்றிகள், சபேசன்!

கவிதையின் சொற்சுவை அழகாக உள்ளது!

பொருட்சுவையைச் சுவைக்கும் அளவுக்கு, எனது மனநிலை இன்னும் பண்படவில்லை என்றே கருதுகின்றேன்!

புண் பட்டுப் போய்க் கிடக்கிறது, அது!

Link to comment
Share on other sites

ஜீவா! கோழியையும் உதாரணத்திற்கு எடுத்திருக்கலாம். அன்பாக வளர்த்து, சண்டையும் பழக்கி, பின்பு பசித்தால் அடித்தும் சாப்பிடலாம். கோயிலுக்கும் நேர்ந்து விடலாம். இதில் ஆடும் கோழியும் நல்ல உதாரணங்கள். நீங்கள் சொன்ன மற்றயவைகள் பொருந்தாது. இங்கே கோழிகளை விட மந்தைகளை அடிக்கடி காண்பதனால் எனக்கு ஆடு உதாரணம் இயல்பாக வந்தது.

Link to comment
Share on other sites

மல்லையூரான் சாதரண தமிழில் எழுதினாலே அதை புரிந்து கொள்வதற்கு நான் படுகிற பாடு பெரும்பாடு. இதில் கவிதையில் வேறு எழுதினால் நான் என்ன செய்வது?

அகூதா! ஆடு ஓநாய்களோடு ஒட்டவில்லை. தன் சக ஆடுகளோடு ஒட்டுவதாகவே எசமானனுக்கு சந்தேகம் வந்தது. உங்கள் ஒப்பீடு சரியில்லை.

புங்கையூரான்! உங்கள் பாராட்டுக்கு நன்றி. எல்லோருடைய மனமும் ஏதோ ஒரு வகையில் புண்பட்டுப் போய்க் கிடப்பது உண்மைதான்

Link to comment
Share on other sites

இன்றைக்கு ஆடு வெட்டப்பட்டுக் கிடக்கிறது
மற்றைய ஆடுகள் எசமானர்கள் பின்னே நடக்கின்றன
ஓநாய்களின் பற்தடம் தேடித் திரிகின்றன
ஓநாய்களோ தமக்குள் மெதுவாய் சிரிக்கின்றன

 

பல வெற்றி அரசியல் தொடர்களைத் தந்த சபேசனுக்கு , கவிதையாலும் பேசத்தெரியும் என்று சொல்லாமல் சொல்லிய கவிதைக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் .

Link to comment
Share on other sites

அகூதா! ஆடு ஓநாய்களோடு ஒட்டவில்லை. தன் சக ஆடுகளோடு ஒட்டுவதாகவே எசமானனுக்கு சந்தேகம் வந்தது. உங்கள் ஒப்பீடு சரியில்லை.

சபேசன்,

தமிழ் மொழியின் நயமே தனி அழகு தானே  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.