Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

10 லட்சம் பேருக்கு, வேலை வாய்ப்புத் தருவேன் - கடலை வியாபாரியின் அதிரவைக்கும் வாக்குமூலம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ramalingam-612013-150.jpg

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை துவங்க, மத்திய அரசு அனுமதி அளித்தால், 10 ஆண்டுகளில், 10 லட்சம் பேருக்கு, வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தருவேன்,'' என, அமெரிக்க கடன் பத்திரங்கள் வைத்திருந்த சர்ச்சையில் சிக்கியுள்ள, தாராபுரம் கடலை வியாபாரி ராமலிங்கம் கூறியுள்ளார்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த, உப்புத்துறை பாளையத்தைச் சேர்ந்த கடலை வியாபாரி ராமலிங்கம். இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட, 28 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, அமெரிக்க கருவூல கடன் பத்திரங்கள் குறித்து, சென்னையில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள், நேற்று முன்தினம், 12 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.

  

விசாரணையில், தன்னிடமிருந்த தங்க கடன் பத்திரங்களை, பிரேசிலில் உள்ள, நண்பர் டேனியலிடம் கொடுத்து விட்டு, சர்வதேச பணபரிமாற்றங்களுக்கு பயன்படும், பத்திரங்களை அவர் வாங்கியிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது. அத்துடன், நான்கு ஆண்டுகள், வரி ஏய்ப்பு செய்துள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டது.தன்னிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து ராமலிங்கம் கூறியதாவது:

 

என்னிடமிருந்து கைப்பற்றப்பட்ட, சர்வதேச தரத்திலான பத்திரங்கள் எப்படி கிடைத்தது; யாரிடமிருந்து வாங்கினீர்கள் என, அதிகாரிகள் கேட்டனர். அது குறித்த தகவல்களை தெரிவித்தேன். வெளிநாட்டு பயணம் குறித்து கேட்டனர். தொழில் நிமித்தமாக சென்றேன் என, கூறினேன். 12 மணி நேரம் துருவி, துருவி விசாரணை நடத்தினர். என்னிடமிருந்த, 28 ஆயிரம் கோடி ரூபாய்க்கான, அமெரிக்க கருவூல கடன் பத்திரங்கள் உண்மையானவை; என்னுடைய சொந்த உழைப்பில், பிரேசில் நாட்டில் வாங்கினேன்.

 

எந்த அரசியல் கட்சியினருக்கும், நான் பினாமி கிடையாது. முறையாக ஒப்பந்தம் போட்டு, கடன் பத்திரங்களை வாங்கியுள்ளேன். நான் எந்த குற்றமும் செய்யவில்லை.1.50 லட்சம் கோடி ரூபாயில், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை துவங்க, ஒன்றரை வருடங்களுக்கு முன், மத்திய அரசிடம் விண்ணப்பித்தேன். மத்திய அரசு அனுமதி வழங்கினால், 10 ஆண்டுகளில், 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவேன். அதே அளவு நபர்களுக்கு, தங்கும் வசதியுடன் இலவச கல்வியும் வழங்குவேன்.இவ்வாறு ராமலிங்கம் தெரிவித்தார்.

http://www.seithy.com/breifNews.php?newsID=73359&category=IndianNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இவளவு காசு வைத்திருக்கும் மனிதன் கூட விரலில் இரு்க்கும் மோதிரத்தை வில்லங்கத்துக்கு சோக்காட்டுது :lol:

  • கருத்துக்கள உறவுகள்
இவளவு காசு வைத்திருக்கும் மனிதன் கூட விரலில் இரு்க்கும் மோதிரத்தை வில்லங்கத்துக்கு சோக்காட்டுது :lol:

 

 

 

பாவம் அவரே  நொந்துபோயிருக்கிறார்.

நீங்கள் வேறு............???

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கும் அவருக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்துப் பார்க்கலாம்.

 

10 லட்சம் பெயருக்கு வேலைவாய்ப்பு என்றால் சும்மாவா??

 

அதைவிடக்  குழந்தைகளுக்கு  இலவசக் கல்வி கூடத் தர விரும்புகின்றார்

இவரின் சிந்தனை நன்றாக உள்ளது, பாராட்டுக்கள்.

 

 

ஆனால், எவ்வாறு இவரிடம் இவ்வளவு பணம் சேர்ந்தது என்பது புரியவில்லை  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
இவரின் சிந்தனை நன்றாக உள்ளது, பாராட்டுக்கள்.

ஆனால், எவ்வாறு இவரிடம் இவ்வளவு பணம் சேர்ந்தது என்பது புரியவில்லை  :rolleyes:

 

பணக்காரப் பெண்களிடம் கடலை போட்டு... சம்பாதித்த காசாக இருக்கும். :D  :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
இவளவு காசு வைத்திருக்கும் மனிதன் கூட விரலில் இரு்க்கும் மோதிரத்தை வில்லங்கத்துக்கு சோக்காட்டுது :lol:

 

அட பாவி மனுசா! உந்த ஒரு குட்டிபடத்திலையே கழுகுக்கண் வைச்சிருக்கிறியே!!!!!  உங்கை சுவீஸ் கொண்டாட்டங்களிலை உன்ரை கண் என்ன பாடுபடும்......என்ரை சிவனே :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்த கடலை வியாபாரி - 27 ஆயிரம் கோடி ரூபாவுக்கு அதிபதியானது எப்படி? 
 

 

ramalingam-712013-150.jpg

தாராபுரம் உப்புத்துறைப்பாளையத்தில் தன்னந்தனியாக இருக்கிறது அந்த ஒற்றை வீடு. அந்த கட்டடம்தான், இந்த வாரத்தில் இந்தியாவின் எல்லா ஊடகங்களையும் அதிகமாக ஆக்கிரமித்துக்கொண்டது. ராமலிங்கம், 47, என்ற நிலக்கடலை வியாபாரியின் வீடுதான் அந்த கட்டடம். அவரிடமிருந்துதான் 27 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க கருவூல பத்திரத்தை (யு.எஸ்.டிரஸ்ஸரி பாண்ட்) கைப்பற்றியிருக்கிறது, இந்திய வருமான வரித்துறை.

  

அதிர்ந்து போனது தமிழகம்:

 

பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ள ராமலிங்கத்துக்கு ஆங்கிலம் கொஞ்சம் அரை குறை; தாய்மொழி என்பதால் தெலுங்கு அத்துப்படி; கன்னடம் புரியும். தமிழ் மட்டும்தான் தொடர்பு மொழி. அதை வைத்தே உலக அளவில் நட்புவட்டத்தைப் பெருக்கியிருக்கிறார். ஏதோ ஒரு நட்பில்தான், இவரது கையில் அமெரிக்கக் கருவூல கடன் பத்திரம் வந்து சேர்ந்திருக்கிறது (!). மிகச்சாதாரண நபரான ராமலிங்கத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதே பரபரப்பான பேச்சாக உள்ளது. வருமான வரித்துறையை பொறுத்தவரை, கைப்பற்றப்பட்ட கடன் பத்திரத்தின் உண்மைத்தன்மை பற்றிய விசாரணைக்கு முன்னுரிமை தரப்படுகிறது.

 

அரசியல் பின்னணி? :

 

அமெரிக்க அரசின் உள்நாட்டு வருவாய்ப் பிரிவுதான், இதன் உண்மைத்தன்மை பற்றி தெளிவுபடுத்த முடியும் என்பதால், மத்திய நேர்முக வரிகள் ஆணையத்தின் மூலம் இதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள் ளன. கடன் பத்திரம் உண்மையாக இருக்கும்பட்சத்தில், ராமலிங்கம் மீது அன்னிய செலாவணி மோசடி மற்றும் ரிசர்வ் வங்கி விதிகளை மீறியதற்கான நடவடிக்கைகள் பாயும். பத்திரங்களை வழங்கியது யார், அரசியல் பின்னணி உள்ளதா, என்ற விசாரணைகளும் எழும். பத்திரங்கள் போலியாக இருக்கும் பட்சத்தில், போலீசிடம் விசாரணை ஒப்படைக்கப்படலாம். ராமலிங்கம் வைத்திருந்த 5 கடன் பத்திரங்களில், ஒவ்வொன்றும் ஒரு பில்லியன் டாலர் மதிப்பு கொண்டவை.

 

சிக்கியது எப்படி? :

 

இந்த ஆவணத்தின் உண்மைத்தன்மை, பயன்படுத்தும் முறை குறித்து எதுவுமே தெரியாத ராமலிங்கம், சென்னையிலுள்ள வெளிநாட்டு வங்கியை (பர்க்ளேஸ் பாங்க்) நேரில் அணுகி, அதனைப் பணமாக மாற்றித்தருமாறு கோரியுள்ளார். அந்த வங்கி நிர்வாகம், சந்தேகத்தின் பேரில் ஆவண நகல்களைப் பெற்றுக்கொண்டு, வருமான வரித்துறைக்கு தகவல் தந்துள்ளது; சென்னையிலிருந்து டில்லி தலைமையகத்துக்கு தகவல் பறந்தது. உடனடியாக, ராமலிங்கம் வீட்டில் பரிசோதனை நடத்த இயக்குனர் சதுர்வேதியிடமிருந்து உத்தரவு வந்துள்ளது.

சென்னை வருமான வரித்துறை (புலனாய்வு) பிரிவைச் சேர்ந்த துணை இயக்குனர் திவாகர், உதவி இயக்குனர் அன்புச் செல்வன், கோவையைச் சேர்ந்த உதவி இயக்குனர் தினேஷ் குமார் ஆகியோர், அதிரடியாக ராமலிங்கம் வீட்டைப் பரிசோதனை செய்து, அமெரிக்க கருவூலப் பத்திரத்தின் அசலை கைப்பற்றினர். சோதனையின்போது, ராமலிங்கத்தின் வீட்டில், பணமோ, நகைகளோ பெரியளவில் சிக்கவில்லை. அவர் வைத்துள்ள புதிய "இன்னோவா' காரும் கூட, கடனுதவியுடன் சமீபத்தில்தான் வாங்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது. அவர் 60 முறை, 70 முறை பல வெளிநாடுகளுக்கு பறந்து சென்றதாக ஊடகங்கள் கூறும் தகவலையும் வருமான வரித்துறையினர் மறுக்கின்றனர். சிங்கப்பூர், மலேசியா, துபாய், பர்மா (மியான்மர்) ஆகிய நாடுகளுக்கு 12 முறை சென்று வந்ததாகத் தெரியவந்துள்ளது.

 

பிரேசில் டேனியல் :

 

ராமலிங்கத்தை அவரது வீட்டில் வைத்தும், சென்னைக்கு வரவழைத்தும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரித்தபோது, எந்த உருப்படியான தகவலும் கிடைத்ததாகத் தெரியவில்லை; பிரேசிலைச் சேர்ந்த டேனியல் என்பவரிடம் அமெரிக்கக் கருவூல கடன் பத்திரங்களை வாங்கியதாக திரும்பத் திரும்பக் கூறியதாகவும் தெரிகிறது. அந்த ஆவணத்தைப் பற்றிய எந்த விபரமும் தெரியாமலே, அதை அவர் வாங்கியிருப்பதாகவே வருமான வரித்துறையினர் கருதுகின்றனர். பத்திரங்களில் உள்ள விபரங்களைப் படித்து புரிந்து கொள்ளவோ, சரளமாக ஆங்கிலத்தில் உரையாடி, இதுபற்றிய விபரங்களைத் தெரிவிக்கவோ முடியாத ராமலிங்கத்திடம், வெளி நாட்டு நபர் ஒருவர் இதனை எப்படி ஒப்படைத்திருப்பார் என்பதே

 

இவர்களின் சந்தேகம்.

 

ஆவணம் உண்மையாக இருக்கும்பட்சத்தில், அதைக் கொடுத்தவர் யார், வாங்கிக் கொடுத்த இடைத்தரகர்கள் அல்லது நிதி ஆலோசகர்கள் யார் என்றெல்லாம் விசாரணைகள் தொடரும். இத்தாலியில் 6 டிரில்லியன் மதிப்புள்ள போலி அமெரிக்கக் கருவூலப் பத்திரங்கள், கடந்த ஆண்டு பிப்ரவரியில் பிடிபட்டன. ராமலிங்கத்திடம் கைப்பற்றப்பட்டவையும், அதேபோல போலியாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. போலி ஆவணத்தைக் காட்டி, தொழில் அதிபர்கள் பலரிடமும் அவர் கடன் வாங்கியிருக்கலாம் என்றும் அதிகாரிகள்

 

சந்தேகிக்கின்றனர்.

 

ஏனெனில், இந்த கடன் பத்திரத்தை வங்கியில் சமர்ப்பித்து, பணமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளோ, வாய்ப்போ இங்கில்லை. அதனால், ராமலிங்கத்தை நம்பி யாரோ கொடுத்து வைத்திருந்த அமெரிக்கக் கருவூல கடன் பத்தி ரத்தை, விபரம் தெரியாமல் பணமாக மாற்ற அவர் முயற்சித்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. வருமானவரித்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், "குறுக்கு வழியில் சம்பாதிக்க முயலும் சாதாரண நபர் ராமலிங்கம்' என்பது தெளிவாகத் தெரிகிறது. அவரின் பின்னணியில் இருப்பது யார் என்பதுதான் ஐந்து பில்லியன் டாலர் கேள்வி.

 

கமிஷன் மட்டுமே 270 கோடி ரூபாய்! :

 

சைனா கோல்டு பாண்டைக் கொடுத்து, பிரேசிலில் இந்த அமெரிக்கக் கருவூல கடன் பத்திரத்தை வாங்கியிருப்பதாகவும் ஒரு தரப்பு தகவல் கூறுகிறது. இது அமெரிக்கக் கருவூல கடன் பத்திரமே இல்லை; வேறு விதமான கடன் பத்திரம் என்றும் மற்றொரு தகவல் கூறுகிறது. ஒட்டு மொத்தமாக, இந்த ஆவணம் பற்றி திட்டவட்டமான எந்த முடிவுக்கும் வர முடியாத நிலையில் வருமான வரித்துறையினரும் உள்ளனர். அமெரிக்கக் கருவூலக் கடன் பத்திரங்களை வைத்திருப்பவர் யாராக இருந்தாலும், அமெரிக்க வங்கிகளில் நேரடியாகக் கொடுத்து, டாலராக மாற்றிக் கொள்ள முடியும் என்ற தகவலை வருமான வரித்துறையின் உயரதிகாரி ஒருவர் மறுத்தார்.

இந்த பத்திரங்களை அமெரிக்க வங்கிகளில், அதற்குரிய முகவர்களின் உதவியுடன் அடமானம் வைத்து, அதன் மூலமாகக் கடன் பெற்று, வர்த்தகம் செய்து அதை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும்.அதில் கிடைக்கும் லாபத்தொகையைக் கொண்டு, பத்திரத்துக்கு உரியவர்களுக்கு ஒரு சதவீதத் தொகை கமிஷனாக வழங்கப்படும். அப்படிக் கணக்கிட்டாலும், ராமலிங்கம் வைத்துள்ள பத்திரத்துக்கு 275 கோடி ரூபாய் வரை கமிஷன் கிடைக்கும். அதற்காகவே, இந்த முயற்சி நடந்திருக்கலாம்; ஆனால், இதை எல்லாம் செய்யுமளவுக்கு விபரமானவராக ராமலிங்கம் தெரியவில்லை; அவருக்குப் பின் வேறு யாராவது இருக்க வாய்ப்புண்டு என்றும் அந்த அதிகாரி சந்தேகம் தெரிவித்தார்.

 

சீனாவுக்கு முதலிடம்:

 

அமெரிக்க அரசின் கருவூல பாதுகாப்புத்துறை, பணத்துக்குப் பதிலாக யு.எஸ்.டிரஸ்ஸரி பாண்ட், யு.எஸ். முனிசிபல் பாண்ட் என இரு வகையான கடன் பத்திரங்களைத் தருகிறது. இதற்கான முதிர்ச்சிக்காலம் 22லிருந்து 30 வருடமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்குப் பொருட்கள் தரப்படுவதற்கு ஈடாகவும், இந்த கடன் பத்திரங்கள் வழங்கப்படுகின்றன. கடந்த 2001, பிப்ரவரியிலிருந்து 2006 ஜனவரி வரை, இவற்றை வழங்குவதை அமெரிக்க அரசு நிறுத்தி விட்டது. அதன்பின், சில மாற்றங்களுடன் இதனை மறுஅறிமுகம் செய்து, இதனை வெளியிட்டு வருகிறது. அமெரிக்காவின் நெருக்கடி நிலை, பொருளாதார ஏற்ற இறக்கத்தைப் பொறுத்து, இதன் மதிப்பு உயரும் அல்லது குறையும். "செகன்டரி மார்க்கெட்' எனப்படும் இரண்டாம் நிலைச் சந்தைகளில், முக்கிய பரிவர்த்தனைப் பொருளாக இந்த பத்திரங்கள் அதிகம் பயன் படுத்தப்படுகின்றன. தரப்படும் பொருட்களுக்கு பணத்துக்குப் பதிலாக இவை மாற்றாக வழங்கப்படுகின்றன.

உலக நாடுகளில், 50 பில்லியனுக்கு அதிகமான அளவில் அமெரிக்கக் கருவூலக் கடன் பத்திரங்களை வாங்கியுள்ள நாடுகளின் பட்டியலை கடந்த நவம்பரில் அமெரிக்க கருவூல பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, 1153.6 பில்லியன் டாலர்களை வாங்கி முதலிடத்தில் சீனா உள்ளது. சீன அரசு மற்றும் தனி நபர்களிடம் உள்ள பத்திரங்கள் அனைத்தும் இதில் அடக்கம். 51.9 பில்லியன் டாலர் மதிப்புள்ள பத்திரங்களை வாங்கி, இந்தியா கடைசியிடத்தில்(21வது இடம்) உள்ளது.

இவற்றில், ராமலிங்கத்திடம் மட்டுமே 5 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்கக் கருவூலக் கடன் பத்திரம் கைப்பற்றப்பட்டுள்ளது. அந்த ஆவணம், உண்மையாக இருக்கும்பட்சத்தில், நாட்டிலுள்ள அமெரிக்கக் கருவூலப் பத்திரத்தில் பத்து சதவீதத்தை (5 பில்லியன்) வைத்திருந்த "சாதனையாளராக' ராமலிங்கம் பெயர் பெறுவார். இதற்கு அவரால் கணக்குக் காட்டவே முடியாது; பொய்யாக இருக்கும்பட்சத்தில் போலீசிடமிருந்து தப்ப முடியாது;

 

இப்படியும் ஓர் அச்சம்

 

மன்னார்குடியில் நிலக்கடலை வாங்கியதற்கான தொகையைக் கொடுக்காமல் ஏமாற்றியது, நில மோசடி செய்தது என பல விதமான மோசடிகள் தொடர்பாக புகார்கள், வழக்குகள் ராமலிங்கத்தின் மேல் உள்ளன. திவால் நோட்டீசும் அவர் கொடுத்து இருப்பதாகவும் உறவினர்கள் கூறுகின்றனர். ஆனால், திடீரென தொண்டியில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் எண்ணெய் ஆலை துவக்குவதற்காக அவர் மத்திய அரசிடம் அனுமதி கோரியது, "திட்டமிட்டே செய்த காமெடி' ஆகக் கருதப்படுகிறது. தற்போது, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கியதாக தகவல் பரவியுள்ளதால், இப்போது கிடைத்த சர்ச்சைக்குரிய புகழை வைத்தே இவர் மீண்டும் பல கோடி ரூபாய் மோசடி செய்ய வாய்ப்பிருப்பதாகவும் வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் அச்சம் தெரிவித்தார். எதிர்காலத்தில் இதேபோன்ற பத்திரங்களை வெளிநாட்டிலிருந்து பெறவும், அதை வைத்து உள்ளூரில் மோசடியாய் வசூலிக்கவும் பலர் முயற்சி செய்யக்கூடும் என்பதே அவரது அச்சத்துக்கான காரணம்.

 

ராமலிங்கம் யார் :

 

சாதாரணக் கடலை வியாபாரி ராமலிங்கத்திடம், அவரால் எழுதிக்காட்டவே முடியாத அளவுக்கு அமெரிக்க கருவூலக் கடன் பத்திரம் இருந்தது கண்டு, உறவினர்களும், ஊர்க்காரர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். தொழில் வட்டத்திலும், சொந்த வட்டத்திலும் கூட மர்ம மனிதராகவே நடமாடியுள்ளார். "அவர் ஒரு மோசடியாளர்' என, உறவினர்களே கூறும் அளவுக்கு அவரது நடவடிக்கைகள் இருந்துள்ளன. கடலை வாங்கியதற்கான தொகையைக் கொடுக்கமுடியாமல், அவரது வீட்டுக்கு பலரும் வந்து தகராறு, ரகளை செய்ததைப் பார்த்துப் பழக்கப்பட்ட சுற்று வட்டார மக்களுக்கு, இவரது வீட்டில் 27 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணம் கைப்பற்றப்பட்ட தகவலைக் கேட்டு தலைசுற்றிப் போயுள்ளனர். ராமலிங்கத்தின் பின்னணி குறித்து, அருகில் வசிப்பவர்கள் கூறியதாவது:

 

கவுசல்யா, டீக்கடை நடத்துபவர்:

 

ராமலிங்கம், முன்பு கடலை மில் நடத்தி வந்தார். ஆடம்பரம் இல்லாமல் அமைதியாகத்தான் இருப்பார். சமீபத்தில் கார் வாங்கினார். சில நாட்களுக்குமுன், உறவுக்காரர் திருமணத்தில் அவரது மனைவி அதிகளவில் நகை அணிந்து வந்ததைப் பார்த்தோம். ஆனாலும் அவரது சொத்து விவரங்கள் குறித்து தெரியாது. அடிக்கடி, வெளியே சென்று விடுவார். பொள்ளாச்சிக்கு போயிருப்பதாக சொல்வார்கள். அவரிடம் கேட்டால், "ஆந்திரா, கர்நாடகா போயிருந்தேன்' என்பார். "தமிழ்நாட்டில் நம்பர் ஒன் ஆக வேண்டும்' என்று அடிக்கடி வீட்டில் சொல்வாராம். சில காலமாக, 20 நாளைக்கு ஒருமுறைதான் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார். பணம் தராமல் இவர் ஏமாற்றிய பலரும் வீட்டுக்கு வந்து தகராறு செய்து வந்தனர்; மஞ்சள் நோட்டீஸ் கொடுத்து சரிக்கட்டி விட்டார். அவர் என்ன செய்கிறார் என்பது அவரது மனைவிக்கே

இப்போதுதான் தெரியும்.

 

தர்மராஜ், ராமலிங்கத்தின் உறவினர்:

 

(தாராபுரம் நகரப்பகுதியில் கடலை வியாபாரம் செய்யும் இவரது வீட்டிலும் வருமானவரித்துறையினர் விசாரணை நடத்திச் சென்றுள்ளனர்) எனக்கும், என் சகலை ராமலிங்கத்துக்கும் 14 வருஷமாக எந்தப் பேச்சுவார்த்தையும் இல்லை. ராமலிங்கம், முதலில் ஒரு டீக்கடை நடத்தி வந்தார். நான்தான், எனது மனைவியின் தங்கையை திருமணம் செய்து வைத்தேன். சில நாட்களிலேயே, அவருடன் வாழ முடியாது என திரும்பி வந்து விட்டாள்.மூன்றாண்டுகள் எங்களுடன் இருந்தாள். 1998ல் 80 சென்ட் நிலத்தை வாங்கி தொழில் துவங்கி "செட்டில்' ஆன பின் அவளை அனுப்பி வைத்தோம்.

அந்த நிலத்தையும் மூன்று முறை கிரயம் செய்து விட்டார்; அடமானமும் வைத்து விட்டார். போலி கையெழுத்து போடுவதில் கில்லாடி. பெருந்துறை, மன்னார்குடி பகுதி கடலை வியாபாரிகளுக்கு கொடுக்க வேண்டிய பல லட்சம் ரூபாய் பணத்தை, கொடுத்து விட்டதாக போலி ஆவணம் தயார் செய்தார். இதனால் பெரிய ரகளை ஆனது. எப்படி தப்பு பண்ணுவது, எப்படி தப்புவது என்பது அவருக்கு மட்டுமே தெரியும். என்னுடைய காசோலையை ஒருமுறை திருடி 2 லட்ச ரூபாய் மோசடி செய்தார். குடும்பத்தில் நடக்கும் எந்த நிகழ்ச்சிக்கும் வர மாட்டார். சொந்த மாமனார் இறந்தபோது கூட வரவில்லை. அவர் ஒரு மோசடி பேர்வழி என்பது தெளிவாகத் தெரிந்தபின், 14 ஆண்டுகளாக நாங்கள் அனைவரும் அவரை ஒதுக்கி விட்டோம்.

 

திலகா, ராமலிங்கத்தின் தூரத்து உறவினர்:

 

மன்னார்குடி வியாபாரிகளுக்கு பல லட்ச ரூபாய் பணம் கொடுக்காமல் ஏமாற்றியதாக அவர்கள், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்; இதுவரை கொடுத்ததாக தெரியவில்லை. அவர்கள் அடிக்கடி வந்து சண்டை போட்டுப் போவார்கள். மூன்று லட்சம் ரூபாய்க்கு இவருக்கு கடலை விற்ற ஒரு இளைஞர், பணம் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்டார். இவர் "நோட்டு' மாற்றும் கிரிமினல் வேலை செய்கிறார் என சந்தேகப்பட்டோம்.என்றாவது பிடிபடுவார் என்று நினைத்தோம்; இப்போது நடந்து விட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு முன் சாதாரண வீட்டில்தான் குடியிருந்தனர். பெருந்துறை கடலை வியாபாரிகளுக்கு பணம் கொடுக்க முடியாமல் ஒருமுறை வீட்டை பூட்டி விட்டு, தாராபுரம் டவுனில் சிறிது காலம் குடியிருந்தனர். கடந்த நான்கைந்து ஆண்டுகளாக அவரது வீட்டில் அதிக பணப்புழக்கம் உள்ளது. வீட்டில் ஏ.சி., பொருத்தி விட்டார். வீட்டில் எல்லாமே வெளிநாட்டு பொருட்கள்தான்.

 

செந்தில், உப்புத்துறைப்பாளையம்:

 

ராமலிங்கம் யாருடனும் அதிகமாக பேச மாட்டார். இப்போது நடந்திருப்பது குறித்தெல்லாம் பேப்பரை பார்த்துதான் தெரிந்து கொண்டோம். இவ்வளவு பெரிய தொகை அவரிடம் இருந்திருக்குமா என்பது ஆச்சரியமாகவே உள்ளது.

 

"அவர் ரொம்ம்ம்பப...நல்லவருங்க!'

 

வருமானவரித்துறை விசாரணைக்காக ராமலிங்கம் சென்னை சென்று விட, தாராபுரத்தில் ராமலிங்கத்தின் வீடு உட்புறமாக பூட்டப்பட்டுள்ளது. இன்னும் பதிவு செய்யப்படாத புத்தம் புதிய "இன்னோவா' கார் வீட்டின் முன் நிற்கிறது. குடும்பத்தினருக்கு துணை யாக சில உறவினர்கள் வந்துள்ளனர்.ராமலிங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து அவரது உறவினர்கள் ஒவ்வொன்றாக போட்டுடைக்க, அவரது மனைவி கலைச்செல்வியோ "தனக்கு எதுவுமே தெரியாது' என சாதிக்கிறார். வீட்டின் நுழைவு வாயில் கேட்டை திறக்காமலே அவர் கூறுகையில், ""என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. பெட்ரோல் பங்க் வாடகை, கடலை வியாபாரம்தான் ஒரே வருமானம். இப்போது நடப்பதையெல்லாம் எதிர்பார்க்கவே இல்லை.

ஆறு மாதமாக அவர் வெளிநாட்டுக்கு எங்கும் போகவில்லை. பத்து ஆண்டுக்கு முன்பு அ.தி.மு.க., வில் இருந்தார். இப்போதெல்லாம் சுயேச்சைக்குதான் ஓட்டு போடுவார். அவர் 100 சதவீதம் தப்பு பண்ண மாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்றார். அவரது நம்பிக்கை பலிக்குமா என்பது, வருமானவரித்துறையின் விசாரணை முடிவுகள் வெளியானால்தான் தெரியும்.

http://www.seithy.com/breifNews.php?newsID=73433&category=IndianNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
இந்தியாவையே திரும்பிப் பார்க்கவைத்த கடலை வியாபாரி - 27 ஆயிரம் கோடி ரூபாவுக்கு அதிபதியானது எப்படி? 
 

 

மக்கள் கடலைபோடுவது அதிகமாகி வியாபாரம் சூடுபிடித்துவிட்டது..! :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.