Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாலிக்கு படைகளை அனுப்ப பிரான்ஸ் தயாராகிறது

Featured Replies

ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள மாலி நாட்டில் அல் குவைடா அமைப்பின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்கள் நாட்டின் வடபுலத்தை பெரும்பாலும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டன.

 

இந்த நிலையில் மாலி நாட்டு அதிபர் டியோன் கவுண்டா தரோற் பிரான்சிய படைகளின் உதவியை கோரி அவசர வேண்டுகோள் விடுத்திருந்தார்.


இதைத் தொடர்ந்து மாலி நோக்கி பிரான்சிய படைகளை அனுப்புவதற்கான உத்தரவை அதிபர் பிரான்சியோ ஒலந்த விடுத்துள்ளார்.

 

மாலியில் நிலமை மோசமடைந்து பயங்கரவாத அமைப்பொன்று வெற்றிபெறும் நிலை உருவானதைத் தொடர்ந்து ஐ.நா வின் பாதுகாப்பு சபை சென்ற மாதம் அவசரமாகக் கூடியது தெரிந்ததே.
அதைத் தொடர்ந்து மாலியில் ஏற்படும் நகர்வை தடுக்க ஆகவேண்டிய அனைத்தையும் செய்யும்படி பாதுகாப்பு சபை உத்தரவு வழங்கியிருந்தது.

 

ஆபிரிக்க தேசிய படைகளை மாலிக்கு அனுப்பலாம் என்ற யோசனையையும் ஐ.நா வழங்கியிருந்தது.
நேற்று வியாழன் சுமார் 1200 பேர் கொண்ட அல் குவைடா படைகள் மொப்ரி நகரை நெருங்கியிருந்தன, இந்த நிலையில் அவர்களை தடுக்க வேண்டிய பொறுப்பு பிரான்சிடம் விழுந்துள்ளது.

 

ஏற்கெனவே சாட், ஐவரிக்கோஸ்ற், செனகல் போன்ற நாடுகளில் பிரான்சிய படைகள் சில நூற்றுக்கணக்கில் நிலை கொண்டுள்ளமை கவனிக்கத்தக்கது.

 

மேலும் பிரான்ஸ் ஏற்கெனவே மாலியை தனது காலனித்துவ நாடாக வைத்திருந்த அனுபவங்களை கொண்டுள்ளது.

 

இருந்தாலும் மாலிக்கு போகும் பிரான்சிய படைகள் அங்குள்ள நிலமையை இலகுவாக சமாளிக்க முடியும் என்று கூற முடியாது, நீண்ட நாட்கள் நிலை கொள்ள நேரிடும் என்றே கருதப்படுகிறது.

 

மறுபுறம் ஐரோப்பிய ஒன்றியத்தின் இராணுவப் பிரிவொன்று மாலி புறப்பட்டுள்ளது, தீவிரவாதிகளுக்கு எதிராக மாலியின் இராணுவம் போராடக் கூடிய பயிற்சிகளை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவுள்ளது.
மாலிக்கு புறப்படும் பிரான்சிய இராணுவம் அயலில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கும் உதவி வழங்கும் என்று கூறப்படுகிறது.

 

பிரான்சிற்கு அனைத்து நாடுகளும் உதவி வழங்க வேண்டுமென அமெரிக்கா கேட்டுள்ளது.

http://www.alaikal.com/news/?p=120483

 

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

படைய அனுப்பி இராணுவ நடவடிக்கையும் தொடங்கி பல பகுதிகளை இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றி முன்னேறிக்கொண்டு இருக்கின்றன

ஆனால் தங்கள் நாட்டு பணையக்கைதி ஒருவரை விடுவிக்க போய் சோமாலியாவில் France பலத்த அடி வாங்கி இருக்கின்றது அதன் சிறப்புப்படையை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர்

  • தொடங்கியவர்

பிரான்ஸ் விமான ஓட்டி பலி

 

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் பெரும்பாலான ஆபிரிக்க நாடுகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க தான் பிரான்ஸ் விரும்புகின்றது போலும் அதாவது அந்த பிரதேசத்திற்கு தானே ராஜா என்று சொல்ல விரும்புகின்றது

  • தொடங்கியவர்

படைய அனுப்பி இராணுவ நடவடிக்கையும் தொடங்கி பல பகுதிகளை இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றி முன்னேறிக்கொண்டு இருக்கின்றன

ஆனால் தங்கள் நாட்டு பணையக்கைதி ஒருவரை விடுவிக்க போய் சோமாலியாவில் France பலத்த அடி வாங்கி இருக்கின்றது அதன் சிறப்புப்படையை சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர்

 

பணயக் கைதி விடுவிப்பு முயற்சி தோல்வி கமாண்டோ பலி

 

சொமாலியாவில் தீவிரவாதிகளால் பிடித்துவைக்கப்பட்டிருந்த பிரஞ்சு பணயக் கைதி ஒருவரை விடுவிக்க பிரஞ்சுப் படையினர் நடத்திய முயற்சி தோல்வியடைந்துள்ள நிலையில், அந்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பிரஞ்சுக் கமாண்டோக்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார், மேலும் ஒருவரைக் காணவில்லை.

கைதியை விடுவிக்க முயற்சி செய்தபோது தீவிரவாதிகளால் கடுமையான பதில் தாக்குதல் வந்தது என்றும், பணயக் கைதியாக இருந்துவந்த பிரஞ்சு உளவாளி தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்றும் பிரஞ்சு பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறினார்.

 

இந்த நடவடிக்கையின்போது இஸ்லாமியவாத ஆயுததாரிகள் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

 

ஆனால் பிரஞ்சு உளவாளி இன்னும் உயிரோடுதான் இருக்கிறார் என்றும், அவரை என்ன செய்யப்

போகிறோம் என்று இன்னும் சிறிது நேரத்தில் முடிவு செய்யப்படும் என்றும் அல் ஷபாப் ஆயுதக்குழு கூறுகிறது.

 

மாலியில் இஸ்லாமியவாத கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக பிரஞ்சு துருப்புகள் மோதலில் ஈடுபட ஆரம்பித்த ஒரு சில மணி நேரங்களில், பிரஞ்சு விசேட கமாண்டோ படையினர் சொமாலியாவின் தென்பகுதியில் உள்ள அல்ஷபாப் தளத்துக்கு ஹெலிகாப்டரில் கொண்டுசெல்லப்பட்டிருந்தனர்.

2009ஆம் ஆண்டு தலைநகர் மொகதிஷுவிலிருந்து டெனிக்ஸ் அலெக்ஸ் என்ற பிரஞ்சுக்காரர் கடத்தப்பட்டிருந்தார்.

 

http://www.alaikal.com/news/?p=120567

  • கருத்துக்கள உறவுகள்

French army is the best Army....

  • கருத்துக்கள உறவுகள்

அது தான் Somalia ல பயனக்கைதியை மீட்க போய் பிரெஞ்சு படையின் அதி உயர் விஷேட படையணியை சேர்ந்த இருவரை பறிகொடுத்து விட்டு ஓடி வந்திட்டினம்.....நடவடிக்கை படு தோல்வி :D

பிரன்சு மக்களுக்கு அனுதாபங்களை மட்டும் தெரிவிச்சு கொள்கிறேன்....    ஏற்கானவே பொருளாதார பிரச்சினையில் இருக்கும் மக்களுக்கு தேவை இல்லா தலையிடி...   அங்கே பிரஞ்சு படைகள் நடவடிக்கையை வேகமாக முடிக்கவும் முடியாது...   இன்னும் ஒரு "டியன் பியன் பூ"  நிச்சயம்...

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் இன் அதி உயர் ரகசிய படையான elite DGSE secret service படையணியே இந்த திடீர் தாக்குதலை நடத்தியது இந்த படையணியின் ஒருவீரனின் இழப்பே பாரிய உயிரிழப்பாக கருதப்படும் கடின பயிற்சி அவர்களுக்கு செலவிடும் தொகை போன்றன .

  • கருத்துக்கள உறவுகள்

தயா அண்ணை..சும்மா மனிசரை பயமுறுத்தாதைங்கோ... :D 

  • கருத்துக்கள உறவுகள்

உடல்களை விட்டுவிட்டும் பிரெஞ்சு படையினர் ஓட்டம் எடுத்தார்களாம்

Sheikh Mohamed Abdallah, a local al-Shabab military commander, said: "Mujahedeen fighters defeated the so-called commandos of the French government who tried to rescue a hostage, and they (the commandos) left the bodies of several of their own at the site of the attack."

News.com

"The helicopters attacked a house ... upon the assumption that Denis Allex was being held at that location, but owing to a fatal intelligence blunder, the rescue mission turned disastrously wrong.

தயா அண்ணை..சும்மா மனிசரை பயமுறுத்தாதைங்கோ... :D 

 

எல்லாம் ஒரு நல்ல எண்ணம் தான்...   யாம்(பிரித்தானியர்) பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும்... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

உடல்களை விட்டுவிட்டும் பிரெஞ்சு படையினர் ஓட்டம் எடுத்தார்களாம்

 

 

சுண்டல்..அவர்கள் பயிற்சி அப்படி..வேகம்..வேகம்..எதிலும் வேகம்... :D 

எல்லாம் ஒரு நல்ல எண்ணம் தான்...   யாம்(பிரித்தானியர்) பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும்... :icon_mrgreen:

 

தயா அண்ணைக்கு எதையும் பங்கிட்டுக்குடுக்கிற பரந்த மனசு.. :D 

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்காவில் ஒரு இனப்படுகொலைக்கு மறைமுக ஆதரவளித்த பிரான்ஸ்.. இப்ப ஆபிரிக்காவில்.. தனது நவ காலனித்துவத்துக்கு வேலை பார்க்க ஆரம்பித்துள்ளது.

 

அது சரி.. சிறீலங்காவிற்கு இறையாண்மை இருந்திச்சு.. மாலிக்கு அந்த ஆண்மை இல்லையோ.. ஐநா கிய்னா என்று ஒன்றிலும் ஒரு முடிவும் இல்லாமல் உடன போய் அடிக்கினம். அதுசரி.. பயங்கரவாதம் என்று சொல்லி யார் எவரைக் கொன்றாலும் அதற்கு ஐநா அனுமதி தேவையில்லையாக்கும்..! அங்கு மனித உரிமை அவசியம் இல்லையாக்கும். ஆனால்.. இந்த.. அரச பயங்கரவாதத்தை கண்டிப்பது.. தண்டிப்பது தான் பயங்கரவாதம் ஆக்கும். :D:lol:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

பிரான்சில் பாதுகாப்பு தீவிரம்:ஹோலண்ட்

 

மாலி, மற்றும் சோமாலியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான பயங்கரவாத அச்சுறுத்தலால் அதனை தொடர்ந்து பிரான்ஸிலும் பொதுக்கட்டிடங்கள் மற்றும் போக்குவரத்துக்கு பலத்த பாதுகாப்பு போட தீவி நடவடிக்கை எடுக்‌கப்பட்டுள்ள‌த‌ாக அந்நாட்டு அதிபர் ஹாலண்ட் தெரிவித்தார்.

 

இது குறித்து மேலும் கூறுகையில், பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

 

http://tamil.yahoo.com/%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA-%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B5-014500386.html

  • தொடங்கியவர்

மாலியில் பிரான்சிய தாக்குதல் ஆரம்பம் 100 பேர் மரணம்

 

ஆபிரிக்க நாடான மாலியில் பிரான்ஸ் தனது கைவரிசையை காட்ட ஆரம்பித்துள்ளது, நேற்று சனி இரவு முதல் மதியம்வரை பிரான்சிய விமானங்கள் நடாத்திய தாக்குதலில் தீவிரவாதிகளும், மாலிப்படைகளுமாக மொத்தம் 100 பேர்வரை மரணித்துள்ளனர்.


இந்தத் தாக்குதலில் பிரான்சிய உலங்குவானூர்தி தாக்கதல் பிரிவு போலீசார் ஒருவரும் மரணமடைந்துள்ளார்.

 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாலியின் மத்திய நகரமான கொனாவை அல்குவைடா தீவிரவாதிகள் கைப்பற்றியிருந்தனர், அதே நகரத்தில்தான் நேற்று பிரான்சிய விமானத் தாக்குதல்கள் முனைப்பாக நடந்துள்ளன.

 

பயங்கரவாதிகளை முற்றாக வெளியேற்றுவதற்கான முயற்சிகளை மாலி நாட்டின் அரசுடன் இணைந்து பிரான்சிய படைகள் முன்னெடுக்கும் என்று பிரான்சிய அதிபர் ஒலந் நேற்று தெரிவித்துள்ளார்.

 

மாலிக்கு புறப்படுவதற்கான இறுதிக்கட்ட பணிகளில் பிரான்சிய தரைப்படையினர் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

 

மேலை நாடுகள் மத்திய கிழக்கை முடித்து ஆபிரிக்க சருகுகளை மூட்டி வெளிச்சம் பெற இருப்பது போல ஆபிரிக்காவிற்குள் பிரான்சின் நுழைவு இருக்கிறது.

 

அதேவேளை பிரான்ஸ்சிய படைகள் சோமாலியாவிற்குள் பணயக்கைதி மீட்பு நடவடிக்கைக்காக பிரவேசித்த முயற்சி தோல்வியடைந்து, ஒரு பிரான்சிய படைவீரர் கொல்லப்பட்டு இன்னொருவர் காணாமல் போயுள்ளார்.

 

இந்தத் தாக்குதலில் சுமார் 19 பேர் மரணமடைந்ததாக நேற்றைய செய்திகள் தெரிவித்திருந்தன.

கடத்தி வைக்கப்பட்டுள்ள பிரான்சிய உளவாளி என்னவானார் என்று தெரியவில்லை.

 

மறுபுறம் பிரான்சில் ஓரினச் சேர்க்கைக்கு எதிராக இன்று பாரிய ஆர்பாட்டம் நடைபெற இருக்கிறது.

 

எட்டு கிறீத்தவ பிஷப்கள் பங்கேற்கிறார்கள், பிரபல அரசியல் தலைவர் ஜீன் பிரான்கோஸ் முக்கிய பாத்திரம் வகிக்கிறார்.
பிரான்சிய அரசு ஓரினச் சேர்க்கைக்கு அனுமதி வழங்கி, ஓரின தம்பதிகள் பிள்ளைகளை தத்தெடுக்கவும் வழி செய்யும் சட்டத்தை அமல் செய்ய இருக்கும் செய்தியறிந்து இந்த ஆர்பாட்டம் இன்று ஞாயிறு பிரான்சிய வீதிகளை ஊடறுத்துப் பாயவுள்ளது.

 

இந்த வாரம் பிரான்ஸ் உலக அரசியல் அரங்கில் முக்கிய நகர்வுகளை முடுக்கிவிட்டுள்ளது, பிரான்சிய முன்னாள் அதிபர் ஸார்கோஸி தலைமையில் மேலை நாடுகளின் தலைவர்கள் பாPசில் நடாத்திய முக்கிய மாநாட்டின் அதிர்வுகளே இந்த வாரம் வெளிப்படையாக தெரிய ஆரம்பித்துள்ளன.

 

இனி நடைபெறப் போகும் போர்களில் மேலை நாடுகளின் அணிக்கு பிரான்சே தலைமை தாங்கப்போகிறது என்று லிபிய தாக்குதலுக்கு முன்னர் அமெரிக்கா தெரிவித்திருந்தது.

 

ஆபிரிக்க நாடுகளில் அடுத்த கட்ட போர்கள் வெடிக்கப் போகிறது என்பதையோ, ஆபிரிக்காவில் காலனித்துவம் செலுத்தியுள்ள பிரான்ஸ் அதற்கு தலைமை தாங்கப் போகிறது என்பதையோ அமெரிக்கா தெரிவிக்கவில்லை.

 

ஆனால் அந்த மாபெரும் இரகசிய கூட்டத்தின் நகர்வுகள் ஆரம்பித்துவிட்டன…

 

அமெரிக்க ட்றோனார் விமானங்களை ஆபிரிக்காவிற்குள் நகர்த்த வேண்டுமென நேற்று முன் தினம் ஐ.நா செயலர் கேட்டிருந்தார்.

 

நேற்று அமெரிக்கா பிரான்சிற்கு தனது ஆதரவை தெரிவித்திருந்தது, அதேவேளை ஸார்கோஸியின் தலைமையில் அந்தப் பணிகளை அமெரிக்கா முன்னெடுக்க விரும்பவில்லை, காரணம் ஸார்கோஸி ஜேர்மனிய சான்சிலர் அஞ்சலா மேர்க்கலுடன் கொண்ட நல்லுறவு அதற்கு தடையாக இருந்தது.

 

ஆனால் மேர்க்கலுடன் பிரான்சிய ஒலந்திற்கு இடைவெளி இருப்பதால் அமெரிக்க ஆதரவை பிரான்ஸ் பெற வழியிருக்கிறது.
ஆனால் ஒரு விடயம் தெரிகிறது.. உலகப் பயங்கரவாதத்தை அடக்கப் புறப்பட்டுள்ள பிரான்ஸ் தனது மடியில் பயங்கரவாதத்தை இனி சுமக்க விரும்பாது..

 

http://www.alaikal.com/news/?p=120583

  • தொடங்கியவர்

இனி அமெரிக்காவின் இராணுவ முகம் பிரான்ஸ் ஆக இருக்கப் போகின்றது. விளைவுகளும் பிரான்ஸை மையப்படுத்தியதாக் இருக்கும்.

 

ஏற்கனவே அமெரிக்காவின் சமாதான முகம் நோர்வே மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் அழிவில் முடிந்தது எல்லாருக்கும் தெரிந்து இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

மாலியில் நிறைய கனிமவளங்கள் உள்ளன. தீவிரவாதிகளை ஒடுக்கி மேல்நாட்டு நிறுவனங்கள் கால்பதிக்கும்வரை இது ஓயாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரெலிபோன்,ரீவி,கொம்பியூட்டர் எண்டு எல்லாம் தயாரிக்கிறதுக்கு முக்கியமான சாமான்  மாலியிலை எக்கச்சக்கமாய் இருக்காம்.......அதோடை சிறீலங்காவிலையும் இருக்குதாம்? :D

  • தொடங்கியவர்

இருண்ட கண்டத்தையும் சுரண்ட ஆரம்பித்து விட்டார்கள்.

 

சீனர்கள் ஏற்கனவே அங்கு கால் பதித்து உள்ளனர்.

 

சாதாரண மக்கள் மீது யாருக்கு என்ன அக்கறை ?

  • கருத்துக்கள உறவுகள்

 

 

-----------------------------------------------------------------------------------

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள மாலி நாட்டில் அல் குவைடா அமைப்பின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்கள் நாட்டின் வடபுலத்தை பெரும்பாலும் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டன.

 

இந்த நிலையில் மாலி நாட்டு அதிபர் டியோன் கவுண்டா தரோற் பிரான்சிய படைகளின் உதவியை கோரி அவசர வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து மாலி நோக்கி பிரான்சிய படைகளை அனுப்புவதற்கான உத்தரவை அதிபர் பிரான்சியோ ஒலந்த விடுத்துள்ளார்.

 

மாலியில் நிலமை மோசமடைந்து பயங்கரவாத அமைப்பொன்று வெற்றிபெறும் நிலை உருவானதைத் தொடர்ந்து ஐ.நா வின் பாதுகாப்பு சபை சென்ற மாதம் அவசரமாகக் கூடியது தெரிந்ததே.

அதைத் தொடர்ந்து மாலியில் ஏற்படும் நகர்வை தடுக்க ஆகவேண்டிய அனைத்தையும் செய்யும்படி பாதுகாப்பு சபை உத்தரவு வழங்கியிருந்தது.

 

ஆபிரிக்க தேசிய படைகளை மாலிக்கு அனுப்பலாம் என்ற யோசனையையும் ஐ.நா வழங்கியிருந்தது.

நேற்று வியாழன் சுமார் 1200 பேர் கொண்ட அல் குவைடா படைகள் மொப்ரி நகரை நெருங்கியிருந்தன, இந்த நிலையில் அவர்களை தடுக்க வேண்டிய பொறுப்பு பிரான்சிடம் விழுந்துள்ளது.

 

ஏற்கெனவே சாட், ஐவரிக்கோஸ்ற், செனகல் போன்ற நாடுகளில் பிரான்சிய படைகள் சில நூற்றுக்கணக்கில் நிலை கொண்டுள்ளமை கவனிக்கத்தக்கது.

 

மேலும் பிரான்ஸ் ஏற்கெனவே மாலியை தனது காலனித்துவ நாடாக வைத்திருந்த அனுபவங்களை கொண்டுள்ளது.

 

இருந்தாலும் மாலிக்கு போகும் பிரான்சிய படைகள் அங்குள்ள நிலமையை இலகுவாக சமாளிக்க முடியும் என்று கூற முடியாது, நீண்ட நாட்கள் நிலை கொள்ள நேரிடும் என்றே கருதப்படுகிறது.

 

மறுபுறம் ஐரோப்பிய ஒன்றியத்தின் இராணுவப் பிரிவொன்று மாலி புறப்பட்டுள்ளது, தீவிரவாதிகளுக்கு எதிராக மாலியின் இராணுவம் போராடக் கூடிய பயிற்சிகளை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கவுள்ளது.

மாலிக்கு புறப்படும் பிரான்சிய இராணுவம் அயலில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கும் உதவி வழங்கும் என்று கூறப்படுகிறது.

 

பிரான்சிற்கு அனைத்து நாடுகளும் உதவி வழங்க வேண்டுமென அமெரிக்கா கேட்டுள்ளது.

 

 

இவ்வளவு ஏற்பாடுகளும் நடைமுறைகளும் பின்பற்றப்பட்டு உள்நாட்டில் அனைத்துக்கட்சிகளதும் ஆதரவும் சர்வதேச ஆதரவுடனேயே  பிரெஞ்சுப்படைகள் செல்கின்றன.

அந்த நாட்டில் ஆட்சி அல் குவைடாவின் கீழ் போகுமிடத்து பல அண்டை நாடுகளிலும்அது பரவி  உலகத்துக்கே பெரும் சவாலாக  மாறலாம்.

 

அவசியம் என்றே நினைக்கின்றேன்.

இழப்புக்களை தவிர்த்து பிரெஞ்சுப்படைகள் வெல்ல வாழ்த்துகின்றேன்.

  • தொடங்கியவர்

மாலி பிரான்சிய விமானத் தாக்குதலை மீறி தீவிரவாதிகள் முன்னேற்றம்

 

மாலி நாட்டில் பிரான்சிய விமானப்படையினர் நடாத்தும் தாக்குதல்களை மீறி அல்குவைடா ஆதரவு பெற்ற போராளிகள் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.


பிரான்சிய விமானங்கள் குண்டு வீச்சுக்களை நடாத்தினாலும் போராளிகள் தலைநகரை நோக்கி வேகமாக முன்னேறுவது பிரான்சிற்கு ஆச்சரியத்தைக் கொடுத்துள்ளது.

 

ஆயுதம் தாங்கிய போராளிகள் நன்கு பயிற்றப்பட்டவர்களாகவும், தாக்குதல் நிலமைகளை உள்வாங்கி போரிடக் கூடியவராகவும் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே மாலி நாட்டு இராணுவம் எதிர்ப்புக்களை எதிர் கொள்ள முடியாது சென்ற ஆண்டே நாட்டின் வடமேற்கு பிராந்தியத்தை இழந்துவிட்டது.


கடந்த வெள்ளி முதல் பிரான்சிய விமானங்கள் தரைவழி தாக்குதல்களை நடாத்தியபடியுள்ளன ஆனால் போராளிகள் தலைநகரின் கழுத்தை நெரிப்பது போல மத்திய மாலியை நோக்கி நகர்கிறார்கள்.

 

மாலி பெரிய நாடாக இருக்கிறது, தலை நகர் போராளிகளுக்கு தற்போது 680 கி.மீ தொலைவில் உள்ளது.

 

தாக்குதல்கள் தமது நகர்வை பின்தள்ளாது என்றும் தற்போது கைப்பற்றியுள்ள அலற்றோனாவில் இருந்து பின்வாங்கமாட்டோம் என்றும் போராளிகள் கூறியுள்ளார்கள்.

 

அதேவேளை பிரான்சிற்கு ஆதரவாக ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் படைகளை அனுப்புவதாக வாக்களித்துள்ளது, ஆனால் எந்த நாட்டில் இருந்து எவ்வளவு படைகள் அனுப்பப்படுமென தெரிவிக்கப்படவில்லை.

 

தாக்குதல்கள் தொடர்ந்தால் போர் நடைபெறும் இடத்தைச் சுற்றி வாழும் பெருந்தொகையான மக்கள் பாதிப்படைவர் என்று சர்வதேச தொண்டு நிறுவனங்கள் கவலை வெளியிட்டுள்ளன, ஏற்கெனவே விமானத் தாக்குதல்களால் 12 பொது மக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

 

ஆனால் மாலியில் தாம் நடாத்தும் தாக்குதல் நீண்டகாலத்திற்குரியதல்ல என்று பிரான்சிய பாதுகாப்பு அமைச்சர் சம்பிரதாய பூர்வமாக அறிவித்துள்ளார்.

 

ஒரு சில மாதங்களில் வெற்றி மாலை சூடுவேன் என்று ஆப்கான் புறப்பட்ட அமெரிக்கப்படைகள் திரும்ப 2014ம் ஆண்டு டிசம்பர்வரை செல்லும் என்று புறப்பட்டபோது கோர்ஜ் டபிள்யூ புஸ்சே எதிர்பார்த்திருக்கமாட்டார்.

 

http://www.alaikal.com/news/?p=120696

  • தொடங்கியவர்

மாலி நாட்டு சோலி மூன்று மாதத்தில் முடியாது

 

தற்போது மாலி நாட்டுக்கு பிரான்ஸ் படை கொண்டு சென்றுள்ளதும், அதற்கு டென்மார்க் உதவ முன்வந்திருப்பதும் டென்மார்க்கில் முக்கிய செய்திகளாக வலம் வருகின்றன.


டென்மார்க்கில் இருக்கும் மாலி நாட்டவர் ஒருவர் இது குறித்து தெரிவிக்கும்போது பிரான்ஸ் அங்கு போயிருப்பது நல்லது, ஆனால் நினைப்பது போல காரியத்தை சீக்கிரம் முடிக்க இயலாது என்றார்.

 

மேலும் அங்கு அல் குவைடா ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்கள் நடாத்தும் காட்டுத் தர்பாரினால் பலருடைய தலைகள் துண்டாடப்பட்டுள்ளன, எத்தனையோ பேருடைய கைகள் வெட்டப்பட்டுள்ளன, பாலியல் பலாத்காரம் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது என்றார்.
இவைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டுமானால் தீவிரவாதிகள் விரட்டியடிக்கப்படுவது அவசியம் என்பதை மறுக்க இயலாது என்றும் கூறியுள்ளார்.

 

மாலி ஆபிரிக்காவில் ஏழாவது பெரிய நாடு கடந்த மார்ச் இராணுவப் புரட்சி ஒன்று நடைபெறும்வரை அங்கு அமைதி நிலவியது.

 

முன்னர் பிரான்சின் காலனித்துவ நாடாக இருந்த மாலி ஊழல் நிர்வாகத்திற்கு உலகப் புகழ்பெற்ற நாடாக இருந்து வருகிறது.
மேலை நாடுகளின் பணத்தைப் பெற்று இராணுவத்திற்கு சம்பளம் வழங்கி அதையும் ஒரு நாடுபோல நடாத்தி வந்திருக்கிறார்கள்.

விளக்குமாற்றுக்கு பட்டுக் குஞ்சம் சுற்றியது போல வலம் வரும் நாடுகளுக்கு மாலியும் ஓர் உதாரணமாகும்.
நாட்டின் எல்லைப்பகுதிகளில் போதிய கட்டுப்பாடில்லை பக்கத்து வீட்டுக்குள் நுழைந்தது போல அயல் நாடுகளுக்குள் நுழைய முடியும்.
எனவேதான் போராளிகள் பல பக்கங்களில் இருந்தும் வருகிறார்கள்.

 

இந்த நிலையில் அந்தப் பாரிய நிலப்பரப்பை கட்டுப்பாட்டில் கொண்டுவருவது கடல் தண்ணீரை அள்ளி பானைக்குள் ஊற்றிய கதைபோலவே தென்படுகிறது.

 

பிரான்சிய படைகள் நினைப்பதைப் போல மாலி ஓர் ஆப்கானிஸ்தான் அல்ல, மிக விரைவாக வெற்றிக் கீதம் இசைக்கலாம் என்று கனவு காண வேண்டாம் என்று போராளி ஒருவர் கூறினார்.

 

http://www.alaikal.com/news/?p=120772

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.