Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஸ்வரூபம் திரைப்படத்திற்கு எதிராக மருதானை சினிசிட்டி திரையரங்கம் முற்றுகை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
விஸ்வரூபம் திரைப்படத்திற்கு எதிராக மருதானை சினிசிட்டி திரையரங்கம் முற்றுகை
 
By General 
2013-01-23 10:59:29
 
முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாய் நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்திருப்பதாகக் கூறிவிஸ்வரூபம் திரைப்படத்தை கண்டித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு மருதானை சினிசிட்டி திரையரங்கை முற்றுகையிடுவதாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் முடிவெடுத்துள்ளது.
 
இது தொடர்பாக ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,
 
தொடர்ச்சியாக சினிமாக்கள் மூலம் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமான கருத்துக்களை வெளியிட்டு வரும் கமல்ஹாசன் இம்முறையும் விஸ்வரூபம் திரைப்படம் மூலமாக தனது இஸ்லாமிய எதிர்ப்புத் துவேசத்தைக் காட்டுவதின் மூலம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவும், ஒழுக்கம் கெட்டவர்களாகவும், சித்தரித்துள்ளதுடன் முஸ்லிம்கள் புனிதமாக கருதும் திருமறைக் குர்ஆனையும் கொச்சைப்படுத்தி இத் திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
 
21ம் தேதி திங்கள் கிழமை தமிழ்நாட்டில் இயங்கும் இஸ்லாமிய அமைப்புகளுக்கு இத்திரைப்படம் திரையிட்டுக் காட்டப்பட்டது. விஸ்வரூபம் திரைப்படத்தின் காட்சிகள் தமிழ் சினிமா வரலாற்றில் இது வரைக்கும் எந்தத் திரைப்படத்திலும் இல்லாத அளவு இஸ்லாத்தையும், முஸ்லிம்களும் கொச்சைப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக தமிழகத்தின் பலம் மிகு இஸ்லாமிய அமைப்பான தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவித்துள்ளதுடன், இந்தியாவில் எந்தவொரு திரையரங்கிளும் இத்திரைப்படத்தை ஓட விடமாட்டோம் என்றும் அறிவித்துள்ளது.
 
இலங்கையிலும் இத்திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பில் இலங்கை திரைப்பட வெளியீட்டுக் கூட்டுத்தாபனத்திற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டதுடன், ஜனாதிபதி மற்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோருக்கும் இத்திரைப்படத்தை தடை செய்யும்படி கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
எதிர்வரும் 25ம் திகதி விஸ்வரூபம் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் இலங்கையில் கொழும்பு மருதானை சினிசிட்டி திரையரங்கிலும் இத்திரைப்படம் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(25-01-2013) ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக சினிசிட்டி திரையரங்கை முற்றுகையிடுவதாக இன்று நடந்த ஜமாத்தின் தலைமை நிர்வாக கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
 
  • கருத்துக்கள உறவுகள்

போராடப் போறாங்கய்யா...போராட.....எல்லா புகழும் அல்லாவுக்கே

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஹொலிவூட்டில்(Los angeles) கமலகாசனால் படம் போட்டுக்காண்பிக்கபடுகிறதாம். 

ஒரு உயிர் போகப்போகிறது என்று தெரிந்தும் அமைதியாக இருந்தவர்களுக்கு இதற்கு மட்டும் ரோசம் வந்து விட்டதாக்கும். :wub: ரிசானாவின் கொலையுடன் முஸ்லிம்களை குறை சொல்லாத ஏனைய இனத்தவர்கள் கூட குறை சொல்ல வெளிக்கிட்டிட்டார்கள்.
 
Edited by துளசி

விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு தடை!

கமல்ஹாசன் இயக்கி, தயாரித்து நடித்துள்ள 'விஸ்வரூபம்' படத்தை வெளியிட, தமிழக அரசு 15 நாட்களுக்குத் தடை விதித்துள்ளது. இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று, அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதனால், வருகிற 25-ம் தேதி வெளிவருவதாக இருந்த விஸ்வரூபம் ரிலீஸ் ஆவதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த திங்கட்க்கிழமை விஸ்வரூபம் படத்தை இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு நிர்வாகிகளுக்கு திரையிட்டு காட்டினார் கமல்.

அதையடுத்து, அந்தப் படத்தில் தங்கள் மதத்தினரை மிக மோசமாக சித்தரித்தரித்திருப்பதாக இஸ்லாமிய அமைப்பினர் குற்றம்சாட்டினர்.  இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தி காட்சிகளை வைத்திருப்பதால் விஸ்வரூபம் படத்தை தடை செய்ய வேண்டும் என அவர்கள் கோரினர்.

இதுதொடர்பாக, இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டமைப்பு நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் புகார் அளித்தார்கள்.

இதன் தொடர்ச்சியாக இன்று சென்னை - கோட்டையில் உள்துறை செயலாளர் ராஜகோபாலை 24 முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு சந்தித்தது. அப்போது முஸ்லிம்களை காயப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படத்தை தடை செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தார்கள்.

இந்த நிலையில், விஸ்வரூபம் படத்தை வெளியிட 15 நாட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, டி.டி.எச். ரிலீஸ் பிரச்னை காரணமாக, விஸ்வரூபம் வெளியிடுவது தள்ளிப்போனது குறிப்பிடத்தக்கது.

http://news.vikatan.com/?nid=12153

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சினிசிட்டி திரையரங்கை முற்றுகையிட இருந்த பேராட்டம் இடைநிறுத்தம்
By General 
2013-01-24 18:56:06
 
முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் கொச்சைப்படுத்தும் விதமாய் நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்திருப்பதாகக் கூறி விஸ்வரூபம் திரைப்படத்தை கண்டித்து நாளை வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு மருதானை சினிசிட்டி திரையரங்கை முற்றுகையிட இருந்த பேராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் தெரிவித்துள்ளது.
 
நாளை விஸ்வரூபம் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொழும்பு மருதானை சினிசிட்டி திரையரங்கிலும் இத்திரைப்படம் திரையியிட இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் நாளை ஜும்மா தொழுகையைத் தொடர்ந்து ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் சார்பாக சினிசிட்டி திரையரங்கை முற்றுகையிடுவதாக நேற்று நடந்த ஜமாத்தின் தலைமை நிர்வாக கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
 
எனினும் படம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதையடுத்து மருதானை சினிசிட்டி திரையரங்கை முற்றுகையிட இருந்த பேராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்
இலங்கை இனவாதத்திற்கு எதிராக விஸ்வரூபம் எடுக்காதவர்கள் கமலின் படைப்புக்கு விஸ்வரூபம் எடுக்கிறார்கள்-
24 ஜனவரி 2013
lg-share-en.gif
 
குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக வி.ஏ.கே.ஹரேந்திரன்

Viswaroopam_main_CI.jpg

பொதுவாக திரைப்படங்களைப் பார்ப்பதும், நண்பர்களுடன் விமர்சனங்களைப் பகிர்ந்து கொள்வதுடன் இதுவரை நிறுத்திக் கொண்டாலும், விஸ்வருபத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது இதுபற்றி எழுத வேண்டும் என தீர்மானித்தேன். இதற்கு சில காரணங்களும் இருக்கின்றன. பின்னர் பார்க்கலாம்.

விஸ்வரூம் : எதிர்ப்புகள், சிக்கல்கள், நெருக்கடிகள், முரண்பாடுகள் என பல்வேறு சர்ச்சைக்கு மத்தியில் வெளிவந்திருக்கிறது.
 
ஒரு முரண்பாடான விடயத்தை முரண்பாடாகத் தான் சொல்ல முடியும். இந்தக் கருத்தில் எனக்கு எவ்வித முரண்பாடும் கிடையாது.
 
படத்திலும் கமல் சொல்லவந்த விடயத்தை முரண்பாடு இல்லாமல் செய்திருக்கிறார் அல்லது சொல்ல முனைந்திருக்கிறார். ஆனாலும் கமலுக்கு தைரியம் கொஞ்சம் அதிகம் தான். 
 
முதலாவது விஸ்வரூபத்தை சினிமா என்று பார்த்தால் நிச்சயமாக அடித்துக் கூறலாம் தமிழ் சினிமா (கமலின் சினிமா) உலகத் தரத்திற்கு வந்துவிட்டது என்று! படத்தைப் பார்த்த பின்னர் உங்களுக்கும் இந்தக் கருத்தில் முரண்பாடு ஏற்படாது என நினைக்கிறேன். 
 
உலக நாயகனின் நடிப்புத் திறமை பற்றி இதன்போது கூறத்தேவையில்லை! அது அனைவருக்குமே தெரிந்தவிடயமே! 
 
முக்கியமாக ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, தொகுப்பு என சினிமாவைப் பொறுத்த வரையில் அது உலகத் தரத்தில் தான் இருக்கிறது.
 
விஸ்வருபம் படத்தில் முதல் சில நிமிடங்களைத் தவறவிட்டிருந்தாலும் முதல் பாடலுடன் (உன்னைக் காணாது நான் இன்று நானில்லையே..) திரையங்கிற்குள் நுழைந்ததில் இருந்து வெளியே வரும் வரையில் விசேடமாக படத்தின் ஒலியமைப்பு முழுமையாக அரங்கு நிறைந்த இரசிகர்களை ஆக்கமிரமித்திருந்தது.
 
Viswaroopam_2.jpg
 
முக்கியமாக, நண்பர்களிடம் ஒரு வேண்டுகோள்.. முடிந்த வரையில் ஒலித் தரம் வாய்ந்த திரையரங்குகளில் பார்க்க முயற்சியுங்கள். அப்போது தான் அதனை முழுமையாக உணரமுடியும்.
 
படம் முடிந்து திரை கறுக்கும் வரையில் அனைவரையும் அசையவிடாமல் வைத்திருந்தது. முடிவில் எழுத்து ஓடி முடிந்த பின்னர் தான் ஒவ்வொருவராக அசைய ஆரம்பித்தனர்.
 
முழுமையாக படத்தில் மூழ்கிய போதிலும் கமல் சொல்ல வரும் செய்தியை முழுமையாக புரிந்துகொள்ள முடியாமல் போனது. புரிந்துகொள்ள முயற்சித்தால் பிழையாக புரிந்து கொள்வேனோ என கடுமையாக அதற்கு முயற்சிக்கவில்லை. இரண்டாவது முறைப் பார்த்தால் சொல்லவரும் செய்தியைப் புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும் என நம்புகிறேன்.
 
விஸ்வரூபம் படத்தைப் பற்றியோ, அதன் தரத்தைப் பற்றியோ பேசுவதைவிட இன்னும் சில முக்கிய விடயங்களைப் பேசவேண்டியிருக்கிறது.
 
படத்தில் முழுமையாக மூழ்கியிருக்கும்போது வந்த இரண்டு தொலைபேசி அழைப்புக்களில் இரண்டாவது அழைப்பு இலங்கையிலிருந்து எனது நண்பன், சகோதரன் அழைத்தார்.
 
அங்கு விஸ்வரூபம் திரையிடப்படுகிறதா எனக் கேட்டார். அதற்கு நான் விஸ்வரூபத்தைத் தான் பார்த்துக் கொண்டிருக்கின்றேன் எனப் பதிலளித்தேன். அத்துடன், இலங்கையில் திரையிடப்படவில்லை என்பது போல ஏதோ கூறினார். ஆனால் அதிரவைக்கும் ஒலியமைப்புக்களின் மத்தியில் மறுமுனைக் குரல் தெளிவாக இருக்கவில்லை.
 
மறுகணமே படத்தைப் பார்த்து முடித்த பின்னர் அழையுங்கள் எனக் கூறினார். (பொதுவாக திரைப்படங்கள் குறித்த விரிவான பார்வையும், ஆர்வமும் இருவருக்கும் இருப்பதால் படம்பற்றி ஆரோக்கியமான விமர்சனங்களை நாங்கள் இருவரும் பகிர்ந்துகொள்வது வழக்கம்) 
 
அழைப்பைத் துண்டித்து சில நிமிடங்களில் ஒரு குறுந்தகவல் வந்தது.
 
தொலைபேசியில் அழைத்த நண்பன் தனக்கு வந்த குறுந்தகவலை எனக்கு அனுப்பியிருந்தார். அந்தக் குறுந்தகவல் : ''கமலின் விஸ்வரூபம் திரைப்படம் இனவாதத்தைத் தூண்டும் வகையில் இருப்பதால் இலங்கையில் திரையிடத் தடை'' அமைச்சரவைப் பேச்சாளர் - செய்தி!
 
Viswaroopam_1.jpg
 
இதுபற்றி படம் முடிந்த பின்னர் பார்க்கலாம் என நினைத்த மறுகணமே படத்திற்குள் மீண்டும் நுழைந்து கொண்டேன்.
 
இலங்கை, தமிழக நண்பர்களுக்காக விஸ்வரூபம் படத்தின் கதையை மிகச் சுருக்கமாகக் கூறிவிடுகிறேன்.
 
கமல் ஒரு கதக் நடன ஆசிரியர்! ஆன்ட்ரியாவுடன் கதக் ஆடும் கமலின் அந்தப் பாடலை முழுமையாக பார்க்க கிடைக்காதது வருத்தம்தான். கமலின் உடல் அசைவுகள், நடை, உடை, பாவனை அனைத்தும் நளினமாக, கச்சிதமாக இருந்தது.
 
ஆன்ட்ரியா கமலின் ஜோடியல்ல. கமலின் மனைவியாக பூஜா குமார் கலக்குகிறார். பூஜா குமாருக்கும் வேறொருவருக்கும் தொடர்பு (கள்ளத் தொடர்பு). இந்தத் தொடர்புக்கு கமல் இடையூறாக இருப்பதால் கமலிடம் ஏதாவது தவறு இருக்கிறதா என்பதைக் கண்காணித்து அதைக் கூறி பிரிந்துவிடுவதே பூஜா குமாரின் திட்டம். கமலைக் கண்காணிக்க இதற்காக பூஜாகுமார் ஒரு உளவாளியை அனுப்புகிறார்.
 
உளவாளி பின்தொடர்வதை அறிந்து அவரைத் திசைதிருப்ப ஒரு இடத்திற்கு ஹீரோ செல்ல, அந்த இடம் வில்லர்களின் சதித்திட்டம் தீட்டப்படும் ஒரு இடம். கமலைத் தொடர்ந்து குறித்த உளவாளியும் செல்ல, உளவாளி வில்லர்களிடம் மாட்டிக் கொண்டு, கொலை செய்யப்படுகிறார்.
 
உளவாளி குறித்து வில்லன் தரப்பு விசாரிக்க, கமலின் மனைவிதான் உளவாளியை அனுப்பிய தகவல் கிடைக்க, கமலின் வீட்டிற்கு வில்லன் தரப்பு விரைகிறது. பூஜா குமார், கமல் ஆகிய இருவரும் கட்டி அழைத்துச் செல்லப்பட்டு ஒரு அறையில் அடைத்து வைத்து விசாரிக்கப்படுகின்றனர்.
 
கமலின் நடை, உடை, பாவனை இதுவரை சுவாரசியமாக நகர்ந்து செல்ல இவன் யார் என்று தெரிகிறதா என்ற பாடலுடன் முதல் சண்டைக் காட்சி திரையரங்கை அதிர வைத்தது. ஒலியமைப்பின் அதிர்வும் துள்ளியமும் கால்களினால் கூட உணரக்கூடியதாக இருந்தது.
 
இதன்பின்னர் வில்லனுக்கும், ஹீரோவிற்கும் இடையிலான கடந்த, நிகழ்கால கதையை கதை நகர்த்திச் செல்கிறது.  ஆப்கானிஸ்தானில் ஹீரோவின் கடந்தகால வாழ்க்கை, முஸ்லிம் போராளிகள் குறித்த பயிற்சிகள், அவர்களின் உணர்வுகள், அவலங்கள், டாலர் தேசத்தின் நடவடிக்கைகள் என பரபரப்பாக நகர்ந்து செல்கிறது.
 
Viswaroopam_3.jpg
 
உண்மையில் முன்னர் கூறியதைப் போல ஒரு முரண்பாடான விடயத்தை முரண்படாமல் கூற முடியாது. ஆனால் நிச்சயமாகக் கூறலாம் இந்தப் படத்தில் முஸ்லிம்களை இழிவுபடுத்தவோ, பிழையாக சித்தரிக்கவோ இல்லை.
 
யதார்த்தம் கூறப்பட்டுள்ளது. அவர்களின் உணர்வுகள் பகிரப்பட்டுள்ளன. இதனை விட இதனை விளக்கமாகக் கூற முயற்சித்தால் முரண்பாடுகள் ஏற்படும். ஆக முஸ்லிம் நண்பர்களும் அனைவரும் நிச்சியமாக இந்தப் படத்தைப் பார்க்கவேண்டும். அப்போது சில முரண்பாடான விடயங்கள் உணர்ந்துகொள்ளக் கூடியதாக இருக்கும். 
 
இப்போது இலங்கையில் இருந்துவந்த குறுந்தகவல் பற்றிப் பேசலாம். 
 
எனது நண்பர் ஒருவர் தனது முகப்புத்தகத்தில்  விஸ்வருபம் படம் பற்றி ஆரம்பம் முதலே பதிவுகளை பகிர்ந்துவந்தார்.இலங்கையிலும் விஸ்வருபம் படத்திற்கு எதிராக முஸ்லிம்கள் போராட்டம் என்ற செய்தியை அறிந்த அந்த நண்பன், பன்னாடைகள் என்று திட்டினார்.
 
சரிதான். அவர் சொன்னதில் தவறு எதுவும் இல்லையெனத் தோன்றுகிறது. (பன்னாடைகள் என்றால் தேவையானதை விட்டுவிட்டு தேவையில்லாததை பிடித்துக் கொள்வது. அல்லது நல்லதை விட்டுவிட்டு குப்பைகளைப் பிடித்துக் கொள்வது)
 
விஸ்வரூபம் இனவாதத்தைத் தூண்டும், அல்லது மதவாதத்தைத் தூண்டும் எனக் கூறுகின்றவர்களுக்கு தம்புள்ளையில் பள்ளிவாசல் தாக்கப்பட்டது, அநுராதபுரத்தில் பல பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டது, தெஹிவளைப் பிரதேசத்தில் தாக்கப்பட்டது, முஸ்லிம் சகோதர்களின் வர்த்தக நிலையங்களுக்கு, அவர்களின் வர்த்தகத்திற்கு, ஹலால் இலட்சனைக்கு  எதிராக மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் இனவாதத்தை அல்லது மதவாதத்தைத் தூண்டும் செயலாக தென்படவில்லை போலும்.
 
தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டபோது காவல்துறையினரும், அதிரடிப்படையினரும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த காட்சிகள் ஊடகங்களில் வெளிவந்திருந்ததை யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.
 
இவையெல்லாம் விஸ்வரூபத்தை தடை செய்தவர்களுக்கு இனவாதத்தை, மதவாதத்தைத் தூண்டும் செயலாக புரியவில்லையா? அல்லது புரியாமல் இருக்கிறார்களா என்பது தான் கேள்வியாக இருக்கிறது.
 
இதில் முக்கியமான விடயம் என்னவெனில், இஸ்லாமிய நாடான மலேசியாவில் இன்றே (24) அனைத்து முன்னணி திரையரங்குகளிலும் அரங்கு நிறைந்த காட்சிகள் ஓடிக்கொண்டிருப்பதுதான். அதிகப்படியான தமிழர்களும், தமிழ் பேசும் முஸ்லிம்களும் வாழும் மலேசியாவில் எவ்வாறு இந்தப் படம் ஒளிபரப்ப அனுமதிக்கப்பட்டது என்ற நியாயமான கேள்வி எழுகிறது. 
 
இதில் இருந்தே விஸ்வரூபம் முஸ்லிம்களுக்கெதிரான படம் அல்ல என்பது புரிந்திருக்கும். இதில் அரசியல் இலாபம் தேட முனைகின்றவர்களே போர்க் கொடி உயர்த்துகின்றனர்.
 
இலங்கையில் முஸ்லிம் சகோதர்களுக்கெதிராக அண்மைக்காலமாக தொடுக்கப்பட்டுவரும் பிரசாரங்கள் பகிரங்கமாகவே முன்னெடுக்கப்படுகின்றன. அரசாங்கத்தைக் கட்டிக்காக்கும் சில சிங்கள இனவாத அமைப்புக்களே இவற்றை பகிரங்கமாக முன்னெடுத்து வருகின்றன. இவை அனைத்தையும் தடுக்க வேண்டிய, தவிர்க்க வேண்டிய தரப்பினர் கண்டும் காணாது போல இருக்கின்றனர்.
 
இதற்கு ஆதரவாக ஆளும் கட்சியிலுள்ள முஸ்லிம் அமைச்சர்களோ, அரசியல்வாதிகளோ சிகப்புநிற சால்வைக்குள் ஒளிந்துகொண்டனர். 
 
நுனிப்புல் மேய்ந்த, அல்லது விஸ்வருபம் படத்தில் என்னக் கூறப்படுகிறது என்பதை முழுமையாக பார்க்காத, அல்லது அரைகுறையாக பார்த்து பன்னாடையாக செயற்பட்டவர்கள் இந்தப் படத்தை தடைசெய்ய வேண்டும் எனக் கோருகின்றனர்.
 
இதனை அரசியல் இலாபத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டுள்ள தற்போதைய இலங்கை அரசாங்கத் தரப்பினர் முஸ்லிம்களுக்காக தடை செய்வதைப் போலவும், அவர்களது உணர்வுகளுக்கு பதிலளிப்பதைப் போலவும் காண்பித்துக் கொள்ள ஒன்றும் இல்லாத ஒன்றை விஸ்வரூபமாகியுள்ளனர்.
 
உண்மையில் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது ''நம்மில் யார் இறந்தாலும், ஒரு தாய் அழுவாள்'' என்ற வரிகள் காட்சிகளுடனும், அது சொல்லப்படும் இடமும் உணர்வுகளுடன் கலந்து மிகப்பெரிய ஒரு செய்தி சொல்கிறது.
 
உண்மையில், முஸ்லிம் சகோதரர்களின் உணர்வுகளைப் பேசுகின்ற இந்தப் படத்தை அவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இதனை எழுதுகிறேன்.
 
அப்போது தான் முஸ்லிம் அரசியல் தலைமைகளும், படத்தை அரசியலுக்காகத் தடைசெய்த அதிகாரத் தரப்பினரும் தம்மை எவ்வாறு வழிநடத்துகின்றனர்  என்பதை முஸ்லிம் சகோதரர்கள் உணர்ந்துகொள்ளக் கூடியதாகவிருக்கும். 
 
- வி.ஏ.கே.ஹரேந்திரன் 
 
இன்றிரவு 7:30 இற்கு பார்க்கப் போகின்றேன். முதலில் ஒரு வாரமாவது தாமதித்து பார்க்கலாம் என்று இருந்தேன், ஆனால் முஸ்லிம்களின் தேவையற்ற எதிர்ப்பு (கமலின் பாசையில் சொன்னால், கலாச்சார தீவிரவாதம்) இன்றே பார்க்க் தூண்டுகின்றது.

போகும்பொழுது புட்டவிச்சு கருவாட்டுக்குழம்பும் கட்டிக்கொண்டு போங்கோ நிழலி அண்ணை.. :D 

போகும்பொழுது புட்டவிச்சு கருவாட்டுக்குழம்பும் கட்டிக்கொண்டு போங்கோ நிழலி அண்ணை.. :D 

நீங்கள் வேற...மனிசி இட்டலி செய்கின்றாவாம். இந்த உளுந்து ஐட்டங்களை லேசில் நம்ப்ப முடியாது..சில நேரம் விஸ்வரூபம் குசுரூபமாக போகவும் சான்ஸ் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
நீங்கள் வேற...மனிசி இட்டலி செய்கின்றாவாம். இந்த உளுந்து ஐட்டங்களை லேசில் நம்ப்ப முடியாது..சில நேரம் விஸ்வரூபம் குசுரூபமாக போகவும் சான்ஸ் இருக்கு.

இட்லி உழுந்திலா செய்வது அண்ணை?? :unsure: 

இட்லி உழுந்திலா செய்வது அண்ணை?? :unsure: 

இவ்வளவு நாளும் கடையில் மா வாங்கி இட்லி செய்தீர்களா? :D  அதிலும் கொஞ்சம் உளுத்தம்மா கலந்திருக்கும்.

இட்லி உளுந்தும் ரவையும் போட்டு செய்வது. சில பேர் உளுந்துடன் அரிசி குறுணல் சேர்த்து செய்வார்கள். எதுக்கும் கோமகன் அண்ணாவிடம் இட்லி செய்யும் முறையை கேட்கவும்... :)

தோசை கூட உளுந்தில் தான் செய்வார்கள். :icon_idea: சிலர் தனி கோதுமை மா தோசையும் செய்வார்கள். :D

இப்போது இலங்கையில் இருந்துவந்த குறுந்தகவல் பற்றிப் பேசலாம். 
 
எனது நண்பர் ஒருவர் தனது முகப்புத்தகத்தில்  விஸ்வருபம் படம் பற்றி ஆரம்பம் முதலே பதிவுகளை பகிர்ந்துவந்தார்.இலங்கையிலும் விஸ்வருபம் படத்திற்கு எதிராக முஸ்லிம்கள் போராட்டம் என்ற செய்தியை அறிந்த அந்த நண்பன், பன்னாடைகள் என்று திட்டினார்.
 
சரிதான். அவர் சொன்னதில் தவறு எதுவும் இல்லையெனத் தோன்றுகிறது. (பன்னாடைகள் என்றால் தேவையானதை விட்டுவிட்டு தேவையில்லாததை பிடித்துக் கொள்வது. அல்லது நல்லதை விட்டுவிட்டு குப்பைகளைப் பிடித்துக் கொள்வது)
 
விஸ்வரூபம் இனவாதத்தைத் தூண்டும், அல்லது மதவாதத்தைத் தூண்டும் எனக் கூறுகின்றவர்களுக்கு தம்புள்ளையில் பள்ளிவாசல் தாக்கப்பட்டது, அநுராதபுரத்தில் பல பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டது, தெஹிவளைப் பிரதேசத்தில் தாக்கப்பட்டது, முஸ்லிம் சகோதர்களின் வர்த்தக நிலையங்களுக்கு, அவர்களின் வர்த்தகத்திற்கு, ஹலால் இலட்சனைக்கு  எதிராக மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் இனவாதத்தை அல்லது மதவாதத்தைத் தூண்டும் செயலாக தென்படவில்லை போலும்.
 
தம்புள்ள பள்ளிவாசல் தாக்கப்பட்டபோது காவல்துறையினரும், அதிரடிப்படையினரும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த காட்சிகள் ஊடகங்களில் வெளிவந்திருந்ததை யாரும் மறந்திருக்கமாட்டார்கள்.
 
இவையெல்லாம் விஸ்வரூபத்தை தடை செய்தவர்களுக்கு இனவாதத்தை, மதவாதத்தைத் தூண்டும் செயலாக புரியவில்லையா? அல்லது புரியாமல் இருக்கிறார்களா என்பது தான் கேள்வியாக இருக்கிறது.

:lol: :lol: :lol:

நல்ல கேள்வி... :icon_idea:

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு நாளும் கடையில் மா வாங்கி இட்லி செய்தீர்களா? :D  அதிலும் கொஞ்சம் உளுத்தம்மா கலந்திருக்கும்.

இட்லி உளுந்தும் ரவையும் போட்டு செய்வது. சில பேர் உளுந்துடன் அரிசி குறுணல் சேர்த்து செய்வார்கள். எதுக்கும் கோமகன் அண்ணாவிடம் இட்லி செய்யும் முறையை கேட்கவும்... :)

அடக்கோதாரி நான் இவ்வளவுநாளும் இட்லி வெள்ளைஅரிசியில் எல்லோ செய்யிறதெண்டு நினைச்சுக்கொண்டிருக்கிறன்.. :unsure: வீட்டில இதுவரையும் இட்லி செய்யேல்லை..கடையிலதான் சாப்பிடிருக்கன்..ஊரில் இருக்கும்போது அம்மா செய்வா..அப்பொழுதெல்லாம்செய்முறையைப்பற்றி யார்கவலைப்பட்டது..சாப்பிடுவதைப்பற்றிதான் கவலைப்படுவம்.. :D யார் நினைத்தது இப்படி தனிய வந்து உடுப்பும் தோச்சு சமைக்கவும் வேண்டி வரும் எண்டு..அடுத்த பக்குவம் கோமகன் அண்ணை இட்லி செய்வது எப்படி என்று போட்டால் நல்லது..அப்புறம் நாங்களும் இட்லி சுடுவமில்ல..

இன்றிரவு 7:30 இற்கு பார்க்கப் போகின்றேன். முதலில் ஒரு வாரமாவது தாமதித்து பார்க்கலாம் என்று இருந்தேன், ஆனால் முஸ்லிம்களின் தேவையற்ற எதிர்ப்பு (கமலின் பாசையில் சொன்னால், கலாச்சார தீவிரவாதம்) இன்றே பார்க்க் தூண்டுகின்றது.

படம் படு மோசம். இடைவேளையின் பின் என்ன இருக்கு என்று கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஆயிரம் கசையடி சன்மானமாகக் கொடுக்கலாம். தாலிபான், குழந்தை போராளிகள், அமெரிக்கா பெண்களை குழந்தைகளை கொல்வது என்று எல்லாம் தொட்டு விட்டு இரண்டாம் பாதியில் மிகவும் மோசமாக எடுத்துள்ளார். முஸ்லிம்களின் எதிர்ப்பு கொடுக்கும் popularity மட்டும் இல்லாட்டி, இந்தப் படம் 15 நாட்களைக் கூட தாண்டாது.

நீங்கள் ஓடிப்போய் பார்க்கும் படமெல்லாம் இந்த மாதிரி இருக்கு. :lol: துப்பாக்கி படத்துக்கும் கிட்டத்தட்ட இப்படி ஒரு விமர்சனம் எழுதியிருந்தீர்கள். :icon_idea:

நீங்கள் ஓடிப்போய் பார்க்கும் படமெல்லாம் இந்த மாதிரி இருக்கு. :lol: துப்பாக்கி படத்துக்கும் கிட்டத்தட்ட இப்படி ஒரு விமர்சனம் எழுதியிருந்தீர்கள். :icon_idea:

ஓம் துளசி....அப்பவே பட்டிக்காட்டு சோசியர் சொன்னவர் எனக்கு உச்சந்தலையில சனியன் இருந்து பேன் பார்க்குது..ஒரு படமும் ஓடிப் போய் பார்க்காதே என்று...கேட்டனா?

என் மகன் படத்துக்கு போக முதல் "அப்பா துப்பாக்கி மாதிரி boring படமாகத்தான் இருக்கும். நான் வரவில்லை" என்று சொன்னவன். "இல்லைடா நல்லா இருக்கும் வா" என்று சொல்லி கூட்டிக் கொண்டு போனன். இப்ப அவனது முகத்தை பார்க்க முடியுது இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
படம் படு மோசம். இடைவேளையின் பின் என்ன இருக்கு என்று கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஆயிரம் கசையடி சன்மானமாகக் கொடுக்கலாம். தாலிபான், குழந்தை போராளிகள், அமெரிக்கா பெண்களை குழந்தைகளை கொல்வது என்று எல்லாம் தொட்டு விட்டு இரண்டாம் பாதியில் மிகவும் மோசமாக எடுத்துள்ளார். முஸ்லிம்களின் எதிர்ப்பு கொடுக்கும் popularity மட்டும் இல்லாட்டி, இந்தப் படம் 15 நாட்களைக் கூட தாண்டாது.

வேண்டாம் ராசா இந்த விளையாட்டு

கமலுக்கு இது வாழ்வா சாவா  நிலை.

இந்த விமர்சனம் அதை சாவுதான் நிலைக்கு மாற்றக்கூடும்.

Edited by விசுகு

ஓம் துளசி....அப்பவே பட்டிக்காட்டு சோசியர் சொன்னவர் எனக்கு உச்சந்தலையில சனியன் இருந்து பேன் பார்க்குது..ஒரு படமும் ஓடிப் போய் பார்க்காதே என்று...கேட்டனா?

என் மகன் படத்துக்கு போக முதல் "அப்பா துப்பாக்கி மாதிரி boring படமாகத்தான் இருக்கும். நான் வரவில்லை" என்று சொன்னவன். "இல்லைடா நல்லா இருக்கும் வா" என்று சொல்லி கூட்டிக் கொண்டு போனன். இப்ப அவனது முகத்தை பார்க்க முடியுது இல்லை.

:lol: :lol:

வேண்டாம் ராசா இந்த விளையாட்டு

கமலுக்கு இது வாழ்வா சாவா  நிலை.

இந்த விமர்சனம் அதை சாவுதான் நிலைக்கு மாற்றக்கூடும்.

அவ்வாறு நான் கருதவில்லை. கமலுக்கென்று ரசிகர்கள் உள்ளார்கள். எவர் என்ன சொன்னாலும் என்ன விமர்சனம் எழுதினாலும் அவர்கள் படத்தை தியேட்டரில் போய் தான் பார்ப்பார்கள். பார்த்து விட்டு வந்து விசர் படம் என்று சொன்னாலும் தியேட்டர் சென்று பார்த்தது பார்த்தது தானே... ஆனால் ஏனையவர்கள் பார்ப்பதை தவிர்ப்பது மூலம் நட்டம் வரலாம்.

கமல் ஒரு சிறந்த நடிகர். ஆனால் குணா படத்தில் அவர் நடித்த பின்னர் பெரும்பாலும் அனைத்து இயக்குனர்களும் அவருக்கு லூசு தனமாக நடிக்கும் கதாபாத்திரத்தை கொடுத்து விட்டார்கள். இல்லாவிட்டால் கமல் இப்பொழுதும் முன்னை போல் இருந்திருப்பார். இடையில் கவுதம் வாசுதேவ் மேனனின் வேட்டையாடு விளையாடு படத்தில் மட்டும் நல்லபடி நடித்திருந்தார்.

இப்ப கொஞ்ச காலமாக ஹொலிவூட் பட ஸ்டைலில் நடிக்க முயற்சிக்கிறார். கதாபாத்திரமாகவே மாறி நடிக்கும் ஓர் சிறந்த நடிகர் தான் கமல். அதில் மாற்றமில்லை. ஆனால் அவர் இப்பொழுது தேர்ந்தெடுக்கும் கதைகள் அவ்வளவாக நன்றாக இல்லை.

ஒவ்வொருவர் ரசனையும் வித்தியாசப்படும். நிழலி அண்ணாவுக்கு பிடிக்காதது ஏனைய பலருக்கு பிடிக்கவும் சந்தர்ப்பம் உள்ளது. அல்லது அரசியல் பிடிக்காதவர்களுக்கு/ விளங்காதவர்களுக்கு படத்தின் முதல் பாதி கூட பிடிக்காமல் இருக்கலாம். அல்லது கமல் ரசிகர்கள் படம் எப்படி இருந்தாலும் சூப்பர் என்றும் சொல்வார்கள். எதையும் நாம் தீர்மானிக்க முடியாது.

அப்ப ஏனாம் கமலின் "உன்னை  போல ஒருவன் "  படத்தை தடை செய்ய கோரவில்லை....??    அதிலையும் முஸ்லீம்கள் பயங்கரவாதிகள் போல தானே காட்டப்பட்டது... ??

  • கருத்துக்கள உறவுகள்

டுப்பாக்கி படம் வந்தது அது மும்பை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பான படம்.. காஸ்மீர் தீவிரவாதிகளை பற்றி படம் எடுங்க .. எவனும் எதும் சொல்லமாட்டான்.. ஏன்னா அவர்கள் செய்தது நியாமான விடயங்கள்.. நீங்க போய் ஒரிஜினல் முஸ்லீம் எரியா வளைகுடா பயங்கரவாதம் அது இது என்று படம் எடுத்தா.. அவர்கள் நேர்மையில் பிறந்து நேர்மையில் வளர்ந்து.. நேர்மையில் தினமும் குளிக்கிறவர்கள்.. அவர்கள் செய்வது சரி.. ரிஜான மரண தண்டனையில் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்ததில்  இருந்தே இது தெரிந்து இருக்கம்.. எவனும் அவனுங்கள பற்றி தாறுமாறா பேசப்படாது.. படம் எடுக்க கூடாது... வெள்ளையல் எடுக்கலாம் இதற்கு மட்டும் அவர்கள் சக்திக்கு உட்பட்ட அளவில் எதிர்ப்பார்கள்.. (அறிக்கை மட்டும்)  ரொம்ப ஆடினால் வாலை இழுத்து ஒட்ட கட் பண்ணிடுவான்...

டிஸ்கி:

உடல் இங்க உயிர் அங்க .. இவனுங்க மசூதியை சிங்களன் புல்ரோசர் வைத்து தரைமட்டமாக நிரவுவது தெரியாது.. ஆனால் இது இங்க நடந்தது.. அதற்காக அரபு நாடுகள் குரல் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது. ஆனால் அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டிய அவசியம் இங்கிட்டு இருக்கு.. இது ஒரு தார்மீக கடமை.. இந்த லாஜிக்கு தெரியாம .. படம்  எடுத்தா இதான் கதி.

இதில் கவனிக்க வேண்டிய விடயம் .. அவன்  அரபு செய்கிறது சரியோ தப்போ.. அதான் ஆக்ஸ்போர்டு டிச்சுனரி.. அவர்களுக்காக  நீங்களும் சேர்த்து குரல் குடுக்கணும்.. உங்களுக்கா குரல் கொடுத்தார்களா என கேட்க படாது...அது அவர்களுடைய வேலை கிடையாது.. அரவணைத்து செல்பவர்கள்தான் கூட குரல் குடுக்கணும்..

முஸ்லீம்களை அரவணைத்து ஒரு தீர்வு எட்ட வேண்டும் என ஒரு குருப்பு ஈழ த்தில் திரிகிறது..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

ஹலால் உணவை தடை செய்யக் கோரி இன்னொரு போராட்டம் விரைவில் நடைபெரும்!

தமிழர்கள் "இங்கு ஹலால் உணவு இல்லை" என்று அறிவுப்புச் செய்த கடைகளில் மட்டுமே உணவருந்த வேண்டும்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.