Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விஸ்வரூபம் - சிறப்பு விமர்சனம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விஸ்வரூபம் படம் சாதாரணமாக வந்திருந்தால் இந்த அளவு கவனிக்கப்பட்டிருக்குமா என்று தெரியவில்லை. காரணம், அத்தனை சுலபத்தில் வசீகரிக்காத அதன் கதை! அமெரிக்காவில் ஆரம்பிக்கிறது கதை. பிராமணப் பெண் பூஜாகுமார், பி.எச்.டி படிப்பதற்காக, அதிக வயசு வித்தியாசம் உள்ள கமலை திருமணம் செய்வதாக ஒப்பந்தம் போட்டு அமெரிக்கா வருகிறார். ஆனால் வந்த இடத்தில் கம்பெனி பாஸுடன் கள்ளக் காதல். நடன ஆசிரியரான கணவருக்கும் அவரது மாணவி ஆன்ட்ரியாவுக்கும் கள்ளத் தொடர்பு இப்பதாக சந்தேகம் பூஜாவுக்கு. இது உண்மையாக இருந்தால் கமலை வெட்டிவிடுவது எளிதாக இருக்கும் என்று ப்ரைவேட் டிடெக்டிவ்வை நியமிக்கிறார். அப்போதுதான் கமல் ஒரு முஸ்லிம் என்பது அம்பலமாகிறது. அதேநேரம் கமலை பின் தொடரும் டிடெக்ட்டிவ் கொல்லப்படுகிறார். அப்பாவி கமலும், வில்லங்க பூஜாவும் வில்லன்கள் கையில் மாட்டிக்கொள்கிறார்கள்.

கமல் திடீரென விஸ்வரூபமெடுத்து ஹீரோ, வில்லன்களை அடித்து நொறுக்க, தனது அப்பாவிக் கணவனா இப்படி என்று பூஜாகுமார் விழிக்கிறார். அந்த நிமிடத்திலிருந்து பக்கா ஆக்‌ஷன் படமாக வேறு தளத்தில், ஆப்கன் தலிபான் பின்னணியில் விரிகிறது (ஆனால் தலிபான் என்ற வார்த்தை எங்கும் இடம்பெறவில்லை). ப்ளாஷ்பேக்கில் அல்கொய்தாவில் பயிற்சி பெற்ற தீவிரவாதியாக வருகிறார் கமல். ஆனால் உண்மையில் அவர் ரா அதிகாரி. அமெரிக்க எப்பிஐக்கு உதவுகிறார். அமெரிக்காவை பழிவாங்க நியூயார்க் நகரையே அழிக்க புறாக்களைப் பயன்படுத்தி அணுகுண்டு வைக்கும் தீவிரவாதிகள் திட்டத்தை எப்பிஐயுடன் சேர்ந்து கமல் எப்படி முறியடிக்கிறார் என்பது மீதிக்கதை! கமல் நன்றாக நடித்திருக்கிறார்... பிரமாதப்படுத்தியிருக்கிறார் என்பதெல்லாம் ஸ்வீட் இனிப்பாக இருக்கிறது என்று சொல்லும் அபத்தத்துக்கு இணை! மனுஷன் வாழ்ந்திருக்கிறார். முகத்தில் தெரியும் வயதின் ரேகைகள்தான் கவலை தருகிறது. ஆனால் அதற்கேற்ப கதையை அமைத்துக் கொண்டதுதான் கமல் ஸ்பெஷல். அந்த கதக் பாவங்களெல்லாம் Simply Extra ordinary! பூஜா குமார், ஆன்ட்ரியா இருவருமே சிறப்பாக நடித்துள்ளனர். படத்தில் தெரிந்த பிற முகங்கள் சேகர் கபூர், நாசர் மட்டும்தான். இது வரையிலும் தமிழ்த் திரையில் காட்டப்படாத நியூயார்க் நகரின் ஏனைய இடங்கள் எல்லாம் படமாக்கியுள்ளார்கள். பார்க்காதவர்கள், அட நியூயார்க் இப்படியும் இருக்குமா என்று ஆச்சரியப் பட்டுப்போவார்கள். ஆப்கானிஸ்தான் என்று படமாக்கப்பட்டுள்ள காட்சிகள் அப்படியே நிஜத்தை பிரதிபலித்திருப்பது போலிருக்கின்றன. இதுவரை தலிபான்கள் பற்றி செய்திகளாக, கட்டுரைகளாகப் படித்த அத்தனை விவரங்களையும் நுணுக்கமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் கமல். சண்டைக் காட்சிகள் எது நிஜம் எது க்ராபிக்ஸ் என்று தெரியாத அளவு, ஹாலிவுட் தரத்தில் இருக்கின்றன. பின்னணி இசைக்கு முக்கியத்துவம் தேவையான இந்த படத்திற்கு, அதைத் தரத் தவறியிருக்கிறார் சங்கர் எசான் லாய். ஓளிப்பதிவு அருமை. எடிட்டிங் செய்தவர் கொஞ்சம் தூங்கி விட்டார் போலிருக்கிறது. இன்னும் கொஞ்சம் ஷார்ப்பாக்கியிருக்கலாம். அந்த புறாக் காட்சிகள், ஒரு மெக்சிகன் படத்தின் (Virgingate Morenita) இன்ஸ்பிரேஷன் போலிருக்கிறது. முழுக்க முழுக்க ஆப்கானிஸ்தான், நியூயார்க்கில் காட்சிப்படுத்தியுள்ள இந்த படத்தில் தமிழகத்தை பற்றி எங்கே வருகிறது என்று தேடவேண்டியுள்ளது. ஒரே ஒரு காட்சியில் வில்லன் தமிழ் நாட்டில் ஒரு வருடம் ஒளிந்து இருந்த போது தமிழ் கற்றுக்கொண்டேன் என்கிறார். அத்தோடு மதுரை, கோவை, அகமதாபாத் என்று பஸ்ஸுக்கு ஆள் கூப்பிடுவது போல் வரிசையாக சில ஊர் பெயர்களை சொல்கிறார். மற்றபடி ஆப்கானிஸ்தானையும், தலிபான்களையும் இவ்வளவு விவரமாக அமெரிக்கப் படங்களில் கூட பார்த்திருக்க முடியாது. ஒரு காட்சியில் பின் லேடன் கூட தோன்றுகிறார். ஆனால் அவரது பெயரை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாகத்தான் சொல்கிறார்கள். ஆளையும் தூரத்தில்தான் காட்டுகிறார்கள். இந்த கூட்டத்தில், தமிழுக்கு தெரிந்த ஒரே முகம் நாசர் மட்டும்தான். பின்லேடன் பற்றி ஒபாமா சொல்லும் போது, பிண்ணனியில் கமல், ஆண்ட்ரியாவின் உரையாடல் இயல்பாக இருக்கிறது. ரூ. 95 கோடி செலவில் படத்தைத் தயாரித்து அதை தெலுங்கு, இந்தி என டப்பிங் செய்த கமல், ஆங்கிலத்திலும் டப் செய்திருந்தால் அமெரிக்கர்கள் நிச்சயம் கொண்டாடியிருப்பார்கள். அவர்களுக்கு மிகவும் பிடித்தமான சப்ஜெக்ட் அல்லவா இது! நியூயார்க் நகரை அல் கொய்தா வைக்கும் அணுகுண்டிலிருந்து காப்பாற்றியதற்காக இந்தியர்களுக்கும் மரியாதை கூடியிருக்கும். விஸ்வரூபம் 2 இந்தியாவில் தொடரும் என்று முடித்திருந்தாலும், அது அமெரிக்காவில் தொடரட்டும் என்றுதான் அட்வான்ஸ் கொடுத்திருப்பார் போலிருக்கிறது ஹாலிவுட் தயாரிப்பாளர் பேரி ஆஸ்போன். சராசரி ஹாலிவுட் படங்களை விட நன்றாகவே படமாக்கியுள்ளார் கமல். நடுவில் கொஞ்சம் கத்தரியை போட்டிருக்கலாம். Any how... கமலுக்கு இது விஸ்வரூபம்தான்!

Thatstamil

Edited by SUNDHAL

விஸ்வரூபம் – சுடச்சுட விமர்சனம்

 
Vishwaroopam-Poster.jpg

அமெரிக்காவில் விஸ்வரூபம் வெளியாகி, இன்று ப்ரீமியர் ஷோ என்றுசொன்னவுடனே முடிவெடுத்துவிட்டேன் “கண்டிப்பாக பார்க்கவேண்டும்”என்று. இதில் வேறு, பலசர்ச்சைகள், போராட்டங்கள், தடைகள் என்று சேர்த்துஎதிர்பார்ப்பை கூட்டியிருந்தன. பவர்ஸ்டார் படத்தையே பத்துவாட்டி பார்க்கும்நான், நிஜஸ்டார் கமல்ஹாசன் படத்தை விட்டுவிடுவோமா என்ன..
 
படத்தின் கதை என்ன. எல்லாப் புத்தகங்களிலும் வந்ததுதான். அமெரிக்க நடனஆசிரியராக வேலைபார்க்கும் கமலுடன் இருக்கவே மனைவி பூஜாகுமாருக்குபிடிக்கவில்லை. இதில் வேலை பார்க்கும் ஓனரோடு கள்ளத் தொடர்பு வேறு. “என்னோட ஆம்படையா எப்படி தெரியுமா” என்று ஆரம்பித்தவுடன் கமலின்முகம் தெரிய ஆரம்பிக்கிறது. முகம் முழுவதும் பெண்மை கலந்தநளினத்தோடு, நடனம் சொல்லி கொடுக்கும் பாங்கு, கமலுக்கு சொல்லவாவேண்டும். ஜமாய்க்கிறார்..
 
தன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் ஓனரை மணப்பதற்கு விவாகரத்துவேண்டுமல்லவா..அதற்காக ஒரு பிரைவேட் டிடெக்டிவ் ஏஜென்சியைவைத்து கமலை பாலோ பண்ண வைக்க, அதிர்ச்சியாக கமல் ஒரு முஸ்லீம்என்று தெரியவருகிறது, படிபடியாக அல்கொய்தாவுக்கே ஆப்கானிஸ்தானில்டிரெய்னிங்க் கொடுத்தவர் என்று வாயில் போட்ட பாப்கானை வெளியேவரவைக்கிறார்கள். ஏன் அமெரிக்காவில் வந்து நடன ஆசிரியராக நடிக்கிறார்,ஏன் ஆப்கானில் அல்கொய்தவுக்கு டிரெய்னிங்க் கொடுத்தார், என்று ரத்தம்தெறிக்க, தெறிக்க..நாம் ஏன்..ஏன் என்று கேட்க கேட்க துப்பாக்கிகுண்டுகளாலேயே பதில் சொல்லியிருக்கிறார்கள். படம் முடிந்து வெளியேவரும்போது, சட்டையில் ரத்தம் எதுவும் ஒட்டி இருக்கிறதா என்றுபார்க்கவேண்டியிருக்கிறது..சமீபத்தில் நான் பார்த்த படங்களில் இந்தஅளவுக்கு வன்முறையை எப்போதும் பார்த்ததில்லை.. உடல் துண்டாகவிழுவது..கழுத்தை அறுப்பது..குண்டு முகத்தில் துளைப்பது..நடுரோட்டில்தூக்குபோடுவது..ஓ..மறந்துவிட்டேன்..கமல் யதார்த்தநாயகன் அல்லவா..இந்த படத்துக்கு யூ.ஏ சான்றிதழ் என்பது கொஞ்சம் இல்லை…நிறையவேஓவருங்கோ…
 
மற்றபடி, இந்த மாதிரியான படத்தை கமலால் மட்டுமே எடுக்கமுடியும்.கமலின் ஒரே நோக்கம் ஹாலிவுட் மட்டும் என்பது தெளிவாகதெரிகிறது…அதே போலவே படமும் முழுக்க முழுக்க ஹாலிவுட் தரம்.முக்கியமாக, ஆப்கானில், தீவிரவாதிகளுக்கு போர்பயிற்சி கொடுக்கும்காட்சிகள், அமெரிக்க தாக்குதல் என அனைத்தும் ஹாலிவுட் தரம்..காதுக்குள்ஹெலிகாப்டர் பறக்கும் இன்னமும் கேட்கிறது..
 
குறிப்பாக ஒரு காட்சி..அப்பாவியான கமலை கட்டிவைத்துவிட்டு,அடிஅடியென அடித்துவிட்டு, உயிர்போகும் தருணத்தில், துவம்சம் பண்ணிஎல்லோரையும் போட்டுதள்ளும் அந்த சீன். அரங்கு முழக்க கிளாப்ஸ்,தீனாவில் கமர்சியல் காம்ப்ளக்சில் அஜீத் துவம்சம் செய்யும் காட்சிக்குகைதட்டியவன், இப்போதுதான் ஒரு சீனுக்கு ஐந்து நிமிடம் தொடர்ந்துகைதட்டினேன்..
 
ஆப்கானிஸ்தானா..அல்லது செட்டா என்று தெரியவில்லை..செட்டாகஇருந்தால் ஆர்ட் டைரக்டருக்கு ஒரு ஷொட்டு..முழுக்க, முழுக்க  ஒருமணிநேரம் ஆப்கானில் இருந்த ஒரு உணர்வு.. டைரக்டர் கமல் ஓங்கிஒன்றரை டன் வெயிட்டாக அடித்திருக்கிறார்..அனைத்தும் க்ளாஸ்..
 
ஆனால்..
ஆனால்..
ஆனால்..
 
என்னடா, கமலின் அறிவுஜீவித்தனம் இன்னமும் வெளிப்படவே இல்லையேஎன்று பார்த்தால், “இதோ இருக்கேன்பா” என்று ஓடிவருகிறார். இவ்வளவுமொன்னையாக அமெரிக்க உளவுத்துறையும்,, போலீசையும் காட்டியதேஇல்லை..நிமிட நேரத்தில் எப்.பி.ஐ க்கு கடுக்காய் கொடுத்து தப்பிப்பது..ஒருநியூக்ளியர் பாம் பேக்டரியவே, நீயுயார்க் நகரத்தில் நடத்துவது..அதை கமல்சொன்னவுடன்தான் தெரிவது..ஸ்வாட் டீம் துப்பாக்கியை பிடித்து நடக்கும்விதம்., எப்.பி.ஐ ஆபிசர்களின் நேர்த்தி என்று…ம்..ஹீம்…கமல் சார்..முதல்பகுதி முழுதும் ஹாலிவுட் தரத்தில் எடுத்துவிட்டு, கடைசி 20 நிமிடங்கள்,இப்படி சிரிப்பு மூட்டினால் எப்படி…
 
நியூக்ளியர்..செரனியம்..பீஜான் ரேடியேசன்.. என்று கமலத்துவம்..அதாவது, “கமல்” “த்துவம்” நிறைந்த வார்த்தைகளை கேட்கும்போது, “இன்னாப்பா..ஒன்னும் பிரிய மாட்டிங்குதுப்பா” என்று சொல்லநினைக்கும்போது, சஸ்பென்ஸ் நிறைந்த கடைசிகாட்சிகள். சற்று நிமிர்ந்துஉக்கார்ந்தால்.. …ஓ..மை..காட்..படம் முடிந்துவிட்டதா..ஆமா..கமல் என்னப்பாசொல்லுறாரு..அப்புறம் அந்த தீவிரவாதிக்கும் கமலுக்கும் சண்டை எப்படிவந்தது..ஆமா..கடைசில எதுக்கு பாராசூட்டில இருந்துகுதிக்கிறாங்க..ஆமா..கமலுன்னா யாரு..ஆமா..நான் யாரு…
 
நான் ஏற்கனவே சொன்ன மாதிரி..கமலால் மட்டுமே இப்படிதொழில்நுட்பத்தோடு ஒரு இந்திய படம் எடுக்கமுடியும்..கமல் என்றபிற்விகலைஞனை புரிந்து கொள்ள வேண்டுமென்றால், அவர் கூடவேபயணிக்கவேண்டும். ஆனால் அப்படி பயணிப்பது முடியாதகாரியம்..ஏனென்றால் அவர் தொட்ட/தொடவேண்டிய சிகரங்களை அண்ணாந்து பார்க்கவே ஒரு யுகம் ஆகும்…
 
சரி…படத்தின் ரிசல்ட்..??
 
தொழில்நுட்பத்தில் உலகத்தரம்.. ஆனால்ல்ல்…..பிரியாணி சமைக்கமுடியுமாஎன்பதுதான் மில்லியன் டாலர் சந்தேகம்..

 

 

http://aveenga.blogspot.in/2013/01/blog-post_25.html

விசுவரூபம்: கடந்த 10 வருடங்களில் உயர் தொழில்நுட்பங்களை பாவித்து செய்யப்பட்ட உலகத் தரமான குப்பை!

  • கருத்துக்கள உறவுகள்
விசுவரூபம்: கடந்த 10 வருடங்களில் உயர் தொழில்நுட்பங்களை பாவித்து செய்யப்பட்ட உலகத் தரமான குப்பை!

 

ஏன் இப்படி கடுப்பில் இருக்கின்றீர்கள்  :lol:  :D

ஏன் இப்படி கடுப்பில் இருக்கின்றீர்கள்  :lol:  :D

 

முதல் நாள் முதல் காட்சி பார்த்து வெறுத்து போயிருக்கின்றன் உடையார். இப்படி ஒரு மோசமான திரைக்கதை இருக்கும் படத்தை இனிமேல் கமலஹாசனால் கூட எடுக்க முடியாது.

கமல் இப்படி படம் எடுத்தது முதல் தடவையல்ல ,விக்கிரம் ,குணா ,ஹேராம் ,ஆளவந்தான் ,தசாவதாரம் இவை எல்லாவற்றிலுமே விஸ்வரூபத்தில் விட்ட பிழையை விட்டிருக்கின்றார் .

எனக்கு என்னமோ ஐந்து ஆறு மணித்தியாலங்களுக்கான படத்தை எடுத்துவிட்டு எடிட் பண்ணும் போது எதைவெட்டுவது எனத்தெரியாமல் வெட்டி படத்தின் தொடர்புதன்மையை இழக்க பண்ணிவிடுகின்றார் .

மிக சிறந்த தொழில் நுட்பம் ,சிறு சிறு காட்சிகளை கூட மிக அவதானமாக அழகாக எடுத்துவிட்டு அதை ஒன்று சேர்ப்பதில் கோட்டை விட்டுவிட்டார் .அதிலும் அந்த  பெரிய ஒரு இயக்கம் (அல்கைடா ) இந்தியன் ஆமி தலைக்கு பெரும் தொகை கேட்டிருந்த விளம்பரத்தை மட்டும் பார்த்து அவரை அதில் இணைத்து உடனேயே முக்கியமானவர் ஆகிவிடுகின்றார் .அந்த கட்டங்களில் தன்னை நல்லவனாக காட்ட அவர் செய்யும் செய்கைகள் எரிச்சலை ஊட்டுகின்றது .

என்னை போல் ஒருவன் படத்தில் இருந்த டச்சிங் இதில் மிஸ்ஸிங் .

 

மிக சிறந்த தொழில் நுட்பம் ,சிறு சிறு காட்சிகளை கூட மிக அவதானமாக அழகாக எடுத்துவிட்டு அதை ஒன்று சேர்ப்பதில் கோட்டை விட்டுவிட்டார் .அதிலும் அந்த  பெரிய ஒரு இயக்கம் (அல்கைடா ) இந்தியன் ஆமி தலைக்கு பெரும் தொகை கேட்டிருந்த விளம்பரத்தை மட்டும் பார்த்து அவரை அதில் இணைத்து உடனேயே முக்கியமானவர் ஆகிவிடுகின்றார் .அந்த கட்டங்களில் தன்னை நல்லவனாக காட்ட அவர் செய்யும் செய்கைகள் எரிச்சலை ஊட்டுகின்றது .

என்னை போல் ஒருவன் படத்தில் இருந்த டச்சிங் இதில் மிஸ்ஸிங் .

 

இதே போன்ற அபத்தமான காட்சிகள்: நியூயோர்க் இல் அணுகுண்டு வைக்கும் திட்டத்தினை ஓமர் (தளபதி) போகின்ற போக்கில் கமலுக்கு சொல்வது. (ஒரு தீவிதவாத இயக்கம் எந்தளவுக்கு இராணுவத் திட்டங்களை ரகசியமாக வைத்திருக்கும் என்ற அறிவின் துளி கூட இல்லை), புறாவின் காலில் செரனியத்தை கட்டி அனுப்புவது (ஆப்கனில் இருந்தா அனுப்பினம்? என் மரமண்டைக்கு புரியவில்லை), அல் கைடா ஏகே 47 ஆல் அமெரிக்க உலங்கு வானூர்திகளை சுட்டு விழுத்த முனைவது .........இன்னும் ஏராளம். பின்னனி இசை இரண்டாம் பாதியில் மகா கொடுமை.

 

ரசிக்க கூடிய காட்சி என்றால் கமலின் கதக் நடனமும் பெண்மை மிளிரும் பாவங்களும். கவிதைக்குரிய சுவை இந்தக் காட்சிகளில் நிரம்பி வழியும். பேசாமல் கமல் இனி நடிப்புடன் தன்னை நிறுத்திக் கொண்டால் நல்லமோ எனத் தோன்றுகின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அநேகமான தன் திரைப்படங்களில் ஈழத் தமிழரை கேவலமாக சித்தரிக்கும் கமலஹாசனுக்கு காவடிதூக்க ஈழத்தமிழர்கள் அதிகமாக புலம் பெயர் தேசத்தில் தயாராக இருக்கிறார்கள்.புன்னகை மன்னனில் தொடங்கி மன்மதன் அம்புவரை அநேகமான படங்களின் தன் மன வக்கிரகத்தை கொட்டிய கமலில் உண்மையான முகத்தை நாம் நன்கு அறிவோம் .வீழ்வது நாமாகிலும் வாழ்வது தமிழாகட்டும் என்ற வசனத்தை திரித்து வீழ்வது யாராகினும் வாழ்வது நாடாகட்டும் என பாடிய மேதாவி.இன்னொரு படத்தில் மீனம் பாக்கத்தையும் ஸ்ரீ பெரும்புத்தூரையும் மன்னித்தோமோ  இல்லையோ மறந்திட்டோம் என அடிக்கடி நினைவு படுத்திய நாட்டுப்பற்றாளன்.ஈழத்தை இந்திய அரக்கர் கூட்டம் சீரழித்த போது பிரவிக்குருடனாகவும் ஊமை மனிதனாகவும் இருந்த புத்திசாலி.தெனாலியில் ஏன் பிரச்சனையென இன்னும் விளங்கேல்லை என்ற பைத்தியக்காரன்.மன்மதன் அம்புவில் மலையாளியை கட்டிப்பிடித்துக் கொண்டு ஈழத் தமிழனை முன் பின் தெரியாதவர்களுடன் என்ன பழக்கம் எனக்கேட்ட இந்தியன்.கோடிபணத்தை கொடுத்து வாங்கிவந்து எங்கள் தலையில் மிளகாய் அரையுங்கள்.ஈழத்தமிழன் மானம் கெட்டவன் தானே.மெல்லத் தமிழ் இனி சாகும் என்றோ அல்லது தமிழ் இனி தெரு பொறுக்கும் என்றோ ஏதாவது தத்துவங்களை கமல் சிந்தியிருப்பார். சிந்திக்காமல் குந்தியிருந்து குலுங்கிச் சிரியுங்கள். அன்பான வேண்டுகோள்.பெரிய திரையை புறக்கணித்து விரும்பினால் இணையத்தில் பாருங்கள்.எம் தோல்வியை கண்டு மகிழ் பவர்களை நாம் ஏன் புறக்கணிக்க கூடாது.

முதல் நாள் முதல் காட்சி பார்த்து வெறுத்து போயிருக்கின்றன் உடையார். இப்படி ஒரு மோசமான திரைக்கதை இருக்கும் படத்தை இனிமேல் கமலஹாசனால் கூட எடுக்க முடியாது.

நீங்கள் ஏன் முதல் நாள் போய் முதல் காட்சி பார்த்ததனிங்கள் நிழலி? கூடதலாக எதிர்பார்த்து போயிருப்பீர்கள் ஏமாற்றம்தான் மிஞ்சும்

நீங்கள் ஏன் முதல் நாள் போய் முதல் காட்சி பார்த்ததனிங்கள் நிழலி? கூடதலாக எதிர்பார்த்து போயிருப்பீர்கள் ஏமாற்றம்தான் மிஞ்சும்

 

இதற்கான காரணத்தை என் facebook இல் நான் ஆங்கிலத்தில் எழுதியதை தமிழில் தருகின்றேன்:

 

"தசவதாரம் எனும் குப்பைப் படத்தை பார்த்ததில் இருந்து கமலஹாசனின் படங்களை தியேட்டரில் பார்ப்பதை நிறுத்தி விட்டேன். ஆனால், முஸ்லிம்கள் தம்மை விமர்சிக்கும் படம் என்ற ஒரே காரணத்திற்காக எதிர்ப்பதாலும் தடை வாங்கியுள்ளதாலும் அவர்களின் செயல்களுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்க நான் விசுவரூபத்தினை முதல் நாள் முதல் காட்சியில் பார்க்கப் போகின்றேன். ஒரு சாதரண பொதுசனமாக என்னால் அமைதியாக இவ்வாறுதான் அவர்களின் செயல்களுக்கு என் எதிர்ப்பை காட்ட முடியும்"

 

இப்படித்தான் எழுதி உள்ளேன். கடந்த 2 நாட்களாக முஸ்லிம்களின் கலாச்சார பயங்கரவாததுக்கு எதிராக தொடர்ந்து என் Facebook இல் எழுதி வருகின்றேன். என் Account இல் சில முன்னனி முஸ்லிம், சிங்கள, தமிழ் எழுத்தாளர்களும் ஊடகவியலாளர்களும் இருக்கின்றனர்.

 

என்னைப் பொறுத்தவரைக்கும் பெளத்த பேரினவாதத்துக்கு கொஞ்சமும் சளைத்ததில்லை இஸ்லாமிய பயங்கரவாதம்.

  • கருத்துக்கள உறவுகள்
, முஸ்லிம்கள் தம்மை விமர்சிக்கும் படம் என்ற ஒரே காரணத்திற்காக எதிர்ப்பதாலும் தடை வாங்கியுள்ளதாலும் அவர்களின் செயல்களுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்க நான் விசுவரூபத்தினை முதல் நாள் முதல் காட்சியில் பார்க்கப் போகின்றேன்.

 

ஒரு சாதரண பொதுசனமாக என்னால் அமைதியாக இவ்வாறுதான் அவர்களின் செயல்களுக்கு என் எதிர்ப்பை காட்ட முடியும்"

 

ஆனால்  உங்களை  கமல் கணக்கெடுக்கவில்லை.

ஆகவே எல்லாபக்கத்தாலும் அவர் தோற்றுவிட்டார்

  • கருத்துக்கள உறவுகள்

வேலாயுததிற்குப் பின்னர் பின்னர் தமிழ்ப்படங்களை தியேட்டரில் பார்ப்பதையே விட்டிருந்தேன். அதைவிட விஸ்வரூபம் அபத்தமாக இருந்தாலும் தியேட்டரில் போய்ப் பார்க்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.. <_<

நேற்று விஸ்வரூபம் படம் பார்த்தேன் பிடிக்கவில்லை, கமல் உலகளவில் பிரச்சனையை யோசித்து (ஆ அப்பிடியா?) சரியா குழம்பிபோய் இருக்கிறார், இந்தியாவில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கு அதை விட்டு கனதூரம் போய்விட்டார், அமெரிக்காகாரன் ஒரு ஆளை அழிக்க ஒரு கிராமத்தையே அழிப்பான் அதை கமல் மறந்து போனாரா. எது எப்படியோ கமலுக்கு பொருத்தமானது நகைச்சுவையும், நடனமும் தான். படத்தில் எனக்கு பிடித்த காட்சி, கமலின் பாவத்துடன் கூடிய கதகளி நடனம், அடுத்து வில்லன், வில்லன்மகன், வில்லனின் நண்பன், கமல் ஆளாளுக்கு கையால் தலையில் வெடிவைக்கும் காட்சி) இது எங்கள் இயக்கத்தை நினைக்கவைத்தது. கமல் ஒரு நல்ல கலைஞன், இப்படிப்பட படங்களை எடுத்து தனது நடிப்பு திறனையும், பணத்தையும் வீணாக்குகின்றார், இதை விட “கண்ணா லட்டு திங்க ஆசையா” பாத்திருக்கலாம் போல.

இது எனது மனைவியின் முகபுத்தக பதிவு .

  • கருத்துக்கள உறவுகள்
நேற்று விஸ்வரூபம் படம் பார்த்தேன் பிடிக்கவில்லை, கமல் உலகளவில் பிரச்சனையை யோசித்து (ஆ அப்பிடியா?) சரியா குழம்பிபோய் இருக்கிறார், இந்தியாவில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கு அதை விட்டு கனதூரம் போய்விட்டார், அமெரிக்காகாரன் ஒரு ஆளை அழிக்க ஒரு கிராமத்தையே அழிப்பான் அதை கமல் மறந்து போனாரா. எது எப்படியோ கமலுக்கு பொருத்தமானது நகைச்சுவையும், நடனமும் தான். படத்தில் எனக்கு பிடித்த காட்சி, கமலின் பாவத்துடன் கூடிய கதகளி நடனம், அடுத்து வில்லன், வில்லன்மகன், வில்லனின் நண்பன், கமல் ஆளாளுக்கு கையால் தலையில் வெடிவைக்கும் காட்சி) இது எங்கள் இயக்கத்தை நினைக்கவைத்தது. கமல் ஒரு நல்ல கலைஞன், இப்படிப்பட படங்களை எடுத்து தனது நடிப்பு திறனையும், பணத்தையும் வீணாக்குகின்றார், இதை விட “கண்ணா லட்டு திங்க ஆசையா” பாத்திருக்கலாம் போல.

இது எனது மனைவியின் முகபுத்தக பதிவு .

 

நம்ப முடியல

அதே அச்சு................ :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.youtube.com/watch?v=vtkrS2w_0T0

 

நான் விரும்பி ரசிக்கும் கலைஞன் கமலகாசன்...நல்ல நடிகர்...அரசியல்விடயங்களில் வேறுபட்டாலும்  பொழுதுபோக்கு,சினிமா என்ற முறையில் திறமையுள்ளவர்.ஆனால் அண்மைக்காலமாக சகலகலாவல்லவன் எனும் நினைப்பில் தனது சினிமாவில் சகல துறைகளையும் பொறுப்பெடுத்து,தரமில்லாத திரைப்படங்களைத்தந்து பலரின் அதிருப்திக்கு ஆளானதுதான் மிச்சம். அதாவது அகலகால் வைப்பதன் விளைவே இவை அனைத்தும்....தமிழ்சினிமாவிற்கு நல்லது செய்வதாக நினைத்து.....தனது திறமைகளை சாக்கடையில் தள்ளிவிட்டார்.

 

நாளை பாண்டி பஜாருக்கு விஸ்வரூபம் திருட்டு வி.சி.டி வந்துவிடும் என்ன செய்யப்போகிறீர்கள்..?



தியேட்டரில் பார்த்தால் மட்டும் களங்கம் திருட்டு வி.சி.டியில் பார்த்தால் களங்கமில்லையா..?


இன்று அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் விஸ்வரூபம் வெளிவருகிறது, என்றால் என்ன அர்த்தம்..?

 

நாளை விடிந்தால் பாண்டி பஜாருக்கு விஸ்வரூபம் திருட்டு வி.சி.டி வந்துவிடும், எப்படித் தடுக்கப் போகிறது தமிழக அரசு..?

 

சொற்ப நேரத்தில் இணையத்தில் முழுமையான திரைப்படமும் திருட்டுத் தனமாக தரவேற்றம் செய்யப்பட்டுவிட வாய்ப்புள்ளது..
இஸ்லாமிய அமைப்பக்களின் மனம் திருட்டு வி.சி.டியாலும், திருட்டு இணைய வெளியீட்டாலும் புண்படாது.. தியேட்டரில் காண்பித்தால் மட்டும்தானா புண்படும:..? நெஞ்சைத் தொட்டு இந்தக் கேள்வியைக் கேட்க தமிழகத்தில் ஒரு நாதி இல்லாத காரணத்தால் வெளி நாட்டிலிருந்து நாம் கேட்கிறோம்..

 

விஸ்வரூபத்தை தடுக்க முன் இஸ்லாமிய சகோதர அமைப்புக்களும், அவர்களுடைய பேச்சைக் கேட்டு முடிவெடுத்த தமிழக முதல்வரும் இந்த இரண்டு கேள்விக்கும் விடை தேடியிருக்க வேண்டும்.

 

மனச்சாட்சிப்படி சரியான பதிலை கண்டுவிட்டு திரைப்படத்தை நிறுத்த முன் வந்திருக்க வேண்டும்.

 

http://www.alaikal.com/news/?p=121167

 

  • கருத்துக்கள உறவுகள்

இதைப்பார்த்தால்

கமலைவிட ரஐனிக்கு  மதிப்பு  அதிகமாகும்

இதுதான் நடந்தது  இதுவரை...........

Vishwaroopam Ratings

Behindwoods: 4/5

Sify: 4/5

Rediff: 3.5/5

Galatta: 4/5

Prashanth: 4.5/5

The Hindu: 4/5

Review Raja: 7.5/10

Times Of India: 4/5

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.