Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சுதேஸ்கரை காப்பாற்ற முயற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சுதேஸ்கரை காப்பாற்ற முயற்சி
130109152256_ahrc_304x171_bbc_nocredit.j

கத்தார் நாட்டில் மரண தண்டனையை எதிர்நோக்கும் இலங்கையை சேர்ந்த 22 வயதான வெங்கடாச்சலம் சுதேஸ்கர் அவர்களை விடுவிப்பதற்கான குருதிப் பணத்தை வழங்குவதற்கான நிதி உதவிக்கு ஆசிய மனித உரிமைகள் ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.

மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த சுதேஸ்கர், ஒரு கைகலப்பில் கேரளாவை சேர்ந்த மற்றுமொரு இளைஞரை கொலை செய்ததாக அவருக்கு கத்தாரில் மரண தண்டனை டிசம்பர் 31 ஆம் திகதி விதிக்கப்பட்டது.

ஆயினும் இறந்தவரின் குடும்பத்தோடு செய்யப்பட்ட சமரசத்தை அடுத்து இலங்கை ரூபாய் 35 லட்சம் குருதிப்பணமாகப் பெற்று சுதேஸ்கரை மன்னிக்க இறந்தவரின் குடும்பத்தினர் ஒப்புக்கொண்டுள்ளனர்.

ஆயினும், இந்தப் பணத்தை திரட்ட முடியாத வறிய நிலையில் உள்ள சுதேஸ்கர் குடும்பத்தினர் இது தொடர்பாக இலங்கை அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதியிடம் முறையிட்டும் பலன் கிட்டவில்லை என்று கூறியிருந்தனர். இது குறித்து சுதேஸ்கரின் தாயார் இன் செவ்வியை பிபிசி தமிழோசை முன்னர் ஒலிபரப்பியிருந்தது.

அதனை அடுத்து தாமும் இலங்கை அரசாங்கத்திடம் இது குறித்து தொடர்புகொண்டதாகக் கூறும் ஆசிய மனித உரிமைகள் ஆணைய செயல் இயக்குனரான பசில் பெர்ணாண்டோ அவர்கள், ஆனால் இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்திடம் இருந்தோ அல்லது ஜனாதிபதியிடம் இருந்தோ இந்த பணக்கொடுப்பனவுக்கான எந்தவிதமான உறுதி மொழியையும் பெற முடியாது போனதால், தாமே இந்தப் பணத்தை சேகரிக்க முன்வந்ததாக தெரிவித்துள்ளார்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/01/130131_ahrclanka.shtml

உண்மையில் ஒருவரைக் கொலை செய்து விட்டு பின் அதற்கான  தண்டப் பணத்தை செலுத்த ஒரு அரசிடம் எதிர்பார்ப்பது சரியா?

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் ஒருவரைக் கொலை செய்து விட்டு பின் அதற்கான  தண்டப் பணத்தை செலுத்த ஒரு அரசிடம் எதிர்பார்ப்பது சரியா?

சரியில்லை, என்பதே எனது கருத்தாகும்!

நாணல் போல வளைவது தான், சட்டமாகுமா? - வாத்தியார் 

உண்மையில் ஒருவரைக் கொலை செய்து விட்டு பின் அதற்கான  தண்டப் பணத்தை செலுத்த ஒரு அரசிடம் எதிர்பார்ப்பது சரியா?

தவறானது. :rolleyes:

அதே நேரம் கொலை செய்த குற்றத்திற்கு தண்டனை அனுபவிக்காமல் பணம் கொடுத்து விட்டு தப்பிப்பது என்பதும் தவறு. உண்மையில் சிறைத்தண்டனை வழங்கியிருக்கலாம். :rolleyes:  ஆனால் மரண தண்டனை என்று கூடிய தண்டனையை உடனே தேர்ந்தெடுக்கிறார்கள். :(

  • கருத்துக்கள உறவுகள்

திட்டமிட்ட கொலைக்கும் (murder) உணர்ச்சியால் தூண்டப்பட்ட கொலைக்கும் (manslaughter) வித்தியாசம் உள்ளது. இவர் திட்டமிட்டுக் கொலை செய்யாவிட்டிருந்தால் மரண தண்டனை சரியல்ல. எனவே குருதிப்பணம் கொடுத்து தண்டனையைத் தவிர்ப்பதில் பிழை இல்லையென்றே கருதுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
கொலை செய்யப்பட்டவர‌து குடும்பமே தங்களது மகனது உயிருக்கு பதிலாக காசை வாங்குவதற்கு தயாராக இருக்கிறார்கள்...கிருபன் எழுதின மாதிரி அவர் திட்டமிட்டு கொலை செய்திருக்கா விட்டால் கொஞ்ச‌க் காலம் ஜெயில் வைத்திருந்து போட்டு விட‌லாம்[காசு கொடுத்தாலும்]

அந்த நபர் திட்டமிடாமல் கொலை செய்திருந்தால் மட்டுமல்ல திட்டமிட்டு கொலை செய்திருந்தாலும் மரண தண்டனை என்பது அதிகம். எனவே எப்படியும் அவர் விடுதலையாவது தான் நல்லது.
 
Edited by துளசி

என்னுடைய கேள்வி மரணதண்டனை இவருக்கு சரியா இல்லையா என்பது அல்ல.செய்த குற்றத்துக்கு தண்டப்பணத்தை ஒரு அரசிடம் எதிர்பார்ப்பது தொடர்பானது (எதிர்பார்க்கும் ஆசிய மனித உரிமை ஆணையத்தின் எதிர்பார்ப்பு ).

இலங்கை வச்சிருக்கிறதே கடன்காசுதானே எண்டிட்டு கேட்டிருப்பினம்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய கேள்வி மரணதண்டனை இவருக்கு சரியா இல்லையா என்பது அல்ல.செய்த குற்றத்துக்கு தண்டப்பணத்தை ஒரு அரசிடம் எதிர்பார்ப்பது தொடர்பானது (எதிர்பார்க்கும் ஆசிய மனித உரிமை ஆணையத்தின் எதிர்பார்ப்பு ).

இல்லை அப்படி அர‌சு கொடுத்தால் எல்லோரும் தெரிந்தோ,தெரியாமலோ குற்றங்களை செய்து போட்டு தப்பீப்பதற்காக அர‌சிட‌ம் காசை எதிர் பாத்து இருப்பார்கள்

என்னுடைய கேள்வி மரணதண்டனை இவருக்கு சரியா இல்லையா என்பது அல்ல.செய்த குற்றத்துக்கு தண்டப்பணத்தை ஒரு அரசிடம் எதிர்பார்ப்பது தொடர்பானது (எதிர்பார்க்கும் ஆசிய மனித உரிமை ஆணையத்தின் எதிர்பார்ப்பு ).

தவறானது. :D  நான் ஏற்கனவே கூறி விட்டேன். புங்கையூரன் அண்ணாவும் கூறியுள்ளார். மற்றவர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.