Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'இறுதியுத்த்தில் இலங்கை படையினரிடம் சரணடைந்து எவரும் காணாமல் போகவில்லை" கோத்தாபய

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
'இறுதியுத்த்தில் இலங்கை படையினரிடம் சரணடைந்து எவரும் காணாமல் போகவில்லை" கோத்தாபய
02 பெப்ரவரி 2013
 
கோத்தாபய ராஜபக்ஸவுக்கும் ஏனையோருக்கும் பகிரங்க மடல்- வன்னியில் இருந்து அற்புதன்-
 
எமது மின் அஞ்சலுக்கு வந்த இந்த மனக் குமுறல் எந்தவித மாற்றமும் இன்றி இங்கே பிரசுரிக்கப்படுகிறது.
 
ஆ.ர்
 
அன்புடன் குளோபல் தமிழ் பொறுப்பாளரே பல சிரமங்களுக்கு மத்தியில் இதனை உங்களுக்கு அனுப்புகிறேன். எனது உணர்வுகளை வேதனைகளை வெளிக்கொணர்வதற்கு உதவிபுரிவீர்கள் என நம்புகிறேன்.
 
நன்றியுடன்
 
அற்புதன்
 
 'இறுதியுத்தத்தின்போது இலங்கை படையினரிடம் சரணடைந்து காணாமல் போனதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மையல்ல' 
 
என்ற கோத்தபாய ராஜபக்ஸ அவர்களின் கருத்து தொடர்பாக 
 
பாதுகாப்பு செயலாளர் அவர்களே,
 
வன்னிபோரின்போது  தங்கள் படைகள் தடைசெய்யப்பட்ட கொத்துக்குண்டு வீசியதையும், நச்சு வாயுக்கள் அடித்ததையும், பாரிய கிபீர் குண்டு வீசியதையும்,ஆட்லறி, ஐந்து இஞ்சி குண்டு வீசியதையும்,எம்மீது மனிதாபிமானமற்ற முறையில் சாட்சியம் எதுவும் இல்லாமல் இந்திய வல்லாதிக்க அரசின் உதவியுடனும், அமெரிக்க, சீன வல்லரசின் உதவியுடனும், ஐ.நா வின் உதவியுடனும் ஆயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்களை கொன்று குவித்ததையும் கண்மூடிப் பார்த்திருந்த சர்வதேசத்தையும் நாம் அறிவோம் .இவை புனையப்பட்ட கதை அல்ல. உண்மை. வரலாறு எழுதப்படுகின்றது. எமது வரலாறு இவற்றை சர்வதேசத்திற்கு உணர்த்தும்.அன்றுதான்   சர்வதேசம் உணரும் சிறுபான்மைத் தமிழருக்கு இழைத்த வரலாற்று துரோகத்தை.
 
வெறும் 35000 மக்களே மாத்தளன் பிரதேசத்தில் இருந்தனர் என அரச கைக்கூலியாகச் செயற்பட்ட முல்லைத்தீவு மாவட்ட அரசஅதிபரின் துணையோடு செய்தி வெளியிட்ட தங்கள் அரசு 450000 மக்கள் இறுதி நேரம் மாத்தளனில் இருந்து இடம்பெயர் முகாம்களில் வந்து சேர்ந்த போதே சாயம் வெழுத்துப் போனதை உணரவில்லையா?  அன்றே சர்வதேசம் தங்கள் பொய்யையும் , புழுகையும்  கணிப்பிட்டுவிட்டது.
 
16.05.2009ல் விடுதலை;புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட பின் 17.05.2009ல் இராணுவக் கட்டுப்பாடு வன்னி எங்கும் நிலவிய பின் முல்லைத்தீவில் பிரன்சிஸ் ஜோசப் பாதர் முன்னிலையில் 18.05.2009ல் காலை 7.00மணியளவில் பல நூற்றுக்கணக்கான தமிழீழ போராளிகள், பொறுப்பாளர்கள் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்ததை கண்ட ஆயிரக்கணக்கானோரில் நானும் ஒரு சாட்சியம்.
 
சரணடைந்த காலப்பகுதியில் முல்லைத்தீவில் ICRCயோ, இந்திய வைத்தியக் குழுக்களோ ஏன் மனிதாபிமான அமைப்புக்களோ  இருக்கவில்லை .இல்லை இல்லை தங்களால் அனுமதிக்கப்படவில்லை  என்பது தாங்கள் அறியாததா?கடந்தகால சம்பவங்களை மீட்டுப்பாருங்கள்.எல்லா உண்மையும் புரியும்.
 
மனச்சாட்சியுள்ள, மனிதாபிமானமுள்ள தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் கௌரவ வாசுதேவ நாணயக்கார அவர்களால் அறியப்பட்ட அறிவின் ஒரு சிறிதளவேனும்  தங்களுக்கு இல்லை என்பதையிட்டு ஆழ்ந்த வேதனை அடைகின்றோம்.பொறுப்புள்ள  பதவியில, அதிகாரத்தில் உள்ள தாங்கள் பொறுப்பில்லாமல் பதிலளிப்பது 'ஊமையர் சபையில் உளறுபவன் மகா வித்துவான்';  என்ற எமது நாட்டு பழமொழியை நினைவூட்டுகிறது.
 
16.06.2009 வீரகேசரி. தினமின பத்திரிகைகளில் விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்கள் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கொழும்பிற்கு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டதாக செய்தி வெளியாகி இருந்தது.
 
12.06.2011ல் Sunday Observer பத்திரிகையில் NOTICE, Release of  Information of The Detainees Terrorist Investigation Division, Colombo  1என்ற செய்தி வெளியாகி இருந்தது. இந்த மாதிரி மூன்றுமுறைகள் வெளியிடப்படாதவர்களின் பெயர் பட்டியல் வெளியிடுவதாக அறிவித்த தங்கள் அரசாங்கம் எமது மக்களை ஏமாற்றி இன்றுவரை அந்த பெயர்பட்டியலை வெளியிடவில்லை. சர்வதேசமும் அந்த பெயர் பட்டியல் தொடர்பாக எந்த கேள்வியையும் தங்கள் அரசிற்கு பயந்து இன்றுவரை அழுத்திக் கேட்க முடியவில்லை.
 
சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் சரணடைந்தவர்கள் , காணாமல் போனவர்கள் தொடர்பாக காலத்திற்கு காலம் தங்கள் அரசிற்கு அழுத்தம் கொடுத்தும்  சர்வாதிகார அரசாட்சியில் அவர்களால் உங்கள் எவரையும் வெல்ல முடியவில்லை என்பதுதான் உண்மை.
 
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினது உப்புச்சப்பற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாத  சிறிலங்கா அரசாங்கம் இனப்பிரச்சினைககான  தீர்வை எங்ஙனம் காணப்போகின்றது?
 
இறுதி 18.05.2009ல் முல்லைத்தீவு இராணுவத்திடம் சரணடைந்த ஒரு தொகுதியினரின் பெயர்பட்டியல் இணைக்கப்படுகின்றது. இவர்களை இராணுவத்திடம் கையளித்த உறவுகள் இன்றும் கண்ணீருடன் தேடிக்கொண்டிருக்கின்றன. இவர்கள் கண்கண்ட சாட்சியங்கள்.
 
இலங்கை ஒரு சிறியதீவு 3ணவருடங்களாக மில்லிமீற்றர் நகர்ந்து  தேடியிருந்தால் கூட காணாமல் போனோரை தெடிக்கண்டு பிடித்திருக்க முடியும்.
 
18.05.2009 ல் முல்லைத்தீவு இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் பெயர் பட்டியல் (இவர்களை இன்றுவரை எவருமே காணவில்லை. பிரான்ஸிஸ் ஜோசப் பாதர் உட்பட)                                                                        
 
தொ.இல    பெயர்    பிரிவு    பதவி            
 
1    வேலவன்    கட்டளை தளபதி    கட்டளை தளபதி(இ.போ.பி.க.தளபதி)            
 
2    மணியரசன்    கட்டளை தளபதி    கட்டளை தளபதி            
 
3    குமரன்    கட்டளை தளபதி    கட்டளை தளபதி,மணலாறு            
 
4    ஆரமுதன்    தளபதி                
 
5    சித்திராங்கன்    தளபதி                
 
6    செல்வராசா    தளபதி                
 
7    பாலேஸ்    தளபதி                
 
8    நரேன்    கடற்புலிகள்    தளபதி, கடற்புலிகள்            
 
9    வே.இளங்குமரன்;(பேபி)    அரசியல் துறை    பொறுப்பாளர், தமிழீழ கல்விக்கழகம. (மூ.உறுப்பினர்);            
 
10    யோகரட்ணம் யோகி    அரசியல் துறை    பொறுப்பாளர், தமிழீழ சமராய்வு            
 
11    சஞ்சயன்;    அரசியல் துறை    பொறுப்பாளர்            
 
12    சோ.தங்கன்    அரசியல் துறை    துணை அரசியல்துறை பொறுப்பாளர்,தமிழீழம்.(மனைவி 3பிள்ளைகளுடன சரணடைந்தவர்);             
 
13    சி.எழிலன்    அரசியல் துறை    பொறுப்பாளர், திருகோணமலை அரசியல்துறை             
 
14    ஆஞ்சினேயர்    அரசியல் துறை    பொறுப்பாளர், அரசியல்துறை, யாழ்ப்பாணம். (மனைவி 3பிள்ளைகளுடன் சரணடைந்தவர்)            
 
15    பூவண்ணன்    அரசியல் துறை    பொறுப்பாளர், தமிழீழ நிர்வாகசேவை            
 
16    பிரியன்    அரசியல் துறை    துணை பொறுப்பாளர்,தமிழீழ நிர்வாகசேவை.(மனைவி1 பிள்ளையுடன்  சரணடைந்தவர் )            
 
17    ரவி     அரசியல் துறை    பொறுப்பாளர், தமிழர் புனர்வாழ்வுக்கழகம்            
 
18    சத்தி    அரசியல் துறை    பொறுப்பாளர், தமிழீழ மரநடுவம்            
 
19    ராஜா    அரசியல் துறை    துணைபொறுப்பாளர், தமிழீழ விளையாட்டுத்துறை.(3ஆண் பிள்ளைகளுடன் சரணடைந்தவர் )            
 
20    காளி    அரசியல் துறை    பொறுப்பாளர்            
 
21    தங்கையா    அரசியல் துறை    பொறுப்பாளர். நிர்வாகசேவை, மன்னார்            
 
22    நாகேஸ்    அரசியல் துறை    பொறுப்பாளர், நிர்வாகசேவை, கிளிநொச்சி            
 
23    விஜிதரன்    அரசியல் துறை    பொறுப்பாளர், நிர்வாகசேவை, யாழ்ப்பாணம்            
 
24    உதயன்    அரசியல் துறை    பொறுப்பாளர், நிர்வாகசேவை.            
 
25    சுவர்ணன்    அரசியல் துறை    பொறுப்பாளர், நிர்வாகசேவை.            
 
26    இன்பன்     அரசியல் துறை    பொறுப்பாளர்            
 
27    முகுந்தன்    அரசியல் துறை    பொறுப்பாளர்            
 
28    கந்தம்மான்    அரசியல் துறை    பொறுப்பாளர்            
 
29    அரசண்ணா    அரசியல் துறை    பொறுப்பாளர்            
 
30    புதுவை இரத்தினதுரை     அரசியல் துறை    பொறுப்பாளர், கலை பண்பாட்டுகழகம்            
 
31    சாந்தன்     அரசியல் துறை    பரப்புரை            
 
32    அன்பு    அரசியல் துறை    பொறுப்பாளர்            
 
33    அருணன்    அரசியல் துறை    க.க.சாரதி(குமரன்-காளியின் தம்பி)            
 
34    ஞானவேல்    அரசியல் துறை    பொறுப்பாளர்            
 
35    காந்தன்    அரசியல் துறை    பொறுப்பாளர்            
 
36    கார்வண்ணன்    அரசியல் துறை                
 
37    நளினி        துணைபொறுப்பாளர், மகளிர் அரசியல்துறை (உதயனின் மனைவி)            
 
38    குட்டி    நிதித்துறை     பொறுப்பாளர், பாண்டியன் (எம்.ஆர்.எஸ்)            
 
39    கஞ்சா பாபு     நிதித்துறை    பொறுப்பாளர்            
 
40    கோல்சர் பாபு    நிதித்துறை     பொறுப்பாளர், சேரன் வாணிபம்            
 
41    போண்டா ருபன்    நிதித்துறை     பொறுப்பாளர், வழங்கல் பகுதி            
 
42    விமல்    நிதித்துறை                
 
43    மனோஜ்    நிதித்துறை     பொறுப்பாளர்            
 
44    மஜீத்         பொறுப்பாளர்.(மனைவி 2பிள்ளைகளுடன் சரணடைந்தவர் )            
 
45    சீலன் (தொடையுடன் கால் இல்லை)        பொறுப்பாளர்            
 
46    ஜக்குலின்    அரசியல்துறை     பொறுப்பாளர், மகளிர் தலைமை செயலகம் (சத்தியின் மனைவி)            
 
47    உமையாள்    அரசியல்துறை     பொறுப்பாளர்            
 
48    கொலம்பஸ்                     
 
தொ. இல    பெயர்    பிரிவு    பதவி            
 
1    மலரவன்    அரசியல்துறை     பொறுப்பாளர், நிர்வாக சேவை, வவுனியா            
 
2    கரிகாலன்    அரசியல்துறை    பொறுப்பாளர், தமிழீழ பொருண்மியம்            
 
3    பத்மலோஜினி (டொக்டர் அன்ரி)    அரசியல்துறை    பொறுப்பாளர், திலீபன் மருத்துவமனை            
 
4    எழிலரசன்    அரசியல்துறை    பொறுப்பாளர்,விளையாட்டுத்துறை            
 
5    ரேகா    அரசியல்துறை    பொறுப்பாளர்,தமிழீழ மருத்துவ பிரிவு            
 
6    றோமியோ    அரசியல்துறை    பொறுப்பாளர்,மருத்துவபிரிவு            
 
7    மனோஜ்    அரசியல்துறை    பொறுப்பாளர்,மருத்துவபிரிவு            
 
8    பிரபா        தளபதி            
 
9    சுடரவன்        பொறுப்பாளர்            
 
10    சுமன்        பொறுப்பாளர்,             
 
11    செழியன்        கட்டளை தளபதி,             
 
12    சிற்றரசன்                    
 
13    பாண்டியன்;(இருகால்களும் முழங்காலுடன் இல்லை)    கடற்புலி    பொறுப்பாளர்            
 
14    லோறன்ஸ்    கட்டளை தளபதி                
 
15    முகுந்தன்    கட்டளை தளபதி    வடபோர்முனை            
 
16    காந்தி        பொறுப்பாளர்            
 
17    கெனடி(முழங்காலுடன் இல்லை)        பொறுப்பாளர்            
 
18    ரகு                    
 
19    மாதவன்;    காவல்துறை    பொறுப்பாளா, காவல்துறை            
 
20    மதுவன்        பொறுப்பாளர்            
 
21    சூட்டி        பொறுப்பாளர்            
 
22    இனியவன்                    
 
23    மண்ணிலவன்                    
 
24    வீரமணி                    
 
25    முல்லைச்செல்வன்                    
 
26    சீரமுதன்                    
 
27    செம்பருதி                    
 
28    குமாரவேல்                    
 
29    இளங்குட்டுவன்                    
 
30    அஜந்தி                    
 
31    சேவகன்(இனியவன்)    அரசியல்துறை    க.பி.பு.பொறுப்பாளர்;            
 
32    தேனமுதன்        தளபதி (கால்முறிவு, தாயுடன் வந்தவர்)            
 
33    ஆசா                    
 
34    பாலகுமார்    அரசியல்துறை    பொறுப்பாளர்(மூத்த உறுப்பினர்)            
 
35    பாலகுமாரண்ணை மகன்    அரசியல்துறை                
 
36    லோறன்ஸ் திலகர்    அரசியல்துறை    மூத்த உறுப்பினர்            
 
37    இசையாளன்        பொறுப்பாளர்;            
 
மல்கம் இரஞ்சித் ஆண்டகைஅவர்களே,
 
கத்தோலிக்க மதகுருவான பிரான்சிஸ் ஜோசவ் பாதர்  ஆயிரக்கணக்கானொர் முன்னிலையில் இராணுவத்திடம் சரணடைந்தவர். இன்றுவரை அவரைக்கூட மீட்க முடியாத மிகவும் துர்ப்பாக்கிய நிலையில் கடந்த 3ண வருடங்களுக்கு மேலாக நீங்கள் உள்ளீர்கள். மக்களிற்காக மக்களின் துன்பத்தில் பங்கு கொண்டு வாழ்ந்த ஒரு மனித உரிமை ஆர்வலரும் ஒரு மத குருவுமான இவரை கூட தமிழன் என்ற ஒரே காரணத்திற்காக மீட்கமுடியவில்லை.
 
ஆண்டகை அவர்களே தாங்கள் பெரும்பான்மை இனத்தவர் என்ற வகையில் தாங்களும் பேரினவாதியே. (சிறிலங்கா அரசிற்க எதிரான போர்குற்றச்சாட்டு வலுவாக எழுந்தபோது தாங்கள் இதனை பெரிதாக எடுக்க வேண்டாமென சில நாட்டு தூதுவர்களைக் கேட்டுக் கொண்டதாக செய்திகள் எம் காதில் விழுந்தன.)
 
தமிழ்தேசிய கூட்டமைப்பினரே,
 
3ணவருட காலமாக சரணடைந்த காணாமல் போன உறவினர்களின் உறவுகள் உங்கள் அலுவலக, வீட்டுப்படலைகளை தட்டித் திரிந்திருப்பார்கள். மனச்சாட்சியை தொட்டு சொல்லுங்கள் உண்மையாக, விசுவாசமாக நீங்கள் சரணடைந்த, காணாமல் போன விடுதலைப்புலிகளை அப்பாவி தமிழ் மக்களை தேடி மனச்சுத்தியோடு செயற்பட்டீர்களா? காணாமல் போன புலிகள் உங்களுக்கு எதிரான அரசியல் களம் அமைத்துவிடுவார்கள் என்ற அச்சமா? அல்லது மனிதஉரிமை தொடர்பாக நீங்கள் கதைக்க தகுதியற்றவர்கள் என்ற மனச்சாட்சிகூறும் உண்மை உறுத்துகின்றதா?
 
கௌரவ நீதியமைச்சர் ஹக்கீம் அவர்களே,
 
தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் தாங்கள் அக்கறை கொண்டதாகவும் கூட்டமைப்பினர் அவர்கள் தொடர்பான விபரங்களை கையளிக்கத் தவறிவிட்டனர் என்றும் தெரிவித்துள்ளீர்கள். அவர்கள் தான் எமக்காக எதுவும் செய்வதில்லை. தாங்களாவது மக்களை உங்களது உத்தியோகபூர்வ இடமொன்றில் வந்து பதிவுசெய்யக்கோரி இருக்கலாமே. 
 
சரணடைந்த காணாமல் போனவர்களின் உறவுகள் தங்களுக்கு நேரடியாகவும்,எழுத்துமூலமும் முறைப்பட்டவர்களிற்கு கடந்த 3வருடங்களாக என்ன செய்தீர்கள்? நீதி இல்லாத நாட்டில் ஒரு நீதியமைச்சர் எதற்கு?
 
மதிப்பிற்குரிய மனிதஆர்வலர் திரு.மனோகணேசன் அவர்களே, தங்களிற்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
 
கொழும்பு மாநகரில் சிறீலங்கா அரசின் நெருக்கடிக்குள்ளும்,அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் துணிச்சலான கருத்துக்களை கூறுவது மட்டுமல்ல செயல்வீரனாகவும் செயற்பட்டு வருகின்றீர்கள். சரணடைந்தவர்கள்,காணாமல் போனவர்கள் தொடர்பில் உங்கள் சேவை இன்னும் தொடர எமது வாழ்த்துக்கள். 
 
கௌரவ அமைச்சர் வாசுதேவ நாணயக்காரா அவர்களே,
 
தாங்கள் ஆளும்கட்சி அமைச்சராக இருந்துகொண்டு மிகதுணிச்சலாக 'இறுதிநேரத்தில் தமிழர்கள் இராணுவத்திடம் சரணடைந்தது உண்மை. முழுப் பூசணிக்காயை சோற்றில் புதைக்கமுடியாது' என்று கருத்து தெரிவித்திருப்பது பெரும்பான்மை இனத்தவரிடம் மனிதம் இன்னும் முழுமையாக மரணிக்கவில்லை என்ற நம்பிக்கையை எமக்கு ஊட்டுகின்றது.
 
அன்புடன்,
 
வன்னியில் இருந்து அற்புதன்.
'இறுதியுத்த்தில் இலங்கை படையினரிடம் சரணடைந்து எவரும் காணாமல் போகவில்லை" கோத்தாபய
 
சர்வதேசம் தந்த உறுதி மொழிக்கு அமைய, சர்வதேச போர்விதிகளுக்கு அமைய சரணடைந்தார்கள். 

ஆனால் ஐ.நா.வில் அங்கீகாரம் கொண்ட சிங்கள அரசு - சர்வதேச விதிமுறைகளை என்றுமே மதிக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசம் தந்த உறுதி மொழிக்கு அமைய, சர்வதேச போர்விதிகளுக்கு அமைய சரணடைந்தார்கள். 

சர்வதேசத்தின் நேர்மையற்றவர்கள் நேர்மையுள்ளவரிடம் மேலும் நேர்மையை எதிர்பார்த்தார்கள்..! அவ்வளவுதான்..!!

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிலர் புலிகள் சர்வதேசத்துடன் ஒத்துப்போயிருந்தால் தமிழ் மக்களுக்கு ஒரு நல்ல தீர்வு கிடைக்கும் என்று பூசி மெழுகிய வித்துவான்கள் சர்வதேச விதிக்கமையை (ஜெனிவா) சரணடைந்த போராளிகள் எங்கிருக்கிறார்கள் என்றோ அல்லது கடைசி உயிருடன் இருக்கிறார்கள் என்றோ அறிய முடியாதவர்கள் அல்லது அறிய தராதவர்கள் எந்தளவுக்கு தமிழ் மக்களுக்கு தீர்வை தந்திருப்பார்கள் என்று புரிய முடிகிறது.

பலமுள்ளவனுக்கு ஒரு சட்டம் பலம் இல்லாதவனுக்கு இன்னொரு  சட்டம்.

நாம் எவ்வாறு பலமுள்ளவர்களாக மாற முடியும்?

எண்பது மில்லியன் தமிழர்கள், ஏன் பலமுள்ளவர்களாக மாற முடியாமல் உள்ளது ??

  • கருத்துக்கள உறவுகள்

பலமுள்ளவனுக்கு ஒரு சட்டம் பலம் இல்லாதவனுக்கு இன்னொரு  சட்டம்.

நாம் எவ்வாறு பலமுள்ளவர்களாக மாற முடியும்?

எண்பது மில்லியன் தமிழர்கள், ஏன் பலமுள்ளவர்களாக மாற முடியாமல் உள்ளது ??

இந்த எண்னிக்கையில் முக்கால்வாசி தொகையினர் தமிழ்நாட்டில்.. அங்கு உணர்வு உள்ளது.. ஆனால் அவை வெளிப்படும் வழிமுறை வேண்டும்..!

இந்த எண்னிக்கையில் முக்கால்வாசி தொகையினர் தமிழ்நாட்டில்.. அங்கு உணர்வு உள்ளது.. ஆனால் அவை வெளிப்படும் வழிமுறை வேண்டும்..!

எவ்வகையான வழிமுறைகள் என்பது பற்றியும் கூறலாமே....  (எழுத தெரிந்தவர்கள் ஒருவரியுடன் நிறுத்தினால் என்ன செய்வது? :D )

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வகையான வழிமுறைகள் என்பது பற்றியும் கூறலாமே....  (எழுத தெரிந்தவர்கள் ஒருவரியுடன் நிறுத்தினால் என்ன செய்வது? :D )

வேறை என்ன வழிமுறை?? அங்கே உள்ள திராவிடக் கட்சிகளை விரட்ட வேண்டும் (மதிமுக விதிவிலக்கு.)

2014 இல் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகின்றது. இதில் காங்கிரஸ் கூட்டணி தமிழ்நாட்டில் ஒரு தொகுதியைக்கூட வெல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

இவற்றில் நம்மால் செய்யக் கூடியவை எவை? இங்கே களத்திற்கு வரும் தமிழக உறவுகளுடன் அவர்களும் எங்களில் ஒருவர் என்கிற உண்மையுடன் பழக வேண்டும். பலர் ஏற்கனவே அப்படித்தான்.. ஆனால்.. :unsure:

நாங்கள் ஒவ்வொருவரும் நிகழவேண்டிய அந்த மாற்றமாக வாழும்போது, அந்த மாற்றம் தானே நிகழும். :D

Geneva Convention - எல்லாம் ஒரு 3ம் தரப்பு மேற்பார்வை செய்யும் பொது தான் work-out  ஆகும் .
ஆனால் எங்களக்கு தான் அப்படி ஒன்றுமே இருக்கவில்லையே...

இங்கு
பட்டியலிட்ட எல்லாருமே முக்கியமான ஆட்கள் போலுள்ளது..அதுவும் அவர்கள்
அவர்கள் எல்லாரும் எந்தநிலையில் இலங்கை இராணுவத்தின் கைகளில் கிடைத்தார்கள்
என்பது தான் கேள்வி.

ஒரு You-tube கிளிப் ஒன்று
திரிந்தது...நாங்களும் கண்ணிவெடி ஒன்றில் அகப்பட்டதோ அல்லது வழி தெரியாமல்
வந்து அகப்பட்ட truck ஒன்றில் இருந்த காயம்பட்ட இராணுவத்தை
"Geneva-convention" முறையில் "நடத்தியதை"..அப்போ எல்லாருக்கும் நல்ல
புளுகு....
ஆனால்????

எல்லாம்தான் கேள்விக்கு மேல் கேள்வி போடும் பண்டிதரிடம் ஒரு கேள்வி.

செய்தியை வாசிக்காமல் கருத்து எழுதுவோருக்கும் இலங்கை அரசுப் பட்டியலில் இடம் இருக்கா?

அதுதான் எனது கேள்வி?

ஐ.நாவில் இருக்கும் சிறிலங்காவுக்கு ஜெனிவா மகாநாட்டு விதிகளை கடைப்பிடிக்க வேண்டிய கடமை இருக்கு. அதனால் இலங்கை அரசு தவிர்க்க தக்க வகையில் ஐ.நா அதிகாரிகளை வெளியேற்றியதற்கு இலங்கை பதில் அளிக்க வேண்டும். ஐ.நா பக்கத்தில் நம்பியார் அறிக்கைகளை திருத்தி இலங்கை காப்பாறும் படி விட்டிருந்த கோரிக்கைகள் பதியப்பட்டிருக்கிறது. இலங்கை ஜெனிவா மகாநாட்டு விதிகளை தோற்கடிக்க நம்பியார் உதவினார் என்பது ஐ.நா உள்ளக விசாரணையால் பதியப்பட்டிருக்கிறது.

புலம் பெயர் மக்கள் இன்றோ, என்றோ,  சவால் விட்டு எழுதுபவர்களுக்கு சவாலா ஐ.நா. உள்ளக விசாரணை மீது நடவடிக்கை எடுக்க வைக்க வேண்டும். இதுவேதான்  "எப்படி பார்த்தீர்களா நமக்கு ஜெனிவா மகாநாட்டு விதிகளை முறியடிப்பது அப்படி ஒன்றும் பெரிதல்ல" என்று சவால் விட்டு எழுதுவோருக்கு பாடமாக அமையும்.

போர்க்குற்றத்தை அமெரிக்கா, ஐ.நா. பிரேணையில் இன்னமும் கைவிடவில்லை. மேலும் புலிகளுக்கு எதிராக போரை நடத்திய பிளேக்கூடஜெனிவா மகாநாட்டு விதிகளை இலங்கை புறக்கணித்தது சர்வதேச விதிகளுக்கு எதிரானது என்றும் இலங்கைத் தலைமை அதற்கு பொறுப்பு கூறத்தான் வேண்டும் என்றும் பலதடவை பகிரங்க அறிக்கைகளில் கூறிவிட்டார். பிளேக் மனது வைத்தால் பல உள்ளக சாட்சியங்களை மேடைக்கு இழுத்துவர முடியும். நாம் மேரி கொலினை, இழந்தாலும், அவ போன்று நேரடி சாட்சியமாக இல்லாவிட்டாலும், பிளேக் என்ற அமெரிக்க அதிகாரி பதவிகளில் இருக்கும் வரை இலங்கை தான் ஜெனிவா மகாநாட்டை தோற்கடித்துவிட்டதாக சந்தோசம் கொண்டாடுவது அரைவேக்காட்டுத்தனம். அவர் இலங்கை பொறுப்பு கூறத்தான் வேண்டும் என்று கருத்துரைத்திருப்பது சாட்சியங்களை அழித்து ஜெனிவா மகாநாட்டை தோற்கடித்துவிட்டதாக இலங்கை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாதென்பதாகும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு You-tube கிளிப் ஒன்று

திரிந்தது...நாங்களும் கண்ணிவெடி ஒன்றில் அகப்பட்டதோ அல்லது வழி தெரியாமல்

வந்து அகப்பட்ட truck ஒன்றில் இருந்த காயம்பட்ட இராணுவத்தை

"Geneva-convention" முறையில் "நடத்தியதை"..அப்போ எல்லாருக்கும் நல்ல

புளுகு....

ஆனால்????

இங்கு கருத்து எழுதுபவர்களே புலிகள் பயங்கரவாதிகள் ஆனால் இலங்கை அரசு இல்லை எனும் பாணியில் தானே இன்றும் எழுதுகிறார்கள்.

நுனாவிலான்: இங்கு யாரும் இலங்கை அரசை பயங்கரவாதி இல்லை என்று
சொல்லுவதில்லை..இலங்கை அரசால் ஏதோ ஒருவகையிலாவது பாதிக்கபடாத தமிழர்
இருக்கமுடியாது.

ஆனால் புலிகளின் ஆதரவாளர்கள் Geneva-convention ஐ பற்றி கதைப்பது தான் நகைப்புக்கு இடமானது...

அதை தான் இங்கே பு(ளி)லிக்காய்ச்சல் பிடித்தவர்கள் எள்ளி நகையாடுவது.... :) :) :)

புலிகள் ஜெனிவா பிரகடனத்தில் கையெழுத்திட்டவர்களா? எப்ப அது? :unsure:

தனி அரசு நிறுவிவிடோம் என்றால் அதற்கு சர்வதேச அங்கீகாரம் இல்லை என்பது.. பிறகு மனித உரிமை விவகாரங்களில் மட்டும் ஜெனீவாவைக் கொண்டுவருவது.. :rolleyes:

You cannot have it both ways!

என்னுடைய 2 கண்ணும் போச்சு ..எதிரிக்கு ஒரு கண்ணையாவது புடுங்குவோம் என்ற முனைப்பு தான் தெரிகிறது...

இசை: புலிகள் ஒரு Convention இலும் கையெழுத்து இடவில்லை - அவர்கள் பயங்கரவாதிகள்  (நான் சொல்ல இல்லை...உலகம் சொல்லுது)

பயங்கரவாதிகள் கொல்லப்படுவதை ஒருவரும் கேள்வி கேட்கபோவதில்லை

புலிகள் ஜெனிவா பிரகடனத்தில் கையெழுத்திட்டவர்களா? எப்ப அது? :unsure:

தனி அரசு நிறுவிவிடோம் என்றால் அதற்கு சர்வதேச அங்கீகாரம் இல்லை என்பது.. பிறகு மனித உரிமை விவகாரங்களில் மட்டும் ஜெனீவாவைக் கொண்டுவருவது.. :rolleyes:

You cannot have it both ways!
 
இசை: புலிகள் உலகத்திற்கே நாகரிகம், போரியல் இன்னபிற படிப்பித்தவர்கள் இல்லையா? :)

நேற்றையான் Super-Bowl இல் SF-49 ரை பார்க்கும் போது புலிகளின் ஞாபகம் தான் வந்தது (கடைசி 3 -4 நிமிடங்கள்) :)  (I  like SF 49ers)
so-close yet so far

".. பிறகு மனித உரிமை விவகாரங்களில் மட்டும் ஜெனீவாவைக் கொண்டுவருவது.."

நாங்கள் இதை மதிப்பது இல்லை...பிறகு ஏன் இதை எதிரி மதித்தால் என்ன மதிக்கவில்லை என்றால் என்ன  - இது தான் எனது point
 (எங்களுக்கு
வசதி என்றால் Geneva, Washington, Moon convention எல்லாத்தையும்
தூக்கிபிடிப்போம் அதுவே எங்களுக்கு ஆப்பு என்றால் நழுவி விடுவோம் - இந்த
மதில்மேல் பூனை  நிலையால் தான் இன்று நாங்கள் நடு வீதியில்)

நுனாவிலான்: இங்கு யாரும் இலங்கை அரசை பயங்கரவாதி இல்லை என்று

சொல்லுவதில்லை..இலங்கை அரசால் ஏதோ ஒருவகையிலாவது பாதிக்கபடாத தமிழர்

இருக்கமுடியாது.

ஆனால் புலிகளின் ஆதரவாளர்கள் Geneva-convention ஐ பற்றி கதைப்பது தான் நகைப்புக்கு இடமானது...

அதை தான் இங்கே பு(ளி)லிக்காய்ச்சல் பிடித்தவர்கள் எள்ளி நகையாடுவது.... :) :) :)

அரசை பயங்கரவாத அரசென்று யாழில் பலதிரிகளில் கூறபட்டிருக்கிறது. பல கருத்தாளர்கள் பயங்கரவாத அரசு என்றுதான் வர்ணிக்கிறார்கள். அது இங்கே மட்டுமல்ல யாழுக்கு வெளியேயும் இருக்கிறது. யாழுக்கு வெளியே புலம் பெயர் இடங்களில் மட்டும் அல்ல தாயகத்தில் தமிழ் கட்சிகள் மட்டும் அல்ல, கக்கீமுடன் ஒத்துபோகாத முஸ்லீம்கட்சிகள் அல்ல, சிங்கள எதிர்க்கட்சிகள் வரைக்கும் அரசை பயங்கரவாத அரசென்று பலதடவைகள் வர்ணித்துவிட்டார்கள். இதன் பின் யாழில் அரசை பயங்கர்வத அரசில்லை, ஜீவகாருண்ணிய அரசாக வர்ணிக்கிறார்கள் என்று சொல்ல வருவது யாழை மட்டுமல்ல வெளிச்செய்திகளையுமே படிக்காமல் கருத்தெழுதுவதால் தான்.

Geneva Convention - எல்லாம் ஒரு 3ம் தரப்பு மேற்பார்வை செய்யும் பொது தான் work-out  ஆகும் .

ஆனால் எங்களக்கு தான் அப்படி ஒன்றுமே இருக்கவில்லையே...

இங்கேதான் ஜெனிவா மகாநாட்டு விதிகள் முடக்கப்பட்ட விதம் விளங்கப்படுத்தப்படுகிறது. இலங்கை தான் விதிகளை மீற முன்னர் எப்படி  அந்த மீறல்களை ஒழிப்பது என்றதற்காக இட்ட திட்டத்தை பற்றிவிளக்கம் அளிக்கப்படுகிறது. இந்த வசனம் "புலிகளை போர்குற்றத்திலிருந்து நிரபராதிகளாக்ககூடிய சாட்சிகளை அழித்துவிட்டோம். எம்மை குற்றவாளிகள் ஆக்க கூடிய சாட்சிகளையும் அழித்துவிட்டோம்" என்கிறது. மேலும் யாரும் காணத யுத்ததில் புலிகள் மகாநாட்டு விதிகளை மீறினார்கள் என்று அறிக்கையை ஐ.நாவிடம் இலங்கை பெற முயன்றதாக ஐ.நா உள்ளக அறிக்கை விபரிக்கிறது.  உள்ளக அறிக்கை ஐ.நா. அதிகாரிகள் புலிகள் தான் கொல்கிறார்கள் என்று அவர்கள் எழுத்தில் கொடுக்கும் வரை அவர்களை போர் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. புலிகளும் தமிழ் மக்களும் ஐ.நா. அதிகாரிகளை தமிழ் பகுதிகளை விட்டு வெளியேறுவதை தடுத்தார்கள் என்பதுதான் போர்க்காலக் குற்றம். அதே இலங்கை ஐ.நா அதிகாரிகளை வலோக்கரமாக வெளியேற்றியது என்பது அறிக்கைப்படுத்தப்பட்டிருக்கிறது.

மேலும் இலங்கை ஐ.நா விதிகள் இலங்கைவிரும்புமாப்போல்  பிரயோகிக்க முடியாது. மகாநாட்டு விதிகள் போர் வலயத்திற்கு மட்டுமே. இலங்கை போரில் இருக்காவிட்டால் புலிகளும் போரில் அல்ல இருந்தவர்கள் என்றதை இலங்கைக்காக வாதடும் வக்கீல்கள் உணரவேண்டும்.

தலைப்பு செய்தி தெளிவாக சரணடைந்தவர்களின் பெயர்களையும், சாட்சிகளையும் சரணடைந்த விபரங்களையும் தந்த பின்னர் அதையெல்லாம் பிரட்டி "அவர்களின் உடல்கள் எந்த நிலையில் கையளிக்கப்பட்டது என்பது தெரியாது; இறந்து அழுகிய உடல்களைத்தான் ICRC யும் இந்திய வைத்திய சாலைகளும் கொடுத்தார்கள்" என்று கருத்து எழுதி இலங்கை அரசை இனி காப்பாற்ற முடியாது.

அரசின் உள் வியபரங்கள் தெரிந்தவர்கள் சரணடைந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதை ஒழுங்காக எழுத போகிறார்களாயின் எழுத்தட்டும். அவர்களின் அழுகிய உடல்களை உண்மையில் கணடவர்களாயின் அதை பற்றி எழுதட்டும்.

புலிகள் தனிபட்ட தண்டனைகள் வழங்கியபோது அது போர்க்குற்றமல்ல என்பதை உணரவேண்டும். சவுதி ரிசானாவின் கழுத்தை வெட்டிய போது அரச முஸ்லீம்கள் அதுதான் சரியா சட்டம் என்றார்கள். புலிகள் தமது அரசாட்சியின் கீழ் செய்தவை போர்குற்ற ஜெனிவா விதிகளின் கீழ் விசாரிக்கப்படபோவதில்லை என்பதை அரச வக்கீல்கள் தெரிய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

".. பிறகு மனித உரிமை விவகாரங்களில் மட்டும் ஜெனீவாவைக் கொண்டுவருவது.."

நாங்கள் இதை மதிப்பது இல்லை...பிறகு ஏன் இதை எதிரி மதித்தால் என்ன மதிக்கவில்லை என்றால் என்ன  - இது தான் எனது point

 (எங்களுக்கு

வசதி என்றால் Geneva, Washington, Moon convention எல்லாத்தையும்

தூக்கிபிடிப்போம் அதுவே எங்களுக்கு ஆப்பு என்றால் நழுவி விடுவோம் - இந்த

மதில்மேல் பூனை  நிலையால் தான் இன்று நாங்கள் நடு வீதியில்)

நெல்சன் மண்டேலா ஒரு தரம் பயங்கரவாதி.பின்னர் போராளி.
பின்லாடன் ஒரு முறை போராளி.பின்னர் பயங்கரவாதி
சதாம் ஒரு முறை நண்பன்.பின்னர் பயங்கரவாதி.
 IRA ஒரு முறையும் பயங்கரவாத அமைப்பாக்கப் படவில்லை. ஆனால் LTTE  ...

"முன்னால் பயங்கரவாதிகள் எப்படி பின்னால் போராளிகளானார்கள்..அவர்களுக்கும் எங்களுக்கும் என்ன ஒற்றுமை/வேற்றுமை

நாங்கள் மாறவேண்டுமா? " இப்படி ஏதாவது நடந்திருக்கா?

எங்களை பொறுத்தவரை நாங்கள் "செய்தது, செய்வது, செய்ய போவது" எல்லாம் சரி  :)

பிறகு LTTE ????

அரசை பயங்கரவாத அரசென்று யாழில் பலதிரிகளில் கூறபட்டிருக்கிறது. பல கருத்தாளர்கள் பயங்கரவாத அரசு என்றுதான் வர்ணிக்கிறார்கள். அது இங்கே மட்டுமல்ல யாழுக்கு வெளியேயும் இருக்கிறது. யாழுக்கு வெளியே புலம் பெயர் இடங்களில் மட்டும் அல்ல தாயகத்தில் தமிழ் கட்சிகள் மட்டும் அல்ல, கக்கீமுடன் ஒத்துபோகாத முஸ்லீம்கட்சிகள் அல்ல, சிங்கள எதிர்க்கட்சிகள் வரைக்கும் அரசை பயங்கரவாத அரசென்று பலதடவைகள் வர்ணித்துவிட்டார்கள். இதன் பின் யாழில் அரசை பயங்கர்வத அரசில்லை, ஜீவகாருண்ணிய அரசாக வர்ணிக்கிறார்கள் என்று சொல்ல வருவது யாழை மட்டுமல்ல வெளிச்செய்திகளையுமே படிக்காமல் கருத்தெழுதுவதால் தான்.

நீங்கள் ஏன் அந்த reply எதற்காக கொடுக்கப்பட்டது என்று வாசித்துவிட்டு பதிலளிக்க கூடாது? ;)

நீங்கள் ஏன் அந்த reply எதற்காக கொடுக்கப்பட்டது என்று வாசித்துவிட்டு பதிலளிக்க கூடாது? ;)

வாழைப்பழத்தில் ஊசியேறும் முயற்சிகளை நிறுத்த. 

"முன்னால் பயங்கரவாதிகள் எப்படி பின்னால் போராளிகளானார்கள்..அவர்களுக்கும் எங்களுக்கும் என்ன ஒற்றுமை/வேற்றுமை

நாங்கள் மாறவேண்டுமா? " இப்படி ஏதாவது நடந்திருக்கா?

எங்களை பொறுத்தவரை நாங்கள் "செய்தது, செய்வது, செய்ய போவது" எல்லாம் சரி  :)

பிறகு LTTE ????

நாங்கள் 65 வருடம் ஏமாற்றிய அரசு என்று தெரிந்து கொண்டு போராட்த்தை விட்டு சந்திரிக்காவுடனும் கதிகாமருடனும் சமாதானம் பேசபோய் பேயரான கதையைபற்றி சொல்கிறீர்களாக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

"முன்னால் பயங்கரவாதிகள் எப்படி பின்னால் போராளிகளானார்கள்..அவர்களுக்கும் எங்களுக்கும் என்ன ஒற்றுமை/வேற்றுமை

நாங்கள் மாறவேண்டுமா? " இப்படி ஏதாவது நடந்திருக்கா?

எங்களை பொறுத்தவரை நாங்கள் "செய்தது, செய்வது, செய்ய போவது" எல்லாம் சரி  :)

பிறகு LTTE ????

ஒருவரும் மாறவில்லை.அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் தமக்கு ஏற்றாற் போல பயங்கரவாதிகள், ஜனநாயகவாதிகள் என காலத்துக்கு காலம் பெயர்களை மாற்றிய ஒரு பொதுமையை காணவில்லையா??
 
உ+ம்: ரஸ்யாவுக்கு பின்லாடன் அடிக்கும் வரை அவர்கள் விடுதலை போராளிகள்.
 
அமெரிக்காவுக்கு திருப்பி அடிக்கும் போது பயங்கரவாதிகள்.

"முன்னால் பயங்கரவாதிகள் எப்படி பின்னால் போராளிகளானார்கள்..அவர்களுக்கும் எங்களுக்கும் என்ன ஒற்றுமை/வேற்றுமை

நாங்கள் மாறவேண்டுமா? " இப்படி ஏதாவது நடந்திருக்கா?

எங்களை பொறுத்தவரை நாங்கள் "செய்தது, செய்வது, செய்ய போவது" எல்லாம் சரி  :)

பிறகு LTTE ????

நீங்கள் ஏன் அந்த reply எதற்காக கொடுக்கப்பட்டது என்று வாசித்துவிட்டு பதிலளிக்க கூடாது? ;)

ஆம் நாங்கள் மாறவேண்டும் ............தற்போதுள்ளதைப்போல் இன்னும் பல மடங்கு உறுதியுடனும் , வேகத்துடனும்,விவேகத்துடனும்   செயல்படுவதற்கு நாங்கள் மாறவேண்டும்.  தமிழீழ விடுதலைப்புலிகள் என்னும் இந்த இலட்சிய வீரர்களின் சிந்தனைக்கமைய .சிந்தனைகிணங்க , நாம் மாறவேண்டும் .  அதைத்தவிர வேறு வழியில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

திரிக்கு சம்மந்தம் இல்லாத ஒரு கேள்வி நான்தானிடம் கேட்க வேண்டும் நீங்கள் குறுக்காலபோவான் என்ட பழைய உறுப்பினரா?

  • கருத்துக்கள உறவுகள்

".. பிறகு மனித உரிமை விவகாரங்களில் மட்டும் ஜெனீவாவைக் கொண்டுவருவது.."

நாங்கள் இதை மதிப்பது இல்லை...பிறகு ஏன் இதை எதிரி மதித்தால் என்ன மதிக்கவில்லை என்றால் என்ன  - இது தான் எனது point

 (எங்களுக்கு

வசதி என்றால் Geneva, Washington, Moon convention எல்லாத்தையும்

தூக்கிபிடிப்போம் அதுவே எங்களுக்கு ஆப்பு என்றால் நழுவி விடுவோம் - இந்த

மதில்மேல் பூனை  நிலையால் தான் இன்று நாங்கள் நடு வீதியில்)

மன்னிக்கவும்.. நான் உங்களுக்கு விளங்கக்கூடியவகையில் முதலில் எழுதியிருக்கவில்லைபோல் தெரிகிறது..

போரில் பங்குபெற்ற இரு அமைப்புக்கள். ஒன்று சர்வதேச அங்கீகாரம் பெற்றது. மற்றையது அந்த அங்கீகாரத்தைப் பெறாதது.

முதல் அமைப்பு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டமைக்கு சில சர்வதேசக் கடப்பாடுகளைக் கடைப்பிடிப்போம் என வழங்கிய உறுதிமொழியும் ஒரு காரணமாகும்.

அவ்வாறு உறுதிமொழி வழங்கச் சந்தர்ப்பம் அளிக்கப்படாத மற்ற அமைப்பு ஐநா சாசனங்களைப் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. அதனால்தான் பயங்கரவாத அமைப்பு என்கிற கொக்கியைப் போட்டார்கள்.

பயங்கரவாத அமைப்பு என்று பிரகடனப்படுத்திவிட்டு ஐநா சாசனங்களையும் பின்பற்றுக எனக் கேட்பது வேடிக்கையாகும்..! :D

யாரப்பா இது ?

நல்ல விளக்கமான காய் ஒன்று யாழுக்க பூந்திருக்கு ?

---------------------------------------

தணிக்கை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.