Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈகப்பேரொளி முருகதாசன் 4ம் ஆண்டு நினைவு நிகழ்வும்! 21 ஈகியர் நினைவுக்கல் நடுகையும்!

Featured Replies

தன்னுடைய உறவுகள் ஈழத்தில் கொத்துக் கொத்தாக துடித்து மடிவதை அறிந்து தன உள்ளத்திலே தீயை மூட்டி உலகத்துக்கும் உலகத் தமிழினத்துக்கும் ஈர ஒளியான எங்கள் காவல் தெய்வத்தின் 4ம் ஆண்டு நிகழ்வு எழுச்சி நாள் அனைவரும் ஒற்றுமையோடு அலையாக அணி திரண்டு உலகத்தின் கண்களை திறவுங்கள் என உரிமையோடு கேட்டுக் கொள்கிறோம்.

தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழீழம்

ஈகப்பேரொளி முருகதாசன் 4ம் ஆண்டு நினைவு நிகழ்வும்! 21 ஈகியர் நினைவுக்கல் நடுகையும்!

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை முன்பாக தன் உடலில் தீயிட்டு இலங்கைத் தீவில் இனப்படுகொலை செய்யப்படும் தமிழர்களின் உயிரைக் காக்கக்கோரி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட 'ஈகப்பேரொளி" முருகதாசனின் நான்காம் ஆண்டு நினைவு நாளில் லண்டனில் நினைவுவணக்க நிகழ்வும், நினைவுக்கல் நடுகையும் நடைபெறவுள்ளது.

தமிழர்களின் உரிமைக்காய் தன் உடலில் தீயிட்டு 1995 ஆம் ஆண்டு வீரமரணம் அடைந்த 'அப்துல் ரவூப்" தொடக்கம் 2012 ம் ஆண்டு வரையான காலப்பகுதியில் தம்மை தியிற்கு இரையாக்கி வீரச்சாவைத் தழுவிய 21 ஈகியர்கள் நினைவாகவும் 'நினைவுக்கல் நடுகை" இடம்பெறவுள்ளது.

இவர்களில் அதிகமானோர் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் சிங்கள பேரினவாத அரசாலும், அரச படைகளாலும் தமிழினம் பல்லாயிரக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த போது அதனைத் தடுக்கக் கோரி தமிழகத்திலும், மலேசியாவிலும், ஜெனீவாவிலும் தம் உடலில் தீயிட்டு உயிர்த்தியாகம் செய்து தம் உறவைக்காக்கக் கோரிய வீர மறவர்கள்.

'ஈகப்பேரொளி" முருகதாசனின் 4ம் ஆண்டில் (12.02.2013) அவரது வித்துடல் விதைக்கப்பட்ட அதே இடத்தில் இந்த '21 ஈகியர்கள்" நினைவாக அமைக்கப்பட்ட நினைவுக்கல் நடுகை செய்யப்படவுள்ளது.

அப்துல் ரவூம், முத்துக்குமார், முருகதாசன், செங்கொடி உட்பட்ட 21 ஈகியர்களது பெயர்களும் பொறிக்கப்பட்டும், தேசிய அடையாளங்களை மிகவும் தற்றூபமாக உட்புகுத்தியும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த 'நினைவுக்கல்" பிரித்தானிய மண்ணில் நிறுவப்படுவதானது தமிழர் வரலாற்றில் முக்கிய பதிவாகவும் அமையவுள்ளது.

539754_477946535618565_442847370_n.jpg

'ஈகப்பேரொளி" முருகதாசனின் குடும்பத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு எதிர்வரும் 12.02.2013 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 1:00 மணியில் இருந்து 2:30 மணிவரை 'ஈகப்பேரொளி" முருகதாசனின் வித்துடல் விதைக்கப்பட்ட இடமான Hendon Crematorium, Holders Hill Road, NW7 1NB எனும் இடத்தில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்விற்கு அனைத்து மக்களையும் வந்து கலந்துகொண்டு ஈழத் தமிழர்களின் உரிமைக்காகவும், சுதந்திர வாழ்விற்காகவும் தங்கள் உயிரை ஆயுதமாக்கி உடலில் தீயிட்டு சர்வதேசங்களையும், உறங்கிக் கொண்டிருந்த தமிழர்களையும் விழிப்படையச் செய்த 21 ஈகியர்களுக்கும் மலர்தூவி மனம் நெகிழ்ந்து வீர வணக்கம் செலுத்த அனைவரையும் உரிமையுடம் அழைக்கிறோம்

http://www.vmurugathas.org/

  • தொடங்கியவர்

அகிம்சை போராளிகளுக்கு வீர வணக்கம் !

முருகதாசன் குடும்பத்தினரால் செய்யப்பட்ட இந்த நடுகல் நடுகையை "தேசவிரோதிகளால் முருகதாசின் கல்லறை இடிப்பு" என்று ஒருங்கிணைப்புக் குழு ஆதரவுத்தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

http://www.sankathi24.com/news/26888/64//d,fullart.aspx

முருகதாசன் குடும்பத்தினரும் மற்றும் நடுகல் நடுகையில் பங்குபற்றியவர்களும் "கேபி குழுவாகவும்", தேசவிரோதிகளாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவங்க தான் குழம்பிப்போய் இருக்காங்கன்னா.. நீங்க அதை எல்லா இடமும் காவிக்கிட்டு.. திரியுறதின்ர நோக்கம் என்னவோ..???! :(:unsure::rolleyes:

மக்களுக்காக தம்மையே அர்ப்பணித்தவர்களை அவர்களின் நினைவு நாட்களிலாவது மக்கள் சற்று நேரம்.. நிம்மதியா நினைக்க.. பிரார்த்திக்க விடுங்கள்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

யார் குழம்பிப் போயிருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள்? மிகத் திட்டமிட்டு முருகதாசன் குடும்பத்தினரையும், நடுகல் நடுகைக்கு ஆதரவாக நின்றவர்களையும் இழிவுபடுத்தும் ஒரு செய்தியை ஒருங்கிணைப்புக் குழுவின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு தளம் வெளியிடுகிறது. இந்தச் சதி செயலை "ஒரு குழப்பம்" என்று மென்மைப்படுத்த வேண்டிய அவசியம் உங்களுக்கு ஏன் வந்தது?

மக்களுக்காக தம்மை அர்ப்பணித்தவர்களுக்கு செய்யப்படுகின்ற ஒரு நடுகல் நிகழ்வை இங்கே கொச்சைப்படுத்தியது யார்? மக்களை நிம்மதியாக இருக்க விடச் சொல்லி அவர்களை அல்லவா கேட்டிருக்க வேண்டும்?

இவர்கள் செய்கின்ற இப்படியான நாசகார சதிச் செயல்களை அம்பலப்படுத்த நான் தொடர்ந்தும் செய்திகளை காவி வருவேன். அது என்னுடைய ஒரு பணி.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் செய்கின்ற இப்படியான நாசகார சதிச் செயல்களை அம்பலப்படுத்த நான் தொடர்ந்தும் செய்திகளை காவி வருவேன். அது என்னுடைய ஒரு பணி.

இதை மிக நீண்ட காலமாகச் செய்கிறீங்க. இப்படியான நாசகாரத்தில் எத்தனை சதவீதத்தை அம்பலப்படுத்தி அழிச்சீர்கள்..! நீங்களும் இப்படிச் சொல்லிக்கிட்டே இருக்கீங்க. அவங்களும் செய்துகிட்டே இருக்காங்க. இது என்னவோ இரண்டு பேரும் பேசிப் பறைச்சு மக்கள் தலையில மிளகாய் அரைக்கிறதாத் தான் தெரியுது. கற்பனை பண்ணிக்கலாம். சும்மா சும்மா நீங்களே.. பெரிய அளவில அதைச் செய்யக் கூடாது.. அதையே பெரிசாக் காட்டிட்டு இருக்கக் கூடாது. அதுதான் நாசகாரிகளை ஊக்குவிக்கும் செயல்..!

இதன் மூலம் தற்கொடையாளர்கள் தான் மதிப்பிழக்கச் செய்யப்படுகின்றனர். எவனோ நாலு பேரை சண்டை போட வைச்சு.. நாற்பது பேர் போடுறதாக் காட்டி பிரச்சனைகளில் சிக்க வைத்து மக்களை திசை திருப்பும் எதிரிகளின் வேலைக்கு இலவசமாக பரப்புரை செய்வது போல இருக்குது இது. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

முருகதாசன் குடும்பத்தினரால் செய்யப்பட்ட இந்த நடுகல் நடுகையை "தேசவிரோதிகளால் முருகதாசின் கல்லறை இடிப்பு" என்று ஒருங்கிணைப்புக் குழு ஆதரவுத்தளம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

http://www.sankathi24.com/news/26888/64//d,fullart.aspx

முருகதாசன் குடும்பத்தினரும் மற்றும் நடுகல் நடுகையில் பங்குபற்றியவர்களும் "கேபி குழுவாகவும்", தேசவிரோதிகளாகவும் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த செய்திதான் உண்மை இல்லை மற்றையது தான் உண்மையானது என அறுதியான ஆதாரங்கள் இணைக்கப்படவில்லை.

அத்துடன் அந்த தியாகியின் குடும்பத்தை செய்திகளில் இணைப்பதும் நாகரீகமாக தெரியவில்லை.

அகூதா! நீங்கள் இணைத்த பிரசுரத்தில் நிகழ்வை முருகதாசன் குடும்பத்தினரே செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குடும்பத்தினரால் கல்லறையின் வடிவமைப்பு மேற்படுத்தப்பட்டு நடுகல் அமைக்கப்பட்டதை "கல்லறை இடிப்பு, தேசவிரோதிகள் மிலேச்சத்தனம்" என்று இவர்களால் எப்படி செய்தி போட முடிகிறது? இதை நாம் இன்னும் எத்தனை காலம் அனுமதிக்கப் போகிறோம்?

  • கருத்துக்கள உறவுகள்

murugathasan.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சபேசனின் இந்த காவித்திரியும் செயலை வன்மையாக கண்டிக்கின்றேன்.

மீண்டும் மீண்டும் கேட்டுக்கொள்கின்றேன்

உங்களுக்குள் நடக்கும் தனிப்பட்ட பிரச்சினைகளை (வியாபார ஊடக) தீர்க்க

மக்களுக்காக மரணித்தவர்களுக்கான அஞ்சலி  நிகழ்வுகளை பயன்படுத்தாதீர்கள்

வீர வணக்கம் !

அகூதா நீங்கள் சென்றவருடம் கல்லறை திறந்தபோது   நீங்கள் இணைத்த இணைப்பு கீழ் உள்ளது,

http://www.yarl.com/forum3/index.php?showtopic=111904

அதை மீண்டும் உடைத்து இப்போ  திரும்ப கட்டுகிறார்களா? அப்படியாயின்  இது ஒவ்வொரு வருடமும் நடைபெறபோகிறதா?  தயவு செய்து மாவீரர்களை நிம்மதியாக உறங்க விடுங்கள்.

சுந்தரம்,

இந்த திரியின் மூல செய்தியில் இவ்வாறு உள்ளது ( குறிப்பு நான் இணைத்தவன் மட்டுமே, அதன் செய்கைகளுக்கு காரணம் ஆனவன் அல்ல), அதாவது 21 ஈகியர்கள் நினைவாக நினைவுகல் அமைக்கப்பட உள்ளது.

'ஈகப்பேரொளி" முருகதாசனின் 4ம் ஆண்டில் (12.02.2013) அவரது வித்துடல் விதைக்கப்பட்ட அதே இடத்தில் இந்த '21 ஈகியர்கள்" நினைவாக அமைக்கப்பட்ட நினைவுக்கல் நடுகை செய்யப்படவுள்ளது.

இது நீங்கள் குறிப்பிட்ட இணைப்பில் இருந்து

மாவீரர் வாரத்தில் 5 ஆம் நாளான இன்று (25/11/2012) மதியம் 12 மணியளவில் பிரித்தானியா தமிழர் ஒருங்கினைப்புக்குழுவினரின் மாவீரர் பணிமனைமுன்னிலையில் ஈகைச்சுடரொளி முருகதாசனின் நினைவுக் கல்லறை திறந்துவைக்கப்பட்டது.

விசுகு!

உங்களுக்கு ஏன் இத்தனை பதட்டம்? இங்கே இணைக்கப்ட்டு செய்தி சம்பந்தமாகவே என்னுடைய கருத்தும் அது பற்றிய இணைப்பும் அமைந்தது. இதிலே என்னை எதற்கு கண்டிக்கிறீர்கள்?

உங்களிடம் உண்மையில் "அறம்" என்கின்ற ஒன்று இருந்தால் முருகதாஸ் குடும்பத்தினரையும் மற்றும் நடுகல் நட்டவர்களையும் "தேசவிரோதிகள்" என்றும் "மிலேச்சவாதிகள்" என்றும் செய்தி வெளியிட்டவர்களை கண்டித்திருக்க வேண்டும்.

உங்களால் முடிந்தால் இப்படியான செயல்களை நிறுத்தும்படி அவர்களை கோருங்கள். நீங்கள் பேசுங்கள். நான் என்பாட்டில் போகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வருடம். தங்கள் அரசியல் இலாபத்திற்காக அவசரமாக அனைத்துலக செயலகத்தால். முருகதாசனின் குடும்பத்தினரின் அனுமதியின்றி நிறுவப்பட நினைவுகல்லை முருகதாசனின். குடும்பத்தினரே அகற்றி விட்டு இந்தியாவில் இருந்து அவர்களால் செய்து எடுத்து வரபட்ட நினவுகல்லை நிறுவியுள்ளனர் பழைய நினைவுகல்லை தங்கள் வீட்டு வளவில் கொண்டுபோய் வைத்துள்ளார்கள் இதுதான். நடந்தது. தங்கள் கல்லை பிடுங்கிய கோபத்தில் அனைத்துலக செயலகம் முருகதாசன் குடும்பத்தை துரோகி ஆகியுளர்கள்.

நன்றி தகவல்களுக்கு சாத்திரி,

இந்தியாவில் இருந்து புலிகளின் இலச்சினைகளுடன் ஒருகல்லறை தருவிக்கப்பட்டுள்ளது,  அதாவது தாயகமக்களுக்காக புலம்பெயர் தேசத்தில் தன்னையே ஆகுதியாக்கிய அந்த அகிம்சை போராளிக்கு  புலிச்சாயம் பூசப்பட்டுள்ளது.

  • தொடங்கியவர்

உலகத் தமிழினமே உங்களுக்கு ஒன்றைத் கூறுகின்றேன். நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து உலகின் மனசாட்சியை விழித்தெழ வைக்க உலக சமூகத்தின் மனதையும், அறிவையும் வென்றெடுக்க பாடுபடவேண்டும். எமது சுயத்தை நிலைநிறுத்தி எமது உரிமையை நாமே வென்றெடுப்பதற்கான வாய்ப்பும் இதுவே.

எனது தாயக உறவுகளே சிங்கள அரசின் போலி முகத்தைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள்.
 
அதன் உண்மை முகம் கோரமானது என்பதை பல தடவை நீங்கள் உணர்ந்துள்ளீர்கள். உடலால் தொலைவிலிருந்தாலும் உணர்வால் உங்களுடனேயே நானும் இருக்கிறேன்.எம்மைக் களைப்படையச் செய்து சோர்வுற வைத்து எமது உரிமைகளை எம்மிடம் இருந்து பறித்துவிடலாம் என சிங்கள அரசு நினைக்கிறது. சிங்கள அரசின் இந்த எண்ணத்தை சிதறடித்து உறுதியுடன் இருந்து எமது உரிமைகளை நாமே மீட்போம்.

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்றார் யேசுபிரான். நாமும் எமது உரிமைகளைக் கேட்போம் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருப்போம். சுதந்திரத்தின் கதவு ஒருநாள் எமக்காக் திறக்கப்படும். எம் மக்களின் நல்வாழ்விற்கான கதவு ஒருநாள் திறக்கப்பட்டே தீரும். நாங்கள் கேட்போம். எமது உரிமைகளைக் கேட்டுக்கொண்டே இருப்போம். உலகத்திடம், உலக மனச்சான்றின் முன் தொடர்ந்து கேட்போம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

உண்மைக்காய் உயிர்தரும் தமிழன்
 
முருகதாசன்

மேலே உள்ள கூற்று/வேண்டுதல் எமக்கு எல்லோருக்கும் பொருந்தும் !

ஒரு பக்கம் புலிக்கொடியை எறிந்து விட்டார்களாம். இன்னொரு பக்கம் புலிச்சாயம் பூசி விட்டார்களாம். ஏதாவது புரிகிறதா??!!

  • தொடங்கியவர்

அகூதா! நீங்கள் இணைத்த பிரசுரத்தில் நிகழ்வை முருகதாசன் குடும்பத்தினரே செய்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குடும்பத்தினரால் கல்லறையின் வடிவமைப்பு மேற்படுத்தப்பட்டு நடுகல் அமைக்கப்பட்டதை "கல்லறை இடிப்பு, தேசவிரோதிகள் மிலேச்சத்தனம்" என்று இவர்களால் எப்படி செய்தி போட முடிகிறது? இதை நாம் இன்னும் எத்தனை காலம் அனுமதிக்கப் போகிறோம்?

இது நடந்தது பிரித்தானியாவில். எனவே இது ஒரு காவல்துறை விசராணை நடக்கும் நிலையில் இருக்கும் என எண்ணுகின்றேன். அது பற்றிய முடிவுகள் தெரிந்தபின்னர் உண்மைகள் முழுமையாக வெளியே வரலாம்.

மேலே உள்ள கூற்று/வேண்டுதல் எமக்கு எல்லோருக்கும் பொருந்தும் !

நன்றி அகூதா உங்கள் தகவல்களுக்கு.

murugathaasan11.jpg?resize=310%2C266தொடர்ந்தும் புலம்பெயர் மக்களை குழப்பத்திலும் இடைவிடாத பிரச்சனைகளுக்கு மத்தியில் வைத்திருந்தால் இன அழிப்பு போர்க்குற்றம் போன்றவற்றில் இருந்து தப்பிக்க அவகாசமும்,

சிங்கள பயங்கரவாதி மகிந்த உலக நாடுகளுக்கு வலம் வரும்போது எதிர்ப்புகளும் இல்லாமல் செய்வதற்கு சிங்கள பயங்கரவாத அரசும் அதன் அடியாட்களும் தினந்தோரும் புதிய திட்டங்களுடன் வலம் வருகின்றார்கள்.

அதன் ஒரு பகுதிதான் ஈகப்பேரொளி முருகதாசனுக்கு இட்டிருக்கும் பெயர் சிறிலங்கன் தமிழ்!!

சில நாட்கள் முன்னர் ஈகப்பேரொளி முருகதாசனுடைய கல்லரை தகர்க்கப்பட்டு புதிதாக ஒரு கல்லரையை கட்டியிருக்கின்றார்கள். விதைக்கப்பட்ட இடத்தில் கல்லரை கட்டப்பட்டு மூன்று மாதங்கள் கூட முடியாத நிலையில் அதை இடித்து புதிதாக கல்லரை ஒன்றை கட்டியிருக்கின்றார்கள்.

இக்கல்லரை ஈகப்பேரொளி முருகதாசனுடைய பெற்றோர்கள் எழுப்பியதாக அறிவித்துள்ளார்கள். அதை நிரூபிக்கும் வகையில் ஈகப்பேரொளி முருகதாசனுடைய தந்தையின் காணொளியும், தாயின் தொலைக்காட்சி பேட்டியும் இருக்கின்றது.

ஆனால் இச்செயல் பலத்த சந்தேகங்களையும் சர்ச்சைகளையும் கிளப்பி விட்டிருக்கின்றது.

நண்பர்கள் மற்றும் சிலரின் உதவியுடன் கல்லரையை கட்டுவதாக ஈகப்பேரொளி முருகதாசன் அவர்களின் தந்தை கூறும் காணொளி

முதலாவது ஈகப்பேரொளி முருகதாசனுடைய தந்தை இக்கல்லரையை தான் சிலருடைய உதவியுடன் உருவாக்கியதாக தனது கடிதத்தில் கூறுகின்றார்.

ஆனால் ஈகப்பேரொளி முருகதாசனுடைய தாயார் அவர்களுடன் தொலைக்காட்சியில் தோன்றிய ஒருவர் தாமே இதை இந்தியாவில் இருந்து தருவித்ததாகவும் அதற்கு பெருந்தொகை பலரிடம் கடனாக பெற்று இக்கல்லரையை உருவாக்கியதாகவும் அக்கடன்களை திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் அதற்கு மக்கள் உதவ வேண்டும் என்றும் கோருகின்றார் இதை அருகில் அமர்ந்திருந்த ஈகப்பேரொளி முருகதாசனுடைய தாயார் மறுக்கவில்லை.

12 ஆயிரம் பவுஸ்களுக்கு மேல் கடன் வாங்கி கல்லரையை தாம் கட்டியதாக இவர் கூறுவது உண்மையா? அல்லது ஈகப்பேரோளி முருகதாசனின் தந்தை கல்லரையை தாம் கட்டியதாக கூறுவது உண்மையா?

ஈகப்பேரோளி முருகதாசனின் தந்தை தனது கடிதத்தில் முதலில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு கட்டிய கல்லரைக்கு முன்பே தாம் புதிய கல்லரைக்கு கட்ட பணம் கொடுத்ததாக எழுதியிருக்கின்றார்.

ஆனால் ஈகப்பேரோளி முருகதாசனின் தாயாருடன் தேன்றுபவர் குறுகிய காலத்தில் கல்லரை கட்டப்பட்டதால் பணம் முளுவதும் செலுத்த முடியில்லை என்றும் மேலும் பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறுகின்றார் அதை காணொளியில் பாருங்கள், ஈகப்பேரோளி தந்தையின் கடிதத்தை செய்திக்கு கீழே பார்க்கலாம் ஆக பெரும் பித்தலாட்டம் ஒன்று நடைபெற்று உள்ளதை இதன் மூலம் உறுதிப்படுத்தலாம்.

தொலைக்காட்சியில் தோன்றும் இவர் போலியான தலைமைச் செயலகத்துடன் இயங்குபவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்ல சங்கதி இணையத்தில் இவர் முதலில் தமிழ் இளையோர் அமைப்பில் இருக்கும் பொழுது பெரும் தொகை பணத்தை கையாடல் செய்ததாக குற்றம் சுமத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆக இதில் யார் கூறுவது உண்மை ஈகப்பேரொளி முருகதாசனுடைய தந்தை தாமே உருவாக்கியதாக கூறுவது உண்மையா? அல்லது தொலைக்காட்சியில் தேன்றியவர் கூறியது உண்மையா? தந்தையின் கூற்றுப் படி  உதவி பெற்றுக் கட்டப்பட்டதா அல்லது கடன் பெற்று கட்டப்பட்டதா?

ஏற்கனவே கட்டப்பட்ட கல்லரையை கீழே உள்ள படத்தில் பாருங்கள் ஏதாவது குறை உள்ளதா? இக்கல்லரை பல ஆயிரம் பவுண்ஸ் செலவழித்து மக்களுடைய பணத்தில் கட்டிய கல்லரை இதை இடிக்க வேண்டிய தேவை என்ன? இதை இடித்து கடனுக்கு பணம் வாங்கி புதிதாக கல்லரை கட்ட வேண்டிய தேவை என்ன?

murugathaasan2.jpg?resize=261%2C350

முதலாவதாக மக்கள் பணத்தில் கட்டப்பட்ட கல்லரையும், பின்புறம் பறக்கும் தேசியக் கொடியும்

அத்தோடு முடியவில்லை பிரச்சனை கல்லரை இடிக்கப்பட்டு ஏற்கனவே இருந்த கல்லரை மீது பறந்த தேசியக் கொடியும் பூக்களும் புதிதாக கட்டப்பட்ட கல்லரைக்கு பின்பாக வீசி எறியப்பட்டு அவமதிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல ஈகப்பேரொளி முருகதாசன் ஏன் எதற்காக தன்னுயிரை தீக்கு இரையாக்கி தமிழீழ மக்களுக்காக கொடுத்தானோ அதை மறந்து ஈகப்பேரொளி முருகதாசனுடைய கல்லரை மீதே  சிறிலங்கன் தமிழர்களுக்காக  என எழுதியிருக்கின்றார்கள் இந்த பாவிகள்.

ஈகப்பேரொளி முருகதாசன் எந்த கொள்கையில் வீரமணத்தை அனைத்துக்கொண்டாரோ அது இப்போது பலனற்று அவரது கல்லரையிலேயே அவரது குடும்பத்தினரை சாட்சியாக்கி அசிங்கப்படுத்தப்பட்டுள்ளது.

murugathasan-kallarai-and-Disregard-flag

புதிதாக கட்டப்பட்ட கல்லரையும் அவமதித்து தூக்கி எறியப்பட்ட தேசியக் கொடியும்

முன்னால் முதல்வர் கருணாநிதியும், இன்னால் முதல்வர் செல்வி ஜெயலலிதாவும் இலங்கைத் தமிழர் என முழங்கியபோது தேர்தலின் போது ஈழத்தமிழர் இப்போது மட்டும் இலங்கைத் தமிழரா என உலகெங்கும் இருந்து கண்டனங்கள் பாய்ந்தன ஆனால் இன்று தமிழீழத்திற்காக உயிர் விட்டவன் கல்லரை மீதே அச்சொல்லை அழுத்தமாக பதிந்திருக்கின்றார்கள் இந்த மூடர்கள்.

இதில் முட்டாள்கள் செய்த மற்றுமொரு வேடிக்கை, சிறிலங்கன் தமிழ் என எழுதிவிட்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் சின்னத்தை அக்கல்லரையில் பதித்திருக்கின்றார்கள்!. சிறிலங்கன் தமிழருக்கு ஏதடா சின்னம்????????????

ஈகப்பேரொளி முருகதாசனுடைய தந்தை அவர்கள் இக்கல்லரையை தாமே உருவாக்கியதாக கூறியிருக்கின்றார். ஆனால் அவர் எப்படி தமிழீழ விடுதலைப்புலிகள் எனும் மாபெரும் இயக்கத்தின் சின்னத்தை அக்கல்லரையில் பதிக்க முடியும்?

அதற்கு மாறாக தமிழீழ விடுதலைப்புலிகள் என எழுத்துக்கள் அற்ற தமிழீழத் தேசியக் கொடி அல்லவா அங்கே பதிந்திருக்க வேண்டும். தந்தையே உங்கள் மகனின் விதைகுழியில் ஏன் இப்படி ஓர் கீழ்த்தரமான சிந்தனைகொண்ட செயலும் எழுத்தும் இடம்பெற வைத்துள்ளீர்கள்?

உங்கள் மகன் தமிழீழ தமிழர்களுக்காக அல்லவா உயிர் நீத்தார் ஈகப்பேரொளி முருகதாசன் அவர்களின் இறுதி சாசனத்தின் வரிகளை படியுங்கள்

நேற்றைய வரலாற்றின் ஏமாற்றத்தின் சோக வெளிப்பாடாக இந்தச் முருகதாசன் தீக்குளிக்கின்றான். ஆனால் இன்றைய வரலாறு கடந்தகாலமாகும். எதிர்காலத்தில் கோபம்கொள்ளும். தமிழரை அழித்தொழிக்க ஊக்குவித்து உதவி புரிவோர் மீது எமது வருங்காலச் சந்ததி கோபம் கொள்ளும்

உலகத் தமிழினமே உங்களுக்கு ஒன்றைத் கூறுகின்றேன். நீங்கள் அனைவரும் ஒன்றிணைந்து உலகின் மனசாட்சியை விழித்தெழ வைக்க உலக சமூகத்தின் மனதையும், அறிவையும் வென்றெடுக்க பாடுபடவேண்டும். எமது சுயத்தை நிலைநிறுத்தி எமது உரிமையை நாமே வென்றெடுப்பதற்கான வாய்ப்பும் இதுவே.

எனது தாயக உறவுகளே சிங்கள அரசின் போலி முகத்தைக் கண்டு ஏமாந்து விடாதீர்கள்.

அதன் உண்மை முகம் கோரமானது என்பதை பல தடவை நீங்கள் உணர்ந்துள்ளீர்கள். உடலால் தொலைவிலிருந்தாலும் உணர்வால் உங்களுடனேயே நானும் இருக்கிறேன்.எம்மைக் களைப்படையச் செய்து சோர்வுற வைத்து எமது உரிமைகளை எம்மிடம் இருந்து பறித்துவிடலாம் என சிங்கள அரசு நினைக்கிறது. சிங்கள அரசின் இந்த எண்ணத்தை சிதறடித்து உறுதியுடன் இருந்து எமது உரிமைகளை நாமே மீட்போம்.

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்றார் யேசுபிரான். நாமும் எமது உரிமைகளைக் கேட்போம் தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருப்போம். சுதந்திரத்தின் கதவு ஒருநாள் எமக்காக் திறக்கப்படும். எம் மக்களின் நல்வாழ்விற்கான கதவு ஒருநாள் திறக்கப்பட்டே தீரும். நாங்கள் கேட்போம். எமது உரிமைகளைக் கேட்டுக்கொண்டே இருப்போம். உலகத்திடம், உலக மனச்சான்றின் முன் தொடர்ந்து கேட்போம்.

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்

உண்மைக்காய் உயிர்தரும் தமிழன்
முருகதாசன்

murugathasan-as-srilankan2.jpg?resize=30இப்படி தன்னுயிரால் சிங்கள பயங்கரவாத அரசின் முகமூடியை கிழித்து எறிந்தவன் உடல் மீதா பதித்திருக்கின்றீர்கள் சிறிலங்கன் தமிழ், தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்று முழங்கியவன் மீதா பதித்திருக்கின்றார்கள் சிறிலங்கன் தமிழ் என்று என்று இதை விட ஈகப்பேரொளி எப்படி அவமதிக்க முடியும்?

இச்செயலுக்கு பின்னால் மாவீரர் தினம் என்றவுடன் மட்டும் திடீர் என குதித்து நாம் மட்டுமே மாவீரர் தினம் நடத்த உரிமை உள்ளவர்கள் என கூச்சல் போடும் போலியான தலைமைச் செயலகம் எனும் பெயரில் உள்ள சதிகாரர்கள் இருப்பதையும் மறந்துவிட வேண்டாம். 2009க்கு பிறகு இதுநாள்வரை சிங்கள பயங்கரவாத அரசுக்கு எதிராக ஒரு சிறு துரும்பை கூட அசைத்தது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சிங்கள பயங்கரவாத அரசுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போராட்டங்களை தவறாமல் தொலைக்காட்சிகளிலும் இணையங்களிலும் கொச்சைப்படுத்தாமல் விட்டதில்லை இது இதுதான் போலியான தலைமைச் செயலகம்.

உலகத் தமிழ் உறவுகளே தேசியத் தலைவரின் கட்டுப்பாட்டில் இருந்ததுதான் தலைமைச் செயலகம் என்பது. இன்று இந்த பெயரில் சிங்கள பயங்கரவாதிகள் ஊடறுத்துள்ளார்கள் என்பதை பகிரங்கமாக அறிவிக்கின்றோம்.

பொருத்தமானவர்கள் தோன்றி தலைமைச் செயலகத்தை உரிமை கோரும் வரை அப்படிப்பட்ட பெயரில் வரும் செய்திகள் அறிக்கைகள் எவற்றையும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழீழ புரட்சிகர மாணவர்கள்
www.rste.org
info@rste.org

ஈகப்பேரொளி முருகதாசனின் தந்தையின் கடிதம்murugathaasan-father-letter.jpg?resize=8

Edited by Ramanan005

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு மேலும்  ஒருவனின் தியாகத்தை சொச்சைப் படுத்த முனைபவர்கள்   அறிக்கைகளையும்  ஆராச்சிகளையும் தொடரட்டும். தங்கள்  பிள்ளையை  பறி கொடுத்தவர்களிற்குத்தான் அதன் வலி தெரியும்.  அவர்கள்  எதை யும் செய்யலாம் அதற்கான உரிமை அவர்களிற்கே உள்ளது   மகனின் தியாகம்  எமக்கானது  ஆனால் தாய் தந்தை  துரோகி  என்று  எழுத எவரிற்கும் உரிமை கிடையாது  ஆனால் முருகதாசன் நினைவுக் கல் அமைப்பதற்கு பின்னால் நடந்த  விடயங்களை மட்டும்  ஒரு கட்டுரையாக எழுதி போட்டு விடுகிறேன்.  அதே நேரம் முருக தாசனின்  மரணத்திற்கு  பின்னாலான பிரச்சனைகளும்  பிரித்தானிய காவல்த்துறையினரின்  விசாரணைகள் பற்றிய விபரங்களும் அடங்கும்.  ஆனாலும் இப்போதைக்கு வராது நிம்மதியாய்  பொறுத்திருங்கள்.

Edited by sathiri

நீங்கள் எழுதுவது என்றால் சில தகவல்களை நேரடியாக அறிந்து எழுதினால் மட்டுமே அவை உண்மையாக அமையலாம். உண்மை இருந்தாலே எழுதுவதில் ஒரு சமூக நோக்கம் இருக்கும்.

 இன்னொரு நாட்டில் இருந்து கொண்டு பிற நாட்டில் நடப்பவற்றை எழுதுவது என்றால் மூன்றாம் தரப்பு ஊடான தகவல்களை வைத்தே எழுத முடியும். எனவே அவ்வாறு எழுதுவதால் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதாகவே அமையும்.

Edited by akootha

ஆமாம்! யாரும் இனி வெளிநாட்டில் இருந்து கொண்டு இலங்கையில் நடப்பது பற்றியும் எழுதாதீர்கள்! இனிமேல் அந்த அந்த நாட்டில் உள்ளவர்கள்தான் அந்த அந்த நாட்டைப் பற்றி எழுத வேண்டும். மீறினால் எச்சரிக்கைப் புள்ளி வழங்க வேண்டும் என்று சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக் கொள்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.