Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கு தண்டனை நிறைவேற்றாது காஷ்மீர் மாநிலத்தவருக்கு மட்டும் தூக்கு ஏன்? காஷ்மீர் முதல்வர் சாரமாரி கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீநகர் : ""அப்சல் குரு, தூக்கிலிடப்பட்டது, இயல்பாக நடந்ததா அல்லது அதற்கு பின்னணி உள்ளதா என்பதை விளக்க வேண்டிய பொறுப்பு, மத்திய அரசுக்கு உள்ளது,'' என, ஜம்மு - காஷ்மீர் முதல்வர், உமர் அப்துல்லா, கேள்வி எழுப்பியுள்ளார். காஷ்மீர் முதல்வரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும், தேசிய மாநாட்டு கட்சியின், தலைவர்களில் ஒருவருமான, உமர் அப்துல்லா கூறியதாவது: தூக்கிலிடப்பட்ட, அப்சல் குரு, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர். எனவே, இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்கவும், கேள்விகளை எழுப்பவும், எனக்கு உரிமை உள்ளது.

மும்பை தாக்குதல் சம்பவ குற்றவாளி, அஜ்மல் கசாபை தூக்கிலிட்டபோதே, அடுத்ததாக, அப்சல் குருவுக்கும், தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. அது, இவ்வளவு விரைவாக நடக்கும் என, நினைக்கவில்லை. தற்போது, நான் அறிய விரும்புவது, ஒரே ஒரு விஷயத்தை தான். அப்சல் குருவுக்கு, தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது, இயல்பாக நடந்ததா அல்லது அதற்கு பின்னணி இருக்கிறதா என்பதை, மாநில மக்களுக்கும், சர்வதேச சமுதாயத்துக்கும், விளக்க வேண்டிய பொறுப்பு, மத்திய அரசுக்கு உள்ளது.

பஞ்சாப் முன்னாள் முதல்வர், பியாந்த் சிங், முன்னாள் பிரதமர், ராஜிவ் ஆகியோரை கொலை செய்த குற்றவாளிகளுக்கு, இன்னும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாதது ஏன்? பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இந்த விஷயத்தில், மவுனம் காப்பது ஏன்? ஒருவேளை, அப்சல் குருவுக்கு நிறைவேற்றப்பட்ட தூக்கு தண்டனை தான், கடைசி தூக்கு தண்டனையாக இருந்தால், இதன் பின்னணியில் அரசியல் இருப்பதாக, நான், கருத வேண்டியிருக்கும். இவ்வாறு, உமர் அப்துல்லா கூறினார்.

காங்., ஆவேசம் :

அப்சல் குரு விவகாரம் குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய நிலக்கரி துறை அமைச்சருமான, ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறியதாவது: அப்சல் குரு தூக்கிலிடப்பட்டது குறித்து, ஒரு சிலர் கேள்வி எழுப்புகின்றனர். இது, முற்றிலும், அதிருப்தியில் எழுப்பப்படும் கேள்வி. நம் நாட்டை பொறுத்தவரை, சட்டமும், ஜனநாயகமும் தான், மிகவும் உயர்ந்தவை. அப்சல் குரு விவகாரத்தில், சட்டப்படி தான், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேள்வி எழுப்புவது, ஆச்சர்யமாக உள்ளது. பயங்கரவாதம் எந்த உருவத்தில் வந்தாலும், அதை முறியடிப்போம். இவ்வாறு, ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறினார்.

Dinamalar

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

சரியாக இனங்காணப்பட்ட நேரடியாக படுகொலைகளில் ஈடுபட்ட.. முஸ்லீம் மதத் தீவிரவாதிகள்.. தூக்கில் போடப்படுறாங்க. ராஜீவ் காந்தி கொலையில் தூக்குத் தண்டனை பெற்றவர்கள் ராஜீவை நேரடியாகக் கொன்றவர்கள் அல்ல. கொல்ல உதவியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள். இந்த வேறுபாடு தெரியாமல்.. எந்த ஒரு பின்புலமும் இன்றி தீவிர.. மதத் தீவிரவாத அடிப்படையில் அப்பாவிகளை மட்டும் இலக்கு வைக்கும்.. பயங்கரவாதிகளை இதர குற்றம்சாட்டப்பட்ட கைதிகளுக்கு நிகராக வைத்துப் பேசும்.. இந்த முஸ்லீம் மத வெறிகளை என்னென்பது..???! :icon_idea::rolleyes::(

சரியாக இனங்காணப்பட்ட நேரடியாக படுகொலைகளில் ஈடுபட்ட.. முஸ்லீம் மதத் தீவிரவாதிகள்.. தூக்கில் போடப்படுறாங்க. ராஜீவ் காந்தி கொலையில் தூக்குத் தண்டனை பெற்றவர்கள் ராஜீவை நேரடியாகக் கொன்றவர்கள் அல்ல. கொல்ல உதவியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள். இந்த வேறுபாடு தெரியாமல்.. எந்த ஒரு பின்புலமும் இன்றி தீவிர.. மதத் தீவிரவாத அடிப்படையில் அப்பாவிகளை மட்டும் இலக்கு வைக்கும்.. பயங்கரவாதிகளை இதர குற்றம்சாட்டப்பட்ட கைதிகளுக்கு நிகராக வைத்துப் பேசும்.. இந்த முஸ்லீம் மத வெறிகளை என்னென்பது..???! :icon_idea::rolleyes::(

 

அப்சல் குருவிற்கு இழைக்கப்பட்டது ஒரு அநீதி. தன் பக்க நியாயத்தினைச் சொல்லக்கூட அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு தங்குமிட வசதி போன்றவற்றை செய்து கொடுத்தார், உதவினார் போன்ற காரணங்களால் தான் - அதுவும் நிரூபிக்கப்படாத; வெறுமனே குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையில் தான் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதே போன்ற காரணங்கள் தான் ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும்...

 

பாராளுமன்ற தாக்குதலே வேண்டும் என்று பிஜேபி யினால் திட்டமிடப்பட்ட ஒரு தாக்குதல் என்றும் பரவலாக நம்பப்படுகின்றது.

 

அருந்ததிராயின் 13 கேள்விகள் மற்றும் அப்சல் குருவின் பேட்டியை வாசிக்கவும் நெடுக்ஸ்.

 

இந்தியாவில் இடம்பெறும் இஸ்லாமியர்களின் குண்டுவெடிப்பின் மூல வேர் காசுமீரத்தில் இந்திய இராணுவம் செய்யும் அடாவடித்தனங்களில் தான் தங்கியிருக்கு. விகிதாசாரத்தின் அடிப்படையிக் உலகில் அதி கூடிய விதவைகளைக் கொண்ட இடமாகவும் காசுமீரம் தான் இருக்கு.

 

எம் தேசத்தில் இந்திய ஏவல் படையினர் செய்தவையைத் தான் காசுமீரத்தில் செய்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்சல் குருவிற்கு இழைக்கப்பட்டது ஒரு அநீதி. தன் பக்க நியாயத்தினைச் சொல்லக்கூட அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு தங்குமிட வசதி போன்றவற்றை செய்து கொடுத்தார், உதவினார் போன்ற காரணங்களால் தான் - அதுவும் நிரூபிக்கப்படாத; வெறுமனே குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தின் அடிப்படையில் தான் அவருக்கு தண்டனை வழங்கப்பட்டது. இதே போன்ற காரணங்கள் தான் ராஜிவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும்...

 

பாராளுமன்ற தாக்குதலே வேண்டும் என்று பிஜேபி யினால் திட்டமிடப்பட்ட ஒரு தாக்குதல் என்றும் பரவலாக நம்பப்படுகின்றது.

 

அருந்ததிராயின் 13 கேள்விகள் மற்றும் அப்சல் குருவின் பேட்டியை வாசிக்கவும் நெடுக்ஸ்.

 

இந்தியாவில் இடம்பெறும் இஸ்லாமியர்களின் குண்டுவெடிப்பின் மூல வேர் காசுமீரத்தில் இந்திய இராணுவம் செய்யும் அடாவடித்தனங்களில் தான் தங்கியிருக்கு. விகிதாசாரத்தின் அடிப்படையிக் உலகில் அதி கூடிய விதவைகளைக் கொண்ட இடமாகவும் காசுமீரம் தான் இருக்கு.

 

எம் தேசத்தில் இந்திய ஏவல் படையினர் செய்தவையைத் தான் காசுமீரத்தில் செய்கின்றனர்.

 

அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தண்டனை சரியா பிழையா என்பதை தீர்மானிக்கக் கூடிய நீதியின் வீச்சுக்கு அப்பால் நாங்கள் இருக்கிறோம். நேற்று எங்கள் மண்ணில் நடந்ததிற்கே எம்மால் நீதி பெற முடியவில்லை. இதில் அப்சல் குரு விடயத்தில் நீதியா அநீதியா நடந்தது என்பதைச் சொல்வது அவ்வளவு இலகு அல்ல..!

 

அப்சல் குருவுக்கு வழங்கப்பட்ட தண்டனை அநீதியானது என்பதை காஷ்மீர்  முதல்வர் நம்புவாராக இருந்தால்.. அது தொடர்பான உண்மைகளை ஆதாரங்களை அவர் வெளியிட வேண்டும். உலகின் முன் இந்திய நீதித்துறையின் அரச நிர்வாக முறையின் சீர்கேடுகளை சொல்லனும்.. அம்பலப்படுத்தனும்.. தீர்வு தேடனும்.

 

அதைவிட்டு.. ராஜீவ் கொலைக்குற்றவாளிகளை தூக்குக் அனுப்பாமல் ஏன்.. அப்சல் குருவை மட்டும் அனுப்பனுன்னு.. கேட்கிறதால் எப்படி அப்சல் குரு சுத்தவாளின்னு நிறுவி நிற்க முடியும் ??! அப்படிப் பார்க்கும் போது.. அப்சல் குரு செத்தாச் சாகிறான்.. ராஜீவ் கொலைக் குற்றவாளிகளும் கூடச் சாகனுன்னு நினைக்கிற.. அந்த முஸ்லீம் சிந்தனைகளின் தவறுதான் அப்சல் குரு போன்றவர்கள் உருவாகவும் அழியவும் காரணம் என்று நினைக்கிறேன்.

 

முள்ளிவாய்க்கால் பேரவலம்.. உலகையே உலுக்கின.. உருக்கின ஒரு நிகழ்வு. அதைப் போய் சிங்கள அரசின் மனிதாபிமான நடவடிக்கை.. பயங்கரவாத்திற்கு எதிரான நடவடிக்கை என்று மனிதத்தை முன்னிறுத்தாமல்.. மனிதாபிமானத்தை  முன்னிறுத்தாமல்.. முஸ்லீம் சமூகம்.. தமிழர்கள் என்ற பிரிவினையின் அதளபாதாளத்தில் இருந்து ஹக்கீம்.. ஜெனிவாவில் சிங்கள அரசை ஆதரித்து நின்ற அந்த நிகழ்விற்கும்.. இந்த காஷ்மீர் மாநில முதல்வரின் நிலைப்பாட்டிற்கும் இடையில் எனக்கு வேறுபாடு தெரியவில்லை.

 

சவுதியில்.. ஒரு அப்பாவிப் பெண்ணின் தலையை அவள் நீதி கேட்டு கெஞ்சக் கெஞ்ச.. வெட்டிக் கொய்ததை.... மதத்தை முன்னிலைப்படுத்தி.. நடந்த இடத்தை முன்னிலைப்படுத்தி.. அதற்கு எதிராக குரல் கொடுக்க முன்வராதவர்கள்.. மனிதாபிமானத்தை மதவெறியின் முன் கழற்றிவிட்டிட்டு நின்றவர்கள்.. இன்று அப்சல் குருவுக்காக இரங்கி அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக குரல் கொடுத்தார்கள் என்றால் அதை நினைச்சு.. கொஞ்சம் ஆறுதல்படலாம்.

 

ஆனால்...மாறாக.. இதே போன்ற அநீதிகள்.. மற்றவர்களுக்கும் நடக்கனும்... பெருகனுன்னு நினைக்கிறப்போ.. இவர்களை..  நீங்கள் எந்த வகைக்குள் வைச்சுப் பார்ப்பீர்கள்.

 

இப்படியான முதல்வர்களின் கருத்துக்கள் எப்படி.. அப்சல் குருவை  குற்றவாளி அற்றவர் என்று  தீர்மானிக்கக் கூடிய ஒரு சாதாரண மனநிலையை மக்களுக்குள் கொண்டு வருவம்..??! இதே முதல்வர் சொல்லட்டும்.. அப்சல் குருவுக்கு நிகழ்ந்தது அநீதி..  நாளை ராஜீவ் கொலைக்குற்றவாளிகளுக்கு இது நடக்கக் கூடாது என்று.. அப்ப தான் உண்மையில் முஸ்லீம்கள் மீது சுமத்தப்படும்.. குற்றவாளிக்குரிய..  பார்வைகளில் நிஜ மாற்றத்தை சமூகத்தில் கொண்டு வர முடியும். அதைக் கொண்டு வராமல் அப்சல் குருவல்ல.. எவர் வந்து சொன்னாலும் முஸ்லீம்கள் இன்றைய மதவெறி.. கடும்போக்கு மனநிலையில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டு மனிதாபிமானத்தை முன்னிறுத்தி மற்றைய சமூக மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் தமதென்று உணர்ந்து வாழாத வரை.. அப்சல் குரு அல்ல இன்னும் இன்னும் பலர்.. பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்டாலும் அது எடுபடுமே. :icon_idea::rolleyes:

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
நாங்கள் எந்தளவிற்கு ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரடியாக அக் கொலையில் சம்மந்தப்படவில்லை.அவர்களை விடுவிக்க வேண்டும்.நிரபராதிகளை வேண்டுமென்றே இந்திய அரசு பழிவாங்கப் போகிது என்று நம்புகிறோமோ அதேயளவிற்கு கஸ்மீர் மக்களுக்கும் அப்சல் நிரபராதி தான்...அப்சலும் நேரடியாக தாக்குதலில் பங்கி பற்றி இருக்கவில்லை...இந்திய அரசால் வஞ்சகமாக சிக்க வைக்கப்பட்ட போராளி தான் அவரும்.
 
ஒரு போராடும் இனத்தில் பிறந்த நாங்கள் மற்றவர்களையும்[மற்ற இனத்தில் பிறந்து உரிமைக்காக போராடும்] போராளிகளாக மதிக்க வேண்டும்...எங்களுக்கு தேவையான,எங்கட‌ ஆட்கள் என்டால் தூக்கில் போட‌க் கூடாது என சொல்லும் நாங்கள் அப்ச‌லை தூக்கில் போட்டது மட்டும் சரி என சொல்கிறோம்...இது இந்திய அர‌சை ஆதரித்து எழுதும் கருத்து போல இருக்குது.
 
யார் கண்ட‌து இந்திய அர‌சு அப்ச‌லை தூக்கில் போட்டதே ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டவர்களை தூக்கில் போடுவதற்கு முன்னோட்டமாக இருக்கும்...அப்ச‌லின் தூக்குத் தண்ட‌னை வர‌வேற்கும் நாங்கள் எப்படி எங்களவர்களுக்கு தூக்குத் தண்ட‌னை கொடுக்க விடாமல் தடுக்கப் போகுறோம்?

Why case of Tamil convicts is different

Both were acts of terror but the case of Afzal Guru is ve­ry different from that of the three Ta­mils condem­ned to death for the assassination of Raji­v Gandhi. The belief in TN is the ending in the two stories need not be the sa­me. Many political parties and social outfits here insist the three convicts must not meet Guru’s fate.

 

The most striking difference between the two cases is that while a majority of political parties, particularly BJP, have been braying for Guru’s death for involv­ement in the Parliament at­ta­ck of December 2001, none is asking that the hangman be called for the three Rajiv convicts — Perarivalan, San­­than and Murugan. In fact, the general demand from parties is that they either they should be set free or their sentences sho­uld be commuted to life imprisonment. How­ever, a few Congre­ssmen in TN occas­ionally make noises about the delay in carrying out their executions but nob­ody takes them too seriously.

 

http://www.deccanchronicle.com/130211/news-politics/article/why-case-tamil-convicts-different

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசாங்கம் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டவர்களுக்கு தூக்குத் தண்டனையைக் கொடுக்காது. எனவே தமிழக அரசியல்வாதிகள்தான் இவர்களை காப்பாற்ற தொடர்ந்தும் விழிப்போடு செயற்படவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சர், சுஷில் குமார் ஷிண்டே, நேற்று கூறியதாவது:அப்சல் குரு, தூக்கிலிடப்பட்டது குறித்து, சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். இது, அரசியல் ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு அல்ல. சட்டப்படி எடுக்கப்பட்ட முடிவு. அப்சல் குருவுக்கு, தண்டனை நிறைவேற்றப்பட்டதில், சட்ட நடைமுறைகள், முறையாக பின்பற்றப்பட்டுள்ளன. தூக்கிலிடப்படுவது குறித்து, அவரது குடும்பத்தினருக்கு, 7ம் தேதி இரவே, விரைவு தபால் மூலம், தகவல் அனுப்பப்பட்டு விட்டது. காஷ்மீர் முதல்வர், உமர் அப்துல்லாவுக்கும், 8ம் தேதியே, தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது. யாரையும் திருப்தி படுத்தும் நோக்கத்தில், இந்த தண்டனையை நிறைவேற்றவில்லை. பயங்கரவாதத்துக்கு மதம் கிடையாது. அப்சல் குருவுக்கான தண்டனையை, ரகசியமாக நிறைவேற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கு, பஞ்சாப் முன்னாள் முதல்வர் பியாந்த் சிங் கொலை வழக்குகளில் தொடர்புடையோர், மீதான விசாரணை, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. அதனால் தான், அவர்களுக்கான தண்டனை நிறைவேற்றப்படவில்லை.

Dinamalar

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் அப்சல் குரு கொல்லப்பட்டது சரி என்று சொல்லவில்லை.நீதியான விசாரணை ஒன்று நடாத்தப்படாமல்  அவசர அவசரமாக தூக்கில் இடப்பட்டுள்ளார்.அதே நேரம் இன்னும் நிரூபிக்கபடாமலும் 20 வருடங்களுக்கு மேல் சிறைதண்டனை அனுபவிக்கும் ராஜீவ் கொலை சந்தேக நபர்கள் தூக்கிலிடப்பட வேண்டும் என்பவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்.உலகில் எங்கேயாவது சந்தேக நபர்கள் 20 வருடத்துக்கு மேல் சிறைத் தண்டனை அனுபவித்து உள்ளார்களா ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.