Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐந்தரை வயது சிறுமியை பலியெடுத்தது ஸ்கானர் இயந்திரம் - நவலோகா வைத்தியசாலையில் சம்பவம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஐந்தரை வயது சிறுமியை பலியெடுத்தது ஸ்கானர் இயந்திரம் - நவலோகா வைத்தியசாலையில் சம்பவம்! 
[Monday, 2013-02-11 22:02:13]
 
நவலோகா வைத்தியசாலையில் கேள்விக்குரிய விதமாக உயிரிழந்த ஐந்தரை வயது சிறுமியின் மரணம் தொடர்பான விசாரணைகள், பணத்தின் வலுவால் மூடி மறைக்க அனுமதிக்க வேண்டாம் என அச்சிறுமியின் தாய், நீதிமன்றத்தில் இன்று கோரிக்கை விடுத்தார். வலியால் வருந்துவது போல சில அறிகுறிகள் காணப்பட்டதால் ஜனவரி 31இல், தனது மகளை கொழும்பு, நவலோகா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதாக அவர் நீதிமன்றத்தில் குறிப்பிட்டார். 'தனது மகளை பார்வையிட்ட வைத்தியர், இரத்த பரிசோதனைகளையும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் அறிக்கையையும் பெறுமாறு கூறினார். தனது மகள் புத்தினி கௌசல்யாவுக்கு மயக்க மருந்தைக் கொடுத்து எம்.ஆர்.ஐ ஸ்கானிங் இயந்திரத்துக்குள் கிடத்தினர். 30 நிமிடங்களின் பின் ஒரு சத்தம் கேட்டது. இதைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தின் பின் எனது மகளை வெளியே எடுத்தனர். அவள், நீல நிறமாகிவிட்டதையும் வயிறு வீங்கிவிட்டதையும் நான் கண்டேன். இது நடந்து 10 நிமிடங்களின் பின்னரே வேறு வைத்தியர்கள் அங்கு வந்தனர்.
 
  
பின்னர், எனது மகளை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு சென்றனர். அவள் உடல் குளிர்ந்துவிட்டது என நான் கூறிய பின், அவளை வெப்பம் வழங்கும் இயந்திரத்தினுள் வைத்தனர். அவர்கள் எங்களை நான்கு நாட்களாக ஏமாற்றினர். நான்காம் நாள் அவளது மூக்கினுள் எறும்புகள் வரிசையாக செல்வதை கண்டேன். தனது மகள் ஸ்கான் இயந்திரத்தினுள் இறந்துவிட்ட போதிலும் நிர்வாகம் அதை மறைத்து மகள் நான்கு நாட்களின் பின் இறந்ததாக அறிவித்தனர்' என்று அச்சிறுமியின் தாய் கூறினார். அடுத்த விசாரணை தினத்தில் வைத்தியசாலை அதிகாரிகளை சர்சியமளிக்க அழைப்பாணை விடுப்பதாக கூறிய நீதவான், இந்த வழக்கின் விசாரணையை எதிர்வரும் 18ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.http://seithy.com/breifNews.php?newsID=75842&category=TamilNews&language=tamil

வாசிக்கும் போதே பதறுகின்றது மனம்.....

 

Accountability என்பது அறவே இல்லாத ஒரு நாட்டில் அரச தலைவரில் இருந்து எவரும்  எதுவும் செய்து விட்டுப் போகலாம் என்பதுதான் யதார்த்தம்.

ரமணா  படத்தில் வரும் ஒரு காட்சிபோல் செய்துள்ளார்கள்.

 

 

தவறு செய்வது மனித இயல்பு ஆனால்  செய்த தவறை ஏற்றுக் கொண்டு தண்டனை பெறாமல் தப்ப நினைப்பது மிருகத்தனம்.

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு கொலையாகத் தான் பார்க்கப் படவேண்டும்!

 

அதுவும் குழந்தை! :wub:

  • கருத்துக்கள உறவுகள்

காந்த‌ப் புல‌ ஸ்கான் (MRI) எடுக்கும் போது உள்ளுறுப்புக‌ளைத் தெளிவாக‌க் காட்டுவ‌த‌ற்காக‌ contrast agent எனும் நாள‌ம் வ‌ழியான‌ ம‌ருந்தை ஏற்றுவார்க‌ள். இம்ம‌ருந்து வெகு அரிதாக‌ சில‌ருக்கு ஒவ்வாமையை ஏற்ப‌டுத்தி ம‌ர‌ண‌த்தை விளைவிக்கும். மேலை நாடுக‌ளில் இத‌ற்காக‌வே ஸ்கேன் செய்ய‌ப் ப‌டும் நோயாளியுட‌ன் இய‌ந்திர‌த்தை இய‌க்குப‌வ‌ர் காதில் பொருத்தும் தொலைபேசி போன்ற‌ க‌ருவி மூல‌ம் தொட‌ர்பில் இருந்து ஏதாவ‌து மாற்ற‌ங்க‌ள் உண‌ர‌ப் ப‌டுகிற‌தா என்று கேட்ட‌றிந்து கொண்டிருப்பார். ஒரு தாதியும் எப்போதும் அந்த‌ அறைக்குள் த‌யாராக‌ இருப்பார். சிறி ல‌ங்காவில் இதையெல்லாம் விள‌ங்க‌ப் ப‌டுத்த‌க் கூட‌ மாட்டார்க‌ள். வைத்திய‌ர் நோயாளியோடு பேச‌வே மாட்டார். வைத்திய‌ர் இல்லாத‌ நேர‌ம் தாதியும் குப்பை பொறுக்குப‌வ‌ரும் வைத்திய‌ர் போல‌ ந‌ட‌ந்து கொள்வார்க‌ள். இது போன்ற‌ தொழிலுக்குப் பொருத்த‌மில்லாத‌ ந‌ட‌த்தைக‌ளால் தான் இந்த‌ ம‌ர‌ண‌ம் நிக‌ழ்ந்திருக்கும் என‌ நினைக்கிறேன். மேலும் த‌ர‌ங்குறைந்த‌ contrast agent  பாவிக்க‌ப் ப‌ட்டிருந்தாலும் ஒவ்வாமை இல்லாம‌லே அது ஆளைக் கொல்ல‌க் கூடும் (தொட‌ர்பு ப‌ட்ட‌ அண்மைய‌ செய்தி கீழே). இந்தியாவில் இருந்து அதிக‌ ம‌ருந்துக‌ளை சிறி ல‌ங்கா வாங்குவ‌தால் த‌ர‌ங்குறைந்த‌ ம‌ருந்தால் குழந்தை இற‌ந்திருக்க‌வும் வாய்ப்புக‌ள் உண்டு! 

 

http://www.bbc.co.uk/news/world-latin-america-21253019

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாதுக்கும் முதல் ஐஞ்சாறு பேப்பரிலை கையெழுத்து வாங்கிடுவினம்.....அதுக்குப்பிறகு "கையெழுத்து இருக்க பயமேன்"...........நாதாரி டாக்குதர்மார்.

MRI தேவை இல்லாமல் பாவிப்பதா? இது நோயாளியின் நோயை வைத்து பணம் பிடுங்கும் வேலை. 

தேவைக்கு ஏற்ற அளவில் மட்டுமே தொழினுட்பமும் பாவிக்கப் படவேண்டும்.

Main-cartoon-2.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.