Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்க்கருத்துக்கள உறவான கலைஞனின் தந்தை இறைபதம் எய்தினார்.

Featured Replies

இன்றுதான் இந்த செய்தியை பார்த்தேன்.

தந்தையின் பிரிவால் துயருறும் கலைஞனுக்கும், அவர் குடும்பத்தினருக்கும், எனது ஆழ்ந்த அனுதாபங்கள்!

  • Replies 116
  • Views 11.9k
  • Created
  • Last Reply

ராஜா அண்ணா, கிளியவன், அனுதாபங்களையும், இரங்கல்களையும் பகிர்ந்துகொண்ட அனைவருக்கும் மீண்டும் ஓர் தடவை எனது குடும்பத்தின் சார்பிலும், தனிப்படவும் நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன்.

 

இன்று  சனிக்கிழமை ஸ்காபரோ ஐயப்பன் கோயில் கலாச்சார மண்டபத்தில் (Middlefield & Finch, பழையகோயில்) எனது தந்தையின் நினைவு ஒன்றுகூடல் நடைபெறும் (காலை 11.00 - மதியம் 12.30 வரை).

 

அப்பாவின் நினைவுகளும், சொந்த பந்தங்களும் என்றென்றும் இணையவழியாகவும் நிலைப்பதற்கு sinnathamby.com எனும் பெயரில் வலைத்தளம் ஒன்றையும் இயக்கியுள்ளோம்.

 

 

%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%B0%E0%

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள். கலைஞன் தந்தை மீது எவ்வளவு பாசம் கொண்டிருந்தார் என்பதை அவர் எழுத்துக்களில் இருந்து புரியமுடிகின்றது...

நன்றி தூயவன். 

 

நீண்டவாரவிடுமுறையில் நேற்று நேரம் ஒதுக்கி அப்பாவின் நினைவு ஒன்றுகூடலிற்கு பிள்ளைகளுடன் வருகைதந்த சகாறா அக்காவிற்கும் நன்றி. 

 

அப்பா மறைந்து ஒன்றரை மாதமாகிவிட்டது. மிக விரைவாக காலம் ஓடுவதும்,சங்கிலித்தொடராக நடைபெற்ற கிரியைகள், சம்பிரதாயங்கள் இவற்றின் பாதிப்பும் காரணமாய் வாழ்க்கையில் புதிதாய் ஓர் புதிர் போட்டுள்ளது போன்று உணர்கின்றேன்.

 

  • 2 weeks later...

முரளி அண்ணாவின் தந்தைக்கு எனது கண்ணீர் அஞ்சலிகள்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கலைஞனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழு;ந்த ஆனுதாபங்கள்!!!!!!!

  • 5 weeks later...

இன்றுடன் அப்பா பிரிந்து சரியாக மூன்று மாதங்கள் ஆகின்றது. அப்பாவின் நினைவுகளும், அதன் தொடர்ச்சியான துயரங்கள், ஏக்கங்கள் தினமும் அதிகரித்து செல்வதாக உணர்கின்றேனன்றி குறைவடைவதாக தெரியவில்லை. உலக வாழ்க்கையின் நியதி இது என்று நினைத்துக்கொண்டு சாதாரணமாக விலகிச்செல்லமுடியவில்லை.

 

இப்போது காலநிலை சிறப்பாக உள்ளதால் அப்பா தங்கியிருந்த வைத்தியசாலையை அடிக்கடி துவிச்சக்கரவண்டியில் சென்று சுற்றி வருவதை வழக்கமாகக்கொண்டுள்ளேன். கடந்த மூன்று மாதங்களில் வாழ்வில் மீளமுடியாத அளவிற்கு பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது.

 

மரணச்சடங்கின் பின் அதைப்பொறுப்பெடுத்த குறிப்பிட்ட நிறுவனம் பல ஆவணங்கள், அட்டைகள் அடங்கிய பொதியை வழங்கினார்கள். அவற்றை பிரித்து ஆராய்ந்து பார்த்தபோது அதில் யாழ் இணையம் மூலம் அனுப்பப்பட்ட அனுதாபமடலும் காணப்பட்டது.

 

பல்வேறு வகைகளில் அனுதாபங்களை தெரிவித்தவர்கள், துயரை பகிர்ந்தவர்கள் அனைவருக்கும் மீண்டுமொருதடவை நன்றி. 

 

 

30kuah0.jpg

 

314f2wn.jpg

 

  • கருத்துக்கள உறவுகள்

இன்றுடன் அப்பா பிரிந்து சரியாக மூன்று மாதங்கள் ஆகின்றது. அப்பாவின் நினைவுகளும், அதன் தொடர்ச்சியான துயரங்கள், ஏக்கங்கள் தினமும் அதிகரித்து செல்வதாக உணர்கின்றேனன்றி குறைவடைவதாக தெரியவில்லை. உலக வாழ்க்கையின் நியதி இது என்று நினைத்துக்கொண்டு சாதாரணமாக விலகிச்செல்லமுடியவில்லை.

 

இப்போது காலநிலை சிறப்பாக உள்ளதால் அப்பா தங்கியிருந்த வைத்தியசாலையை அடிக்கடி துவிச்சக்கரவண்டியில் சென்று சுற்றி வருவதை வழக்கமாகக்கொண்டுள்ளேன். கடந்த மூன்று மாதங்களில் வாழ்வில் மீளமுடியாத அளவிற்கு பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டது.

 

மரணச்சடங்கின் பின் அதைப்பொறுப்பெடுத்த குறிப்பிட்ட நிறுவனம் பல ஆவணங்கள், அட்டைகள் அடங்கிய பொதியை வழங்கினார்கள். அவற்றை பிரித்து ஆராய்ந்து பார்த்தபோது அதில் யாழ் இணையம் மூலம் அனுப்பப்பட்ட அனுதாபமடலும் காணப்பட்டது.

 

பல்வேறு வகைகளில் அனுதாபங்களை தெரிவித்தவர்கள், துயரை பகிர்ந்தவர்கள் அனைவருக்கும் மீண்டுமொருதடவை நன்றி. 

 

 

30kuah0.jpg

 

314f2wn.jpg

 

 

கலைஞன் உங்கள் தந்தையின் இழப்பு ஈடு செய்ய முடியாதது தான் அதற்காக அதையே நினைத்து வருந்தி கொண்டு இருக்காமல் அதில் இருந்து வெளியே வருவது உங்கள் உடல்,மனநலத்திற்கு நல்லது...என்னோடு கோவிக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.
 
பிகு;யாழ் மூலமாக தொடங்கிய திட்டத்தை முன்னெடுங்கள்

நான் நினைக்கின்றேன் முரளி, என்னைப் போன்று வாழ்க்கையை அதன் போக்கில், அத்தனை அம்சங்களுடனும் ஏற்றுக் கொள்பவர்களுக்கும், உங்களைப் போன்று வாழ்க்கையை தத்துவங்களினூடாக எடுத்துக் கொள்பவர்களுக்கும் இடையிலான வேறுபாடு என்பது இழப்பொன்றை புரிந்து கொள்வதில் இப்படித்தான் இருக்கும் என்று. 

 

எம்மைச் சுற்றி; முக்கியமாக ஈழத்தமிழர்களான எம்மைச் சுற்றி நடந்த அத்தனை இழப்புகளை கண்ணுற்றும் உங்கள் தந்தையின் இழப்பை 3 மாதங்களின் பின்பும் சாதரண அளவுக்கும் மேலாக உங்களால் தாங்க முடியாது இருப்பதற்கு நீங்கள் வாழ்க்கையை பார்க்கும் விதம் தான் காரணம் என்று. எதனையும் உணர்ச்சி மயமாக பார்ப்பதால் மிஞ்சுவது வேதனை தான்.

  • கருத்துக்கள உறவுகள்

 

 நல்ல, வடிவான காட். 

  • கருத்துக்கள உறவுகள்

குருஜி ! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்கள் உரித்தாகட்டும்.

 

நான் நீண்ட  நாட்கள்  இங்கு வராததால் இச் செய்தியை அறிந்திருக்க வில்லை . இப்போது இதைப் பார்த்ததும் மிகவும் வேதனைப் பட்டேன் .உங்களது துயரில் யாழ் கள உறவுகள் பலரும் பங்கெடுத்துக் கொண்டிருந்தார்கள் .அவர்களுடன் நானும் இணைந்து கொள்கின்றேன் !

என்னை விட நீங்கள் கொடுத்து வைத்தவர், நான் எனது தந்தையைப் பார்த்ததில்லை.நீங்கள் இவ்வளவு காலமும் அவரது அன்பில் திளைத்திருந்துள்ளீர்கள் .காலம் எல்லாத் துயரையும் மாற்றும் வல்லமை கொண்டது.உங்கள் துயரமும் அதில் கரைந்து விடட்டும் !

  • 2 weeks later...

நன்றி குருஜி.

 

அப்பாவுடனான பிணைப்பு ஆத்மார்த்தமானது. மெது, மெதுவாக சோகங்களிலிந்து விடுபட்டு ஆக்கபூர்வமானமுயற்சிகளில் தொடர்ந்து ஈடுபடுவதற்கு முயற்சிகின்றேன்.

 

அனைவருக்கும் நன்றி!

  • 2 months later...

இன்றுடன் 17.08.2013 அப்பா மறைந்து சரியாக ஆறு மாதங்கள். அப்பா நினைவில் வீட்டில் பிரார்த்தனை செய்தோம்.

அண்மைக்காலமாக அப்பாவின் தகவல்கள் அடங்கிய கோப்புக்களை ஒழுங்குபடுத்துகின்றேன். சில வருடங்களின் முன் நான் கேட்டுக்கொண்டதனால் தனது சுயசரிதையை சிறிது காலம் கொஞ்சம் கொஞ்சமாக எழுதினார். ஆக நான்கு பக்கங்கள் மட்டுமே அவர் எழுதினாராயினும் அவரது ஞாபகங்கள் பலவற்றை இந்த நினைவுகள் கொண்டு வருகின்றன. 1990ம் ஆண்டு இராணுவ நடவடிக்கைகள் காரணமாக அப்பாவின் வழி ஊரைவிட்டு -  காங்கேசன்துறை வெளியேறிய நாங்கள் ஏறக்குறைய 23 வருடங்களின் பின்பும் இன்றும்கூட அங்கு எவருமே செல்லமுடியாத நிலை வருத்தம் அளிக்கின்றது.

கீழுள்ள அவரது படம் இலங்கையில் உள்ளபோது எடுத்தது. பேத்தியை தூக்கி வைத்துள்ளார்.

 

 

vcuyo1.jpg

 

23m9cfr.jpg

zsv98m.jpg

 

2hgrew1.jpg

 

9sz1tz.jpg

அன்னாருக்கு அஞ்சலிகள் .  பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

Edited by யாழ்அன்பு

  • 2 years later...
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கரும்பு
முகப்பில் உங்கள் தந்தையின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி அறிவித்தலைக் கண்டேன்.
உங்கள் அப்பாவுக்காக எனது குடும்பத்தின் சார்பில் நினைவு அஞ்சலிகள்.

நன்றி ஈழப்பிரியன் அண்ணா. நான் எனது அப்பா, அம்மாவுடன் 2008ம் ஆண்டு உங்கள் வீட்டுக்கு வருகை தந்தேன் என்று நினைக்கின்றேன். பின்னர் அருகில் இருந்த கோயிலுக்கும் சென்றோம். அம்மா, அப்பாவுடன் சேர்ந்து சென்று சந்தித்த ஒரே ஒரு யாழ் கள உறவு நீங்கள் ஒருவர்தான். அப்பா, அம்மாவுடன் உங்கள் வீட்டுக்கு வருகை தந்ததை மறக்கமுடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.