Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அந்த 17,500 பேர் எங்கே? - புலிகளின் தளபதி எழிலன் மனைவி ஆனந்தியின் போர் வாக்குமூலம் இது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Elilans-wife-vikatan-668-150.jpg

"இதுதான் பிரபாகரன் வீடு!'' ''இது தமிழ்செல்வன் மீது பம்ப் அடிச்ச இடம்!'' ''இங்கேதான் புலிகள் கடைசியாக விழுந்தாங்க!'' - இவை எல்லாம் வன்னி நிலம்பற்றிய சிங்கள சுற்றுலாப் பயணிகளின் குறிப்புகள். ஈழத்தில் போர் முடிந்து நான்கு ஆண்டுகள் நெருங்கும் நிலையிலும், 'காணாமல்போன எங்கள் உறவுகள் எங்கே? - என்ற கேள்வி மட்டுமே மக்களிடம் எஞ்சியிருக்கிறது. கூட்டுக் கொலைகளுக்கும், பாலியல் வன்முறைகளுக்கும், கடத்தலுக்கும், சாட்சிகளாக நின்ற ஈழ மக்கள் பேசவே அஞ்சும் நிலை இன்று.

விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், திருகோணமலை அரசியல் துறைப் பொறுப்பாளராகவும் இருந்து இறுதிப் போரில் சரணடைந்து காணாமல்போனவர் தளபதி எழிலன். இவருடைய மனைவி ஆனந்தியின் போர் வாக்குமூலம் இது...

''2009 ஜனவரியிலிருந்து ஒரு நாள், ஒரு மணி நேர இடைவெளிகூட இல்லாமல் ஷெல்லடி நடந்தது. ஒரு சின்ன இடைவெளியைக் கொடுத்தால்கூட, புலிகள் சுதாரித்துக் கொள்வார்கள் என்று எதுபற்றியும் கவலைப்படாமல் தொடர்ந்து தாக்கிக்கொண்டே வந்தது இராணுவம்.

Elilans-wife-vikatan-668-001.jpg

மழையாகப் பொழிந்த ஷெல்களுக்கு நடுவே கிடைத்த சின்னச் சின்ன இடைவெளிகளுக்கு மத்தியில் அங்குலம் அங்குலமாக நாங்கள் நகர்ந்தோம்.

தர்மபுரம் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை செல்லும் வழியெல்லாம் ஷெல்லடியில் மக்கள் செத்து விழுந்தார்கள். பல தாய்மார்கள் தங்களின் இறந்த குழந்தைகளை அங்கேயே புதைத்துவிட்டுக் கடந்தார்கள். முதிர்ந்தவர்களை அப்படியே கைவிட்டுச் சென்றார்கள்.

கரையா முள்ளிவாய்க்கால், வெள்ளா முள்ளிவாய்க்கால், கப்பல் ரோட், வட்டுவாகலை அண்டிய பிரதேசங்களில் மே மாதம் 11-ம் தேதி தொடங்கி நடந்தது இரத்த அழிவுதான். நாங்கள் நகர்ந்த இடங்களில் இருந்த மரங்களில்கூடச் சிதைந்த உடல்கள் தொங்கின.

விஷக் குண்டுகள் விழுந்த இடத்தில் அது ஆக்சிஜனை இல்லாமல் செய்ய, மூச்சுத் திணறி இறந்தவர்கள் பலர். அந்தக் குண்டு வீசப்பட்ட இடங்களைச் சுற்றிப் பல மைல்களுக்கு அதனுடைய பாதிப்பு பயங்கரமாக இருக்கும். தொண்டை எல்லாம் வறண்டுபோகும்.

காயம் அடைந்து சிகிச்சை கிடைக்காமல், இரத்தமிழந்து, கொஞ்சம் கொஞ்சமாகச் சாகிறோம் என்று தெரிந்தே இறந்தவர்களின் நிலைதான் மிகவும் கொடூரம். இதையெல்லாம் பார்த்த புலிகள் கையறு நிலையில் மக்களை அவர்கள் வழியில் செல்லுமாறு அனுப்பினார்கள்.

ஆனால், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்ல முயன்ற மக்களும் கொல்லப்பட்டார்கள். எங்கும் செல்ல முடியா மல் மக்கள் அந்தச் சிறிய பகுதிக்குள் சிக்கி மடிந்தார்கள். மே 15-ம் தேதி எங்களின் முடிவு நெருங்கியிருந்தது.

எங்களைக் காப்பாற்ற இந்தியா வருகிறது, அமெரிக்காவின் பசிபிக் பிராந்தியத் தளபதி வரப்போகிறார். ஐ.நா-வின் மேற்பார்வையில் புலிகள் சரணடைவார்கள். மக்கள் விடுவிக்கப்பட்டு வீடுகளுக்குச் செல்வார்கள் என்ற பேச்சு மக்களிடம் பரவி ஒரு நம்பிக்கையாக விரிந்து இருந்தது.

புலிகளுக்கு அந்த வாக்குறுதி இந்தியா சார்பிலும், மேற்குலகத்தின் சார்பிலும் வழங்கப்பட்டிருந்தது. எழிலன் என்னிடம் வந்து, 'நீ பிள்ளைகளை அழைச்சுக்கொண்டு இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் போய் சரண்டர் பண்ணு. நான் வர்றேன் என்றார்.

போர் அநேகமாக முடிவுக்கு வந்திருந்தது. தூரத்தில் ஒலிக்கும் வெடிச் சத்தங்களைத் தவிர, எதுவுமே எஞ்சியிருக்கவில்லை. ஆயுதங்கள் யாவும் புலிகளால் அமைதியாக்கப்பட்டன.

நானும் என்னோட மகள்களும் பிற சனங்களும் வட்டுவாகல் வழியாக வெளியேறி 17-ம் தேதி இரவு செல்வபுரம் வந்தோம். அங்கே ஒரு மரத்தடியில் ஏராளமான சனங்கள் அமர்ந்திருந்தனர்.

புலிகளின் பிரதான தளபதிகள் பலர் குடும்பம் குடும்பமாக அவர்களுடன் இருந்தார்கள்.

அரசியல் துறைத் துணைப் பொறுப்பாளர் சோ.தங்கன் அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளோடும், தளபதி இளம்பரிதி மூன்று குழந்தைகள் மற்றும் மனைவியோடும், மஜீத் என்ற தளபதி இரண்டு குழந்தைகள் மற்றும் தளபதியோடும், பிரியன் அவருடைய மனைவி குழந்தைகளோடும், மனைவியை ஏற்கெனவே இழந்த ராயா அவரது குழந்தைகளோடும் அமர்ந்திருந்தனர்.

இதுபோல எண்ணற்ற போராளிக் குடும்பங்களைக் கண்டதும் என் கணவர் எழிலனை அழைத்து வரலாம் எனத் திரும்பியபோது, சில பொடியள் வந்து 'நாங்கள் அழைத்து வருகிறோம் அக்கா - என்று சொல்லி அழைத்து வந்தார்கள். மிகவும் சோர்ந்து போய் வந்த எழிலன் என்னோடு எதுவும் பேசவில்லை. தலை குனிந்தபடி அமர்ந்திருந்தார்.

பின்னர், 'நாங்க தாயகத்துக்காகப் போராட வெளிக்கிட்டு பூஜ்ஜியம்கூட இல்லை. மைனஸில் வந்து நிக்கிறோம் - என்றபடி மீண்டும் தலை குனிந்து கொண்டார். சமாதானக் காலத்தில் சரிக்குச் சமமாக இராணுவத்தோடு நின்ற தலைவர்கள் எல்லாம் பிணையக்கைதிகளாகி தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தார்கள்.

அந்த இரவை அப்படியே கழித்தோம்!'' என்று நிறுத்திக்கொண்டு அந்த நினைவுகளில் மூழ்கியவர் சின்ன இடை வேளைக்குப் பிறகு தொடர்ந்தார்.

புலிகளின் மூத்த தலைவர்களான புதுவை இரத்தினதுரை, பாலகுமார், பேபி எனப்படும் இளங்குமரன், யோகரத்தினம் எனப்படும் யோகி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களோடு பிரான்சிஸ் ஜோசப் என்ற அடிகளாரும் அங்கேதான் இருந்தார்.

பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் உண்மையிலேயே ஒரு தியாகியைப் போல வன்னி மக்களுக்காக வாழ்ந்தார். எமது பிள்ளைகளின் கல்வியறிவுக்கு அவர் ஆற்றிய தொண்டு அளவிட முடியாதது.

தோல்வியைத் தழுவுகிறோம் என்று தெரிந்தபோது புலிகள் அவரைப் பத்திரமாக படகில் அனுப்பி வைக்க முடிவெடுத்த போதுகூட, மக்களை விட்டு விலகிச் செல்ல மறுத்து, பிடிவாதமாக மக்களோடு நின்றார்.

அந்த இரவில் அவரும் எங்களோடு நின்றார். அவருக்கு தமிழ், ஆங்கிலம், சிங்களம் என மூன்று மொழிகள் தெரியும் என்பதால், இராணுவத்துடனான தொடர்பாடலுக்கு அவர் பெரிதும் பயன்பட்டார்.

மே 18-ம் தேதி காலை சுமார் 7.30 மணி இருக்கும்போது இராணுவத்தினர் வந்து, 'நீங்கள் புலிகள் அமைப்பில் ஒரு நாள் உறுப்பினராக இருந்தால்கூட எங்களிடம் வந்து சரணடைந்து விடுங்கள். உங்களுக்கு ஐ.நா. மூலம் பொது மன்னிப்பு வழங்கப்படும்� என்று அறிவித்தார்கள்.

ஜோசப் அடிகளாரும், 'நாம் சரணடைவோம். ஐ.நா. நம்மை விடுவிக்கும்!- என்றார். பேருந்துகளைக் கொண்டுவந்து நிறுத்தி, அதில் போராளிகளை ஏற்றினார்கள். எல்லோரையும் ஏற்றிவிட்டு அருட்தந்தையும் அந்தப் பேருந்தில் ஏறிக்கொண்டார்.

என் மகளின் உடல்நிலை மோசமாக இருந்ததால் நான் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டேன். அன்று சரணடைந்த எந்த ஒரு போராளியையும் அதன் பிறகு யாரும் எங்கும் உயிரோடு பார்க்கவில்லை. அவர்களுக்கு என்ன நடந்தது என்றும் தெரியவில்லை.

யுத்தம் முடிவுக்கு வந்து, நான்கு வருடங்களாகிவிட்டன. போர் முடிந்த பிறகு, 17,500 விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரணடைந்து இருப்பதாக முதலில் சொன்னது அரசு.

பின்னர் 15,000 என்றது. இப்படிக் குறைந்து குறைந்து இறுதியில் 11,000 போராளிகளின் பெயர் விவரங்களை வெளியிட்டது அரசு.

அதில் நான் செல்வபுரத்தில் கண்ட எந்தப் போராளிகளின் பெயர்களும் இல்லை. அவர்களின் குடும்பங்களின் விவரமும் இல்லை.

அருட்தந்தையின் பெயரும் இல்லை. என் கணவரின் பெயரும் இல்லை.

அப்படிஎனில் போருக்குப் பின்னர் சரணடைந்த ஆயிரக்கணக்கான போராளிகளுக்கும் அவர்களின்

குடும்பத்தினருக்கும் என்ன நடந்தது?

இதை நான் யாரிடம் கேட்பேன்?''- தீர்க்கமான குரலில் கேட்கிறார் ஆனந்தி எழிலன்.

நன்றி - ஆனந்த விகடன்

http://www.seithy.com/breifNews.php?newsID=77515&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் உலக வல்லரசுகளின் ஆயுத பலத்தின் முன் தோற்று எல்லாம் இழந்து நிற்கிறோம் என்பதன் வாக்கு மூலமாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம். இதில் இருந்து தான் எமது எதிர்காலத் திட்டங்களுக்கான சிந்தனையோட்டம் பிறக்க வேண்டி உள்ளது..!

ஒன்றில் காணாமல் போனவர்கள் ஐநாவின் பெயரால் கொல்லப்பட்டிருப்பார்கள் அல்லது.. மறைக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் வெளியில் வரனும் என்றால்.. எமக்கு இதே ஐநாவின் பிரசன்னத்தோடு ஒரு நீண்டு நிலைக்கக் கூடிய தீர்வு வரனும். அதற்கான நகர்வுகளே இந்தக் கேள்விகளுக்கு விடை தரும்..!

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா  தனது கடமையை செய்ய தவறியது மன்னிக்க முடியாத குற்றம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா  தனது கடமையை செய்ய தவறியது மன்னிக்க முடியாத குற்றம்.

575596_4375532512814_1119641366_n.jpg

தனித்தமிழீழம் தான் ஒரே தீர்வு என்பது உலகத்தை ஏற்கவைக்க இலகுவாக முடியும்..... இந்த உண்மைகளை வெளியிலே நாம் கொண்டுவந்தால்.

பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் உண்மையிலேயே ஒரு தியாகியைப் போல வன்னி மக்களுக்காக வாழ்ந்தார். எமது பிள்ளைகளின் கல்வியறிவுக்கு அவர் ஆற்றிய தொண்டு அளவிட முடியாதது.

தோல்வியைத் தழுவுகிறோம் என்று தெரிந்தபோது புலிகள் அவரைப் பத்திரமாக படகில் அனுப்பி வைக்க முடிவெடுத்த போதுகூட, மக்களை விட்டு விலகிச் செல்ல மறுத்து, பிடிவாதமாக மக்களோடு நின்றார்.

மக்களுக்கு சேவையாற்றிய தியாகிகளை கூட பத்திரமாக கடலுக்கு அனுப்பி வைக்க முயன்ற புலிகள் தான் தாம் பத்திரமாக தப்பாமல், தம் தளபதிகளில் இருந்து தலைவர் வரை மக்களுடன் மக்களாக இறுதி வரைக்கும் நின்றவர்கள். அவர்கள் நினைத்து இருந்தால் மே முடிவுக்கு முன் மிக இலகுவாக தப்பியிருக்கலாம். ஆனால் சந்தேகத்துக்கு இடமின்றி அவர்கள் மக்களுக்காகவே நின்றார்கள். இறுதி நிமிடம் வரைக்கும் அவர்களை விட்டு தப்பி ஓட நினைக்கவில்லை. இந்த தியாகம் தான் ஈற்றில் அவர்களுக்கு முடிவுரையையும் எழுதிச் சென்றது. :(

மக்களை கொண்டு வந்து கொல்லிப் போட்டார்கள் என்றல்லோ அர்ஜுன் போன்றவர்கள் ( அரசியலில் Phd ) சொல்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்களைக் காப்பாற்ற இந்தியா வருகிறது, அமெரிக்காவின் பசிபிக் பிராந்தியத் தளபதி வரப்போகிறார். ஐ.நா-வின் மேற்பார்வையில் புலிகள் சரணடைவார்கள். மக்கள் விடுவிக்கப்பட்டு வீடுகளுக்குச் செல்வார்கள் என்ற பேச்சு மக்களிடம் பரவி ஒரு நம்பிக்கையாக விரிந்து இருந்தது.

பாவம் மக்கள் நம்பி ஏமாந்து போனார்கள். 
இதில் நம்பிக்கை துரோகங்களும் போராளிகள் மத்தியில் விசமிகளால் வேண்டுமென்றே பரப்பப்பட்டு இருக்கின்றது கடைசி நாட்களில் போராட்டம் நிலைகுலைய எதிரி பாவித்த ஆயுதமாக இதைப்பார்க்கலாம்.

மக்களை கொண்டு வந்து கொல்லிப் போட்டார்கள் என்றல்லோ அர்ஜுன் போன்றவர்கள் ( அரசியலில் Phd ) சொல்கிறார்கள்.

தம்பி நுணாவிலான்(அருவரி  ) புலிகள் மக்களுள் தான் இருந்தார்கள் .அந்த மக்களை Human shield ஆக வைத்திருந்தார்கள் .இது சட்டலைட்டில் பார்த்து சர்வதேசம் உறுதிசெய்துவிட்டது .போர் முடிந்த பின் அங்கு சென்று மக்களை சந்தித்த அனைத்து ஊடகங்களும் ,முகாம்களில் இருந்து  இப்போ வெளிநாடுகளில் இருப்பவர்களிடமும் இது உறுதிசெய்யபட்டுவிட்டது .

இப்போ பிபிசி கேட்டுக்கொண்டிருக்கின்றேன் அதில் தெளிவாக சின்ஹா உரை பற்றி கதைக்கின்றார்கள்.

புலிகள் பற்றி புதிதாக சொல்ல எதுவுமில்லை இப்போ பிரச்சனை தமிழர்கள் பற்றித்தான்,   

ஒவ்வொருமுறை சிங்களப்படை நடவடிக்கை எடுக்கிறபோதும் தமிழ்மக்கள் புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குள் செல்வதுதான் வாடிக்கையாக இருந்தது. சூரியக்கதிர் நடவடிக்கையில் இலட்சக்கணக்கான மக்கள் இடப்பெயர்வுக்கும் புலிகள் காரணமல்ல.. நாங்கள் விட்டு விலகுகிறோம் என்றுதான் சொன்னார்கள். மக்களை மிரட்டி இடப்பெயர்வு செய்ய வைக்கவில்லை..

வன்னிப்போரிலும் அப்படித்தான். ஜெயசிகுறு நடவடிக்கை மாதிரி மீட்பார்கள் என்று மக்கள் எதிர்பார்த்துத்தான் புலிகள் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்றார்கள். பிறகு புலிகளின் மேல் மனிதக்கேடய குற்றச்சாட்டை வைப்பது பிறநாடுகளுக்கு வேண்டுமானால் அரசியல் இலாபத்தைத் தரலாம். எங்களுக்கு அதனால் எதுவுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நுணாவிலான்(அருவரி  ) புலிகள் மக்களுள் தான் இருந்தார்கள் .அந்த மக்களை Human shield ஆக வைத்திருந்தார்கள் .இது சட்டலைட்டில் பார்த்து சர்வதேசம் உறுதிசெய்துவிட்டது .போர் முடிந்த பின் அங்கு சென்று மக்களை சந்தித்த அனைத்து ஊடகங்களும் ,முகாம்களில் இருந்து  இப்போ வெளிநாடுகளில் இருப்பவர்களிடமும் இது உறுதிசெய்யபட்டுவிட்டது .

இப்போ பிபிசி கேட்டுக்கொண்டிருக்கின்றேன் அதில் தெளிவாக சின்ஹா உரை பற்றி கதைக்கின்றார்கள்.

புலிகள் பற்றி புதிதாக சொல்ல எதுவுமில்லை இப்போ பிரச்சனை தமிழர்கள் பற்றித்தான்,   

பல மைல் விஸ்தீரணத்தில் இருந்த மக்கலையும் புலிகளையும் சில மைல் விஸ்திரணத்துக்குள் கொண்டு வந்ததே சிறிலங்கா அரசு தான்.ஆகவே இயற்கையாக புலிகளும் மக்களும் ஒன்றாக இருக்க சிறிலங்கா அரசால் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.இதில் எங்கு மக்களை கேடயமாக பயன்படுத்தினார்கள். லொஜிக் இடிக்குதே.பிஎச் டியை  குதிரை ஓடி பெற்றது போலிருக்கே. திருப்பி அரிவரிக்கு தான் விட்டெடுக்க வேணும் போல.

:icon_mrgreen:  :icon_mrgreen:

உங்கட கேஸ் அனைத்து கோட்டிலும் தள்ளுப்பட்டதற்கு காரணம் உந்த பொய்யும் புழுகும் தான் .

வரலாற்று இடம் பெயர்வு என்று பதிவு செய்யப்பட முதலாவது வன்னிக்கான இடம்பெயர்வால் இடம் பெயர்ந்தவர் இங்கு இருக்கின்றார் .நாட்டில் நடந்த அனைத்து விடயங்களும் முழு உலகிற்கும் தெரியும் புலி வாலுகளுக்கு தெரியாமல் இருக்க மாட்டாது ,உண்மையை ஒப்புகொள்ள இயலாமல் இருப்பதுதான் காரணம் .
STILL COUNTING THE DEAD வாசியுங்கள் ,அதில் மிக தெளிவாக பதிந்துள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
 சாட்சிகளாக சிறிலங்கா இராணுவம் தான் கொன்றார்கள் என ஆதாரங்களை சனல் 4 போன்றவற்றுக்கு கொடுக்குக்கும் சிங்களவர்கள் எங்கே , தமிழர்களுக்காக குரல் கொடுத்ததால் நாட்டிலேயே இருக்க முடியாமல் வேறு நாடுகளில்  தஞ்சமடைந்தது மட்டுமில்லாமல் இன்றும் குரல் கொடுக்கும் சிங்கள பத்திரிகையாளர்கள் எங்கே
 
ஒரு விடுதலை இயக்கத்தில் ?? இருந்த ஒருவர் புலிகளில் தான் பிழை என தொடர்ந்து விடாக்கண்டனாக விவாதிப்பவர் எங்கே??
 
மலையும் மடுவும் தான்.

தம்பி நுணா ,இப்ப கொஞ்சம் கிட்ட வாரீங்கள் போல கிடக்கு ?

  • கருத்துக்கள உறவுகள்

உங்கட கேஸ் அனைத்து கோட்டிலும் தள்ளுப்பட்டதற்கு காரணம் உந்த பொய்யும் புழுகும் தான் .

வரலாற்று இடம் பெயர்வு என்று பதிவு செய்யப்பட முதலாவது வன்னிக்கான இடம்பெயர்வால் இடம் பெயர்ந்தவர் இங்கு இருக்கின்றார் .நாட்டில் நடந்த அனைத்து விடயங்களும் முழு உலகிற்கும் தெரியும் புலி வாலுகளுக்கு தெரியாமல் இருக்க மாட்டாது ,உண்மையை ஒப்புகொள்ள இயலாமல் இருப்பதுதான் காரணம் .

STILL COUNTING THE DEAD வாசியுங்கள் ,அதில் மிக தெளிவாக பதிந்துள்ளார்கள்.

ஆமி வாறான் எண்டு யாராவது சொன்னால் மற்றப்பக்கத்தால் ஓடுவதுதான் எங்களுக்குத் தெரிந்தது.. :D ஒருநாளும் ஆமிக்காரனிட்டை ஐயோ காப்பாத்தினாயப்பா எண்டு யாரும் ஓடினதில்லை.. உங்களுக்குப் பக்கத்திலை இருக்கிறவர் ஏன் ஆமியிட்டை போக வெ ளிக்கிட்டார் எண்டு தெரியேல்ல..

மற்றும்படி நாட்டில் நடந்ததை வெ ள்ளையன் புத்தகமாப் போட்டு அதை நாங்கள் படிச்சுத் தெரியவேணும் என்கிறது ஒரு துர்ப்பாக்கியமான நிலைதான்.. :rolleyes::D

ஒட்டுக்குழுக்களை தவிர, மக்கள் யாரும் ஆமிக்கு கிட்டப் போனதாய்... நான் இதுவரை கேள்விப்படவில்லை.

ஈழத்தமிழனுக்கு மட்டுமல்ல, உலகத்தமிழனேக்கே புலி தான் பாதுகாப்புக் கவசம்.

தம்பி நுணாவிலான்(அருவரி  ) புலிகள் மக்களுள் தான் இருந்தார்கள் .அந்த மக்களை Human shield ஆக வைத்திருந்தார்கள் .இது சட்டலைட்டில் பார்த்து சர்வதேசம் உறுதிசெய்துவிட்டது .போர் முடிந்த பின் அங்கு சென்று மக்களை சந்தித்த அனைத்து ஊடகங்களும் ,முகாம்களில் இருந்து  இப்போ வெளிநாடுகளில் இருப்பவர்களிடமும் இது உறுதிசெய்யபட்டுவிட்டது .

இப்போ பிபிசி கேட்டுக்கொண்டிருக்கின்றேன் அதில் தெளிவாக சின்ஹா உரை பற்றி கதைக்கின்றார்கள்.

புலிகள் பற்றி புதிதாக சொல்ல எதுவுமில்லை இப்போ பிரச்சனை தமிழர்கள் பற்றித்தான்,  

நீங்கள் சொல்வது எங்கே போடப்பட்டிருகிறது என்று இங்கே இணையுங்கள். நான் நான் சொல்வதை ஆதாரத்துடன் நிரூபிக்கிறேன். புலிகள் பிடித்த கேடய சட்டலட் படங்களை காட்ட முடியுமா? சும்மா பகலிலையும் தலைக்குள் கிறுக்கு ஏறினால் கனவில் வருவதை எல்லாம் எழுத முடியாது.

அதேநேரம்: இலங்கை வேண்டுமென்றே வேட்டுக்கள் தீர்க்க படா வலயங்களை ஸ்தாபித்தது. இவற்றில் தமிழரை போக வைத்து சிறிய ஆயுத செலவுடன் தாக்கவே. இதே போலவே சர்வதேச நியமங்களுக்கு அமைய கொடுக்கப்பட்ட வைத்திய சாலை ஆள்கூறுகளையும் இலங்கை கனரக ஆயுதங்களால் தாக்க பயன் படுத்தியது. - ஐ.நா உள்ளக விசாரணை(அதை இன்னும் அர்ச்சுன் படிக்காமல் சும்மா வாய் அடிக்கிறார்)

தம்பி இசை ,ஆமி வாறான் எண்டு நீங்கள் எல்லாம் நாட்டைவிட்டு ஓடினது அந்த காலம் புலி வருகுது என்று சனமெல்லாம் நாலா பக்கமும் ஓடினது இந்த காலம் .

மல்லைக்கு ஒரு சாட்டிலைட் வாங்கி அனுப்புகின்றேன் இனிமேல் இப்படி நடந்தால் லவ் இல பார்காலாம் .

உது வெங்காயம் தெரியாதவனுக்கு ...........
:lol:  :lol:
30 வருடம் இல்ங்கையை விட்டு வெளிக்கிட்டு விட்டு யாரோ சொன்னதை கேட்டு சொல்லும் நீங்களும் நாங்கள் நேரடி சாட்சியாக இருந்ததும் ஒன்றாகுமோ. நிங்கள் இட்டுக்கட்டுவது வெளிப்படியானது. ஒரே காரணம் இராணுவம் தமிழர்களை எவ்வளவு வெறுத்ததோ அதே அளவுக்கு ஒட்டுக்குழு  தமிழ் மக்களை வெறுத்தது.தமிழ் மக்கள் எவ்வளவு வெறுத்தார்கள் என்று சொல்லித்தெரிய வேண்டியதில்லை. இது தான் உண்மை நிலை.

மல்லைக்கு ஒரு சாட்டிலைட் வாங்கி அனுப்புகின்றேன் இனிமேல் இப்படி நடந்தால் லவ் இல பார்காலாம் .

எனக்கு தெரியும் தானே அர்ச்சுன் என்ன பதில் எழுதுவார். என்று.

சும்மா பகிடி சேட்டைக்குதான் சட்டலட் கேட்டான்.  அதையும் கூட உண்மை என்று நினைத்து போய் பணத்தை கொட்டி சட்டலைட் வாங்கிவிடாதீர்கள். <_< அரசர் கூட்டம் "சுப்ப சட்"டை லீசு எடுக்க போயே கந்ததறுந்து போவிட்டது. :(

:lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி இசை ,ஆமி வாறான் எண்டு நீங்கள் எல்லாம் நாட்டைவிட்டு ஓடினது அந்த காலம் புலி வருகுது என்று சனமெல்லாம் நாலா பக்கமும் ஓடினது இந்த காலம் .

மல்லைக்கு ஒரு சாட்டிலைட் வாங்கி அனுப்புகின்றேன் இனிமேல் இப்படி நடந்தால் லவ் இல பார்காலாம் .

அட... உங்கபாற்ரா... அர்ஜூன் சொல்லுறதை.. :D 

ஆமி எல்லாம்... அண்ணைக்கு ஃபிரண்டுகளாம் :lol: 

பூனைக்குட்டி... மெல்ல வெளியே வந்து விட்டது. :icon_idea::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி இசை ,ஆமி வாறான் எண்டு நீங்கள் எல்லாம் நாட்டைவிட்டு ஓடினது அந்த காலம் புலி வருகுது என்று சனமெல்லாம் நாலா பக்கமும் ஓடினது இந்த காலம் .

மல்லைக்கு ஒரு சாட்டிலைட் வாங்கி அனுப்புகின்றேன் இனிமேல் இப்படி நடந்தால் லவ் இல பார்காலாம் .

அர்ஜுன் அண்ணா..

நான் நாட்டைவிட்டு ஓடாமல் இயக்கத்தில் சேர்ந்திருந்தால் அதுக்கும் புறணி பாடியிருப்பீங்கள்.. சிறுவர் போராளிகளைச் சேர்க்கிறாங்கள் எண்டு.. :D

சூரியக்கதிர் நடவடிக்கையின்போது இருந்த சில ஆயிரம் போராளிகள் எப்படி ஆமியையும் சமாளிச்சு அதேநேரம் லட்சக்கணக்கான மக்களையும் மந்தைகள் மாதிரி ஓட்டிக் கொண்டு போனார்கள் என்கிற விடயத்தை யாராவது புத்தகமாக எழுதிப் போட்டிருக்கிறார்களா?? :unsure: வருங்கால சர்வாதிகாரிகளுக்கு உதவும்... :D

  • கருத்துக்கள உறவுகள்

தன்னுடைய கொ(ல்)ள்கைகளை யார் எழுதுகிறார்களோ அதை தான் அண்ணை வாசிப்பார். இங்கு வந்து புழுகுவார். உண்மை நிலையை யதார்த்தமாக சிந்திக்கவே மாட்டார்.அத்தோடு ஏனையோரை மட்டம் தட்டுவதிலும் அண்ணைக்கு நிகர் அண்ணை தான்.

Edited by nunavilan

இதை  இப்படி  பார்த்தால் என்ன  நுணா?

தன்னை வளர்க்க

தன்னையும்  மற்றவர் கவனிக்க  தேவையான உக்தி  மட்டுமே இது

இதில் தாய் மண் என்ன?  சொந்த தாய் அகப்பட்டாலும்  வெறி  அடங்காது :(

மாண்புமிகு அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசெப் அடிகளாரைப்பற்றி   இங்கு எழுதுவதானால்  நீண்டுகொண்டே போகும் ...............

உண்மையில் அவரின் கீழ் நான் உருவாகியவன் என்பதனால் பெருமையடைகிறேன் ................அன்று எமது  பாடசாலை அதிபராக எம்மை அவர் வழி நடாத்திய விதமும் பாதையும் ...................இன்று என்னை ஓர் மனுசனாக இந்த உலகில் வாழ பேருதவியாய் வழி வகுத்துக்கொண்டிருக்குது ...........................

உண்மையில் இறைவனின் தூதராக , உண்மைக்காக ,அன்புக்காக மரித்த ஏசுபிரானின் வாழ்க்கை முறையை அப்படியே வாழ்ந்து காட்டிய ஓர் புனிதர் ....................அன்று எமக்கு வாழ்க்கை ,பொறுப்புணர்வு, கடமை .இவற்றை போதித்தாது மட்டுமல்ல வாழ்ந்தும்க காட்டியவர் ......................இவர் ஆசீர்வாதம் என்றும் என்னுடன் இருப்பதாக.

Elilans-wife-vikatan-668-150.jpg

புலிகளின் மூத்த தலைவர்களான புதுவை இரத்தினதுரை, பாலகுமார், பேபி எனப்படும் இளங்குமரன், யோகரத்தினம் எனப்படும் யோகி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்களோடு பிரான்சிஸ் ஜோசப் என்ற அடிகளாரும் அங்கேதான் இருந்தார்.

பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் உண்மையிலேயே ஒரு தியாகியைப் போல வன்னி மக்களுக்காக வாழ்ந்தார். எமது பிள்ளைகளின் கல்வியறிவுக்கு அவர் ஆற்றிய தொண்டு அளவிட முடியாதது.

தோல்வியைத் தழுவுகிறோம் என்று தெரிந்தபோது புலிகள் அவரைப் பத்திரமாக படகில் அனுப்பி வைக்க முடிவெடுத்த போதுகூட, மக்களை விட்டு விலகிச் செல்ல மறுத்து, பிடிவாதமாக மக்களோடு நின்றார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.