Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இது யார் தப்பு??

Featured Replies

இது யார் தப்பு??

untitled1rm1.png

சிட்னி முருகன் கோவில்!

எம்மில் பலருக்கு வாழ்வோடு ஒன்றின போன ஒரு விடயம்.

பலருக்கு இது ஒரு ஒன்றுகூடி பேசுமிடம்.

பலருக்கு இது வாங்கிய புடவையையும், நகைகளையும் போட்டு மினுக்குமிடம்.

சிலருக்கு இது வியாபார ஸ்தாபனம்.

சிலருக்கு இது வருங்கால துணையை கண்டுபிடித்த இடம்.

நூற்றில் ஒருவருக்கு இது இறைவனை துதிக்கும் இடம்.

அந்த நூற்றில் ஒருவரின் கதை...ஒருத்தியின் கதை.

இன்றிலிருந்து 30 வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் குடியேறிய மாணிக்கம், சகுந்தலா தம்பதியினரின் ஒரே மகள் சரண்யாவின் வாழ்க்கை கதை.

2002 ஆம் ஆண்டு சிட்னி முருகன் வருடாந்த தேர்த்திருவிழா.

புலம்பெயர்ந்து அவுஸ்திரேலிய வந்த தமிழர்களுக்கு முதன் முதலில் ஒரு முழுமையான தேர்திருவிழாவை கண்டு தரிசிக்கும் பாக்கியத்தை குடுத்தது என்னமோ சிட்னி முருகன் தான்.

பாடசாலை, வேலை, பல்கலைக்கழகம் என எது இருப்பினும் அன்றைய தினம் சிட்னியில் உள்ள ஈழ தமிழர்கள் பலரை ஆலயத்தில் காணலாம்.

அப்படி தவறாமல் தேர்திருவிழாவுக்கு வரும் குடும்பங்களில் ஒன்று மாணிக்கம் குடும்பம்.

சரண்யா. இரண்டு வயதில் அவுஸ்திரேலியாவுக்கு வந்த பெண்ணா? என காணும் அனைவரையும் ஆச்சர்யத்திற்குள் ஆளாக்குபவள். சிட்னி பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் இறுதி ஆண்டு மாணவி. அமைதி, அடக்கமான அழகு.

கோவிலுக்கு அம்மாவுடம் வந்து, அம்மாவுடனே இருந்து, அம்மாவுடனே வீடு திரும்பும் நூறில் ஒரு பிள்ளை. நம்ப கொஞ்சம் கடினம் தான்!

அப்படி ஒரு பெண்ணின் வாழ்க்கையிலா சனிபகவான் வர வேண்டும்? என்ன செய்ய வந்திட்டானே !

சரண்யாவின் அமைதியோ, அடக்கமானோ அழகோ ஏதோ ஒன்று இந்திரனை கவர்ந்திழுக்க...இதோ சனியின் திருவிளையாடல் ஆரம்பமாகின்றது.

நண்பர்கள் மூலம் சில செய்திகள். அவர்களிடம் பெற்று கொண்ட அவளின் மின்னஞ்சல் விலாசம்.

இங்கு இந்திரனை பற்றி சொல்லாவிடில் எப்படி? உருவத்தில் என்னமோ பெரும் அழகன் தான். பணத்தில் புரள்வதும் ஏனோ உண்மைதான். இது மட்டும் போதுமா வாழ்க்கைக்கு?

அவள் விதியா? அல்லது விதியின் சதியா? சரண்யாவும் காதல் எனும் ..... எப்படி சொல்ல?ம்ம்ம் சரி காதலில் விழுந்துவிட்டாள் என்றே வைத்துக்கொள்வோம்.

காதலும் வளர்ந்து, துளிர்விட்டு, மொட்டு விட்டு பூ பூக்கும் வேளை... அப்படியே நல்ல முடிவாக இருந்திருக்க கூடாதா?

சரண்யவின் பெற்றோர்களுக்கு இவர்களின் காதல் தெரியவர, "அவனா??" "படிக்காதவன்" "கீழ் சாதி" ... பல காரணங்கள் இறுதியில் ஜெயித்தது என்னமோ சரண்யா தான்.

படிப்பு முடிந்த பின்னர் திருமணம் என முடிவாகி ஒரு கிழமையில் இந்திரனை சிட்னி காவல்துறையினர் அழைத்து சென்றதாக தகவல் சரண்யாவின் வாழ்க்கையை முதன் முதலாக ஆட வைத்தது.

தீர விசாரித்ததில் இந்திரன் ஒன்றும் குடியுரிமை பிரச்சனையில் சிறைக்கு போகவில்லை. கெட்ட நண்பர்களின் சகவாசம். குடி, கொள்ளை என அவன் வழி.

"காதலும், கத்தரிக்காயும்... நீ தேர்ந்தெடுத்த வாழ்வு முடிந்தாகிவிட்டது. இனிமேல் எங்கள் சொல் கேள் இல்லையேல் நானும் உன் அம்மாவும் மருந்து குடித்து சாவோம்" மாணிக்கம் உறுதியுடன் கூறியது இல்லாமல் செயலிலும் காண்பித்தார்.

கொன்கோர்ட் [Concord] மருத்துவமனையில் வைத்து சரண்யாவின் வாழ்க்கை இரண்டாம் தரமாக பந்தாடப்பட்டது. இந்தியாவில் இருக்கும் தூரத்து சொந்தகாரனுக்கும் சரண்யாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

சரண்யாவுக்கு இறுதி ஆண்டு பரீட்சையை கூட செய்யவிடாமல் மாணிக்கம் குடும்பம் இந்தியாவிற்கு பயணமானது.

ஒஸ்திரேலியாவில் 23 வருடங்கள் வாழ்ந்த குடும்பமாகிற்றேன். பணத்திற்கா பஞ்சம். திருமணம் மிகவும் ஆடம்பரமாக நடைபெற்றது.

வந்தவரின் பெயர் லோகன். கதாநாயகன் இவரா என கேட்கின்றீர்களா? போக போக பாருங்களேன்!

இந்திரன் பற்றி லோகனுக்கு தெரியும் என பெற்றோர் கூறவே சரண்யாவும் நடப்பது நடக்கட்டும் என தாலிகட்டியவனுடன் ஒஸ்ரேலியா திரும்பினாள்.

படிக்கும் படிப்பா? அல்ல இறைவன் குடுத்த கொடையோ? ஏதோ ஒன்று சரண்யாவை மிகவும் பொறுமையாக இருக்கும் பெண்ணாக மற்றியிருந்தது.

இதோ 2003ஆம் தேர் திருவிழா. லோகன், சரண்யா புதுமண தம்பதியாக முருகனை தரிசிக்க. நிறைமதியாக சரண்யா...தொடருமா?

வந்த ஆறு மாதங்களுக்கு மாப்பிள்ளைக்கு ஆலவட்டம் பிடித்த சகுந்தலாவின் பொறுமை பின்னர் மெல்ல விலக தொடங்கியது.

மாப்பிள்ளை வேலையில்லாமல் வீட்டில் இருக்க ஆசைப்பட்டது தான் காரணமாயிற்று.

மாப்பிள்ளை, மாமியார் சண்டை இறுதியில் பொண்டாட்டி புருசனுக்குள் புகுந்து சூடுபிடிக்க தொடங்கியது.

எதற்கெடுத்தாலும் மனையிவை சந்தேகப்படுவதும், குத்தி குத்தி பேசுவதுமே லோகனின் அன்றாட வேலையாக இருந்தது.

காரணம் புலத்தில் இருக்கும் பெண்கள் அடங்காபிடாரிகளாம், ஆண்களுடன் ஊர் சுற்றுபவர்களாம், ஆண் நண்பர்களை அடிக்கடி மாற்றுபவர்களாம்.

லோகனுக்கு யாரோ நன்றாக சூடம் ஏற்றியிருக்கின்றார்கள் போல.

இதற்கிடையில் அடுத்த தேர் திருவிழா 2004. மனதில் பாரத்துடன் சரண்யா முருகனை காண சென்றாள்.

"எவனை பார்க்க இத்தனை அலங்காரம்?" தாலிகட்டியவன் கேட்டது சரண்யாவை சிறிது சிறிதாக கொல்ல ஆரம்பித்திருந்தது.

இது போதாது என இந்திரன் வேறு, சரண்யாவை சந்தித்து தேவையில்லாதமல் அவளுக்கு தலையிடியை குடுக்க ஆரம்பத்திருந்தான்.

இன்னமும் இவன் திருந்தவேயில்லையே என கவலைபடத்தான் சரண்யாவால் முடிந்தது.

இந்திரனின் தொல்லை தாங்காமல் ஒருநாள் சரண்யா சற்றே கோவத்துடன் பேசிவிட, ஒன்றும் பேசாமல் போனவன்..அப்படியே போயிருக்க கோடாதா?

வீடு திரும்பியவளுக்கு சிட்னியில் நில அதிர்ச்சி வந்தது போல் ஒரு பிரம்மை.

ஆரம்பத்தில் சரண்யா இந்திரனுக்கு அளித்த பரிசுகள், கடிதங்கள், படங்கள்..... வீட்டில் லோகனின் ருத்திர தாண்டவம் குடும்பத்தில் ஒரு பெரும் பிரளயத்தையே கொண்டு வந்தது.

"கல்யாணத்திற்கு முதலே உங்களுக்கு இந்திரனை பற்றி சொல்லியிரு..." என சரண்யா முடிக்க முதல்,

"சொல்லவில்லை" என மாணிக்கத்தின் மனைவி முடித்தார்.

"அம்மா..." என அதிர்ச்சியாக கத்திய சரண்யா வாழ்வில் அதன் பின்னர் என்ன நடந்திருக்கும்..

விவாகரத்து எடுப்பதற்கான வேலைகளை லோகன் துரிதமாக செய்வதிலயே ஆர்வம் காட்டினான். இந்த திரிதம் ஏன் என பின்னர் பாருங்களேன்..

எத்தனையோ பேர் சமாதனம், தூது என போயும் எதுவும் லோகனை மாற்றுவதாக இல்லை.

இப்பொழுது நடந்தது போல் இருக்கின்றது, வருடம் ஒன்று ஓடி முருகனின் அடுத்த தேர் திருவிழா 2005.

"என்ன பாவம் செய்தேன்?" என கேட்க முருகனை கேட்க சரண்யா சென்ற போது.

"பெட்டையில குறையில்லாமலா பெடியன் விவாகரத்து செய்தவன்?", "பெட்டை சரியான ஆட்டக்காரியாம்"

சனத்தின் குத்தல் கதைகள் தாங்காமல் உடனே வீடு திரும்பி விட்டாள். அப்படியே வீடு வந்திருந்தால் பிரச்சனை இல்லையே!

கண்ணீரும் கவலையுமாக வந்தவள் இடையில் வாகன விபத்தில் அகப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.

மருத்துவர் சொல்லி தான் மாணிக்கம் தம்பதியினருக்கு தங்கள் பெண் வயிற்றில் ஒரு சிசு 3 மாதமாக இருந்ததும். விபத்தில் அழிந்ததும் தெரிய வந்தது.

தன் உயிரில் உருவான உயிர் போனது தெரியாமல் காயங்களுடன் கட்டிலில் மயக்கத்தில் இருந்த மகளை பார்த்த மாணிக்கம்,

"பிழைவிட்டிட்டம் அம்மா..என்ட பிள்ளையின்ட வாழ்க்கையை நானே அழித்துவிட்டேனே"

கல்யாணத்திற்கு முன்னர் இந்திரனை பற்றி சொல்ல வேண்டாம் என மறைத்ததில் பெரும் பங்கு மாணிக்கத்தையே சேரும்.

"வெளிநாட்டில படிச்ச திமிர். எங்கட பழக்க வழக்கங்களுக்கு இது சரிவராது. ஒருவனை காதலித்த பெண் என்றால் மரியாதை இருக்குமா?" என அன்று மனைவியை அடக்கியவர் இன்று கதறுவதை பார்க்க.....முருகா உனக்கு கேட்கவில்லையா? உன் மனம் வலிக்கவில்லையா?

நாட்கள் வேகமாக நகர, இலங்கையில் இருந்து இந்திரனுக்கு அவன் மச்சாளும், லோகனுக்கு அவன் மச்சாளும் மனைவிகளாக வந்து சேர்ந்தனர்.

பாவப்பட்ட மச்சாள்மார்!

இதோ 2006 ஆம் ஆண்டின் சிட்னி முருகன் தேர் திருவிழா. வழமை போல் தாயுடன் கோவில்லு வந்திருந்தாள் சரண்யா. சனத்திற்கு சரண்யாவை மறந்து பல மாதங்கள் ஆகியிருந்தன.

சனத்திற்கு இப்பொழுது சரண்யாவை பற்றி பேச வேண்டிய அவசியம் இல்லை. அவர்களுக்கு தான் இன்னொரு சரண்யா கிடைத்திருப்பாளே அரைபட.

முருகன் உள்வீதி சுற்றும் நேரம். முருகனை தூக்குபவர்களில் முன்னுக்கு ஒரு பக்கம் லோகன், ஒன்னொரு பக்கம் இந்திரன்.

முருகா இனிமேல் நீ உருப்பட்ட மாதிரி தான்!

சரண்யாவுக்கு அவர்களை பார்க்கும் போது ஏனோ சோகம் வரவில்லை. வறண்ட சிரிப்பு ஒன்று உதடோடு தோன்றி மறந்தது.

பெண்கள் பக்கம் வந்த இந்திரன், சரண்யா நின்ற இடத்தை கடக்கும் போது தற்செயலாக அவளை கண்டான்.

சரண்யா ஒரு வேளை அவனை நான்கு கேள்வி காரசாரமாக கேட்டிருந்தால் இந்திரனுக்கு நன்றாக இருந்திருக்கும் போல.

பிரச்சனை வந்ததில் இருந்து எத்தனையோ தடவை இந்திரனுடன் கதைக்கும் சந்தர்ப்பம் வந்த போதெல்லாம் அமைதியாக ஒரு புன்னகையை உதிர்த்து நகர்ந்து விடுவாள்.

இன்றும் அதே புன்னகை...வறண்ட புன்னகை...கோபமா? ஏமாற்றமா? எது சரண்யாவின் புன்னகையில் இருக்கின்றது?

தேர்திருவிழா இனிதே முடிந்து பக்தர்கள் அவரவர் வீடுகளுக்கு செல்ல ஆரம்பித்திருந்த நேரம்.

மாணிக்கம் குடும்பமும் முருகன் தரிசனம் பெற்று வாசலுக்கு வரும் பொழுது சிட்னி சற்குணம் மாமாவின் குரல் கேட்டது.

யார் என்ன தப்பு செய்தாலும் எப்படியோ சற்குணம் மாமாவுக்கு தெரிய வந்துவிடும். தப்பு செய்தவரை கண்டால் மாமாவின் குரல் ஓங்கி ஒலிக்கும்.

இன்று யார் மாட்டுப்பட்டார்களோ? என பார்க்க திரும்பிய சரண்யாவின் கண்களில் விழுந்தது லோகன் தம்பதியினர்.

"எடி பிள்ளை நீ தானே லோகன்ட பெண்சாதி. எங்களுக்கு ஒரு சொல் சொல்லலை பார் உங்கட கல்யாணத்திற்கு அது சரி... டேய் தம்பி அந்த பிள்ளையிட்ட சிட்டிசன் சிப் எடுத்து போட்டு, இப்ப இவளகட்டிக்கொண்டு வந்திருக்கிறாய். வெக்கமில்லையோடா தம்பி உனக்கு? சாரத்தை உறிஞ்சு போட்டு இப்பிடி கோவிலுக்கு வந்திருக்கிறாய்?"

சனத்திற்கு மத்தியில் சற்குணம் மாமாவுக்கு என்ன பதில் சொலது என தெரியாமல் லோகன் முழிக்க, அவன் மனைவி அவனை முறைக்க....அவர்களை கடந்த சரண்யாவின் முகத்தில் மீண்டும் சிரிப்பு...

வீடு சென்று சேரவும், தொலை பேசி மணி ஒலிக்கவும் சரியாக இருந்தது. மருத்துவமனையில் இருந்து சரண்யாவுடன் வேலை செய்யும் ஒரு மருத்துவர். தன்னுடைய இரவு பணியை பார்த்துக்கொள்ள முடியுமா என கேட்டார்.

"அம்மா இரவு வேலையிருக்கு...இப்பவே வெளிக்கிடுறன்" என கூறியபடி மகள் வெளிக்கிட

"இப்ப என்ன வேலை...வெளியில் போடு வந்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு பிள்ளை.."

"இங்கு இருந்தும் எனக்கு போரிங்கா தான் இருக்கும். எனக்கு என்ன குடும்பமா குட்டியா.....போய்ட்டுவாறன் அம்மா. அப்பா நான் வெளிக்கிடுறேன்..பாய்"

சரண்யா புறப்பட்டு சென்ற பின்னரும் அவள் சாதாரணமாக சொன்ன வார்த்தைகள் மாணிக்கம் தம்பதியினரை வாட்டியது.

"குடும்பமா? குட்டியா?"

இது யார் தப்பு? காதலித்த அவள் தப்பா? அவள் காதலை கட்டியவனிடம் மறைத்த பெற்றவர் தப்பா? மனைவி மேல் சந்தேகப்பட்ட லோகன் தப்பா? காதலி வாழ்வை கெடுத்த இந்திரன் தப்பா? யார் தப்பு?

தனிமையில் அவள் கண்ணீர் எழுதும் காவியங்களுக்கு யார் பதில் சொல்வார்கள்?

இது யார் தப்பு?

பதில் சொல் முருகா? உனக்கென்ன அடுத்த தேர் திருவிழாவுக்கு இப்பொழுதே ஆயத்தமாக தொடங்கியிருபாய்!

தூயா கதை புலம் பெயர் வாழ்வின் யாதார்த்தை திறம்பட எடுத்தியம்புகிறது. தொடருங்கள்....

  • தொடங்கியவர்

குளம்ஸ் மிக்க நன்றி...

வணக்கம் தூயா,

அழகில்லாத ஒரு விடயத்தை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

இது போல எத்தனை சோகக் கதைகள் இந்தப் புலம் பெயர் வாழ்விலே. :lol:

அன்புடன்

மணிவாசகன்

  • தொடங்கியவர்

வணக்கம் மணிவாசகன்,

உண்மை தான்..எத்தனையோ சோகங்கள்...அதை மறைத்து வாழ முயற்சிக்கும் மனிதர்கள்...

பதிவுக்கு மிக்க நன்றி

கதை நன்றாக இருக்கின்றது. புலம்பெயர்ந்த மக்களின் உண்மையான வாழ்க்கை நிலமையை எடுத்துக்கூறுகின்றது. கணவன் தப்புச் செய்தாலும் பெண்கள் மீதே பழியைப் போடும் எங்கள் சமுதாயத்தையும் சாடியிருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள் தூயா.

  • தொடங்கியவர்

நன்றி சுஜீந்தன் :lol:

இப்படியான பல பெற்றோர்களின் தவறால் பிள்ளைகளின் வாழ்கை பாழக்கப்பட்டு இருக்கின்றது. பிள்ளை காதல் என்று அறிந்தவுடன் ஒடோடி சென்று இலங்கையில் திருமணம் செய்து வைப்பார்கள். பின்னார் அந்த பிள்ளை இங்கு வந்தவுடன் பழைய நிலைக்கே திரும்பி பல ஆபத்தான விளைவுகளை எதிர் நோக்கின்றார்கள்.

நிஐமான சம்பவங்களை கதையாக தந்த தூயாவிற்று பாரட்டுக்கள்.

புலம்பெயர் வாழ்வில் நடக்கும் பிரச்சினைகளை அழகாகக் கதை மூலம் கூறியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  • தொடங்கியவர்

நன்றி ரமாக்கா & ரசிகை :lol:

  • கருத்துக்கள உறவுகள்

புலத்தில் எத்தனையோ சோகக் கதைகள்.சோகக்கதையினை தனது எழுத்துத் திறமையினால் அழகாகச் சொல்லியிருக்கிறார் தூயா. உண்மைச் சம்பவமா?

  • தொடங்கியவர்

அங்கும் இங்கும் கேட்டவை..கற்பனையில் தோன்றியவை..ஆனால் நிஜம் இரண்டிலும் இருக்கு..இல்லையா?

நன்றி கந்தப்பு :lol:

கதைப் பொருள் நிஜமானாலும்... :P ஒரு சிறுகதைக்கே உரிய வசன அமைப்புகளுடன் சிறப்பாக எழுதியுள்ளீர்கள். ஒரு கதையை எப்படி ஆரம்பிக்க வேண்டும், எவ்வாறு நிறைவு செய்யவேண்டும் என்பதனை சரியாக செய்துள்ளீர்கள். தொடர்ந்து தங்களிடமிருந்து பல கதைகளை எதிர்பார்க்கிறேன். வாழ்த்துக்கள்!

பாராட்டுக்கள் தூயா உங்கள் கதைக்கு :P

பாவம் கதையில் வரும் சரண்யா :D

ÒÄõ¦ÀÂ÷ó§¾Àâý ¯ñ¨Á ¸¨¾¨Â ¯½÷â÷ÅÁ¡¸ ¦º¡øÄ¢Â¢Õ츢ȣ÷¸û à¡... Å¡úòÐì¸û...

±ôÀÊô À¡÷ò¾¡Öõ ¦Àñ¸û ¿ÁÐ ¸Ä¡îº¡Ãò¾¢É¡ø ÀÄ þ¼í¸Ç¢ø ´Îì¸ôÀðÎ ¾¨ÄÌÉ¢¨Å §¿¡ìÌÅÐ ¯ñ¨Á...«Å÷¸Ç¢ý ¦Àü§È¡÷ ¦ºöÔõ º¢Ä ¾ÅÚ¸¨ÇÅ¢¼

þôÀÊÂ¡É ¬ñ¸Ç¡ø ¾¡ý À¢ÃÉ..þÐ ¦Åð¸ì§¸¼¡É Å¢…Âõ..

«ñ¨Á¢ø ܼ þÄí¨¸ ¦ºýÚ ²Á¡üÈ¢ À½õ¦À¡ÕÙ¼ý ¸Ä¢Â¡½õ¦ºöÐ «ÛÀÅ¢òÐõ Å¢ðÎ þí¨¸ ÅóÐ ÜôÀ¢¼ÓÊ¡Р±ýÚ ¾¸Ã¡Ú ¦ºöÐõ..¿õÀ¢ Åó¾Å¨Ç Å£ð¼¡ø ÐÃò¾¢Â ¦ºö¾¢¸¨ÇÔõ «È¢óÐ «¾¢÷Ôü§Èý... þôÀÊÔõ ¿ÁÐ ¬ñ¸û þÕ츢ȡ÷¸Ç¡ ±ýÚ...¬É¡ø ÀÄ÷ ¿ÊôÀ¢ø º¢Å¡ƒ¢¨Â ¦ÅýÈÅ÷¸û..¦ÅÇ¢¿¡ðÎì¸É×¼ý ¸øÂ¡½õ ÀñÏõ ¿õ ¦Àñ¸û «ôÀ¡Å¢¸û..

þôÀÊ ´ýÈøÄ..¿ñÀ÷¸Ç¢ý ¦¿Õí¸¢Â ¯È׸û §¿ÃÊ¡¸ À¡¾¢ì¸ôÀðÊÕ츢ȡ÷¸û...

±ÁÐ ºã¸õ ¾¢ÕóÐÁ¡???

  • தொடங்கியவர்

திருந்தினாப் போல தான்...

நன்றி யூ,கே.பெடியன்... & தாரணி

இது கதையா நிஜமா? :shock:

எதுவா இருந்தாலும் - கதை தேடி அலையுற - சினிமா உலகம் - இதை படமா - எடுத்தா - தேசியவிருது - நிச்சயம்! -

ஒரு சோகத்தை - பதிவாக்கினமாதிரியும் - இருக்கும்!8)

சரண்யா - நிதானமாய் - தன் கடந்தகாலங்களை -புரிந்துகொள்ளக்கூடிய ஒருவரை....

இதேபோல் - பாதிக்கப்பட்ட ஒரு ஆணை ..........

துணையா தேர்ந்தெடுத்தே ஆகணும் - !

மத்தும்படி - தப்பு யார்மேலயா?

நிச்சயமாய் சரண்யாமேல இல்ல!

நம்பினவன் ஏமாத்திட்டான்.......

ஏமாத்துறவனை - பெற்றோர்க்காக - ஏற்றுக்கொண்டுட்டாள்!

ஸோ அவ ஏமாற்றப்பட்டது - ஆண்களாலமட்டுமில்ல....

பெற்றோர்களினாலும்தான்! 8)

sob . . . sob . . . sob . . .

சனியன் அழுதாம் . . .

எனி வே . .

தூயா . .

உங்கட கதையை பார்த்தா...

உங்கட வீட்டில உள்ள நாட்டு பூராயம் எல்லாம் கதைப்பினம் போல . .

கதை நல்லா இருக்கு . . .

ஆனா . .நிஜம் தான் கசக்குது...

தொடர்ந்து எழுதுங்கள் . . .

நன்றி. வணக்கம்.

மேற்கோள்:

உங்கட கதையை பார்த்தா...

உங்கட வீட்டில உள்ள நாட்டு பூராயம் எல்லாம் கதைப்பினம் போல . .

ஏன் சனியன் - அப்பிடி ஒரு கருத்து - எடுக்கிறீங்க?

இதே போல - பிரைச்சினை - எல்லாருக்கும் வராதா?

ஏதோ ஒரு - கோணத்தில்?

மத்தும்படி - நிறைய பேச விரும்பல -

நிறைய பேசாத ஒருவரோட......

அது நீங்கதான் ..!

3 வருசத்துல - 98 கருத்து மட்டுமே இங்க எழுதிய நீங்க - யாழ்கள - அதிசயம்!8)

தூயா கதை நல்லா இருக்கு தொடர்ந்தும் சரண்யா போன்றோரின் கதைகளைத் தாருங்கள் ....இவற்றை வாசித்துஒரு சிலராவது திருந்தக்கூடும்.

  • தொடங்கியவர்

இது கதையா நிஜமா? :shock:  

எதுவா இருந்தாலும் - கதை தேடி அலையுற - சினிமா உலகம் - இதை படமா - எடுத்தா - தேசியவிருது     - நிச்சயம்! -  

ஒரு சோகத்தை - பதிவாக்கினமாதிரியும் - இருக்கும்!8)  

சரண்யா - நிதானமாய் - தன் கடந்தகாலங்களை -புரிந்துகொள்ளக்கூடிய ஒருவரை....  

இதேபோல் - பாதிக்கப்பட்ட ஒரு ஆணை ..........

துணையா தேர்ந்தெடுத்தே ஆகணும் - !

மத்தும்படி - தப்பு யார்மேலயா?

நிச்சயமாய் சரண்யாமேல இல்ல!

நம்பினவன் ஏமாத்திட்டான்.......

ஏமாத்துறவனை - பெற்றோர்க்காக - ஏற்றுக்கொண்டுட்டாள்!

ஸோ அவ ஏமாற்றப்பட்டது - ஆண்களாலமட்டுமில்ல....

பெற்றோர்களினாலும்தான்! 8)

யாழில் நடக்கும் பட்டிமன்றத்திற்கு ஒரு பக்கத்தாருக்கு இது சாதகமான கதை இல்லையா? ;)

ம்ம் இப்படி எத்தனையோ கதைகள்..நிஜ கதைகள்...

படம் நானே இயக்குவேன் நீங்கள் தயாரிப்பாளராக சரி என்றால் ;)

  • தொடங்கியவர்

sob . . . sob . . . sob . . .

சனியன் அழுதாம் . . .

எனி வே . .  

தூயா . .

உங்கட கதையை பார்த்தா...

உங்கட வீட்டில உள்ள நாட்டு பூராயம் எல்லாம் கதைப்பினம் போல . .  

கதை நல்லா இருக்கு . . .

ஆனா . .நிஜம் தான் கசக்குது...

தொடர்ந்து எழுதுங்கள் . . .

நன்றி. வணக்கம்.

அழாதிங்க சனியன்....

பதிலுக்கு மிக்க நன்றி :P

  • தொடங்கியவர்

தூயா கதை நல்லா இருக்கு தொடர்ந்தும் சரண்யா போன்றோரின் கதைகளைத் தாருங்கள் ....இவற்றை வாசித்துஒரு சிலராவது திருந்தக்கூடும்.

ம்ம்ம் திருந்துவார்களா????

நன்றி சிநேகிதி :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தூயா கதை நன்றாக இருக்கிறது. புலத்தில் நடப்பவற்றை மிகவும் அழகாக எழுதியிருக்கிறீர்கள்.

ரமாக்கா கூறியது போல் புலம்பெயர்ந்து வாழும் பெற்றோர் தம் பிள்ளைகளிற்கு உதவுவதாக எண்ணி அவர்களின் வாழ்வினையும் பல தடவைகள் சிதைக்கிறார்கள். சிறுவயதில் இருந்து புலம்பெயர்ந்து வேற்று நாட்டு கலாச்சாரங்களுடன் ஒத்திசைந்து வாழும் பிள்ளைகளிற்கு தாயகத்தில் இருந்து துணைவர்களை வரவழைக்கிறார்கள். அவர்களிற்கும் இவர்களிற்கும் பழக்கவழக்கங்களில் சில வேற்றுமைகள் நிச்சயம் காணப்படும். இது அவர்களின் வாழ்விலும் ஓர் இடையூறாகக் காணப்படும். இதற்கு பெற்றோர் உண்மை நிலையைக் கண்டறிந்து பிரச்சினைகளைத் தீர்க்க முயலவேண்டும். இதற்கு தாயகத்தில் இருந்தோ அல்லது தமது உறவினர்களிடையே இருந்து ஓர் துணையை ஏற்படுத்துவது சிறந்த தீர்வாக அமையாது :roll:

²ý þ墨 þÕì¸¢È ±øÄ¡ô À¡ì¸¢Š¾¡É¢Ôõ ¯¨¾ò¾¡ý ¦ºö¢ȡí¸û..Å÷½¢ì¸ ÓÊ¡РÀ¡ì. ¦Àñ¸û ÀÎõÀ¡ð¨¼ ..¦Åû¨Ç측Ãý ²¦ÉñÎ §¸ð¼¡ ƒ¢¸¡ò ÐìÌ Å¡í§¸¡ ±ñÎÈ¡í¸û À¢§Èõ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.