Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)

Featured Replies

அப்படி கதைக்கிரவங்களை கண்டால் வெளிப்படையாய்யே கேலுங்கோ சகோதரி...புலத்தில இருக்கிர ஆக்கள் உசுப்பி விட்டா 1983றீல் இருந்து மே18 வரை 40000 ஆயிரத்துக்கு மேல் பட்ட போராளிகள் வீரச்சாவு அடைந்தார்கள் என்று.....உப்படி கதைக்கிறவங்கள் தமிழனாகவே இருக்கிறதுக்கு தகுதி இல்லாதவங்கள்.........

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=118877&p=874028 :D

 

  • Replies 1.3k
  • Views 119.7k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • தமிழரசு
    தமிழரசு

    Indian Students Supporting TN Students protest for Tamil EELAM   Eventhough Indian govt and Indian media trying to supress the feelings of Tamil people and Srilankan Genocide , Indian stu

  • தமிழரசு
    தமிழரசு

    இதே எழுற்சி வன்னியில் முள்ளிவாக்காலில் மிகமோசமான யுத்தம் நடைபெற்ற வேளையில் இருந்திருக்குமேயானால் இவ்வளவு இழப்புகள் ஏற்பட்டிருக்காது 

  • வீரப் பையன்26
    வீரப் பையன்26

    நன்றி தோழர்களே , இடை விடாது தொடர்ந்து அக்கல்லூரி முதல்வரை கண்டித்ததில் அவர் தற்போது ரத்தகொதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . மேலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்ததால் ம

  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா ... அவர் இப்ப கொஞ்ச நாளுக்கு முதல் தான் யாழில் அறிமுகம் ஆகி இருக்கிறார்....வந்த உடனையே வெட்டிக் கதை கதைக்க‌ ஆரம்பிச்சிட்டார் போல... 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

      தமிழக மாணவர் எழுச்சி- தேசியத்தலைவர்

 

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(from Facebook)
 
S.p. Udayakumar
இடிந்தகரைக் கடிதம்-1

இடிந்தகரை

மார்ச் 16, 2013

அன்பார்ந்த தமிழக மாணவ, மாணவியர்க்கு:

வணக்கம். தமிழகம் முழுக்க தமிழின விடுதலை உணர்வும், உரிமை வேட்கையும் கொண்ட நம் மாணவ, மாணவியர் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேரணி என்று பல்வேறுப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பது மனதுக்கு மிகுந்த ஆறுதல் அளிக்கிறது. அடிமைப்பட்டுப்போன இனம் கண் விழிக்கிறதே, காலூன்றி எழுகிறதே என்று மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஒரு மாபெரும் வரலாற்றுக் கடமையை நமது மாணவ மாணவியர் செய்துகொண்டிருக்கிறீர்கள். பொறுமையோடு, பொறுப்புணர்வோடு, அற்புதமாகப் பணியாற்றுகிறீர்கள். தமிழகம் முழுவதுமுள்ள பல்வேறு கல்லூரி மாணவர்களிடம் நான் பேசிவருகிறேன். அழகான தமிழில், அருமையானக் கருத்துக்களை, ஆணித்தரமாக எடுத்து வைக்கும் விதம், அர்ப்பணிப்பு, அரசியல் தெளிவு, அபாரமான துணிவு – உண்மையிலேயே ஒரு மிகப்பெரிய நம்பிக்கை துளிர் விடுகிறது மனதில்.

சாதி, மதம் எனும் ஆயுதங்கள் கொண்டு தாக்க வருவோரிடமும், அரசியல் பித்தலாட்டங்கள் நடத்தி உங்களை உபயோகிக்க வருவோரிடமும் கவனமாக இருங்கள். “கல்வி கெட்டுப் போகுமே, எதிர்காலம் இருண்டு போகுமே” என்று அங்கலாய்ப்பவர்களிடம் சொல்லுங்கள். எந்தக் கல்லூரியும், எந்தப் பேராசிரியரும் கற்றுத்தராத அறிவினை, கலைகளை, திறமைகளை இந்தப் போராட்டக்களம் கற்றுத்தருகிறது என்பதை. பேச்சுக்கலை, கேட்கும் திறன், அலசி ஆராயும் பக்குவம், கருத்துப் பரிமாற்றம் நடத்தும் முதிர்ச்சி, கூடிப்பேசி முடிவெடுக்கும் ஆக்கம், ஆளுமைத் திறன் என ஏராளமான விடயங்களை நீங்கள் படித்து அடுத்தத் தலைமுறை தலைவர்களாக உருமாறிக் கொண்டிருக்கிறீர்கள்.

பொதுவாக ‘சேவைக்குமுன் சுயம்’ (self before service) என்பதுதான் நமது கல்லூரிக் கல்வியின் அணுகுமுறை. ஆனால் இப்போது நீங்கள் கடைபிடிப்பது ‘சேவை வழி சுயம்’ (self through service). முதல் வழியில் கல்லூரிப் பேராசிரியர்கள் உங்களைத் தயாரிக்கிறார்கள்; இரண்டாவது வழியில் நீங்களே உங்களைத் தயாரிக்கிறீர்கள். லஞ்சம், ஊழல், சுயநலம், திறமையின்மை, முதுமை, கயமை என அழுகி நாறிக் கொண்டிருக்கும் இன்றையத் தலைவர்கள் மாற்றப்பட்டாகவேண்டும். குழந்தைக்கு அடிக்கடி டயாப்பர் (diaper) மாற்றுவது போல, ஒரு நாட்டுக்கும் அவ்வப்போது தலைமையை மாற்றியாக வேண்டும். மாற்றாமல் அப்படியே விட்டுவிட்டால், இரண்டுமே நாறிப் போகும், இரண்டுக்குமே நோய் வந்து விடும்.

தமிழினம் இன்று நோய்வாய்ப்பட்டிருக்கிறது. தமிழ்க்கடலுக்கு அந்தப் பக்கம் தமிழீழ மக்கள் சிங்களப் பேரினவாத வைரசால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். அது ஒன்றரை லட்சம் மக்களைக் கொன்று குவித்து, ஏராளமான குடும்பங்களை நிர்மூலமாக்கி, எண்ணற்ற தனி மனிதர்களை நாசமாக்கி நசுக்கி அழித்து, வளர்ச்சியைத் தடுத்து, அமைதியைக் கெடுத்து ஒரு கோர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. அந்த வைரசோடு சேர்ந்து வாழ முடியாது. தமிழ்க்கடலுக்கு அந்தப்பக்கம் தமிழீழம் மலர்ந்தேயாக வேண்டும்.

தமிழ்க் கடலுக்கு இந்தப் பக்கமோ, “உடன் பிறந்தே கொல்லும் வியாதி” நம்மைப் பிடித்தாட்டுகிறது. பகட்டாக ‘டாக்டர்’ என்று வருகிறவர்களெல்லாம் மோசமான மன நோயாளிகளாக இருக்கிறார்கள். தலைவர் என்று தம்மை முன்னிறுத்துபவர்கள் பெரும்பாலானோர் தகைமையற்ற கயவர்களாக, தரகர்களாக இருக்கின்றனர். நிறைய அரசியல்வாதிகள் அட்டகாசமாக நடிக்கிறார்கள், நிறைய நடிகர்கள் அப்பட்டமாக அரசியல் செய்கிறார்கள். இரண்டு கூட்டத்துக்குமேத் தேவை தமிழனின், தமிழச்சியின் பணம் மட்டும்தான்.

தமிழ்க் கடலுக்கு அந்தப்பக்கம் தமிழ் இளைஞர்கள் போராடி, ஒரு தற்காலிக பின்னடைவை சந்தித்து நிற்கிறார்கள். தந்தை செல்வா, பெரியவர் பொன்னம்பலம் போன்றோர் நடத்திய அறவழிப் போராட்டங்கள் அடித்து நொறுக்கப்பட்டபோது, நீதி தொடர்ந்து மறுக்கப்பட்டபோது மென்முறை வன்முறையிடம் தோற்றது. இளைஞர்கள் போராட்டத்தைப் போராக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்களிடமிருந்துப் பெற்ற உண்மையை, திமிரை, பொதுநலத்தை நமக்கே உரித்தான மென்முறைச் சிறப்புக்களுடன் சேர்த்து அவர்களுக்குக் கைகொடுக்க விழைந்து நிற்கிறோம் தமிழ்க் கடலின் இந்தப் பக்கம்.

அங்கேயும், இங்கேயும் ஏராளமான எதிரிகளும், துரோகிகளும் நம்மை எதிர்த்து நிற்கிறார்கள். அங்கே ராஜபக்ஷேயும், அவனது இராணுவமும், புத்த பிக்குகளும் மட்டும்தான். இங்கே எத்தனையோ பேர்! கதர் முசோலினிகளும், காவி ஹிட்லர்களும் தில்லியிலே நம்மை எதிர்க்கிறார்கள்; அவர்களின் தமிழக ஏஜெண்டுகள் அதை அப்படியே சிரமேற்கொண்டு நம்மை சிதைக்க வருகிறார்கள். “ஒருங்கிணைந்த கம்யூனிஸ்ட்கள்” என்று சி‌பி‌ஐ (CPI) தோழர்களோடுகூட கைகோர்க்க முடியாத கையாலாகாத மார்க்சிஸ்ட்களும், எஸ்.எஃப்.ஐ (SFI) அடிப்பொடிகளும் “ஒருங்கிணைந்த இலங்கை” என்று வாய் கிழியப் பேசுகிறார்கள். இரண்டு பஞ்சாப்கள் இருக்கலாமாம், இரண்டு வங்காளங்கள் இருக்கலாமாம்; ஆனால் இரண்டு தமிழகங்கள் இருக்கக் கூடாதாம்.

தமிழினத்தின் மீது தன்னை தலைவராகத் திணித்துக் கொண்ட ஒருவர், நாளொரு நாடகமும், பொழுதொருப் புளுகுமாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். நாமெல்லாம் இன்னும் ஏமாந்துகொண்டிருப்பதாக மனப்பால் வேறு குடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு பக்கவாத்தியங்கள் வாசிக்க ஒரு சுயநலவாதக் கூட்டம் படையெடுத்து நிற்கிறது. தமிழகத்தின் மீட்பராகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் இன்னொருவரோ தனது ஆட்சிதான் மீட்சி, நீங்களெல்லாம் வெறும் சாட்சி என்று காட்சி அளித்துக் கொண்டிருக்கிறார். மொத்தத்தில் தமிழ்க் கடலின் இரண்டு பக்கமும் ஒரு முழுப் புரட்சி நடந்தாக வேண்டும். அதை நடத்தும் நம்பிக்கை நட்சத்திரங்களாகத் தோன்றியிருக்கிறீர்கள் நீங்கள்.

தமிழ்க் கடலுக்கு அங்கே இனப்படுகொலை செய்த ராஜபக்சே, அவன் குடும்பத்தினர், சிங்கள இராணுவம், புத்த பிக்குகள், அவர்களின் பன்னாட்டுத் தோழர்கள் அனைவரும் சர்வதேச நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்படவேண்டும். பாஸ்னிய (Bosnia) முஸ்‌லீம்களை இனச்சுத்தம் (ethnic cleansing) என்ற பெயரில் 1995-ஆம் ஆண்டு கொன்றுகுவித்த செர்பியாவின் (Serbia) அதிபர் ஸ்லோபோடான் மிலோசவிச் (Slobodan Milosevic) இனப்படுகொலைக் குற்றத்துக்காக விசாரிக்கப்பட்டு, விசாரணை நடந்துகொண்டிருந்தபோதே 2006-ஆம் ஆண்டு சிறையில் இறந்தான். 

ருவாண்டா (Rwanda) நாட்டின் டுட்சி (Tutsi) இன மக்களை 1994-ஆம் ஆண்டு கொன்றொழித்த ஜான் பால் அகயேசு (Jean Paul Akayesu) எனும் கொடூர ஹுட்டு (Hutu) இன அரசியல்வாதி 1998-ஆம் ஆண்டு இனப்படுகொலைக் குற்றத்துக்காக விசாரிக்கப்பட்டு தற்போது மாலி நாட்டில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறான். ராஜபக்சே கூட்டத்தைக் கூண்டுக்கு அனுப்புவோம். சேனநாயக்க காலம் முதல் ஜெயவர்தனே காலம் வரை நீறுபூத்த நெருப்பாக இருந்து, பின்னர் சந்திரிகா காலம் வரை கொளுந்துவிட்டு எரிந்த தமிழீழக் கனவை ராஜபக்சே காட்டுத்தீயாகப் பரப்பிவிட்டான். உயிர் துறந்த மாவீரரும், மக்களும் தமிழீழத்துக்கான அடித்தளத்தை அமைத்துவிட்டார்; அதன்மீது நாம் கட்டியெழுப்பியாகவேண்டும்.

தமிழ்க் கடலுக்கு இங்கே தமிழர்கள் என்ற இன உணர்வை ஏற்படுத்தியாக வேண்டும். சாதாரணத் தமிழ் மக்களின் வாழ்வுரிமைகள், வாழ்வாதாரங்கள் பாதுகாக்கப்பட்டாக வேண்டும். வளர்ச்சி என்ற பெயரில் நம் மண்ணும், மலையும், நீரும், கடலும், காடும், காற்றும் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்தியாக வேண்டும். எங்கள் தலைமுறை 40 ஆண்டுகள் மின்சாரம் பெறுவதற்காக, உங்கள் குழந்தைகள் ஊனமுற்றவர்களாக, உடல்நலமில்லாதவர்களாகப் பிறக்கட்டும் என நினைக்கும் பேடித்தனத்தை கேள்விக்குள்ளாக்கியேத் தீரவேண்டும். கிட்டத்தட்ட 600 தமிழ் மீனவர்கள் சிங்களப் படையால் கொல்லப்பட்டப் பிறகும் சென்னை தில்லிக்கு கடிதம் எழுதுவது, தில்லி சொல்லி வைத்தாற்போல சும்மா இருப்பது எனும் நாடகத்தை முடித்தாக வேண்டும்.

சுயநலவாதிகள், பிழைப்புவாதிகள், சந்தர்ப்பவாதிகளை இனங்கண்டு புறந்தள்ள வேண்டும். லஞ்சம், ஊழல், திறமையின்மை முற்றிலும் அகற்றப்பட்டாக வேண்டும். பொதுவாழ்வுக்கு வருவோர் உண்மையும் தூய்மையும் ஒழுக்கமும் உடையோராய் இருக்க வேண்டும்; இல்லையேல் வேரோடு, வேரடி மண்ணோடுக் களையப்பட வேண்டும். அறவழியில், அறிவு வழியில் தொடருங்கள், தோழர்களே! அனைத்து உதவிகளும் செய்ய நம் மக்கள் அணியமாய் இருக்கிறார்கள். சீப்பை ஒளித்து வைப்பதால், திருமணங்கள் நின்று விடுவதில்லை. கல்லூரிகளை, விடுதிகளை மூடிவிடுவதால் புரட்சிகள் அழிந்து விடுவதில்லை.

தமிழகமெங்கும் தவமிருக்கும் உங்களை நானோ, நண்பர்கள் புஷ்பராயனோ, மை.பா. நன்மாறனோ, முகிலனோ, மில்டனோ, கெபிஸ்டனோ, எங்களை இயக்கும் சகோதரிகளோ வந்து சந்திக்க இயலாமைக்கு உளமாற வருந்துகிறோம். இடிந்தகரை ஊரைவிட்டு வெளியே வந்தால் கைது செய்யக் காத்திருக்கிறது தமிழகக் காவல்துறை. நேற்று (மார்ச் 15) எங்கள் போராட்டக்குழுவிலுள்ள கூடங்குளத்தைச் சார்ந்த தோழர் கணேசன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

எங்கள் உடல்கள் இங்கேயிருந்தாலும், உயிர்களும், உணர்வுகளும் உங்களைச் சுற்றியே வட்டமிட்டவண்ணம் இருக்கின்றன. சிறைப்பட்டிருக்கும் நாங்கள் முக்கியமல்ல; நமது இனம் விடுதலை அடைந்தாக வேண்டும். இனவிடுதலை என்பது இன்னொருவரிடம் யாசித்துப் பெறுவதல்ல; நாமே எடுத்துக் கொள்வது. புது வாழ்வு என்பது இன்னொருவர் நமக்குப் பிச்சைப் போடுவதல்ல; நாமே அமைத்துக் கொள்வது. வாருங்கள் தோழர்களே, வழி நடத்துங்கள்!

அன்புடன்,

சுப. உதயகுமாரன்

ஒருங்கிணைப்பாளர்

அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்

  • கருத்துக்கள உறவுகள்

86224668.jpg
 
ஆயிரத்திற்கு மேற்பட்ட மதுரை அனைத்து கல்லூரி மாணவர்கள் நடத்திய ஈழ ஆதரவு ஊர்வலம்

மதுரையில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்கள், சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இலங்கை அரசின் போர்க் குற்றத்திற்கு எதிரான பேரணி, இன்று (14.03.2013) காலை 10.30 மணிக்கு நீதிமன்ற வளாகத்தில் தொடங்கிய பேரணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைபெற்றது. ஊர்வலம் 3 மணி நேரத்திற்கு மேல் நடந்து மதுரையில் உள்ள பொது மக்களின் கவனத்தை ஈர்ததது.

மதுரை அரசு சட்டக் கல்லூரியில் மாணவர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

வரும் நாட்களில் மதுரையில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரி மாணவர்கள் நடத்தும் பேரணியை விரைவில் பார்க்கலாம்

முடிந்தவரை இவர்களுடன் தொலைபேசி மூலம் பேசி எனது உற்சாகத்தை வழங்குகிறேன் ,,,,,,,,,,,,இதுவரை இவர்களுடன் பேசி இவர்களுக்கு உற்சாகத்தை வழங்கிய அனைத்து உறவுகளுக்கும் ,இது சம்பந்தமான இணைப்புக்களை உடனுக்குடன் வழங்கி வரும் என் இனிய உறவுகளுக்கு தலை சாய்த்து நன்றி சொல்கிறேன்.

கடந்த 11 ஆம் திகதி (மார்ச் 11) தமிழக இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர் (தனுஷ் நடித்த 3 படத்திற்கு இசையமைத்தவர் ) இங்கிலீஷ் பேசினாலும் தமிழன்டா என்ற வசனத்துடன் I support loyola hunger strike என்ற வாசகத்தை கொண்ட படத்தை முகநூலில் பகிர்ந்திருந்தார். அதை பார்க்க விரும்புபவர்கள் இந்த இணைப்பில் சென்று பார்க்கலாம்

 

http://www.facebook.com/photo.php?fbid=456552057749395&set=a.219829478088322.55607.219819918089278&type=1&relevant_count=1

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

600391_496599817066527_1855266667_n.jpg

 

- முகநூல் -

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்கள் போராட்டத்தை ஆரம்பித்த 8 மாணவர்களில் ஒருவரான திலீபன் ஒரு சாதனை தமிழன் : மாணவர்களை தப்பா யூஸ் பண்றீங்க ...... மாணவர்களுக்கு அரசியல் வேணாம்.... பிள்ளைங்க அப்பா அம்மாவ நெனச்சிங்களா..... உங்க புள்ளைங்கள போராட்டத்துக்கு அனுப்புவின்களா.... படிக்கிற புள்ளைங்களுக்கு அரசியல் தேவையா.... இப்படி பல விதமான கருத்துகள் இருந்து அறிவாளிகளிடம் இருந்து கேட்கப்படுகிறது.. திரும்ப திரும்ப ஒன்னு மட்டும் சொல்றேன் இப்போ நடக்கும் மாணவர் போராட்டம் எந்த அரசியல்வாதியாலும் தூண்டப்பட்டது அல்ல அல்ல...அல்லவே அல்ல... அது தானாக உணர்வு பூர்வமாக எழுந்த எழுந்த ஒன்று....... அதற்க்கு ஆதாரமாக பல ஆதாரங்கள் இருந்தாலும் என்னால் , எனக்கு தெரிந்த வரையில் சிலவற்றை சொல்கிறேன் இப்போது நடைபெற்று வரும் மாணவர் போராட்டத்துக்கு பிள்ளையார் சுழி இட்ட லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேர் என்பதை யாரும் மறுக்க முடியாது... ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் போல் இன்றையதினம் தமிழ்நாடு முழுதும் நடைபெறும் மாணவர் போராட்டத்துக்கு ஆணி வேராய் இருக்கும் லயோலா மாணவர்கள் 8 பேரில் ஒருவரான தம்பி திலீபனை பற்றி கொஞ்சம் அறிந்து கொள்வது அவசியம்... தாயின் கருவில் இருக்கும் போதில் இருந்தே தமிழை சுவாசமாய் சுவாசித்தவன் தான் இந்த திலீபன்... அதற்கு ஆதாரமாய் பின்வரும் தகவல்கள் ... 1330 அருங்குறட்களையும் முற்றோதல் செய்தமைக்காக தமிழக அரசின் குறள் பரிசு ரூ.10,000 பெற்ற திருக்குறள் திலீபனின் கவனகம் மற்றும் நினைவாற்றல் நிகழ்ச்சி பதினாறு கவனக நிகழ்ச்சி 1. குறள்கவனகம் 2. பறவைக்கவனகம் 3. எண்கவனகம் 4. விலங்குக்கவனகம் 5. எழுத்துக்கவனகம் 6. நூல்கவனகம் 7. கூட்டல்கவனகம் 8. மலர்க்கவனகம் 9. பெயர்க்கவனகம் 10. பழக்கவனகம் 11. ஆண்டுக்கவனகம்12. நாடுகள்கவனகம் 13. மாயக்கட்டகவனகம் 14. வண்ணக் கவனகம் 15. தொடுகவனகம் 16. ஒலிக் கவனகம திருக்குறள் நினைவாற்றல் நிகழ்ச்சி 1.முதல் சீரைச் சொன்னால் குறளைச் சொல்லுதல் 2. குறளைச் சொன்னால் குறளின் எண்ணைச் சொல்லுதல் 3. குறளின் எண்ணைச் சொன்னால் குறளைச் சொல்லுதல் போன்று பல்வேறு வகைகளில் திருக்குறளில் நினைவாற்றலை வெளிப்படுத்துதல 1 முதல் 50 பெயர்களை வரிசை எண்ணுடன் மாற்றி மாற்றிச் சொல்ல அதை நினைவில் நிறுத்தி 1 முதல் 50 வரை எண்ணையும் அதற்கான பெயரையும் வரிசையாகச் சொல்லுதல் கி.பி.1 முதல் கி.பி.1,00,000 ஆண்டு வரையிலான தேதியைச் சொன்னால் கிழமையைச் சொல்லுதல் பிறந்த தேதி முதல் முக்கியமான நிகழ்ச்சிகள் வரை எந்தத் தேதியைச் சொன்னாலும் உடன் கிழமையைச் சொல்லுதல். உலக நாடுகளின் பெயரைச் சொன்னால் தலைநகரத்தின் பெயரைச் சொல்லுதல்... இத்தனை திறமைகள் உள்ள மாணவன் தான் தற்போது லயோலா உண்ணாவிரதத்தில் கலந்துகொண்ட திலீபன்.. திலீபனையும் அவனது குடும்பத்தையும் கண்ட பின், பழகிய பின், நிச்சயமாக இது பெற்றோர்கள் ஆசீர்வாதத்தோடு நடக்கும் போராட்டம் என்பது தெளிவானது... மேலும் பல விஷயங்கள் திலீபனை பற்றி விரைவில் நான் எனது பக்கத்தில் வெளியிடுவேன். திலீபனை நாம் உலகறிய எடுத்து செல்ல வேண்டும் அதற்கு என்னால் ஆன உதவி செய்ய வேண்டும் அது தான் எனது ஆசை.. சாதாரண மாணவன் அல்ல திலீபன் அவனை பற்றிய பல சாதனைகளை உங்களுக்கு நான் காணொளியாக விரைவில் தருகிறேன் உங்கள் அன்பான ஆதரவினை அந்த சிறுவனுக்கு ஆதரவு அளித்து உலக அரங்கில் எடுத்து செல்லுங்கள் thanks-facebook

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர் விஷயத்தில்

தமிழக அரசு இரட்டை வேடம்!

கல்லூரி மாணவர்களின் கண்டன குரல்கள்!

srilanka-16-03-2013-01.jpg

 

 

இலங்கை தமிழருக்காக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் வலுவற்று உள்ளதால் இந்தியாவே முழுமையான தீர்மானத்தை கொண்டு வந்து உலக நாடுகளின் ஆதரவை திரட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருவெண்ணை நல்லூரில் திருவள்ளுவர் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி மாணவர்கள் கடந்த 11ஆம் தேதி முதுல் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டனர். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள், அரியலூர் அரசு கல்லூரி மாணவர்கள், தொழுதூர் நாவலர் நெடுஞ்செழியன் கல்லூரி மாணவர்கள் என மாணவர்களின் போராட்டம் வேகமெடுத்தது.

இதைகண்டு மிரண்டுபோன அரசு, அனைத்து கல்லூரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறையை அளித்து மறைமுகமாக இலங்கை தமிழர்களுக்கு துரோகம்  செய்துள்ளது ஜெ. அரசு என்கிறார்கள் மாணவ சமுதாயத்தினர். அவர்களை போராட்ட களத்தில் சந்தித்தோம்.

விருத்தாசலம் கல்லூரி மாணவர்கள் இலங்கை தமிழர் ஆதரவு  மாணவர் கூட்டமைப்பு என்ற பெயரில் நித்யானந்தன் தலைமையில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். நித்தியானந்தன் கூறும்போது, எங்களின் போராட்டத்தை கல்லூரி நிர்வாகமும், காவல்துறையும் ஒடுக்க பார்த்தது. இப்போது கல்லூரிகளுக்கெல்லாம் அரசு விடுமுறை அளித்துள்ளது. இருந்தாலும் எங்களது போராட்டம் தொடரும் என்றார்.

அரியலூர் அரசு கல்லூரி மாணவர்கள் ஆயிரம் பேர், தென்னரசு என்ற மாணவர் தலைமையில் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். மாணவர்கள் தமிழ்ச் செல்வன், சுரேஷ் ஆகியோர் கூறியதாவது, இலங்கை தமிழர்களின் பிரச்சனையை தீர்க்க முயற்சி எடுக்காமல் தமிழக அரசு போராட்டத்தை ஒடுக்க நினைப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க நினைத்தால் எந்த வழியிலேனும் தொடருவோம்.

சிலம்பரசி என்ற மாணவி கூறும்போது, தமிழக அரசின் போக்கில் சந்தேகம் எழுகிறது. ஒருபக்கம் இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்கிறது தமிழக அரசு. இன்னொரு பக்கம் இலங்கை தமிழர்களுக்காக போராடும் மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்க கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கிறது. இது இரட்டை வேடமா என்றார்.

மாணவர்களின் போராட்டம் மின்னல் வேகத்தில் தமிழகம் முழுவதும் வேகமெடுத்ததை கண்டு, கல்லூரி மாணவ மாணவிகளின் பிரதிநிதிகளை அழைத்து கல்லூரி நிர்வாகம் மூலம் மிரட்டி அடக்கியுள்ளது அரசு என்று குற்றம் சாட்டியுள்ளனர் உணர்வுள்ள மாணவர்கள்.

செய்தி,படங்கள்: நக்கீரன், எஸ்.பி.சேகர்

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர்களே... இன்று ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில், நாளை ஹைதராபாத்தில் நடைபெறவிருக்கும் போராட்டத்திற்கு, துண்டுச் சீட்டு, சில போஸ்டர் அச்சடித்தல் போன்ற சிறு சிறு வேலைகளை செய்ய நண்பர்கள் தேவை. ஹைதராபாத்தில் இருக்கும் நண்பர்கள் இந்த எண்ணிற்கு தொடர்புகொள்ள வேண்டுகிறோம். 9052624014, 9704697921.

தமிழன் யார் என்று இப்போ தெரியும் தமிழருக்கு - ஈழ இனபடுகொலைக்கு நியாயம் வேண்டி நிற்கும் மாணவருக்கு ஆதரிக்க ஒன்றில் தமிழன் ஆக இருக்கனும் அல்லது மனிதன் ஆக இருக்கணும் தமிழனா வந்த சிலம்பரசனை பார்ராடுவோம் மற்ற ஈன நடிகர்கள் யாவரைய்ம் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் சினிமா மோகம் விட்டு தமிழரா தமிழருக்கு ஆக வாழுவோம் என சங்கே முழங்கு

  • கருத்துக்கள உறவுகள்

கடலில் இருந்து கரையில் ஒதுங்கிய சிறு மீன்களை மறுபடியும் கடலில் தூக்கிப் போட்டு உயிர் கொடுத்தான் அந்த சிறுவன்.. அதைப் பார்த்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவர் சிரித்தார்.. "இவ்வளவு பெரிய கடலில் இருந்து கோடிக்கணக்கான மீன்கள் கரை ஒதுங்கும்.. அவற்றை எல்லாம் எப்படிக் காப்பாற்றுவாய்..?"

அதற்கு சிறுவன் சொன்ன பதில் இது..

"உண்மை தான்... கோடிக்கணக்கான மீன்களை நான் காப்பாற்ற முடியாது.. ஆனால் நான் இது வரை கரையில் இருந்து கடலில் விட்ட மீன்கள் கோடிக்கணக்கான மீன்களை சந்ததிகளாக உருவாக்கும்.. மேலும் அவை கோடிக்கணக்கான மீன்களையும் சந்திக்கும்.. அவை என் பெயர் சொல்லும்."

அதுபோலதான் ....அன்பான மாணவ செல்வங்களே,,

உங்கள் பெயரை வருங்கால சந்ததிகள் நிச்சயம் உச்சரிக்கும்.. நீங்கள் செய்யும் உன்னதமான போராட்டங்களை தொடர்ந்து தீவிரபடுத்துங்கள்....

அச்சமில்லை.. அச்சமில்லை.. அச்சம் என்பதில்லையே...

உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமென்பதில்லையே..

இசையமைப்பாளர் இமான் உண்ணாவிரதம் இருக்கும் சட்ட பல்கலைகழக மாணவர்கள், இசைக்கல்லூரி மாணவர்கள், புதுக்கல்லூரி மாணவர்களை சந்தித்து தமது ஆதரவை தெரிவித்தார்.

 

487771_430513770368543_188891245_n.jpg

 

- முகநூல் -

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

418841_508515482519501_872847914_n.jpg

 


ஒரு கிராமத்தின் போராட்டம். 
செங்கல்பட்டு அருகில் ஆனூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் இலங்கைக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கும் காட்சி.

நாளை நடக்கும் போராட்டத்தில் பங்குகொள்ள
பெங்களூர்: 9035216094,
டெல்லி: 9250050404,
ஹைதராபாத்: 9052624014, 970469792

- முகநூல் -

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

392947_594170160595013_1240442085_n.jpg

 

தமிழகத்தின் முதல் மருத்துவ கல்லூரியாக போராட்ட களத்தில் இறங்கியுள்ள கன்னியாகுமரி மருத்துவ கல்லூரி மாணவர்கள்.

ஓயாத அலை, அணையாத தீ !

 
 
 
 

 

திருசெங்காட்டில் மாணவர்களின் போராட்டம்!........

 

580449_441472685921763_1281629836_n.jpg

 

- முகநூல் -

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்
இணைப்புக்கு நன்றி சகோ மற்றும் துளசி அக்கா....!
அது சரி நீங்கள் தொலைபேசி செய்து இந்த மாணவர ஊக்கி வித்திங்களா....நானும் இன்றும் ஒரு சில மாணவர தொடர்வு கொண்டு ஊக்கி விக்க  போறேன்...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் அருள்ராஜன் தலைமையில் 20 பேர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

சனிக்கிழமை 3வது நாளில் 9க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டதால் அவர்களை ஆம்புலன்ஸ்கள் மூலம் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

 

 

-முகநூல் -

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.