Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரஜினி, கமல் மற்றும் அனைத்து முக்கியமான தமிழ் நடிகர்கள் நடித்து வழங்கும் "ஆகையால் மௌனம்செய்வோர்"

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரஜினி, கமல் மற்றும் அனைத்து முக்கியமான தமிழ் நடிகர்கள் நடித்து வழங்கும் "ஆகையால் மௌனம்செய்வோர்"


இதுவரையில், இயக்குனர் மணிவண்ணன்,சீமான், நடிகர் சிலம்பரசன், சிவகார்திகேயன் போன்றோர்தவிர வேறு எந்த தமிழ்த்திரைப் பிரலங்களும், தமிழக மாணவர்கட்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவிக்கவில்லை.

 

தமிழ்ப்பட அரசியல்.



தமிழக மாணவர்களின் உண்ணாவிரத போராட்டத்தில் மௌனித்திருக்கும் இந்த தமிழ்ப்பட உலகம் (கோடம்பாக்கம்), மற்றும் அதன் அரசியல் பற்றி சிறிது அலசுவது நன்கு.


றஜினி:
அன்றுமுதல் இன்றுவரை என்னை வாழவைத்தது தமிழ்நாடு என்று மட்டுமே பேசி வருகின்றார். ஆனால் இன்றுவரை, ஈழத்தமிழ் மக்களின் நலன் கருதியோ அன்றி தமிழகமக்களின் உணர்ச்சிகள் கருதியோ அவரது பெருங்கருத்து "மௌனம்"

 

இவரின் அரசியல் என்ன?  அரசியலில் இவர் சென்றதடவை அம்மா (அ.தி.மு.க) வாக்களர் எனபது இவர் போட்ட வாக்குச்சீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. தற்போதய மாணவர் போராட்டத்திற்கு, காங்கிரஸும், தி.மு.க வுமே சந்தர்ப்பம் தேட விரும்புபவர்கள். அ.தி.மு.க விற்கு அந்த அவசியம் தற்போது இல்லை. இன்நிலையில் றஜினியின் மௌனம் சுயநலமே.

 

இன்றய மாணவர் போராட்டம் அரசியல் சாயமற்றது. இதில் இவர் வந்து ஒரு குரல் கொடுத்திருந்தால் இவருக்குள்ள அனைத்திந்திய ரசிகர் கூட்டமே அவதானித்திருக்கும். இதற்கும்மப்பால் இவருக்கு மத, மொழி, நாடு வேறுபாடின்றி ரசிகர் கூட்டம் உள்ளது. தமிழர்கள் இவரின் தீவிர ரசிகர்கள், இவரின் மௌனம் (எக்காலகட்டத்திலும்) எமது தமிழ் உறவுகளுக்கு ஒரு மனக்கசப்புத்தான்.

 

கமல்
ஆங்காங்கே தமிழ் உணர்வுகளுக்காக இவர் குரல் கொடுத்திருந்தாலும், எனது தளம் தமிழ், இந்தியா இரண்டுமே, அமெரிக்காவின் ஹொலிவூட் அல்ல என்று அடிக்கடி கூறும் இவர், கடவுள் நம்பிக்கை இல்லாமல் கடவுள் படங்களை எடுப்பது போல், தமிழ்கூறி உதட்டினால் மட்டும் சேவை செய்பவர் போல் திகழ்கிறார்.

 

கலைஞரின் தீவிர ரசிகன் என்பதால், சதை இல்லாமல் எலும்புடன் அசையும் ரெசோ அதரிப்பவரோ என்று எண்ண எண்ணுகிறது! ஒருவேளை கலைஞரே போக வேண்டாம் என்று தடுத்திருப்பாரோ என்னவோ!

 

விஜய்
ஈழத்தமிழ் பெண்ணை மணந்திருப்பவர். தமிழ் நாடு மீனவர்கட்காக பட வசனம் பேசியவர். ஆயினும் ராகுல் காந்தியின் காங்கிறஸ் இளைஞரணிக்காக இவர் அரசியலுக்குள் சிறிது எட்டிப்பார்த்தவர் என்பதால், ஒருவேளை மௌனம் காக்கிறாரோ என்னமோ? ஈழத்தமிழனாக, உங்கள் ரசிகனாக எனது தாழ்மையான் வேண்டுகோள், தந்தயை கொன்றார்கள் எனக்கூறி ஈழத்தமிழினத்திற்கே அழிவு செய்த்வர்கள் காங்கிறஸ், மற்றும் காந்திகள். தயவு செய்து இதற்குள் புகவேண்டாம்.

 

அஜித்
மலையாளி என்ற காரணத்தினாலும், இதற்குமேல் எந்த ஒரு அரசியற் காரணங்களும் தேவையில்லை என்ற காரணத்தினாலும், வாசிப்பவர்களே வெற்றிடத்தை நிரப்புங்கள்.

 

சூரியா, கார்த்தி (மார்க்கண்டேயன் குடும்பம்)
உலகத் தமிழ் மக்களிடம் மிகவும் மதிப்பு பெற்ற ஒரு குடும்பம். பொதுச்சேவைகளில் மும்மூரம் உடையவர்கள். எவ்வித அரசியல் சார்பும் வெளிப்பாடு செய்யாதவர்கள். இம் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க மிகவும் தகுகுதியானவர்கள், ஆயினும் ஏன் மௌனம்?

 

சத்தியராஜ்
பொதுவாக ஆதரவு தெரிவிக்கும் ஒரு நபர், இவரின் மௌனமே எமக்கு மிகப்பெரிய கேள்விக்குறி. ஏன் சார்? இந்த மாணவர் திரள் பத்தோட பதினொன்று என்று நினத்து விட்டீர்களா?

இம்மௌனங்களுக்கு ஒரு முக்கியமான காரணியாக அமையக்கூடியது, இவர்கள் தற்பொழுது நடித்து வரும் படங்களின் தயாரிப்பாளர்கள், உதரணமாக,உதயநிதி, தயநிதி போன்றோர் கருணாநிதியின் வாரிசுகள் ஆகையால் தி.மு.க வின் ஆதிக்கம் இங்கு கனமாக இருப்பதால் தங்களின் வாழ்வாதரதுக்கு விபத்து வரக்கூடாதென்பதில் சுயநலமாகவுள்ளார்கள். ஆகையால் மௌனம்செய்வோர்.

 

 

நன்றி
வன்னி. 
 
உங்கள் கருத்து?

நன்றி

வன்னி. 

 

உங்கள் கருத்து
?

 

 

 

 கட்டாயப்படுத்தி ஆதரவை வரவைக்க முடியாது   அரசியலை மீறி சினிமா ஈழ விடையத்தில் ஒன்றும் சாதிக்க முடியாது( கமல் பட்ட பாடு தெரியும் தானே?)    

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

?

 

 

 

 கட்டாயப்படுத்தி ஆதரவை வரவைக்க முடியாது   அரசியலை மீறி சினிமா ஈழ விடையத்தில் ஒன்றும் சாதிக்க முடியாது( கமல் பட்ட பாடு தெரியும் தானே?)    

 

தமிழ்நாட்டு அரசியல் ஒவ்வொருர் தனிமனித முன்னேற்றத்தையும் தமது கட்சியின் சக்கரமாக்கி வைப்பதே அவர்கள் கலாச்சாரம். அந்த வழியில் தம் பல்லைத் தொலைத்த இவர்கள் கலாச்சாரம் மனிதாபிமானத்திற்கு பணிசெய்வதா? இதிலும் பணம் பண்ண முடியும் என்றால் முடியும் என்றால் தாமாகவே முயற்சித்திருப்பார்கள்!

59749_589948277683330_1215646614_n.jpg

"தமிழன்"ன்னு படம் மட்டும் எடுக்குறாங்க ...

தமிழனுக்கு குரல் கொடுக்க மாட்டிங்களா ???

 

(முகநூல்) 

  • கருத்துக்கள உறவுகள்

59749_589948277683330_1215646614_n.jpg

"தமிழன்"ன்னு படம் மட்டும் எடுக்குறாங்க ...

தமிழனுக்கு குரல் கொடுக்க மாட்டிங்களா ???

 

(முகநூல்) 

 

இவர்களின் அரை குறை சினிமாவை பாக்காமல் விட்டு நீண்ட காலம் ஆச்சு...நண்பர்கள் வா சினிமாக்கு போவோம் என்று கேட்டால் கூட போறது இல்லை...இவர்களால் தான் ஒரு சில‌ தமிழன் தமிழ் உனர்வே இல்லாமல் போனவர்கள்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

?

 

 

 

 கட்டாயப்படுத்தி ஆதரவை வரவைக்க முடியாது   அரசியலை மீறி சினிமா ஈழ விடையத்தில் ஒன்றும் சாதிக்க முடியாது( கமல் பட்ட பாடு தெரியும் தானே?)    

எமது தேவை விழிப்புணர்வு, முக்கியமாக இந்திய பொதுமக்களிடம். அரசியல் மொழியைவிட, அரிதார மொழிதான் இன்று இந்தியாவில் எடுபடும். சிறிதேனும் நன்றிக்கடன் தேவை என்பது தமிழரின் ஆதங்கம்.

இவர்களின் மௌனத்திற்கு ஒரே ஒரு காரணம்தான். ராஜபக்ஸேவை எதிர்த்து புறப்பட வேண்டிய மாணவர் கூட்டத்தை சிலர் டெசோ நோக்கி திருப்பி விட்டார்கள். நடிகர்கள் எப்படி ஈழ விடுதலை ஆதரவாளர்களான சுபவீரபாண்டியன், வீரமணி போன்றவர்களை எதிர்த்து போராடுவதற்கு வருவார்கள்?

மக்கள் போராட்டமாக மாற வேண்டிய மாணவர் போராட்டத்தை குழப்புவர்கள் யார் என்றால் தமது தனிப்பட்ட கோபங்களுக்கும் அரசியலுக்கும் மாணவர்களை பயன்படுத்த முனைபவர்கள்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

59749_589948277683330_1215646614_n.jpg

"தமிழன்"ன்னு படம் மட்டும் எடுக்குறாங்க ...

தமிழனுக்கு குரல் கொடுக்க மாட்டிங்களா ???

 

(முகநூல்) 

 

சிம்புவை விட்டிடுங்கோ அவர் இப்போது குரல் கொடுத்திருக்கின்றார்.  :D

 

Edited by தமிழரசு

  • கருத்துக்கள உறவுகள்

பால் அபிசேகம் செய்ய வைத்தவர்கள் இப்போது பம்மிக்கொண்டுவிட்டார்கள்..! :D

அன்னா ஹசெராவிற்கு ஆதரவாக 2011, புரட்டாதி மாதம் இவர்கள்....

 

AVN_FASTINGFILM_762499f.jpg

 

 

என்ன வித்தியாசம் அதற்கு ஆதரவு தருவதற்கும் இதற்கு தராமல் இருப்பதற்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

 அன்னா ஹசெராவிற்கு ஆதரவாக 2011, புரட்டாதி மாதம் இவர்கள்....

 

AVN_FASTINGFILM_762499f.jpg

 

 

என்ன வித்தியாசம் அதற்கு ஆதரவு தருவதற்கும் இதற்கு தராமல் இருப்பதற்கும்?

 

மாணவர்கள் ஒருவேளை தீவிரவாதிகளாக மாறலாம்.. பின்னாட்களில்.. அவர்களை ஆதரிக்கப்போய் அம்பேல் ஆகிவிட்டால்?? :icon_mrgreen:

 

ஆனால் அன்னா ஹசாரே அப்படியல்ல.. சுத்தமான காந்தியவாதி..! :wub:

 

மாணவர்கள் ஒருவேளை தீவிரவாதிகளாக மாறலாம்.. பின்னாட்களில்.. அவர்களை ஆதரிக்கப்போய் அம்பேல் ஆகிவிட்டால்?? :icon_mrgreen:

 

ஆனால் அன்னா ஹசாரே அப்படியல்ல.. சுத்தமான காந்தியவாதி..! :wub:

 

 

 

உண்மைதான் :icon_idea: இவர்களை மேலும் மேலும் வளர்த்து விடவேண்டும :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களின் மௌனத்திற்கு ஒரே ஒரு காரணம்தான். ராஜபக்ஸேவை எதிர்த்து புறப்பட வேண்டிய மாணவர் கூட்டத்தை சிலர் டெசோ நோக்கி திருப்பி விட்டார்கள். நடிகர்கள் எப்படி ஈழ விடுதலை ஆதரவாளர்களான சுபவீரபாண்டியன், வீரமணி போன்றவர்களை எதிர்த்து போராடுவதற்கு வருவார்கள்?

மக்கள் போராட்டமாக மாற வேண்டிய மாணவர் போராட்டத்தை குழப்புவர்கள் யார் என்றால் தமது தனிப்பட்ட கோபங்களுக்கும் அரசியலுக்கும் மாணவர்களை பயன்படுத்த முனைபவர்கள்தான்.

 

ஒரு குரங்கை கலைஞர் மயில் என்று முன்மொழிந்தால் அதை இந்தக் கோழைமணி, சுபவி இருவரும் ஆமாம் என்று வழிமொழியும்  நியாயவான்கள் இவர்களை பிரபாகரன் உயரத்திற்கு உயர்த்துவதற்கு உங்களால் மட்டும்தான் முடியும்!

 

இங்கே ரெசோ என்பது திமுக என்ற விளக்குமாற்றுக்கு கட்டிய குஞ்சம் போன்ற ஒன்று. திமுக தன் பழியில் இருந்து மீழ்வதற்கு செய்த ஏற்பாடு.

 

சிங்களவாதத்தின் அணைப்பில் வாழ்பவனிடம் இருக்கும் தமிழ் உணர்வும், உங்களைப் போன்று திமுக விசுவாசம் இருப்பவனிடம் இருக்கும் தமிழ் உணர்விற்கும் இடையில் வேறுபாடுகள் இல்லை! இங்கே உண்மையும் இல்லை. அறிவுடமையும் இல்லை!

 

மறந்துவிடாதீர்கள்! கருணாநிதி ஆட்சியில் இருந்திருந்தால் இந்தப் போராட்டங்கள் என்றோ காணாமல் போய் இருக்கும்.  அதை இப்படி சீமானை சிறையில் வளத்தார் என்றவாறு இந்த மாணவர்களையும் சிறைக்குச் செல்லாது கலைஞர் தடுத்தார் என்று அன்பொழுக தாங்கள் வசனம் எழுதுவதை நாங்கள் பார்க்க வேண்டி இருந்திருக்கும்!

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் சபேசனும் சுபவீ, வீரமணி வரிசையில் உட்காரவேண்டியவர்தான்..! திராவிட சித்தாந்தத்தைக் காப்பாற்றுவதற்கு எத்தகைய கீழான நிலைக்கும் போகக்கூடியவர்கள்..!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படுகொலை செய்யப்பட்டு வீழ்ந்து கிடப்பது தன் தாய் அவள் மைந்தனோ கொலைக் குற்றம் சாட்டப்பட்டவனின் பாவத்துக்காய் ஆவி துடிக்கின்றான்!

  • கருத்துக்கள உறவுகள்

"http://www.facebook.com/photo.php?v=116970658493346&set=vb.281436421957743&type=2&theater"

 

அஜித் ஒரு மலையாளி. இவ்வாறே 2009 இனக்கொலை யுத்த காலத்திலும் ஈழத்தமிழருக்காக நாம் ஏன் போராட்டம் நடத்தவேணும் என்று பகிரங்கமாகக் கேட்டவன். ஈழத் தமிழருக்கு மட்டுமல்லாமல் தமிழகத் தமிழருக்கே எதிரானவன். ஒரு நடிகர்கள் அமைப்பு விழாவில் பகிரங்கமாக தமிழருக்கு எதிராகப் பேசியவன். இவன் ஒரு தமிழின விரோதி. ஆனால் தலை கால் என்று தமிழர் இவனுக்கு பட்டம் சூட்டி அழகு பார்க்கிறார்கள். நடிகை சுஹாசினி கூட இவனது அழகுடன் தமிழ் நடிகர்களை ஒப்பிட்ட்டு கேவலப்படுத்தியவள்.

அர்ஜுன் ஒரு கன்னடன். இயல்பாகவே தமிழருக்கு எதிரானவன். அவ்வப்போது நடக்கும் காவிரி நீர்ப் பிணக்குகளில் கர்நாடக மாநிலத்துக்குச் சார்பாக பேசுபவன்.இவன் ஈழத்தமிழருக்கு ஆதரவு தரவில்லை என்றால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

 

ஆனால் இந்த இரண்டு பொறுக்கிகளுக்கும் தமிழ்நாட்டில் தமிழனினதும், புலத்தில் ஈழத்தமிழினதும் காசு தேவைப்படுகிறது. இந்த தமிழ் விரோத  வியாபாரிகளின் படத்தை போட்டி போட்டு விநியோகிப்பவர்கள் சிந்திப்பார்களா??

  • கருத்துக்கள உறவுகள்
vijayaaaaaaa.jpg

1. தயவு செய்து யாரும் நடிகர்களை அழைக்க வேண்டாம் அவர்களும் வர வேண்டாம். நடிகர்கள் யார் வந்தாலும் அவர்களுக்குப்பின் ஒரு நுண்ணரசியலும் உள்ளே வரும். மாணவர்கள் போராட்டம் மாணவர்கள் போராட்டமாகவே இருக்கட்டும்.

2. உணர்வு என்பது தானாக வர வேண்டும் நாமாக போய் கேட்டு வரவே தேவையில்லை.

3. டெசோ - அவசரகாலத்தில் உதவ முடியாத " அவசரகால 108 ஆம்புலன்ஸ் "

 

குறிப்பு: இம்மாணவர்கள் போராட்டத்திற்கு துணை நிற்கும் ஒருசில உண்மையான தமிழ் உணர்வாள இயக்குனர் களுக்கு நன்றிகள் பல.

அதுசரி மாணவர்களுக்கு ஆதரவு தெரிவிக்காத திரையுலகத்தினர் பற்றி பேசிறம். யாழ் களத்திலை இருக்கிற எத்தினை உறவுகள் இதுக்கும் எங்களுக்கம் சம்பந்தம் இல்லையெண்டுற மாதிரி இருக்கினம் அவையை என்ன செய்யலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழ் ஆர்ப்பாட்டம்.. உண்ணாவிரதம்: நடிகர் நடிகைகளும் களமிறங்குகின்றனர்! சென்னை: தமிழ் ஈழம் அமைவதற்கான பொதுவாக்கெடுப்பு கோரி தமிழ் சினிமா நடிகர் நடிகைகளும் களமிறங்குகின்றனர். தங்களின் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் மற்றும் ஒரு நாள் வேலை நிறுத்தத்தை இன்றைய செயற்குழுக் கூட்டத்துக்குப் பிறகு அறிவிக்க உள்ளனர். இலங்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் போராட்டம் வலுத்துள்ளது. அங்கு நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை திருத்தங்களுடன் இந்தியா ஆதரிக்க வேண்டும், தமிழ் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வற்புறுத்தி இப்போராட்டங்கள் நடக்கின்றன. திரையுலகினரும் இந்த போராட்டத்தில் குதித்துள்ளனர். தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தினர் சென்னையில் நேற்று உண்ணாவிரதம் இருந்தார்கள். பெப்சி தொழிற்சங்கத்தினரும் இதில் பங்கேற்றார்கள். இந்நிலையில், நடிகர் சங்கமும் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. இச்சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம் இன்று மாலை தியாகராயநகரில் நடக்கிறது. நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார் தலைமை தாங்குகிறார். பொதுச்செயலாளர் ராதாரவி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் இதில் பங்கேற்கின்றனர். இலங்கை பிரச்சினை குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது. இலங்கைக்கு எதிராக எத்தகையை போராட்டத்தில் ஈடுபடுவது என்று ஆலோசித்து முடிவு எடுக்கப் போவதாக அறிவித்துள்ளனர். உண்ணாவிரதம் அல்லது ஆர்ப்பாட்டம் நடத்தப்படலாம் என தெரிகிறது. ஒருநாள் படப்பிடிப்பை ரத்து செய்வது பற்றியும் ஆலோசித்து வருகின்றனர். நடிகர், நடிகைகள் பலர் வெளிநாடுகளில் படப்பிடிப்புகளில் உள்ளனர். அவர்கள் அனைவரும் கலந்து கொள்வதற்கு வசதியாக போராட்ட தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது. இப்போராட்டத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், இருவரும் பங்கேற்க உறுதியளித்துள்ளதாகத் தெரிகிறது. இலங்கை அரசை கண்டித்தும் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

http://tamil.oneindia.in/movies/news/2013/03/sri-lankan-tamil-issue-nadigar-sangam-171849.html

சோளிங்கர்: தனி ஈழ பொதுவாக்கெடுப்பு கோரி ரஜினி ரசிகர்கள் உண்ணாவிரதம்!

சோளிங்கர்: பொதுவாக்கெடுப்பு நடத்தி இலங்கைத் தமிழர்களுக்கு தனி ஈழம்

அமைத்தல், இனப்படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு தண்டனை, கச்சத்தீவை திரும்பப்

பெறுதல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

ரசிகர்கள் நேற்று ஒரு நாள் உண்ணாவிரதம் நடத்தினர்.

இலங்கைப் பிரச்சினையில் தமிழருக்கு ஆதரவான போராட்டம் இதுவரை இல்லாத

அளவுக்கு இந்தியாவில் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. மாணவர்கள் ஆரம்பித்த

இந்தப் போராட்டம் இப்போது மக்கள் போராட்டமாக வடிவம் பெற்றுள்ளது. இப்போது

இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகர்களும் கைகோர்த்துள்ளனர்.

வேலூர் மாவட்ட ரஜினி ரசிகர் மன்ற பொருளாளர் என் ரவி தலைமையில் சோளிங்கர்

நகரில் மார்ச் 19-ம் தேதி ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

இந்தப் போராட்டத்தில் ஏராளமான ரஜினி ரசிகர்கள் பங்கேற்றனர். அவர்களுடன்

அதிமுக, திமுக, விடுதலைச் சிறுத்தைகள், பாஜக உள்ளிட்ட அனைத்துக் கட்சி

நிர்வாகிகளும் பங்கேற்று வாழ்த்திப் பேசினர்.

ரஜினி ரசிகர் மன்றத்தின் சோளிங்கர் ஒன்றிய பொறுப்பாளர் கோவன், மார்லின்,

பாண்டியன், நடராஜன், வெங்கடேசன் ஆகியோர் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.

now rajini fans start fasting protest for tamil eelam

அதிமுக தலைமை கழக பேச்சாளர் சோமு மணி, திமுக வேலூர் மாவட்ட துணைச் செயலர்

அசோகன், வேலூர் கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செயலர் ரத்தின

சுகுமார், பாஜக மாவட்ட துணை சுந்தரம், பாமக வக்கீல் சக்கரவர்த்தி,

கவுன்சிலர்கள் ஏழுமலை, சேகர் உள்ளிட்டோர் உண்ணாவிரதத்தை வாழ்த்தி பேசினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சோளிங்கர் என் முருகன் செய்திருந்தார்.

சோளிங்கர் ரசிகர்களைத் தொடர்ந்து, சேலம், கோவை, திருச்சி, திருப்பூர்

மாவட்ட ரசிகர்களும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/03/20/tamilnadu-now-rajini-fans-start-fasting-protest-for-tamil-eelam-171848.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.