Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மாணவர்களின் எழுச்சிக்கு ஆதரவாக லண்டனில் மாணவர் ஆர்ப்பாட்டம்.

Featured Replies

ஆயுதப்போராட்டம் தோல்வி.
அகிம்சை போராட்டம் தோல்வி.அடுத்தது ஏதாவது இருந்தால் சொல்லவும்.

நீங்கள் எங்கே எப்போது அஹிம்சைப் போராட்டம் செய்தீர்கள்?  இப்போதும் புலம்பெயர்ந்த பின்பும் பிரேரணையை நடுவீதியில் வைத்துக் கொழுத்தும் பிற்போக்குவாதிகளாகத்தானே இருக்கிறீர்கள்?   அதுவும் ஒரு அரச அலுவலகத்தின் முன்பு.  மற்றவர்கள் வீதியில் இறங்கிப் போராடவேண்டும்.  நாம் கணனியில் இருந்து ஊக்கப்படுத்திக் கொண்டிருப்போம்.  நீங்கள் ஒன்றுக்கு ஆதரவளிப்பதாக இருந்தால் அதற்கு நீங்களும் தயாராக இருக்க வேண்டும்.  அதைவிடுத்து, மற்றவன் செய்யும்போது அவனை உசுப்பி விட்டுவிட்டு நாம் மறைந்திருப்பதல்ல.  அப்படி ஆதரவு கொடுப்பதாக இருந்தால் நீங்கள் முதலில் இருந்துவிட்டுப் பின்னர் மற்றவர்களுக்கு ஆதரவு கொடுக்கப் பழகுங்கள்.  இல்லையேல் பேசாமல் இருங்கள்.  அவர்களை உசுப்பேற்றி அந்தப் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாழாக்காதீர்கள்.

  • Replies 66
  • Views 3.6k
  • Created
  • Last Reply

இது VERY SIMPLE THEORY இசை .சரி எது பிழை எது என்பதுதான்.

உங்கள் வாதப்படி பார்த்தால் உலகில் தோன்றிய முதல் அரசியல் கட்சியிலேயே அனைவரும் இருந்திருக்கவேண்டும் .

BOB RAE NDP PARTY ONTARIO LEADER இப்ப அவர் லிபரல் பார்ட்டி இன்றேரிம் லீடர் .

ஏன் பிரபாகரன் அமிர் பின்னால் திரிந்து, பின் புலியாகி பின் குட்டிமணியுடன் திரிந்து மீண்டும் புலியாகியதுதான் நடந்தது .

புளோட்டில் நான் இணைந்தது தமிழனின் விடிவிற்கு உமாவின் தலைமைக்காக கொலை செய்யவல்ல ,அதே தான் புலிகளிடமும் நான் எதிர்பார்த்தது .

புலிகள் திருந்துமா என பலர் காலம் காலமா எதிர்பார்த்தார்கள் .ஒரு ஜனநாயக அரசியலுக்கு புலிகள் இடம் கொடுத்துஇருந்திருந்தால் பலர் புலிகளில் சேர்ந்திருப்பார்கள் .புளொட்டை விட ஒரு தனிநபர் துதி பாடும் அராஜககமான இயக்கத்துடன் சேருவதென்பது கனவிலும் நினைக்க முடியாததொன்று .

கருணாகரனின் கட்டுரை மிக ஆழமாக பலவற்றை தொட்டுசெல்லுகின்றது .இன்றைய இணைப்பை கட்டாயம் வாசிக்கவும்.

இவையெல்லாம் விளங்கும் அளவிற்கு பலர் இங்கு இல்லை .கனவு எவனும் காணலாம் ஆனால் விடிய அது கலைந்துவிடும் .

நீங்கள் கூட இந்தியா ,சிங்கப்பூர் ,கனடா என்று அலைந்தவர் தானே ,ஏன் முதலிலேயே கனடா வரவில்லை என நானும் கேட்கலாம் .

திரும்ப திரும்ப ஒன்றைத்தான் சொல்லுகின்றேன் .பிள்ளை சிகரெட் பத்துது ,குடிக்குது ,தூளும் அடிக்குது ஆனால் என்ரை பிள்ளை என்று அப்படியே விட முடியாது கடைசியில் நடுத்தெருவில் தான் நிற்கும் .அதுதான் நீங்கள் புலிகளுக்கு செய்ததது .

கருணாகரனின் ஒரு பந்தியை இணைக்கின்றேன் கிழே -

பலரும் தமது விருப்பு வெறுப்புகளுக்கு
ஏற்றமாதிரியே எழுத வேண்டும் என விரும்புகிறார்கள். என்னால் அப்படிச் செய்ய
முடியவில்லை. நம் பிள்ளைகளுக்கு பொய்களைச் சொல்லிச் சொல்லியே அவர்களை
வளர்த்தால் அவர்களின் பயணத்திசையும் பயணமும் வேறாகவே அமையும். அவர்கள்
சென்றடைகின்ற புள்ளி வேறாகவே இருக்கும். அதைப்போலவே நாம் சமூகத்துக்கும்
பொய்களைச் சொல்ல முடியாது. அல்லது உண்மைகளை மறைக்க முடியாது. அப்படி
உண்மைகளை மறைத்துப் பொய்களையும் கற்பிதங்களையும் முன்னிலைப்படுத்தும்போது
அந்தச் சமூகம் தவறான வழிகளிலே பயணித்து, பாதகமானதொரு புள்ளியைச்
சென்றடையும்.

நமது அதீத கற்பிதங்களே நமது
தோல்விகளுக்கும் பின்னடைவுக்கும் காரணம் என்பது நமது அனுபவம். எனவேதான்
சுயவிமர்சனங்கள் அவசியமாகப் படுகின்றன. அந்த உணர்வோடு எழுதப்படும்
வரலாற்றுக் குறிப்புகள் முக்கியமானவை. அவற்றுக்கு ஒரு பெரும்
பங்களிப்புள்ளது.

Edited by arjun

பிரெஞ்சு புரட்சி பிடிக்கும்
கியூபா புரட்சி பெருமைக்குரியது

உருசிய புரட்சி மகத்தானது
சீன புரட்சி இன்றும் வெற்றிகரமாக தொடர்கின்றது.

ஆனால், தமிழர் புரட்சி .....

பிரெஞ்சு புரட்சி பிடிக்கும்

கியூபா புரட்சி பெருமைக்குரியது

உருசிய புரட்சி மகத்தானது

சீன புரட்சி இன்றும் வெற்றிகரமாக தொடர்கின்றது.

ஆனால், தமிழர் புரட்சி .....

காலம் கடந்த புரட்சி. 

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சொன்னதை கேட்டிருந்தால் தலைவருக்கு ஏன் இந்த கதி .

உங்களை போல சொல்லுற ஆட்கள் மனிதன் பிறந்தில் இருந்து சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். நீங்கள் ஒன்றையும்   புதிதாக சொல்லவில்லை. ஏற்கனவே செத்துப்போனவர்கள் கொட்டிபோன குப்பைகளைத்தான் சொல்கிறீர்கள்.

நீங்கள் சொல்வதை கேட்டிருந்தால் பிரபாகரன் ஒரு தலைவனாக ஆகி இருக்க முடியாது. ரோட்டில் போகும் தெருபோக்கனாக ஆகி இருக்க மட்டுமே முடிந்திருக்கும்.
 
பிரபாகரன் சாதிக்க பிறந்தவன்!
தெருபோக்கனாக தெருவில் நடமாட பிறந்திருந்தால் பொழுதுபோக்கிற்கு நீங்கள் சொல்வதை கேட்டிருக்க கூடும்.

காலம் கடந்த புரட்சி. 

இவளவு காலமும் நீங்கள் உங்களின் அம்மாவின் கருவறையிலா  இருந்தீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இது VERY SIMPLE THEORY இசை .சரி எது பிழை எது என்பதுதான்.

உங்கள் வாதப்படி பார்த்தால் உலகில் தோன்றிய முதல் அரசியல் கட்சியிலேயே அனைவரும் இருந்திருக்கவேண்டும் .

BOB RAE NDP PARTY ONTARIO LEADER இப்ப அவர் லிபரல் பார்ட்டி இன்றேரிம் லீடர் .

இதில் பெரிய விடயம் ஒன்றுமில்லை..! அடிப்படைக் கொள்கை இல்லாது ஒரு கட்சியில் இருந்துவிட்டு இன்னொரு கொள்கைக்குத் தாவுவது பெரிய விடயமல்ல..! ஆனால் கட்சி மாறும்போது மற்றவருக்கு ஆலோசனை சொல்லும் தகைமையை அவர் இழந்துவிடுகிறார்..! இடைக்கால தலைவராக இருக்கும் Rae தலைவராகமுடியாமல் தத்தளிக்கும் காரணம் இதுதான்..! நாளையே லிபரல் சரியில்லை என்று NDP க்கு போகமாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்?

ஆகவே யாரும் கட்சி மாறலாம்..! ஆனால் அவ்வாறு செய்யும்போது அவர்களின் மதிப்பு கீழ் இறங்குவதை தவிர்க்க முடியாது..!

தனக்கான முடிவையே சரியாக எடுக்கமுடியாதவர்கள் மற்றவர்களுக்கான முடிவை எவ்வாறு சரியாக எடுப்பார்கள் என எதிர்பார்க்க முடியும்? :D

புலிகள் திருந்துமா என பலர் காலம் காலமா எதிர்பார்த்தார்கள் .ஒரு ஜனநாயக அரசியலுக்கு புலிகள் இடம் கொடுத்துஇருந்திருந்தால் பலர் புலிகளில் சேர்ந்திருப்பார்கள் .

ஆயுதம் தூக்கும்போதே ஜனநாயகம் பிழைத்துவிட்டது என்று பொருள்..! அதுவே புரட்சி..! அந்தப் புரட்சிக்குள் நீங்கள் ஜனநாயகத்தைத் தேடுகிறீர்கள்..! கருத்துச் சுதந்திரம் என்று சொல்லவந்தீர்கள் என நினைக்கிறேன்..!

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கூட இந்தியா ,சிங்கப்பூர் ,கனடா என்று அலைந்தவர் தானே ,ஏன் முதலிலேயே கனடா வரவில்லை என நானும் கேட்கலாம் .

நானும் ஊர் ஊராகத் திரிந்த/திரியும் ஆள்தான்..! ஆனால் நான் யாருக்கும் தவறான ஒரு முன்னுதாரணமாக இருந்ததில்லை..! அத்துடன், யாருக்கும் ஆலோசனையும் வழங்குவதில்லை..! :D

பலரும் தமது விருப்பு வெறுப்புகளுக்கு

ஏற்றமாதிரியே எழுத வேண்டும் என விரும்புகிறார்கள். என்னால் அப்படிச் செய்ய

முடியவில்லை. நம் பிள்ளைகளுக்கு பொய்களைச் சொல்லிச் சொல்லியே அவர்களை

வளர்த்தால் அவர்களின் பயணத்திசையும் பயணமும் வேறாகவே அமையும். அவர்கள்

சென்றடைகின்ற புள்ளி வேறாகவே இருக்கும். அதைப்போலவே நாம் சமூகத்துக்கும்

பொய்களைச் சொல்ல முடியாது. அல்லது உண்மைகளை மறைக்க முடியாது. அப்படி

உண்மைகளை மறைத்துப் பொய்களையும் கற்பிதங்களையும் முன்னிலைப்படுத்தும்போது

அந்தச் சமூகம் தவறான வழிகளிலே பயணித்து, பாதகமானதொரு புள்ளியைச்

சென்றடையும்.

நமது அதீத கற்பிதங்களே நமது

தோல்விகளுக்கும் பின்னடைவுக்கும் காரணம் என்பது நமது அனுபவம். எனவேதான்

சுயவிமர்சனங்கள் அவசியமாகப் படுகின்றன. அந்த உணர்வோடு எழுதப்படும்

வரலாற்றுக் குறிப்புகள் முக்கியமானவை. அவற்றுக்கு ஒரு பெரும்

பங்களிப்புள்ளது.

இந்தக் கருணாகரனும் மற்றவருக்கு ஆலோசனையே சொல்கிறார்..! :D ஆலோசனை சொல்வதற்கும் ஒரு தகுதி வேணும்..! முதலில் அந்தத் தகுதி தனக்கு உள்ளது என்பதை நிரூபிக்க வேணும்..! நாலு கட்டுரை எழுதினால் பத்தாது..! :blink:

எந்தவொரு பதிலும் திருப்தி இல்லை .வெறும் சடையல்.

  • கருத்துக்கள உறவுகள்

எந்தவொரு பதிலும் திருப்தி இல்லை .வெறும் சடையல்.

சரி.. :D

  • கருத்துக்கள உறவுகள்

இது எல்லாம் தவறில்லை ஆனால் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தவர் எந்த  வாக்குறுதியின் அடிப்படையில் அதை இடையில் நிறுத்தினார் என்பதை சொல்லாது ஈழபோராட்டத்துக்கு அறிவுரை சொல்லும் கேவலமான  தேசியம்  புலம்பெயர் தேசத்தில் முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.

:lol::D:(  அப்படிப்பட்ட ஒரு உண்ணாவிரதத்தைத்தான்  வேண்டாம் என்று கூறுகிறேன்.

எப்படி பட்ட உண்ணாவிரதம் வேண்டும் என்று ஐயா இருந்து காட்டினால்.
இளையவர்கள் பின்பற்றுவார்கள்.
பரமேஸ்வரன் போன்றவர்கள் தமது பிழைகளை திருத்தி கொள்ளுவார்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எங்கே எப்போது அஹிம்சைப் போராட்டம் செய்தீர்கள்?  இப்போதும் புலம்பெயர்ந்த பின்பும் பிரேரணையை நடுவீதியில் வைத்துக் கொழுத்தும் பிற்போக்குவாதிகளாகத்தானே இருக்கிறீர்கள்?   அதுவும் ஒரு அரச அலுவலகத்தின் முன்பு.  மற்றவர்கள் வீதியில் இறங்கிப் போராடவேண்டும்.  நாம் கணனியில் இருந்து ஊக்கப்படுத்திக் கொண்டிருப்போம்.  நீங்கள் ஒன்றுக்கு ஆதரவளிப்பதாக இருந்தால் அதற்கு நீங்களும் தயாராக இருக்க வேண்டும்.  அதைவிடுத்து, மற்றவன் செய்யும்போது அவனை உசுப்பி விட்டுவிட்டு நாம் மறைந்திருப்பதல்ல.  அப்படி ஆதரவு கொடுப்பதாக இருந்தால் நீங்கள் முதலில் இருந்துவிட்டுப் பின்னர் மற்றவர்களுக்கு ஆதரவு கொடுக்கப் பழகுங்கள்.  இல்லையேல் பேசாமல் இருங்கள்.  அவர்களை உசுப்பேற்றி அந்தப் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாழாக்காதீர்கள்.

பத்து லட்சம் புலம்பெயர் மக்களில் பத்துப்பேர் கொளுத்தினார்கள் என்றால் அது எப்படி ஒரு பிரதிநிதிப்படுத்தல் (Representation) ஆகும்? நீங்கள் வேறு யாரிலோ இருக்கும் குறையை இங்கே களத்தில் எழுதுகிறீர்கள் என நினைக்கிறேன். அவர்களும் யாழ்களத்தைப் பார்ப்பவர்களா? :D

காலம் கடந்த புரட்சி. 

  காலம் எவ்வாறு கடக்கும் புரட்சிக்கு தேவை இருக்கும்பொழுது? 

  It is never too late to do the right thing !

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மட்டுநிறுத்தினராக இருந்து கொண்டு இப்படி கருத்து எழுதலமா?

அவர் தலைவர் என்று சொன்னால் அதுக்கு பதில் எழுதி இருக்கவேண்டும் அல்லது விளக்கம் கேட்டு இருக்க வேண்டும் ஆனால்   இது ஒரு அப்பட்டமான தனிநபர் தாக்குதல்.

:D:lol:

தனது தலைவராக உமாமகேஸ்வரன் இருந்ததாக பலதடவை அர்ஜுன் அண்ணா எழுதியிருக்கிறார்.
நீங்கள் எதை வாசிக்கவில்லை என்பதை எப்படி மட்டுறுத்தினர் அறிவது?
 
தலைவர் கேட்டிருந்தால் என்று எழுதினார்...
பின்பு யாரோ அவரின்  தலைவரை கொழும்பில் போட்டார்கள். (அதாவது கற்று கொடுத்ததை நடைமுறை படுத்தினார்கள்)
 
இதில் உங்களிடைய விடயம் எது என்று புரியவில்லை. (அதுவும் சாதரனமனதுதான்)
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எங்கே எப்போது அஹிம்சைப் போராட்டம் செய்தீர்கள்?  இப்போதும் புலம்பெயர்ந்த பின்பும் பிரேரணையை நடுவீதியில் வைத்துக் கொழுத்தும் பிற்போக்குவாதிகளாகத்தானே இருக்கிறீர்கள்?   அதுவும் ஒரு அரச அலுவலகத்தின் முன்பு.  மற்றவர்கள் வீதியில் இறங்கிப் போராடவேண்டும்.  நாம் கணனியில் இருந்து ஊக்கப்படுத்திக் கொண்டிருப்போம்.  நீங்கள் ஒன்றுக்கு ஆதரவளிப்பதாக இருந்தால் அதற்கு நீங்களும் தயாராக இருக்க வேண்டும்.  அதைவிடுத்து, மற்றவன் செய்யும்போது அவனை உசுப்பி விட்டுவிட்டு நாம் மறைந்திருப்பதல்ல.  அப்படி ஆதரவு கொடுப்பதாக இருந்தால் நீங்கள் முதலில் இருந்துவிட்டுப் பின்னர் மற்றவர்களுக்கு ஆதரவு கொடுக்கப் பழகுங்கள்.  இல்லையேல் பேசாமல் இருங்கள்.  அவர்களை உசுப்பேற்றி அந்தப் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பாழாக்காதீர்கள்.

 அகிம்சை போராட்டம் என்பது தந்தை செல்வாவால் செய்யப்பட்டது.கடவுள் தான் தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதில் இருந்து போராட்டம் தோல்வியில் முடிந்தது. பிரபாகரனின் தலைமையில் நடைபெற்ற ஆயுதபோராட்டமும் உலக நாடுகளால் நசுக்கப்பட்டது. தமிழ் மக்கள் போராடாமல் எதையும் பெற முடியாது.

ஒரு மட்டுநிறுத்தினராக இருந்து கொண்டு இப்படி கருத்து எழுதலமா?

அவர் தலைவர் என்று சொன்னால் அதுக்கு பதில் எழுதி இருக்கவேண்டும் அல்லது விளக்கம் கேட்டு இருக்க வேண்டும் ஆனால்   இது ஒரு அப்பட்டமான தனிநபர் தாக்குதல்.

:D:lol:

அவரின் தலைவர் உமா என்று அவரே பல தடவை உறுதி மொழி எடுத்துள்ளார்.  :)

  • கருத்துக்கள உறவுகள்

 அகிம்சை போராட்டம் என்பது தந்தை செல்வாவால் செய்யப்பட்டது.கடவுள் தான் தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதில் இருந்து போராட்டம் தோல்வியில் முடிந்தது. பிரபாகரனின் தலைமையில் நடைபெற்ற ஆயுதபோராட்டமும் உலக நாடுகளால் நசுக்கப்பட்டது. தமிழ் மக்கள் போராடாமல் எதையும் பெற முடியாது.

அப்படி எழுந்ததனமாக நீங்கள் சொல்ல முடியாது.
உண்மையான அகிம்சை போரில் தமிழர்கள் ஈடுபட்டிருந்தால். 
சிங்களவர்கள் ஒன்றும் மிருகங்கள் இல்லை வைத்து கொண்டு கொடுக்காமல் இருக்க.
அவர்கள் எப்போதோ கொடுத்திருப்பார்கள். இல்லை என்றால் மேலை நாடுகளே அதை வாங்கி கொடுத்திருக்கும்.
(அதற்காக ஏன் வைத்திருக்கிறார்கள் என்று கேள்வி கேட்க கூடாது)
  • கருத்துக்கள உறவுகள்

தந்தை செல்வா காலத்தில் மீடியா சரியாக இல்லாததால் அதை ஒரு போராட்டமாக எடுக்க முடியாது..! :D

நடக்கும் புரட்சியில் இவர் தனிமனிதனாக மாற்றத்தை கொண்டுவருகிறார்

401214_10200356632014846_874946366_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை செல்வா காலத்தில் மீடியா சரியாக இல்லாததால் அதை ஒரு போராட்டமாக எடுக்க முடியாது..! :D

இதையெல்லாம் வாசிக்கும் போது .............
அதிர்ஷடம் இருந்த தமிழர்கள்தான் முள்ளிவைக்காலில் இறந்துபோனார்களோ என்று எண்ண  தோன்றுகிறது.
இருக்கிறவனை இப்படி போட்டு சித்திரவதை செய்கிறார்களே?
 
(யாரவது நீங்கள் எழுதியதை எழுத நினைத்திருப்பார்கள் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை)

பத்து லட்சம் புலம்பெயர் மக்களில் பத்துப்பேர் கொளுத்தினார்கள் என்றால் அது எப்படி ஒரு பிரதிநிதிப்படுத்தல் (Representation) ஆகும்? நீங்கள் வேறு யாரிலோ இருக்கும் குறையை இங்கே களத்தில் எழுதுகிறீர்கள் என நினைக்கிறேன். அவர்களும் யாழ்களத்தைப் பார்ப்பவர்களா? :D

பத்துப் பேர் கொளுத்தவில்லை.  ஒரு அமைப்புதான் அரச அலுவலகம் ஒன்றின் முன்னால் அதனை ஒரு நிகழ்வாகச் செய்திருந்தார்கள்.  இந்தச் சம்பவம் மாணவர்களாலும் மக்களாலும் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு நிகழ்விலேயே சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.  முடிந்தால் தீர விசாரித்துவிட்டு இங்கு கருத்தெழுதப் பழகுங்கள்.  முகநூலிலும் இது பிரசித்தம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

  காலம் எவ்வாறு கடக்கும் புரட்சிக்கு தேவை இருக்கும்பொழுது? 

  It is never too late to do the right thing !

சரியானதைச் செய்வதற்கு எப்பொழுதுமே காலம் கடந்து விடுவதில்லை.   இதுதான் அதன் தமிழாக்கம்.

சரியான செயலுக்கும் புரட்சிக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.  மற்றவர்களைத் திருத்துவதற்கு முன்னர் உங்களைத் திருத்தப் பாருங்கள்.  புரட்சி என்ற வார்த்தைகளையே இப்போது யாரும் அதீதமாகப் பயன்படுத்துவதில்லை.

 அகிம்சை போராட்டம் என்பது தந்தை செல்வாவால் செய்யப்பட்டது.கடவுள் தான் தமிழ் மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதில் இருந்து போராட்டம் தோல்வியில் முடிந்தது. பிரபாகரனின் தலைமையில் நடைபெற்ற ஆயுதபோராட்டமும் உலக நாடுகளால் நசுக்கப்பட்டது. தமிழ் மக்கள் போராடாமல் எதையும் பெற முடியாது.

அவரின் தலைவர் உமா என்று அவரே பல தடவை உறுதி மொழி எடுத்துள்ளார்.  :)

யாரையும் எதையும் செய்யவேண்டாம் எனக் கூறவில்லை.  காலத்திற்கேற்ற வகையில் செயற்படுங்கள் என்றுதான் கூறுகிறோம்.

Edited by தமிழச்சி

புதிசா கொஞ்சபேர் இங்க வெளிக்கிட்டு இருக்காங்க பாடம் எடுக்க 

  • கருத்துக்கள உறவுகள்

யாரையும் எதையும் செய்யவேண்டாம் எனக் கூறவில்லை.  காலத்திற்கேற்ற வகையில் செயற்படுங்கள் என்றுதான் கூறுகிறோம்.

நீங்கள் ஆசைபடாமல் இருக்கலாம்............

எனக்கு  கொஞ்சம் ஆசையாக இருக்கிறது. ஒருவரும் ஒன்றும் செய்யாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்று பார்க்க. சற்று மாற்று சிந்தனையாக  இது இருக்கிறது.
ஒருமுறை சொல்லிவிடுங்களேன் ஒருவரையும் ஒன்றும் செய்யாதிருங்கள் என்று.
 
காலத்திற்கு ஏற்ற வகையில் என்றால்???
நீங்கள் சொல்லி அதை விளங்கி கொள்ளுபவர்கள் பிழையாக விளங்கி கொள்ள சந்தர்ப்பம் நிறையவே இருக்கிறது.
அகவே அதை  கவனத்தில் எடுத்து ஒருமுறை காலத்திற்கு ஏற்ப நீங்கள் செய்து காட்டினால். அதை பார்த்து மற்றவர்களும் செய்வார்கள் அல்லவா?
 
"கூறுகிறோம்"
ஒரு கூட்டாகவே இருக்கிறீர்கள். ஒருமுறை உங்களது கூட்டத்தை  களமிறக்கி விடுங்களன். தமிழன்  பார்த்து பழகி கொள்ளட்டும்.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில் பெரிய விடயம் ஒன்றுமில்லை..! அடிப்படைக் கொள்கை இல்லாது ஒரு கட்சியில் இருந்துவிட்டு இன்னொரு கொள்கைக்குத் தாவுவது பெரிய விடயமல்ல..! ஆனால் கட்சி மாறும்போது மற்றவருக்கு ஆலோசனை சொல்லும் தகைமையை அவர் இழந்துவிடுகிறார்..! இடைக்கால தலைவராக இருக்கும் Rae தலைவராகமுடியாமல் தத்தளிக்கும் காரணம் இதுதான்..! நாளையே லிபரல் சரியில்லை என்று NDP க்கு போகமாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்?

ஆகவே யாரும் கட்சி மாறலாம்..! ஆனால் அவ்வாறு செய்யும்போது அவர்களின் மதிப்பு கீழ் இறங்குவதை தவிர்க்க முடியாது..!

தனக்கான முடிவையே சரியாக எடுக்கமுடியாதவர்கள் மற்றவர்களுக்கான முடிவை எவ்வாறு சரியாக எடுப்பார்கள் என எதிர்பார்க்க முடியும்? :D

ஆயுதம் தூக்கும்போதே ஜனநாயகம் பிழைத்துவிட்டது என்று பொருள்..! அதுவே புரட்சி..! அந்தப் புரட்சிக்குள் நீங்கள் ஜனநாயகத்தைத் தேடுகிறீர்கள்..! கருத்துச் சுதந்திரம் என்று சொல்லவந்தீர்கள் என நினைக்கிறேன்..!

பொப் ரே ஒன்ராரியோ மாகாண என் டி பி கட்சியின் தலைவராகவும், ஒன்ராரியோ மாகாண முதல்வராகவும் இருந்தவர். 1991 வரை நடைபெற்ற இவரது ஆட்சியிலேயே இறுதியாக ஒன்ராரியோ செழிப்பாக இருந்தது. அதன் பின்பு 2003ல் மலர்ந்த மகின்ரியினுடைய காலத்தை குறிப்பிடலாம்.

பொப் ரேயினுடைய திறமை காரணமாகத்தான் 2009ல் சமஷ்டி லிபரல் கட்சி(Federal Liberal Party) அவரை இணைத்துக் கொண்டது.

கட்சிகளின் பெயர் ஒன்றாக இருந்தாலும் , இந்தியா போலல்லாது கனடாவில் ஒரே பெயரைக் கொண்ட மாகாணக் கட்சிக்கும் , சமஷ்டிக் கட்சிக்கும்,   அவைகளுடைய கொள்கைகளிலும் போக்குகளிலும்  நிலைப்பாடுகளிலும் பல அடிப்படை வித்தியாசங்கள்  இருக்கின்றன. எனவே இன்றைய என்டிபி கட்சிக்குக் கொள்கை இல்லை என்பதற்காக பொப் ரேக்கு கொள்கை இல்லை என்று நீங்கள் கூற முடியாது. 

லிபரல் கட்சியில் வேட்பாளராக நிற்க முனைந்து நிராகரிக்கப்பட்ட ஆத்திரத்தில் அதே தேர்தலில் என்டிபியில் போட்டியிட்டு தோல்வி கண்ட பின்னும்,  குறிப்பிட்ட பிரேரணை எரிக்கப்பட்ட கூட்டத்திலும் கலந்து கெண்டதுடன் தமிழ் தலைவர்கள் மக்களுக்கு செவி சாய்க்க வேண்டும் என அறிவுரை வழங்கிய ஒன்ராரியோ என்டிபி கட்சியின் தலைவரும், எம் இளையோர் அமைப்பின் முன்னாள் பெருந்தகையுமானவரை விட  பொப் ரே கொள்கையும் நிலைப்பாடும் கொண்டவர்.

இவ்வாறானவர்கள் தான் இன்று எமது இளைய சமுதாயத்தை வழி நடத்திச் செல்கிறார்கள். இவர்களின் வழி நடத்தலைப் பின்பற்றுவார்களாயின் இம் இளைய சமுதாயத்தினர் தம்மையும் பாழாக்கி எம் இனத்தையும் பாழாக்குவார்கள் என்பதில் ஐயமில்லை. கடந்த காலத்திலும் இது தான் நடந்தது இப்போதும் இது தான் நடக்கிறது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலம் கடந்த புரட்சி. 

காலம் கடந்த புரட்சி என்று சரியாகக் கூறியிருந்தீர்கள் தமிழச்சி. எம்மவருடைய புரட்சி ஆரம்பத்திலேயே காலம் கடந்துதான் தோற்றம் பெற்றது. மகாத்மா காந்தியின் அஹிம்சைப் போராட்டங்கள் உதாசீனப்படுத்தப்பட்டு உலகம் பூராவும் உரிமைகளுக்காகவும் வேறு பல காரணங்களுக்காகவும் ஆயுதங்களை நாடிய காலத்தில் எம்மவர்கள், தந்தை செல்வா போன்றவர்களின் தலைமையில் அஹிம்சையாகப் போராடினார்கள். புரட்சி செய்தார்கள்.

எழுபதுகளின் நடுப்பகுதியில் உலக நாடுகள் அனைத்தும் ஆயுதங்கள் தவிர்க்கப்படவேண்டுமென்ற நோக்கில் பேச ஆரம்பித்து எழுபதுகளின் இறுதிப் பகுதியில் முற்றுமுழுதாக ஆயுதங்களை நிராகரித்தபோது, தமிழர்களாகிய நாங்கள் ஆயுதங்களை ஏந்த ஆரம்பித்தோம். இரண்டாவது தடவையாக, காலம் கடந்தே எமது புரட்சியை ஆரம்பித்தோம்.

ஆகவே, நீங்கள கூறியது போல, நாம்காலம் கடந்துதான் எமது புரட்சிகளைச் செய்திருக்கிறோம்.

இதை நான் எழுதிய காரணத்தால் இதற்குப் பின், ஈரான், ஈராக் போன்ற நாடுகளில் ஆயுதங்கள் பாவிக்கப்படவில்லையா என்றுகூட ஒரு சிலர் நினைக்கலாம். ஆனால், நான் குறிப்பிட்டது என்னவென்றால், இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பிற்பாடு ஆங்காங்கே நடைபெற்ற போர்களிலும், குறிப்பாக வியட்நாமில் நடைபெற்ற போர்களிலும் ஏற்பட்ட மனித உயிர்ச் சேதத்தின் எண்ணிக்கை அதிக அளவாக இருந்தது. இந்த மனித உயிர்ச் சேதம் தவிர்க்கப்படவேண்டுமென்பதற்காகவே ஆயுதக் களைவுக்குள் உலகம் நுழைந்தது.

எண்பதுகளின் நடுப்பகுதியிலும் 90களின் ஆரம்பப் பகுதியிலும் இரண்டாயிரங்களின் ஆரம்பப் பகுதியிலும் மத்தியகிழக்குப் பிராந்தியங்களில் நடைபெற்ற போர்களில் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டபோதும், ஏற்பட்ட மனித உயிர்ச் சேதமானது வியட்நாம் போர் போன்ற போர்களில் ஏற்பட்ட மனித உயிர்ச் சேதத்தைவிட மிகமிகக் குறைவானதாகும்.

இப்போதும் புரட்சி என்ற பெயரில் நாம் தவறான பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறோம்.

லண்டன் மாணவர்களின் உண்ணாவிரதம் இந்தியத் தூதரகத்தில் மனு கொடுத்ததுடன் முடிவுக்கு வந்துள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

பத்துப் பேர் கொளுத்தவில்லை.  ஒரு அமைப்புதான் அரச அலுவலகம் ஒன்றின் முன்னால் அதனை ஒரு நிகழ்வாகச் செய்திருந்தார்கள்.  இந்தச் சம்பவம் மாணவர்களாலும் மக்களாலும் ஒழுங்கு செய்யப்பட்ட ஒரு நிகழ்விலேயே சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.  முடிந்தால் தீர விசாரித்துவிட்டு இங்கு கருத்தெழுதப் பழகுங்கள்.  முகநூலிலும் இது பிரசித்தம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கணக்குப்படி பார்த்தால் அந்த அமைப்பில் 1000 பேர் உறுப்பினர்களாக இருந்தால் மொத்தம் 1010 பேர் தீர்மானத்தை எதிர்த்தவர்கள்.  :huh:  இந்த ஆயிரத்துப் பத்து பேரும் தமிழர்களாகவே இருக்க வாய்ப்பு உள்ளது..! ஆகவே லண்டன் மக்கள் முழுப்பேருமே தீர்மானத்தை எதிர்த்தவர்கள் ஆகிறார்கள்..! :o

இதன்படி 100 வீதம் பங்குபற்றிவிட்டார்கள்..! :blink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.