Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விலகியதும் வேலையை காட்டியது காங்.,: மு.க.,ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. அதிரடி ரெய்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: தி.மு.க, பொருளாளர் மு.க.,ஸ்டாலின் வீட்டில் இன்று காலை 7.15 மணி முதல் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். காங்., கூட்டணியில் இருந்து தி.மு.க.,விலகிய 2 நாட்களில் சி.பி.ஐ., தனது வேலையை துவக்கியிருக்கிறது.

இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்தியா திருத்தம் செய்யப்பட்ட தீர்மானத்தை கொண்டு வர மறுத்து விட்டதால் மத்திய அரசில் இருந்து தி.மு.க., விலகியது. இது தொடர்பாக திமுக மத்திய அமைச்சர்கள் தங்கள் ராஜினாமா கடிதத்தை நேற்று பிரதமரை நேரில் சந்தித்து கொடுத்தனர். ராஜினாமா கடிதம் கொடுத்த 24 மணி நேரத்தில் காங்கிரசின் சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று தனது பணியை துவக்கினர்.

இன்று காலையில் மு.க.,ஸ்டாலினின் தேனாம்பேட்டை வீடு மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் வீடு என சென்னையில் பல இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருவாய் மற்றும் கஸ்டம்ஸ் அதிகாரிகள் என பல குழுக்கள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளது. வேளச்சேரி, தேனாம்பேட்டை, தி.நகர் என பல இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து மற்றும் வெளி நாட்டு கார் வாங்கியது தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது. மு.க.ஸ்டாலின் வீட்டில் அதிரடி சோதனை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள், ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இவர் சட்டவிரோதமாக சொகுசு கார்களை இறக்குமதி செய்து வைத்திருப்பது குறித்து வழக்கு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது பழிவாங்கும் நடவடிக்கை: மு.க.,ஸ்டாலின் : ரெய்டு நடந்து கொண்டிருக்கும் போது நிருபர்களிடம் பேசிய மு.க.,ஸ்டாலின்; இது பழிவாங்கும் நடவடிக்கை ஆகும். கூட்டணியில் இருந்து விலகியதால் காங்கிரசின் கைப்பாவையான சி.பி.ஐ., இவ்வாறு நடவடிக்கை எடுத்து வருகிறது. எந்த வழக்கையும் சட்டப்படி சந்திப்பேன் என்றார்.

ஸ்டாலின் மகன் மீது வழக்கு ?

இன்று நடந்து வரும் சோதனை ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலினை மையமாக வைத்து இருக்கும் என தெரிகிறது. இவர் வாங்கியிருக்கும் வெளிநாட்டு கார் தொடர்பாக அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதனால் மகன் மீது ‌வழக்கு செய்யப்படும் என தெரிகிறது. இதற்கிடையில் காரை ஒப்படைக்க தயாராக இருப்பதாக ஸ்டாலின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

உள்நோக்கம் என்கிறார் பொன்முடி : அரசியல் வழிவாங்கும் நடவடிக்கையாக ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை நடைபெற்று வருவதாகவும், மத்திய அரசில் இருந்து திமுக விலகியதும் இந்த சோதனை நடத்தப்படுவதாகவும் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். மேலும் கார் வாங்கி பல மாதங்கள் ஆன நிலையில் தற்போது சோதனை நடத்துவது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

தவறாக பயன்படும் சி.பி.ஐ., :

தி.மு.க., எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் கூறுகையில், இது கண்டிப்பாக பழிவாங்கும் நடவடிக்கை தான் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது : காங்கிரஸ் அரசால் சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுவதாக பொதுவாக கூறப்படுகிறது; தற்போது அது உண்மை என நிரூபணம் ஆகி உள்ளது; எதிர்க்கட்சிகளை பழிவாங்குவதற்காக சிபிஐ பயன்படுத்தப்படுகிறது; எந்த வித புகாரும் குற்றச்சாட்டும் இல்லாத நிலையில் இந்த சோதனை நடத்தப்படுகிறது; சோதனையை தொடர்ந்து என்ன நடவடிக்கை இருக்கும் என தெரியவில்லை; எதுவாக இருந்தாலும் அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை; எங்களிடம் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. இவ்வாறு டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

Dinamalar

  • கருத்துக்கள உறவுகள்

இதனைத்தான்.... ஊத்தைவாளி அரசியல் என்பது.
தன்னுடன் ஒருவர் இருக்குமட்டும்... அவர் நல்லவர், விலகியவுடன் கெட்டவர் ஆகி விட்டார்கள்.
இது, ஆசியாவில், அதுகும்... இந்தியாவில் மட்டுமே... நடக்கக் கூடிய "பிளக் மெயில்" அரசியல் காங்கிரசுக்கு மட்டுமே உரித்தான ரவுடித்தனம். காங்கிரசை தமிழ்நாட்டில் இருந்தே... அப்புறப் படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. தமிழ் நாட்டின், திராவிடக் கட்சிகளே.... உங்களுக்கு ரோசம் இருந்தால், இனி ஒரு போதும், காங்கிரசுடன் கூட்டு வைக்காதீர்கள். சோனியாவை... சொக்கத்தங்கம் என்று பாராட்டிய கருணாநிதி அனுபவிக்கட்டும்.

இதுல நாம பேசவோ விவாதிக்கவோ ஒன்றுமே இல்லை. உப்பு தின்னவன் தண்ணி குடிச்சே ஆகணும்.

 

தலீவர் சொல்லுவர் : " கூடா நட்பு கேடி விளைவிக்கும் " னு இது அவருக்கு இப்போது தெரியும் என்று நினைக்கிறேன்.

கருணாநிதி ஒரு அரசில் சகுனி. வடிவேலு ஒரு படத்தில சொல்லுறமாதிரி "முதல் போட்டு (திருட்டு) தொழில் பண்ணுறவன்". இந்த சிபிஐ விசாரணை எல்லாம் அவர் போட்ட முதல். எலெக்சனுக்கு இன்னும் சரியா இருக்கிறது ஒரு வருசம். ஆகவே இதுகளால வாற அனுதாப ஓட்டுக்கள் ஒரு புறமும், மூழ்கப் போகின்ற காங்கிரஸ் கப்பல்ல இருந்து நழுவுறது மறுபுறமும்... விசாரணைகள் வழக்குகள் இழுபடும் எண்டும் தெரியும். அதுக்குள்ள புது ஆளுங்கட்சியோட கூட்டு மட்டும் வைத்துக் கொண்டால் மீண்டும் மந்திரிப் பதவிகள், வழக்குகளும் வாபஸ். கிழவன் வயசானாலும் ஒரு கல்லில பல மாங்காய்களை :icon_mrgreen:  விழுத்துற விண்ணன் தான் போங்க.

பாவம் ஸ்டாலின்! இந்தியக் ---- தமது சுயரூபத்தை காட்டி விட்டார்கள்!

இது ஒரு பெரிய ஜனநாயக நாடாம்????

இந்தக் --- கும்பலுக்கு ஐ. நா. சபை பாதுகாப்புச் சபையில் நிரந்தர அங்கத்துவம் ஒரு கேடா?

சட்டவிரோதமாக பயங்கர ஆயுதங்களை வழங்கி தமிழின அழிப்பை நடாத்திய மத்திய அரசுக்கெதிராக உயர் நீதிமன்றில் கருணாநிதி வழக்குத் தாக்கல் செய்வதன் மூலம் காங்கிரஸ் ---- கொட்டத்தை அடக்கலாம்.

போர்குற்ற வழக்கு ஒன்றையும்,

------------------------------------------------------

 


உடன் செய்வார்களா?

Edited by நிழலி
கள விதிகளை மீறிய சொற் பிரயோகங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
ஸ்ராலின் வீட்டில் விடிய விடிய அதிரடி சோதனை! - புதுடில்லியிருந்து வந்துள்ள 4 சி.பி.ஐ. அதிகாரிகளால் பரபரப்பு! 
[Thursday, 2013-03-21 08:33:50]
M-k-stalin-seithy-150.jpg
இந்தியாவின் ஆளும் கூட்டணியிலிருந்து தி.மு.க. வெளியேறி, அமைச்சர்களும் இராஜினாமா செய்துள்ள நிலையில் தி.மு.க. வின் பிரதித் தலைவர் ஸ்ராலின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று புதன்கிழமை அதிகாலை அதிரடிச் சோதனை ஒன்றை நடத்தியிருப்பதாக சென்னையிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அவரது இல்லமும், தியாகராஜ நகரிலுள்ள அவரது நண்பர் ராஜசங்கரின் இல்லமும் இன்று அதிகாலை முதல் அதிரடி சோதனைக்குள்ளாகியிருக்கின்றது. இந்தச் சோதனைக்கான காரணம் உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லை. மத்திய அரசின் உத்தரவின் பேரிலேயே இந்தச் சோதனை இடம்பெறுகின்றது.
 
இன்று அதிகாலை 3.00 மணி முதல் இவ்விருவரது வீடுகளையும் சுற்றிவளைத்த சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த சோதனை நடவக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள். இதற்கான காரணத்தை கேட்ட போதிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் அது தொடர்பில் பதிலளிக்கப்படவில்லை.
 
புதுடில்லியிருந்து வந்துள்ள 4 சி.பி.ஐ. அதிகாரிகள் தலைமையிலேயே இந்தச் சோதனைகள் இடம்பெறுகின்றன. ஸ்ராலின் பயன்படுத்தும் வெளிநாட்டு உயர் ரக கார் தொடர்பாகவே இந்த விசாரணை இடம்பெறுதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மத்திய அரசிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் பழிவாங்கும் வகையில் இந்த சோதனை அதிரடியாக நடத்தப்படுவதாக தி.மு.க. பிரமுகர் ஒருவர் தெரிவித்தார். இச்சம்பவம் காரணமாக தி.மு.க. ஆதரவாளர்கள் சீற்றமடைந்திருக்கின்றார்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

கலைஞர் கருனாநிதிக்கு திருக்குறள் அத்துப்படி. ஒரு அரசன், அரசு எப்படி இயங்கவேண்டும் என்பதைத் திருக்குறள் ஆழமாக விளக்கியுள்ளதைப் புரிந்துகொள்ளாதவர் எனச் சொல்லமுடியாது. தெரிந்தே அத்தனை தவறுகளையும் செய்துள்ளார். அவர் இறக்குமுன்பாக தவறுகளுக்கான அத்தனை தண்டனைகளையும் அவர் அனுபவித்த பின்புதான் இறக்கவேண்டும். காங்கிரஸை ஊத்தைவாளி என்று சொல்வது மலம் மணக்கிறது என்று சொல்வதற்கு இணையானது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆந்திராவில் மிகவும் வேகமாக காங்கிரசுக்கு போட்டியா வளர்ந்து வந்த ஜெகன் மோகன் ரெட்டியை சிபிஐ வைத்து மிரட்டி இன்று வரை உள்ளே போட்டார்களோ......அதே போல எப்பிடி மாயாவதியை சிபிஐ வைத்து மிரட்டி மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கும் படி கேட்டு இருக்காங்களோ.....அதே ஒரு பாணி மத்திய உளவுத்துறையை வைத்து ஸ்டான்லின் மீதும் காடப்படுகின்ற்றது.....

தி மு க வின் வெளி வந்ததற்கு காரணம் ஸ்டான்லின் கொடுத்த அழுத்தம் என்று காங்கிரஸ் தலைமைப்பீடம்.... உறுதியாக நம்புகின்றது.......

இது ஒரு கடைந்தெடுத்த அரசியல் அயோக்கியத்தனம்...... பழிவாங்கல் என்பது.... சுண்டலை போன்ற நடுநிலையாளர்களின் கருத்து...... :D

  • கருத்துக்கள உறவுகள்
ஸ்டாலின் மகனுக்கு 'தலைவலி' தந்த ஹம்மர்.. ஆனால் நாயுடு 'தலை'யைக் காத்த அட்டகாசமான கார்!
Posted by: Sudha Published: Thursday, March 21, 2013, 11:04 [iST]
சென்னை: ஹம்மர் கார் வாங்கப் போய் இன்று சிக்கலில் மாட்டியுள்ளார் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின். என்றோ வாங்கிய இந்தக் காரை வைத்து இன்று அரசியல் சதுரங்கத்தை நடத்தியுள்ளது காங்கிரஸ்.
ஹம்மர்... இந்தப் பெயர் ஒரு நேரத்தில் பெரும் பெரும் பணக்காரர்கள் வாயில் ஹம்மிங்காக வலம் வந்த பெயர். அப்படி ஒருஅட்டகாசமான கார். ஹம்மர் இருந்தால் அவர் பெரிய்ய்ய்ய்ய ஆள் என்று ஒரு கெளரவம் கிடைக்கும்.
அந்த ஹம்மரை வாங்கப் போய்த்தான் இன்று சிக்கலில் மாட்டியுள்ளது ஸ்டாலின் குடும்பம்.
21-1363843033-hummer-600.jpg
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலின் வீட்டில் சிபிஐ ரெய்டுக்கு உத்தரவிட்டது நாராயணசாமி: சோனியா 'காய்ச்சி' எடுத்தார்!

டெல்லி: திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ ரெய்ட் நடத்த உத்தரவிட்டது மத்திய பர்சனல் மற்றும் பயிற்சித்துறையை கையில் வைத்திருக்கும் அமைச்சர் நாராயணசாமி தான் என்று தெரியவந்துள்ளது.

பிரதமர் அலுவலக விவகாரத்துறை இணையமைச்சர் என்றே அதிகமாக வெளியில் தெரியப்பட்ட நாராயணசாமியிடம் தான் Department of Personnel and Training துறை உள்ளது.

இந்தத் துறையின் கட்டுப்பாட்டில் தான் சிபிஐ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம் ஆகியவை தான் சிபிஐயின் செயல்பாடுகளை நேரடியாகக் கட்டுப்படுத்துகின்றன.

ஆனாலும் சிபிஐயின் நிர்வாகக் கட்டுப்பாடுகள் நாராயணசாமியின் கையில் தான் உள்ளது.

இந் நிலையில் தான், காங்கிரஸ் தலைமையிடம் நல்ல பெயர் வாங்குவதாகக் கருதி, இன்று காலை டெல்லியில் இருந்து 7 அதிகாரிகளை அனுப்பி ஸ்டாலினின் வீட்டில் ரெய்ட் நடத்த வைத்துள்ளார் நாராயணசாமி.

இந்த விவரம் தெரியவந்தவுடன் காங்கிரஸ் தலைமையிடம் பேசிவிட்டு நேரடியாகவே நாராயணசாமியைக் கூப்பிட்டுப் பேசியுள்ளார் நிதியமைச்சர் ப.சிதம்பரம். சிபிஐ ரெய்டுக்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளார்.

அடுத்த சில நிமிடங்களில் நாராயணசாமியை தொலைபேசியில் பிடித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் அவரை வாட்டி எடுத்ததாகத் தெரிகிறது. இதையடுத்து சிபிஐ ரெய்ட் அரைகுறையாக நிறுத்தப்பட்டு டெல்லியில் இருந்து வந்த அதிகாரிகள் பாதியிலேயே கிளம்பிச் சென்றுவிட்டனர் என்கிறார்கள் காங்கிரஸ் தரப்பில்.

ஆனால், காங்கிரஸ் தலைமையிடம் பேசாமல், பிரதமருக்குத் தெரியாமல் நாராயணசாமி இந்த வேலையை செய்திருப்பாரா என்ற கேள்வி எழாமல் இல்லை. ஸ்டாலின் மீதான ரெய்டுக்கு யாரும் எதிர்பாராத வகையில் சிதம்பரம், பாஜக, இடதுசாரிகள் என அனைத்துத் தரப்பில் இருந்து எதிர்ப்புக் கிளம்பவே, நாராயணசாமி மீது பழியைப் போட்டு தப்பிக்கப் பார்க்கிறதா காங்கிரஸ் தலைமையா என்பதும் தெரியவில்லை.

Thatstamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலின் வீட்டில் சிபிஐ ரெய்ட் நடத்தியது தவறு: ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு

டெல்லி: திமுக பொருளாளர் முக ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியதற்கு மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இலங்கை விவகாரம் தொடர்பாக மத்திய அரசில் இருந்தும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்தும் திமுக விலகுவதாக நேற்று முன்தினம் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்தார். இதையடுத்து திமுக அமைச்சர்கள் நேற்று தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். திமுக ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருந்து விலகும் முடிவுக்கு பின்னால் அக்கட்சியின் பொருளாளர் மு.க. ஸ்டாலின் இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இன்று காலை ஸ்டாலினின் வீடு உள்பட தமிழகம் முழுவதும் 32 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியுள்ளது. மு.க. ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டதற்கு மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தியது பற்றி சற்று நேரத்திற்கு முன்பு தான் எனக்கு தகவல் கிடைத்தது. நான் வழக்கமாக பிற துறைகளின் செயல்பாடுகள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை. ஆனால் இந்த சோதனை குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சரிடம் (நாராயணசாமி என்று பின்னர் தெரியவந்தது) பேசியிருக்கிறேன். இந்த சோதனையை நான் எதிர்க்கிறேன். சிபிஐயின் இந்த செயல் தவறாக புரிந்து கொள்ளப்படும் என்றார்.

தமிழகத்தில் இலங்கை விவகாரத்தில் காங்கிரஸ் மீது கடும் கோபத்தில் உள்ள நிலையில், இந்த ரெய்ட் திமுகவுக்கு உதவியே புரியும் என சிதம்பரம் கருதுகிறார். தமிழகத்தின் நிலவும் உண்மையான சூழலை மத்திய அரசு புரிந்து கொள்ளத் தவறிவிட்டதாகக் கருதும் ப.சிதம்பரம், தமிழகத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு என ஒரு பாதுகாப்பான தொகுதி கூட இல்லாமல் போய்விட்டதாக நினைப்பதாகத் தெரிகிறது.

இதனால் தான் மத்திய அரசின் அவசர நடவடிக்கைகளை அவர் எதிர்க்கிறார். அதே நேரத்தில் மற்ற துறைகளின் நடவடிக்கை குறித்து சிதம்பரம் கருத்து தெரிவித்திருப்பது வழக்கத்துக்கு மிக மாறானது.

இந்த ரெய்டே தன்னால் தான் நடத்தப்படுவதாக மக்கள் கருதும் நிலை உருவாகலாம் என்றும் சிதம்பரம் கருதுகிறார். இந்தப் பெயரை வாங்க அவர் தயாராக இல்லை. இதனால் காங்கிரஸ் தலைமையிடம் பேசிவிட்டே, சிபிஐ ரெய்ட் தவறு என்று சிதம்பரம் கருத்துத் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

Thatstamil

தி மு க வின் வெளி வந்ததற்கு காரணம் ஸ்டான்லின் கொடுத்த அழுத்தம் என்று காங்கிரஸ் தலைமைப்பீடம்.... உறுதியாக நம்புகின்றது

 

அழுத்தம் என்பதை தாண்டி , இப்போது யாரை அடித்தால் கலைஞர் வழிக்கு வருவார் என்ரெண்னியே செய்திருக்கும்.

 

நாராயணசாமி க்கும் இதற்கும் சம்மந்தம் இருக்க வாய்புகள் குறைவு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாராயண சாமி பலி ஆடு ஆக போகின்றார் .......

இதே வேலை இது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தனியே தி மு க வை மட்டும் நிக்க வைத்து அதிக நாடாளுமன்ற ஆசனங்களில் ஜெயிக்க பண்ணி பின்பு தாங்கள் ஆட்சி அமைக்க ஆதரவு வாங்கவும் இருக்கும்

ஆகவே இப்பிடியான செயல்களை செய்து தி மு க மீது ஒரு அனுதாபம் ஏற்ப்பட வைப்பதாகவும் இருக்கலாம்....

மொத்தத்தில் ஒரு அரசியல் நாடகம் நன்றாக நடக்கிறது....

Edited by SUNDHAL

இந்தியா உடையும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

 

 

நாட்டின் உளவுத்துறை அரசியலுக்கு அப்பால்பட்டதாக இருக்காத பல்லின  நாடு ஒருநாள் உடையும்.

அவர்களால் போன மதிப்பை அவர்களே திருப்பி கொடுக்கிறார்கள் போல இருக்கு . அப்பத்தான் மீண்டும் தேர்தல் முடிஞ்சதும் ஒட்டிக்கலாம் . ரைடு ஸ்டாலின் வீட்டில நடந்திருக்கு . மக்கள் அபிமானம் திமுகவுக்கோ கருணாவுக்கோ இல்லாவிட்டால் கூட ஸ்டாலின் மேல் இன்னும் தமிழர்களுக்கு மதிப்பு இருக்கிறது . ஸ்டாலின வச்சு தான் கொஞ்ச நஞ்ச சீட்டாவது தேத்தலாம் . அதனால அபிமானம் கூட கூட்டு களவாணி ரைடு இது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரியான பார்வை தமிழ் இது காங்கிரஸ் தி மு க நடாத்தி இருக்கும் ஒரு நாடகம்.....

  • கருத்துக்கள உறவுகள்

சிபிஐ சுயாதீனமாகச் செயல்படவேண்டிய அமைப்பு.. அதன் செயற்பாட்டை காங்கிரஸ் கண்டிக்கிறது என்றால் அந்த அமைப்பை அரசியல் மயப்படுத்திவிட்டோம் என்பதை வௌிப்படையாக ஒத்துக்கொள்கிறார்கள்..

21sircartoon_11.jpg

  • கருத்துக்கள உறவுகள்

thumbnail_20130321001122.jpg

அழகிரியும் சிதம்பரமும் சேர்ந்துதான் ஸ்டாலின் மீதான உளவு என்ற பெயரில் தாக்குதலுக்கு திட்டமிட்டனர் என்ற ஒரு கருத்தும் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

டெசோ: புதிய மொந்தையில் பழைய கள்!

 

ப்போதெல்லாம், தனக்கும் திமுகவுக்கும் சிக்கல் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் ஈழத் தமிழர் பிரச்னைக்காக உருகுவது கருணாநிதிக்கு வாடிக்கையாகிவிட்டது. இப்போது கடைசியாக அவர் மீண்டும் எடுத்துள்ள ஆயுதம் தான் ‘டெசோ’.

teso-300x177.jpg

இலங்கையில் தமிழர் பகுதிகள் மீது 2009 ல் ராஜபக்ஷே அரசு கடுமையான ராணுவத் தாக்குதல்களை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, கண் மூடி அமைதி காத்த மகானுபாவரான கருணாநிதி, இப்போது ‘தமிழ் ஈழ மக்களுக்கு உறுதுணையாக இருப்போம்; அவர்களது போராட்டத்தை முன்னெடுப்போம்; தமிழ் ஈழம் மலரச் செய்வோம்’ என்று கூறிக்கொண்டு, 1985 ல் உருவாக்கப்பட்ட டெசோ அமைப்பை மீண்டும் துவங்கி இருக்கிறார். கேப்பையில் நெய் வடிகிறது என்று அவர் சொன்ன போதெல்லாம் உருகிய தொண்டர்கள் கூட, இப்போது நக்கலாக சிரித்துக் கொள்கிறார்கள்.

இப்போது டெசோ ஆரம்பிக்க என்ன தேவை வந்தது? அதற்கு முன், ‘டெசோ’ என்றால் என்ன என்று முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

1984 – 85 காலகட்டத்தில் பிரதமராக இந்திராவும் தமிழக முதல்வராக எம்.ஜி.ஆரும் இருந்தனர். அப்போது இலங்கையில் தனிநாடு கேட்டுப் போராடிய எல்டிடிஈ, டெலோ போன்ற குழுக்களுக்கு தமிழகத்தில் போர்ப்பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. 1984 ல் இந்திராவின் மறைவை அடுத்து ராஜீவ் பிரதமரான போது இந்தியாவின் இலங்கை அணுகுமுறை மாற்றம் கண்டது. அப்போது தமிழகத்தில் ஈழப் போராளிகளுக்கு பயிற்சி அளிக்கக் கூடாது; அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது. அப்போது எம்.ஜி.ஆர் உடல்நteso2-300x210.jpgலம் குன்றி அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்தார்.

அந்தக் காலகட்டத்தில் திமுக மிகவும் பலவீனமான நிலையில் இருந்தது. அதிமுகவின் அசுர சக்தி முன்பு பெட்டிப்பாம்பாகக் கிடந்த திமுகவுக்கு, இந்த விவகாரம் லட்டாகக் கிடைத்தது. அப்போது தான் தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு (Tamil Eelam Supporters Organaisataion – TESO) அமைப்பை கருணாநிதி தோற்றுவித்தார். திமுக, திக (வீரமணி), தமிழ்நாடு காமராஜ் காங்கிரஸ் (பழ நெடுமாறன்), தமிழ்நாடு பார்வர்ட் பிளாக் (அய்யண்ணன் அம்பலம்) ஆகிய அமைப்புகள் அதன் உறுப்பினர்களாக இருந்தன. 1985, மே 13 ல் டெசோ துவங்கப்பட்டது. இதன் கொள்கைகளாக ஐந்து முக்கிய நோக்கங்கள் வலியுறுத்தப்பட்டன (காண்க: பெட்டிச் செய்தி: 1)

மாநிலம் முழுவதும் டெசோ பேரணிகளை நடத்திய கருணா நிதி, அதில் இந்த ஐந்து நோக்கங்களையும் உறுதிமொழியாக ஏற்கச் செய்வது வழக்கமாக இருந்தது. அதன் உச்சகட்டமாக, மதுரையில் 1985 , மே 4 -ல் பிரமாண்டமான மாண்டு நடத்தப்பட்டது.

அதில் அகில இந்தியத் தலைவர்கள் பலர் பங்கேற்று, இலங்கைத் தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். தெலுங்கு தேசத் தலைவர் என்.டி.ராமராவ், பாஜக தலைவர் வாஜ்பாய், அசாம் கணபரிஷத் தலைவர் தினேஷ் கோஸ்வாமி, லோக்தளத் தலைவர் எச்.எல்.பகுகுணா, காங்கிரஸ் -எஸ் தலைவர் உன்னிகிருஷ்ணன், இந்துஸ்தான் முன்னணி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, சி.பி.ஐ, சி.பி.எம் தலைவர்கள் பலர் இதில் பங்கேற்றனர். இது இலங்கைவாழ் தமிழரின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்துக்கு பெரும் உந்துதலாக அமைந்தது என்பதை மறுக்க முடியாது.teso3-300x236.jpg

இந்த மாநாட்டில், இலங்கையிலிருந்தும் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் ( எல்டிடிஈ ), டெலோ, ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எப், புரோடெக் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்தோர் பங்கேற்றனர். அப்போதே ஈழத்தில் எல்டிடிஈ அமைப்பின் கரம் தான் ஓங்கி இருந்தது. அப்போது சகோதர அமைப்புகளைக் களை எடுக்கும் பணியை அவர்கள் துவங்கி இருக்கவில்லை.

ஆயினும், அமெரிக்காவில் இருந்து அவசரமாகத் திரும்பிய எம்.ஜி.ஆர், ராஜீவுடன் பேசி போராளிகள் மீதான தடையை நீர்த்துப் போகச் செய்தார். தவிர அவரே இலங்கைப் போராளிகளுக்கு தார்மிக உதவியும் செய்தார். எனவே, கருணாநிதியின் டெசோ திட்டம் செல்லுபடியாகவில்லை. இதை வைத்து தமிழகத்தில் அதிமுகவுக்கு எதிராக மக்களைத் திரட்ட முயன்ற கருணாநிதி தோல்வியே கண்டார். எனினும், அவரது இருப்பை நிலைநாட்டிக்கொள்ள டெசோ ஒரு வாய்ப்பளித்தது எனலாம்.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் நேரிட்ட குழப்பங்களால் 1989ல் மீண்டும் முதல்வரான கருணாநிதி, ஈழப் போராளிகளிடையிலான சண்டையால் வெறுத்துப் போனார்; அப்போது ‘டெசோ’வும் கலைக்கப்பட்டது. மத்தியில் ஆட்சியில் இருந்த ராஜீவைப் பகைத்துக் கொள்ளக் கூடாதல்லவா? பிறகு டெசோ அமைப்பையே அவர் மறந்தும் போனார்

அதன்பிறகு தமிழக அரசியல் வானில் எவ்வளவோ மாற்றங்கள். திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆட்சியைப் பிடித்தன; மத்திய ஆட்சியிலும் இரு கட்சிகளும் பங்கேற்றன. அப்போதெல்லாம், இலங்கைத் தமிழர் நலன் குறித்து திமுக தலைவருக்கு கிஞ்சித்தும் நினைவு வரவில்லை. உச்சகட்டமாக, 2009 ல் விடுதலைப்புலிகள் சுற்றிவளைக்கப்பட்டு முல்லைத்தீவிலும் ஆனையிறவிலும் லட்சக் கணக்கான ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர்.

அதுகண்டு தமிழகமே கொந்தளித்தது. ஆனால், ஸ்பெக்ட்ரம் ஊழலில் பெற்ற பல்லாயிரம் கோடி லஞ்சத்துக்கு நன்றிக் கடனாக (அச்சம்?) அமைதி காத்தது திமுக. அப்போது திமுகவின் ஆதரவுடன் தான் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மன்னுமோகன் ஆட்சி நிலைத்திருந்தது. கருணாநிதி நினைத்திருந்தால் ஒரே மிரட்டலில் (அமைச்சர் பதவிக்கு மட்டும் தான் மிரட்ட வேண்டுமா?) இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரை நிறுத்துமாறு இந்திய அரசை நிர்பந்தித்திருக்க முடியும். ஆனால் செய்யவில்லை. அவர் செய்ததெல்லாம், மூன்று மணி நேர உண்ணாவிரதமும், பிரதமருக்கு கடிதங்கள் எழுதியதும் மட்டுமே.

‘டெசோ’வின் (1985)  நோக்கங்கள்:

1. இலங்கையில் தமிழ் ஈழம் மலர ஆதரவு.

2. இலங்கைத் தமிழருக்கு நிலையான உரிமையும் நிரந்தரப் பாதுகாப்பும் கிடைக்கும் வரை போராடுவது.

3. போராளிகளுக்கு அடைக்கலம் தரும் கடமையிலிருந்து தவறாமல் இருப்பது.

4. தமிழினத்தின் பாதுகாப்புக்காக எந்தத் தியாகமும் செய்யத் தயாராக இருப்பது.

5. இந்தக் கடமைகளைச் செய்யும்போது  மத்திய,  மாநில அரசுகளின் அடக்கு முறைகளை  இன்முகத்துடன் எதிர்கொள்வது. 

தாய் மண்ணில் ஆட்சி செய்த தமிழினத் தலைவர் உதவுவார் என்று கடைசி வரை எதிர்பார்த்து ஏமாந்து லட்சக் கணக்கான தமிழ் மக்கள் ஈழத்தில் செத்தார்கள். இங்கோ, கூட்டணியை உறுதிப்படுத்தி, ‘இந்தியாவின் மருமகளுக்கு’ பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டிருந்தார் கருணாநிதி. இலங்கைத் தமிழருக்காக தன்னை தீயிட்டு மாய்த்துக் கொண்ட முத்துக்குமாரின் மரணத்தை கேலி பேசிய கருணாநிதி, விடுதலைப் புலிகளை ஆதரித்த சீமானை கைது செய்த கருணாநிதிக்கு, இப்போது திடீர் ஞானோதயம் வந்திருக்கிறது.

ஏனெனில் இப்போது, முன்னெப்போதும் காணாத படுதோல்வியில் வீழ்ந்து, மக்கள் நம்பிக்கையையும் தொண்டர்களின் ஆதரவையும் இழந்து தவிக்கும் கருணாநிதிக்கு எப்படியாவது மீள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டிருக்கிறது. அதற்காக புதிய மொந்தையில் அதே ‘டெசோ’ என்ற பழைய கள்ளை ஊற்றிக் கொடுக்கிறார். ஆனால், இம்முறை அவருக்கு ஏமாற்றமே காத்திருக்கிறது.

கடந்த ஏப்ரல் 30 ல் சென்னையில் கருணாநிதி தலைமையில் கூடிய வீரமணி, சுப்புலட்சுமி ஜெகதீசன், சுப.வீர பாண்டியன் ஆகியோர், மீண்டும் டெசோ துவங்கி உள்ளதாக அறிவித்துள்ளனர். மாறியுள்ள உலகச் சூழலில் தமிழ் ஈழ மக்களுக்கு உறுதுணையாக இருப்போம் என்று முழங்கி இருக்கிறார்கள் இவர்கள். இதைப் பார்த்து, முள்வேலி முகாம்களில் இருக்கும் ஈழத் தமிழர்கள் தலையில் அடித்துக் கொள்கிறார்கள்.

சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் (26.04.2012) கருணாநிதி, ”தனித் தமிழ் ஈழம் காணாமல் இந்த உலகை விட்டுப் போக மாட்டேன்” என்று சபதம் செய்திருக்கிறார்.

இதற்கு இலங்கை அதிபரின் தம்பி கோத்தபயா பதிலடி கொடுத்திருக்கிறார். தனி ஈழம் வேண்டுமானால் தமிழ்நாட்டில் அமைத்துக் கொள்ளுங்கள் என்று அவர் கூறி இருப்பது மமதையாகத் தான் தெரிகிறது. என்ன செய்வது, கருணாநிதி போன்ற புல்லுருவிகளைக் காணும் எவருக்கும் நம் நாட்டைப் பற்றிய கீழ்த்தரமான எண்ணம் தானே ஏற்படும்?

teso5.jpg

துணிவு இருக்
கிறதா?

“தமிழ் ஈழம் அமைக்க ஐக்கிய நாடுகள் சபை பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதை இந்தியா ஆதரிக்க வேண்டும்” என்று டெசோ அமைப்பு தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. இதை முதலில், தான் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐ.மு.கூட்டணித்
தலைவி சோனியாவிடம் துணிவுடன் கூறுவாரா கருணாநிதி? பத்திரிகைகள் தன்னை மறந்துவிடக் கூடாது என்பதற்காக நடத்தும் நாடகமாக டெசோ-வை அவர் தொடர்ந்து பயன்படுத்தினால், தீராத அவச்சொல்லுக்கு அவர் ஆளாக வேண்டிவரும்.

ஒருவேளை மத்தியில் ஆளும் கூட்டணியில் இருந்து கழன்றுகொள்ள கருணாநிதி நடத்தும் ஓரங்க நாடகமாக இது இருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள். அத்தனை ‘பகுத்தறிவு’ அற்றவரல்ல கருணாநிதி. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தனது குடுமி சிக்கியுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியை விரோதித்துக்கொள்ள அவருக்கு பைத்தியமா பிடித்திருக்கிறது? ஆந்திராவில்  ஜெகன்மோகன்  ரெட்டி படும் பாட்டைப்  பார்த்த பின்னரும் அவரது ’பகுத்தறிவு’ வேலை செய்யாதா?

இலங்கைப் போரின்போது, ”போர் என்றால் அப்பாவிகள் சாவது சகஜாமனது தான் ” என்று அதிமுக தலைவி ஜெயலலிதா கூறியதை மறக்க முடியாது. அதே போல, ”மழை விட்டும் தூவானம் விடவில்லை” என்ற கருணாநிதியின் புகழ் பெற்ற வாக்கியத்தையும் யாரும் மறக்க மாட்டார்கள். அவரது மூன்று மணிநேர உண்ணாவிரதத்தால் நிறுத்தப்பட்ட (?) இலங்கைப் போர் மீண்டும் துவங்கியபோது அவர் கூறிய விளக்கம் இது.

teso4.jpg

இப்போது ”ராஜபக்ஷே நம்ப வைத்துக் கழுத்தறுப்பவர்; அவரை நம்ப முடியாது” என்று திருவாய் மலர்ந்திருக்கிறார், கருணாநிதி. இவர் மட்டும் என்னவாம்? மதிமுக பொதுச்செயலாளர் வைகோவைக் கேட்டால் கருணாநிதியின் ‘ஆபத் தர்மம்’ குறித்து மூன்று மணிநேரம் பேசுவார். அதைக் கேட்க உங்களுக்கு பொறுமை இருக்கிறதா? கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையா என்கிறீர்களா? அதுவும் சரிதான்.

 

http://www.tamilhindu.com/2012/06/teso-karunanidhis-old-tamil-eelam-drama/

  • கருத்துக்கள உறவுகள்

293382440index.jpg

அரசியல் காழ்ப்புணர்ச்சிகளில் ஒன்றாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம் - கலைஞர்

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது குறித்து இன்று செய்தியாளர்களிடம் கலைஞர் பேசியபோது, செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் : 

தி.மு. கழகப் பொருளாளர், மு.க. ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. சோதனை நடந்திருக்கிறது. அது பற்றி உங்கள் கருத்து என்ன? 

நான் இன்று காலையில் 10 மணிக்குத் தான் அதுபற்றி அறிந்தேன். அதன் பிறகு தான் செய்தி பார்த்தேன். அது பற்றிய விளக்கங்கள் ஸ்டாலினால் தரப்பட்டிருக்கின்றது. நடைபெற்றது தவறு என்று மத்திய அமைச்சர் சிதம்பரம் உள்ளிட்டவர்களால் கருத்து வெளியிடப் பட்டிருக்கிறது. நீங்களும் பார்த்திருப்பீர்கள். 

நீங்கள் கூட்டணியிலிருந்து விலகிய காரணத்தால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்பட்ட சோதனை என்று இதை நீங்கள் நினைக்கிறீர்களா? 

உங்களுடைய கற்பனைக்கெல்லாம் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. 

மத்திய அமைச்சர் நடைபெற்ற சோதனை, தெரியாமல் நடந்தது என்று கூறியிருப்பதை நீங்கள் நம்பத் தயாரா? 

மத்திய அமைச்சர் அப்படி சொல்லியிருக்கிற போது நான் நம்ப முடியாது என்று சொல்ல முடியாது. 

இது அரசியல் காழ்ப்புணர்வு இல்லை என்று நினைக்கிறீர்களா? 

பொதுவாக தி.மு.கழகத்தைச் சுற்றி அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமான நடவடிக்கைகள் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அதில் இது ஒன்றாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். 

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் எடுக்கப்பட்ட நடவடிக்கை இல்லை என்பதைப் போலச் சொல்லுகிறீர்கள். கார் வாங்கியது என்பது எப்போதோ நடந்த செயல். அதற்காக நீங்கள் கூட்டணியிலிருந்து விலகிய மறுநாளே சோதனை நடத்தப்பட்டுள்ளது. அதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 

அதைப் பற்றி பல கட்சித் தலைவர்களும் எதிர்த்து கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அந்தக் கருத்துக்களுடன் நான் உடன்படுகிறேன். 

சம்மந்தப்பட்ட துறையின் அமைச்சரே துணை அமைச்சரிடம் அதற்காக வருத்தம் தெரிவித்திருப்பதாக ஒரு செய்தி வந்துள்ளதே? 

மத்திய அமைச்சர் இந்தச் சோதனைக்கு ஒப்புதல் தரவில்லை என்பதை அவரே வெளிப்படையாக அறிக்கையின் மூலம் தெரிவித்திருக்கிறார். அதற்கு மேல் நான் எதுவும் சொல்வது முறையல்ல. 

காங்கிரஸ் கட்சியின் கடந்த கால வரலாறுகளைப் பார்த்தால், கூட்டணியிலிருந்து எந்தக் கட்சியாவது விலகினால் இது போல பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தான் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இதுவும் ஒன்று தானே? 

பழி வாங்கும் அரசியல் டெல்லியிலே மாத்திரமல்ல; தமிழ்நாட்டிலும் இருக்கிறது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.