Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முள்ளியவளையில் உதயனுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் (படங்கள்)

Featured Replies

உதயன் நாளிதழ், மாணவர்களையும், வற்றாப்பளை கிராமத்தையும் கொச்சைப்படுத்தி கவிதை வெளியிடப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முல்லைத்தீவு முள்ளியவளையில் கல்விச்சமூகத்தால் ஆர்ப்பாட்ட நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டிடுள்ளது.

நேற்று பிற்பகல் தண்ணீருற்றுக்கிராமத்தில் உள்ள நெடுங்கேணி சந்தி எனப்படுகின்ற இடத்தில் ஆரம்பமாகிய ஆர்ப்பாட்டம் முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியை சென்றடைந்தது. அங்கு உதயனுக்கு எதிராக கண்டன உரைகள் இடம்பெற்றதை அடுத்து உதயன் பத்திரிகை மக்களால் தீயிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் முள்ளியவளை வித்தியானந்தக்கல்லூரி, வற்றாப்பளை மகாவித்தியாலயம் உட்பட்ட பாடசாலைகளின் மாணவர்கள், ஆசிரியர்கள் பெற்றோர் உட்பட பெருமளவானோர் பங்குகொண்டிருந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0001-1024x671.jpg

0002-1024x710.jpg

0003-1024x705.jpg

0004-1024x528.jpg

http://tamilleader.com/?p=8909

தொடர்புபட்ட செய்தி

பிரதேசவாதத்தை தூண்டிய உதயன் : பத்திரிகையை எரித்த வன்னி மக்கள்!

Edited by கலையழகன்

  • கருத்துக்கள உறவுகள்

செய்யவேண்டியது  எவ்வளவோ இருக்கு ,இவங்க என்னடா எண்டா  முட்டையில .......புடுங்கிறாங்க 

  • தொடங்கியவர்

செய்யவேண்டியது  எவ்வளவோ இருக்கு ,இவங்க என்னடா எண்டா  முட்டையில .......புடுங்கிறாங்க 

பாதிக்கப்பட்டவனுக்குத்தான் அதன் வலிபுரியும். நமக்குப் புரியாது. அவர்களுடைய எதிர்ப்பு நியாயமானது. உதயன் தனது பிழையை உணர்ந்து அவர்களிடம் கண்டிப்பாக மன்னிப்புக் கேட்கவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

பாதிக்கப்பட்டவனுக்குத்தான் அதன் வலிபுரியும். நமக்குப் புரியாது. அவர்களுடைய எதிர்ப்பு நியாயமானது. உதயன் தனது பிழையை உணர்ந்து அவர்களிடம் கண்டிப்பாக மன்னிப்புக் கேட்கவேண்டும். 

என்ன பாதிப்பு எது கூடியது  அல்லது எது குறைந்தது  தெளிவாச் சொல்லுங்கோ ,எதிரி என்ன நினைக்கின்றானோ 

நீங்க அதுக்கு எருப்போட்டு தண்ணி ஊத்துங்கோ 

செய்யவேண்டியது  எவ்வளவோ இருக்கு ,இவங்க என்னடா எண்டா  முட்டையில .......புடுங்கிறாங்க 

அவர்கள் செய்யவேண்டியதை சரியாகத்தான் செய்கின்றார்கள்.

உதயனை எதிர்ப்பதும் ஒன்றுதான் சிங்களப்பேரினவாதத்தை எதிரப்பதும் ஒன்றுதான். மையவாதமும் பேரினவாதமும் எப்போதும் கூட்டாளிகள்தான்.

கூப்பிடுதொலைவில் வன்னியில் பேரவலம் நடக்கின்றபோது தேரிழுத்து திருவிழா கொண்டாடினார்கள். முற்றும் இழந்து பாதி உயிர் போய் மீதி உயிருடன் எஞ்சியவர்களுக்கான நிவாரண நிதியில் நீச்சல் குளம் கட்டி கும்மியடித்தார்கள்.  தமிழகத்தில் மாணவர்களின் பட்டிணிப்போராட்டம் நடந்துககொண்டிருக்கையில் தீக்குளித்து உயிர்விட்டுக்கொண்டிருக்கையி்ல் வடக்கின் பெரும்பேர் என்று கிரிக்கெட் கூத்தடித்தார்கள். பேகட்டும் ! எந்தக் கன்றாவியை வேண்டுமானாலும் செய்துதொலையட்டும் ! ஆனால் வன்னி மக்களை இழிவுபடுத்த ஒரு வீத தகுதியும் உதயனுக்கோ மையவாதத்திற்கோ யாழ்பாணியத்துக்கோ இல்லை என்பதை தெளிவுபடுத்தவேண்டிய சரியான வேலையை அவர்கள் செய்கின்றார்கள்.

  • தொடங்கியவர்

என்ன பாதிப்பு எது கூடியது  அல்லது எது குறைந்தது  தெளிவாச் சொல்லுங்கோ ,எதிரி என்ன நினைக்கின்றானோ 

நீங்க அதுக்கு எருப்போட்டு தண்ணி ஊத்துங்கோ 

சிங்களவன் செய்வதற்கு சற்றும் குறைந்தது அல்ல உதயன் செய்த காரியம். சிங்களவன் ஒட்டுமொத்த தமிழனையும் இழிவாய்ப் நடத்துகிறான். உதயன் ஒரு பகுதி மக்களை கீழ்த்தரமாக எழுதுகிறது. சிங்களவன் நாய்த் தமிழன் என்றால் எங்களுக்கு கோபம் வருகிறது அவர்களை மாடுகள் என்றால் அவர்கள் சகிச்சுப் போகணும் இது நல்ல நியாயம். 

Edited by கலையழகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர்கள் செய்யவேண்டியதை சரியாகத்தான் செய்கின்றார்கள்.

உதயனை எதிர்ப்பதும் ஒன்றுதான் சிங்களப்பேரினவாதத்தை எதிரப்பதும் ஒன்றுதான். மையவாதமும் பேரினவாதமும் எப்போதும் கூட்டாளிகள்தான்.

கூப்பிடுதொலைவில் வன்னியில் பேரவலம் நடக்கின்றபோது தேரிழுத்து திருவிழா கொண்டாடினார்கள். முற்றும் இழந்து பாதி உயிர் போய் மீதி உயிருடன் எஞ்சியவர்களுக்கான நிவாரண நிதியில் நீச்சல் குளம் கட்டி கும்மியடித்தார்கள்.  தமிழகத்தில் மாணவர்களின் பட்டிணிப்போராட்டம் நடந்துககொண்டிருக்கையில் தீக்குளித்து உயிர்விட்டுக்கொண்டிருக்கையி்ல் வடக்கின் பெரும்பேர் என்று கிரிக்கெட் கூத்தடித்தார்கள். பேகட்டும் ! எந்தக் கன்றாவியை வேண்டுமானாலும் செய்துதொலையட்டும் ! ஆனால் வன்னி மக்களை இழிவுபடுத்த ஒரு வீத தகுதியும் உதயனுக்கோ மையவாதத்திற்கோ யாழ்பாணியத்துக்கோ இல்லை என்பதை தெளிவுபடுத்தவேண்டிய சரியான வேலையை அவர்கள் செய்கின்றார்கள்.

அன்றும் புறணி......இன்றும் புறணி....இவர்கள் என்றும் தாரிணி.

  • தொடங்கியவர்

இங்கே பலர் இந்த விசயத்தில் மௌனம் சாதிப்பது ஏன் என்று புரியவில்லை. தவறிழைத்தவனைத் தட்டிக்கேட்பதற்குப் பதிலாக பாதிக்கப்பட்டவனை சகித்துக்கொண்டு போ என்பது என்ன நியாயம்? உதயன் போன்ற நாழிதழ்களின் இவ்வாறான தவறுகள் முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும். ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயமும் இது ஒரு பகுதி மக்களின் பிரச்சினை என்று பார்க்காமல் ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினையாகப் பார்க்கவேண்டும்.

ஒரு பகுதி மக்கள் ஒரு ஊடகத்தின் தான்தோன்றித் தனமான செயலுக்காக போராடும்போது அதை வெளியில் கொண்டுவராமல் இருப்பது நல்லது, ஊதிப்பெரிசாக்கமால் இருங்கோ என்று சொல்வதெல்லாம் தமிழர்களுக்கிடையே பிரிவினையைத் தோற்றுவிக்கும் செயலாகவே இருக்கும்.   நாங்களும் உங்களுடன் இருக்கிறோம் உதயன் செய்தது தவறு அவர்கள் கண்டிப்பாக மன்னிப்புக் கேட்கவேண்டும் இதுதான் ஒட்டுமொத்த தமிழர்களிடம் அவர்கள் எதிர்பார்ப்பது. இரண்டு நாளில் தீர்க்கவேண்டிய பிரச்சினையை மௌனமாக இருந்து தீர்க்க முடியாத பிரச்சினையாக மாற்றிவிடாதீர்கள். 

Edited by கலையழகன்

    இங்கே பலர் இந்த விசயத்தில் மௌனம் சாதிப்பது ஏன் என்று புரியவில்லை. 

இங்கு பலர் மௌனமாக இருப்பதற்கு நீங்கள் இதை வலிந்து பிரதேசவாதம் ஆக்கியது காரணமாக இருக்கலாம். கருணாவும் இதுபோல் பிரதேசவாதம் பேசித் தான் தமிழினத்தை அழித்தான்.

  • தொடங்கியவர்

இங்கு பலர் மௌனமாக இருப்பதற்கு நீங்கள் இதை வலிந்து பிரதேசவாதம் ஆக்கியது காரணமாக இருக்கலாம். கருணாவும் இதுபோல் பிரதேசவாதம் பேசித் தான் தமிழினத்தை அழித்தான்.

கருணாவையும்  வன்னி மக்களையும் ஒப்பீடு செய்து யாரை நீங்கள் காக்க முற்படுகிறீர்கள்? அப்படி ஒப்பீடு செய்வதானால் வன்னி மக்களையோ அல்லது அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய எம்மையோ கருணாவுடன் ஒப்பிடமுடியாது. உதயன்தான் கருணா செய்த வேலையைச் செய்துகொண்டிருக்கிறது.  

பிரதேசவாதத்தை தூண்டிய உதயன் என்று குறிப்பிட்டால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது.அதுதான் உண்மை. தவறிழைத்துவிட்டு தவற்றை நிவர்த்தி செய்யப்பார்க்காமல்  அம்மக்கள்மீது துரோகிப்பட்டம் கட்டும் இழிவான வேலையைத்தான் இன்று உதயன் செய்துகொண்டிருக்கிறது.

Edited by கலையழகன்

அப்பிடி என்னதான் உதயன் எழுதினது? அது தெரியாமல் என்னத்தை சொல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளியவளையில் இவ்வளவு தமிழ் பிள்ளைகள் உள்ளார்களா?

படிக்கின்றார்களா?

அவர்கள் அனைவரும் இது போன்ற ஒரு பத்திரிகைக்கு எதிரான ஊர்வலத்தில் கலந்து எதிர்ப்புத்தெரிவித்தார்களா?

நியம் என்றால் நல்ல செய்தி

வரவேற்கத்தக்கது.

அன்றும் புறணி......இன்றும் புறணி....இவர்கள் என்றும் தாரிணி.

நீங்க வேற

தலைக்கு (புலி)

தலைப்பாகையுடன் (யாழ்ப்பாணிகள்)

போய்விட்டது என்று சந்தோசப்படுங்கள் :(

பல்லுக்கு இதமாக இன்று யாழ்ப்பாணிகள்............. :(
 
Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

uthayan-3.jpg

எப்படி நான் தீவு சென்று புகையிலை நடுவேன் , என்று எழுதினால் எனக்கு அல்லது தீவார் எல்லோருக்கும் 

கோபம் வரவேண்டுமா ?   சத்தியமா எனக்கு வராது .

  • தொடங்கியவர்

uthayan-3.jpg

எப்படி நான் தீவு சென்று புகையிலை நடுவேன் , என்று எழுதினால் எனக்கு அல்லது தீவார் எல்லோருக்கும் 

கோபம் வரவேண்டுமா ?   சத்தியமா எனக்கு வராது .

உங்களுக்கு கோபம் வரவில்லையென்பதற்காக எல்லோருக்கும் வராது அல்லது வரக்கூடாது என்று கூறமுடியாது.

சிங்களவன் செய்வதை எல்லாம் சகித்துக்கொண்டு போகணும் என சொல்பவர் இன்னும் இருக்கிறார்கள்.. நாய் தமிழன் என்று சிங்களவன் சொன்னால் ஏன் கோபம் வரவேண்டும், நாய் நன்றியுள்ளதுதானே என்று சொல்பவர்கள் எங்கள் மத்தியில் இருந்தார்கள், இருக்கிறார்கள். அதற்காக அவர்கள் சொல்வதெல்லாம் சரியென்றாகிவிடாது. 

முள்ளியவளையில் இவ்வளவு தமிழ் பிள்ளைகள் உள்ளார்களா?

படிக்கின்றார்களா?

அவர்கள் அனைவரும் இது போன்ற ஒரு பத்திரிகைக்கு எதிரான ஊர்வலத்தில் கலந்து எதிர்ப்புத்தெரிவித்தார்களா?

நியம் என்றால் நல்ல செய்தி

வரவேற்கத்தக்கது.

இது உண்மையான செய்தி விசுகு. இதில் எதுவும் இட்டுக்கட்டப்படவில்லை. 

கருணாவையும்  வன்னி மக்களையும் ஒப்பீடு செய்து யாரை நீங்கள் காக்க முற்படுகிறீர்கள்? அப்படி ஒப்பீடு செய்வதானால் வன்னி மக்களையோ அல்லது அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்திய எம்மையோ கருணாவுடன் ஒப்பிடமுடியாது. உதயன்தான் கருணா செய்த வேலையைச் செய்துகொண்டிருக்கிறது.  

பிரதேசவாதத்தை தூண்டிய உதயன் என்று குறிப்பிட்டால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது.அதுதான் உண்மை. தவறிழைத்துவிட்டு தவற்றை நிவர்த்தி செய்யப்பார்க்காமல்  அம்மக்கள்மீது துரோகிப்பட்டம் கட்டும் இழிவான வேலையைத்தான் இன்று உதயன் செய்துகொண்டிருக்கிறது.

உள்வீட்டுப் பிரச்சினையான இந்த சம்பவத்தில் உங்களுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால், முதலில் இணைத்த செய்திக்கு நான் எழுதிய கருத்து மனதில் இருக்க வேண்டும்!  (இப்போதாவது இணைப்பை பார்க்கவும்) .  http://www.yarl.com/forum3/index.php?showtopic=119712#entry879429

குழப்பம்தரும் அந்தக்  கவிதையை நீங்கள் முழுமையாக விளங்கிக் கொள்ளவில்லை என்பது ஒருபக்கம் இருக்க, நீங்கள் விளங்கிய விதத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு  எனது கருத்தை மேலுள்ள பதிவில் தெளிவாக வைத்துள்ளேன்.

இந்தப் பதிவில் உங்கள் ஆதங்கத்துக்கான காரணம் எதுவாக இருக்கும் என்ற ஒரு ஊகத்தை  முன்வைத்த அதே நேரத்தில், பிரதேசவாதத்தின் விளைவுகளை சுருக்கமாக கருணா என்ற பாத்திரத்தின் மூலம் உணர்த்த முயன்றேன்!

ஒரு உள்வீட்டு தவறை திருத்த பிரதேசவாதம் என்ற இன்னொரு முத்திரையை குத்துவதை  (தவறு செய்வதை)  நான் ஆதரிக்கவில்லை.  காரணம் இது உள்வீட்டுப் பிரச்சினை. எமது இன விரோதிகளுடனான பிரச்சினை இல்லை.

நேர்மையானவராக இருப்பவர்கள்,இனப்பற்று உள்ளவர்கள்  வன்னி மக்களை  வைத்து பிரதேசவாதம் / பிரிவினையை ஊக்குவிக்கும் தலைப்பை இட்ட பத்திரிகையை முதலில் கண்டித்திருப்பார்கள்.

அதை விட்டுவிட்டு எந்த அடிப்படையும் இல்லாமல்,

(1) கருணாவையும்  வன்னி மக்களையும் ஒப்பீடு செய்து யாரை நீங்கள் காக்க முற்படுகிறீர்கள்?

(2) பிரதேசவாதத்தை தூண்டிய உதயன் என்று குறிப்பிட்டால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது?

என்று கேட்பது (ஒரு கருத்தை சம்பந்தமே இல்லாமல் பிரச்சினையாக மாற்றுவது) உங்கள்  மனவிகாரத்துக்கேற்ப நீங்கள் செய்யும் கற்பனை. காரணம் இங்கு வன்னி மக்கள் ஒப்பிடப்படவில்லை - யார் பிரதேச வாதம் பேசினார்களோ - அவர்களே  கருணாவுடன் ஒப்பிடப்பட்டுள்ளனர்  அதுபோல் எனக்கு கோபம் வருகிறது என்பதும் உங்கள் வசதிக்கு நீங்கள் செய்த கற்பனை!

எனவே இந்த மாதிரி கற்பனையில் இழிபிழைப்பு நடத்துபவர்கள் அதை நிறுத்த வேண்டும்.  இதே வீரியத்துடன் தமிழின விரோதிகளை தாக்குங்கள் - இனத்துக்கு நன்மை கிடைக்கும்.

உங்களுக்கு எம்மினம் மேல் அக்கறை இருந்தால் பின்வரும் கேள்விகளுக்கு விடை சொல்லுங்கள்.

(1) இந்தக் கவிதையை யார் எழுதினார்? என்ன நோக்கத்தில்?

(2) இந்தக் கவிதையின் முழுமையான அர்த்தம் (சாராம்சம், உட்கருத்து) விளங்கியதா?

(3) அல்லது "எப்பிடி நான் வன்னி சென்று மாடு மேய்ப்பேன்" என்ற அர்த்தம் மட்டும்தான் விளங்கிக் கொண்டீர்களா?

(4) எந்த அடிப்படையில் இந்தவரி  ஒரு ஆசிரியரால்  மாணவர்களை குறித்தே எழுதியுள்ளதாக முடிவு செய்தீர்கள்?

(5) ஒரு கால்நடை திணைக்கள பணியாளர் தனது பணிமாற்ற உத்தரவை இரத்துச் செய்யும் ஒரு மனுவை எழுதித் தரும்படி ஒரு பள்ளி ஆசிரியரிடம் கோருவது போலவும் எடுக்க முடியும் இல்லையா?

(6) குறிப்பாக நீங்கள் இணைத்த கவிதையின் "இப்படி எத்தனை கொடுமைகள்" என்ற 3வது வரியின் அர்த்தத்தை விளங்கிக் கொண்டீர்களா?

ஒரு கவிதையை உருப்படியாக விளங்காமல், இத்தனை மாணவர்கள், மக்கள் மனதில் பிரதேசவாத விதையை விதைப்பவர்களை என்னவென்று சொல்வது?

நீங்கள் வன்னி மக்கள் மீது கொண்டிருந்த அக்கறையை மதித்தே இவ்வளவு நீண்ட விளக்கம் தரப்பட்டுள்ளது!

உங்கள் கருத்துக்களை பொறுப்புடன் முன்வையுங்கள்!   அதற்கு முன்னர் நான் முன்பு எழுதியதை இந்த இணைப்பில் (http://www.yarl.com/forum3/index.php?showtopic=119712#entry879429) மீண்டும் வாசிக்கவும்.

விதண்டாவாதம் செய்தால், செய்பவர்கள் இறுதியில் அதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டிவரும் என்பது இயற்கையின் நியதி.

  • கருத்துக்கள உறவுகள்
கவிதை எழுதினது யாராக இருந்தது அதை பத்திரிகையில் போட்டது உதயன் தானே...எதை,எந்த நேரத்தில் போடோனும்,போடக் கூடாது என்று தெரியாமலா பத்திரிகையில் இருக்கிறார்கள் :unsure:
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாடு மேய்க்க சொன்னதுக்காக எதிர்ப்பு ஊர்வலம் நடத்த கூடிய அளவில் வன்னி மக்களுக்கு கருத்து சுதந்திரம் உண்மையிலேயே இருக்கு என்றால் பெருமை படவேண்டிய விடயம்தான்.ஜெனிவா தீர்மானத்துக்கு பிறகு சிறீலங்க கருத்து சுதந்திரத்துக்கு முன்னுரிமை கொடுக்க தொடங்கி விட்டதா?

  • தொடங்கியவர்

உள்வீட்டுப் பிரச்சினையான இந்த சம்பவத்தில் உங்களுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால், முதலில் இணைத்த செய்திக்கு நான் எழுதிய கருத்து மனதில் இருக்க வேண்டும்!  (இப்போதாவது இணைப்பை பார்க்கவும்) .  http://www.yarl.com/forum3/index.php?showtopic=119712#entry879429

குழப்பம்தரும் அந்தக்  கவிதையை நீங்கள் முழுமையாக விளங்கிக் கொள்ளவில்லை என்பது ஒருபக்கம் இருக்க, நீங்கள் விளங்கிய விதத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு  எனது கருத்தை மேலுள்ள பதிவில் தெளிவாக வைத்துள்ளேன்.

இந்தப் பதிவில் உங்கள் ஆதங்கத்துக்கான காரணம் எதுவாக இருக்கும் என்ற ஒரு ஊகத்தை  முன்வைத்த அதே நேரத்தில், பிரதேசவாதத்தின் விளைவுகளை சுருக்கமாக கருணா என்ற பாத்திரத்தின் மூலம் உணர்த்த முயன்றேன்!

ஒரு உள்வீட்டு தவறை திருத்த பிரதேசவாதம் என்ற இன்னொரு முத்திரையை குத்துவதை  (தவறு செய்வதை)  நான் ஆதரிக்கவில்லை.  காரணம் இது உள்வீட்டுப் பிரச்சினை. எமது இன விரோதிகளுடனான பிரச்சினை இல்லை.

நேர்மையானவராக இருப்பவர்கள்,இனப்பற்று உள்ளவர்கள்  வன்னி மக்களை  வைத்து பிரதேசவாதம் / பிரிவினையை ஊக்குவிக்கும் தலைப்பை இட்ட பத்திரிகையை முதலில் கண்டித்திருப்பார்கள்.

அதை விட்டுவிட்டு எந்த அடிப்படையும் இல்லாமல்,

(1) கருணாவையும்  வன்னி மக்களையும் ஒப்பீடு செய்து யாரை நீங்கள் காக்க முற்படுகிறீர்கள்?

(2) பிரதேசவாதத்தை தூண்டிய உதயன் என்று குறிப்பிட்டால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது?

என்று கேட்பது (ஒரு கருத்தை சம்பந்தமே இல்லாமல் பிரச்சினையாக மாற்றுவது) உங்கள்  மனவிகாரத்துக்கேற்ப நீங்கள் செய்யும் கற்பனை. காரணம் இங்கு வன்னி மக்கள் ஒப்பிடப்படவில்லை - யார் பிரதேச வாதம் பேசினார்களோ - அவர்களே  கருணாவுடன் ஒப்பிடப்பட்டுள்ளனர்  அதுபோல் எனக்கு கோபம் வருகிறது என்பதும் உங்கள் வசதிக்கு நீங்கள் செய்த கற்பனை!

எனவே இந்த மாதிரி கற்பனையில் இழிபிழைப்பு நடத்துபவர்கள் அதை நிறுத்த வேண்டும்.  இதே வீரியத்துடன் தமிழின விரோதிகளை தாக்குங்கள் - இனத்துக்கு நன்மை கிடைக்கும்.

உங்களுக்கு எம்மினம் மேல் அக்கறை இருந்தால் பின்வரும் கேள்விகளுக்கு விடை சொல்லுங்கள்.

(1) இந்தக் கவிதையை யார் எழுதினார்? என்ன நோக்கத்தில்?

(2) இந்தக் கவிதையின் முழுமையான அர்த்தம் (சாராம்சம், உட்கருத்து) விளங்கியதா?

(3) அல்லது "எப்பிடி நான் வன்னி சென்று மாடு மேய்ப்பேன்" என்ற அர்த்தம் மட்டும்தான் விளங்கிக் கொண்டீர்களா?

(4) எந்த அடிப்படையில் இந்தவரி  ஒரு ஆசிரியரால்  மாணவர்களை குறித்தே எழுதியுள்ளதாக முடிவு செய்தீர்கள்?

(5) ஒரு கால்நடை திணைக்கள பணியாளர் தனது பணிமாற்ற உத்தரவை இரத்துச் செய்யும் ஒரு மனுவை எழுதித் தரும்படி ஒரு பள்ளி ஆசிரியரிடம் கோருவது போலவும் எடுக்க முடியும் இல்லையா?

(6) குறிப்பாக நீங்கள் இணைத்த கவிதையின் "இப்படி எத்தனை கொடுமைகள்" என்ற 3வது வரியின் அர்த்தத்தை விளங்கிக் கொண்டீர்களா?

ஒரு கவிதையை உருப்படியாக விளங்காமல், இத்தனை மாணவர்கள், மக்கள் மனதில் பிரதேசவாத விதையை விதைப்பவர்களை என்னவென்று சொல்வது?

நீங்கள் வன்னி மக்கள் மீது கொண்டிருந்த அக்கறையை மதித்தே இவ்வளவு நீண்ட விளக்கம் தரப்பட்டுள்ளது!

உங்கள் கருத்துக்களை பொறுப்புடன் முன்வையுங்கள்!   அதற்கு முன்னர் நான் முன்பு எழுதியதை இந்த இணைப்பில் (http://www.yarl.com/forum3/index.php?showtopic=119712#entry879429) மீண்டும் வாசிக்கவும்.

விதண்டாவாதம் செய்தால், செய்பவர்கள் இறுதியில் அதன் விளைவுகளை அனுபவிக்க வேண்டிவரும் என்பது இயற்கையின் நியதி.

வணக்கம் ஆசான்,
 
நீங்கள் மற்றைய திரியில் எழுதியதை நான் கவனிக்கவில்லை. அதற்கு வருந்துகிறேன். தயவு செய்து மன்னித்துவிடுங்கள்.
 
உங்கள் கருத்துக்களில் இருந்து நாங்கள் வேறுபடவில்லை. எங்கள் தெளிவான நிலைப்பாடு, முன்னைய ஆசிரியப்பார்வையில் மிகத் தெளிவாக முன்வைக்கப்பட்டிருக்கின்றது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
குறித்த கவிதை வடிவம் அதில் சொல்லப்பட்டிருக்கின்ற விடயம் என்பதனை நாங்கள் தற்போது சிக்கலுக்குரிய விடயமாகக் குறிப்பிடவில்லை. நாங்கள் சொல்ல முற்பட்ட விடயம் வன்னி மக்களைப் புண்படுத்தும் வகையில் வெளியாகிய கவி வரிகள் தொடர்பில் மன்னிப்பு அல்லது வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்பதுதான்.
 
மக்கள் மனதைப் புண்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட வரிகள் தான் குழப்பத்திற்குக் காரணம் என்பதை மிகத் தெளிவாக மக்கள் உதயன் நிர்வாகத்திடம் பல்வேறு வழிகளிலும் சுட்டிக்காட்டியிருந்தார்கள். முடிந்தவரையில் உதயனுடன் போராடிப்பார்த்தார்கள். இதற்காக வருத்தம் தெரிவித்து ஒரு சிறிய குறிப்பினை முன்வைப்பதற்குக் கூட உதயன் முன்வரவில்லை. நியாயம் கேட்டவர்களை கெட்டவார்த்தைகளால் உதயன் ஆசிரியர் பீடம் திட்டித்தீர்திருக்கிறது.
 
அதன் அடுத்தகட்டமாகத் தான் வன்னியில் பத்திரிகையை மறித்தார்கள். பத்திரிகையை மறித்த மக்களை அமைச்சர் ஒருவரின் ஆட்கள் எனச் சித்தரித்து அத்தனை மக்களையும் அரச ஆதரவாளர்களாக அடையாளம் காட்டிவிட்டு தவறில் இருந்து தப்பித்துக் கொள்ள உதயன் முயற்சித்திருக்கின்றது. 
 
அதன் பின்னரே பத்திரிகை எரிப்புச் சம்பவங்களும், ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. அதனை அடுத்தே சம்பவம் நடைபெற்ற அன்றே தமிழ்லீடர் ஆசிரியர் பீடத்திற்கு குறித்த விடயம் அறியக்கிடைத்த போதிலும், உதயன் அடுத்த கட்டம் மக்கள் மீது அக்கறை கொண்டு மாற்று நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்த்த மக்களின் எதிர்பார்ப்பு வீண்போனமையின் பின்னரே குறித்த பதிவு ஏற்றப்பட்டது என்பதை தங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
 
அனைத்துச் சம்பவங்களும் ஒரு ஒழுங்கான படிமுறையின் அடிப்படையிலேயே முன்னெடுக்கப்பட்டுவருகின்றது என்பது அடுத்த முக்கியமான விடயமாகும்.
 
உங்களுக்குத் தெரியாத இன்னொரு ஆபத்தான விடயத்தையும் சுட்டிக்காட்டவிரும்புகின்றோம். உதயனை உரிமையோடுதான் விமர்சிக்கின்றோம். காரணம் தமிழ்த் தேசியத்தின் அடையாளமாகத்தான் உதயன் பத்திரிகை தமிழ் மக்கள் பார்க்கிறார்கள். தற்போது வன்னியில் உதயனுக்கு எதிராக முன்னெடுக்கப்படுகின்ற எதிர்ப்பு நடவடிக்கைகளை வைத்து பிழைப்பு நடத்துவதற்கு அல்லது அதனைத் தூண்டுவதற்கு அரச இயந்திரம் தயங்காது என்பது பட்டவர்த்தனமாகிக்கொண்டிருக்கின்றது.
 
மக்களின் உதயனுக்கு எதிரான நடவடிக்கைகளில் குறித்த சக்திகள் அழையா விருந்தாளிகளாக சென்று மூக்கை நுழைத்துக் கொள்வதாகவும் தெரியவருகின்றது. தற்போது கூட எதுவும் கெட்டுவிடவில்லை. குறித்த கவிதையில் இடம்பெற்றிருக்கின்ற வற்றாப்பளை அம்மன் ஆலயம் தொடர்பிலான விடயமும், இந்நிலையில் எவ்வாறு வன்னி சென்று மாடு மேய்ப்பேன் என்று ஆசிரியர் கேள்வி கேட்பதாக அமைக்கப்பட்டிருக்கின்ற வரிகளும் சம்பந்தப்பட்ட மக்களை பாதித்திருக்கின்றது என்று அறிகின்றோம். இதற்காக மனம் வருந்துகிறோம் என்ற விடயத்தினை உதயன் தன் பத்திரிகையில் குறிப்படுவதில் என்ன? தயக்கம்? என்று நீங்கள் கருதுகின்றீர்கள்.
 
உங்கள் உணர்வுகளும் எங்கள் உணர்வுகளும் வேறுபட்டவையல்ல. அனைவருடைய நோக்கமும் ஒற்றை இலக்குக்கானவை தான். இறுவரையில் வலி சுமந்த மக்களின் பிரச்சினை.. அந்தப் பிரச்சினையில் சிக்கியிருக்கின்ற மக்களை மீட்டெடுப்பதற்கு எத்தனை ஊடகங்கள் முன்வந்தன? உணர்வுப் போராட்டத்தில் சிக்கியிருக்கின்ற மக்களை எவரும் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதன் மூலம் அவர்களை வேறு பாதைக்கு இட்டுச்சென்றுவிடாது என்று நீங்கள் கருவில்லையா?
 
நியாயமான முறையில் அந்த மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். இவ்வாறான திருத்தவல்ல திருந்தவல்ல நடவடிக்கைகள் தேசிய இனத்திற்கு இடையில் பிழவினை ஏற்படுத்திவிடக்கூடாது என்பதே எமது பிரதான நோக்கம் என்பதை தயவு செய்து நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
 
Edited by கலையழகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெருப்பிற்கு விதையை யார் போட்டானோ அவனே கலவரத்திற்க்கு ஆளும் சேர்க்கின்றான்!

மக்களின் நியாயமான உணர்வு தீபம் ஏற்றுவதைக்கூட சிறை வதைக்கின்ற தேசத்தின் அதர்மத்தனத்தை இந்தவகையான போராட்டங்களுக்கு ஊக்கம் கொடுத்து வெள்ளை அடிக்க முனைகின்றது அரசு,

மக்கள் குரல்கள் வீதியில் இறங்குவதற்கு அவசியமான பிரச்சினைகளின் வரிசையில் இந்த ஒன்றுதான் முன்னணியில் உள்ளது என்பதை அரசு சொல்ல ஆசைப்படுகின்றதோ? இல்லை மக்களை சொல்லவைக்க நிர்பந்திக்கின்றதோ?

இதனால் இங்கே ஜனனாயகம் வாழுகின்றது என்ற கருத்தை உலகத்தின் எண்ணத்தில் வாழவைக்கின்ற முயற்சியோ!

  • தொடங்கியவர்

ஆசான்

கவிதை தொடர்பாக

அண்மையில் வடக்கு ஆசிரியர்களுக்கு இடமாற்றம் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த இடமாற்றத்துக்கு அமைய வன்னிக்கு செல்லவேண்டியவர்கள் தமக்கு அந்த இடமாற்றம் வேண்டாம் எனத் தெரிவித்து ஆளுநருக்கு கடிதம் எழுதித்தருமாறு குறித்த கவிதை எழுத்தாளரிடம் கோரியதாகத் தெரிவித்து, அந்தக் கருத்துச் சாரப்பட்ட எழுதப்பட்டதே குறித்த படைப்பு

விதையைப் போட்டதும் உதயன். (கவிதை போட்டது) .  தண்ணி ஊற்றி வளர்த்ததும் உதயன். (நியாயம் கேட்க தொடர்புகொண்ட மக்களை கேவலமாகத் திட்டியது. எதிர்ப்புத் தெரிவித்த மக்களை அரசாங்க அமைச்சரின் ஆட்கள் என்று தெரிவித்தது)

ஆசான்

கவிதை தொடர்பாக

அண்மையில் வடக்கு ஆசிரியர்களுக்கு இடமாற்றம் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த இடமாற்றத்துக்கு அமைய வன்னிக்கு செல்லவேண்டியவர்கள் தமக்கு அந்த இடமாற்றம் வேண்டாம் எனத் தெரிவித்து ஆளுநருக்கு கடிதம் எழுதித்தருமாறு குறித்த கவிதை எழுத்தாளரிடம் கோரியதாகத் தெரிவித்து, அந்தக் கருத்துச் சாரப்பட்ட எழுதப்பட்டதே குறித்த படைப்பு

உங்கள் பதில்களுக்கு நன்றி கலையழகன்!  இந்த விடயத்தில் நாம் உங்களுடன் தான்.

எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் அதே நேரத்தில், நீதி கேட்டு போராடுபவர்கள் ஒருசிறு (ஆனால் கடுமையான) கண்டனத்தை  குறித்த கவிதைக்கு எதிராக எழுதி  உதயன் பத்திரிகை நிர்வாகத்துக்கு பதிவுத் தபாலில் அனுப்பினால் நல்லது. அதை அவர்கள் பிரசுரிக்காவிட்டல் மேற்கொண்டு என்ன செய்வது என்பதை நாம் தீர்மானிக்கலாம்.

நன்றி ஆசான்.

ஏற்கனவே உதயன் நிர்வாகத்துடன் பலர் தொலைபேசி வழியாக கதைத்தாயிற்று ஆனால் வருத்தம் தெரிவிக்கமறுத்துவிட்டார்கள். நீங்கள் சொன்ன வழியையும் ஒரு முறை முயன்றுபார்ப்போம். உரியவர்களிடம் தெரியப்படுத்தி உடனடியாகச் செய்யச் சொல்கின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே பலர் இந்த விசயத்தில் மௌனம் சாதிப்பது ஏன் என்று புரியவில்லை. தவறிழைத்தவனைத் தட்டிக்கேட்பதற்குப் பதிலாக பாதிக்கப்பட்டவனை சகித்துக்கொண்டு போ என்பது என்ன நியாயம்? உதயன் போன்ற நாழிதழ்களின் இவ்வாறான தவறுகள் முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டும். ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயமும் இது ஒரு பகுதி மக்களின் பிரச்சினை என்று பார்க்காமல் ஒட்டுமொத்த தமிழர்களின் பிரச்சினையாகப் பார்க்கவேண்டும்.

ஒரு பகுதி மக்கள் ஒரு ஊடகத்தின் தான்தோன்றித் தனமான செயலுக்காக போராடும்போது அதை வெளியில் கொண்டுவராமல் இருப்பது நல்லது, ஊதிப்பெரிசாக்கமால் இருங்கோ என்று சொல்வதெல்லாம் தமிழர்களுக்கிடையே பிரிவினையைத் தோற்றுவிக்கும் செயலாகவே இருக்கும். நாங்களும் உங்களுடன் இருக்கிறோம் உதயன் செய்தது தவறு அவர்கள் கண்டிப்பாக மன்னிப்புக் கேட்கவேண்டும் இதுதான் ஒட்டுமொத்த தமிழர்களிடம் அவர்கள் எதிர்பார்ப்பது. இரண்டு நாளில் தீர்க்கவேண்டிய பிரச்சினையை மௌனமாக இருந்து தீர்க்க முடியாத பிரச்சினையாக மாற்றிவிடாதீர்கள்.

இங்கே நீங்கள் அடிக்கடி உதயனுக்கு எதிராக ஏன் துள்ளுவது என்றும் எனக்கு புரியவில்லை.....

இந்த பிள்ளைகளின் நிலையை பார்க்க மனதுக்கு மிக வருத்தமாக இருக்கிறது. இவர்கள் பல மைல்கள் நடந்து பள்ளிவருபவர்கள். உறவுகளுக்கு யாழில் இவர்களுக்கு பைசிக்கிள்கள் வாங்க எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் நினைவிருக்கலாம். இவர்களில் பலர் ஒற்றை, வலது குறைந்த பெற்றார்களின் பிள்ளைகள். பள்ளிக்கு வருமுன் மாடு, ஆடு மேய்த்து தொட்டாட்டு வேலைகள் செய்து அதன் பின்னர் பல மைல்கள் நடந்து பள்ளி வருபவர்கள். தருணம் பார்த்து, தங்கள் சுயமாக போராடரும் தமிழ் நாட்டு மாணவர்களுக்கு பந்தயமாக இவர்களை நிறுத்துவது கொடுமை.

பள்ளிகள் சீருடையாக இருக்கும் இலங்கையில் இவர்கள் என்ன நாளில் இந்த உடைகளில் வந்தார்களோ தெரியவில்லை. இவர்களுக்கு அரசாங்க கொடுப்பனவாக இருந்திருக்க வேண்டிய, பாடப் புத்தகங்கள், சீருடை என்பனவும் மறுக்கப்படுகிறது போலிருக்கு. கிழமை முழுக்க போட ஒரு உடுப்பு தன்னும் இல்லாத பிள்ளைகள் போல் தெரிகிறார்கள். அதற்காக போராடக்கூட முடியாத நிலையில் இவர்கள்.

தேவானந்தாவால் தண்டிக்கப்படும் ஆசியர்கள் இவர்களின் காட்டுப்பகுத்திகளுக்கு மாற்றப்படுகிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.  வடக்கில் வசந்தம், வன்னியில் தேனும் பாலும் ஓடுகிறது என்று கூறிக்கொண்டு தங்களுக்கு சேவகம் செய்ய மறுக்கும் ஆசியர்களை வன்னி காட்டுக்கு மாற்றித்தண்டிக்கிறார்கள். இதை உதையன் எழுதியவுடன் தமது வடக்கு வசந்தத்தை தெருவில் கொண்டு வந்து காட்டுகிறார்கள்.

இந்த பிள்ளைகள்  உதயன் பத்திரிகையை கண்டிருக்க சந்தர்ப்பம் இருந்ததாதெரியாது. கவிதையில் பிழை கண்டு ஆர்ப்பாட்டம் நடத்த அவர்களுக்கு நேரம் கிடயாது. இதை முடித்துக்கொண்டு வீட்டுக்கு போய் மாடுகளை மேய்த்துவந்தால் மட்டும் இரவுக்கு எதாவது ஆகும் என்பதுதான் பலரின் உண்மையான வாழ்க்கை. இவர்களை புலம் பெயர் ஊடகங்கங்கள் தங்கள் பத்திரிகை போட்டிக்கு பயன் படுத்துவது மனித நாகரீகத்தில் இல்லாத கேவலம்.

யாழ்பாணத்தில் நடந்த ஊர்வலத்தில் ஒரு சொல் தமிழ் நன்றாக எழுத்தியிருக்கவில்லை. அதன் கருத்து அங்கே சாப்பட்டை காட்டி ஊர்வலம் நடத்த முடியவில்லை. ஆனால் இந்த பள்ளிபோக நேரம் கிடையாத இடத்தில் தமிழ் சரியாக எழுத்தப்பட்டிருகிறது. திரும்ப முடியாமல் வலோற்காரமாக பிள்ளைகள் படிக்க என்று என்று அழைத்துவந்து இப்படி அழிக்கப்படுகிறார்கள் என்பதுதான் கருத்து.

யாழ்ப்பாணி, மேட்டுக்குடி என்ற துரோக, துவேச வார்த்தைகளை பயன் படுந்திக்கொண்டு உதயனை, சரவணபவனை, சிறீதரனை, கூட்டமைப்பை அடக்க, இவர்களை கேடமாக பாவிப்பது துரோகத்தில் கெட்ட துரோகம்.

நாம் சிறுவராக இருந்தகாலத்தில் படியாமல் குழப்படி விட்டால் "என்ன வன்னிக்கு போய் மாடு மேய்க்கவா போகிறாய்" என்றுதான் பெற்றோர்கள் கேட்பார்கள். இதை தலைவர் மற்றி அமைத்தார். இன்று அரசு அங்கு மேய்க்க மாடுமல்ல, மேய புல்லுக் கூட இல்லாமல் பொசுக்கிவிட்டருக்கிறது. இதில் உதயனில் ஏதாவது பிழை என்றால் உதயன் இப்போ வன்னியில் மாடுதன்னும் மேய்க்க முடியாது என்றதை பற்றித்தான் கவிதை எழுதியிருக்க வேண்டும் எனபதாகும்.

Edited by மல்லையூரான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.